3 months 2 weeks ago
இந்தியாவும் தமிழ் நாடும் அப்படித்தான் ஐயா, பெரியவரே. ஆனால் பாலகன் நான் சொல்ல வந்தது - இப்படியான கொலைகள் நடக்கும் போது முன்னர் இருந்த அரச அலட்சியம் இங்கே இல்லை. மாறாக ஒரு மாநில அரசு செய்ய கூடிய, வேண்டியதை தா நா அரசு செய்துள்ளது. 🤣 ஈ வே ரா வோ…. வே. பி யோ…. நல்லதை நல்லதெனவும், அல்லதை அல்ல எனவும் சொல்லியே பழக்கம். அப்படி சொல்லும் போது எந்த வண்ணத்தை எவர் தீட்டினாலும் பரவாயில்லை 🤣.
3 months 2 weeks ago
தவறு கர்ப்பமாகுமாறு ஊக்குவிக்கப் படும் பள்ளி மாணவிகளின் வயதில் இருக்கிறது. பள்ளி மாணவிகள் என்றால் அதிக பட்சம் 18 வயது தான் அனேக நாடுகளில் வரும். ரஷ்யாவின் தூர தேசங்களான சைபீரியாவில் இன்னும் வறுமை, வேலையின்மை என்பன இருக்கின்றன. இந்தப் பிரதேசங்களில் "மாட்டுப் பட்டிருக்கும்" பள்ளி மாணவிகள் பொருளாதாரம் நாடிக் கர்ப்பமாக ஆரம்பித்தால் ரஷ்யாவின் அனாதைக் குழந்தைகள் இல்லங்களில் தேங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ரஷ்யாவில் பல அனாதைக் குழந்தைகள் இல்லங்கள் இருக்கின்றன என்பதும்,அங்கேயிருந்து மேற்கு நாட்டினர் குழந்தை தத்தெடுப்பது வழமையென்பதும் உங்களுக்குத் தெரியுமா? இதைப் பற்றிய அக்கறை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. நீங்களோ வழமை போல நீங்கள் சிறிலங்காவில் இருந்த போதே உங்களுக்கு சோறு போட்ட மேற்கு நாட்டினரைத் திட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
3 months 2 weeks ago
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ எனவும் வாதாடினார். நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார். அதேசமயம் பொலிஸாரின் தரப்பில் ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து உத்தரவிட்டது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் பிணை அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். https://athavannews.com/2025/1438500