விளையாட்டுத் திடல்

இலங்கையுடனான டெஸ்ட் தொடருடன் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் ஓய்வு!

2 days 16 hours ago
13 MAY, 2024 | 05:22 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பிரண்டன் மெக்கல்லம் ஜேம்ஸ் அண்டர்சனுடன்  கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்ததாக இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு புதிய வேகப்பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் இங்கிலாந்து அணி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜேம்ஸ் அண்டர்சனிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுப் பயணத்தின் முடிவில் அவர் தனது 700ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி 700 விக்கெட் மைல்கல்லை எட்டிய உலகின் மூன்றாவது வீரரானார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கவுள்ளது. அத்துடன், ஆகஸ்ட் மாதம் இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதன் முதல் போட்டி அண்டர்சனின் சொந்த ஊர் மைதானமான ஓல்ட் டிரபோர்ட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டி அவரின் பிரியாவிடை போட்டியாக அமையும் என 'தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் கால்பதித்த ஜேம்ஸ் அண்டர்சன், 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுக்களை வீழ்த்தி  அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

https://www.virakesari.lk/article/183426

யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் - யார் இந்த விஜயகாந்த்?

5 days 20 hours ago
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்
10 மே 2024, 07:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்த ஒருவர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும்.

இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இலங்கை அணி

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக சரித் அசலங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குசல் மென்டீஸ், பெத்தும் நிஷாங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிது மென்டீஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மகீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்ங்கை அணியின் மேலதிக வீரர்களாக அசித்த பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஜனித்த லியனகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்
விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்?

யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் வியாஸ்காந்த்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளார்.

சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த், தனது பந்து வீச்சின் ஊடாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனூடாக இலங்கையில் நடாத்தப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 2020ம் ஆண்டு விளையாடினார்.

இதுவே அவரது முதலாவது இருபதுக்கு இருபது போட்டியாக அமைந்திருந்தது.

அதன்பின்னர் 2023ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த், 2024 சர்வதேச லீக் இருபதுக்கு இருபது சுற்றில் எம்ஐ எமிரேட்சு அணிக்காக விளையாடி, தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்திருந்தார்.

அதனையடுத்து, இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான சந்தர்ப்பம் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு கிடைத்திருந்தது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐத்ராபாத் அணிக்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டு, விளையாடி வருகின்றார். சன்ரைசஸ் ஐத்ராபாத் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகி விலகியதால் அந்த இடத்தை விஜயகாந்த் வியாஸ்காந்த் நிரப்பியுள்ளார்.

 
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர்கள்
T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு

பட மூலாதாரம்,VIJAYAKANTH VIYASKANTH

படக்குறிப்பு,விஜயகாந்த் வியாஸ்காந்த்

இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் மகாதேவன் சதாசிவம் உள்ளிட்டோர் விளையாடியிருந்த போதிலும், இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னர் சில வீரர்களே விளையாடியுள்ளனர்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ரீதியில் பல சாதனைகளை படைத்த தமிழ் வீரராக முத்தையா முரளிதரன் காணப்படுகின்றார்.

அத்துடன், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வினோதன் ஜோன் விளையாடியுள்ளார்.

மேலும், ரசல் அர்னால்ட் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றுமொரு தமிழ் வீரராக காணப்படுகின்றார்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வினோதன் ஜோன் மற்றும் ரசல் அர்னால்ட் ஆகியோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.

எனினும், யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cq5n7098gzyo

களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் அரை இறுதியில் மோதவுள்ளன

1 week 4 days ago
05 MAY, 2024 | 05:27 AM
image

(நெவில் அன்தனி)

லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர்  உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில்  காணக்கிடைத்தது.

லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில்   உள்ளூர்  கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் முதலாவது அரை இறுதியில் மோதவுள்ளன.

சிட்டி புட்போல் திடலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் களுத்தற எவ்.சி. அணியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட ஜெவ்னா எவ்.சி. அணி கடைசிக் கட்டத்தில் அன்தனி டிலக்சன் போட்ட கோலின் உதவியுடன் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு களுத்தற எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் களுத்தற வீரர் மோஹமத் ரஹுமான் கோல் போட எடுத்த முயற்சி வீண்போனது.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஹஸ்மீரின் மற்றொரு முயற்சி கைகூடாமல் போனதுடன் அடுத்த நிமிடமே மறுபுறத்தில் அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி. சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளை முடிந்த பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெவ்னா எவ்.சி. கோல்காப்பாளரின் கவனக்குறைவைப் பயன்படுத்தி மொஹமத் அஸ்மீர் கோல் நிலையை 2 - 2 என களுத்தற சார்பாக சமப்படுத்தினார்.

எவ்வாறாயினும் முழு நேரத்திற்கு ஒரு நிமிடம் இருந்தபோது அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யின் வெற்றியை உறுதிசெய்தார்.

