Aggregator

தேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.

3 weeks 1 day hence

Thesaththin-Kural-173.jpg    விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்

தேசத்தின் குரல்... அன்ரன் பாலசிங்கம் நினைவு தினம்.

அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம் மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற, ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

ஆரம்ப வாழ்க்கை.
ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.

மணவாழ்க்கை.
அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு.
1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்புக் கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடி பெயர்ந்தனர்.

1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.

ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.

உடல் நிலை பாதிப்பு.
2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

மறைவு.
தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.

தேசத்தின் குரல் விருது.
மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்தார்.

Vegan (சைவம்)

39 minutes 19 seconds ago
இவங்கடை வீகன் வேறை. எங்கடை சைவம் வேறை. அர்த்தங்களை புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்.. சைவம் வியாபார நோக்கு கொண்டதல்ல என்பது யாவருக்கும் புரிய வேண்டும். வெள்ளைக்காரன் சொன்னால் எதுவும் சரி எண்ட கருத்துப்பாடு இங்கேயும் இருக்கின்றது.

சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு

1 hour 14 minutes ago
அமெரிக்க கூட்டுவளும் சைனாவும் சிலோனிலை ஒரு மேடை போட்டிட்டினம். கூத்துகள் இனித்தானே தொடங்கும். இது ஈழத்தமிழனனுக்கு ஒரு சந்தர்ப்பம். இதையும் விட்டால்........நான் நினைக்கேல்லை பிறகு???????? ஏனெண்டால் இன்னும் கொஞ்சக்காலம் போனால் தமிழ்ச் சமூகத்தின்ரை வாழ்க்கை முறை, அரசியல்,கொள்கைகள்,சம்பிரதாயங்கள்,உணவு முறைகள்,கொண்டாட்டங்கள் எல்லாம் மாறி/மாற்றப்பட்டு விடும். அதுக்குப்பிறகு எல்லாரும் இருந்து வடிவு பாக்க வேண்டியதுதான்

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

1 hour 32 minutes ago
சிறு வயதிலிருந்து எதை சாப்பிட்டு வளர்ந்தமோ அந்த உணவு சாகும் வரைக்கும் சொர்க்கம். அது புலம்பெயர்ந்து எங்கு வாழ்ந்தாலும் சரி அல்லது பிறந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் சரி...... எனக்கு தெரிந்த கொரிய மாணவர் குழாம் ஒன்று இருக்கின்றது. ஜேர்மனியில் தடை செய்யப்பட்டாலும் கொரியாவிலிருந்து நாய் இறைச்சியை ஏதோ ஒரு விதமாக வரவழைத்து அவர்களின் முக்கிய விழாக்களில் உண்டு மகிழ்வார்கள். ஏன் ஆபிரிக்காவில் யானை இறைச்சியும் சாப்பிடுகின்றார்கள் தானே? அரேபியர்களுக்கு ஒட்டக இறைச்சி மிக மிக பிரபல்யமல்லோ?

இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல்.

1 hour 54 minutes ago
இனிமேல் தேயிலை உங்களுக்கு விற்கமாட்டம் எண்டு வெருட்ட வேணும். அப்பதான் அமெரிக்கா ஐரோப்பா எல்லாம் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பினம்.

யாழ். கந்தர்மடத்தில் கார் – புகையிரத விபத்து – வர்த்தகர் ஒருவர் படுகாயம்

2 hours 45 minutes ago
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இப்படி சகட்டு மேனிக்கு, ஒரு பொதுத் தளத்தில் குற்றம்சாட்டுவதுக்கு கண்டனங்கள். செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கு இது ஒரு பாதுகாப்பற்ற கடவை என்று. அப்படி இருந்தும் பாதிப்பட்டவரையே குற்றம் சொல்லுவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்

2 hours 56 minutes ago
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதியை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொள்வது என்கிற கேள்வி, அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. பாதீட்டுத் திட்டத்தில் அங்கிகரிக்கப்படாமல், நிதி ஒதுக்கீடுகளைத் திறைசேரி எப்படி அனுமதிக்கும்? அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது என்று, அதைச் சாதாரணமாக இவ்வாறு கேட்கலாம். மைத்திரி நாட்டை, எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமானது. ஆனாலும், மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்ட தரப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவை குறித்துத்தான் இந்தப் பத்தி பேச விளைகிறது. ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, நல்லாட்சிக் கூட்டணி உருவான போது, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலையொன்றின் வழி, துரித அபிவிருத்தி பற்றிய நம்பிக்கை அது. ஆனால், அது 100 நாள் வேலைத்திட்டத்தின் போதே, தடுமாற்றத்தைக் காண்பித்தது. ஆனாலும், பொதுத் தேர்தலின் பின்னராக தேசிய அரசாங்கத்தை அமைத்து, விடயங்களை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியும் என்று, நல்லாட்சிக் கூட்டணிக்குள் இருந்த தரப்புகள் பலவும் நம்பின. குறிப்பாக, நல்லாட்சிக் கூட்டணிக்குள் பங்காளிகளாக இருந்த தமிழ்- முஸ்லிம் கட்சிகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை மக்களிடம் வழங்கியே, என்றைக்கும் பெற்றிராத அளவு வாக்குகளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றன. ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் வாங்கு வங்கியைச் சிதைத்துவிடாமல் காப்பாற்றி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, நல்லாட்சி அரசாங்கத்தினூடு தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையைப் பெருமளவு விதைத்து, வாக்கு அறுவடை செய்திருந்தது. குறிப்பாக, அப்போதைய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவற்றின் தடைகளைத் தாண்டி, பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அது கிட்டத்தட்ட ஏக அங்கிகாரம் என்கிற நிலையையும் எட்டியிருந்தது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு சில மாற்றங்களே. ஊழல் மோசடிக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மைத்திரியாலும் ரணிலாலும் தங்களுடைய அமைச்சரவையை முறையாகப் பேண முடியவில்லை. நாட்டின் பொருளாதாரம், நினைத்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. “ராஜபக்‌ஷக்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளைச் சரி செய்வதற்கே, காலம் போதுமானதாக இல்லை” என்று, ரணில் குறைபட்டுக் கொண்டார். அத்தோடு, ரணிலின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்தன. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் அதிகரித்திருந்த குடும்ப ஆதிக்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும், அதன் குறைந்த வடிவமொன்று, நல்லாட்சி அரசாங்க காலத்திலும் நீடித்தது. மைத்திரியின் குடும்ப ஆதிக்கம், அரச நிறுவனங்களில் தலை காட்டியது. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான மோதல் நிலை என்பது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கச் செய்தது. திட்டங்கள் வரையப்படுவதோடு நின்று போயின. அவற்றைச் செயற்படுத்துவது சார்ந்த விடயங்களில், நேரம் வீணடிக்கப்பட்டது. சின்னச் சின்ன எதிர்ப்புகளையெல்லாம் பாரிய எதிர்ப்புகளாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், தைரியமான ஓர் ஆட்சி நிலையொன்றைப் பேணுவதில் தவறினார்கள். இவ்வாறான, சூழலால் ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளாலும் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்டமான்களிடம் இருந்த மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, இன்னொரு தரப்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பழனி திகாம்பரமும், வேலுச்சாமி இராதாகிருஷ்ணனும் பெருவாரியாக மேல்நோக்கி வந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்த தலைவராக, மனோ அங்கிகாரம் பெற்றார். அது அவருக்கு, ஆட்சிக்குள் ஹக்கீமும், ரிஷாட்டும் பெற்ற முக்கியத்துவத்துக்கு ஈடான அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு, மலையகக் கிராமங்களின் அபிவிருத்தியிலோ, அவர்களின் சம்பளப் பிரச்சினையிலோ பாரிய வெற்றியைப் பெற முடியவில்லை. அதற்கு, அரசாங்கமும் அவ்வளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தநிலை, மலையக அமைச்சர்கள் மீது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. தெற்காசியத் தேர்தல்களில் வாக்களிப்பு என்பது, இருப்பதில் எது சிறந்தது என்கிற நிலையிலேயே இடம்பெற்று வருகின்றது. அதன் போக்கில்தான், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மைத்திரி வந்ததும், தொண்டமான்களுக்கு எதிராக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் நிலைபெற்றமையுமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படும் போது, அவை அதிருப்திகளாக மாறும். அதிருப்தியாளர்களை மீட்பது, பெரும் சிக்கலாகும். மனோவின் பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில், மனோ பொறுப்பேற்ற தேசிய கலந்துரையாடல் அமைச்சை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நேரடியான உதவிகளைச் செய்ய முடியாது. அது, நிர்வாக ரீதியாகப் பழுதுபட்ட இடங்களை, (குறிப்பாக மொழிக்கொள்கை, நல்லிணக்க முனைப்புகள்) சரி செய்யும் அமைச்சாகும். “தொடர்ச்சியாக மனோவுக்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால், அவர் அமைச்சராக பதவி வகிக்கும் தருணத்திலும் கூட, எங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற வருத்தம், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு. இன்னொரு பக்கம், அவர் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்போடு, குறிப்பாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் அண்மைய காலங்களில் முரண்பட்டுக் கொண்டமை, தமிழ் மக்கள் மத்தியில் கலவையான உணர்வைத் தோற்றுவித்தது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது குறைவு. அவ்வாறான நிலையில், மனோவின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம், வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கும் அளவுக்கே சென்றது. கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த மூன்றரை ஆண்டுகள் பெரும் அதிருப்தியைச் சந்தித்த ஆண்டுகளாகவே அமைந்தன. அரசியல் தீர்வு விடயத்தை முன்னிறுத்திவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களில் அக்கறையின்றி இருந்தமை, கிராம மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தீர்வு குறித்த உரையாடல்களில் காணப்பட்ட தளம்பலும், கால நீடிப்பும் எதிர்த்தரப்புகளை நோக்கிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவையே சந்தித்து நின்றன. இவ்வாறான நிலையில், மஹிந்தவைப் பிரதமராக்கிவிட்டு, மைத்திரி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தின் மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள், மீண்டும் அதிருப்தியின் அளவைக் குறைத்துக் கொண்டு, தங்களின் கூடுகளுக்குத் திரும்புவது சார்ந்து, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். மைத்திரியின் கோமாளித்தனமாக ஆட்டத்தை, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எதிர்கொண்ட விதம், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கின்றது. இது, அவர்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைக் காணாமலாக்கவும் செய்திருக்கின்றது. இன்றைய திகதியில், தேர்தலொன்று வருமாக இருந்தால், கூட்டமைப்பு சந்திக்கவிருந்த பாரிய நெருக்கடியிலிருந்து தப்பித்து, தன்னுடைய நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது. மலையக மக்களின் வாக்குகளைத் திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் பெரும்பான்மையாகப் பெறுவார்கள். கொழும்பில் தோல்வியின் விளிம்பிலிருந்த மனோ, தப்பித்துக் கொள்வார். ஹக்கீமும் ரிஷாட்டும், பழைய நிலையில் தொடர்வார்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியால்-காப்பாற்றப்பட்ட-தரப்புகள்/91-225547

மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்

2 hours 56 minutes ago
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள்
புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.   

அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.  

 ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.   

அப்படியான நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதியை எங்கிருந்து, எவ்வாறு பெற்றுக் கொள்வது என்கிற கேள்வி, அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.   

பாதீட்டுத் திட்டத்தில் அங்கிகரிக்கப்படாமல், நிதி ஒதுக்கீடுகளைத் திறைசேரி எப்படி அனுமதிக்கும்? அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது என்று, அதைச் சாதாரணமாக இவ்வாறு கேட்கலாம். மைத்திரி நாட்டை, எந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறார் என்பதற்கு இதுவே போதுமானது.   ஆனாலும், மைத்திரியின் தற்போதைய நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்ட தரப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவை குறித்துத்தான் இந்தப் பத்தி பேச விளைகிறது.   

ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, நல்லாட்சிக் கூட்டணி உருவான போது, நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பை வெளியிட்டார்கள். ஊழல் மோசடிகளுக்கு எதிரான நிலையொன்றின் வழி, துரித அபிவிருத்தி பற்றிய நம்பிக்கை அது. ஆனால், அது 100 நாள் வேலைத்திட்டத்தின் போதே, தடுமாற்றத்தைக் காண்பித்தது.   

ஆனாலும், பொதுத் தேர்தலின் பின்னராக தேசிய அரசாங்கத்தை அமைத்து, விடயங்களை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியும் என்று, நல்லாட்சிக் கூட்டணிக்குள் இருந்த தரப்புகள் பலவும் நம்பின.  

 குறிப்பாக, நல்லாட்சிக் கூட்டணிக்குள் பங்காளிகளாக இருந்த தமிழ்- முஸ்லிம் கட்சிகள். ஏனெனில், அந்த நம்பிக்கைகளை மக்களிடம் வழங்கியே, என்றைக்கும் பெற்றிராத அளவு வாக்குகளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்றன.  

 ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் வாங்கு வங்கியைச் சிதைத்துவிடாமல் காப்பாற்றி, ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.   

இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, நல்லாட்சி அரசாங்கத்தினூடு தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையைப் பெருமளவு விதைத்து, வாக்கு அறுவடை செய்திருந்தது.

குறிப்பாக, அப்போதைய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்டவற்றின் தடைகளைத் தாண்டி, பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அது கிட்டத்தட்ட ஏக அங்கிகாரம் என்கிற நிலையையும் எட்டியிருந்தது.   

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பது ஒரு சில மாற்றங்களே. ஊழல் மோசடிக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மைத்திரியாலும் ரணிலாலும் தங்களுடைய அமைச்சரவையை முறையாகப் பேண முடியவில்லை.

நாட்டின் பொருளாதாரம், நினைத்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. “ராஜபக்‌ஷக்கள் ஏற்படுத்திவிட்டுப்போன பாதிப்புகளைச் சரி செய்வதற்கே, காலம் போதுமானதாக இல்லை” என்று, ரணில் குறைபட்டுக் கொண்டார்.   

அத்தோடு, ரணிலின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளால், அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்தன. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் அதிகரித்திருந்த குடும்ப ஆதிக்கத்தின் அளவுக்கு இல்லையென்றாலும், அதன் குறைந்த வடிவமொன்று, நல்லாட்சி அரசாங்க காலத்திலும் நீடித்தது.

மைத்திரியின் குடும்ப ஆதிக்கம், அரச நிறுவனங்களில் தலை காட்டியது.   
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு இடையிலான மோதல் நிலை என்பது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கச் செய்தது. திட்டங்கள் வரையப்படுவதோடு நின்று போயின.  

அவற்றைச் செயற்படுத்துவது சார்ந்த விடயங்களில், நேரம் வீணடிக்கப்பட்டது. சின்னச் சின்ன எதிர்ப்புகளையெல்லாம் பாரிய எதிர்ப்புகளாக எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், தைரியமான ஓர் ஆட்சி நிலையொன்றைப் பேணுவதில் தவறினார்கள். இவ்வாறான, சூழலால் ஆட்சியில் அங்கம் வகித்த தமிழ், முஸ்லிம் கட்சிகளாலும் மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.   

கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொண்டமான்களிடம் இருந்த மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குகளை, இன்னொரு தரப்புப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. பழனி திகாம்பரமும், வேலுச்சாமி இராதாகிருஷ்ணனும் பெருவாரியாக மேல்நோக்கி வந்தார்கள்.   

