Aggregator

தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ள பிரச்சினை

3 months 2 weeks ago
தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவதில் உள்ள பிரச்சினை அண்மையில் இந்தக் காணொளியைப் பார்க்க முடிந்தது. மனதிற்கு வலியைத் தந்த காணொளிகளில் ஒன்று. புலம்பெயர் தேசங்களில் தப்பி வாழும் முன்னாள் புலிகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை தாயகத்தில் உள்ள ஒருவர் முன்வைத்திருக்கிறார். இவர் கூறும் பல விடயங்களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இவ்விடயங்களில் மிகவும் நெருடலானதும், சர்ச்சைக்குள்ளாகியதுமான ஒரு விடயம் தான் இறுதிநேரத்தில் உயிர் காக்க ஓடிக்கொண்டிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகக்ப் பாவித்தார்கள் என்பதுடன், அவர்களைச் சுட்டுக் கொன்று தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்பதும். இறுதிப்போரின் இறுதி நாட்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது பின்னாலிருந்து புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதை நான் யாழில் எழுதும் ஜஸ்ட்டின் மற்றும் எனக்குத் தெரிந்த, இன்னமும் தாயகத்துடன் தொடர்பில் இருக்கின்ற இன்னும் சிலரூடாகவும் அறிந்துகொண்டேன். ஏற்றுக்கொள்ள மிகவும் கடிணமானதாக இருந்தபோதிலும், அப்படியிருக்காது என்று விவாதித்தபோதிலும் மனதில் ஒரு மூலையில் இப்படி நடந்திருக்கலாம் என்றே தெரிந்தது. கூடவே மிகுந்த வேதனையினையும் அது ஏற்படுத்தியிருந்தது, தற்போதும் அப்படித்தான். இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முற்பட்ட மக்களை தடுப்பதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பதை தவறென்று ஏற்றுக்கொண்டு, ஓரளவிற்கு அதனை புரிந்துகொள்ள முடிந்தபோதிலும், இக்காணொளியில் இவர் கூறும் தாம் தப்புவதற்காக சுட்டுக் கொன்றார்கள் என்பதையோ, ஆயிரக்கணக்கில் கொன்றார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மக்களை சகட்டுமேனிக்குச் சுட்டுக் கொல்லவேண்டிய தேவை ஏன் புலிகளுக்கு வந்தது என்பதையோ அல்லது மக்களைக் கொல்வதனூடாக தம்மை அவர்கள் எப்படிக் காப்பாற்றிக்கொண்டார்கள் என்பதையோ இவர் விளக்கவில்லை. அல்லது அவர் அதனை தனது கருத்திற்கு ஆதாரமாக போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்வதாகக் கூட இருக்கலாம். தாயகத்தில் இருந்துகொண்டு தலைவரை மரியாதையாகக் குறிப்பிடும் இவர், இலங்கை இராணுவத்தின் பொன்சேக்கா, கமால் குணரட்ன மற்றும் சவேந்திர சில்வா ஆகியோரின் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவர்களுக்கான மரியாதையினை வழங்க முனைவதையும் அவரது பாதுகாப்புக் கருதியே செய்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இவர் கூறும் பல விடயங்கள் உண்மையிலேயே சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகளில் பணச் சேகரிப்பிற்காக நடத்தப்படும் உணவு விற்பனை நிலையங்கள், இறுவட்டு விற்பனைகள், வெளியீட்டு விற்பனைகள். இறந்தவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கூட்டம் என்று அவர் கூறுவதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. அவ்வாறே, தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியின் தளபதிகள், புலனாய்வு தளபதிகள், ஏனைய படைத் தளபதிகள் ஆகியோர் தலைவரைச் சாகக் கொடுத்துவிட்டு தாம் மட்டும் எப்படித் தப்பிக்கொண்டார்கள் என்று அவர் கேட்கும்போது அதேகேள்விகள் என்மனதிலும் எழுகிறது. மெய்ப்பாதுகாவலனைக் கொன்றுவிட்டே தலைவரை நெருங்கமுடியும் என்கிற நிலையில் தலைவர் மட்டும் கொல்லப்பட மெய்ப்பாதுகாவலர்கள் தப்பியது எங்கணம் என்கிற கேள்வியும் எழுகிறது. அத்துடன், தலைவரின் மரணம் இடம்பெற்று 16 வருடங்கள் வரை இதனை வெளிப்படையாக அவர்கள் ஏன் கூறவில்லை என்கிற கேள்விகளுக்கும் இற்றைவரை பதில் இல்லை. மேலோட்டமாகப் பார்த்தால் தலைவரையும் மாவீரர்களையும் உண்மையாகவே நேசிக்கும் ஒருவரின் மனக்குமுறல் என்று தெரிந்தாலும், இவரது பின்னணி பற்றியோ அல்லது இவரது உண்மையான நோக்கம் பற்றியோ எதுவும் தெரியாத நிலையில் இக்காணொளியினை உங்களின் பார்வைக்கு இணைத்துவிடுகிறேன். இக்காணொளி இன்னொரு சர்ச்சையினை இங்கு ஏற்படுத்தாது என்கிற எண்ணத்தில் முடிக்கிறேன். Eelam Tamils are outraged by the heroism of their leader, confirming his heroic death!

