3 months 2 weeks ago
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு. அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻 முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்.. இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்?? ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄 அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது.. ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே தேவைப்படுகிறது 🙄🙄 பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄 இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻 உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻 ... Dr. கு.. அரவிந்தன்.... Aravindhan.G.Dr ·
3 months 2 weeks ago
இரண்டு சோற்றுப்பானையே இருக்கு.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
ஜூனியர்விகடன் கிசு கிசு செய்தியாக எழுதியிருக்கிறது.எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை.திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறது.அரசியல்விமர்சகர்களும் யுரியூப்பர்களும் அதற்கு மெருகூட்டி பரப்புவார்கள் என்பது அதற்குத்தெரியும்.அது பக்கச்சார்பற்ற ஊடகம் என்று எப்படிச் சொல்வீர்கள்?
3 months 2 weeks ago
பிகு சீமான் சபரிசனை சந்தித்தது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. ஜூனியர் விகடன் எழுதியுள்ளது. அதை எதிர்த்து சீமான் வழக்கு போடவில்லை. ஏன் என கேட்டால் நீங்கள் நேரம் இல்லை என சப்பை கட்டு கட்டுகிறீர்கள். பொதுவெளியில் வைக்கபட்ட குற்றசாட்டு, அது ஆதாரம் அற்ற கருத்து அல்ல. இவை எல்லாத்தையும் விட அரசியலுக்கு நெஞ்சுரம் வேண்டும். இது அனைவருக்கும் அமைவதில்லை. விஜை மிக மென்மையானவராக தெரிகிறார். அரசியலில் நல்ல மனது அல்லது கெட்ட மனது எது இருந்தாலும் வெல்லலாம், ஆனால் கெட்டவன் போன்ற மன உறுதி இல்லாமல் வெல்ல முடியாது. அதேபோல் கொஞ்சம் சமயோசிதமும் வேண்டும். இப்படி போய் பொறியில் சிக்கும் ஒருவர் நாளை முதல்வர் ஆனால், அமித் ஷாவும் நட்டாவும் கூடி கும்மி அடித்து விடுவார்கள்.
3 months 2 weeks ago
சுவியர் வெள்ளிக்கிழமை தான் வாழைப்பூ வாங்கி கொத்து கொத்தென்று கொத்தி வறுத்து சாப்பிட்டோம். இன்னமும் மிச்சம் இருக்கிறது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.
3 months 2 weeks ago
இதுவரைக்கும் விஜை வெளியில் வரவில்லை.கோழைத்தனமாக வீட்டில் இருந்து மனதிற்குள் வேதனைப்பட்டு அரசியலைத த்தொடர்வதா இல்லையா என்று குழம்பக்கூடாது.தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.அடுத்தது கூட்டத்தில் அவர்சுயமாகப்பேசம் பொழுது தெளிவாகப்பேசுகிறார்.ஆனால்தரவுகள் அவரிடம் இல்லை.சில விடயங்களுக்கு குறிப்புக்களைப்பார்த்துப்பேசம்போது சிறுபிள்ளைகள் போல எழுத்துக்கூட்டிப் படிக்கிறார்.அப்படிப்படிக்கும்பொழுதும் பிழைகளுடன் பேசுகிறார்.சிலவேளை எழுதியவர் தவறு விட்டிருந்தாலும் அதைச் சரிசெய்யும் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3 months 2 weeks ago
இதில் நான் என்ன அரசியல் பரப்புரை அல்லது எனக்கு பிடித்த தலைவரை தூக்கி பிடித்து கருத்து எழுதினேன். எந்தளவுக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்தேனோ, அதே அளவுக்கு சீமான் என்ன செய்ய கூடும் என்ற என் விமர்சனபார்வையையும் முன்வைத்தேன். இந்த திரியில் நீங்களும், நானும் இன்னும் பலரும் அரசியல் பேசினோம். அது தவறில்லை. இது ஒரு சோக செய்தி எனிலும் அரசியல் சார்ந்த திரிதான். ஆனால் இந்த திரியில், சீமானியர்கள் மட்டும்தான் இதை வைத்து சீமானுக்கு பஜனை பாடினீர்கள். நீங்கள் மட்டும் இல்லை, இன்னும் இருவரும். வேறு எவரும் - செத்தவீட்டில் அழும் என் அண்ணணை பாருங்கடா, தங்கம்டா என்ற வகையில் எழுதவில்லை. இதைத்தான் கேவலம் என்கிறேன்.
