தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார்

1 month 3 weeks ago
கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார் தர்கா நகரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் கால­மானார். அன்­னாரின் ஜனாஸா தொழு­கையும் நல்­ல­டக்­கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்­ளி­வா­சலில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரும்பு சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் பிர­பல எழுத்­தா­ள­ரு­மான ஹாபிஸ் இஸ்­ஸ­தீனின் புதல்­வ­ரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரி­ய­வகை நோயினால் தனது 4 வய­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். இர்பான் ஹாபிஸ், தனது 18 வய­தி­லி­ருந்து எழுந்து நட­மாட முடி­யாத நிலையில் கட்­டி­லி­லேயே தனது வாழ்வைக் கழித்து வந்தார். மிகுந்த திற­மையும் விடா முயற்­சியும் கொண்ட இவர், இது­வரை Silent Thoughts, Moments of Merriment , Silent Struggle எனும் மூன்று நூல்­களை ஆங்­கில மொழியில் வெளி­யிட்­டுள்ளார். தனது நான்­கா­வது நூலையும் எழுதிக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே இவர் எம்­மை­விட்டும் பிரிந்­துள்ளார். தனது சொந்த முயற்­சி­யாலும் தந்தை மற்றும் குடும்­பத்­தி­னரின் ஒத்­து­ழைப்­பாலும் ஆங்­கில மொழியைப் பயின்று கொண்ட இவர், குறித்த நோயினால் முழு உடலும் இயக்­க­மற்­றி­ருந்த நிலையில் தனது ஒரு விரலை மாத்­திரம் பயன்­ப­டுத்தி மடிக்­க­ணி­னி­யிலும் கைய­டக்கத் தொலை­பே­சி­யிலும் தட்­டச்சு செய்தே மேற்­படி மூன்று நூல்­க­ளையும் எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த மே மாத இறு­தியில் Nas Daily எனும் சர்­வ­தேச ஊடகம் இர்பான் ஹாபிஸ் தொடர்பில் வெளி­யிட்ட 1 நிமிட வீடியோ தொகுப்பின் மூலம் இவர் சர்­வ­தேச அளவில் பிர­பல்யம் பெற்­றி­ருந்தார். இந்த வீடியோ வெளி­யி­டப்­பட்ட முதல் 4 நாட்­களில் மாத்­திரம் 1 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தது. நேற்று அவர் மரணிக்கும் வரை குறித்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 75 இலட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய புத்தகங்கள்.. http://www.virakesari.lk/article/37288

கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார்

1 month 3 weeks ago
கட்­டி­லி­லேயே வாழ்நாளை தொலைத்தும், சாதனைகள் பல புரிந்த பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் காலமானார்

 

thumb_large_virakesari.jpg
 

தர்கா நகரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல எழுத்­தாளர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் நேற்றுக் கால­மானார்.

அன்­னாரின் ஜனாஸா தொழு­கையும் நல்­ல­டக்­கமும் இன்று காலை 9 மணிக்கு தர்கா நகர் தெருப் பள்­ளி­வா­சலில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரும்பு சஞ்­சி­கையின் ஆசி­ரி­யரும் பிர­பல எழுத்­தா­ள­ரு­மான ஹாபிஸ் இஸ்­ஸ­தீனின் புதல்­வ­ரான இவர், Duchenne Muscular Dystrophy (DMD) எனும் அரி­ய­வகை நோயினால் தனது 4 வய­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இர்பான் ஹாபிஸ், தனது 18 வய­தி­லி­ருந்து எழுந்து நட­மாட முடி­யாத நிலையில் கட்­டி­லி­லேயே தனது வாழ்வைக் கழித்து வந்தார்.

மிகுந்த திற­மையும் விடா முயற்­சியும் கொண்ட இவர், இது­வரை Silent Thoughts, Moments of Merriment , Silent Struggle எனும் மூன்று நூல்­களை ஆங்­கில மொழியில் வெளி­யிட்­டுள்ளார். தனது நான்­கா­வது நூலையும் எழுதிக் கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே இவர் எம்­மை­விட்டும் பிரிந்­துள்ளார்.

தனது சொந்த முயற்­சி­யாலும் தந்தை மற்றும் குடும்­பத்­தி­னரின் ஒத்­து­ழைப்­பாலும் ஆங்­கில மொழியைப் பயின்று கொண்ட இவர், குறித்த நோயினால் முழு உடலும் இயக்­க­மற்­றி­ருந்த நிலையில் தனது ஒரு விரலை மாத்­திரம் பயன்­ப­டுத்தி மடிக்­க­ணி­னி­யிலும் கைய­டக்கத் தொலை­பே­சி­யிலும் தட்­டச்சு செய்தே மேற்­படி மூன்று நூல்­க­ளையும் எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த மே மாத இறு­தியில் Nas Daily எனும் சர்­வ­தேச ஊடகம் இர்பான் ஹாபிஸ் தொடர்பில் வெளி­யிட்ட 1 நிமிட வீடியோ தொகுப்பின் மூலம் இவர் சர்­வ­தேச அளவில் பிர­பல்யம் பெற்­றி­ருந்தார்.

இந்த வீடியோ வெளி­யி­டப்­பட்ட முதல் 4 நாட்­களில் மாத்­திரம் 1 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தது. நேற்று அவர் மரணிக்கும் வரை குறித்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 75 இலட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய புத்தகங்கள்..

received_1820741524630956.jpeg

http://www.virakesari.lk/article/37288

துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு!

1 month 3 weeks ago
ஆரம்பமாகிறது ஆசிய கிண்ணம் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொட­ருக்­கான போட்டி அட்­ட­வணை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி இலங்கை அணி ஆப்­கா­னிஸ்தான் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களுடன் 'பி' பிரிவில் இடம்­பெற்­றுள்­ளது.அத்­தோடு இத் தொடரில் இந்­தியா பாகிஸ்தான் மோதும் போட்­டியும் அட்­ட­வ­ணைப்படுத்­தப்­பட்­டுள்­ளது. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒருமுறை ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடத்­தப்­ப­டு­கின்­றது. அந்­த­ வகையில் 2018 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர் இந்­தி­யாவில் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்­கேற்­பதில் சந்­தேகம் தெரி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் ஆசிய கிண்ணப் போட்­டிகளை ஐக்­கிய அரபு அமீ­ரக நாடு­களில் நடத்த முடிவு மேற்­கொள்­ளப்­பட்­டது. அத­ன்படி எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 15 ஆம் திகதி டுபாயில் ஆசிய கிண்ணத் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. இப் போட்­டிகள் அபு­தாபி மற்றும் டுபாயில் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆசிய கிண்­ணத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை, நடப்பு சம்­பி­ய­னான இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய 5 அணி­களும் நேர­டி­யாகத் தகுதி பெற்­றுள்­ளன. இதில் எஞ்­சிய ஒரு இடத்­துக்­காக ஹொங்கொங், மலே­சியா, நேபாளம், ஓமான், சிங்­கப்பூர், ஐக்­கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோது­கின்­றன. பிரிக்­கப்­பட்­டுள்­ள இரு குழுக்­க­ளில் "ஏ" பிரிவில் இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் நாடும் "பி" பிரிவில் இலங்கை, பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான் ஆகிய அணி­களும் இடம்பெற்­றுள்­ளன. முதலிரு இடங்­களைப் பெறும் அணிகள் "சுப்பர் – 4" சுற்­றுக்கு முன்­னேறும். ஒவ்­வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். இதில் அதிக புள்­ளி­களைப் பெறும் முதலிரு அணிகள் எதிர்வரும் செப்­டெம்பர் மாதம் 28-ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இலங்கை அணி தனது முதல் போட்டியில் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷுடன் மோதுகின்றது. http://www.virakesari.lk/article/37287

உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி

1 month 3 weeks ago
உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி படம்.|கெட்டி இமேஜஸ். நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். செம்ஸ்போர்டில் 3 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே. இந்தத் தொடரில் ஒரு விஷயத்தை நான் உறுதி செய்ய முடியும். தட்பவெப்பம், சூழ்நிலை, பிட்ச் உள்ளிட்டவை மீது பழியைப் போட்டு சாக்குப் போக்குகள் கூறி புகார் தெரிவிக்க மாட்டோம். எங்கள் சவால் இங்கிலாந்தை வீழ்த்துவதே. எங்கு சென்றாலும் நன்றாக ஆடுவதில் பெருமையடைபவர்கள் நாங்கல், அயல்நாடுகளில் சிறந்த அணி என்ற பெயர் எடுக்க ஆர்வமாக உள்ளோம். ஆகவே புகார், அழுகை ஆகியவற்றை வெளிப்ப்டுத்தும் அணியாக இந்திய அணி, இந்த இந்திய அணி ஒரு போதும் இருக்காது. எனவே இதனை நான் திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறுகிறேன். பிட்சில் நல்ல புற்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன, புற்களை வெட்ட வேண்டுமா என்று மைதானப் பராமரிப்பாளர் கேட்டார். வெட்டவே கூடாது என்று கூறிவிட்டேன், இது உங்கள் இஷ்டம், நீங்கள் கொடுக்கும் பிட்சில் நாங்கள் ஆடுகிறோம், அதுபோலவே எங்கள் நாட்டில் கொடுக்கும் பிட்சில் நீங்கள் ஆடுங்கள், கேள்வி கேட்காதீர்கள் பயிற்சியாட்டம் 4 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குக் குறைக்கப்பட்டதற்கு தட்பவெப்பம் ஒரு காரணம், மேலும் டெஸ்ட் போட்டி நடக்கும் பர்மிங்ஹாமில் நாங்கள் 3 நாட்கள் பயிற்சி செய்ய முடிந்தது. எனவே இங்கு 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியிருந்தால் டெஸ்ட் மைதானத்தில் நாங்கள் பயிற்சி செய்யும் வாய்ப்பில் ஒருநாளை இழந்திருப்போம். மேலும் பயிற்சி ஆட்டம் 2 அல்லது 3 அல்லது 4 நாளா என்பது பயணிக்கும் அணியின் சவுகரியத்தைப் பொறுத்ததே. ஆகவே நேற்றுதான் பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாகக் குறைக்க முடிவெடுத்தோம். எங்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்டம் கூட போதும் காரணம் டெஸ்ட் மைதானத்தில் இன்னும் ஒருநாள் கூடுதலாகப் பயிற்சி செய்யலாம். ஆனால் எசெக்ஸ் அதிகாரிகள் டிக்கெட் விற்பனை போன்றவற்றைக் கூறினர், அதனால் சரி, 3 நாள் போட்டி ஆடுகிறோம் என்றோம் சனியன்று பயணம் செய்து ஞாயிறன்று எட்ஜ்பாஸ்டனில் பயிற்சி செய்ய முடியும். இங்கு ஒருநாள் கூடுதலாக ஆடுவதில் பயனில்லை, டெஸ்ட் நடைபெறும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதுதான் அந்தச் சூழ்நிலைக்குப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் வேறொன்றுமில்லை. இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி. https://tamil.thehindu.com/sports/article24512247.ece

உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி

1 month 3 weeks ago
உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி

 

 
ravi

படம்.|கெட்டி இமேஜஸ்.

நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

செம்ஸ்போர்டில் 3 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

 
 

எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே.

இந்தத் தொடரில் ஒரு விஷயத்தை நான் உறுதி செய்ய முடியும். தட்பவெப்பம், சூழ்நிலை, பிட்ச் உள்ளிட்டவை மீது பழியைப் போட்டு சாக்குப் போக்குகள் கூறி புகார் தெரிவிக்க மாட்டோம். எங்கள் சவால் இங்கிலாந்தை வீழ்த்துவதே.

எங்கு சென்றாலும் நன்றாக ஆடுவதில் பெருமையடைபவர்கள் நாங்கல், அயல்நாடுகளில் சிறந்த அணி என்ற பெயர் எடுக்க ஆர்வமாக உள்ளோம். ஆகவே புகார், அழுகை ஆகியவற்றை வெளிப்ப்டுத்தும் அணியாக இந்திய அணி, இந்த இந்திய அணி ஒரு போதும் இருக்காது. எனவே இதனை நான் திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறுகிறேன்.

பிட்சில் நல்ல புற்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன, புற்களை வெட்ட வேண்டுமா என்று மைதானப் பராமரிப்பாளர் கேட்டார். வெட்டவே கூடாது என்று கூறிவிட்டேன், இது உங்கள் இஷ்டம், நீங்கள் கொடுக்கும் பிட்சில் நாங்கள் ஆடுகிறோம், அதுபோலவே எங்கள் நாட்டில் கொடுக்கும் பிட்சில் நீங்கள் ஆடுங்கள், கேள்வி கேட்காதீர்கள்

பயிற்சியாட்டம் 4 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குக் குறைக்கப்பட்டதற்கு தட்பவெப்பம் ஒரு காரணம், மேலும் டெஸ்ட் போட்டி நடக்கும் பர்மிங்ஹாமில் நாங்கள் 3 நாட்கள் பயிற்சி செய்ய முடிந்தது.

எனவே இங்கு 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியிருந்தால் டெஸ்ட் மைதானத்தில் நாங்கள் பயிற்சி செய்யும் வாய்ப்பில் ஒருநாளை இழந்திருப்போம். மேலும் பயிற்சி ஆட்டம் 2 அல்லது 3 அல்லது 4 நாளா என்பது பயணிக்கும் அணியின் சவுகரியத்தைப் பொறுத்ததே.

