Aggregator
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
28 May 2025, 10:52 AM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது.
இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார்.
ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
https://minnambalam.com/anna-university-student-sexual-assault-case-verdict/#google_vignette
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
Today at 6 AM
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது.
2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது திமுக தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
திமுக வெளியிட்ட பட்டியல்
அந்தப் பட்டியலில் திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா இடம்பெற்றிருக்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மநீம சார்பில், கமல் களமிறங்குவார் என அக்கட்சி செயற்குழு சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இதில் வில்சன் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாகத் தான் இருந்தார். தற்போது அவர் பதவிக்காலம் முடிய இருக்கும் நிலையில், மீண்டும் எம்.பி வேட்பாளாராக களம் இறங்குகிறார்.
https://www.vikatan.com/government-and-politics/kamalhasan-rajya-sabha-mp-dmk
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்!
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்!
துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்!
துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்!
தனக்கு பாதுகாப்பு தேவையென எவரேனும் எம்.பி கோரிக்கை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக அந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்குவதற்கான வசதிகள் இல்லையென்றால் தனது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள தனக்கு துப்பாக்கியொன்றை வழங்குமாறும் கோரியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவவர், ஜனநாயகம் உள்ள நாட்டில் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்படக் கூடாது என்றும், அதிகாரிகளாலேயே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேவண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் சில எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எம்.பி.க்களின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு சபாநாயகரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வேளையில் நாட்டில் இடம்பெறும் கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் போதைப் பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெறும் மோதல்களுடன் தொடர்புடையவை என்றும், சில சம்பவங்களில் பிரதேச அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த ஆட்சியில் இருந்த 40 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை - விமல் வீரவன்ச
கடந்த ஆட்சியில் இருந்த 40 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை - விமல் வீரவன்ச
Published By: VISHNU
28 MAY, 2025 | 03:19 AM
(எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையை அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவருடன் இருந்தவர்களே மேற்கொண்டுவந்தனர்.
உர கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தியதாக தெரிவித்து அரச அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு செயற்பட்டால் அரச இயந்திரம் செயலிழந்துவிடும்.
அரச அதிகாரிகள் எந்த தீர்மானங்களையும் எடுக்காமல்போகும் நிலை ஏற்படும். தீர்மானம் எடுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 29ஆம் திகதி வருமாறு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், மாலிகாவத்தையில் இடிந்துவிழும் நிலையில் இருந்த கடைத்தொகுதி ஒன்றை அதிகாரசபையின் நிதி மூலம் அதனை செப்பனிட்டு, அதனை வாடகைக்கு வழங்க கேள்விகோரல் விடுத்திருக்கின்றனர்.
யாரும் வராதநிலையில் அதில் விலை குறைப்பு மேற்கொண்டு மீண்டும் கேள்விகோரலுக்கு விட்டபோது ஒருவர் அதனை வாங்கி இருக்கிறார். இதற்கான அனுமதி அப்போது இருந்த குழுக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இறுதியாக பணிப்பாளர் சபை, அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வீடமைப்பு அதிகாரசபையின் நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு நட்டமடைந்துள்ளதாகவும். அப்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்காெள்ள வருமாறு அழைப்பு வந்திருக்கிறது.
எப்படியாவது எம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய விடயங்களை அரசாங்கம் கிழறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கைதுசெய்வதற்கு 40பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் தற்போது செயற்பாட்டு அரசியலில் இருப்பவர்களும் இ்ல்லாதவர்களும் அடங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்பாேது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிலரும் அடங்குகின்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன.
நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் நாயகம் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அதுதொடர்பில் ஆலாேசனை கேட்டுவருகிறார். ஜனாதிபதி செயலகத்திலே இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்குகள் குறைவடைய காரணம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றே இவர்கள் நினைக்கின்றனர். அதனடிப்படடையிலே தற்போது 40பேரை கைதுசெய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்
விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்!
விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்!
விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்!
adminMay 28, 2025
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார்.
இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சரிற்கு மாவட்ட செயலர் எடுத்துக்கூறினார்.
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!
adminMay 28, 2025
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்க வில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாக கூறியுள்ளார்
அதனை அடுத்து அவரை காவற்துறையினர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன், யுவதியை காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை , யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.