Aggregator

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

3 hours 5 minutes ago
அப்படி இல்லையே இணையவன். மம்முட்டி எழுதியதை வாசிக்கும் போது அவரின் மறுபுறமும், அத்துடன் நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உதவவேண்டும் என்ற எண்ணம் மனதில் வருகிறதே. அதுதான் மனித(மு)ம் பூரணம் அடையும் உணர்வு. சுயநலம் தானே குற்றங்களின் பிறப்பிடம்.

அழகியல் மீதான வன்முறை – டராண்டினோவின் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை – கோ. கமலக்கண்ணன்

3 hours 20 minutes ago
டராண்டினோவின் திரைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன். அதிலும் pulp fiction பத்துத் தடவைகளுக்கு மேல் பார்த்தேன். கமலக்கண்ணன் டராண்டினோவை இப்படிக் காய்ச்சி இருக்கவேண்டாம்!😡

தமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!!

3 hours 30 minutes ago
விசுகு அண்ணா, எனது பாட்டனாருக்கும் எனது அப்பாவுக்குமான உறவின் நுட்பங்களை ஓரளவேனும் எனது அறிவுக்கு எட்டியபடி அறிந்துள்ளேன். அதேபோல் எனது பெற்றோரைப்போல் வேறு யாரும் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடனான எனது பெற்றோரின் அணுகுமுறை எனது பாட்டனை விட மிக வித்தியாசமானது. என்னை ஒரு தடவையேனும் அடித்ததில்லை. நாம் இலங்கையில் பிரிந்து 6 வருடங்களின் பின்னர் பிரான்சில் ஒன்றுசேர்ந்ததோது எமக்குள் நண்பனுக்கும் மகனுக்கும் இடைப்பட்ட ஒரு உறவுமுறையே ஏற்பட்டது. எந்த ஒரு நிலையுலும் நான் அவரை எனது தந்தைக்குரிய இடத்திலிருந்து விலகாமல் மிகவும் மரியாதையாகவே நடந்து கொண்டேன். இருந்தாலும் எமது உறவு முறையிலும் வழிகாட்டலிலும் சில குறைபாடுகள் இருப்பதாகவே தோன்றியது. எனது பிள்ளைகள் பிறக்கும் முன்னரே எனது அனுபவத்திலிருந்து எனது பிள்ளைகளுடன் எனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், எதை எடுத்துக் கொள்வது எதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதுண்டு. அதேபோல் இப்போது எனது பிள்ளைகளுடனான எனது அணுகுமுறை எனக்கும் எனது தந்தைக்குமான உறவைவிட வித்தியாசமானது. எனது மகள் என்னில் எனக்குப் புரியாத சில குறைகளைக் காணலாம். அவற்றைத் தனது எதிர்கால வாழ்வில் நிச்சயம் நிவர்த்தி செய்வாள். இன்று சரியாக இருப்பது நாளை நிறைவற்றதாக இருக்கலாம். அதற்காக இன்று செய்தது எப்போதுமே சரி என்ற பிடிவாதம் எம்முடனே அழிந்து போகும். அடுத்த சமுதாயம் இன்றைய அனுபவங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்கலாம். அவையும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கப்படும். இதுதான் மானிட வளர்ச்சி. இந்தப் பரிணாம வளர்ச்சியானது சமுதாய முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாது விஞ்ஞானம் அரசியல் சமயம் கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

3 hours 46 minutes ago
மம்முட்டியை திரையில் பார்க்கும் முகத்தில் அவருடைய உள்ளம் வெள்ளை என்று தெரியும். பந்தா இல்லாமல் எத்தனை பிரபலங்கள் இவரைப் போன்று இருப்பார்கள்? மிகவும் குறைவு என்றுதான் நினைக்கின்றேன்.

ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....

5 hours 19 minutes ago
ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்..... வ. ந. கிரிதரன் ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன். இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவெளியில், யாழ் கோட்டையின் அகழிச்சுவருக்கருகில் நின்று கூட்ட உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் திருச்சி நைனார் முகம்மது என்று நினைக்கின்றேன் உரையாடிக்கொண்டிருந்தார். என் அருகில் என் எட்டாம் வகுப்பு யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரான மகேந்திரன் (முன்னாள் மேயர் ராஜா விசுவநாதனின் தம்பி) சைக்கிளுடன் உரை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது. கூட்டம் நடந்தபோது வீதியையும் மறைத்துக்கொண்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். பொலிசார் வந்து வீதியை மறைத்து அமர்ந்திருந்த மக்களைத் தடியடி கொண்டு கலைத்தார்கள். பதிலுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மக்கள் தம் காலணிகளை அவர்கள் மேல் எறிந்து தாக்கினார்கள். பொலிசார் பின் வாங்கினார்கள். விரைவில் மீண்டு வந்தார்கள். மக்கள் மேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினார்கள். மக்கள் யாரும் கதறி அழுததாகத் தெரியவில்லை. எல்லோரும் ஓடித்தப்பவே முயன்றார்கள். எல்லோரும் ஆத்திரத்துடன் கூடிய பயத்துடனேயே காணப்பட்டார்கள். என் வாழ்நாளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப்பற்றி அறிந்திராத நான் பொலிசார் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாகவே அச்சமயத்தில் நினைத்தேன். என் அருகிலும் குண்டொன்று வந்து விழுந்து புகையைக் கக்கியது. கண்கள் எரிய சைக்கிளையும் விட்டுவிட்டு ஓட முயன்றேன். கூட்டத்திலொருவர் அருகிலிருந்தவர் ' குப்புறப்படுங்கள். குப்புறப்படுங்கள். சுடுகிறான்கள் ' என்று கத்தியதும் நினைவிலுள்ளது. சிலர் நிலத்துடன் நிலம் படுத்தார்கள். நானும் அவ்விதம் படுத்தேன். கண்களின் எரிவு சிறிது நீங்கியதும் எழுந்தேன். பலர் கோட்டை அகழிக்குள் பாய்ந்து தப்பினார்கள். நான் அவ்விதம் அகழிக்குள் பாய்ந்து அகழிக்குள் முனியப்பர் கோயிலுக்குச் செல்வதற்காக இடையிலிருந்த நடைபாதையினால் விழாமல் அகழிக்குள் விழாமல் தப்பி மீண்டுவந்து , சைக்கிளை எடுத்து வீடு திரும்பினேன். வீடு செல்லும் வழியில் வந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறித்து சம்பவத்தைத் தெரியப்படுத்தினோம். ராணி திரையரங்கும் ஓடி வந்த மக்களை உள்வாங்கிப்பாதுகாப்பளித்ததாக நினைவு. ஆரம்பத்தில் பொலிசார் மக்களை நோக்கிச் சுட்டது கண்ணீர்க்குண்டுகளை. பின்னர் அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டதில் அவை கீழே விழுந்து இறந்தவர்கள்தாம் அன்று இறந்த அனைவரும் என்று பின்னர் அறிந்தேன். நிகழ்வுகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. கூகுள் வரைபடம் மூலம் வீரசிங்க மண்டபம், அன்று நான் நின்றிருந்த கோட்டை அகழிப்பக்கமான முற்றவெளி, அகழிக்குள் பாய்ந்தபோது காப்பாற்றிய நடைபாதை ஆகியவற்றைப்பெற்றுக்கொண்டேன். அவற்றையே இங்கு காண்கின்றீர்கள். - அகழிக்குள் பாய்ந்தபோது என்னை அகழிக்குள் விழ விடாமல் காப்பாற்றிய நடைபாதை இதுதான். இப்பாதை வழியே முனியப்பர் கோயிலுக்குச் செல்லலாம். - - யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன், யாழ் முற்றவெளியை ஊடறுத்துச் செல்லும் வீதி. தமிழாராய்ச்சி மாநாட்டின் (1974) இறுதி தினத்தின்போது மக்கள் இவ்வீதி நிறைய அமர்ந்திருந்தார்கள். பொலிசார் முதலில் இங்கு அமர்ந்திருந்தவர்களையே தாக்கிக் கலைக்க முயன்றார்கள். - - *கூகுள் வரைப்படம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.- முகநூல் எதிர்வினைகள்: Kopan Mahadeva மேலே கொடுத்திருப்பது ஆசிரியர் நவரத்தினம் கிரிதரனின் மிகவும் உபயோகமான பதிவு. நாற்பத்தைந்து ஆண்டுகளின் முன் நடந்த சம்பவங்களின் வர்ணனை எனினும் மிகவும் முக்கியமான பதிவு. இவரைப் போல், எழுதும் திறனும் விருப்பமும் உள்ள, அந்த 1974 ஜனவரியின் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் நேரடி அனுபவமுள்ள இன்னும் சிலர் தங்கள் உண்மையான அனுபவங்களை வால்-காலோ கேட்டறிந்த, படித்தறிந்த வதந்திகள், செய்திகளோ இன்றித் தம் சொந்த நினைவுகள், மனச்சாட்சிகளின் படி எழுதினால் வருங்காலச் சந்ததியின் ஆராய்ச்சியாளருக்கு அவை மிகவும் உதவியாக இருக்கும். அந்த மகாநாட்டை முன்னின்று எமது யாழிலே நடாத்தி முடித்த பிரதம பொதுச் செயலாளன் என்ற முறையில் நானும் அதைப் பற்றிய நூல் ஒன்றைப் பலரின் வேண்டுகோளின்படி எழுத முயன்றுகொண்டு இருக்கிறேன். அது முடியும் தறுவாயில், பகிரங்கமாக அறிவிப்பேன். பி.கு: கிரிதரனின் படங்கள் அன்றல்ல, அண்மையில், கூகிளின் துணையுடன் எடுத்தவை. அதை அவரே அறிவிக்கின்றார். எனவே அன்று இருந்த காட்சிகளை அவை ஓரளவுக்கே பிரதிபலிக்க முடியும். உ-ம்: அன்று வீரசிங்கம் மண்டபம் இவ்வளவு பெரியதல்ல. ஆனால் அதன் முன்னுள்ள வெளி முற்றம் இன்று இருப்பதிலும் பார்க்கப் பரந்து இருந்தது என் நினைவு. வாழ்த்துக்கள்-- பேராசிரியர் கோபன் மகாதேவா. Maheswaran Murugaiah இயக்கங்கள் உருவாக முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று Giritharan Navaratnam உரும்பிராய் சிவகுமாரன் ஆயுதம் ஏந்தியதற்கு முக்கிய காரணமான நிகழ்வு. அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த சமயம் அவர் கொட்டடி மீனாட்சி சுந்தரம் கல்லூரியில் கணக்கியல் பற்றிப் படித்துக்கொண்டிருந்தார். மாநாட்டின் வாகன ஊர்வலம் கே.கே.எஸ். வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அவரும் பங்கு பற்றியிருந்ததைக் கண்டிருக்கின்றேன் Boopal Chinappa மிக அருமையான பதிவு......நினைவுகள் சரியாகவே இருக்கிறது. நான் நைனார் முகம்மது பேசிய மேடைக்கு முன்னால்தான் இருந்தேன். அதாவது வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள றோட்டில்தான் இருந்தோம். அப்பொழுதான் மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிசார் வந்து றோட்டில் இருந்து விலகும்படி சொன்னார்கள். ஒருவரேனும் அசையவில்லை. பின்புதான் கூட்டமாக முனியப்பர் பக்கமாக வந்து சுட்டார்கள். http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4903:-10-1974-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....

5 hours 19 minutes ago
ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....

வ. ந. கிரிதரன்

tamil_conference_memorial.jpg

ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன்.
இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவெளியில், யாழ் கோட்டையின் அகழிச்சுவருக்கருகில் நின்று கூட்ட உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் திருச்சி நைனார் முகம்மது என்று நினைக்கின்றேன் உரையாடிக்கொண்டிருந்தார். என் அருகில் என் எட்டாம் வகுப்பு யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரான மகேந்திரன் (முன்னாள் மேயர் ராஜா விசுவநாதனின் தம்பி) சைக்கிளுடன் உரை கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது. கூட்டம் நடந்தபோது வீதியையும் மறைத்துக்கொண்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். பொலிசார் வந்து வீதியை மறைத்து அமர்ந்திருந்த மக்களைத் தடியடி கொண்டு கலைத்தார்கள். பதிலுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மக்கள் தம் காலணிகளை அவர்கள் மேல் எறிந்து தாக்கினார்கள். பொலிசார் பின் வாங்கினார்கள். விரைவில் மீண்டு வந்தார்கள். மக்கள் மேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினார்கள். மக்கள் யாரும் கதறி அழுததாகத் தெரியவில்லை. எல்லோரும் ஓடித்தப்பவே முயன்றார்கள். எல்லோரும் ஆத்திரத்துடன் கூடிய பயத்துடனேயே காணப்பட்டார்கள்.

என் வாழ்நாளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப்பற்றி அறிந்திராத நான் பொலிசார் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாகவே அச்சமயத்தில் நினைத்தேன். என் அருகிலும் குண்டொன்று வந்து விழுந்து புகையைக் கக்கியது. கண்கள் எரிய சைக்கிளையும் விட்டுவிட்டு ஓட முயன்றேன். கூட்டத்திலொருவர் அருகிலிருந்தவர் ' குப்புறப்படுங்கள். குப்புறப்படுங்கள். சுடுகிறான்கள் ' என்று கத்தியதும் நினைவிலுள்ளது. சிலர் நிலத்துடன் நிலம் படுத்தார்கள். நானும் அவ்விதம் படுத்தேன். கண்களின் எரிவு சிறிது நீங்கியதும் எழுந்தேன்.

பலர் கோட்டை அகழிக்குள் பாய்ந்து தப்பினார்கள். நான் அவ்விதம் அகழிக்குள் பாய்ந்து அகழிக்குள் முனியப்பர் கோயிலுக்குச் செல்வதற்காக இடையிலிருந்த நடைபாதையினால் விழாமல் அகழிக்குள் விழாமல் தப்பி மீண்டுவந்து , சைக்கிளை எடுத்து வீடு திரும்பினேன். வீடு செல்லும் வழியில் வந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறித்து சம்பவத்தைத் தெரியப்படுத்தினோம். ராணி திரையரங்கும் ஓடி வந்த மக்களை உள்வாங்கிப்பாதுகாப்பளித்ததாக நினைவு.

ஆரம்பத்தில் பொலிசார் மக்களை நோக்கிச் சுட்டது கண்ணீர்க்குண்டுகளை. பின்னர் அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டதில் அவை கீழே விழுந்து இறந்தவர்கள்தாம் அன்று இறந்த அனைவரும் என்று பின்னர் அறிந்தேன். நிகழ்வுகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.

கூகுள் வரைபடம் மூலம் வீரசிங்க மண்டபம், அன்று நான் நின்றிருந்த கோட்டை அகழிப்பக்கமான முற்றவெளி, அகழிக்குள் பாய்ந்தபோது காப்பாற்றிய நடைபாதை ஆகியவற்றைப்பெற்றுக்கொண்டேன். அவற்றையே இங்கு காண்கின்றீர்கள்.

ford_pathai2.jpg

- அகழிக்குள் பாய்ந்தபோது என்னை அகழிக்குள் விழ விடாமல் காப்பாற்றிய நடைபாதை இதுதான். இப்பாதை வழியே முனியப்பர் கோயிலுக்குச் செல்லலாம். -

veerasingam_hall_road.jpg

-  யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன், யாழ் முற்றவெளியை ஊடறுத்துச் செல்லும் வீதி. தமிழாராய்ச்சி மாநாட்டின் (1974) இறுதி தினத்தின்போது மக்கள் இவ்வீதி நிறைய அமர்ந்திருந்தார்கள். பொலிசார் முதலில் இங்கு அமர்ந்திருந்தவர்களையே தாக்கிக் கலைக்க முயன்றார்கள். -

- *கூகுள் வரைப்படம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.-

 

 

முகநூல் எதிர்வினைகள்:

Kopan Mahadeva மேலே கொடுத்திருப்பது ஆசிரியர் நவரத்தினம் கிரிதரனின் மிகவும் உபயோகமான பதிவு. நாற்பத்தைந்து ஆண்டுகளின் முன் நடந்த சம்பவங்களின் வர்ணனை எனினும் மிகவும் முக்கியமான பதிவு. இவரைப் போல், எழுதும் திறனும் விருப்பமும் உள்ள, அந்த 1974 ஜனவரியின் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் நேரடி அனுபவமுள்ள இன்னும் சிலர் தங்கள் உண்மையான அனுபவங்களை வால்-காலோ கேட்டறிந்த, படித்தறிந்த வதந்திகள், செய்திகளோ இன்றித் தம் சொந்த நினைவுகள், மனச்சாட்சிகளின் படி எழுதினால் வருங்காலச் சந்ததியின் ஆராய்ச்சியாளருக்கு அவை மிகவும் உதவியாக இருக்கும். அந்த மகாநாட்டை முன்னின்று எமது யாழிலே நடாத்தி முடித்த பிரதம பொதுச் செயலாளன் என்ற முறையில் நானும் அதைப் பற்றிய நூல் ஒன்றைப் பலரின் வேண்டுகோளின்படி எழுத முயன்றுகொண்டு இருக்கிறேன். அது முடியும் தறுவாயில், பகிரங்கமாக அறிவிப்பேன். பி.கு: கிரிதரனின் படங்கள் அன்றல்ல, அண்மையில், கூகிளின் துணையுடன் எடுத்தவை. அதை அவரே அறிவிக்கின்றார். எனவே அன்று இருந்த காட்சிகளை அவை ஓரளவுக்கே பிரதிபலிக்க முடியும். உ-ம்: அன்று வீரசிங்கம் மண்டபம் இவ்வளவு பெரியதல்ல. ஆனால் அதன் முன்னுள்ள வெளி முற்றம் இன்று இருப்பதிலும் பார்க்கப் பரந்து இருந்தது என் நினைவு. வாழ்த்துக்கள்-- பேராசிரியர் கோபன் மகாதேவா.

Maheswaran Murugaiah இயக்கங்கள் உருவாக முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று

Giritharan Navaratnam உரும்பிராய் சிவகுமாரன் ஆயுதம் ஏந்தியதற்கு முக்கிய காரணமான நிகழ்வு. அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த சமயம் அவர் கொட்டடி மீனாட்சி சுந்தரம் கல்லூரியில் கணக்கியல் பற்றிப் படித்துக்கொண்டிருந்தார். மாநாட்டின் வாகன ஊர்வலம் கே.கே.எஸ். வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அவரும் பங்கு பற்றியிருந்ததைக் கண்டிருக்கின்றேன்

Boopal Chinappa மிக அருமையான பதிவு......நினைவுகள் சரியாகவே இருக்கிறது. நான் நைனார் முகம்மது பேசிய மேடைக்கு முன்னால்தான் இருந்தேன். அதாவது வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள றோட்டில்தான் இருந்தோம். அப்பொழுதான் மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிசார் வந்து றோட்டில் இருந்து விலகும்படி சொன்னார்கள். ஒருவரேனும் அசையவில்லை. பின்புதான் கூட்டமாக முனியப்பர் பக்கமாக வந்து சுட்டார்கள்.

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4903:-10-1974-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

 

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

5 hours 24 minutes ago
சுமத்திரன் தான் ஓரளவுக்கு பேச்சாற்றல் மிக்க,செயற் திறன் மிக்கவராய் இருக்கிறார். அவரையும் வாயை மூடப் பண்ணி விட்டால் விஷயம் முடிந்தது....இல்லையா 😪

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

5 hours 32 minutes ago
161. சமாதிகளைக் காத்தல் இரவு நானும் வினோத்தும் வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டோம். ‘நீங்கள் தூங்குங்கள், நான் பிறகு வந்து படுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வினய் கிணற்றடிக்குப் போனான். அவன் கங்காதரனைப் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து சரியாக இல்லாததுபோல எனக்குத் தோன்றியது. வினோத்திடம் இதனைச் சொன்னேன். ‘அவன் இத்தனை பதற்றமாக அவசியமே இல்லையே?’ என்று கேட்டான். அவன் பதற்றத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இயல்பாக இல்லை, அவ்வளவுதான் என்று சொன்னேன். அதற்கு மேல் வினோத் ஒன்றும் பேசவில்லை. தூங்க ஆரம்பித்திருந்தான் என்று தோன்றியது. எனக்கு உறக்கம் வரவில்லை. எல்லாமே நான் எண்ணிய விதமாகத்தான் நடக்கும் என்று தோன்றியது. அண்ணா வரமாட்டான் என்று திரும்பத் திரும்ப நினைத்தேன். அம்மாவும் ஒருவேளை அதை ஊகித்திருப்பாள். அல்லது அண்ணாவே அவளிடம் தெரிவித்திருக்கக்கூடும். ஒரு பாதுகாப்பு கருதியே அவள் கேசவன் மாமா கொள்ளி வைக்கட்டும் என்று எங்களிடம் சொன்னதாகத் தோன்றியது. மாமாவானாலும் சரி; நாங்களானாலும் சரி. ரத்த சொந்தம் இல்லாத பட்சத்தில் இத்தனைக் காலம் உடன் இருந்து பார்த்துக்கொண்டவருக்குத் தன்னால் கொடுக்க முடிந்த ஒரே அங்கீகாரம் என்று அவள் கருதியிருக்கலாம். பதிலுக்குக் கடைசியாக எங்களுக்கென ஒரு சொல்லை அவள் சேமித்து வைத்திருக்கலாம். அதை ஒரு பொக்கிஷம்போலப் பாதுகாக்கச் சொல்லி எங்களிடம் அளிக்கலாம். நான் சிரித்துக்கொண்டேன். எனக்கும் கடைசிச் சொற்களுக்கும் அத்தனை நல்ல உறவு இருந்ததில்லை. என் குருநாதரின் கடைசிச் சொல்லை நான் தவிர்த்துவிட்டுத் தப்பிச் சென்றது நினைவுக்கு வந்தது. ஒரு முழு வாழ்வு தராத செய்தியை ஒற்றைச் சொல் தருமா? எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. குருநாதர் ஒரு நினைவு. அண்ணா ஒரு நினைவு. அம்மா ஒரு நினைவு. நூலகத்தில் அடுக்கிய புத்தகங்களைப்போல நினைவின் வரிசைப் பலகையில் தன் இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பொருத்திக்கொள்ளும் நினைவுகள். ஆனால் அவை சுமை ஆவதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன். என் சுதந்திரம் என்பதே நான் மூட்டை சுமப்பதில்லை என்பதுதான். என் அகங்காரமே அதில்தான் வாழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது எண்ணிப் பார்த்தேன். அம்மாவின் கண்ணீர் மட்டுமே என்னை வீட்டை விட்டு வெளியேற வைத்தது. அண்ணா விட்டுச் சென்றபோதும் வினய் விட்டுச் சென்றபோதும் அவள் அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது. அதைப் போலி என்று என்னால் எண்ணவே முடியாது. பாசத்தின் ஸ்தூல வடிவம் கண்ணீர் என்று அன்றைக்குச் சொற்களற்று உணர்ந்தேன். அம்மாவின் மொத்தக் கண்ணீரையும் ஒரு பெரிய பனிப்பாறையாக உருமாற்றித் தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கினேன். அது சாத்தியமில்லை என்று அறிவு தெளிவுபடுத்தியபோதுதான், மிச்சக் கண்ணீரையும் மொத்தமாக இறக்கிவைக்க என்னை நான் வெளியேற்றிக் கொண்டேன். இதோ அம்மா இப்போது என்னருகே இருக்கிறாள். அறைக்குள் உறங்குகிறாள். அல்லது உறங்குவதுபோலக் கிடக்கிறாள். அருகே போய் உட்காரலாம். அம்மா என்று அழைத்து ஏதாவது பேசலாம். அவள் பதில் சொல்வதும் சொல்லாது போவதும் அவள் விருப்பம். ஆனால் எனக்கு இறக்கிவைக்க என்னவாவது இருந்தால், அதனைச் செய்யத் தடையேதுமில்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா? யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது. இந்த அம்மா அல்ல; எந்த அம்மாவுமே விரும்பக்கூடிய ஒரு வாழ்வை நான் வாழவில்லை. ஆனால் என் வாழ்வு என் விருப்பம். என்னிடம் பொய் இல்லை. திருட்டுத்தனமில்லை. நான் பணக்காரன் இல்லை. நான் ஏழையுமில்லை. எனது ஒரே அடையாளம், நான் சுதந்திரமானவன் என்பது. எனது சுதந்திரம், பாரதத்தில் இன்னொரு பிரஜை அனுபவித்தறியாதது. இது நானே விரும்பி உருவாக்கியது. இதற்கு வடிவம் கொடுத்ததுதான் என் வாழ்நாள் பணி. வாழ்நாள் சாதனை. கண்ணீரற்ற ஒரு மனிதனை உங்களால் கற்பனையில்கூடக் கண்டெடுக்க முடியாது. ஆனால் நான் அதுதான். நான் அப்படித்தான். என்னை கார்ப்பரேட் சன்னியாசி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் பெண் பித்தன் என்றும் சொல்வோர் உண்டு. ஆனால் இவை எதுவுமே நானல்ல. எதையும் என்னால் நினைத்த கணத்தில் உதற முடியும் என்பதே, இத்தனைக் காலமாக நான் மேற்கொண்டு வந்த பயிற்சிகள் எனக்களித்த துணிவு. ஒரு சமயம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் என்னிடம் ஓர் உதவி கேட்டு வந்தார். பெல்லாரி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு சிறு குன்று தனக்கு வேண்டுமென்று கேட்டு. ஏற்கெனவே வேறு பலர் மூலம் முயற்சி செய்து தோற்ற பின்புதான் அவர் என்னிடம் வந்திருந்தார். அதை என்னிடம் சொல்லவும் செய்தார். ‘எப்படியாவது எனக்கு அந்தக் குன்று வேண்டும், உதவுங்கள்’ என்று கேட்டார். அங்கே அவர் என்ன செய்யப்போகிறார் என்று நான் கேட்டேன். ஒரு வீடு கட்டிக்கொண்டு வசிக்கப்போகிறேன் என்று சொன்னார். பெரும் பணக்காரர்களுக்கு இம்மாதிரி விநோதமான விருப்பங்கள் வருவது எளிய விஷயம். நிறையப் பார்த்திருக்கிறேன். அதனால் பெரிதாக வியப்பை வெளிப்படுத்தாமல், ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன். அந்த பெல்லாரி தொழிலதிபரை எனக்கு நேரடியாகத் தெரியாது. எனக்குத் தெரிந்த இன்னொரு கர்நாடக அரசியல் நண்பர் மூலம் அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். பரம்பரைப் பணக்காரரான அந்த மனிதரின் மிக நெருங்கிய உறவுகள் சிலரின் சமாதி அந்தக் குன்றில் இருந்தது. அவர் அந்தக் குன்று முழுதும் பாத்தி கட்டி காப்பி பயிரிட்டிருந்தார். விளைச்சலைத் தனது தாயின் சமாதி முன் கொண்டு குவித்து ஒரு படையல் போட்டு அதன்பின் காப்பி போர்டுக்கு அனுப்பிவைப்பது தனது வழக்கம் என்று சொன்னார். நான் அவரிடம் ஒன்று மட்டும் கேட்டேன். ‘உங்களுக்குக் காப்பி பயிர் முக்கியமா? அல்லது அந்த சமாதி முக்கியமா?’ ‘நான் தோட்டத்தை விற்கத் தயாராக இருக்கிறேன். அவர் சமாதிகளை அழிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் தர வேண்டும்’ என்று அவர் சொன்னார். அரசியல்வாதிகளுடன் முட்டல் மோதல் இல்லாதிருக்க வேண்டும் என்ற எளிய வியாபாரப் பாடம்கூட அறியாமலா அவரால் அத்தனை பெரிய தொழிலதிபராக விளங்க முடியும்? எனக்கு அவர் கேட்டது நியாயமாகப் பட்டது. என்னைத் தொடர்புகொண்ட மகாராஷ்டிர அரசியல்வாதியிடம் விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டேன். ‘சமாதியாவது ஒன்றாவது? அவன் அங்கே கஞ்சா பயிரிட்டுக்கொண்டிருக்கிறான். விடுகிறானா இல்லையா கேளுங்கள். இல்லாவிட்டால் தீர்த்துவிடுகிறேன்’ என்று சொன்னார். நான் அமைதியாகத் திரும்பிச் சென்றேன். அந்தக் குன்றுக்கு விரைவில் ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாளெல்லாம் அங்கே சுற்றி வந்தேன். தொழிலதிபர் சொன்னது உண்மைதான். அங்கே ஆறு சமாதிகள் இருந்தன. ஆறும் அருகருகே இல்லை. வேறு வேறு இடங்களில் இருந்தன. ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்த சமாதிகள். அவருடைய தாயார் தந்தையார், பாட்டனார், இன்னும் ஒன்றிரண்டு உறவுகளின் சமாதிகள். அவற்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஶ்ரீரங்கப்பட்டணத்தில் எனக்கு அறிமுகமான பழைய கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மெக்ஸிகோ ஆயுதத் தயாரிப்பு முதலீட்டின் மூலம் அந்த வருடம் அவருக்கு வந்திருந்த லாபப் பணம் இரண்டு பொதுத் தேர்தல்களுக்குப் போதுமானது என்று மிகவும் சந்தோஷமாகச் சொன்னார். எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும்; என்ன வேண்டும் என்றும் கேட்டார். அதே மாதம் அதே தேதி, அதே திதியில் அடுத்த ஆண்டு அந்த மகாராஷ்டிர அரசியல்வாதிக்கு அவரது மகன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தேன். இது எனக்குத் தேவையா, எந்த விதத்தில் அவரது மரணம் எனக்கு அவசியம், இதன் பாவ புண்ணியம் என்ன, லாப நட்டங்கள் என்னென்ன - எதைப் பற்றியும் நான் சிறிதும் கவலை கொள்ளவில்லை. மீண்டும் அந்த பெல்லாரி தொழிலதிபரைச் சந்திக்கும் அவசியம்கூட எனக்கு ஏற்படவில்லை. இன்றுவரை சந்திக்கவும் இல்லை. ஆனாலும் அன்று நான் அதனைச் செய்தேன். அது அவருக்காகவா வேறு எதற்காக என்றால் என்னால் பதில் சொல்ல இயலாது. சொல்ல விரும்பமாட்டேன் என்று பொருள். ஆனால் நான் அதுதான். லாப நட்டங்களல்ல. எண்ணியது எண்ணிய விதமாக நடந்தேறுகிறதா என்பதே முக்கியம். என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது. நள்ளிரவு இரண்டு மணிக்கு, வினய் பின்புறக் கதவை சாத்திவிட்டு எழுந்து வந்தான். தாழ்வாரத்தில் வினோத் உறங்குவதையும் நான் உட்கார்ந்திருப்பதையும் கண்டவன், என்னருகே வந்து அமர்ந்தான். நான் புன்னகை செய்தேன். ‘இன்னும் ஒரே நாள்’ என்று சொன்னேன். ‘ஆம். நாளை இந்நேரம் அம்மாவைக் கிடத்திவிட்டு நாம் அருகே அமர்ந்துகொண்டிருப்போம்’. ‘மாமா அழுதுகொண்டிருப்பார்’. ‘ஆம். அதை நாம் சகித்துக்கொண்டுதான் தீர வேண்டும்’. ‘எனக்கு அழுகை வராது வினய். நீயும் அழமாட்டாய் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வினோத் விஷயத்தில் என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை’. ‘அழுகை ஒரு வியர்த்தம்’. ‘ஆனால் சித்தம் அதை சில சமயங்களில் மறந்துவிடுகிறது. பசியெடுப்பதாக நினைக்கிறதல்லவா? அதைப்போல’. அவன் சிரித்தான். ‘ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும்’ என்று சொன்னான். ‘சொல்’. ‘அந்த வைத்தியர் சாமி நம் நான்கு பேரில் யாரையோ கொலை செய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்’. ‘அப்படியா?’ ‘அப்படித்தான் தோன்றுகிறது’. ‘அவர் சொரிமுத்துவுக்குத் தெரிந்தவர் என்றாயே? சொரிமுத்து ஒன்றும் சொல்லவில்லையே’. ‘சொரிமுத்துவுக்குத் தெரியாமல் திட்டமிட்டிருக்கலாம். வேறு நோக்கம், வேறு காரணம் இருக்கலாம்’. ‘அவருக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்? அல்லது அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?’ ‘நமக்கும் இந்த வீட்டுக்குமே சம்மந்தமில்லை. உனக்கும் எனக்குமே சம்மந்தமில்லை. இதையெல்லாம் யாருக்குச் சொல்வது? ஆனால் கிழவன் ஏதோ காரணம் வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. நான் சிறிது வெளியே போய்விட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான். ‘நீலாங்கரைக்கா?’ ‘இல்லை. இங்கேயேதான். கடற்கரைக்கு’. ‘எதற்கு?’ ‘இப்போது நான் சித்ராவை சந்திக்க விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றான். (தொடரும்) https://www.dinamani.com/junction/yathi/2018/oct/29/161-சமாதிகளைக்-காத்தல்-3028829.html

எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி

5 hours 33 minutes ago
எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி: January 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று (18)அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு ‘கார்பன்’ பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/110365/

எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி

5 hours 33 minutes ago
எச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:

January 18, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

92393771_40f2c043-afdf-4fb1-b3d1-fd0cbed

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று (18)அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு ‘கார்பன்’ பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/110365/

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்

5 hours 35 minutes ago
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்
January 18, 2019

ES-UNI.jpg?zoom=3&resize=335%2C234

கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தராக எவ். சீ. ராகவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல், புதிய துணைவேந்தர் தனது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://globaltamilnews.net/2019/110368/

 

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா

5 hours 43 minutes ago
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள் வட.மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது எனத் தெளிவாகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வரைபு தொடர்பாக என்னால் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்புதிய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சமஸ்டிக்கு முரணாக அமைந்துள்ளது. முழுமையாக தமிழ் அபிலாஷைகளை தீர்க்காது எனவும் சில திருத்தங்களுடன் தற்காலிகாக ஏற்பாடாக இதனை ஏற்கலாம் எனவும் கூறினேன். ஆனால் அப்புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபையில் ரணில் உரையாற்றும் போது, குறித்த இப்புதிய அரசியலமைப்பானது தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரிவு 2 மற்றும் 9 ஆகிய சரத்துக்களை பாதுகாத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் அடிப்படையில் பார்க்கும் போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது ஓற்றையாட்சியாகவே அமையும் என்பது தெரிகின்றது” என சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/புதிய-அரசியலமைப்பு-ஒற்றை/