3 months 2 weeks ago
உறவுகளுக்கு அஞ்சலி.. விஜய் கரூர் பிரசாரத்தில் 40 பேர் பலியான சோகம்.. இலங்கை தமிழ் அரசுக்கட்சி வேதனை கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், நாடாளுமன்றம் குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது பிரார்த்தனைகள் என்று தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று இரவு நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் 17 பேர், குழந்தைகள் 10 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவரும், பாராளுமன்ற எம்.பியும், பாராளுமன்ற குழு தலைவருமான சிவஞானம் சிறீதரன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:- தமிழகத்தின் கரூர் மாவட்டம் - வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த மனவேதனைக்குரியது. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தால் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த எமது தொப்புள்கொடி உறவுகளான அப்பாவிப் பொதுமக்கள் 39 பேர் அநியாயமாக உயிரிழந்தமை எமக்கும், எமது மக்களுக்கும் மிகுந்த மனத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கடியும், வேதனையும் மிக்க இந்த துயர்மிகுந்த சூழலால் பாதிப்புற்றிருக்கும் எல்லாத்தரப்பினருடனும் உணர்வுரீதியாக நாமும் கரம்கோர்த்துக்கொள்கிறோம். மிகக்குறிப்பாக, புதுமுக அரசியல் கட்சியாக தனது புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரும், நண்பர் விஜய் அவர்களினது அரசியல் பயணம், துயரமும் - வேதனையும் மிக்க இந்த உயிர்த்தியாகங்களின் மீது, உறுதி மிக்கதும் மக்கள் மயப்பட்டதுமாக வலுவாக கட்டமைக்கப்படட்டும். இழப்பின் வலிகளையும் - ரணங்களையும் உணர்ந்தவர்களாக, ஈழத்தமிழர்களின் உரிமை மீட்புக்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணித்தும் - தீக்குளித்தும் உயிர்க்கொடையளித்த தமிழக உறவுகளின் அளப்பெரும் தியாகங்களை நெஞ்சேந்தியவர்களாக, இந்தப் பெருவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளும், அவர்களது குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக எமது பிரார்த்தனைகளும்" என்று கூறியுள்ளார். tamil.oneindia.com/news/srilanka/heartfelt-condolences-40-lives-lost-at-vijay-s-karur-rally-sri-lankan-tamil-party-mourns-victims-739109.html
3 months 2 weeks ago
எம்ஜியாருக்கு கூடாத கூட்டமா?அவர்கூட்டத்தில் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.அவருடைய இரசிகர்கள் அவருடைய படங்களில்பாடல்களில்உள்ள நல்ல புரட்சிகரகருத்துக்களால் உள்வாங்கப்பட்ட இரசிகர்கள்.அவருடைய வெற்றிப்படமான உலகம்சுற்றும் வாலிபனை திரையிட விடாது தடுப்பதற்கு எத்தனை முயற்சிகள் எடுத்தார்கள்.அப்படிப்பட்ட திமுகவின் சதிகளை முறியடித்து தான் இறக்கும்வரை திமுகவை கூப்பில் இருத்திய எம்ஜியார் உண்மையில் சாணக்கியன்தான்.
3 months 2 weeks ago
https://x.com/sahay_victory/status/1972263856354529408?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A டிஸ்கி செந்தில்பாலாஜி ஊரிலேயே போய் கூட்டம் போட்டா விடுவாரா? இதை வைத்து விஜையை ஓட…ஓட அடிப்பார்கள். என் கணிப்பு - சீமான் இதில் லீட் பண்ணுவார். இந்தத்த் தவறான எதிர்வுகூறலை தவிர்த்திருக்கலாமே,செய்தியையும் போட்டு விட்டு சீமான் மீது சேறடிப்பது மிகவும் வன்மமான செயல்.இப்படித்தான் அவர்பெட்டி வாங்கி விட்டார்என்று ஆதாரம் இல்லாமல் எழுதும் பொழுதும் ஒன்றுக்குப் பலமுறையோசிக்க வேண்டும்.
