விளையாட்டுத் திடல்

49ஆவது தேசிய விளையாட்டு விழா - மரதன் ஓட்டம்: மத்திய மாகாணத்தின் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்

1 month 3 weeks ago

Published By: VISHNU

20 JUL, 2025 | 09:24 PM

image

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

shanmugeswaran.jpg

மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார்.

இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.

காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள்ளிப் பதக்கத்தையும் கிழக்கு மாகாண வீரர் ரி. டபிள்யூ. ரத்னபால (2:30:46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்தது.

மதுவன்தி ஹேரத் (2:53:42) தங்கப் பதக்கத்தையும் எஸ். ஹேரத் (3:00:21) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாண வீராங்கனை நிமேஷா நிதர்ஷனி (3:02.32) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் போட்டியிட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலு கிருசாந்தினி (3:14:15) ஏழாம் இடத்தைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/220497

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்

2 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUL, 2025 | 12:46 PM

image

(நெவில் அன்தனி)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார்.

இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும்.

சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான   ஒற்றையர்    இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.

சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார்.

ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார்.

லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார்.

இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

sinner_hugs_alcaras.png

https://www.virakesari.lk/article/219949

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சூடினார் இகா ஸிவியாடெக்

2 months ago

13 JUL, 2025 | 02:42 PM

image

(நெவில் அன்தனி)

விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார்.

57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு  சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்டு நேர் செட் வெற்றி இதுவாகும்.

இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்கின் வியூகங்கள் நிறைந்த அதிசிறந்த ஆற்றல்களால் திக்குமுக்காடிப்போன அனிசிமோவா போட்டி முடிவில் தோல்வியைத் தாங்க முடியாதவராக தேம்பித் தேம்பி அழுதார்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நான்கு தடவைகளும் (2020, 2022, 2023, 2024), ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஒரு தடவையும் (2022) சம்பியனான இகா ஸ்வியாடெக், இந்த வருடம் முதல் தடவையாக விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியனானார்.

மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் (Grand Slam Tennis) அவர் வென்றெடுத்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

இதன்மூலம் களிமண் தரை, கடின தரை, புற்தரை ஆகிய மூன்று வகையான தரைகளிலும் சம்பியனானவர்கள் என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் இகா ஸ்வியாடெக் இணைந்துகொண்டார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் வெண்மையின் அடையாளமாக நடத்தப்படுவதால் சகல போட்டியாளர்களும் வெள்ளை ஆடைகளை அணிந்தே விளையாடுவர். அத்துடன் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமான்கள் எனவும் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமாட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது. வீர, வீராங்கனைகளின் பைகள் கூட வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.

Iga-Swiatek-dominates-USAs-Amanda-Anisim

iga-swiatek_.jpg

https://www.virakesari.lk/article/219868

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 1 week ago

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.

மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார்

பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

2 months 1 week ago

2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது.

எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும்.

அணிக்காக உழைத்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கள்!

514722634_122320356506003509_38835880497

https://www.facebook.com/61550105270847/posts/122320356524003509/?rdid=uIRiwNPYoFHeoH2U#

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

2 months 2 weeks ago

25-6860cd8f18194.png?resize=600%2C375&ss

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய  கிரிக்கெட் அரங்கில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437699

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

2 months 2 weeks ago

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

27 Jun 2025, 5:02 PM

icc set new rules in cricket

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய நிபந்தனைகள் விவரம்!

ஓவர் பிரேக் 60 வினாடிகள்!

ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு அணி ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும்.

ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும்.

எச்சில் தடவினாலும்…

பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரீஸை தொடாமல் ரன் ஓடினால்…

வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும்.

DRS முறையீடு!

Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.

No Ball கேட்ச்!

No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும்.

ஒரு ODI இன்னிங்ஸில் புதிய பந்துகள்…

ஒரு ODI இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்களுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஃபீல்டிங் அணி மீதமுள்ள ஓவர்களுக்கு பந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்.