வெற்றிபெற்ற ஜெவ்னா எவ்.சி. அணியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் (தலைவர்), அவரது மூத்த சகோதரர் செபமாலைநாயகம் ஞானரூபன்,  அன்தனி   ஜெரின்சன், அன்தனி டிலக்சன், தர்மகுலநாதன் கஜகோபன், தியாகமூர்த்தி ஆர்த்திகன், பரமேஸ்வரன் பகலவன், விக்ணேஸ்வரராஜா கஜநாதன், நேசராசா அன்தனி ரமேஷ், சிவநேசன் மதிவதனன், ஜெயராசா தில்லைக்காந்தன், செலஸ்டீன் சிந்துஜன், அமலேஸ்வரன் அருள் ஜோசப், விஜயகுமார் விக்னேஷ், செபமாலைராசா ஜெயராஜ், வின்சன் கீதன் ஆகியோர் இடம்பெற்றனர். 

பயிற்றுநர்: ரட்னம் ஜஸ்மின்.

கண்டி  எவ்.சி. கோல் மழை பொழிந்து

நிகம்போ எவ்.சி.யை வீழ்த்தியது

கிட்டத்தட்ட தேசிய அணியாகக் காட்சி கொடுத்த கண்டி எவ்.சி. இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்து 9 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ எவ்.சி.யை துவம்சம் செய்தது.

அசிக்கூர் ரஹ்மானை தலைவராகக் கொண்ட கண்டி எவ்.சி. அணியில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் தேசிய வீரர்களாவர்.

கண்டி எவ்.சி. அணியின் பலத்திற்கு ஈடுகொடுப்பதில் நிகம்போ எவ்.சி. சிரமத்தை எதிர்கொண்டது. போதாக்குறைக்கு 32ஆவது நிமிடத்திலிருந்து நிகம்போ எவ்.சி. 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது,

இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி எவ்.சி. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஜிமோ போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான என்.ஜே. பெர்னாண்டோ சிவப்பு அட்டையுடன் களம் விட்டகன்றார். அவர் ஒரு பெனல்டியை வழங்கிவிட்டே வேளியேறினார்.

அந்தப் பெனல்டியை மொஹமத் ஆக்கிப் பைஸர் கோல் ஆக்கினார்.

இடைவேளையின்போது கண்டி எவ்.சி. 2 - 0 என முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் சீரான இடைவெளியில் கண்டி எவ்.சி. கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது.

மொஹமத் பஸால் (52 நி.), ஷெனால் சந்தேஷ் (59 நி.), ஆக்கிப் பைஸர் (64 நி.), இப்ராஹிம் ஜிமோ (81 நி.), அசிக்கூர் ரஹுமான் (82 நி., 90+6 நி.), மொஹமத் ரினாஸ் (90 நி.) ஆகியோர் கோல் மழை பொழிந்தனர்.

https://www.virakesari.lk/article/182705

ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இருபாலாரிலும் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா உலக சாதனை

2 weeks 5 days ago

Published By: VISHNU

26 APR, 2024 | 08:26 PM
image

(நெவில் அன்தனி)

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார்.

17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார்.

பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார்.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர்.

ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும்.

https://www.virakesari.lk/article/182055

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர் உலக சாதனை

3 weeks 2 days ago

Published By: VISHNU   22 APR, 2024 | 08:13 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார்.

london_marathon_peres_jipchirchir_world_

அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். 

london_women_marathon.png

லண்டன் மரதனின் பெரும் பகுதியில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால், கடைசி கட்டத்தில் முன்னிலை அடைந்த ஜெப்ச்சேர்சேர், 7 வருடங்களுக்கு முன்னர் மேரி கெய்ட்டானியினால் நிலைநாட்டப்பட்ட 2:17.01 என்ற பெண்கள் மட்டும் சாதனையை முறிடியத்தார்.

லண்டன் மரதனில் எதியோப்பிய வீராங்கனை டிக்ஸ்ட் அசேஃபா (2:16.24) இரண்டாம் இடத்தையும் கென்ய வீராங்கனை ஜொய்ஸ்லின் ஜெப்கோஸ்கெய் (2:16.24) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டம்

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் கார் விபத்தில் பலியான முன்னாள் மரதன் உலக சாதனையாளர் கென்யாவின் கெல்வின் கிப்டுமுக்கு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது.

london_marathon_alexander_mutiso_munyao.

ஆண்களுக்கான லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 04 நிமிடங்கள், 15 செக்கன்களில் நிறைவுசெய்த மற்றொரு கென்யரான 27 வயதுடைய அலெக்ஸாண்டர் முட்டிசோ முனியாஓ வெற்றிபெற்றார்.

ஆனால் அவருக்கு வெற்றி இலகுவாக அமையவில்லை.

எதியோப்பியாவைச் செர்ந்த 41 வயதான கெனெனிசா பெக்கெலிடம் கடும் சவாலை முனியாஓ எதிர்கொண்டார்.

மூன்று தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை சுவீகத்தவரும் 5 தடவைகள் உலக சம்பியனுமான பெக்கெலி இதுவரை லண்டன் மரதனில் வெற்றிபெற்றதில்லை.

