Aggregator

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
சுமந்திரன்…. ஒரு சதத்திற்கும் உதவாதவர் என்பது மட்டுல்ல, தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப் பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக இருந்த கட்சிகளை உடைத்து… ஶ்ரீலங்காவினதும், இந்திய நாட்டினதும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்த ஆபத்தான மனிதன்தான் சுமந்திரன். இனியும் இவரை தமிழரசுக் கட்சி வைத்திருக்குமானால்… அது தமிழருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் பேராபத்தாக முடியும். இவர் தமிழ் அரசியலில் இருக்கும் வரை… தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒற்றுமையாவதற்கு சந்தர்ப்பமே இல்லை. சுமந்திரனை வைத்து…. தமிழரில் இன்னும் பல பிரிவினைகளை உருவாக்கவே இந்தியத் தூதரகம் மாதா மாதம் இவருடன் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும், பணமும் வழங்கிக் கொண்டு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
கந்தப்பு மேலுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பிரச்சனையை எழுதுங்கள். நிச்சயம் சரி செய்வார்கள். அக்கா ஒரு வயது வந்தால் இதே பிரச்சனை தான்.இதையும் கடந்து போக நாங்கள் தான் பழக வேண்டும்.அதையோ யோசித்துக் கொண்டிருக்காமல் நல்லதே நடக்கும் என்று மனதை திடமாக வைத்திருங்கள். எனது மின்னஞ்சல்:-mkirupananthan@gmail.com ஆனபடியால் தொடர்ந்தும் கழிவோயிலை எதிர்பார்க்கலாம்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
சுமந்திரனை தலையில் வைத்து கொண்டாடுபவர்களின் பின் புலத்தையும், கடந்த காலத்தில் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் வைத்துப் பார்த்தால்… பல விடயங்கள் இலை மறை காயாக ஒளிந்து இருப்பதை கண்டு பிடிக்கலாம். 1) சுமந்திரன், தமிழ் தேசியத்துக்கு எதிரானவர் என்பதால்… அந்தப் பாசத்தில் ஆதரவு கொடுப்பவர்கள்…. ஈழப் போராட்டத்தின் போது, புலிகளை காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களுக்கும், சிங்கள அரசாங்கத்துக்கும் ஆதரவாக கருத்துக்களை வைத்துக் கொண்டு திரிந்தவர்கள் ஒரு வகை. 2) சுமந்திரன், தமிழர் கட்சிகளை சின்னா பின்னமாக்கி ஒற்றுமையை சிதைத்துக் கொண்டு இருப்பது சிலருக்கு இனிப்பான விடயமாக இருப்பதாலும்… 3) சுமந்திரன், வட மராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால், ஊர்ப் பாசத்தில் ஒரு சிலரும்… (சென்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும்…. ஆபிரஹாம் சுமந்திரனின் தமிழரசுக் கட்சி மரண அடிவாங்கி, படு தோல்வி அடைந்த இடம் வடமராட்சிதான்.) 😂 🤣 4) ஆபிரஹாம் சுமந்திரன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சிலரும்…. 5) சுமந்திரன், சிங்களவருக்குக்குள் திருமண தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் ஒரு சிலரும்…. 6) யாழ்ப்பாணத்தில் கொழுத்தும் வெய்யில் வெக்கைக்குள்…. கோட்டு, சூட்டுப் போட்ட சுமந்திரனை, பெரிய அறிவாளி என நினைக்கும் சில பனங்கொட்டைத் தமிழர்களும்…. சுமந்திரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதே உண்மை. இவர்களால்… தமிழருக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பைத்தியக்காரக் கூட்டம் என்று கடந்து போக வேண்டியதுதான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
இவர்கள் செய்யும் பேய்க்காட்டல்களினால்த்தான் இதய பூர்வமான தமிழின விசுவாசிகள் சிங்கள கட்சிகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
கணனி கடவுச்சொல் மாற்றியாச்சோ? தென்னாபிரிகா அணியை தெரிவு செய்ததற்காக ரசோதரன் துண்டுச் சீட்டில் எனது பெயரை எழுதவே மறுத்துவிட்டார்.

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

2 months 2 weeks ago
மேற்குலகில் உணவு,அன்றாட பாவனை பொருட்கள் எனும் விடயங்களில் கற்காலத்தை நோக்கியே போகின்றார்கள். பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை.இரசாயனம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்போகின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் காலம் கற்காலமல்ல.நற்காலம். அந்த கோப்பயை கழுவ பயன்படுத்தப்படும் இரசாயன அழுக்கு நீக்கியின் பக்க விளைவுகள்,எதிர் வினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?பெரிய ஹொட்டல்களில் கோப்பை கழுவப்படும் அல்லது பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் அந்த கெமிக்கல் மருந்துகள் கையில் பட்டாலே எரிக்கும் தன்மை கொண்டவை. எப்படி கழுவினாலும் அந்த கெமிக்கல்கள் பாத்திரங்களை விட்டு அகலாது.எல்லாம் சாப்பாடுடன் சேர்ந்து எமது வயிற்றுக்குள் தான் போகும். ஊர்களில் ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும் அவரவற்கு என சொந்த கோப்பை இருக்கும். அதில் அண்ணன் தம்பியானாலும் சரி அக்கா தங்கச்சியானாலும் சரி ஒருவர் கோப்பைய மற்றவர் தொடமாட்டார்.அவ்வளவிற்கு சுத்த பத்தம். கோப்பைய சாம்பல் போட்டு கழுவினாலும் பழப்புளி போட்டு மினுக்கினாலும் சொந்தக்கோப்பை சொந்த கோப்பை தான் அதை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டம்.😂

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!" நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன். என்பது கிஸ்ணன் வாக்கு. உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன் என்பது ஜஸ்டின் வாக்கு 😂. #ஆதாரபுருஷர்❤️ நன்றி 🙏

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 months 2 weeks ago
உள்ளக மட்டத்தில் ஒரு ஆட்சியலகாகத் தோற்றம் பெற்றதும் எந்த நேரமும் கலைத்துவிடக்கூடியதுமான வட-கிழக்கு இணைந்த மாகாண அலகை வழக்குப்போட்டுப் பிரித்தமை... சுனாமிக் கட்டமைப்பை நடைமுறைப்பட்டுத்தவிடாது தடுத்தமையெனத் தமிழருக்கு எதிரான விடம் கக்கும் வேலைகளை செய்த அணியினது முக்கியமான பெரும்புள்ளி இப்போது இப்படிக் கொக்கரிக்கிறார். அவரே ஐ.நா விலிருந்து தமிழரது பிரச்சினையை வெளியே எடுப்பதுதான் தமதரசின் நோக்கமென்று சொல்லியுள்ளார். இதைவிட வேறென்ன விளத்தம் தேவை. எந்த சிங்கள அரசாயினும் அவை இனவாத அரசுகளே. தமிழரை அழிப்பதும், தமிழரென்று ஒரு இனமே இல்லையென்று நிறுவுவதும் முழு ஈழத்தீவையும் ஈற்றில் சிங்கள மயமாக்குதலே அவர்களது இலக்கு. யே.வி.பி யின் மறுவடிவான என்.பி.பி வாக்களித்த தமிழர்களின் மயக்கம் இந்த இனவாத முழக்கங்களைக் கண்டாவது தெளியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
புலவர் உங்கள் தலைவர் சீமான் போல நீங்களும் தரக்குறைவான வார்த்தைகளை சக கள உறவுகள் மீது பாவித்து அதன் மூலம் உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்வதை பார்க்க கவலையாக இருக்கிறது. ஒரு எழுத்தை மாத்தி போட்டு - உங்களை இன்னொரு “விடியாத” கருத்தாளர் என எழுத எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறீர்கள்? ஆனால் நான் சீமானின் தம்பி அல்ல. ஆகவே நான் அப்படி செய்ய போவதில்லை. நாதக சமூகவலை உலகில் முன்னெடுக்கும் அவமரியாதை கலாச்சாரத்தை தயவு செய்து யாழுக்கு எடுத்து வர வேண்டாம். சகலதுக்கும் ஒரு எல்லை உண்டு. நான் கிண்டலும் கேலியுமாக எழுதினாலும் அந்த எல்லையை அநேகம் மீறுவதில்லை. அரிதாக மீறிய சந்தர்பங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளேன், பகிரங்கமாக. எனவே கொஞ்சம் கஸ்டப்பட்டாவது நா-நயம் பேணுவீர்கள் என நினைக்கிறேன். யாழ்களத்தில் இருவரை அவர்களின் நடத்தை காரணமாக இக்னோர் லிஸ்டில் போட்டு இரெண்டு வருடமளவு ஆகிறது. அதில் ஒருவர் நீங்கள் இப்போ என்னை திராவிட ஊடகவியளாலர் என ஆதாரம் அற்று அவதூறு சொல்வது போல, ஏதோ ஒரு வெறிகுட்டியை பப்பில் கண்டு பேசி விட்டு அதுநாந்தான் என தினமும் யாழில் என் உயிரை வாங்கினார். உங்களுடனான எனது சம்பாசணைகளும் அதே வழியில்தான் போக வேண்டும் என்பது விதி என்றால் அப்படியே ஆகட்டும். உங்களுக்கு ஜஸ்டின் அண்ணா கொடுத்த பதில்தான் எனது பதிலும். சீமான் சென்னை ஹைகோர்ட்டில் போய் என்ன கேட்டார் என்பது ஒன்றும் ஹைதர் கால வரலாறு அல்ல. மிக அண்மையில் நடந்தவை. அதற்கான முழு ஆதாரமும் இதே தமிழக செய்தி பகுதியில் கொஞ்சம் கீழே போனால் உள்ளது. நான் சொன்னதுதான் உண்மையான வரலாற்று தரவு. பொலிசை என் மீது வழக்கு போட சொல்லுங்கள் என சென்னை கோர்ட்டை கேட்கும் அளவுக்கு சீமான் என்ன முழு லூசா? அவர் சென்னை கோர்ட்டை கேட்டது - முன்பே வாபஸ் வாங்கிய புகாரின் அடிப்படையில் வழக்கை தூசு தட்டுகிறார்கள். இந்த விசாரணையை தடுத்து, வழக்கை, விசாரணையை ரத்து செய்யுங்கள் என. ஆனால் சென்னை ஹைகோர்ட் அப்படி இல்லை - வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என பொலிஸுக்கு உத்தரவிட்டது. இதுதான் தரவுகளின் அடிப்படையிலான வரலாறு. மிக முக்கியமான விடயம்… நீங்களும், விசுகு அண்ணையும் சொல்வது போல் - சீமான் சென்னை கோர்ட்டை தன்னை விசாரிக்கும்படி கேட்டார் என்பது உண்மை எனில்…. சென்னை ஹைகோர்ட் அப்படி ஒரு உத்தரவை கொடுத்த பின்… ஏன் டெல்லி கோர்ட்டுக்கு ஓடி.. அந்த சென்னை கோர்ட் உத்தரவுக்கு தடை வாங்கினார்? லொஜிக் மண்டையை பொத்தி அறைகிறதா புலவர் ஜி?🤣 சும்மா முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் வாயில் வருவதை எல்லாம் சொன்னால் இப்படித்தான் ஆகும். யாழ்களம் ஒன்றும் இராவணன் குடிலோ, தூஷண துரையின் சேனலோ அல்ல, இங்கே தலையால் சிந்திப்போர் அதிகம். லொஜிக் இல்லாமல் ஆமை, முயல் கதையள் சொன்னால்…. பேர்….ரிப்பேர் ஆகிவிடும்.