அவர்களை ஒருங்கிணைத்த தலைவராக, மனோ அங்கிகாரம் பெற்றார். அது அவருக்கு, ஆட்சிக்குள் ஹக்கீமும், ரிஷாட்டும் பெற்ற முக்கியத்துவத்துக்கு ஈடான அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. எனினும், எதிர்பார்த்த அளவுக்கு, மலையகக் கிராமங்களின் அபிவிருத்தியிலோ, அவர்களின் சம்பளப் பிரச்சினையிலோ பாரிய வெற்றியைப் பெற முடியவில்லை.   

அதற்கு, அரசாங்கமும் அவ்வளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தநிலை, மலையக அமைச்சர்கள் மீது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. தெற்காசியத் தேர்தல்களில் வாக்களிப்பு என்பது, இருப்பதில் எது சிறந்தது என்கிற நிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

அதன் போக்கில்தான், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக மைத்திரி வந்ததும், தொண்டமான்களுக்கு எதிராக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் நிலைபெற்றமையுமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்படும் போது, அவை அதிருப்திகளாக மாறும். அதிருப்தியாளர்களை மீட்பது, பெரும் சிக்கலாகும். 

மனோவின் பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலானது. ஏனெனில், மனோ பொறுப்பேற்ற தேசிய கலந்துரையாடல் அமைச்சை வைத்துக் கொண்டு, மக்களுக்கு நேரடியான உதவிகளைச் செய்ய முடியாது. அது, நிர்வாக ரீதியாகப் பழுதுபட்ட இடங்களை, (குறிப்பாக மொழிக்கொள்கை,  நல்லிணக்க முனைப்புகள்) சரி செய்யும் அமைச்சாகும். 

“தொடர்ச்சியாக மனோவுக்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால், அவர் அமைச்சராக பதவி வகிக்கும் தருணத்திலும் கூட, எங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற வருத்தம், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு உண்டு.

இன்னொரு பக்கம், அவர் அரசியல் ரீதியாகக் கூட்டமைப்போடு, குறிப்பாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் அண்மைய காலங்களில் முரண்பட்டுக் கொண்டமை, தமிழ் மக்கள் மத்தியில் கலவையான உணர்வைத் தோற்றுவித்தது.   

ஏற்கெனவே கொழும்பிலுள்ள வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் என்பது குறைவு. அவ்வாறான நிலையில், மனோவின் நடவடிக்கைகள் மீதான விமர்சனம், வாக்களிப்பு வீதத்தைக் குறைக்கும் அளவுக்கே சென்றது.  

கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த மூன்றரை ஆண்டுகள் பெரும் அதிருப்தியைச் சந்தித்த ஆண்டுகளாகவே அமைந்தன. அரசியல் தீர்வு விடயத்தை முன்னிறுத்திவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த விடயங்களில் அக்கறையின்றி இருந்தமை, கிராம மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

தீர்வு குறித்த உரையாடல்களில் காணப்பட்ட தளம்பலும், கால நீடிப்பும் எதிர்த்தரப்புகளை நோக்கிய அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்தது. 

 நல்லாட்சி அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பின்னடைவையே சந்தித்து நின்றன. இவ்வாறான நிலையில், மஹிந்தவைப் பிரதமராக்கிவிட்டு, மைத்திரி, ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தின் மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள், மீண்டும் அதிருப்தியின் அளவைக் குறைத்துக் கொண்டு, தங்களின் கூடுகளுக்குத் திரும்புவது சார்ந்து, சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   

மைத்திரியின் கோமாளித்தனமாக ஆட்டத்தை, தமிழ்- முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எதிர்கொண்ட விதம், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கின்றது. இது, அவர்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களைக் காணாமலாக்கவும் செய்திருக்கின்றது. 

இன்றைய திகதியில், தேர்தலொன்று வருமாக இருந்தால், கூட்டமைப்பு சந்திக்கவிருந்த பாரிய நெருக்கடியிலிருந்து தப்பித்து, தன்னுடைய நிலையை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி இருக்கின்றது.

மலையக மக்களின் வாக்குகளைத் திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் பெரும்பான்மையாகப் பெறுவார்கள். கொழும்பில் தோல்வியின் விளிம்பிலிருந்த மனோ, தப்பித்துக் கொள்வார். ஹக்கீமும் ரிஷாட்டும், பழைய நிலையில் தொடர்வார்கள்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியால்-காப்பாற்றப்பட்ட-தரப்புகள்/91-225547

 

அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’

