Aggregator

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220986

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM

image

கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.

ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன.

வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1000570855.jpg

1000570856.jpg

https://www.virakesari.lk/article/220986

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 26 JUL, 2025 | 12:46 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார். தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார். அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார். ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 - 5 விக்.) மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை. ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/220967

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

3 months 2 weeks ago
இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு 25 JUL, 2025 | 12:57 PM புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன் தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர். “மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல் மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220904

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 03:50 PM வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. https://www.virakesari.lk/article/221004

சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

26 JUL, 2025 | 03:50 PM

image

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26)  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

WhatsApp_Image_2025-07-26_at_15.13.53.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.57.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.56.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.54__1WhatsApp_Image_2025-07-26_at_15.13.58.jpWhatsApp_Image_2025-07-26_at_15.13.55.jp

https://www.virakesari.lk/article/221004

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

3 months 2 weeks ago
சம்பந்தப்பட்ட குற்றவாளி பொலிஸாரின் ஆயுதத்தை பறித்து போலீசாரை தாக்க முற்பட்டவேளை போலீசார் விரைந்து செயற்பட்டு திருப்பி சுட்டத்தில் தாக்குதலாளி சம்பவ இடத்தில் பலி! காயமடைந்த பொலிசதிகாரி வைத்தியசாலையில் அனுமதி! தடுப்புக்காவலில் இருந்த கைதி மின் கம்பியை கடித்து, உடுத்திருந்த ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை! இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவலிலுள்ள கைதிகளை கொலை செய்து விட்டு பொலிஸார் வழக்கமாக கூறும் காரணங்கள்.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

3 months 2 weeks ago
ஒன்றுமே செய்யாது இருப்பதும் நன்மை பயக்கும் என்கிறார். அப்படியானால் சாணக்கியர் என்பது.....??

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

3 months 2 weeks ago
தாய்லாந்து - கம்போடியா கலவரம், இதுவரை 40 பேர் வரை இருபுறமும் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டவர்கள் காயம், இலட்சக்கணக்கானவர்கள் இடப்பெயர்வு! ஜூலை 24ம் திகதி அதிகாலை முதல் ஆரம்பித்த தாய்லாந்து, கம்போடியா எல்லைப்பதற்றம் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையாக மாறி தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் இக்கணம் வரை இடம்பெற்று வருகின்றது. தொடரும் தாக்குதல்கள் காரணமாக, எல்லைப்புறத்தில் வசிக்கும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றதோடு தாய்லாந்து நாட்டில் பணிபுரிந்த முப்பத்தையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கம்போடியவிற்கு திரும்பி வருகின்றனர். அத்துடன், கம்போடியாவுடனான எல்லைப்பகுதியில் நேற்று மாலையிலிருந்து தாய்லாந்து இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 817 கிலோ மீற்றர் தூரம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்போடியாவின் வடமேற்கு பகுதியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆரம்பித்த துப்பாக்கிச்சூடுகள் தற்போது எல்லையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதோடு, தாய்லாந்தின் F16 விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய டிரோன்கள் கம்போடியாவின் எல்லைப்புற கிராமங்களின் முக்கியமான பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆசியான் (ASEAN) அமைப்பின் ஒத்துழைப்போடு உலக நாடுகளினால் இரு நாடுகளுக்கும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தாய்லாந்து ஆரம்பக்கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இல்லை என அறிவித்துள்ளது. இந்த நிலையில், பதற்ற நிலையை தணித்து சமாதான பேச்சுவார்த்தையை கொண்டுவர கம்போடியா ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தை நாடி நிற்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவுகள் இன்னுமே எட்டப்படாமையால் தொடர்ந்து இரு நாடுகளிலும் பதற்றமான போர் சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

3 months 2 weeks ago
காக்கை வன்னியன்கள் இல்லையெண்டால் சிங்கள பேரினவாதத்துக்கும் அதுக்கு சாமரம் வீசுறவைக்கும் பெரிய பாரிய சொல்லணா இழப்பு தானே 🤣

பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!

3 months 2 weeks ago
பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு! பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால் இணைந்து நடாத்தப்படும். பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில் ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர். இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440653

பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!

3 months 2 weeks ago

55ca458d-079f-4736-83dd-21db6163a741.jpg

பௌத்த மதத்தின் “மறு அவதாரம்” தொடர்பான சர்வதேச மாநாடு!

பௌத்த மதம் சார்ந்த மறு அவதாரம் பற்றிய புதிய பார்வை மற்றும் பரிசீலனையை முன்வைக்கும் சர்வதேச புலமை மாநாடு “பௌத்த மதத்தின் மறு அவதாரம் பற்றிய புலமைச் சிந்தனையின் மறு பரிசீலனை” என்ற தலைப்பின் கீழ், 2025 ஜூலை 26ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கலனி பல்கலைக்கழகத்தின் பட்ட பின் படிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த புலமை மாநாடு, பௌத்த சகோதரத்துவ அறக்கட்டளை, சர்வதேச பௌத்த சம்மேளனம் மற்றும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களால்  இணைந்து நடாத்தப்படும்.

பௌத்த மதத்தில் உள்ள முக்கிய இரு பிரிவுகளான பாலி மற்றும் சமஸ்கிருத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மறு அவதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் புலமை அடிப்படையில்  ஆராய்வது இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

மாநாட்டின் பிரதான உரையை, சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வணக்கத்திற்குரிய ஷர்த்சே கென்சூர் ஜன்சுப் சோதன் ரின்பொசே அவர்கள் நிகழ்த்தவுள்ளனர்.

இம்மாநாட்டில் புத்த சாசன அமைச்சரான கௌரவ கினிதும சுனில் செனெவி அவர்கள் முக்கிய அதிதியாக கலந்து கொள்வதுடன், இந்தியா, பூதான், அமெரிக்கா, ஜப்பான், நேபாளம், மியான்மார், தைவான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பௌத்த பிக்குகள் மற்றும் புலமை வல்லுநர்களும் இதில் பங்கேற்று உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440653

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

3 months 2 weeks ago
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1440698

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

3 months 2 weeks ago

IMG_6251-scaled.jpeg?resize=750%2C375&ss

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தும் நோக்கில், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை தழுவிய வகையில் ஒரே நேரத்தில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த வன்முறைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு பொறிமுறைகள் பயனளிக்காததால், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மூலம் மட்டுமே நீதி கிடைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

https://athavannews.com/2025/1440698

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

3 months 2 weeks ago
இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்! இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1440703

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

3 months 2 weeks ago

WhatsApp-Image-2025-07-25-at-23.18.49-1.

இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணியில் இன்று போராட்டம்!

இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2025/1440703