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி

3 months 2 weeks ago
கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம் - பிரேம்நாத் சி தொலவத்த 25 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பிற்கு 20 எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று எமது ஆட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமையில் சுனில் ஹந்துன்னெத்தி போன்றோர் பிரதான காரணமானவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர். ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம். பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை. எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். கல்வி மறுசீரமைப்பு எனக் கூறிக் கொண்டு பாடசாலை கட்டமைப்பில் கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை தெரிவு பாடத்தொகுதிக்குள் உள்ளடக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம். முதலில் அரசாங்கம் ஆளுந்தரப்பினருக்கு இது தொடர்பான உண்மைகளைக் கூற வேண்டும். அதன் பின்னர் எம்முடன் கலந்தாலோசிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/220942

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

3 months 2 weeks ago
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்குப் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் இருந்தார் - பிமல் ரத்நாயக்க 25 JUL, 2025 | 05:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார். அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம். அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220936

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

3 months 2 weeks ago
இங்கிலாந்து, ஜேர்மனி, ஒல்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற தமிழ் மக்கள் அதிகம் வசிக்கின்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செய்திருப்பது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கக் கூடியதாக இருக்கும். இந்த இலவச விசா வழங்கும் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமா, அல்லது அதற்கு மேலுமா என்ற தகவல் கிடைத்தால் அறியத்தரவும். இனி என்ன ... அடுத்த ஹொலிடேக்கு, பெட்டியை கட்ட வேண்டியதுதான். 😂 தகவலுக்கு நன்றி ஏராளன்.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

3 months 2 weeks ago
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன் - சஜித் பிரேமதாச 25 JUL, 2025 | 05:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்ததொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாசாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/220940

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months 2 weeks ago
இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! 25 JUL, 2025 | 05:51 PM நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர். இலங்கை வேலைவாய்ப்பு பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220941

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
அண்ணை, முத்தற்ற கவிதையை முத்தின கத்தரிக்காய் என இப்பத்தையான் 2கே கிற்ஸ் பகிடி பண்ணுங்கள். அவையளுக்கு ஔவையின்ர பாணி குறுங்கவிதை தான் சரிவரும்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29 ஆரம்பம்

3 months 2 weeks ago
நல்லூர் ஆலயத்தில் வருகிற செவ்வாய் கொடியேற்றம் - ஏற்பாடுகள் மும்முரம் 25 JUL, 2025 | 05:49 PM வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியினை சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவு பெறும். https://www.virakesari.lk/article/220939

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
நீங்கள் இருவரும் இப்போதுதான் முதன் முதலால காதலிக்க ஆரம்பிக்கிறீர்கள் என நான் கண்டுபிடித்துவிட்டேன்🤣. காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்! கவிஞர் : வைரமுத்து

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
அட ஆமா... எம். ஆர். ராதாவும்.... எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்குள் வந்து போகின்றார். 😂

மாரீசன் விமர்சனம்: மீண்டும் இணைந்த வடிவேலு, ஃபகத் ஃபாசில் - படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாரீசன் திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

மாரீசன் திரைப்படத்தின் கதை என்ன?

படத்தின் கதை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பிரபல திருடன் தயா (ஃபகத் ஃபாசில்) கண்ணில் சிக்குவதை எல்லாம் கொள்ளையடிக்கிறார்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கச் சென்றபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த வேலாயுதத்தை (வடிவேலு) சந்திக்கிறார். தன்னை விடுவித்தால் பணம் தருவதாகக் கூறுகிறார் வேலாயுதம்.

வேலாயுதத்தை விடுவித்த பிறகு, அவர் ஞாபக மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதையும் தயா தெரிந்துகொள்கிறார்.

அதைத் திருடுவதற்குத் திட்டமிட்டு, வேலாயுதத்திற்கு உதவுவது போல முன்வரும் தயா, தனது இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார்.

இவர்களுடைய பயணத்தின்போது என்ன நடந்தது, இறுதியாக தயா பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

மாரீசன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா உத்தி நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் எங்குமே சலிப்பின்றிச் செல்கிறது" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

"ஏற்கெனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்னையை புதிய பாணியில் சொல்லி கவனம் இயக்குநர் ஈர்த்துள்ளார்" எனவும் அந்த விமர்சனம் புகழாரம் சூட்டியுள்ளது.

ஆனால், "படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு, இது 'மெய்யழகன்' படத்தைப் போல இருவருக்கு இடையே நடப்பவை குறித்த கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாதியில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும், இரண்டாம் பாதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது.

இந்தியா டுடே விமர்சனத்தின்படி, காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன், நிச்சயம் சிரிக்க வைக்கும். அதோடு, "படத்தில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன."

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பு எப்படி?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக விளங்கும் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் ஆகிய படங்களில் ஃபகத் திருடனாக நடித்திருந்தாலும் இதில் அந்தச் சாயல் எதுவுமே இல்லாமல் திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபகத் ஃபாசில்" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

தி இந்து நாளிதழும் "மாமன்னன் படத்தில் இந்தக் கூட்டணி தொடங்கியது. இவர்களை திரையில் பார்ப்பது மனதிற்கு இதமாக உள்ளது. இந்தக் கூட்டணியை நிறைய படங்களில் இணைந்து பார்க்க மக்கள் விரும்புவார்கள்" என்று கூறியுள்ளது.

"மாமன்னன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் தனது நகைச்சுவை கதாபாத்திரத்தைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பாராட்டியாக வேண்டும்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

"ஃபகத் ஃபாசில் எப்போதும் போலத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

"நீண்ட நாட்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் காட்சிகளைப் பார்க்க உயிர்ப்பாக இருந்தது. முதல் பாதியில் ஃபகத், வடிவேலு இடையிலான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது" என தினமணி பாராட்டியுள்ளது.

மாரீசன் திரைப்படத்தின் குறைகள் என்ன?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"முதல் பாகம் மற்றும் இடைவெளியில் எகிறிய எதிர்ப்பார்ப்புகள் மெல்ல மெல்லக் குறைவது போல் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. படத்தின் 'ஒன்லைன்' சரியாகக் கையாளப்படவில்லை. ஒரு கட்டத்தில் படம் கொலைகளை நியாயப்படுத்துவது சரியாக இல்லை" என்று தினமணி விமர்சித்துள்ளது.

அதே போல, "ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முன்னணி கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் பெரியளவில் கையாளப்படவில்லை" எனக் கூறுகிறது தி இந்து விமர்சனம்.

மேலும், "கிளைமேக்ஸ் காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். ஆனால், சில காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவது பலவீனம்" எனவும் விமர்சிக்கிறது.

தினமணி விமர்சனத்தின்படி, "மொத்தத்தில் மாரீசன் திரைப்படத்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமின்றி பார்க்கலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg5gpxk3myo

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
எனக்குத்தான் இந்தப் பிரச்சினை இருக்கு என்று பயந்து கொண்டு இருந்தேன். இப்போ நீங்களும் இணைந்து கொண்டதில் சந்தோசம். 😜

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

3 months 2 weeks ago
தடுப்புக் காவலில்... தூக்குப் போடும் அளவிற்கு எல்லாம் பொருட்கள் இருக்குமா. பொலிஸார்... அந்தத் தமிழ் கைதியை அடித்துக் கொன்று விட்டு, நாடகம் போடுகின்றார்கள் போலுள்ளது.

புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்?

3 months 2 weeks ago
25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார். அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார். மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார். எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன் இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன. தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும் 8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க். அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இரு கட்சிகள் முறைமை அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை. கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார். 1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை. பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள் அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன. புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான விதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும். புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது. அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர். “குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன். “அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார். அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப். https://www.virakesari.lk/article/220954

புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்?

3 months 2 weeks ago

25 JUL, 2025 | 06:44 PM

image

ஆர்.சேதுராமன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின்  கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.

'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும்  அதிகம் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார்.

அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார்.

வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார்.

மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார்.

எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன்  இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன.

தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும்  8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க்.

அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இரு கட்சிகள் முறைமை

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை.

கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.  அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.

1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.

வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல்  சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை.

பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள்

அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன.

புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான  விதிகளைக் கொண்டுள்ளன.

உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும்.

அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன.

தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும்.

புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது.

அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர்.

“குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.

“அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி  வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார்.  அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப்.

https://www.virakesari.lk/article/220954

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

3 months 2 weeks ago
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdiwtuw301ncqp4k14uojezy

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

3 months 2 weeks ago

17535402239058790206789893684357.jpg

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l