பவுண்டரி கேட்சுகள்

பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது.

டி20 பவர்பிளே மாற்றம்!

பிரத்யேகமாக டி20 ஆட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2025-06-27-at-16.41.36_88

வேண்டுமென்றே விக்கெட் கேட்டால்…

சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.

எல்பிடபிள்யூ ஆ? அல்லது ரன் அவுட் ஆ?

ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.

மாற்று வீரருக்கு பேட்டிங், பவுலிங் செய்யலாம்!

அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.

https://minnambalam.com/icc-set-new-rules-in-cricket/#google_vignette

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026

2 months 3 weeks ago

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026, ஆரம்பப் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து

19 JUN, 2025 | 05:57 AM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன.

இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின.

பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும்.

குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும்.

10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும்.

லீக் போட்டிகள் யாவும் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவடையும்.

அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதியும் நடைபெறும்.

லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள் (குழு 2)

ஜூன் 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்)

ஜூன் 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்)

ஜூன் 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி)

ஜுன் 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி)

ஜூன் 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்)

icc_women_s_t20_world_cup_schedule.jpg

https://www.virakesari.lk/article/217868

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 02:49 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது.

இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

angelo_mathews.png

சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

sl_vs_bang..png

இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார்.

அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ.

https://www.virakesari.lk/article/217564

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்

2 months 4 weeks ago

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 17 ஜூன் 2025, 03:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது.

ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது.

ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்?

ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம்

தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது.

இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்?

மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது.

ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன?

கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.

கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது

கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்?

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர்.

அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது.

அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது.

பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன?

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.

ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது.

இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது.

பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும்.

ஐசிசி விதிகளில் மாற்றம், இந்தியா, பிசிசிஐ, கேட்சி விதிகளில் மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி

மாற்றம் கொண்டுவர என்ன காரணம்?

ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார்.

நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன?

பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும்

ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 06:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது.

இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன.

defending_champions_australia_2021_w_wc.

இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும்.

மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.

இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள்

செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு

அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு

அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி

அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு

அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு

அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு

அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு

முழு அட்டவணை (Full Schedule)

icc_women_s_world_cup_schedule_1.jpg

icc_women_s_world_cup_schedule_2.jpg

https://www.virakesari.lk/article/217658

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் - 18இன் கீழ் கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீராங்கனைகள் ஆதிக்கம்: கலேல்ல கலைமகள் வித்தியாயலயத்திற்கு முதலாவது பதக்கம்

3 months ago

Published By: VISHNU

13 JUN, 2025 | 12:04 AM

image

(நெவில் அன்தனி)

தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12)  18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

jeyaruban_rubika_of_vaddukoddai_jaffna_c

அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.

அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.

கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார்.

இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார்.

பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம்

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஐந்து புதிய சாதனைகள்

போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார்.

https://www.virakesari.lk/article/217305

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி

3 months ago

10 JUN, 2025 | 06:04 PM

image

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது.

வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார்.

இப்போட்டியின் இறுதி அங்கமாக நாளை காலை 8.30 மணிக்கு இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றில், சென். பற்றிக்ஸ் கல்லூரியும் சென். ஜோன்ஸ் கல்லூரியும், மற்றைய போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன எனவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பகல் 1 மணியளவில் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் மாலை 3 மணிக்கு இறுதிப் போட்டியும் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM_

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM.

WhatsApp_Image_2025-06-10_at_2.32.21_PM_

WhatsApp_Image_2025-06-10_at_2.32.20_PM.

https://www.virakesari.lk/article/217101

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மகேந்திர சிங் தோனி - ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

3 months ago

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி

51 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

"அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன?

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019)

ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும்.

இந்த 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும்.

தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்,

எம்.எஸ். தோனி - இந்தியா

கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா

ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா

மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா

டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து

வீராங்கனைகள்:

சனா மிர்- பாகிஸ்தான்

சாரா டெய்லர்- இங்கிலாந்து.

இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, "ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள்

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம், தோனி, கிரிக்கெட், பிசிசிஐ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ்

இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது.

2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர்.

2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி.

இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, "தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு." என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c249j903qjjo

சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்ற சாய் சுதர்சன் தனித்து நிற்பது எப்படி?

3 months 1 week ago

சாய் சுதர்சன், தமிழ்நாடு, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எஸ்.தினேஷ் குமார்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது.

இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார்.

எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் பிற கிரிக்கெட் உச்ச நட்சத்திரங்கள் போல பி.ஆர். ஏஜென்சி வைத்து தன் புகழை பரப்புவதில் சாய் சுதர்சன் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 2 வருடங்களில் எவ்வளவோ சாதனைகள் செய்தும் கூட அவை பேசுபொருளாக மாறாததற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், கவனச்சிதறல் இல்லாமல் தன் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு இந்த மீடியா வெளிச்சமின்மை சுதர்சனுக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.

சிறந்த பேட்டருக்கான 5 அம்சங்களும் ஒருங்கே பெற்றர் சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒரு பேட்டர் உண்மையான குணம் அவருடைய பேட்டிங்கில் வெளிப்பட்டுவிடும். ஒரு பேட்டர் தன் முழு திறமையையும் வெளிக்கொணர விரும்பினால், தன் இயல்புக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பேட்டிங்கின் அடிப்படை லட்சணம், கட்டுக்கோப்பாக இருப்பது. வாழ்க்கையை மனம்போன போக்கில் வாழும் ஒருவர் நல்ல பேட்டராக இருக்க முடியாது" என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் சைமன் ஹியூஸ்.

சாய் சுதர்சன் தன் இயல்புக்கு நேர்மையாக இருப்பதால்தான் அவருடைய ஆட்டத்தை போலவே அவருடைய பேச்சிலும் அமைதியும் வசீகரமும் ஒருசேர இழையோடுகின்றன.

ஒரு சிறந்த பேட்டருக்கான அடிப்படை என ஐந்து லட்சணங்களை கிரிக்கெட் எழுத்தாளர் மார்க் நிக்கோலஸ் வரையறுத்துள்ளார். உயர் இடது முன்கை (high left elbow), அசைவற்ற தலை (A still Head), நேரான பேட் (Gun-barrel straight bat), ஷாட் விளையாடும் போது அலைபாயாத உடல் (Body Shape), ஆதிக்கம் செலுத்தும் உடலின் இடது பாகம் (dominant left side of the body).

இவை அனைத்தும் இயல்பாகவே சாய் சுதர்சனுக்கு வாய்த்துள்ளன. கூடவே ரேஞ்ச் ஹிட்டிங் (Range Hitting) பயிற்சியின் மூலம், T20-க்கு அவசியமான வலுவையும் கூட்டிக் கொண்டார். சுதர்சனின் பேட்டிங் டெக்னிக்கை கவாஸ்கருடன் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒப்பிடுகிறார். ஆனால், கவாஸ்கர் போல சுதர்சனை ஒரு முழுமையான கிளாசிக்கல் பேட்டர் என்று சொல்லிவிட முடியாது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி அவதானிப்பது போல மைக் ஹஸ்ஸி பாணியிலான ஒரு வீரர் இவர். கட்டுக்கோப்பான டெக்னிக், கடுமையான உழைப்பு, நேர்மறையான சிந்தனை. இதுதான் சுதர்சனின் தாரக மந்திரம். அவருடைய பேட்டை உயர்த்திப் பிடிக்கும் பாணி, சில சமயம் லாராவை நினைவூட்டுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன்

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ல் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் பங்கேற்றிருந்தார்.

இந்தியாவில் திறமையான பேட்டர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், உச்சபட்ச கிரிக்கெட்டில் எல்லாரும் சாதிப்பதில்லை. பிரித்வி ஷா தொடங்கி ரஜத் படிதார் வரை நிறைய உதாரணங்களை சொல்லலாம். சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்?

