Aggregator

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
பவர் கட், ஆம்புலன்ஸ் படையெடுப்பு.. கரூர் சம்பவத்தில் பல சந்தேகங்கள்.. எடப்பாடி பழனிசாமி கேள்வி Pavithra ManiUpdated: Sunday, September 28, 2025, 9:28 [IST] கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதுகாப்பு குறைபாடு அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொதுக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. எங்களுக்கு ஊடகங்கள் மூலம் வந்த தகவலின்படி நெரிசல் ஏற்பட்டபோது அங்கு மின் நிறுத்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு தவெக 4 மாவட்டங்களில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அங்கு எல்லாம் மக்கள் கூட்டம் இருந்தது என்பதை ஆய்வு செய்து அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் பார்க்கும்போதே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த அரசு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றது. எல்லாவற்றுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பு கொடுத்தோம். திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தவே நீதிமன்றம்செல்ல வேண்டியிருக்கிறது. விலை மதிக்க முடியாத அதிமுக கூட்டங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதில்லை. என்னுடைய கூட்டங்களுக்கும் இதே நிலை தான். உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை தடுத்திருக்கலாம், மனித உயிர் விலை மதிக்கத்தக்கது. அதனால் அரசியல் கட்சிகளும் மக்களின் உயிரின் மதிப்பை உணர்ந்து, கடந்த கால கூட்டங்களை ஆராய்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்கிறேன். மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கூட்டம் வந்தால், எப்படி சமாளிப்பது என்ற அனுபவம் உள்ளது. அதை இவர்களும் கடைபிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை வான் சாகச நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். அதில் இருந்து அரசு பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. சந்தேகம் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றிருக்க கூடாது. அரசு கடமையில் இருந்து தழுவியது தான் உயிரிழப்புக்கு காரணம். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் பல ஆம்புலன்ஸ்கள் வந்தன. இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறாமல் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்தது இதற்கு முன்பு நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார். https://tamil.oneindia.com/news/karur/edappadi-palanisamy-raised-doubt-on-dmk-government-over-karur-stampede-738965.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards கரூர் விஜய் பரப்புரை: ஆம்புலன்ஸ் கூட போகாத இடத்தில் அனுமதி! ஆட்சியர், எஸ்பியை சஸ்பெண்ட் பண்ணுங்க.. அண்ணாமலை அட்டாக் Mani Singh SUpdated: Sunday, September 28, 2025, 19:01 [IST] கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் 40 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டு உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் வருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:- கரூர் சம்பவத்தில் 40 அப்பாவி உயிர்களை பறிகொடுத்துள்ளோம். மருத்துவமனையில் இன்னும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது, இனியும் இப்படி நடக்கக் கூடாது - அண்ணாமலை மருத்துவ உதவி தேவைப்பட்டால் பாஜகவினர் செய்வார்கள். எதோ பல தவறுகள், சில குளறுபடிகள் நடந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தை சரியாக கையாள்கின்றோமா என்று பார்த்தால் இல்லை.. எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீது தான். வேலுச்சாமிபுரம் என்பது மிக குறுகலான இடம். அங்கு ஏன் போலீசார் அனுமதி கொடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கூட போக முடியாத இடத்தில் போலீசார் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து அரசு தவறி வருகிறது.. 500 போலீசார் பாதுகாப்புக்கு வந்து இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அங்கு 100 பேர் கூட இல்லை. ஸ்பாட்டில் 100 போலீசார் கூட இல்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பியை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பதவியில் இருந்து விலக வேண்டும். விஜய் தான் அக்யூஸ்டு நம்பர் ஒன் என்று நான் சொல்ல மாட்டேன். வீக் எண்ட் அரசியலில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும். கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://tamil.oneindia.com/news/karur/karur-vijay-rally-annamalai-demands-suspension-of-collector-sp-for-allowing-event-where-even-ambul-739095.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி பிரேமலதா, எடப்பாடி, அண்ணாமலை அனைவரும் உடைத்து பேசுகிறார்கள். விஜை மட்டும் சைலண்ட் மோடில்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
தலைவர் அளவுக்கு எல்லாம் போகதேவையில்லை. முன்பே சொன்னதுதான். என்னை பொறுத்தவரை கருணாவும், சீமானும் ஒன்றே. கருணா சுழியன் என்பதால்தான், கூட இருந்த தளபதிகள் எல்லாம் மாவீரர் ஆகி விட, அவரால் இன்றுவரை சுகபோகமாக உயிர்வாழ முடிகிறது, என சொல்வோரும் உளர். அதேபோலத்தான் சீமானும். சீமான் விஜையை முந்த கூடும், முதல்வராக, ஏன் பிரதமராக கூட வரக்கூடும். ஆனால் தமிழினத்துக்கோ, தமிழ் தேசிய கொள்கைக்கோ அதனால் ஒரு குண்டுமணியளவு கூட நன்மை வராது. மாறாக மலையளவு தீமையும், துரோகமும் விளையும். கருணா, சீமான் தனிபட்டு வெல்லலாம் - அதனால் இனம் வெல்லும் என இவர்களை ஆதரிப்பது மடமை. மொசபிடிக்கும் நாயை மூஞ்சிய பார்த்தா தெரியும். கருத்து

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
இந்த குழந்தைகளை தூக்கி கொண்டு வந்ததை குறை சொல்லுவதை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது. சிலவேளை புலம் பெயர்ந்தமையால் நமக்கு தெற்காசியாவின் பழக்க வழக்கம் மறந்து விட்டிருக்க கூடும். அங்கே கணவனும் மனைவியும் தன்னெழுச்சியாக எங்கேயும் போனால் பிள்ளைகளையும் கூட்டிச்செல்வதே வழமை. தனியே ஆண்கள் மட்டும் போக இது திமுக/அதிமுக பிரியாணி+குவாட்டர் கூட்டம் அல்ல. விஜையை பார்க்க போனார்களோ, அரசியல் உரையை கேட்க போனார்களோ, இதில் பலர் இதற்கு ஒரு திருவிழா போலவே போனார்கள். போன வாரம் உச்ச நீதிமன்றும் சொல்லி, விஜை கூட பெண்கள், குழந்தைகள் வர வேண்டாம் என சொல்லி இருந்தார். ஆனால் - நீதிபதி, ஸ்டாலின், விஜை அனைவருக்கும் தெரியும் என்ன சொன்னாலும் வருவார்கள். அப்போ தக்க ஏற்பாட்டை அரசும், தவெகவும் செய்திருக்க வேண்டும். அப்போ விஜை வெளியே போகாமல் இருக்கவா முடியும்? அப்படி இருந்தால் வேர்கிங் புரொம் ஹோம் அரசியல்வாதி என்பார்கள். ஆகவே தகுந்த இடத்தை கொடுக்க வேண்டியது காவல்துறையின் பணி. உனக்கு அதிக கூட்டம் வருகிறது நீ அரசியல் பரப்புரை செய்யாதே என்பது பிழையான வாதம். அதேபோல் பெண்களுக்கும் ஒரு வோட்டு, ஆண்களுக்கும் ஒரு வோட்டு எனும் போது பெண்களை மட்டும் எப்படி வர வேண்டாம் என்பது. அது உரிமை மீறல் இல்லையா? நெரிசலில் ஆண்கள் இறக்கவே இல்லையா? அல்லது ஆண்கள் இறந்தால் பரவாயில்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் - என்ன காரணத்துக்காவேனும் - மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டினால் - அதை ஊக்குவிக்கவேண்டுமே தவிர, கூட்டம் அதிகமாகிவிடும் நீ வராதே என்பது - சரியான வாதம் இல்லை. ஒரு அரசின் முதலாவது கடமை தன் மக்களின் உயிர் பாதுகாப்பு. விஜைக்கு இரு வாரங்களில் 5 மாவடங்களில் கூடிய கூட்டத்தை பார்த்த பின்னும், ஏன் ஒரு 100 அடி வீதியை கொடுத்து, அதற்குள் விஜையின் 60 அடி வாகனம் போயே தீரவேண்டும் என அடம் பிடித்தார்கள்? ஒரு அடிப்படை risk assessment செய்யிருந்தாலே இந்த இடம் பொருத்தமில்லை என தெரிந்திருக்கும். விஜை கேட்ட விஸ்தாரமான, ஸ்டாலின் அண்மையில் பேசிய இடத்தை மறுத்து இதை கொடுத்த அரசுதான் இதில் முதல் குற்றவாளி. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம், திமுக ஒரு சின்ன அசம்பாவிதத்தை எதிர்பார்த்து செய்ய அது கைமீறி போய்விட்டது என ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால்… அப்படி இல்லை எனிலும், இது ஒரு விபத்தே ஆயினும், இதற்கு பாரிய பொறுப்பு அரசிடமே. விஜை மீது தப்பில்லை என்பதல்ல. ஆனால் எந்த அரசியல்வாதியும் தனக்கு கூடும் கூட்டத்தை வேண்டாம் என்பார்களா? உதயநிதிக்கோ, சீமானுக்கோ இப்படி கூட்டம் கூடினால், இல்லை வேண்டாம் என