ஆகவே நேற்றுதான் பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாகக் குறைக்க முடிவெடுத்தோம். எங்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்டம் கூட போதும் காரணம் டெஸ்ட் மைதானத்தில் இன்னும் ஒருநாள் கூடுதலாகப் பயிற்சி செய்யலாம். ஆனால் எசெக்ஸ் அதிகாரிகள் டிக்கெட் விற்பனை போன்றவற்றைக் கூறினர், அதனால் சரி, 3 நாள் போட்டி ஆடுகிறோம் என்றோம்

சனியன்று பயணம் செய்து ஞாயிறன்று எட்ஜ்பாஸ்டனில் பயிற்சி செய்ய முடியும். இங்கு ஒருநாள் கூடுதலாக ஆடுவதில் பயனில்லை, டெஸ்ட் நடைபெறும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதுதான் அந்தச் சூழ்நிலைக்குப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் வேறொன்றுமில்லை.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.

https://tamil.thehindu.com/sports/article24512247.ece

உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி

1 month 3 weeks ago
உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள் படத்தின் காப்புரிமைAFP தென் மேற்கு சிரியாவில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு குழுவும் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அரசின் பிடியில் உள்ள சுவேடா நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பல தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன. உறவை வலுவாக்கஒப்புதல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES புதன்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜாங் க்ளோட் உன்கருடன் தான் நடத்திய சந்திப்புக்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவுக்கு உள்ள வர்த்தக ரீதியான தடைகளை சற்றே தளர்த்த அமெரிக்கா முயலும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சேவை துறைகள் மற்றும் விவசாயத் துறையில் தற்போதுள்ள வர்த்தக உறவை மேலும் வலுவாக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பும், ஒப்பந்தங்கள் கையெழுத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் பங்குகள் சரிவு படத்தின் காப்புரிமைREUTERS சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பங்குகள் புதன்கிழமையன்று 20 சதவீதம் குறைந்து காணப்பட்டன. ஃபேஸ்புக்கின் வருவாய் மற்றும் அதன் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு குறுகியதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் 2.23 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டிருந்ததாக கூறப்படும் அந்நிறுவனம், போலி செய்திகள் மற்றும் தனிநபர் தகவல்களை பாதுகாக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது. குடியரசு கட்சியினர் முயற்சி படத்தின் காப்புரிமைAFP Image captionராட் ரோஸன்ஸ்டீன் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதித்துறை அதிகாரியான ராட் ரோஸன்ஸ்டீன் மேற்பார்வையிடுவதை தடுக்க குடியரசு கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். விசாரணைகளுக்கு அவர் தடையாக உள்ளார் என்று குடியரசு கட்சியினரின் குற்றச்சாட்டை நீதித்துறை மறுத்துள்ளது. https://www.bbc.com/tamil/global-44962520

உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி

1 month 3 weeks ago
உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்

200க்கும் மேற்பட்டோர் பலிபடத்தின் காப்புரிமைAFP

தென் மேற்கு சிரியாவில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு குழுவும் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியா அரசின் பிடியில் உள்ள சுவேடா நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பல தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன.

Presentational grey line

உறவை வலுவாக்கஒப்புதல்

உறவை வலுவாக்க ஒப்புதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

புதன்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜாங் க்ளோட் உன்கருடன் தான் நடத்திய சந்திப்புக்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவுக்கு உள்ள வர்த்தக ரீதியான தடைகளை சற்றே தளர்த்த அமெரிக்கா முயலும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சேவை துறைகள் மற்றும் விவசாயத் துறையில் தற்போதுள்ள வர்த்தக உறவை மேலும் வலுவாக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பும், ஒப்பந்தங்கள் கையெழுத்தும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

ஃபேஸ்புக் பங்குகள் சரிவு

ஃபேஸ்புக் பங்குகள் சரிவுபடத்தின் காப்புரிமைREUTERS

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் பங்குகள் புதன்கிழமையன்று 20 சதவீதம் குறைந்து காணப்பட்டன. ஃபேஸ்புக்கின் வருவாய் மற்றும் அதன் பயன்பாட்டாளர்கள் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு குறுகியதாக கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில் 2.23 பில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டிருந்ததாக கூறப்படும் அந்நிறுவனம், போலி செய்திகள் மற்றும் தனிநபர் தகவல்களை பாதுகாக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.

Presentational grey line

குடியரசு கட்சியினர் முயற்சி

ராட் ரோஸன்ஸ்டீன்படத்தின் காப்புரிமைAFP Image captionராட் ரோஸன்ஸ்டீன்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதித்துறை அதிகாரியான ராட் ரோஸன்ஸ்டீன் மேற்பார்வையிடுவதை தடுக்க குடியரசு கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

விசாரணைகளுக்கு அவர் தடையாக உள்ளார் என்று குடியரசு கட்சியினரின் குற்றச்சாட்டை நீதித்துறை மறுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44962520

யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு

1 month 3 weeks ago
யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு

 

தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll

 
யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு
 
சென்னை:
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது.
 
தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும், டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும், கமலுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
201807260855586952_1_modi._L_styvpf.jpg

மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை. 

இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #ThanthiTV #ThanthiTVOpinionPoll

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/26085558/1179198/Thanthi-TV-Opinion-Poll-result-more-support-for-MK.vpf

யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு

1 month 3 weeks ago
யார் முதலமைச்சராக வரவேண்டும்? - தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. #ThanthiTV #ThanthiTVOpinionPoll சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோருக்கு 25 சதவீத மக்களும், டிடிவி தினகரன், ரஜினி ஆகியோருக்கு தலா 6 சதவீத மக்களும், கமலுக்கு 5 சதவீத மக்களும், அன்புமணிக்கு 4 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். #ThanthiTV #ThanthiTVOpinionPoll https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/26085558/1179198/Thanthi-TV-Opinion-Poll-result-more-support-for-MK.vpf

பாகிஸ்தான் தேர்தல்; இம்ரான்கானின் கட்சி முன்னிலை

1 month 3 weeks ago
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை - முடிவை அறிவிப்பதில் தாமதம் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #PakistanElection #ImranKhan இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. அடுத்த இடங்களில் நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். #PakistanElection #ImranKhan https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/26055730/1179193/Imran-Khan-Tipped-for-Victory-as-Major-Pakistan-Parties.vpf