2 hours 59 minutes ago
அழிவை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் தலைவர்களின் ‘ஈகோ’ எம்.எஸ்.எம். ஐயூப் இந்தப் பத்தியாளரின் மகள் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவிகள், நாடாளுமன்றத்தைப் பார்வையிட, அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். நாடாளுமன்றத்தின் பார்வையாளர் கலரியில் அமர்ந்து, சபை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்த சில மாணவிகள், பயணக் களைப்பின் காரணமாகவும் பகல் உணவின் பின்னர் குளிரூட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து இருந்ததன் காரணத்தாலும், பார்வையாளர் கலரியிலுள்ள ஆசனங்களிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர். இதைக் கண்டு, அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரிகள், மாணவிகளின் நடத்தையால், சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாகக் கூறி, அந்த மாணவிகள் அனைவரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு பணித்தனர். கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர் கலரியில் அன்றி, சபை மத்தியிலேயே, வெளிநாட்டுத் தூதுவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, கைகலப்பில் ஈடுபட்டதையும் சபாநாயகரின் தொலைபேசியையும் ஒலிவாங்கியையும் பிடுங்கி எடுத்து, சபாநாயகரின் கதிரையில் தண்ணீரை ஊற்றிதையும், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் சபையின் கதிரைகளை உடைத்து, பொலிஸார் மீது மிளகாய்த் தூள் கலந்த நீரைத் தெளித்து, புத்தகங்களையும் கதிரைகளையும் அவர்கள் மீது எறிந்து செய்த அட்டகாசத்தைத் தொலைக்- -காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பத்தியாளரின் மகள், “எமது பாடசாலை மாணவிகள் தூங்கி விழுந்தமை, இந்த அட்டகாசத்தை விடவும் நாடாளுமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதா?” எனக் கேட்டாள். அது நியாயமான கேள்வியாக மட்டுமன்றி, தர்க்க ரீதியான கேள்வியாகவும் இருந்தது. பொதுவாக, நாட்டு மக்களுக்கும் இவ்வாறு சிறுவர்களைப் போல், கட்சி பேதமின்றித் தர்க்க ரீதியாக மட்டுமே சிந்திக்க முடியுமாக இருந்தால், அதன் படி தேர்தல்களின் போது, பண்பானவர்களை மட்டுமே தான் தெரிவு செய்வோம் என்று உறுதி கொள்ள முடியுமாக இருந்தால், இந்நாட்டு அரசியல்வாதிகள், மக்களை மதிப்பார்கள். இப்போது போல் மக்களின் அறிவைப் பரிகசிக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் அவ்வாறு தர்க்க ரீதியாகச் சிந்திப்பதில்லை. தாம் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதி, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விதத்தைக் கண்டு, ‘இனி இவருக்கோ, இவரைப் போன்றவர்களுக்கோ வாக்களிக்க மாட்டேன்’ என்று நினைத்த ஒரு வாக்காளர் இந்த நாட்டில் இருப்பாரா என்பது சந்தேகமே. அதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை, மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும் அவர்கள் பொதுச் சொத்துகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கையில் சேதப்படுத்தியதையும் கண்டு, இவர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று நினைத்து, மனதை மாற்றிக் கொண்ட மஹிந்த அணி ஆதரவாளர் ஒருவரேனும் நாட்டில் இருப்பாரா? இறைவன், மனிதனைப் படைத்தாலும், சுதந்திரமாகச் சிந்தித்து செயற்பட இடமளித்துள்ளான். அவனுக்கு, அந்தச் சுதந்திரத்தை வழங்காது, இறைவனே மனிதனின் செயற்பாடுகள் அனைத்தையும் தாமாக வழி நடத்துவதாக இருந்தால், மனிதன் செய்யும் பாவங்களுக்காக, அவனைத் தண்டிக்க இறைவன் நரகத்தைப் படைக்கத் தேவையில்லை. அந்தச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் தான், “நீங்கள், உங்களை மாற்றிக் கொள்ளும் வரை நான், உங்கள் தலைவிதியை மாற்றுவதில்லை” என இறைவன் கூறுகிறான். இலங்கை அரசியலைப் பொறுத்தவரையிலும், இந்நாட்டு மக்கள், தம்மை மாற்றிக் கொள்ளாத வரை, தற்போதுள்ள மக்களின் அரசியல் தலைவிதியும் மாறப் போவதில்லை. இந்நாட்டு மக்கள் மத்தியில், தற்போதுள்ள அடிமை மனப்பான்மை மாறுவதாகத் தெரியவில்லை. அதனால் தான் அரசியல்வாதிகள், கண்கூடாகத் தெரியும் யதார்த்தத்தைக் காணாதவர்களைப் போல் விதண்டாவாதம் பேசிக் கொண்டு, அந்த யதார்த்தத்தை மறுக்கிறார்கள். அதன் மூலம், நாடு பெரும் அழிவை நோக்கிச் செல்வதையும் அவர்கள் காணாதவர்களைப் போல் இருக்கிறார்கள். ஜனாதிபதி, புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பதாக இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவரெனத் தாம் கருதுபவராக இருக்க வேண்டும் என்பது, அரசமைப்பின் விதியாகும். ஆயினும் குறிப்பிட்ட ஒருவர், பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என, ஜனாதிபதி எந்தவித அடிப்படையும் இல்லாமல் கருத முடியாது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கருதுவதற்கு எந்தவித ஆதாரமும் இருக்கவில்லை. அவ்வாறு கருதியிருந்தால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கத் தேவையில்லை. மஹிந்தவுக்குப் போதிய எண்ணிக்கையில் எம்.பிக்களை விலைக்கு வாங்க முடியாததைக் கண்டு, அதன் பின்னர் கடந்த ஒன்பதாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் தேவையில்லை. மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அதன் பின்னர், மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் குழப்பங்களை உருவாக்கி, எந்தவொரு வாக்கெடுப்பையும் நடத்த விடாமல் தடுத்திருக்கவும் தேவையில்லை. அதேவேளை, சட்ட விரோதமாகப் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிராக, இரண்டு முறை 122 எம்.பிக்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, மக்கள் விடுதலை முன்னணி மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது. அந்தப் பிரேரணைகள், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் முறையாக வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்றும், மஹிந்த அணியினர் வாதிடுகின்றனர். நிலையியல் கட்டளைகள் ஒத்திவைக்கப்பட்டே அந்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. நிலையியல் கட்ளைகளின் படி, நிலையியல் கட்டளைகளை ஒத்திவைக்கவும் முடியும். அவ்வானதொரு மரபு நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. அவ்வாறு நிலையியல் கட்டளைகள், சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், நிலையியல் கட்டளைகளின் படி செயற்பட வேண்டிய அவசியம் இல்லை. குரல் வாக்கெடுப்பின் மூலமே, அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் கரு ஜயசூரிய முயன்றார். மஹிந்த அணியினர் குழப்பம் விளைவித்து, அதைத் தடுத்த காரணத்தாலேயே, சபாநாயகர் குரல் வாக்கெடுப்பை நடத்தினார். பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்துவதைத் தாமே தடுத்துவிட்டு, இப்போது, பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்கிறார்கள் மஹிந்த அணியினர். உண்மையிலேயே, அந்தப் பிரேரணைகள் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்று இப்போது வாதிட்டுக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் பிரேணைகளில் 122 கையொப்பங்கள் இருப்பதால், மஹிந்தவுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னரும், அரசியல்வாதிகள் வாதிட்டுக் கொண்டு இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில், அரசியல் அதிகாரம் என்பது, அவர்களுக்கு கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொள்ளும் ஒரு பொறிமுறை. ஆனால், பொது மக்களுக்கு என்ன கிடைக்கிறது? பெரும்பான்மைப் பலம் பற்றிய பிரச்சினை இவ்வளவு தெளிவாக இருக்கும் போது, பொது மக்கள் ஏன் அதைப் பற்றிக் கண்மூடித்தனமாக வாதிட்டுக் கொண்டு, இந்தப் பிரச்சினையால் நாடு அழிவை நோக்கிச் செல்வதற்குத் துணைபோக வேண்டும்? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பெற்றதை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது, அன்று நள்ளிரவு அளவில் தெளிவாகியது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தடைசெய்து, தொடர்ந்து ஆட்சியில் இருக்க மஹிந்த முயன்றாரெனவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, உடனே சட்டமா அதிபர், பிரதம நீதியரசர். பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஆகியோர், ஜனாதிபதி தங்கியிருந்த அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரும் இராணுவத் தளபதியும் அதை எதிர்த்ததால், அத்திட்டத்தைக் கைவிட்ட மஹிந்த, அலரி மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் அந்நாள்களிலேயே குற்றஞ்சாட்டப்பட்டது. சட்டப்படி தமக்குப் பதவியில் இருக்க அதிகாரம் இல்லாத நிலையில், தாம் அவ்வாறு பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க முயலவில்லை எனக் கூறி, அந்தச் சதிக் குற்றச்சாட்டை மஹிந்த மறுத்தார். ஆனால், இப்போது சட்டப்படி தமக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அவர் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது, அவ்வாறானதொரு சதித் திட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதியால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் தாமே இன்னமும் பிரதமர் எனக் கூறுகிறார். தம்மைப் பதவியில் இருந்து நீக்க, ஜனாதிபதிக்கு அரசமைப்பின் மூலம் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் வாதிடுகிறார். ஆனால், தம்மைப் பதவியில் இருந்து நீக்கியமையை எதிர்த்து, அவர் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. அதேவேளை அவர், அதற்குப் பின்னர் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமரின் ஆசனத்தில் அமர முற்படவும் இல்லை. மஹிந்தவே அந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். ‘பிரதமர்’ மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே, ஐ.தே.க வாக்களித்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் பரீட்சிக்கப்பட முன்னரே, மஹிந்தவைப் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் ரணிலைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் இருந்த நிலையையே, தாம் ஏற்றுக் கொள்வதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார். அந்த நிலைப்பாடு சரி என, ஏற்றுக் கொள்ள முடியாது. மஹிந்தவுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என, அவர் அப்போது எவ்வாறு முடிவு செய்தார்? ஆனால், முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்னர், தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, அவர் கூறினார். அதுவே சரியான வாதமாகும். ஏனெனில் ஜனாதிபதிக்கு, பிரதமர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் சிங்களப் பிரதியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று மைத்திரி தரப்பினர் வாதிடுகின்றனர். அரசமைப்பின் தமிழ், சிங்கள, ஆங்கில் பிரதிகளிடையே வேறுபாடுகள் இருப்பின், சிங்களப் பிரதியே செல்லுபடியாகும். எனவே ரணில் நீக்கப்பட்டமை சட்டபூர்வமாகிறது என்பது அவர்களின் வாதம். அதேவேளை, அதன் பின்னர் மஹிந்தவின் நியமனம் சட்டபூர்வமானதல்ல என்பதை, நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் உள்ள கையொப்பங்கள் காட்டுகின்றன. ஏனெனில், பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் என, அரசமைப்புக் கூறுகிறது. எனவே, தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என சபாநாயகர் கூறுவது சரியே. இப்போது, தாமே பிரதமர் என, மஹிந்த கூறுகிறார்; ரணிலும் கூறுகிறார். ரணிலைப் பதவி நீக்கம் செய்ததும், மஹிந்தவைப் பிரதமராக நியமித்ததும் சரியே என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். தாம் எவரையும் பிரதமராக ஏற்றுக் கொள்வதில்லை என, சபாநாயகர் கூறுகிறார். இந்த நால்வரும் தாம் நிற்கும் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரத் தயாராக இல்லை. இறங்கி வராமல் பிரச்சினை தீரப் போவதுமில்லை. இது அவர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த ‘ஈகோ’ (தன்முனைப்பு) பிரச்சினைக்குப் புறம்பாக, மஹிந்தவும் ரணிலும் பிரதமர் பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க, ஏன் முயல்கிறார்கள் என்பதற்கு, மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது, அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது தலைமையிலான காபந்து அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்போது, அந்தத் தேர்தலில் அவர்கள் அரச வளங்களைத் தேர்தலுக்காகப் பாவிக்க முயலலாம். பொலிஸாரை வழிநடத்த முடிகிறது. இதன் அனுகூலம், தேர்தல் முடிவு மீதும் தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமையே தற்போதைய பிரச்சினை தோன்ற அடிப்படைக் காரணமாகும். எனவே, புதிதாகத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்வதே, தற்போதைய பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வாகும். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, கடந்த ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி மேற்கொண்ட கலைப்பு, சட்ட விரோதமானது என்று, உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசெம்பர் ஏழாம் திகதி தீர்ப்பளித்தால், ஒன்றில் தற்போதைய இழுபறி தொடரும்; அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அழிவை-நோக்கி-நாட்டை-இழுத்துச்-செல்லும்-தலைவர்களின்-ஈகோ/91-225544

மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

3 hours 7 minutes ago
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை? Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0 - ஜெரா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது? யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் கொண்டிருப்பதால்தான் என்னவோ, இந்த மாதிரியான கிராமங்களுக்கு, அதிகளவில் ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. நெடுங்கேணிச் சந்தியில் இருந்து ஓட்டோவில் புறப்பட்டால், 1000 ரூபாய்க்குக் குறையாத தொகையும், காலை - மாலை என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பஸ்ஸில் பயணித்தால் 90 ரூபாய்க்குக் குறையாத தொகையும் அறவிடப்படுகின்றது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் புனரமைக்கப்படாத பாழ் வீதியில் வாகனம் செலுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்லவே. எனவே இந்தப் பெருந்தொகை அறவீட்டிலிருக்கும் நியாயத்தையும் ஏற்கவேண்டும். விடுதலைப் புலிகள் காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகளைத் தான், மக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது மாகாண சபையும் தொண்டு நிறுவனங்களும் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்தபோதும், திருத்த வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றன. காரணம் கேட்டால், இந்த வீதியைத் திருத்துமளவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என, நிர்மாணதாரர்கள் இடைநடுவே விட்டு விலகிவிட்டனர் என்கின்றனர், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள். மருதோடை! இங்கு எப்போதிலிருந்து தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் எவையும் தேடிப்பெறுவதற்கில்லை. ஆலய வரலாறாகப் பாதுகாக்கப்பட்டவையும், போர்களில் அழிந்துவிட்டன. ஆனால், வவுனியா மாவட்டத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இந்தக் கிராமத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும், வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் பிரபலமான பரிகாரி மரபொன்று இங்கிருந்ததென்பதும், விசாரித்து அறியக்கூடிய வரலாறாக இருக்கின்றது. 1980ஆம் ஆண்டுகளில் இந்தக் கிராமத்துக்கு அருகில் உருவாக்கப்பட்ட டொலர் பாம், ஹென்பாம், சிலோன் தியேட்டர், தனிக்கல்லு முதலான பெரும் பண்ணைகள், பொருளாதார வலுவையும் விவசாயச் செழிப்பையும் மேலோங்கச் செய்திருக்கின்றன. பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட வயல் விதைப்பும் கால்நடை வளர்ப்பும், இந்தக் கிராமத்தை வளப்படுத்தியிருக்கின்றன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் (1983) ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதவியா என்ற பெரும்பான்மையினத்தவருக்கான குடியேற்றத்தின் விளைவாக, வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றின் எல்லைக் கிராமங்கள் வரைக்கும் வன்முறைகள் இடம்பெற்றன; படுகொலை இடம்பெற்றன. ஒதியமலை படுகொலைகளை, அவ்வளவு இலகுவில் தமிழர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த மாதிரியான கொலைகளுக்குப் பின்னர், இராணுவத்தினருக்கும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர் நிலைமைகள் காரணமாக, இப்பகுதிகளை விட்டு நிரந்தரமாகவே மக்கள் வெளியேறினர். இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டில் போர் முடிவுக்கு வரும் வரைக்கும், இந்தப் பகுதிகள் சூனியப் பிரதேசமாகவே இருந்தன. இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டிலேயே மக்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பினர். மருதோடைக்கும் இதேநிலைதான். இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டில், இக்கிராமத்தின் பூர்வீகக் குடிகள் மீளக்குடியேறியிருந்தாலும், இடம்பெயர்வதற்கு முன்பிருந்த அத்தனை குடிகளும் மீளத்திரும்பவில்லை. போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், இந்தியாவுக்குச் சென்றவர்கள், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள் போக, எஞ்சிய மிகச் சொற்பமான குடும்பங்களே ஊர் திரும்பின. அவ்வாறு ஊர் திரும்பியவர்கள், மருதோடை கிராமத்தின் முன்பகுதிக்குரியவர்களாக இருந்தனர். தங்கள் காணிகளைத் திருத்தி, வீட்டுத்திட்டங்களைப் பெற்று, விவசாயத்தில் செழிப்பும் பெற்றுவிட்டனர். இப்போது பிரச்சினை யாருக்கெனில், இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளுக்குத்தான். இவர்கள், மருதோடையின் நாவலடி பகுதியைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பியிருக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து இந்தியாவிலிருந்தும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மருதோடை நாவலடிக்கு மக்கள் மீளத் திரும்பத் தொடங்கினர். இதுவரைக்கும் 37 வரையான குடும்பங்கள், தங்கள் ஊருக்கு வந்திருக்கின்றன. இவ்வாறு வந்திருப்பவர்களில் அநேகம் பேரிடம், தங்கள் காணிகள் தொடர்பான ஆவணங்கள் எவையும் இல்லை. போரிலும், இடப்பெயர்விலும் அனைத்தும் தவறவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் இடம்பெயர்ந்து போகும்போது குழந்தையாகச் சென்றவர்கள், இப்போது குடும்பமாகி, அவர்களுக்கு நான்கு குழந்தைகளுடன் வந்துநிற்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான், திருமதி வேலாயுதம். இந்தியாவிலிருந்து, மருதோடை திரும்பியிருக்கிறார். “நாங்க, 83ஆம் வருசத்தில திடீர்னு புறப்பட்டோம். எல்லாப் பக்கமும் வெடிச் சத்தம். அம்மா, அப்பாவோட சகோதரங்கள் எல்லாரும் ஓடினோம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக் பாம், அப்பிடியே மன்னார் வழியா இராமேஸ்வரம் போயிட்டம். அங்க இருந்து 35 வருசத்துக்கு அப்புறமா ஊர் திரும்பியிருக்கோம். அம்மா, அப்பா, ஒரு சகோதரினு எல்லாரும் அங்கயே மோசம் போய்ட்டாங்க. இன்னும் ரெண்டு சகோதரிகள், அங்க முகாம்லயே இருக்காங்க. நான் மட்டும் என் குடும்பத்தோட வந்திருக்கேன்...” என்றார், திருமதி வேலாயுதம். இங்கு உங்கள் ஊர் நிலைமைகள் எப்படியுள்ளன என்ற கேள்விக்காக குறுக்கிட்டோம். அதற்கு அவர், “எதிர்பார்த்து வந்தமாதிரி ஏதுமில்ல. காணியைக் கண்டுபிடிக்கிறதே சிரமமாயிருக்கு. நட்டிருந்த மரம், கிணறு, மலசலகூடம் இதுகள வச்சி அடையாளம் கண்டோம். ஆனால் அதுக்குக் கூட, இப்ப தடைபோட்டிருக்காங்க” என்றார். சடசடவென அடித்து வந்த மழை, பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. பிரதேச செயலகம் அமைத்துக் கொடுத்திருக்கும் மிகச் சிறியளவிலான கொட்டகைக்குள், நாலா பக்கமும் சாரல் அடிக்கிறது. நிலத்தில் பெருங்குற்றிகளைப் போட்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். சமையலிலிருந்து, மழை நீரின் குளிரைப் போக்குவது வரைக்குமான அனைத்துக் காரியங்களுக்கும், அந்த அடுப்புப் பயன்படுத்தப்படுகின்றது. மழைக்கு அந்தத் தற்காலிக கொட்டகைக்குள் ஒதுங்கியிருக்கும்போது ரவீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதைக்கத் தொடங்கினார். அவருக்கு வயது 70ஐத் தாண்டுகிறது. அந்தக் கிராமத்தின் மூத்த குடிமகன். “நான் தான் சின்ன வயசிலயே, இந்தக் காட்டை வெட்டிக் காணியாக்கினன். உறுதி கூட தந்திருந்தாங்க. எல்லாமே கைவிட்டுப்போச்சி. இப்ப வந்து காணியத் துப்பரவாக்கினா, வன வள பாதுகாப்புத் திணைக்களம் விடுறாங்க இல்ல. இதெல்லாம் பாதுகாக்கப்பட்ட காடாம். 