மறுப்பார்களா? அதேபோல் விஜை லைட்டை போட்டார், ஷட்டரை மூடினார் என்பதெல்லாம் அபத்தமான கதைகளாவே தெரிகிறது. இதையேதான் அவர் முன்னைய கூட்டங்களிலும் செய்தார். அப்போ விஜை என்ன பொம்மை போல வந்து, பொம்மை போல போக வேண்டுமா? ஏனைய அரசியல்வாதிகள் போலத்தான் அவரும் தன்னை காண வந்தோரிடம் interact பண்ணினார். உண்மை இரெண்டு தான் ஏனையோர் கனவு கூட காண முடியாத கூட்டம் விஜைக்கு கூடியது. அதனால், ஸ்டாலின், உதய், எடப்பாடி போன்றோருக்கு கூடும் கூட்டத்தை கட்டுபடுத்த எடுக்கும் நடவடிக்கையை, ஏற்பாட்டை விட பலமடங்கு விஜை கூட்டத்துக்கு தேவை பட்டது. அதை அரசு செய்யவில்லை. இதில் விஜையில் மட்டுமே 100% பிழை என கூறக்கூடியது ஒன்றே ஒன்றுதான். அது நடந்த கோரத்தின் பின்னான அவரின் நடத்தை. அவரின் மனநிலை கடுமையாக பாதிக்கபட்டே விட்டது என்றால் - அதில் விமர்சிக்க ஏதும் இல்லை, ஆனால் இப்படியான மனநிலையோடு முதல்வராக ஆசைபடக்கூடாது.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
https://www.facebook.com/share/p/1CTeuhWX9i/?mibextid=wwXIfrஎல்லா மீட்டிங்க்கும் சொன்ன டைம்க்கு வராம, அவரோட ரசிகர்களை மணிக்கூர் கணக்குல காக்க வைப்பது, அந்த ஏரியா முழுக்க பொது மக்களுக்கு அசௌகரியம் கொடுப்பது, போலீஸையும் காத்திருக்க வைப்பது, விஜய்யோட பெரிய தப்பு. ஒவ்வொரு மீட்டிங்க்லயும் இத அவர் செய்வது வேணும்ன்னே செய்றார்னா அவர் சரி செய்ய வேண்டிய பெரிய குற்றம் இது. அவர் நேத்திக்கு சென்னைக்குப் புறப்பட்டது சரியான முடிவு. நிச்சயம் போலீஸ் அத insist பண்ணி இருப்பாங்க. அவரால அந்த சிச்சுவேஷன்ல எதுவுமே செஞ்சிருக்க முடியாது. சினிமா ஹீரோ மாதிரி வேன்ல இருந்து குதிச்சு கீழ வந்திருந்தா பிரச்னை இன்னும் பெருசாகி இருக்கும். அந்த எடத்துல இருந்து போனது சரியான முடிவு. இந்த mob mentality விஷயத்துல உலகம் முழுக்கவே இப்படித்தான். அவர் ஆஸ்பத்திரிக்குப் போறேன்னு கெளம்பி இருந்தாலும், இதே பிரச்னை தான் நடந்திருக்கும். அவரோட presence நடந்துட்டு இருந்த வேலைகளுக்கு இடையூறா இருந்திருக்கும். அவர் கரூரைச் சுத்தி எங்க தங்கி இருந்தாலும், கூட்டம் கூடி இருக்கும், மீடியாக்காரன் கூட்டமா வந்திருப்பான். அதுக்குன்னு தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டியதிருக்கும். அவருக்கு அந்த சூழ்நிலைல பாதுக்காப்பான எடம் அவரோட சென்னை வீடு மட்டும் தான். அவர் அங்க போனது தான் சரி. இந்த மாதிரி ஒரு சம்பவம் யாரையும் பாதிக்கும். விஜய்யை நிச்சயம் பாதிச்சிருக்கும். அதுவும் 30+ங்கறது பெரிய கணக்கு. அதுவுமில்லாம, அவர் பொதுவாவே கொஞ்சம் எமோஷனல் ஆளு தான். ஜல்லிக்கட்டு, அனிதா மரணத்தப்ப, தனியா அவர் சில விஷயங்கள் செஞ்சிருப்பார். அவருக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும். அதனாலயே, ஃப்ளைட் ஏறதுக்கு முன்னாடி ஒரு அறிக்கை விட்டிருக்கனும். கட்சி நிர்வாகிகள் என்ன செஞ்சிருக்கனும்ன்னு ஒரு நோட் கொடுத்திருக்கனும். பப்ளிக்ல. சொல்லப்போனா, இப்படி ஒரு சம்பவம் எப்ப வேணும்ன்னாலும் வரலாம்ன்னு முன்கூட்டியே அவர் இதுக்கெல்லாம் prepare ஆயிருக்கனும். அதுவும் ஒரு கட்சியோட planningல இருக்க வேண்டிய விஷயம். இந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தா யார் என்ன செய்யனும்ன்னு ஒரு ப்ளான் இருந்திருக்கனும். இந்த மாதிரி மரணங்களே நடந்தாலும் அத எப்படி ஹேண்டில் பண்றதுன்னு, both politically and socially, அவரோட டீம்க்குத் தெரிஞ்சிருக்கனும். Risk, Safety, DRன்னு என்ன வேணும்ன்னாலும் அதுக்கு பேர் வச்சிருக்கலாம். விஜய் இருக்காட்டியும், அவரோட டீம் அந்த எடத்துலயும், ஆஸ்பத்திரிலயும் இருந்திருக்கனும். காணோம்ன்னு தான் சொல்றாங்க. விஜய் ரசிகர்களுக்குள்ள ஒரு குரூரத்தை உருவாக்கினதுல பெரும்பங்கு புஸ்ஸி ஆனந்த்க்கு உண்டு. மேடைலயே அவரோட நடவடிக்கைகள்ல அது தெரியும். பப்ளிக்லயே இப்படின்னா மத்த எடங்கள்ல அவர் எப்படி இருந்திருப்பார்ன்னு சொல்ல வேண்டியதில்ல. அவர்ட்ட இருப்பது ஒரு ஹிட்லர் மனநிலை. சத்தம் போட்டு, அடக்கி எல்லாத்தயும் சாதிக்க முடியும்ன்னு ஒரு மனநிலை. ஆனா விஜய் அவருக்கு நேரெதிர் சாஃப்ட். ஆனந்த் is not fit for politics. விஜய் எப்பவோ இவரை அனுப்பி இருக்கனும். இனிமேலும் வச்சிருந்தா அவரோட ரசிகர்களும், அவரோட ரசிகர்களால விஜய்யும் தான் பாவம்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
குழந்தைகளை தூக்கி கொண்டு விஜய்யை பார்க்க வந்த தமிழ்நாட்டவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் தான் திமுக அரசு விஜய்க்கு பயந்து அவர் கட்சியை ஒடுக்க பார்க்கின்றது ஜனநாயகத்தின் மீதான அரசின் அடக்கு முறை என்று குற்றம் சாட்டுவார்கள்.இப்படியான குற்றசாட்டுக்களை விஜய் இரசிகர்கள் முன்னைய கூட்டங்களில் கட்டுபாடுற்ற முறையில் நடக்கிறார்கள் என்ற முறைபாடுகள் வந்த போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களின் கருத்தை தூக்கிப் பிடித்து சீர்தூக்கி பார்த்தால் எதுவுமே தேறாது. அரசியலில் தேறாத ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியதின் பலன் தான் கருவூர் அவலங்கள். இது உலக அரசியலில் வரலாற்று சாதனை.இந்திய அரசியல் என்றாலே உலகில் ஒரு ஏளன பார்வை உண்டு. இது இன்னும் வலு சேர்க்கும். அரசியல் முதலைகள் நிறைந்த குளம் என சீமான் கருத்து சொல்லியுள்ளார்.அதில் அவர் பல இடங்களில் இணக்கமான அரசியல் மேடை பேச்சுக்களை பேசியுள்ளார்.பேசுபவர். அதை சீமான் விமர்சகர்கள் அங்கே விலைபோய்விட்டார்.இங்கே விலை போய் விட்டார்.குறுக்காலை விலை போய் விட்டார்.பெட்டி வாங்கி விட்டார். ஏ டீம்.பீடீம் எக்ஸ் வை டீம்/டீல் என்பார்கள்.😂