ஒரு நல்ல வீரருக்கு அழகு, கிடைத்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்வது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த முதல் 10 பேட்டர்களில் பெரும்பான்மையினர் தங்களுடைய முதல் 3 ஆட்டங்களுக்குள் சதமோ அரைசதமோ அடித்தவர்கள். சாய் சுதர்சன் தனது அறிமுக ஒருநாள் ஆட்டத்தில் அரை சதமும் அறிமுக ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சதமும் அடித்தவர்.

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலையான இடமின்றி இருந்த அவர், 2023 சீசனில் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். உள்ளூர் லிஸ்ட் ஏ, டி20 அறிமுக ஆட்டங்களில் கூட சுதர்சன் சோடை போகவில்லை என்பது அவருடைய மனத்திட்பத்துக்கு (Temperement) சான்று.

சாய் சுதர்சன் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அம்சம், அவருடைய ஃபுட் ஒர்க். கிரிக்கெட்டில் ஒருவர் சாதிப்பதற்கு நல்ல லென்த்தில் (good length) வீசப்படும் பந்துகளை விளையாடுவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வகையான பந்துகளே அதிகம் வீசப்படுகின்றன. இந்த ஐபிஎல் சீசனிலேயே ஷமி, பும்ரா போன்றவர்களின் அத்தகைய பந்துகளை சுதர்சன் அநாயசமாக எதிர்கொண்டதை பார்த்தோம்.

இதை எப்படி சுதர்சன் சாதிக்கிறார்?

ஒன்று, இறங்கிவந்து விளையாடி பவுலரின் திட்டத்தை கெடுத்து, தனக்கு வேண்டிய இடங்களில் பந்துவீச மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லையென்றால், தனக்கு இருக்கும் அற்புதமான டைமிங்கை (Timing) பயன்படுத்தி, பந்தின் பாதையை கணித்து நன்றாக உள்வாங்கி கடைசி நொடியில் ஆளில்லாத பகுதிக்கு விரட்டுகிறார்.

சாய் சுதர்சன்

சாய் சுதர்சனின் பலவீனங்கள்

ஒரு சிறந்த பேட்டர் சரியாக கால்களை நகர்த்தினால் மட்டும் போதாது; தலையையும் சரியாக நகர்த்த வேண்டும் என்கிறார் இங்கிலாந்து பேட்டிங் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன். குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள, இந்த தலை நகர்வு மிகவும் அவசியம். 6 அடி உயரம் என்பதால் கால்களுடன் தலையையும் முன்னகர்த்தி விளையாடும் போது சுதர்சனால் எந்தவொரு சுழற்பந்து வீச்சாளருக்கும் நெருக்கடி கொடுக்க முடிகிறது. தலை முன்செல்ல அதனைத் தொடர்ந்து காந்தம் போல உடலும் கால்களும் பின்னே செல்கின்றன. கோலி தன்னுடைய பேட்டிங்கில் உச்சத்தில் இருந்தபோது இதே பாணியில் தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டார்.

சாய் சுதர்சன் ஆட்டத்தில் பலவீனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது கூட சில சமயங்களில் பவுன்சர் பந்துகளுக்கு அவர் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம், பவுன்சர் வீசினால் அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று பந்துவீச்சாளர்கள் நம்பும் நிலை இல்லை.

