3 months 2 weeks ago
மாவீரர் வீரவணக்க நினைவாலயம் இதுவே வரலாற்றில் மாவீரர்களுக்கென எழுப்பப்பட்ட முதலாவது பொது வீரவணக்க நினைவாலயம் ஆகும். இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் உயரம்: 28 அடி செய்தோர்: திர்சிகா கலைக்கூடம் உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள் எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990 வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது
3 months 2 weeks ago
கரும்புலிகளின் வீரவணக்க நினைவாலயம் தம்பலகாமம், தலைநகர் 28/03/2004 தலைநகரின் தம்பலகாமத்தை பிறப்பிடமாகக் கொண்ட கரும்புலி மறவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட தூண் இதுவாகும். தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். இஞ்சால் தெரிவது திருமலை துறைமுகத்தினுள் ஊடுருவித் தாக்கிய கடற்கரும்புலி மேஜர் மதுசாவின் திருவுருவப்படமாகும். .
3 months 2 weeks ago
நீங்கள் சொல்லியதன் ஆழ, அகலம் புரியாது, அதில் ஒரு குறித்த உதாரணத்தை தான் நீங்கள் விபரித்து இருப்பது. இரான் எனும் குறித்த விடயத்தில், நீங்கள் செய்வது virtue signaling. பொதுவெளி என்பதால் எவரும் சுட்டிக்காட்டலாம்