30 வருசத்துக்கு முதல், நாங்க பூர்வீகமா இருந்து விவசாயம் செய்த காணிகள் இது. பாருங்க, கிணறுகள் கூட இடிஞ்சி போய் அப்படியே இருக்கு. மலசலகூடங்கள் இருக்கு. இதெல்லாம் காட்டுக்குள்ள எப்படி வரும்? நாங்க நட்ட மரங்கள் கூட, காடாகி அப்பிடியே நிற்குது. நாங்கள் இந்தியாவில் இருக்கும்போது வரச்சொன்னாங்க. இங்க வந்ததும், சொந்தக் காணிக்க கூட விடுறாங்க இல்ல. இரவில் பிள்ளைகளோட, நிம்மதியா நித்திரை கொள்ளக்கூட முடியுதில்ல. காடுதானே; ஒரே பாம்பு. இன்றைக்குக் கூட ரெண்டு பாம்பு அடிச்சிட்டம்” என அவர் சொல்லும் சமநேரத்தில் திருமதி வேலாயுதம், “இந்த இலட்சணத்தில, எப்பிடி எங்க சகோதரங்கள இங்க வரச்சொல்லி கூப்பிடுறது?” என்று கேள்வியெழுப்புகிறார். அவரின் நியாயமான கேள்விக்குத் தற்போதைக்கு பதிலில்லைத்தான். அரசாங்கத்திடம் கூட நியாயமான பதிலில்லை. இந்த விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துவெளியிட்ட அப்போதைய கூட்டு எதிரணியின் ஊடகப் பேச்சாளர், “450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாசிகள், வவுனியா வடக்கில் மருதோடை எனும் கிராமத்தில் குடியேறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமான செயல்” எனக் குறிப்பிட்டார். போர் நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீளவும் அதே இடத்துக்கு மீளத் திரும்புவது, எவ்வகையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் குடியேற்றமாக மாறும் என, அவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதே கருத்தோடிருந்த தரப்பினரின் கைக்கு, தற்போது அதிகாரமும் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி என்ன நடக்குமோ என்ற பயம், அங்கு மீள்குடியேறியிருப்பவர்களிடம் அதிகமாகவே அவதானிக்க முடிந்தது. அடர்ந்த காட்டுக்கு நடுவில் பாதுகாப்பற்ற கொட்டில்கள், சரியான சுகாதார, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட மீள்குடியேற்ற கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்படாத மீள்குடியேற்றம் என, இக்கிராம மக்களின் அவலம் இன்னமும் நீடிக்கிறது. ஆனால், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புதிதாகக் குடியேறியவர்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கின்றனர். உணவுப் பொருட்கள், குடிநீர் வசதி, தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்திருக்கின்றனர். மக்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், ஒருவரும் சில விடயங்களைக் குறிப்பிட்டார். “இந்தக் கிராமத்துக்கு மீள்குடியேற்றம் செய்திருக்கும் மக்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, சில தொண்டு நிறுவனங்கள் மிகச் சொற்பமான உதவிகளையே செய்திருக்கு. அவையும் தங்களால இயன்றதைத்தான் செய்யமுடியும்? பக்கத்து ஊர் மக்கள் உணவுப் பொருள், குடிநீர் உதவிகளச் செய்யினம். பலம்பொருந்திய அரச திணைக்களமான வன வளத் திணைக்களம், இந்த மக்கள குடியேறவோ, தங்கட காணிகளத் துப்பரவாக்கவோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கு. இப்பிடியொரு தடை இருக்கிறபடியால், மற்றைய அரச திணைக்களங்களாலயும் முழுதாக உதவிகள வழங்க முடியாமல் இருக்கு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில, எல்லாம் குடியேறின மக்களுக்கு உடனடியாகச் சகல வசதிகளும் செய்து குடுக்க வேணும் என்று முடிவெடுக்கப்பட்டதுதான். ஆனால், இங்க எதுக்கும் வன வளத் திணைக்களம் அனுமதிக்கேல்ல. ஆனா, இதே கிராமத்தின்ர மறுபக்கம் பாருங்கோ, 300க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள, உண்மையாகவே காடுகளா இருந்த பகுதிய அழிச்சுக் குடியேற்றி இருக்கினம். ஊஞ்சால்கட்டி, கொக்காச்சாங்குளம், முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டிருந்த கிராமம். இப்பவும் தமிழாக்கள் வயல் செய்யினம். அந்தக் கிராமங்கள அடாத்தப் பிடிச்சு, காடுகள அழிச்சு, சிங்கள மக்களக் குடியேற்றியிருக்கினம். இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கு. அதுவும் காடுகள அழிச்சு நடந்ததுதான். அதுக்கெல்லாம் எந்தத் தடையும் இல்ல. ஆனால் தமிழ்ச் சனம் சொந்த ஊருக்கு திரும்புறதுக்குத்தான் தடை” எனக் கொந்தளித்த பிரதேச சபை உறுப்பினரின் பேச்சில், உண்மையும் உண்டு. அவர் அந்தப் பகுதியையே சேர்ந்தவராக இருந்தபடியால், கிராமம் பறிபோகின்ற கவலையையும், நமக்கு வெளிப்படுத்தினார். இந்த விடயம் பற்றி வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டபோது, “இந்தக் காடுகள் பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டு, எட்டு வருடங்கள் ஆகின்றன. இரண்டாயிரத்துப் பத்தாம் (2010) ஆண்டு, வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எமது கடமை, அரச சட்டங்களைப் பாதுகாப்பது. எனவே அதை மீறி யாரும் செயற்பட அனுமதிக்கமாட்டோம். வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் எதிர்க்கின்றனர்”என்றார் பொறுப்பாக. இந்தியாவிலிருந்து தம் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளைக் கொண்டிருக்கும் மருதோடை - நாவலடியின் கதை இது. எல்லைக் கிராமத்தின் கதை இது. ஊர் திரும்பியும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற அகதி வாழ்க்கையைத் தொடரும் அந்த மக்களை, தற்போது பெய்துவரும் கனமழையும் வெகுவாக வாட்டுகின்றது. ஆனாலும் அந்த மக்கள், சொந்த நிலத்தை மீட்பதற்காக எல்லாத் துயரங்களையும் தடைகளையும் தாங்கி, அங்கேயே தங்கியிருக்கின்றனர். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மருதோடை-எப்படியிருக்கிறது-எல்லை/91-225505

மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

3 hours 7 minutes ago
மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?
Editorial / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:09 Comments - 0

image_f92b4d2850.jpg

- ஜெரா

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை - நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது?

யாரும் இலகுவில் சென்றடைந்துவிட முடியாதளவு பயணப் பாதையையும் தொலைவையும் கொண்டிருப்பதால்தான் என்னவோ, இந்த மாதிரியான கிராமங்களுக்கு, அதிகளவில் ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. நெடுங்கேணிச் சந்தியில் இருந்து ஓட்டோவில் புறப்பட்டால், 1000 ரூபாய்க்குக் குறையாத தொகையும், காலை - மாலை என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பஸ்ஸில் பயணித்தால் 90 ரூபாய்க்குக் குறையாத தொகையும் அறவிடப்படுகின்றது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் புனரமைக்கப்படாத பாழ் வீதியில் வாகனம் செலுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்லவே. எனவே இந்தப் பெருந்தொகை அறவீட்டிலிருக்கும் நியாயத்தையும் ஏற்கவேண்டும். விடுதலைப் புலிகள் காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகளைத் தான், மக்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். அவ்வப்போது மாகாண சபையும் தொண்டு நிறுவனங்களும் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்தபோதும், திருத்த வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றன. காரணம் கேட்டால், இந்த வீதியைத் திருத்துமளவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என, நிர்மாணதாரர்கள் இடைநடுவே விட்டு விலகிவிட்டனர் என்கின்றனர், அவ்வீதியால் பயணிக்கும் மக்கள்.

மருதோடை! இங்கு எப்போதிலிருந்து தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் எவையும் தேடிப்பெறுவதற்கில்லை. ஆலய வரலாறாகப் பாதுகாக்கப்பட்டவையும், போர்களில் அழிந்துவிட்டன. ஆனால், வவுனியா மாவட்டத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இந்தக் கிராமத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும், வன்னிப் பெருநிலப்பரப்பு முழுவதும் பிரபலமான பரிகாரி மரபொன்று இங்கிருந்ததென்பதும், விசாரித்து அறியக்கூடிய வரலாறாக இருக்கின்றது. 1980ஆம் ஆண்டுகளில் இந்தக் கிராமத்துக்கு அருகில் உருவாக்கப்பட்ட டொலர் பாம், ஹென்பாம், சிலோன் தியேட்டர், தனிக்கல்லு முதலான பெரும் பண்ணைகள், பொருளாதார வலுவையும் விவசாயச் செழிப்பையும் மேலோங்கச் செய்திருக்கின்றன. பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட வயல் விதைப்பும் கால்நடை வளர்ப்பும், இந்தக் கிராமத்தை வளப்படுத்தியிருக்கின்றன.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றாம் (1983) ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதவியா என்ற பெரும்பான்மையினத்தவருக்கான குடியேற்றத்தின் விளைவாக, வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்கள் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றின் எல்லைக் கிராமங்கள் வரைக்கும் வன்முறைகள் இடம்பெற்றன; படுகொலை இடம்பெற்றன. ஒதியமலை படுகொலைகளை, அவ்வளவு இலகுவில் தமிழர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த மாதிரியான கொலைகளுக்குப் பின்னர், இராணுவத்தினருக்கும் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர் நிலைமைகள் காரணமாக, இப்பகுதிகளை விட்டு நிரந்தரமாகவே மக்கள் வெளியேறினர். இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டில் போர் முடிவுக்கு வரும் வரைக்கும், இந்தப் பகுதிகள் சூனியப் பிரதேசமாகவே இருந்தன. இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டிலேயே மக்கள், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பினர். மருதோடைக்கும் இதேநிலைதான். இரண்டாயிரத்துப் பதினோராம் (2011) ஆண்டில், இக்கிராமத்தின் பூர்வீகக் குடிகள் மீளக்குடியேறியிருந்தாலும், இடம்பெயர்வதற்கு முன்பிருந்த அத்தனை குடிகளும் மீளத்திரும்பவில்லை. போரில் இறந்தவர்கள், காணாமற்போனவர்கள், இந்தியாவுக்குச் சென்றவர்கள், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள் போக, எஞ்சிய மிகச் சொற்பமான குடும்பங்களே ஊர் திரும்பின.

அவ்வாறு ஊர் திரும்பியவர்கள், மருதோடை கிராமத்தின் முன்பகுதிக்குரியவர்களாக இருந்தனர். தங்கள் காணிகளைத் திருத்தி, வீட்டுத்திட்டங்களைப் பெற்று, விவசாயத்தில் செழிப்பும் பெற்றுவிட்டனர். இப்போது பிரச்சினை யாருக்கெனில், இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளுக்குத்தான். இவர்கள், மருதோடையின் நாவலடி பகுதியைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊர் திரும்பியிருக்கின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து இந்தியாவிலிருந்தும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மருதோடை நாவலடிக்கு மக்கள் மீளத் திரும்பத் தொடங்கினர். இதுவரைக்கும் 37 வரையான குடும்பங்கள், தங்கள் ஊருக்கு வந்திருக்கின்றன.

image_7d3f4cfd16.jpg

இவ்வாறு வந்திருப்பவர்களில் அநேகம் பேரிடம், தங்கள் காணிகள் தொடர்பான ஆவணங்கள் எவையும் இல்லை. போரிலும், இடப்பெயர்விலும் அனைத்தும் தவறவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன் இடம்பெயர்ந்து போகும்போது குழந்தையாகச் சென்றவர்கள், இப்போது குடும்பமாகி, அவர்களுக்கு நான்கு குழந்தைகளுடன் வந்துநிற்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான், திருமதி வேலாயுதம். இந்தியாவிலிருந்து, மருதோடை திரும்பியிருக்கிறார்.

“நாங்க, 83ஆம் வருசத்தில திடீர்னு புறப்பட்டோம். எல்லாப் பக்கமும் வெடிச் சத்தம். அம்மா, அப்பாவோட சகோதரங்கள் எல்லாரும் ஓடினோம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக் பாம், அப்பிடியே மன்னார் வழியா இராமேஸ்வரம் போயிட்டம். அங்க இருந்து 35 வருசத்துக்கு அப்புறமா ஊர் திரும்பியிருக்கோம். அம்மா, அப்பா, ஒரு சகோதரினு எல்லாரும் அங்கயே மோசம் போய்ட்டாங்க. இன்னும் ரெண்டு சகோதரிகள், அங்க முகாம்லயே இருக்காங்க. நான் மட்டும் என் குடும்பத்தோட வந்திருக்கேன்...” என்றார், திருமதி வேலாயுதம்.

இங்கு உங்கள் ஊர் நிலைமைகள் எப்படியுள்ளன என்ற கேள்விக்காக குறுக்கிட்டோம். அதற்கு அவர், “எதிர்பார்த்து வந்தமாதிரி ஏதுமில்ல. காணியைக் கண்டுபிடிக்கிறதே சிரமமாயிருக்கு. நட்டிருந்த மரம், கிணறு, மலசலகூடம் இதுகள வச்சி அடையாளம் கண்டோம். ஆனால் அதுக்குக் கூட, இப்ப தடைபோட்டிருக்காங்க” என்றார்.

சடசடவென அடித்து வந்த மழை, பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. பிரதேச செயலகம் அமைத்துக் கொடுத்திருக்கும் மிகச் சிறியளவிலான கொட்டகைக்குள், நாலா பக்கமும் சாரல் அடிக்கிறது. நிலத்தில் பெருங்குற்றிகளைப் போட்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். சமையலிலிருந்து, மழை நீரின் குளிரைப் போக்குவது வரைக்குமான அனைத்துக் காரியங்களுக்கும், அந்த அடுப்புப் பயன்படுத்தப்படுகின்றது. மழைக்கு அந்தத் தற்காலிக கொட்டகைக்குள் ஒதுங்கியிருக்கும்போது ரவீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதைக்கத் தொடங்கினார். அவருக்கு வயது 70ஐத் தாண்டுகிறது. அந்தக் கிராமத்தின் மூத்த குடிமகன்.

“நான் தான் சின்ன வயசிலயே, இந்தக் காட்டை வெட்டிக் காணியாக்கினன். உறுதி கூட தந்திருந்தாங்க. எல்லாமே கைவிட்டுப்போச்சி. இப்ப வந்து காணியத் துப்பரவாக்கினா, வன வள பாதுகாப்புத் திணைக்களம் விடுறாங்க இல்ல. இதெல்லாம் பாதுகாக்கப்பட்ட காடாம். 30 வருசத்துக்கு முதல், நாங்க பூர்வீகமா இருந்து விவசாயம் செய்த காணிகள் இது. பாருங்க, கிணறுகள் கூட இடிஞ்சி போய் அப்படியே இருக்கு. மலசலகூடங்கள் இருக்கு. இதெல்லாம் காட்டுக்குள்ள எப்படி வரும்? நாங்க நட்ட மரங்கள் கூட, காடாகி அப்பிடியே நிற்குது. நாங்கள் இந்தியாவில் இருக்கும்போது வரச்சொன்னாங்க. இங்க வந்ததும், சொந்தக் காணிக்க கூட விடுறாங்க இல்ல. இரவில் பிள்ளைகளோட, நிம்மதியா நித்திரை கொள்ளக்கூட முடியுதில்ல. காடுதானே; ஒரே பாம்பு. இன்றைக்குக் கூட ரெண்டு பாம்பு அடிச்சிட்டம்” என அவர் சொல்லும் சமநேரத்தில் திருமதி வேலாயுதம்,  “இந்த இலட்சணத்தில, எப்பிடி எங்க சகோதரங்கள இங்க வரச்சொல்லி கூப்பிடுறது?” என்று கேள்வியெழுப்புகிறார்.

அவரின் நியாயமான கேள்விக்குத் தற்போதைக்கு பதிலில்லைத்தான். அரசாங்கத்திடம் கூட நியாயமான பதிலில்லை. இந்த விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துவெளியிட்ட அப்போதைய கூட்டு எதிரணியின் ஊடகப் பேச்சாளர், “450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாசிகள், வவுனியா வடக்கில் மருதோடை எனும் கிராமத்தில் குடியேறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமான செயல்” எனக் குறிப்பிட்டார். போர் நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீளவும் அதே இடத்துக்கு மீளத் திரும்புவது, எவ்வகையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் குடியேற்றமாக மாறும் என, அவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. அதே கருத்தோடிருந்த தரப்பினரின் கைக்கு, தற்போது அதிகாரமும் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி என்ன நடக்குமோ என்ற பயம், அங்கு மீள்குடியேறியிருப்பவர்களிடம் அதிகமாகவே அவதானிக்க முடிந்தது.

அடர்ந்த காட்டுக்கு நடுவில் பாதுகாப்பற்ற கொட்டில்கள், சரியான சுகாதார, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட மீள்குடியேற்ற கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்படாத மீள்குடியேற்றம் என, இக்கிராம மக்களின் அவலம் இன்னமும் நீடிக்கிறது.

image_d76c0f5827.jpg

ஆனால், அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், புதிதாகக் குடியேறியவர்களுக்குப் பெரும் உதவியாய் இருக்கின்றனர். உணவுப் பொருட்கள், குடிநீர் வசதி, தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்திருக்கின்றனர்.

மக்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், ஒருவரும் சில விடயங்களைக் குறிப்பிட்டார்.

“இந்தக் கிராமத்துக்கு மீள்குடியேற்றம் செய்திருக்கும் மக்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, சில தொண்டு நிறுவனங்கள் மிகச் சொற்பமான உதவிகளையே செய்திருக்கு. அவையும் தங்களால இயன்றதைத்தான் செய்யமுடியும்? பக்கத்து ஊர் மக்கள் உணவுப் பொருள், குடிநீர் உதவிகளச் செய்யினம். பலம்பொருந்திய அரச திணைக்களமான வன வளத் திணைக்களம், இந்த மக்கள குடியேறவோ, தங்கட காணிகளத் துப்பரவாக்கவோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கு. இப்பிடியொரு தடை இருக்கிறபடியால், மற்றைய அரச திணைக்களங்களாலயும் முழுதாக உதவிகள வழங்க முடியாமல் இருக்கு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில, எல்லாம் குடியேறின மக்களுக்கு உடனடியாகச் சகல வசதிகளும் செய்து குடுக்க வேணும் என்று முடிவெடுக்கப்பட்டதுதான். ஆனால், இங்க எதுக்கும் வன வளத் திணைக்களம் அனுமதிக்கேல்ல. ஆனா, இதே கிராமத்தின்ர மறுபக்கம் பாருங்கோ, 300க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள, உண்மையாகவே காடுகளா இருந்த பகுதிய அழிச்சுக் குடியேற்றி இருக்கினம். ஊஞ்சால்கட்டி, கொக்காச்சாங்குளம், முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டிருந்த கிராமம். இப்பவும் தமிழாக்கள் வயல் செய்யினம். அந்தக் கிராமங்கள அடாத்தப் பிடிச்சு, காடுகள அழிச்சு, சிங்கள மக்களக் குடியேற்றியிருக்கினம். இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கு. அதுவும் காடுகள அழிச்சு நடந்ததுதான். அதுக்கெல்லாம் எந்தத் தடையும் இல்ல. ஆனால் தமிழ்ச் சனம் சொந்த ஊருக்கு திரும்புறதுக்குத்தான் தடை” எனக் கொந்தளித்த பிரதேச சபை உறுப்பினரின் பேச்சில், உண்மையும் உண்டு. அவர் அந்தப் பகுதியையே சேர்ந்தவராக இருந்தபடியால், கிராமம் பறிபோகின்ற கவலையையும், நமக்கு வெளிப்படுத்தினார்.

இந்த விடயம் பற்றி வன வளப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டபோது, “இந்தக் காடுகள் பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டு, எட்டு வருடங்கள் ஆகின்றன. இரண்டாயிரத்துப் பத்தாம் (2010) ஆண்டு, வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எமது கடமை, அரச சட்டங்களைப் பாதுகாப்பது. எனவே அதை மீறி யாரும் செயற்பட அனுமதிக்கமாட்டோம். வர்த்தமானி அறிவித்தல் வந்தபோது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போதுதான் எதிர்க்கின்றனர்”என்றார் பொறுப்பாக.

இந்தியாவிலிருந்து தம் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கும் பூர்வீகக் குடிகளைக் கொண்டிருக்கும் மருதோடை - நாவலடியின் கதை இது. எல்லைக் கிராமத்தின் கதை இது. ஊர் திரும்பியும் நிம்மதியற்ற, பாதுகாப்பற்ற அகதி வாழ்க்கையைத் தொடரும் அந்த மக்களை, தற்போது பெய்துவரும் கனமழையும் வெகுவாக வாட்டுகின்றது. ஆனாலும் அந்த மக்கள், சொந்த நிலத்தை மீட்பதற்காக எல்லாத் துயரங்களையும் தடைகளையும் தாங்கி, அங்கேயே தங்கியிருக்கின்றனர். 

image_056e5a6f96.jpg

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மருதோடை-எப்படியிருக்கிறது-எல்லை/91-225505