Aggregator

பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது 12 Nov, 2025 | 01:04 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது. பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.) அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார். அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர். சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது. சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது. அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர். அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: சல்மான் அகா இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/230131

பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது

12 Nov, 2025 | 01:04 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1111_wanindu_hasaranga.png

ஆறு வீரர்கள் 25க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் வனிந்து   ஹசரங்கவைத் தவிர மற்றையவர்களால் பெரிய எண்ணிக்கைகளைப் பெற முடியாமல் போனது. அது இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மத்திய வரிசையில் தனித்து போராடிய வனிந்து ஹசரங்க அரைச் சதம் குவித்த போதிலும் அவரால் இலங்கையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.

பெத்தும் நிஸ்ஸன்க, அறிமுக வீரர் ஆகிய இருவரும் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

1111_kamil_mishara.png

ஆனால்,காமில் மிஷார (38), பெத்தும் நிஸ்ஸன்க (29), குசல் மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஆட்டம் கண்டது. (90 - 3 விக்.)

அந்த மூவரையும் ஹரிஸ் ரவூப் ஆட்டம் இழக்கச் செய்தார்.

அதன் பின்னர் சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர்.

சதீர சமரவிக்ரம 39 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

சரித் அசலன்க 5ஆவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது ஜனித் லியனகே 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கமிந்து மெண்டிஸ் (9) ஒற்றை இலக்க எண்ணிக்கையுடன் வெளியேறினார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த துஷ்மன்த சமீர 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து போராடிய வனிந்து ஹசரங்க 49ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 279 ஓட்டங்களாக இருந்தபோது 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_haris_rauf_3_quick_wkts.png

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.

சல்மான் அகா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்தார். அவர் 87 பந்துகளில் 9 பவுண்டறிகள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

1111_salman_agah.png

ஹுசெய்ன் தலாத் 62 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் 24ஆவது ஓவர்வரை பாகிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலங்கை அதன் பின்னர் ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டது.

அப்போது 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம்  பெற்றிருந்த பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், சல்மான் அகா, ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட்டனர்.

1111_hussain_talat.png

அதனைத் தொடர்ந்து சல்மான் அகா, மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: சல்மான் அகா

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/230131

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

3 months 2 weeks ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது. பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள்ளீடுகளையும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து கருத்துக்களையும் பெறுவதும் இந்தக் குழுவிற்குப் பணிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஏப்ரல் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமையாகும் என்று அமைச்சர் நாணயக்கார மீண்டும் வலியுறுத்தினார். அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், சர்வதேச தரங்களுக்கு இணங்க, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரங்களை நிலைநிறுத்தும் அதே வேளையில், சமகால உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய காலத்திற்குள் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய விடயங்களை உறுதியான முறையில் அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452661

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

3 months 2 weeks ago

New-Project-68.jpg?resize=750%2C375&ssl=

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது.

பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள்ளீடுகளையும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து கருத்துக்களையும் பெறுவதும் இந்தக் குழுவிற்குப் பணிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஏப்ரல் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமையாகும் என்று அமைச்சர் நாணயக்கார மீண்டும் வலியுறுத்தினார்.

அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், சர்வதேச தரங்களுக்கு இணங்க, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரங்களை நிலைநிறுத்தும் அதே வேளையில், சமகால உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய காலத்திற்குள் சட்டத்தை இரத்து செய்வதற்கான தொடர்புடைய விடயங்களை உறுதியான முறையில் அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1452661

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்

3 months 2 weeks ago
மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்! போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர். மாலைத்தீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் Avishka Putha என்ற படகு, அந் நாட்டு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோர காவல்படை அதிகாரிகளால் நவம்பர் 7 ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டது. மாலைத்தீவு பொலிஸாரின் கூற்றுப்படி, படகில் 355 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்தது. அதில் இருந்த ஐந்து இலங்கை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாலைத்தீவு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட படகில் சிறப்பு சோதனை நடத்தினர். இந்த ஆய்வில் 24 மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 58.6 கிலோ ஹெரோயின் மற்றும் 297.3 கிலோ மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸார், மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மாலைத்தீவு காவல்துறை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள். இந்த பறிமுதல் மாலைத்தீவு பிராந்திய நீரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கண்டறிதல் என்று மாலைத்தீவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், சந்தேக நபர்களையும் போதைப்பொருள் கடத்தலையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மாலைத்தீவு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருவதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த விசாரணைகளைத் தொடங்குவதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் குழுவும் ஒரு சிறப்பு கடற்படைப் பிரிவும் ஏற்கனவே மாலைத்தீவுக்குச் சென்றுள்ளன. எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர். https://athavannews.com/2025/1452667

8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை

3 months 2 weeks ago

13 Nov, 2025 | 12:26 PM

image

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால்   முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி   தினேஷன்  ஆஜராகியிருந்தார்.

வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி   ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.

தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி  . தனுஷன் அவர்கள், "இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்" கடுமையாக வலியுறுத்தினார். 

மேலும், "எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும்" எனவும், "கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்" மன்றை அவர் கோரினார்.

அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட   நீதிபதி  , குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

https://www.virakesari.lk/article/230207

போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

3 months 2 weeks ago

13 Nov, 2025 | 11:36 AM

image

மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார்  மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12) மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி   எம். மிஹால்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி   யு. ஆர். டி சில்வா   ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சமீப காலமாக, மன்னார் பிரதேசத்தில் இடம் பெறும் பாரிய போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட கால கடூழிய சிறை தண்டனைகள் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/230206

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு!

3 months 2 weeks ago

download-1-6.jpg?resize=300%2C168&ssl=1

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு!

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 கால்பந்தாட்டத்திற்கான டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

2026 உலகக் கோப்பைக்காக FIFA போட்டியில் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை, ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டியில் இந்த விலை முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1452679

இலங்கை - இந்திய கடற்படைகள், கடலோர காவற்படைகள்: 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு (IMBL) நிறைவடைந்தது

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

13 Nov, 2025 | 08:43 AM

image

இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.

வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் தலைமையில் இந்திய குழுவும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, கடல்சார் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முந்தைய சந்திப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளனர். 

மேலும் IMBL முழுவதும் வெளிப்படும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை கட்சிகள் வலுப்படுத்தின.

இந்நிகழ்வில் வட மத்திய கடற்படைப் பகுதியின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07.jp

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07__1

WhatsApp_Image_2025-11-13_at_05.28.06.jp

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07__2

WhatsApp_Image_2025-11-13_at_05.28.08.jp

https://www.virakesari.lk/article/230204

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
சுருக்கமாக சொல்லி இருந்தேன் பானையில் இருந்தால் தான் - பானையில் இருப்பதை காட்டி அது சரிபார்க்கப்பட்ட, அரசும், வியாபாரமும் இணங்கிய (எவ்வளவு) பின்பே அரசுக்கு சொந்தம். இதை எதுவும் மாற்றாது. அந்த வட் போன்றவை (கம்பனிகள், அரசு சார்பாக, தாம் அல்லாத வேறு கம்பனிகளில் அல்லது வேலையாளர்கள் இடம் இருந்த்து சேகரிப்பது), இப்போது UK 'பாதுகாக்க' முயற்சி எடுக்கிறது. (அனால் இப்போது , 3 மாத தவணையில் இப்போது vat return செய்யவேண்டும். மற்றவையும் அப்படி தவணைக்கு வந்து இருக்கலாம்) வட் போன்றவை கம்பனிக்கான வரி இல்லை, கம்பனிகள் செய்வது இடைத்தரகர் (வங்கிகள் போல) வேலை. வட் போன்றவற்றில் கம்பனிகள் வங்கிகள் போல செய்லடுவஹால் தான் (இதன் விளக்கம் பிறிம்பு, ஆனால் சம்பளம் வங்கிக்கு போவதை ஒப்பிடலாம்) , முன்பு சொன்ன கணக்கின் பின்பே அரசுக்கு சொந்தம், முறியலாம் என்று தெரிந்தே. அதில் கூட பானையில் இருந்தால் தான் என்பதே விளைவாக இருக்கிறது. ஏனெனில் நிலையான (சொத்துக்கு) கடன் கொடுத்தவர்களை தாண்டியே. வியாபாரம் நன்றாக நடக்கும் போது, நட்டத்தில் எப்படி வரி அணுகப்படுகிறதோ , அப்படியே முறிவிலும். அதனால் , முறிவில், அரசு சரிபார்த்து, வியாபாரமும் இணங்கிய வரியே, கடன், (ஆகவே எந்த முறிவு என்றாலும் ) பிற்போடப்பட்ட (வரியே), அதாவது எவ்வளவு என்று தெரியும் வரியே, கடன். (இதை இழக்கலாம் என்று தெரிந்தே செய்கிறது - பிற்போடுதல், முதலீடு ) ஏனைய வரி (வட் போன்றவை இருந்தால், முறியும் போது) அரசுக்கு தெரியாது எவ்வளவு என்று. அனால், முறிவில், நடப்பாண்டில் (முறியும்) கம்பனிக்கான வரி இருக்க முடியாது, ஏனெனில் போட்ட முதலையும் கொண்டு போகும், நட்டத்தின் மிக உச்சக் கட்டம். வரி கணக்கியலை பொறுத்து, கடந்த வருடத்தின் இலாபத்தை கூட இல்லாமல் ஆக்கலாம் முறிவு. இவை போன்ற காரணங்களினால் தான், (பானையில் இருந்தால்), சரி பார்த்து, இணங்கிய பின்பே அரசுக்கு சொந்தம் அல்லது சொந்தம் இல்லை. மறுவளமாக முறிவில் வரி நாமம் (பிற்போடுதல், முதலீடு உட்பட) என்றால், நடத்திலும் (ஓடும் கம்பனிகள்) வரிக்கு அரசுக்கு (பகுதியாக) நாமம் போடுகின்றன என்று வரும். ஏனெனில், முறிவு நடத்த்தின் உச்சக் கட்டம். அப்படி வரியின் அடிப்படை இருக்கும் என்றால், விளைவுகள் நான் சொல்ல தேவை இல்லை. எனவே, ஏய்க்கப்படாத வரி நாமம் அல்ல, வரியின் அடிப்படை.

மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால

3 months 2 weeks ago
போதையுடனேயே போக்காட்டி விடுவினம் ...இந்த நாலு வருசத்தை.... அனுர அரசு

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months 2 weeks ago
பாகிஸ்தான் முஸ்லிம் என்ற அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாடு குண்டு வைப்பது பயங்கரவாதத்திற்கு பயிற்சி கொடுப்பது என்ன என்று தெரியாத தன்னை ஒரு அமைதி பூங்காவாக பராமரித்து வருகின்ற ஒரு நாடு அப்படியான செயல்கள் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவில் உள்ள புனித போர் போராளிகளின் அமைதி மீதான ஆர்வம் சொல்ல வேண்டியது இல்லை. அப்படி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசும் , இந்தியாவில் ஒரு முஸ்லிம் கட்சியும் , இலங்கை அரசும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தங்களது கண்டணங்களை தெரிவித்தது ஏற்று கொள்ள முடியாதது.

மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால

3 months 2 weeks ago
துபாய், துருக்கி, தாய்லாந்து - இந்த நாடுகள் தங்கள் நாட்டில் குற்றம் நடக்காமல் வேறு நாடுகளில் நடந்தால் கண்டும் காணாமல் விடுவார்கள், அதோட இந்த நாடுகளில் ஆள்மாறாட்டம் செய்து வேற பெயர்களில் கள்ள கடவுசீட்டு முதல் ஆவணங்களை எடுப்பது இலகு. இப்படியான தாதாக்கள் பெரும்தொகை கறுப்பு பணத்தை இந்த நாடுகளில் முதலிடுகிறார்கள், செலவளிக்கிறார்கள். சில நாடுகள் விட்டுப்பிடிப்பார்கள். ஹக்கான் அய்க் என்பவரை தேடிப்பாருங்கள். துருக்கியிலே பல மில்லியன்கள் முதலீட்டு பல சொகுசு கார்களை வாங்குமட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அவுஸ் ஆளை மடக்கித் தூக்கினவுடன் அனைத்தும் துருக்கி அரசுடைமையாகிவிட்டது. அவுசிலேயே போலீசில் இருந்து நீதிபதிகள் வரை (பலர் கொடுத்த தீர்ப்புகள் அடிப்படையில்) வாங்குபவர்கள் மற்ற நாடுகளில் இதைவிட அதிகமாக செய்வார்கள்.

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

3 months 2 weeks ago
இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது.................. https://www.jeyamohan.in/222076/ குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும் November 13, 2025 அன்பின் ஜெ, எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன். நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார். நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார். நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார். இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன. இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது? அன்புடன் ராஜேஷ் பெங்களூர் அன்புள்ள ராஜேஷ், இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம். குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர். குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது. ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும். நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான். பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது. குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார். இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை. பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை? ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை. நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்? “போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன். மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள். அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான். ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை. நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’ ‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும். ஜெ

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

3 months 2 weeks ago

இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும்.

இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது..................

https://www.jeyamohan.in/222076/

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

November 13, 2025

big.jpg

அன்பின் ஜெ,

எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன்.

நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார்.

நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார்.

நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார்.

இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன.

இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது?

அன்புடன்

ராஜேஷ் 

பெங்களூர்

அன்புள்ள ராஜேஷ்,

இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர்.

குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது.

ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன.

அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.

நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான்.

பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது.

குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார்.

இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை.

பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை?

ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை.

நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்?

“போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள்.

அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான்.

ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள்.

பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு.  வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை.

நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’

‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும்.

ஜெ

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

3 months 2 weeks ago
உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார். ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 13, 2025 காலை 6:41 GMT+11 2 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், நவம்பர் 6, 2025 அன்று கிரேக்கத்தின் ஏதென்ஸில் உரையாற்றுகிறார். REUTERS/Stelios Misinas/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நயாகரா-ஆன்-தி-லேக், கனடா, நவம்பர் 12 (ராய்ட்டர்ஸ்) - உக்ரைனில் ஏற்பட்ட எரிசக்தி ஊழல் ஊழல் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், அதை கியேவ் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார், இது நாட்டின் அரசாங்கத்தின் மீது புதிய பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது என்று கூறப்படும் $100 மில்லியன் ஊழல் திட்டம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில். ராய்ட்டர்ஸ் கட்டண கண்காணிப்பு செய்திமடல் என்பது சமீபத்திய உலகளாவிய வர்த்தகம் மற்றும் கட்டணச் செய்திகளுக்கான உங்கள் தினசரி வழிகாட்டியாகும். இங்கே பதிவு செய்யவும் . "அவர்கள் மிகவும் வலுவாக செயல்படுகிறார்கள். ஊழலுக்கு இடமில்லை, குறிப்பாக இப்போது. அதாவது, மக்களின் பணம்தான் முன்னணியில் செல்ல வேண்டும்," என்று கனடாவில் நடந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் ஓரத்தில் கல்லாஸ் கூறினார். "அவர்கள் இதை மிக விரைவாக மேற்கொண்டு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். டாப்னே சலேடகிஸ் அறிக்கை; லில்லி பேயர் எழுத்து; கிறிஸ் ரீஸ் மற்றும் நிக் ஜீமின்ஸ்கி தொகுத்தல்.

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

3 months 2 weeks ago

உக்ரைன் ஊழல் ஊழல் 'மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் கூறுகிறார்.

ராய்ட்டர்ஸ் மூலம்

நவம்பர் 13, 2025 காலை 6:41 GMT+11 2 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவரும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான கல்லாஸ் கிரேக்கத்திற்கு வருகை தருகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், நவம்பர் 6, 2025 அன்று கிரேக்கத்தின் ஏதென்ஸில் உரையாற்றுகிறார். REUTERS/Stelios Misinas/கோப்பு புகைப்படம் கொள்முதல் உரிம உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது

நயாகரா-ஆன்-தி-லேக், கனடா, நவம்பர் 12 (ராய்ட்டர்ஸ்) - உக்ரைனில் ஏற்பட்ட எரிசக்தி ஊழல் ஊழல் "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்றும், அதை கியேவ் தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை இரண்டு அமைச்சரவை அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார், இது நாட்டின் அரசாங்கத்தின் மீது புதிய பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது என்று கூறப்படும் $100 மில்லியன் ஊழல் திட்டம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில்.

ராய்ட்டர்ஸ் கட்டண கண்காணிப்பு செய்திமடல் என்பது சமீபத்திய உலகளாவிய வர்த்தகம் மற்றும் கட்டணச் செய்திகளுக்கான உங்கள் தினசரி வழிகாட்டியாகும். இங்கே பதிவு செய்யவும் .

"அவர்கள் மிகவும் வலுவாக செயல்படுகிறார்கள். ஊழலுக்கு இடமில்லை, குறிப்பாக இப்போது. அதாவது, மக்களின் பணம்தான் முன்னணியில் செல்ல வேண்டும்," என்று கனடாவில் நடந்த ஏழு வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் ஓரத்தில் கல்லாஸ் கூறினார்.

"அவர்கள் இதை மிக விரைவாக மேற்கொண்டு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

டாப்னே சலேடகிஸ் அறிக்கை; லில்லி பேயர் எழுத்து; கிறிஸ் ரீஸ் மற்றும் நிக் ஜீமின்ஸ்கி தொகுத்தல்.

மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 months 2 weeks ago
மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 11, 2025 மாலை 4:35 GMT+11 நவம்பர் 11, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பின் ஒரு பகுதியாக, மே 7, 2022 அன்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோவில், கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஷ்ய மிக்-31 போர் விமானம், ரெட் சதுக்கத்தின் மீது பறக்கிறது. REUTERS/Maxim Shemetov உரிம உரிமைகளை வாங்குகிறது ., புதிய தாவலைத் திறக்கிறது மாஸ்கோ, நவம்பர் 11 (ராய்ட்டர்ஸ்) - கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையுடன் கூடிய மிக்-31 ஜெட் விமானத்தை 3 மில்லியன் டாலர்களுக்கு திருட ரஷ்ய விமானிகளைத் தூண்டும் உக்ரைனிய மற்றும் பிரிட்டிஷ் உளவாளிகளின் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட விமானம், ருமேனிய நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள நேட்டோ விமான தளத்தை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும், அங்கு அது வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் FSB கூறியதாக RIA செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. ராய்ட்டர்ஸ் சஸ்டைனபிள் ஸ்விட்ச் செய்திமடல் மூலம் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களைப் பாதிக்கும் சமீபத்திய ESG போக்குகளைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே பதிவு செய்யவும் . சோவியத் சகாப்த கேஜிபியின் முக்கிய வாரிசான எஃப்எஸ்பி, கடத்தப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தி உக்ரைனும் பிரிட்டனும் பெரிய அளவிலான "ஆத்திரமூட்டலை" திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரேனிய இராணுவ உளவுத்துறை ரஷ்ய விமானிகளை $3 மில்லியனுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முயன்றதாகவும் கூறியது. "எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை சேவைகளின் பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கான திட்டங்களை முறியடித்துள்ளன" என்று FSB ஐ மேற்கோள் காட்டி RIA தெரிவித்துள்ளது. உக்ரேனிய மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையில் பணிபுரிவதாகவும், ஐரோப்பாவிற்கு மிக் விமானத்தை ஓட்ட ஒரு ரஷ்ய விமானிக்கு 3 மில்லியன் டாலர்களை வழங்குவதாகவும், அந்த விமானிக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டதாகவும் கூறிய ஒரு நபரின் செய்திகள் மற்றும் பதிவுகளின் படங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ராய்ட்டர்ஸால் கணக்கை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ரஷ்யாவின் கின்சல் என்பது வான்வழி ஏவப்படும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும், இது மாஸ்கோ ஹைப்பர்சோனிக் என்று அழைக்கிறது, இது மிக அதிக வேகம் மற்றும் சூழ்ச்சி விமானப் பாதைகளைக் கையாளும் திறன் கொண்டது, இது வான் பாதுகாப்புகளைக் கண்காணிப்பதையும் இடைமறிப்பதையும் கடினமாக்கும் நோக்கம் கொண்டது. ரஷ்யா நீண்ட காலமாக பிரிட்டனை தனது முக்கிய எதிரியாகக் காட்டி வருகிறது. லண்டன் உக்ரைன் போரைத் தூண்டிவிடுவதாகவும், பிரிட்டிஷ் உளவுத்துறை ரஷ்யாவிற்குள் ஆழமான நடவடிக்கைகளை உக்ரைனுக்கு வழங்க உதவுவதாகவும் மாஸ்கோ குற்றம் சாட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை மாஸ்கோவின் ஏகாதிபத்திய பாணி நில அபகரிப்பு என்று பிரிட்டன் வர்ணிக்கிறது. ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் குழப்பத்தை விதைக்க ரஷ்ய உளவுத்துறை முயற்சிப்பதாக லண்டன் பலமுறை எச்சரித்துள்ளது. மாஸ்கோவில் ராய்ட்டர்ஸ் மற்றும் மெல்போர்னில் லிடியா கெல்லி செய்தி வெளியிட்டனர். ஸ்ரீ நவரத்தினம்/கை ஃபால்கன்பிரிட்ஜ் எடிட்டிங். https://www.reuters.com/business/aerospace-defense/russia-says-it-foiled-ukrainian-british-plot-steal-mig-31-jet-state-media-2025-11-11/