ஆனால், தன்னைவிட 14 வயது குறைந்த முனியாஓவுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

முனியாஓவைவிட 14 செக்கன்கள் வித்தியாசத்திலேயே பெக்கெல் (2:04.15) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அப் போட்டியில் பெரிய பிரித்தானியாவைச் செர்ந்த எமில் கெயாரெஸ் (2:06.46) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/181716

குகேஷ்: சதுரங்கத்தை பொழுதுபோக்காகத் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் தமிழ்நாட்டின் இளம் வீரர்

3 weeks 2 days ago
குகேஷ்

பட மூலாதாரம்,FIDE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 22 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘தி கேண்டிடேட்’ போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் குகேஷ். ஆதன்பிறகு, டொராண்டோவில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் போட்டியை ‘டிரா’ செய்தார்.

இருப்பினும், இறுதி முடிவுக்காக, அமெரிக்காவின் ஃபாபியானோ கருவானா மற்றும் ரஷ்யாவின் இயான் நெபோம்னியாச்சி ஆகியோர் விளையாடிய ஆட்டத்தின் முடிவுக்காக குகேஷ் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்தப் போட்டி ‘டிரா’வில் முடிவடைந்த பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்கான இளைய போட்டியாளராகத் தேர்வானார் குகேஷ்.

இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கியப் பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார்.

குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார்.

பள்ளி மாணவரான குகேஷ் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் என கூறிக் கொள்வதில் அவரது பெற்றோர்கள் மிகவும் பெருமை கொள்கின்றனர்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் முதல்முறையாகக் கிடைத்தது.
பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.

தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். அவரை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தினார்.

அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.

“வார இறுதி நாட்களில் சதுரங்கப் போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றுவிடுவார். அந்தப் போட்டிகளுக்காகவே காத்திருப்பார். அவர் பெறும் ஒவ்வொரு பரிசுக்கும் அவரை மேடையில் ஏற்றி, பள்ளி அவரை ஊக்கப்படுத்தியது,” என்கிறார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார்.
மகனுக்காக பணியை கைவிட்ட தந்தை

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது என்கிறார் அவரது தந்தை.

குகேஷ் உடன் போட்டிகளில் விளையாடுபவர்கள் அவரைவிட வயதில் மூத்தவர்களாகவும், அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் "குகேஷ் தனது ஆர்வம் மற்றும் திறமையின் காரணமாக போட்டிகளை எளிதாக வெல்ல முடிந்தது,” என்கிறார் ரஜினிகாந்த்.

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார்.

“எல்லா நாடுகளுக்கும் குகேஷை பத்திரமாக அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது குகேஷின் தந்தைதான். இதற்காகத் தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.

"நான் குகேஷுக்கு தேவையான உளரீதியான ஆதரவைத் தருகிறேன்,” என்கிறார் குகேஷின் தாய் பத்மகுமாரி. மருத்துவரான அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
ஹாட்ரிக் வெற்றி

கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார்.

குகேஷ் தற்போது இந்தியாவில் முதல் இடத்திலும் உலகத்தில் எட்டாவது இடத்திலும் உள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலோ தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷ்-இன் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.

“எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். இப்போதும்கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஷும் அவரது பயிற்சியாளரும்தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்கிறார் குகேஷின் தந்தை.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ்.
நிறைவேறிய கனவு

சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஷுக்கு இந்த கனவு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது.

அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். ஆனால் சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார்.

குகேஷின் இன்னொரு முகம்

போட்டிகளின்போது, பொதுவெளியில் காணப்படும் குகேஷுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என குகேஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது தந்தை.

“வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஷ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்,” என்று கூறும் அவரது தந்தை, சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஷ் யாரிடமும் பேசமாட்டார்,” என்றும் தெரிவித்தார்.

போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஷ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில்கூட யாரிடமும் பேசமாட்டேன். அதுகூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார்.

போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அதுகூட கிடைக்காது,” என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஷுன் தந்தை.

முதலில் உள்ளூர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஷ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார்.

 
சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.
குகேஷ் குவித்துள்ள பதக்கங்கள்

ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.

குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த்.

“போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும் போட்டியின்போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cndedlg48k8o

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

3 weeks 4 days ago

எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன்

spacer.png

எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன். 

ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம். 

தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது.

அதிநாயக பிம்பமான நாயகன்

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது. 

அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம். 

சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள்.

ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.   

சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன. 

இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.   

 

 
அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண்

இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார்.

ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர். 

கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும்.

மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும். 

விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன. 

கணியன் பூங்குன்றனின் குரல்

சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது. 

நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.   

விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு. 

 

https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான உலக சாதனையை முறியடித்தார் லீதுவேனியாவின் அலெக்னா

3 weeks 6 days ago
17 APR, 2024 | 05:42 PM
image

(நெவில் அன்தனி)

ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார்.

முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது.

இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.

ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார்.

முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.

பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும். 

எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது.

செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும்.

https://www.virakesari.lk/article/181320

"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"

3 weeks 6 days ago
"சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"
 
 
சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.
 
சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.
 
மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .
 
"தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "
 
என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை
 
‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’
 
என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,
 
‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’
 
என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.
 
பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை
 
'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',
 
அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.
 
பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்
 
"நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.
 
"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே".
[ஐங்குறுநூறு 124]
 
முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.
 
"தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி"
[கலித்தொகை 59]
 
இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,
 
‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”
 
என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.
 
பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.
 
ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,
 
"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று".
 
[குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்

1 month ago

Published By: VISHNU  14 APR, 2024 | 10:18 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த்  பெயரிடப்பட்டுள்ளார்.

1404_chaarith_asalanka_vice_captain.png

இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

1404_wanindu_hasarnga_captain.png

அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

1404_vijayakanth_viyaskanth...png

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் சில வீரர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்துடன் குழாத்தில் இணைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை முன்னோடி குழாம்

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார, லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசாய், துனித் வெல்லாலகே, விஜயகாந்த் வியாஸ்காந்த்.

https://www.virakesari.lk/article/181078

2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் - மத்தியஸ்தர் இரேஸ்மஸ்

1 month 1 week ago
'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ்
05 APR, 2024 | 06:20 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த இங்கிலாந்து உலக சம்பியனாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த இறுதிப் போட்டியில் மராயஸ் இரேஸ்மஸ், குமார் தர்மசேன ஆகியோர் கள மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர்.

3__marais_erasmus_and_kumar_dharmasena.p

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக்கு கடைசி ஒவரில் மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ட்ரென்ட் போல்ட் வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தில் சிக்ஸ் ஒன்றை விளாசினார் பென் ஸ்டோக்ஸ்.

அடுத்த பந்தை பென் ஸ்டோக்ஸ் விசுக்கி அடிக்க மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மார்ட்டின் கப்டில் பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால், ஸ்டோக்ஸின் துடுப்பில் பட்டு திசை திரும்பிய பந்து எல்லைக் கோட்டை கடந்து சென்றது.

அவ்வேளையில் ஸ்கொயார் லெக் மத்தியஸ்தராக இருந்த இரேஸ்மஸ், தலைமை மத்தியஸ்தராக இருந்த குமார் தர்மசேனவிடம் 6 ஓட்டங்கள் என சைகை செய்தார். இதனை அடுத்து எண்ணிக்கை பதிவாளர்களை நோக்கி 6 ஓட்டங்கள் என தர்மசேன கைகை செய்தார்.

பென் ஸ்டோக்ஸும் ஆதில் ராஷித்தும் 2 ஓட்டங்களை எடுத்ததாகவும் எறிபந்தினால் 4 ஓட்டங்கள் கிடைத்ததாகவும் அப்போது கருதப்பட்டது.

ஆனால், இங்கிலாந்துக்கு 5 ஓட்டங்களுக்கு பதிலாக 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது தவறு என இப்போது இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஏனெனில் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் 2ஆவது ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பதால் 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவரது 'காலம் கடந்த ஞானம்' தெரிவிக்கிறது.

மாட்டின் கப்டில் பந்தை எறிந்தபோது பென் ஸ்டோக்ஸ், ஆதில் ராஷித் ஆகிய இருவரும் 2ஆவது   ஓட்டத்தின்போது ஒருவரை ஒருவர் கடக்கவில்லை என்பது சலன அசைவுகளில் நிரூபணமாகியது.

இது தொடர்பாக டெலிகிராப் பத்திரிகைக்கு அண்மையில் இரேஸ்மஸ் தெரிவித்திருந்ததாவது:

''மறுநாள் காலை நான் காலை வுக்கு செல்வதற்காக எனது அறைக் கதவைத் திறந்த அதேநேரம் குமார் தர்மசேனவும் அவரது அறைக் கதவைத் திறந்தார். அப்போது அவர் 'நாங்கள் பாரிய தவறு இழைத்தோம் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?' என என்னிடம் கூறினார். அப்போதுதான் நான் அதை அறிந்தேன். ஆனால், மைதானத்தில் நாங்கள் வெறுமனே ஆறு என எங்களுக்குள்ளே கூறிக்கொண்டோம். ஆறு, ஆறு, அது ஆறு என கூறினோமே தவிர துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்தார்களா என்பதை கவனிக்கவில்லை. அவ்வளவுதான்' என்றார்.

இந்தத் தவறுக்காக மட்டும் அவர் வருந்தவில்லை. இன்னும் ஒரு தவறை 'தவறுதலாக' செய்திருந்தார் இரேஸ்மஸ்.

நியூஸிலாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரொஸ் டெய்லர் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார். பந்துவீச்சுப் பகுதி விளிம்பில் (wide of the crease) இருந்து மார்க் வூட் வீசிய பந்து ரொஸ் டெஸ்லரின் முழங்காலுக்கு மேல் பட்டது. களத்தடுப்பில் எல்.பி.டபிள்யூ.வுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் ரொஸ் டெய்லர் ஆட்டம் இழந்ததாக இரேஸ்மஸ் தீர்ப்பிட்டார். நியஸிலாந்து தனது மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவுசெய்திருந்ததால் ரொஸ் டெய்லர் மீளாய்வு செய்ய முடியாதவராக களம் விட்டகன்றார். 2019 உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வெற்றிகர மீளாய்வுக்கான வாய்ப்பே அனுமதிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக இரேஸ்மஸ் என்ன கூறினார் தெரியுமா?

'அது சற்று உயர்வாக இருந்தது. ஆனால் அவர்கள் மீளாய்வுக்கான வாய்ப்பை நிறைவு செய்திருந்தார்கள். ஏழு வாரங்கள் நீடித்த உலகக் கிண்ணப் போட்டியில் நான் இழைத்த ஒரே ஒரு தவறு அதுதான். அதனால் நான் பின்னர் மிகுந்த கவலை அடைந்தேன். ஏனெனில் அதனை நான் சரியாக தீர்மானித்திருந்தால் தவறு இழைக்காதவனாக உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருப்பேன். மேலும் எனது அந்தத் தீர்ப்பு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் சிறந்த வீரர்களில் அவரும் (ரொஸ் டெய்லர்) ஒருவர்' என இரேஸ்மஸ் குறிப்பிட்டார்.

இந்த மத்தியஸ்தர்தான் (இரேஸ்மஸ்) இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு 'டைம்ட் அவுட்' தீர்ப்பு வழங்கியவர் ஆவார்.

அவரேதான் இப்போது 'டைம்ட் அவுட்' ஆன நிலையில் 2019 உலகக் கிண்ண தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோன்று ஏஞ்சலோ மெத்யூஸின் டைம்ட் அவுட் ஆட்டம் இழப்பு தொடர்பாக இரேஸ்மஸ் காலம் கடந்து தவறை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

ஆனால், குமார் தர்மசேன அப்போது என்ன கூறியிருந்தார் தெரியுமா?

உலகக் கிண்ணப் போட்டி முடிந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் 'எனது தீர்மானம் குறித்து நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை'  என  குறிப்பிட்டிருந்தார்.

'போட்டிக்கான சகல மத்தியஸ்தர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 6 ஓட்டங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது' என அவர் கூறியிருந்தார்.

2__kumar_dharmasena.png

https://www.virakesari.lk/article/180545

2ஆவது ரி20 ஹெட்-ட்ரிக் பதிவுசெய்து வரலாறு படைத்தார் பரிஹா; ராமநாயக்கவின் ஆலோசனைகளே சாதனைக்கு காரணமாம்

1 month 1 week ago

Published By: VISHNU   02 APR, 2024 | 10:06 PM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிர்பூர், ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை பரிஹா ட்ரிஸ்னா, ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார்.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். அதன் மூலம் மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்-ட்ரிக்குகளைப் பதிவுசெய்த முதலாவது வேகப்பந்துவீச்ச வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பரிஹா படைத்தார்.

0204_fariha_trisna_2nd_t20_hat-trick.png

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு எதிராக சில்ஹெட்டில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பரிஹா ட்ரிஸ்னா முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்திருந்தார்.

அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் கடைசி 3 பந்துகளிலேயே ஹெட்-ட்ரிக்கை பரிஹா ட்ரிஸ்னா பதிவுசெய்தார்.

எலிஸ் பெரி, சொஃபி மொலினொக்ஸ், பெத் மூனி ஆகியோரையே கடைசி 3 பந்துகளில் பரிஹா ஆட்டம் இழக்கச் செய்தார்.

உபாதை காரணமாக சுமார் 6 மாதங்கள் சிகிச்சையுடன் ஒய்வு பெற்றுவந்த பரிஹா, தனது மீள்வருகையில் ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து அரங்கில் இருந்த சிறுதொகை இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

கடந்த அக்டோபர் மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக  பரிஹா  சுமார் 6 மாதங்களாக போட்டிகளில் பங்குபற்றாதிருந்தார்.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சம்பக்க ராமநாயக்க வழங்கிய   ஆலோசனைகளின் பலனாக மீண்டு வந்து திறமையை சாதிக்கக்கூடியதாக இருந்ததென பரிஹா குறிப்பிட்டார்.

'உபாதையிலிருந்து மீள வேண்டும் என்பதே எனது முதலாவது திட்டமாக இருந்தது. சம்பக்க ராமநாயக்கவின் ஆலோசனையுடன் புனர்வாழ்வு செயற்பாடுகள் சிலவற்றை பின்பற்றி வந்தேன். அவரால் தான் நான் இவ்வளவு விரைவாக குணமடைந்து மீண்டும் விளையாடுகிறேன்' என்றார்.

எனினும் இன்றைய போட்டியில் பங்களாதேஷை 58 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.  

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைக் குவித்தது.

ஜோஜியா வெயாஹம் 57 ஓட்டங்களையும் க்றேஸ் ஹெரிஸ் 47 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 29 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஜோஜியாவும் க்றேஸும் 2ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்னர்.