இளமை புதுமை பல்சுவை

1 month 3 weeks ago
உடலில் மிக முக்கியமான உறுப்பு எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு `துயரத்தை வெளிப்படுத்தும் மௌன மொழிதான் கண்ணீர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஃபிரெஞ்ச் தத்துவவியலாளர் வோல்டேர் (Voltaire). பிறரின் துன்பத்தையோ, துயரத்தையோ களைய முயல வேண்டாம்... காது கொடுத்துக் கேட்கக்கூட நம்மில் பலருக்கு அவகாசமில்லை. வாழ்க்கை நமக்குக் கொடுத்திருக்கும் தினசரி சவால்களை எதிர்கொள்ளவே நேரம் போதவில்லை என்பது உண்மையே. அதற்காக மனிதர்களின் அடிப்படை குணமான இரக்கத்தையே தொலைத்துவிடக் கூடாதல்லவா? ஒரு மனிதன் துன்பப்படும்போது உதவ நீளவேண்டிய கரங்களின் அவசியம் குறித்துப் பேசவேண்டிய தருணம் இது. வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு. அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று... அமெரிக்காவிலிருக்கும் சிறு நகரங்களில் ஒன்றான சார்லஸ்டோனில் (Charleston) அந்தக் குடும்பம் இருந்தது. அம்மா, அப்பா, ஒரே மகன், ஓய்வு காலத்தில் வீட்டிலிருக்கும் தாத்தா என சின்னக் குடும்பம். அப்பா ஊருக்குள் சொந்தமாக ஒரு கார் ஷெட் வைத்திருந்தார். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இருந்தது. அம்மா மேரிக்கு, மகன் டேவிட்டை நன்றாக வளர்க்க வேண்டும் என்கிற பெருங்கனவு இருந்தது. அவனுடைய பள்ளிப் பாடங்கள் குறித்து அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. `அதற்குப் பள்ளி இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள், தனியாகப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன... வாழ்க்கைப் பாடம் அது மிக முக்கியம்’ என நினைத்தார் மேரி. அதற்காகவே டேவிட்டிடம் விடுகதைகள் போடுவார், கேள்விகள் கேட்பார், கதைகளைச் சொல்வார். பொதுவாகவே கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், விடுகதைகளுக்கும், புதிர்களுக்கும் உடனுக்குடன் பதில் சொல்லிவிடுவார் மேரி. ஆனால், அவர் டேவிட்டிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு மட்டும் வருடக்கணக்கில் அவனுக்குப் பதில் சொல்லாமல் இருந்தார். அந்தக் கேள்வி... ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ என்பது. கடந்த மூன்று வருடங்களாக அந்தக் கேள்வியை அம்மாவிடம் கேட்டுவருகிறான் டேவிட். ஒவ்வொரு முறையும் அவனுக்கு எது சரி என்றுபடுகிறதோ அந்தப் பதிலைச் சொல்வான். ஒரு முறை அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டபோது, டேவிட்டுக்கு ஓசை என்பது மிக முக்கியம் என்று தோன்றியது. ஓசையை காதுகள் இல்லாமல் கேட்க முடியாதல்லவா? எனவே, ``காதுகள்’’ என்று பதில் சொன்னான். ``இல்லடா என் செல்லம். உலகத்துல எத்தனைபேர் கேட்கும் திறன் இல்லாம இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன? இதுக்கான பதிலை யோசிச்சுக்கிட்டே இரு. திரும்பவும் கேட்கிறேன்..’’ என்றார் அம்மா. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அப்படி ஒரு கேள்வி அம்மா கேட்டதைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான் டேவிட். ஒரு நாள் திரும்பவும் கேட்டார் அம்மா. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்த முறை நன்கு யோசித்துவிட்டு பதில் சொன்னான்... ``அம்மா... நம்ம எல்லாருக்குமே பார்வை ரொம்ப முக்கியம். அதுனால நம்ம உடம்புல இருக்குறதுலயே கண்ணுதான் ரொம்ப முக்கியமான உறுப்புனு நினைக்கிறேன்...’’ மேரி, மகனை உற்றுப் பார்த்தார். ``நீ ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டு வர்றே... நிறைய கத்துக்கவும் செய்யறே. ஆனா, நீ சொன்ன பதில் தப்பு. இங்கே பார்வையில்லாம எத்தனை பேர் இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன?’’ அதற்கும் பிறகு மேலும் ஏழு மாதங்கள் கடந்தன. திரும்ப அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டார். டேவிட் ஏதோ பதில் சொன்னான். அதையும் இல்லையென்று ஆணித்தரமாக மறுத்தார் மேரி. ஆனால், ``நீ புத்திசாலியா வளர்ந்துக்கிட்டே இருக்கே டேவிட்’’ என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறவே இல்லை. அந்த வருடம் வீட்டில் ஒரு சோகம்... டேவிட்டின் தாத்தா இறந்து போனார். வீட்டிலிருந்த எல்லாருமே உடைந்து போனார்கள். எல்லோருமே கலங்கி அழுதார்கள். அப்பா, அழுது பார்த்தேயிராத டேவிட், அவர் அழுததை முதன்முறையாகப் பார்த்தான். தாத்தாவுக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு எல்லோரும் வீடு திரும்பினார்கள். அன்று இரவு, டேவிட்டின் அறைக்கு வந்து அவன் தலையை மென்மையாக வருடியபடி அம்மா கேட்டார்.. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்தக் கேள்வியைக் கேட்டு டேவிட் அதிர்ந்து போனான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதுவரை வழக்கமாக அம்மா கேட்கும் கேள்விகளில் ஒன்று என்றுதான் அவன் நினைத்திருந்தான். பதில் சொல்லாமல் அம்மாவையே பார்த்தான். ``இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமானதுடா செல்லம். நான் ஒவ்வொரு தடவை இந்தக் கேள்வியை கேட்குறப்பவும் நீ ஒரு பதில் சொல்வே. அது தப்புங்கிறதையும், ஏன் தப்புங்கிறதையும் நான் உனக்குச் சொல்வேன். ஆனா, அந்த முக்கியமான பாடத்தை நீ இன்னிக்கு கத்துக்கிட்டே ஆகணும்...’’ சொல்லிவிட்டு மேரி, டேவிட்டை கருணை பொங்கப் பார்த்தார். அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பிறகு சொன்னார்... ``மகனே... நம் உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு எது தெரியுமா? தோள்கள்...’’ ``ஏம்மா, நம்ம தலையைத் தாங்கிக்கிட்டு இருக்குறதாலயா?’’ ``இல்லை கண்ணு... நமக்கு வேண்டியவங்களோ, உறவினர்களோ, நண்பர்களோ துன்பத்துல கண்ணீர் விடும்போது, அவங்களை நம்ம தோள்ல சாய்ச்சுக்கலாம்... அது தாங்கிக்கும். வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல துன்பம் வரும்போது நம்ம எல்லாருக்குமே சாய்ஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படும். உனக்கு நிறைய நண்பர்களும், உன் மேல அன்பு செலுத்துறவங்களும் இருப்பாங்கனு நான் நம்புறேன். அதாவது உனக்கு ஒரு துன்பம்னா, அதுனால நீ அழுதேன்னா உனக்குத் தோள் கொடுக்க நிச்சயம் சில பேர் வருவாங்கனு நம்புறேன். தோள்கள் அவ்வளவு முக்கியம் டேவிட்...’’ அம்மா, செல்லமாக டேவிட்டின் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே போனார். டேவிட் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தான். அதுவரை மூடியிருந்த மேகங்கள் விலக, நிலவு பளிச்சென்று தெரிந்தது. *** https://www.vikatan.com/

"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்"

1 month 3 weeks ago
"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்" (எம்.ஆர்.எம்.வஸீம்) அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்தே போதைப்­பொருள் வியா­பார நட­வ­டிக்­கைகள் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தா­க புல­னாய்வு தகவல் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். அதனால் இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால்,சிறைச்­சா­லை­களில் இருந்து வழி­ந­டத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களில் கைது­செய்­யப்­பட்டு மரண தண்­டனை தீர்ப்­பாக்­கப்­பட்ட பின்­னரும் சிறைச்­சா­லைக்குள் இருந்­து­கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்­துக்கு அன்று அமைச்­ச­ர­வையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். தற்­போது யாரும் மரண தண்­டனை தொடர்­பாக விமர்­சிப்­ப­தாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் இது­தொ­டர்­பாக வேறு­பட்ட கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். என்­றாலும் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் அதனை பாது­காத்­துக்­கொள்­வது அமைச்­ச­ர­வையில் இருக்கும் அனை­வ­ரதும் கூட்­டுப்­பொ­றுப்­பாகும். மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை விரை­வாக நிறை­வேற்­று­மாறு எழுத்­து­மூலம் சிலர் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர். அதே­போன்று இதனை நிறை­வேற்­றக்­கூ­டாது என சிலர் தெரி­வித்­துள்­ளனர்.என்­றாலும் அதி­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டாக இருப்­பது மரண தண்­ட­னையை நிறை­வேற்­ற­வேண்டும் என்­ப­தாகும்.அத்­துடன் மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­ப­திக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக சிலர் தெரி­விக்­கின்­றனர். இதற்கு ஜனா­தி­பதி அண்­மையில் பதில் அளித்­தி­ருந்தார்.அதனால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஜனா­தி­பதி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டார். ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்­பாக கேள்வி எழுப்­பினால் எமது நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த முடியும். சர்­வ­தேச ரீதியில் 54 நாடு­களில் தண்­டனை சட்டம் நிறை­வேற்­றப்­ப­டு கின்­றது.29நாடு­களில் சட்டம் அமுலில் இருந்­தாலும் எமது நாடுபோன்று தண் டனையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்ப ட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நா டான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.நாட்டினதும் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்திருக்கின்றார் என்றார். http://www.virakesari.lk/article/37281

"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்"

1 month 3 weeks ago
"சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடிபணியமாட்டார்"

 

 

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அமைச்சரவையின் பூரண ஆதரவுடனேயே மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்தார். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

samarasinga.jpg

நாட்­டுக்குள் போதைப்­பொ­ருட்கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் சிறைச்­சா­லை­க­ளுக்குள் இருந்தே போதைப்­பொருள் வியா­பார நட­வ­டிக்­கைகள் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­தா­க புல­னாய்வு தகவல் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும்  ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார். 

அதனால் இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால்,சிறைச்­சா­லை­களில் இருந்து வழி­ந­டத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­காக போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களில் கைது­செய்­யப்­பட்டு மரண தண்­டனை தீர்ப்­பாக்­கப்­பட்ட பின்­னரும்  சிறைச்­சா­லைக்குள் இருந்­து­கொண்டு இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையில் தெரி­வித்­தி­ருந்தார்.

 ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்­துக்கு அன்று அமைச்­ச­ர­வையில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். தற்­போது யாரும் மரண தண்­டனை தொடர்­பாக விமர்­சிப்­ப­தாக இருந்தால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அத்­துடன் இது­தொ­டர்­பாக வேறு­பட்ட கருத்­து­டை­ய­வர்கள் இருக்­கலாம். என்­றாலும் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் அதனை பாது­காத்­துக்­கொள்­வது அமைச்­ச­ர­வையில் இருக்கும் அனை­வ­ரதும் கூட்­டுப்­பொ­றுப்­பாகும்.

மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை விரை­வாக நிறை­வேற்­று­மாறு எழுத்­து­மூலம் சிலர் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்­ளனர். அதே­போன்று இதனை நிறை­வேற்­றக்­கூ­டாது என சிலர் தெரி­வித்­துள்­ளனர்.என்­றாலும் அதி­க­மா­ன­வர்­களின் நிலைப்­பா­டாக இருப்­பது மரண தண்­ட­னையை நிறை­வேற்­ற­வேண்டும் என்­ப­தாகும்.அத்­துடன் மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­ப­திக்கு சர்­வ­தேச ரீதியில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக  சிலர் தெரி­விக்­கின்­றனர். இதற்கு ஜனா­தி­பதி அண்­மையில் பதில் அளித்­தி­ருந்தார்.அதனால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஜனா­தி­பதி சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டார். ஜெனிவா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இது தொடர்­பாக கேள்வி எழுப்­பினால் எமது நாட்டின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த முடியும்.

சர்­வ­தேச ரீதியில் 54 நாடு­களில் தண்­டனை சட்டம் நிறை­வேற்­றப்­ப­டு கின்­றது.29நாடு­களில் சட்டம் அமுலில் இருந்­தாலும் எமது நாடுபோன்று தண் டனையை நிறைவேற்றுவதில்லை.105 நாடுகளில் தண்டனைச்சட்டம் முற்றாக நீக்கப்ப ட்டுள்ளது.எமது நாட்டுக்கு அண்மை நா டான இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.நாட்டினதும்  நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியுமே ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்திருக்கின்றார் என்றார்.

http://www.virakesari.lk/article/37281

உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?

1 month 3 weeks ago
உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், ‘கறுப்பு ஜூலை’ என்ற பெயரில் தமிழர்களின் கழுத்தை அறுத்தது. அன்று, யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடிச் சம்பவத்துடன், எள்ளளவும் சம்பந்தம் இல்லாதவர்கள், யாழில் என்ன நடந்தது என்றுகூடத் தெரியாதவர்கள், தமிழர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக பலியெடுக்கப்பட்டனர்; பழிதீர்க்கப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த 54 தமிழ்க் கைதிகள் கொடூரமாக வதைசெய்யப்பட்டு, மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கங்கள் கொடூரமாகக் குத்தி கிழிக்கப்பட்டு, பாய்ந்தோடிய குருதியில் குளித்தனர், கொடியவர்கள். கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் சில ஆயிரம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டனர்; பல ஆயிரம் தமிழர் அடித்து விரட்டப்பட்டனர்; பல கோடி பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன; மிகுதி தீயில் பொசுங்கின. “இது எங்களின் தேசம். நீங்கள் உங்களின் தேசத்துக்குப் போங்கள்” எனக் கழுத்தில் பிடித்துத் தள்ளினார்கள்; கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள். இது கறை படிந்த வரலாறு. சிந்திக்கும் ஆற்றலும், எவரையும் சாராது சுயகௌரவத்துடனான தன்மான உணர்வும் பொதுவாகச் சகலருக்கும் இயல்பானது. அது போலவே, தமிழ் மக்களும் தங்களுடைய வரலாற்றுப் பூமியில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லாமல், சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழவே விரும்பினார்கள். அதேவேளை, தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்முதல், தங்களது மண்ணில் கௌரவமாகவும் சிறப்பாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்து வந்திருந்தார்கள். ஆனால், 1948ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில், அவர்களது விருப்பங்கள், அபிலாஷைகள் யாவும், நாட்டைத் தொடர்ச்சியாக ஆண்ட சிங்கள அரசாங்கங்களால் கேள்விக் குறியாக்கப்பட்டன. நன்கு திட்டமிடப்பட்டதும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடனும் இன்று வரை தொடரும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச்சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், நூலக எரிப்பு, பொருளாதார அழிப்பு, கலாசார சிதைவு (திணிப்பு) எனப் பல்வேறு வழிகளிலும் தமிழ் இனம் ஒடுக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது எனத் தமிழ் மக்கள் உணர்ந்தனர்; விளைவுகளால் பயந்தனர். இவற்றைத் தவிர்த்து, தடுத்துத் தங்களைத் தன்மானத்துடன் வாழ (விடுங்கள்) வகை செய்யுமாறு பல தடவைகள் கோரினார்கள்; கெஞ்சினார்கள். சாத்வீக அஹிம்சை வழிகளில் போராடினார்கள். ஆனால், சர்வ அதிகாரத்தைக் குவித்து வைத்து, ஆட்சி புரிந்தவர்களின் செவிகளில் இவை எதுவுமே கேட்கவில்லை; கேட்கவும் மறுத்தனர்; சிலர் கேட்காதது போல, பாசாங்கு செய்தனர். தமிழ் மக்கள், பல ஆண்டுகளாகப் பொத்திப்பொத்தி அடக்கி வைத்த, கூட்டு உணர்வுகள் (தாயக ஆசை, இனம் அழிகின்றதே என்ற ஏக்கமும் கோபமும்) வேறு விதமாக வெடித்தன. அன்பாகப் பண்பாக வாழ்ந்தவர்கள், வெகுண்டு எழத் தூண்டப்பட்டனர்; தூண்டி விடப்பட்டனர். சகோதர மொழி பேசுவோர் எனக் கூறிக் கொள்வோர், சகோதர இன மக்கள் எனக் கூறிக் கொள்வோர், சகோதரத்துவத்தைக் காட்ட மறுத்தனர்; மறந்து விட்டனர். அன்பு மொழி கேட்க ஏங்கும், ஓர் இனிய அப்பாவி மக்கள் கூட்டத்துக்கு, ஆயுத மொழி பரிசாக வழங்கப்பட்டது. ‘போர் என்றால் போர்; போர்க்களம் வா பார்க்கலாம்’ என வலிந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள்; ‘அன்பால் என் மனதை நீ வெல்; பதிலுக்கு நானும் உன்னை அன்பால் வெல்வேன்’ என்ற, பௌத்த மதம் கூறும் உயர் பண்பு புதைக்கப்பட்டது. இன, மத வெறியாட்டம் விதைக்கப்பட்டது. தமிழ் ஆன்மாக்களை, ஆழமாக ஆட்டிய அதிர்வலைகள் அசைந்து, 35 வருடங்கள் உருண்டோடி விட்டன. புனிதம் மறந்து, மனிதம் மறைத்து நடாத்திய கொடூரங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல; மன்னிக்கப்படக் கூடியவைகளும் அல்ல. இவைகள், உலகில் தமிழ் கூறும் நல்லுள்ளங்கள் உள்ள வரை, நினைவு கூரப்படும். ஆனால், தன்னால் தாங்க முடியாத அளவில், தமிழ்ச் சமூகம் பலதொடர் இழப்புகளைத் எதிர்கொண்டு, இன்றும்கூடத் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒரு கிராமத்தில், ஒரு சமுதாயத்தில் உள்ள யாவரும், ஒரே விதமான கொடூர சூழலுக்கும், கொடும் இன்னல்களுக்கும் உட்படுவதால், கூட்டாகச் சமூக மட்டத்தில் உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக மனவடு’ எனப்படுகிறது. ஈழத்தில் தமிழ்ச் சமூகம் பல தசாப்த காலமாக, மனவடுவுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யாவரும், ஏதோவொரு விதத்தில், ‘சமூக வடு’வுக்கு உள்ளாகித் தொடர்ச்சியாகத் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாவரும் தனிப்பட்ட ரீதியாக, உளவியல் நோய்க்கு உட்பட்டவர்கள் அல்லர். ஒரு தேசிய இனத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு இவற்றுடன் சேர்த்து, அவற்றுக்கு சொந்தக்காரர் (தமிழர்) அழிதலே, அழிக்கப்படுதலே நடந்தது; நடக்கின்றது. ஆகவே, இதுவே எம் நாட்டின் இனப்பிரச்சினை; இதுவே தேசியப் பிரச்சினை; இதுவே தீராத பிரச்சினை. இதையே தீர்க்க வேண்டும். இதனை விடுத்து, தமிழ் மக்கள் அபிவிருத்தியை வேண்டி நிற்கின்றனர் என்றும் அதை நிவர்த்தி செய்தால் போதுமானது என்ற, பிழையான விம்பத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்குக் காட்டுகின்றனர். சிலர், ‘தமிழ் மக்களுக்கு எமது நாட்டில் என்ன பிரச்சினை’ என்றும் கேள்வி கேட்கின்றனர். பெற்றோர்கள் தருவது உணவு; ஆசிரியர் தருவது உணர்வு; அனுபவம் தருவது உயர்வு. இனப்பிரச்சினையின் பல வருடப் பட்டறிவு, பல படிப்பினைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், தமிழ் மக்கள் (அவர்களது பிரதிநிதிகள்) தங்களது நீதியான கோரிக்கைகளை முன்வைத்தால், இனவாதம் கதைப்பதாக கூச்சல், குழப்பம் விளைவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களது நியாயமான வாதங்களைத் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறாகத் தொடர்ந்து, ‘குரல்வளை’ நசுக்கியதாலேயே, தமிழ் மக்கள் ‘தனிவளை’ கோரினார்கள் எனச் சிந்திக்கவில்லை. மாறாக, தமிழ்மக்கள் இன்னமும் வளைந்து போக வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. போர் முடிந்த, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில், தமிழ் மக்கள் பெரும் உள்ளக் குமுறல்களுடன் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு நம்பிக்கைகள் ஏற்படக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இளம் வயதில் தனது வாழ்வை இழந்த (கணவனை) ஒரு விதவை, தனது அனைத்து ஆசைகளையும் புதைத்து, தனது பிள்ளைகளுக்காக, விதையாக வேராக விழுதாக வாழ்வது போல, தமிழர்கள் வாழ்வு போய் விட்டது. நாட்டின், ஒரு தேசிய இனத்தின் நியாயமான, நீதியான கோரிக்கைகளை அபிலாஷைகளை முன்வந்து ஏற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, அதன் ஊடாக அவர்களையும் அரவணைத்து, பங்குதாரர்கள் ஆக்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இலங்கையில் எந்த ஆட்சியாளர்களும் தயார் இல்லை. தமிழ் மக்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் தோல்வி அடையவில்லை; அடையப்போவதில்லை. மாறாகத் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார்கள்; ஏமாற்றப்படுகின்றார்கள். அன்றைய பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றைய நல்லாட்சி அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வரை, ஏமாற்றமே மிஞ்சியதாக உள்ளது. சர்வதேச அமைப்புகள், நாடுகள் என அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் கூட, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக்கியது. ‘ஒப்பந்தத்தில் நிறைவேற்றுவோம்’ எனக் கையொப்பமிட்ட வரைபுகளை, நிறைவேற்றத் தவறுதல், காலம் கடத்துதல், நொண்டிச்சாட்டுக் கூறல் எனப் பல்வேறு வகையிலான ஏமாற்றங்களைத் தமிழினம் கண்டு விட்டது. மறுபுறத்தே, ஓர் இனத்தின் பல்லாயிரம் மக்களைக் பாதுகாக்க முடியாமல் அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது. தமிழ் மக்களது அடிப்படை பிறப்புரிமைகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்கள் ஆனால் இவையெல்லாம், தங்களுக்கான பெரும் தோல்விகளாகச் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் திளைத்து மூழ்கி உள்ளவர்கள், இன்னும் கருதவில்லை; இன்றும் கருதவில்லை; வருங்காலத்திலாவது கருதுவார்களா? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உளியின்-வெற்றியா-கல்லின்-தோல்வியா/91-219447

உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?

1 month 3 weeks ago
உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?
 

பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும்.   
இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர்.   

நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், ‘கறுப்பு ஜூலை’ என்ற பெயரில் தமிழர்களின் கழுத்தை அறுத்தது. அன்று, யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடிச் சம்பவத்துடன், எள்ளளவும் சம்பந்தம் இல்லாதவர்கள், யாழில் என்ன நடந்தது என்றுகூடத் தெரியாதவர்கள், தமிழர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக பலியெடுக்கப்பட்டனர்; பழிதீர்க்கப்பட்டனர்.   

வெலிக்கடைச் சிறையில் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த 54 தமிழ்க் கைதிகள் கொடூரமாக வதைசெய்யப்பட்டு, மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கங்கள் கொடூரமாகக் குத்தி கிழிக்கப்பட்டு, பாய்ந்தோடிய குருதியில் குளித்தனர், கொடியவர்கள். கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் சில ஆயிரம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டனர்; பல ஆயிரம் தமிழர் அடித்து விரட்டப்பட்டனர்; பல கோடி பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன; மிகுதி தீயில் பொசுங்கின. “இது எங்களின் தேசம். நீங்கள் உங்களின் தேசத்துக்குப் போங்கள்” எனக் கழுத்தில் பிடித்துத் தள்ளினார்கள்; கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள். இது கறை படிந்த வரலாறு.  

சிந்திக்கும் ஆற்றலும், எவரையும் சாராது சுயகௌரவத்துடனான தன்மான உணர்வும் பொதுவாகச் சகலருக்கும் இயல்பானது. அது போலவே, தமிழ் மக்களும் தங்களுடைய வரலாற்றுப் பூமியில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லாமல், சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழவே விரும்பினார்கள்.   

அதேவேளை, தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்முதல், தங்களது மண்ணில் கௌரவமாகவும் சிறப்பாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்து வந்திருந்தார்கள். ஆனால், 1948ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில், அவர்களது விருப்பங்கள், அபிலாஷைகள் யாவும், நாட்டைத் தொடர்ச்சியாக ஆண்ட சிங்கள அரசாங்கங்களால் கேள்விக் குறியாக்கப்பட்டன.   

நன்கு திட்டமிடப்பட்டதும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடனும் இன்று வரை தொடரும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச்சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், நூலக எரிப்பு, பொருளாதார அழிப்பு, கலாசார சிதைவு (திணிப்பு) எனப் பல்வேறு வழிகளிலும் தமிழ் இனம் ஒடுக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது எனத் தமிழ் மக்கள் உணர்ந்தனர்; விளைவுகளால் பயந்தனர்.  

இவற்றைத் தவிர்த்து, தடுத்துத் தங்களைத் தன்மானத்துடன் வாழ (விடுங்கள்) வகை செய்யுமாறு பல தடவைகள் கோரினார்கள்; கெஞ்சினார்கள். சாத்வீக அஹிம்சை வழிகளில் போராடினார்கள். ஆனால், சர்வ அதிகாரத்தைக் குவித்து வைத்து, ஆட்சி புரிந்தவர்களின் செவிகளில் இவை எதுவுமே கேட்கவில்லை; கேட்கவும் மறுத்தனர்; சிலர் கேட்காதது போல, பாசாங்கு செய்தனர்.   

தமிழ் மக்கள், பல ஆண்டுகளாகப் பொத்திப்பொத்தி அடக்கி வைத்த,  கூட்டு உணர்வுகள் (தாயக ஆசை,  இனம் அழிகின்றதே என்ற ஏக்கமும் கோபமும்) வேறு விதமாக வெடித்தன. அன்பாகப் பண்பாக வாழ்ந்தவர்கள், வெகுண்டு எழத் தூண்டப்பட்டனர்; தூண்டி விடப்பட்டனர்.   

சகோதர மொழி பேசுவோர் எனக் கூறிக் கொள்வோர், சகோதர இன மக்கள் எனக் கூறிக் கொள்வோர், சகோதரத்துவத்தைக் காட்ட மறுத்தனர்; மறந்து விட்டனர். அன்பு மொழி கேட்க ஏங்கும், ஓர் இனிய அப்பாவி மக்கள் கூட்டத்துக்கு, ஆயுத மொழி பரிசாக வழங்கப்பட்டது.   

‘போர் என்றால் போர்; போர்க்களம் வா பார்க்கலாம்’ என வலிந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள்; ‘அன்பால் என் மனதை நீ வெல்; பதிலுக்கு நானும் உன்னை அன்பால் வெல்வேன்’ என்ற, பௌத்த மதம் கூறும் உயர் பண்பு புதைக்கப்பட்டது. இன, மத வெறியாட்டம் விதைக்கப்பட்டது.   