இந்திய இடக்கை பேட்டர்கள் பவுன்சர் பந்துகளுக்கு தடுமாறுவது புதிதல்ல. கங்குலி, யுவராஜ், ரெய்னா என ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. ஆனால், இவர்கள் அளவுக்கு பவுன்சரை எதிர்கொள்வதில் சுதர்சன் பலவீனமானவர் அல்ல. முடிந்தவரை மைதானத்தின் கோணங்களை பயன்படுத்தி அதன் வீரியத்தை மட்டுப்படுத்தி விடுகிறார். கோலிக்கும் ஆரம்ப காலத்தில் இந்த பிரச்னை இருந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சாய் சுதர்சனின் டெக்னிக் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் செல்லுபடியாகாது என தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கூறிருந்தார். இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முயற்சியாகத்தான் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று சுதர்சன் விளையாடினார். இந்த ஐபிஎல் சீசனில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது, அந்த குறைபாடு பெரிதாக வெளிப்படவில்லை. கடந்த காலங்களில் இந்த பலவீனத்தை வைத்துக் கொண்டே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில் அவர் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, தாறுமாறான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவர் ரன் குவித்துள்ளார். இந்தியா ஏ அணி சார்பில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட் அனுபவம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு கைகொடுக்கும் என நம்பலாம். பவுன்சர் விளையாடுவதில் குறைபாடுள்ள பிராட்மேன்தான் 99.94 என்ற சராசரியில் ரன் குவித்தார் என்பதை எப்படி புரிந்துகொள்வது?

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆடினார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் அவ்வளவு எளிதாக தனது பேட்டிங்கில் திருப்தியடைந்து விடமாட்டார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு, "டி20 ஆட்டங்களில் தன்னுடைய ஆட்டம் இன்னும் முழுமைபெறவில்லை; இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது" என கூறியுள்ளார். உலகமே பார்த்த ஐபிஎல் தொடரில் 759 குவித்த ஒருவர் இப்படி பேசினார் என்பதை நம்ப முடிகிறதா?

சுதர்சன் மட்டுமல்ல எந்தவொரு உச்சபட்ச பேட்டரும் தங்களுடைய ஆட்டத்தில் நிறைவு பெற்றுவிட மாட்டார்கள். சச்சின், சங்ககாரா போன்றோர் கடைசி ஆட்டம் வரை தங்கள் பேட்டிங் நுட்பங்களை மேம்படுத்திக் கொள்ளவே முயன்றார்கள்.

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய் சுதர்சனிடம் உள்ள பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சம், விமர்சனங்களை அவர் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பாங்கு. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள மாட்டார் என்றார்கள். கவுண்டி போட்டியில் கலந்துகொண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டின் அடிப்படைகளை மெருகேற்றிக்கொண்டார். டி20-க்கு ஏற்ற வீரர் இல்லை என்றார்கள். ஆஸ்திரேலியாவின் பிரபல பவர் ஹிட்டிங் பயிற்சியாளர் ஷனான் யங் (Shanon young) பயிற்சியின் கீழ் தன் ஆட்டத்தின் வேகத்தை கூட்டிக்கொண்டார்.

இப்போது அவர் டெஸ்டில் தாக்குப்பிடிப்பாரா என விமர்சகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் அதற்கும் தனது பேட்டால் பதில் கொடுப்பார் என நம்புவோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1j5yl4dr68o

UK national league football match வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் வீரர் திரு விமல் அவர்கள் TAMIL EELAM JUSTICE என்ற பாதாதையை 52 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் wembley மைதானத்தில் தூக்கிப் பிடித்தவாறு வலம் வந்தது அனைத்து பார்வையாளர்களின் கவனத்தையும

3 months 2 weeks ago

Whats-App-Image-2025-06-01-at-6-13-22-PM

Whats-App-Image-2025-06-01-at-6-13-22-PM

சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்

3 months 2 weeks ago

26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர்.

இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி  வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதேபோல், நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதேபோல், இந்தப் போட்டியில் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அவர் கொழும்பில் வசிப்பவர், அதே பகுதியில் சமையல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர்கள் மூவரும் முதல் முறையாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுவது சிறப்பு.

மூவரும்  ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர், மேலும் அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவும் அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

Tamilmirror Online || சமையல்காரர் போட்டியில் கஸ்தூரி ராமேஸ்வரன் பதக்கங்களை அள்ளினார்

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

3 months 2 weeks ago

New-Project-315.jpg?resize=750%2C375&ssl

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!

2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார்.

பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

https://athavannews.com/2025/1433587

Checked
Mon, 09/15/2025 - 22:38
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed