Aggregator
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர்
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர்
Published By: Vishnu
26 Jul, 2025 | 02:24 AM
![]()
(எம்.ஆர்.எம்.வசீ்ம்)
புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும்.
விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள்,சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசாங்கம் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதனால் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்கு திறந்துவிடப்பட வேண்டும், அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும்.
அதன் பிரகாரம் அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும்.
அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் இதற்காக சில காலம் தேவைப்படும். எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒருவருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது
செய்திகள்
யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார்.
பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmdjnbjn101nmqp4kln447ceb
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது.
நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
https://newuthayan.com/article/வடக்கு_கிழக்கில்_ஆரம்பமாகும்_பாரிய_போராடடம்!