தமிழ் ஆன்மாக்களை, ஆழமாக ஆட்டிய அதிர்வலைகள் அசைந்து, 35 வருடங்கள் உருண்டோடி விட்டன. புனிதம் மறந்து, மனிதம் மறைத்து நடாத்திய கொடூரங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல; மன்னிக்கப்படக் கூடியவைகளும் அல்ல. இவைகள், உலகில் தமிழ் கூறும் நல்லுள்ளங்கள் உள்ள வரை, நினைவு கூரப்படும்.   

ஆனால், தன்னால் தாங்க முடியாத அளவில், தமிழ்ச் சமூகம் பலதொடர் இழப்புகளைத் எதிர்கொண்டு, இன்றும்கூடத்  தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒரு கிராமத்தில், ஒரு சமுதாயத்தில் உள்ள யாவரும், ஒரே விதமான கொடூர சூழலுக்கும், கொடும் இன்னல்களுக்கும் உட்படுவதால், கூட்டாகச் சமூக மட்டத்தில் உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக மனவடு’ எனப்படுகிறது. ஈழத்தில் தமிழ்ச் சமூகம் பல தசாப்த காலமாக, மனவடுவுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.  

கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யாவரும், ஏதோவொரு விதத்தில், ‘சமூக வடு’வுக்கு உள்ளாகித் தொடர்ச்சியாகத் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாவரும் தனிப்பட்ட ரீதியாக, உளவியல் நோய்க்கு உட்பட்டவர்கள் அல்லர். 

ஒரு தேசிய இனத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு இவற்றுடன் சேர்த்து, அவற்றுக்கு சொந்தக்காரர் (தமிழர்) அழிதலே, அழிக்கப்படுதலே நடந்தது; நடக்கின்றது.   

ஆகவே, இதுவே எம் நாட்டின் இனப்பிரச்சினை; இதுவே தேசியப் பிரச்சினை; இதுவே தீராத பிரச்சினை. இதையே தீர்க்க வேண்டும். இதனை விடுத்து, தமிழ் மக்கள் அபிவிருத்தியை வேண்டி நிற்கின்றனர் என்றும் அதை நிவர்த்தி செய்தால் போதுமானது என்ற, பிழையான விம்பத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்குக் காட்டுகின்றனர். சிலர், ‘தமிழ் மக்களுக்கு எமது நாட்டில் என்ன பிரச்சினை’ என்றும் கேள்வி கேட்கின்றனர்.  

பெற்றோர்கள் தருவது உணவு; ஆசிரியர் தருவது உணர்வு; அனுபவம் தருவது உயர்வு. இனப்பிரச்சினையின் பல வருடப் பட்டறிவு, பல படிப்பினைகளை வழங்கியுள்ளது.   

ஆனாலும், தமிழ் மக்கள் (அவர்களது பிரதிநிதிகள்) தங்களது நீதியான கோரிக்கைகளை முன்வைத்தால், இனவாதம் கதைப்பதாக கூச்சல், குழப்பம் விளைவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களது நியாயமான வாதங்களைத் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது.   

இவ்வாறாகத் தொடர்ந்து, ‘குரல்வளை’ நசுக்கியதாலேயே, தமிழ் மக்கள் ‘தனிவளை’ கோரினார்கள் எனச் சிந்திக்கவில்லை. மாறாக, தமிழ்மக்கள் இன்னமும் வளைந்து போக வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.    

போர் முடிந்த, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில், தமிழ் மக்கள் பெரும் உள்ளக் குமுறல்களுடன் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு நம்பிக்கைகள் ஏற்படக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.   

இளம் வயதில் தனது வாழ்வை இழந்த (கணவனை) ஒரு விதவை, தனது அனைத்து ஆசைகளையும் புதைத்து, தனது பிள்ளைகளுக்காக, விதையாக வேராக விழுதாக வாழ்வது போல, தமிழர்கள் வாழ்வு போய் விட்டது. 

நாட்டின், ஒரு தேசிய இனத்தின் நியாயமான, நீதியான கோரிக்கைகளை அபிலாஷைகளை முன்வந்து ஏற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, அதன் ஊடாக அவர்களையும் அரவணைத்து, பங்குதாரர்கள் ஆக்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இலங்கையில் எந்த ஆட்சியாளர்களும் தயார் இல்லை.   

தமிழ் மக்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் தோல்வி அடையவில்லை; அடையப்போவதில்லை. மாறாகத் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார்கள்; ஏமாற்றப்படுகின்றார்கள். அன்றைய பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றைய நல்லாட்சி அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வரை, ஏமாற்றமே மிஞ்சியதாக உள்ளது. சர்வதேச அமைப்புகள், நாடுகள் என அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் கூட, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக்கியது.   

‘ஒப்பந்தத்தில் நிறைவேற்றுவோம்’ எனக் கையொப்பமிட்ட வரைபுகளை, நிறைவேற்றத் தவறுதல், காலம் கடத்துதல், நொண்டிச்சாட்டுக் கூறல் எனப் பல்வேறு வகையிலான ஏமாற்றங்களைத் தமிழினம் கண்டு விட்டது.   

மறுபுறத்தே, ஓர் இனத்தின் பல்லாயிரம் மக்களைக் பாதுகாக்க முடியாமல் அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது. தமிழ் மக்களது அடிப்படை பிறப்புரிமைகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்கள்   

ஆனால் இவையெல்லாம், தங்களுக்கான பெரும் தோல்விகளாகச் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் திளைத்து மூழ்கி உள்ளவர்கள், இன்னும் கருதவில்லை; இன்றும் கருதவில்லை; வருங்காலத்திலாவது கருதுவார்களா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உளியின்-வெற்றியா-கல்லின்-தோல்வியா/91-219447

இந்தியாவையும் சீனாவையும் சமனிலைப்படுத்த முயற்சி – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா

1 month 3 weeks ago
இந்தியாவையும் சீனாவையும் சமனிலைப்படுத்த முயற்சி – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா சிறிலங்காவில் முதலீட்டுத் திட்டங்களில் இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்த முனைவதாக, சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, “ முதலீடு செய்ய விரும்பும் இழப்புகளைத் தந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கும் , சிறிலங்கா அனைவருக்கும் வாய்ப்புகளை திறந்தே வைத்துள்ளது. மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றை சிறிலங்கா அரசாங்கம் வெள்ளை யானைகளாகவே பார்க்கிறது. இவை செயற்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இலாபத்தை தரவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அதேவேளை, மத்தல விமான நிலையம் தொடர்பாக இந்தியாவுடன், உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளவுள்ளது. சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சிறிலங்காவில் சீனா மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கிறது என்று இந்தியா உணர்கிறது. அம்பாந்தோட்டையை சீனாவுக்கும், மத்தலவை இந்தியாவுக்கும் கொடுத்து, இரண்டு தரப்புகளையும் மகிழ்ச்சிப்படுத்தி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த இராஜதந்திரப் பிரச்சினையை தீர்க்க சிறிலங்கா முனைகிறது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/07/26/news/32086