3 months 2 weeks ago
ஐயா இனி திருந்தி என்ன விட்டென்ன? எனக்கும் இன்னொரு தடவை பிறந்தால் எப்படி எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று பல கனவுகள் இருக்கின்றன.
3 months 2 weeks ago
வெற்றி பெற வாழ்த்துகள்
3 months 2 weeks ago
நேற்று வரை என்னை திமுக சொம்பு, 200 ரூபாய் உபி என சொன்னீர்களே? உங்களை போல் நான் எந்த கட்சிக்கும் நேர்ந்து விட்ட குதிரை அல்ல - த வெ க ஆதரவாளனும் இல்லை. திமுக. அதிமுக, பாஜக வுக்கு மாற்றாக விஜை முன்வைத்த கொள்கைகள் சிறப்பானவை என்பதால் அவரின் அரசியல் வருகையை ஆதரித்தேன், with reservations. அதே போல் நிலவரம் கலவரம் ஆகியதும் விஜையை போல் பனையூரில் போய் ஒழிந்துகொள்ளும் கோழையும் நானல்ல. சீமானின் கருத்து கூலிப்படையை பலவருடமாக யாழில் பல திரிகளில் தனி ஆளாக நின்று ஓட ஓட விரட்டிய எனக்கு இதை இட்டு ஒழிய வேண்டிய அவசியம் இல்லை. நான் த வெ க கட்சி ஆளில்லை - ஆகவே விஜை மீதும் தவறு இருக்கும் போது - அவர்களை கவர் எடுக்க எனக்கு எந்த தேவையும் இல்லை. This is not my beef.
3 months 2 weeks ago
இப்படி மரணவீட்டில் சுய தம்பட்டம் அடிக்கும் பிண அரசியலை இதில் சீமான் கூட செய்யவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் செய்கிறார்கள்…. இதுக்கு பெயர்தான் எச்ச….
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
தவெக வின் யாழ்கள பொதுச்செயலாளரைக் காணவில்லை.
3 months 2 weeks ago
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) இலங்கை ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்களாதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா , அவுஸ்ரேலியா , இங்கிலாந்து , இலங்கை 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) இந்தியா , அவுஸ்ரேலியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா . 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கௌகாத்தி 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? தென்னாபிரிக்கா 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்களாதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இலங்கை 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்ரேலியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா
3 months 2 weeks ago
அநியாயமாக உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைவதாக. அரசியலை பெருத்தவரை விஜய் ஒரு தற்குறியாகும், சினிமா போல் எழுதிக்கொடுத்தை ஸ்டைல் ஆக வசிப்பது தான் அரசியல் என நினைக்கின்றார். அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டமாகும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் கவனமாக வைக்க வேண்டும், அல்லாவிடில் அவை எதிரிக்கு சாதகமா அமைந்து விடும். விஜய்யின் கட்சிக்கு ஆகக்குறைத்தது சீமானின் கட்சி போல் ஒரு உட்கட்டமைப்பு இருப்பது போல் தெரியவில்லை, ஊடகங்களால் அவர் பெருமி ஊதப்பட்டுள்ளார் (media hype). என்னை பொறுத்தவரை, விஜய் என்பவர் அரசியலுக்கு பிஜேபினால் கையில் வேலுடன் நேர்ந்து அனுப்பப்பட்ட கிடாயாகும், இந்த இடத்தில் ரஜனி தப்பி விடாடார்.
3 months 2 weeks ago
செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்? சீமான் ஒழிக சீமான் சாகனும் சீமானை வர சொல்லுங்க சீமான குத்தி கொல்லணும் சொன்னவன் எவனும் வரல... சங்கு சுட்டாலும் வெண்மைதான் 🙌"