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 months 2 weeks ago
சொந்தம், இறையாண்மை என்று சொல்லிக்கொண்டு, சர்வதேசத்தை கூட்டி வைத்து நீங்கள் ஆடிய ஊழிக்கூத்து மறந்து, மறைத்து பேசுகிறார். அலுவகங்களை திறப்பதாலோ, ஆணையகங்களை நிறுவுவதாலோ, உறுதிப்பாடுகளை அளிப்பதாலோ, ஆளையாள் மாறி மாறி குற்றஞ்சாட்டுவதாலோ நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. ஏதாவது ஒரு அரசாங்கம், எதிர்க்கட்சி பொறுப்பு எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எல்லோரும் பங்காளிகளாகவே இருந்து ஒரு இனத்தை போட்டிப்போட்டு அழித்தீர்கள். நீங்கள் அவர்களை தடுத்தீர்கள், அவர்கள் உங்களை தடுப்பார்கள். நல்லிணக்கத்தை இலங்கையில் உங்கள் யாராலும் ஏற்படுத்த முடியாது, வீர வசனம் மட்டுமே பேச முடியும். அப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் அது யாராய் இருந்தாலென்ன நிறைவேற்ற அனுமதி கொடுக்க வேண்டும். நாம் செய்வோம் என கூறி பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன, இனியா நிறைவேற்ற போகிறீர்கள்? போரின் கதா நாயகர்களை, கொலைகாரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். அவர்களே சொல்கிறார்கள்; எங்களுக்கு மின்சாரக்கதிரையே தண்டனை என்று. இதைவிட வேறு ஆதாரம் தேவையென்ன? அந்த நடவடிக்கைகள் என்னவென்று விளக்கினால்; புரிந்து கொள்ள முடியும். முந்தைய ஆட்சியாளர்களும் இவ்வாறு சுற்றியவர்கள் தான். ஆனால் இன்றும் ஒரு இம்மியளவு கூட நகரவில்லை, நகரப்போவதுமில்லை. இந்த ஏமாற்றும் தந்திரம், பிடிவாதம் நாட்டையும் இனத்தையும் அழிப்பதோடு சாபமும் சூழும்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
புலவர், கோசான் சொல்லியிருக்கும் "சொ.செ.சூனியம்" என்ன என்று புரியவில்லையா? 2025 இல் சென்னை உயர் நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வழக்கைத் துவக்கி, அது சீமானுக்குத் தான் ஆப்பானது. 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாதென சென்னை கோர்ட் சொன்னது. இதை மறுக்கிறீர்களா? ஆதாரங்கள் பல உண்டே? அதன் பிறகு தானே வடக்கில் பிரபலமான வக்கீலைப் பிடித்து உச்ச நீதி மன்றம் போனார்? இதையும் மறுக்கிறீர்களா? ஏன்?

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.