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
தமிழ்நாட்டு அரசியல் அறிவும் இல்லாமல்....உலக அரசியல் அறிவும் இல்லாமல் தனது ரசிக தோழர்களின் ஒழுக்கமின்மை இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்கிறீர்கள்?😝 ஒழுங்கான சினிமா நடிகர் கூட இல்லாதவர். சும்மா பிரமாண்டம் காட்டும் நடிகர் அவர்.😎 இதனால் தான் ரசிகர்கள் மரங்களிலும் வீட்டு கூரைகளிலும் வீட்டு மதில்களிலும் ஏறி காயமடைந்தார்கள் இது அண்மை நாட்களாக வந்த செய்தி. இப்போது உயிரிழப்புகள். இப்படி மக்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறிதான். எல்லாம் இருக்கட்டும்..... தங்கள் அபிமான நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் ஏன் சீமானுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?😋

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

3 months 2 weeks ago
பகிடி அல்ல. குரங்குகளுக்கு ஈவு இரக்கம் பார்க்க கூடாது.--------- மீதி கூட்டங்கள் அந்த பக்கம் அண்டாது. எதுவுமே பழக்கத்திற்கு வந்து விட்டால் குரங்கிற்கு பழைய புத்தி வந்துவிடும்.😂

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
https://www.facebook.com/share/17374e3Pc1/ தான் இருந்த வாகனத்திற்குள் விளக்கை அணைத்து மீண்டும் போட்டு மக்கள் ஆரவாரம் செய்து தெரிந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் செய்தத ரசித்திருக்கிறது இந்த நடிக மாமேதை....

சமையல் செய்முறைகள் சில

3 months 2 weeks ago
மனிசருக்கு எதிரியே நாக்கு தான்.மூளை வேண்டாம் வேண்டாம் எண்டு எச்சரிச்சாலும் நாக்கு சொல்வழி கேக்காது.😂 இஞ்சை பார் சிறித்தம்பி நெத்தலி பிரட்டலுக்காக பிளைட் எடுத்து சிலோனுக்கு போகோணும் போல கிடக்காம்.😄 சைவ பழத்துக்கு(சுவியர்) நெத்தலி பொரியல்-லெமென் றைஸ் காம்பினேஷன் என்னெண்டு தெரியும்? ஒரு வேளை கேள்வி ஞானமாய் இருக்குமோ? 😂

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

3 months 2 weeks ago
“கும்பலைக் கூட்டுறான் கொடியை நாட்டுறான் கொஞ்சநேரம் நின்று பாத்தால் உண்டியலை நீட்டுறான்…” கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
1) இந்தியா 2) இலங்கை 3) அவுஸ்திரேலியா 4) பாகிஸ்தான் 5) தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா 7) இந்தியா 8) நியூசிலாந்து 9) இங்கிலாந்து 10) அவுஸ்திரேலியா 11) இந்தியா 12) நியூசிலாந்து 13) இங்கிலாந்து 14) - இந்தியா 15) தென்னாபிரிக்கா 16) நியூசிலாந்து 17) இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா 19) தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து 21) இந்தியா 22) இலங்கை 23) தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா 25) இந்தியா 26) இலங்கை 27) அவுஸ்திரேலியா 28) நியூசிலாந்து 29) இந்தியா 30) அவுஸ்திரேலியா 31) வங்காளதேசம் 32) தென்னாபிரிக்கா,அவுஸ்திரேலியா,இந்தியா ,நியூசிலாந்து 33) அவுஸ்திரேலியா 34) அவுஸ்திரேலியா 35) மும்பை 36) கொழும்பு 37) பாகிஸ்தான் 38) வங்காளதேசம் 39) இந்தியா 40) வங்காளதேசம் 41) ஆம் 42) ஆம் 43) அவுஸ்திரேலியா 44) இந்தியா 45) அவுஸ்திரேலியா 46) இந்தியா 47) அவுஸ்திரேலியா

குட்டிக் கதைகள்.

3 months 2 weeks ago
Baskar Jayraman Mookkammal serSnootdp0 6r10he1sf4530pm0te8t1 efbtgma1c86ca:26c27g63,89c · #இதுதான்_பிரபஞ்ச_விதி விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை அனுமதிக்கச் சொன்னார். 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, "இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார். அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது. டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?" நோயாளி கூறினார், "நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..." டாக்டர் சொன்னார், "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க. இப்போது ஞாபகம் வருகிறதா?" "ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..." "அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, கார் பழுதாகி விட்டது. சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது. குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது. நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. நீங்கள் பைக்கில் வந்தீர்கள்... பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள். பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது. நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம். அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம். நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள். அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது. ஆனாலும், நான் உங்களிடம்,: "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன். அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,* எனது விதியும் கொள்கையும் என்னவெனில்... பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை. இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்." என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன. பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்..., அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' என்று அன்று நினைத்தேன். அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை. உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன். இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது. நீங்கள் இங்கே என் விருந்தாளி. உங்கள் சொந்த விதியின்படி... என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது. இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும். "நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." மருத்துவர் கூறிவிட்டு கேபினை விட்டு வெளியே சென்றார். *அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன... அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது. நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன. அதுவும் ஆர்வத்துடன். அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதான் பிரபஞ்ச விதி.......! 👍 Voir la traduction

ஒரு பயணமும் சில கதைகளும்

3 months 2 weeks ago
நாங்கள் விலங்குகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை. எங்களிடமும் வடக்கிருந்து மரணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போ எல்லாம் மருந்து மாத்திரைகளில் வாழ்வு போய்க் கொண்டிருப்பதால் திசைகளை எல்லாம் மறந்துவிட்டோம். “கப்பலில் வந்த கொண்டையினரை திறக்க கதாநாயகன் வெளிப்படுவார். அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பார்த்தால் அவர் அந்த நாட்டு மொழி பேசுவார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்க்க”, சும்மாதானே கொண்டையினருக்குள்ளே இருக்கிறேன் என்று நாலு நாளா உங்கள் மொழியை படித்தேன் என்று அவர் சொல்லுவார்”.புஸ்பா 2 படத்தில் இந்தக் காட்சியைச் சொல்லி “யாருக்கு கதை விடுறீங்கள்?” என்று புளூச் சட்டை மாறன் டைரக்டரை வாங்கியிருப்பார். படத்தைப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு கனவுக் காட்சி. ஆக படங்களை பார்க்க வைக்க ஒரு புளூச்சட்டை மாறன் தேவைதானே. நீங்கள் கதை சொன்னவிதத்தில் கூடவே நானும் உங்களுடன் பயணித்ததை நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். நன்றாகச் சொன்னீர்கள். பலதையும் கோர்த்து ஆக்கபூரவமான விசயங்களையும் சேர்த்துச் சொன்னீர்கள். ஏன் எங்களையும் கூட உங்களுடன் சேர்ந்து எழுத வைத்தீர்கள். நன்றி யசோதரன். ஆனாலும் பூனைகளும், பொலிஸுகளும் உங்களை ஏன் நாடி வருகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் இன்று யேர்மனிய அரசுத் தொலைக்காட்சியான Tagesschauவில் செய்தியாக இடம் பெற்றிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இதுபோன்ற ஒரு அவலமான நிகழ்வொன்றை யேர்மனியரும் சந்தித்திருக்கிறார்கள். 24.07.2010 அன்று யேர்மனியின் டுயிஸ்பெர்க் (Duisburg) நகரில் நடைபெற்ற Love Parade இசை விழாவில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெருக்கத்தில், குறுகிய சுரங்க வழியிலிருந்து வெளியேற முடியாமல் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் இன்றும் மீள முடியாத மனநிலை மற்றும் உடல் பாதிப்புகளில் இருக்கிறார்கள். இந்தத் அவலம் நிகழ்ந்ததும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுமதி வழங்கிய நகர மேயருக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நகர மேயருக்கு எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை குறித்த மேலதிக தகவலுக்கு, https://en.wikipedia.org/wiki/Love_Parade_disaster Love Parade அவலத்தில் ஒரு குழந்தையும் உயிரிழக்கவில்லை, ஏனெனில் பெற்றோர் அவர்களை விழாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. இதைத் தங்கள் அபிமான நடிகர்களை, தலைவர்களைக் காணவரும் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். எம்ஜிஆர் அரசியலில் இறங்கும்போது அவருக்கு இருந்த அரசியல் ஞானமும், கருணாநிதி மற்றும் திமுக பற்றி இருந்த அனுபவமும், இப்போது அரசியலில் ஈடுபட முயல்கின்ற நடிகர் விஜய்க்கு இல்லை என்பதே உண்மை. திமுக தனது அரசியல் வெற்றிக்காக எந்தெந்த வழிகளையும் நாடும் என்பதை எம்ஜிஆர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். எம்ஜிஆர் தனது கட்சியை தொடங்கிய காலத்தில், மலையாளர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதும், எம்ஜிஆர் படங்களை வெளியிடும் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதுமாகச் சம்பவங்கள் பல நடந்தன. திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திரைகளை கத்தியால் கிழித்து, எம்ஜிஆர் படத் தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி (சாண்டோ சின்னப்பா தேவர் உட்பட)பல வழிகளிலும் எம்ஜிஆருக்கு கருணாநிதி இடைஞ்சல்கள் செய்தார். ஆனால் இதனை எல்லாம் தாங்கி, எம்ஜிஆர் முதல்வரானார். அவர் நடித்த "நீதிக்குத் தலை வணங்கு" திரைப்படத்தில் உள்ள ஒரு பாடல் வரிகள் இப்படி இருந்தன, "பாதுகாவல் போர்வையிலே ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ இந்த உண்மைகளை ஊரறிய எடுத்துரைப்பேன் நாளை உன்னுடைய ஆட்டமெல்லாம் முடித்து வைப்பேன் நான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" இந்தக் கருத்துகள் இன்றும் அரசியல் சூழலில் பொருந்தக்கூடியவை. விஜய் அரசியலுக்கு குதித்திருப்பது, நீரின் ஆழத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி நீச்சலடிப்பது போன்றதொரு நிலை. அரசியல் ஆறு எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எத்தனை முதலைகள் வாயைப் பிளந்து அங்கே காத்திருக்கின்றன என்பதையும் அவர் சரியாக தெரிந்து கொள்ளவில்லை. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கியது. முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். இப்படியான அறிவிப்பு திமுகவின் பழைய அரசியல் நடவடிக்கை. இது “தகப்பன் பத்தடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி பாய்கிறான்” என்பதுபோல் இருக்கிறது. கரூரில் நடந்த விபத்தையும், யேர்மனியில் நடந்த Love Parade பேரழிவையும் ஒப்பிடும்போது, இதுவொரு தனிநபர் தவறு அல்ல. அமைப்புகளின், அனுமதிகளின், திட்டமிடலின் தோல்வி என்பதையும் காண முடிகிறது. கூடவே திமுகவின் கருணாநிதியின் அரசியல் பாதை என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அரசியல் உலகில் முன்நோக்கு, அனுபவம், திட்டமிடல் இன்றி இறங்கும் முயற்சிகள், கடின சோதனைகளுக்கு உள்ளாகும். பார்க்கலாம் விஜய் என்ன செய்யப் போகின்றார் என்று.