பந்துவீச்சில் பரிஹா ட்ரிஸ்னா 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பஹிமா காத்துன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தடுப்பாட்டத்தில் டிலாரா அக்தர் (27), ஷொர்ணா அக்தர் (21) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி மொலினொக்ஸ் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷ்லி காட்னர் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/180280

கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை

1 month 2 weeks ago
59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை

Published By: DIGITAL DESK 7   01 APR, 2024 | 04:16 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

5.jpg

தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

சாவக்கச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021ல் இராணுவத்தில் இணைந்தார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாயாக பணியாற்றுகிறார்.

1_a_puvitharan_pole_vault_national__reco

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

2_4_x_200_mens_relay_national_record.jpg

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம், 29.93 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் இந்தப் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர்.

புதிய தேசிய சாதனை படைத்த 4 x 200 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் பொம்படியர் ஜீ.டி.கே.கே. பபாசர நிக்கு, பொம்படியர் பீ.எம.;பீ.எல். கொடிகார, லான்ஸ் பொம்படியர் ஏ.எஸ்.எம். சபான் மற்றும் பணி நிலை சார்ஜன்ட் எஸ்.  அருண  தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர்.

இதனைவிட ஆண்களுக்கான 100 மீ., 200 மீ., 400  மீ.,  3000 மீ. தடைதாண்டல், 4 x 400 மீ. தொடர் ஓட்டம், பெண்களுக்கான 400 மீ., 10000 மீ., 4 x 100 மீ. தொடர் ஓட்டம், 4 x 800 மீ. தொடர் ஓட்டம், 4 x 1500 மீ. தொடர் ஓட்டம், பத்து அம்ச நிகழ்ச்சி ஆகிய போட்டிகளில் இராணுவ வீர வீராங்கனைகள் மொத்தமாக 11 புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டினர்.

8_a.jpg

4_best_athlete_women_nadeesha_ramanayakaபோட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீரராக இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜன் எஸ். அருண தர்ஷனவும் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதிஷா ராமநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு விருதுகளைப் பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை சூடியதுடன் இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஒட்டுமொத்த சம்பியனானதுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

9.jpg

https://www.virakesari.lk/article/180153

Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

1 month 4 weeks ago
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

 

யாழில் ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயது மூதாட்டி!

1 month 4 weeks ago
news-6.jpg

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.

போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

news-02-9.jpg

https://thinakkural.lk/article/295984

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்

2 months ago
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
12 MAR, 2024 | 11:47 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன.

இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. 

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ghgj.gif

சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால்,  9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

இப்போட்டிக்கு முன்னதாக நடை‍பெற்ற  அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

fhgd.gif

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

https://www.virakesari.lk/article/178508

700 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை!

2 months ago
james-anderson.jpg

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை குறித்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் 173 ரங்களை விட்டுக் கொடுத்த ஷோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் அண்டசன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 700ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஜேம்ஸ் எண்டர்சனின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295064

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் எனும் சாதனைக்கும் உரியவராகிறார்.

james.jpg

james1.jpg

ஜேம்ஸ் அண்டர்சனின் பந்துவீச்சு பெறுதியின் அட்டவணை.

அஸ்வினின் 100வது டெஸ்ட்

2 months 1 week ago
அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்?
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

“ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.”

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதனையான செயல்தான். பேட்டராக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் 100 போட்டிகளிலும் திறமையில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினால்தான் தன் இருப்பை அணியில் வெளிப்படுத்த முடியும்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது பேட் செய்த எத்தனையோ வீரர்கள் 50 டெஸ்ட் போட்டிகளைக்கூட கடக்க முடியாமல் ஓய்வை அறிவித்துச் சென்ற கதைகள் உண்டு. ஆனால், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டிப் பிடிக்க, முதல் போட்டியில் அறிமுகமாகும்போது இருந்த உற்சாகத்தை 100வது போட்டிவரை கடத்தி வந்தால்தான் இத்தகைய மைல்கல்லை அடைய முடியும்.

 

கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்டர் கோலின் கோவ்ட்ரே இந்த மைல்கல்லை முதலில் எட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று உலகளவில் பல வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துவிட்டார்.

தரம்சாலாவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவில் இதுவரை 313 டெஸ்ட் வீரர்கள் வந்துள்ள நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதுவரை அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 93.21 , எகானமி ரேட் 2.79 , ஸ்ட்ரைக் ரேட் 51.3 என அஸ்வின் வைத்துள்ளார்.

 
உள்நாட்டில் சாதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 விக்கெட்டுகளில் 358 விக்கெட்டுகள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. இந்திய அணியைச் சேர்ந்த இதுவரை எந்த பந்துவீச்சாளரும் எட்ட முடியாத உயரத்தை அஸ்வின் எட்டியுள்ளார்.

அதாவது ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்நாட்டில்(350) விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங்(265), கபில் தேவ்(219) விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அஸ்வின் 350 விக்கெட்டுகளையும் கடந்து பயணித்து வருகிறார்.

அஸ்வினின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டால் சேனா நாடுகளுக்கு எதிராக சுமாராகவும், ஆசிய நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாகவும் வைத்துள்ளார்.

சேனா(SENA) நாடுகளில் சறுக்கல்

வேகப்பந்துவீச்ச மைதானங்கள் அதிகம் இருக்கும் சேனா நாடுகளில் சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எளிதான காரியம் அல்ல. அங்கு அஸ்வின் தனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினாலும், சேனா நாடு அணிகளுக்கு எதிராக பெரிதாக விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சேனா நாடுகளின் மைதானங்களில் நடந்த போட்டிகளிலும் அஸ்வினின் 71 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, சராசரி 39.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 83.7 ஆகவும் வைத்துள்ளார்.

அதுவே, கரீபியன் நாடுகளின் மைதானங்களில் அஸ்வின் சராசரி 19.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.4 ஆகவும் இருக்கிறது. இலங்கையில் அஸ்வினின் சராசரி 21.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.1 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி 21.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 46.6 ஆகவும் இருக்கிறது.

வேகப்பந்துவீச்சு மைதானங்களாகப் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 
இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது உண்மைதான். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சௌத்பா எனப்படும் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 254(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 டெஸ்ட் விக்கெட்டுகளில் 254 விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 49.7% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. ஆனால், அஸ்வின் இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் உலகில் திகழ்ந்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லேயான் இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை இரையாக்கியுள்ளார். அடுத்தாற்போல் டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டார் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என இடதுகை பேட்டர்கள் பெயர் பட்டியல் நீள்கிறது. சர்வதேச அளவிலான இடதுகை பேட்டர்கள் 15 பேரில் ஆன்டர்சன், நேதன் லேயான், மோர்க்கல் ஆகியோர் மட்டுமே டெய்லெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் பந்துவீச வருகிறார் என்றாலே இடதுகை பேட்டர்களுக்கு தொடை நடுங்கும் என்று கூறலாம்.

 
ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பு
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 பந்துவீச்சாளர்கள் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். ஒரு பந்துவீச்சாளரின் ஸ்ட்ரைக் ரேட்தான், அவர் எத்தகைய திறமையான பந்துவீச்சாளர் என்பதை அறிய முடியும். பொதுவாக ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்களைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வைத்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களில் சிறப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். முதல் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். இது முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் ஸ்ட்ரைக் ரேட்டைவிட அதிகம்.

வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்ன் 54.7 ஸ்ட்ரைக் ரேட்டையும், வேகப்பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின் 45.5 ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக வைத்துள்ளனர்.

அஸ்வின் இவர்களைவிட சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 62.1 ஆக இருக்கிறது. அதாவது 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துகிறார்.

 
உள்நாட்டில் தவிர்க்க முடியாத வீரர்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூறு டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் விளையாடுகிறார் என்றால், அவரின் ‘டிராக் ரெக்கார்டு’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு டெஸ்ட் போட்டி அல்லது வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் என்றாலே தானாகவே ‘ப்ளேயிங் லெவனில்’ இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத வீரராக அமைய வேண்டும்.

அந்த வகையில் அஸ்வின் இந்திய அணிக்குள் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் போட்டி என்றாலே தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அஸ்வின் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டும் அல்ல, எப்போதுமே இந்திய அணியின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.

அதற்கு சேனா(SENA) நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளும், சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் ஆசிய நாடுகளுக்கு எதிராக அஸ்வினின் முத்தாய்ப்பான விக்கெட்டுகளுமே சாட்சி.

ஆனால், இந்தியாவுக்கு வரும் சேனா நாடு அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினால், சேனா நாடுகளில் நடந்த போட்டிகளில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் அவர் திறமையின் மீது தொக்கி நிற்கும் கேள்வி.

நுட்பமான பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களான குலாம் அகமது முதல் எர்ரபள்ளி பிரசன்னா வரை, ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராகவன் முதல் ஹர்பஜன் சிங் வரை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டில் நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், டாஸ் செய்வது, நக்குல் பால் என ஒரு ஒவரில் 6 பந்துகளையும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வீசக்கூடிய திறமை படைத்தவர், அஸ்வின் என்று கூற முடியும்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனித்து நிற்கக் காரணம், அவரின் பந்துவீச்சில் செய்யும் பரிசோதனை முயற்சி, தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சைச் சிறப்பாக மாற்றச் செய்யும் முயற்சி, போராட்ட குணம், ஒவ்வொரு பந்திலும் விக்கெட் வீழ்த்த வேண்டும், பேட்டரை ஷாட் அடிக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நுட்பத்துடன் பந்துவீசும் உத்வேகம்தான் காரணம்.

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டும் அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சேனா நாடுகளின் ஆடுகளங்களில் பெரிதாக அஸ்வினால் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அஸ்வினுக்கு குருநாதராகக் கருதப்படும் அனில் கும்ப்ளே சேனா நாடுகளிலும் தனது பந்துவீச்சால் கோலோச்சியுள்ளார் என்பது அவரின் பந்துவீச்சு தரத்துக்குச் சான்று.

அஸ்வின் பந்துவீச்சு என்பது கடினமான, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மெல்போர்ன், வான்டரர்ஸ், சிட்னி, நியூசிலாந்து மைதானங்களுக்கு சரிவராது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மைதானங்களில்கூட நேதன் லேயான், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே போன்ற பந்துவீச்சாளர்கள் பந்தை பம்பரம்போல் சுழலவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அஸ்வின் திறமையான பந்துவீச்சாளர்தான், ஆனால் சிறந்த பந்துவீச்சாளரா என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கும் கேள்வி.

"தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தமிழர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது போன்றவை என்றென்றும் பெருமைக்குரியது. ஆனால், இவை அனைத்தும் சிறந்த பந்துவீச்சாளராக அவரை உருவகப்படுத்திவிடுமா?" என்று விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளரான ஆர். முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
பெருமைக்குரிய விஷயம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அவர் கூறுகையில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. சிவராமகிருஷ்ணன், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் எனப் பல ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடினாலும் யாரும் 100 டெஸ்ட் விளையாடியதில்லை. இதை அஸ்வின் செய்திருப்பது மகத்தான சாதனை.

இந்திய ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் இல்லாமல் இந்திய அணி வெல்வது என்பதை கடந்த காலங்களில் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பந்தை டர்ன் செய்வதில் சிறந்த பந்துவீச்சாளர் என்று அஸ்வினை குறிப்பிட முடியாது," என்கிறார் அவர்.

முரளிதரன், நேதன் லேயன் போன்று பந்தை டர்ன் செய்யும் வீரர் அஸ்வின் என்று கூற முடியாது எனும் ஆர். முத்துக்குமார் "அரவுண்ட் தி விக்கெட்டில் அஸ்வின் பந்துவீசி வலது கை பேட்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறந்தவர்தான். ஆனால், அஸ்வினிடம் சிறந்த விஷயம் என்னவென்றால், கற்றுக்கொண்டே இருப்பார், புதிது புதிதாக நுட்பங்களைப் பயன்படுத்துவார். நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வினால், முறையான ஆஃப் ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை," என்றார்.

மேலும் அவர், "ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் அந்த ஆஃப் ஸ்பின்னை எந்த அளவுக்கு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும் என்பதில் இருக்கிறது. அனில் கும்ப்ளே மாதிரி துல்லியம், லைன் லென்த்தில் பந்தைச் சிதறவிடாமல் அஸ்வின் பந்துவீசுவது சிறப்பு. இதனால், அஸ்வின் பந்துவீச்சை பேட்டர் கவனமாகக் கையாள வேண்டும், சிறிது கவனக் குறைவாக விளையாடினால்கூட பேட்டர் விக்கெட்டை இழக்க நேரிடும். இதுதான் அஸ்வினின் சிறப்பு,” எனத் தெரிவித்தார்.

பந்தை டர்ன் செய்யாமலே சாதிக்கும் வீரராக அஸ்வின் இருப்பதுதான் அவருக்குரிய தனிச்சிறப்பு என்று முத்துக்குமார் தெரிவித்தார். அவர் அதுகுறித்துக் கூறுகையில், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிம்மசொப்பனம்தான் என்பதை மறுக்கவில்லை. இடதுகை பேட்டர்களை ஆட்டமிழக்க வைக்க லேசான டர்ன் பந்தில் இருந்தால் போதும், அதைத்தான் அஸ்வின் செய்கிறார். மற்ற வகையில் நல்ல டர்ன் செய்யக்கூடிய பந்துகளை வீசவில்லை,” எனத் தெரிவித்தார்.

 
சேனா நாடுகளில் சோதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ஆடுகளங்களின் உதவியுடன்தான் 500 விக்கெட்டுகளை அஸ்வினால் தொட முடிந்தது என்று முத்துக்குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஆடுகளின் தன்மையால்தான் அஸ்வின் 350 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அஸ்வின் சாதனைக்கு இந்திய ஆடுகளங்கள் உதவியுள்ளன. ஆனால், சேனா நாடுகளில் சென்று அஸ்வினால் பெரிதாக விக்கெட்டுகளை ஏன் வீழ்த்தமுடியவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

கும்ப்ளே முதலில் இந்திய ஆடுகளங்களில் மட்டும்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மெல்போர்னில் முதல் டெஸ்ட் முதல் நாளிலேயே கும்ப்ளே 5 விக்கெட்டை வீழ்த்தினார். கும்ப்ளே பந்துவீச்சைப் பார்த்து ஷேன் வார்னே பாராட்டினார்.

ஆனால், "அஸ்வின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகாமல் இருப்பதால்தான் அவரால் சேனா நாடுகளின் அணிகளுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை. அஸ்வின் தன்னுடைய ஆஃப் ஸ்பின்னை வளர்த்தெடுக்காமல், ஓவருக்கு 6 பந்துகளையும் பலவிதமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தினார். அஸ்வின் நல்ல வீரர். ஆனால், சிறந்த வீரர் என்று ஏற்க முடியாது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/crgv609x1l3o

யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.

2 months 1 week ago
DSC_2222-750x375.jpg ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்தார் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை

2 months 1 week ago

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2 ஆவது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

Capture-9.jpg

இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.

இதற்கு முன்னதாக 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 63 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

https://thinakkural.lk/article/294615

Checked
Thu, 05/16/2024 - 05:51
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed