Aggregator
செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே காணப்படுகின்றது - சட்டத்தரணி ரத்னவேல்
செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே காணப்படுகின்றது - சட்டத்தரணி ரத்னவேல்
08 JUL, 2025 | 12:08 PM
![]()
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்
நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் புதியதொரு இடத்தையும் கண்டுபிடித்து அகழ்வாராச்சி இடம்பெறுகின்றது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மீட்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் யாவுமே ஒரு குறைந்தளவு - அதாவது ஒன்றரையடிக்குள்ளான ஒரு இடத்தில் புதைத்திருக்கின்றார்கள்.
இது சாதாரணமாக உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக தெரியவில்லை, மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக தெரியவில்லை அதற்கு மாறாக ஏனோதானோ என்று அவசர அவசரமாக சடுதியாக செய்யப்பட்ட விடயமாக தெரிகின்றது.
சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது .
இந்த விடயத்தில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பிரிவு
பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பிரிவு
08 JUL, 2025 | 11:11 AM
![]()
நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்;
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882
பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி - 071 8592067
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் - 071 8592714
பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் - 071 8591883
Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் - 011 2887973
வாட்ஸ்அப் இலக்கம் - 071 8592802
பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி - http://www.police.lk/
பொலிஸ் முகநூல் பக்கம் - (https://www.facebook.com/srilankapoliceofficial)
பொலிஸ் யூடியூப் - (https://www.youtube.com/@srilankapoliceofficial)
பொலிஸ் எக்ஸ் (X) தளம் - https://x.com/SL_PoliceMedia?fbclid=IwY2xjawJtQNtleHRuA2FlbQIxMAABHvHLAIRrlUPeQeM0ReDB_ywX7_qDJjgTZYxUFaSzSHcLH9TVEUmCTZu8ewUw_aem_LYvQlcoYckoWxnjZgQkubw
பொலிஸ் மின்னஞ்சல் முகவரிகள் - dir.media@police.gov.lk / oic.media@gov.lk / policemedia.media@gmail.com
பொலிஸ் தபால் இலக்கம் - பொலிஸ் ஊடகப் பிரிவு, 14ஆவது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை , கொழும்பு
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான வழிமுறைகள் ஊடாக பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம் ?
உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம் ?
Published By: DIGITAL DESK 3
08 JUL, 2025 | 01:03 PM
![]()
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைந்து வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? அல்லது சேர்க்கப்படவில்லையா என்பதைச் அறிந்து கொள்ள ஒன்லைன் போர்ட்டல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த போட்டல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் வாகனப் புகை பரிசோதனை விதிமுறைகளை அமல்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சேவையாகும்.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் உத்தியோகபூர்வ Vet.lk இணையத்தளம் மூலம் தங்கள் வாகன நிலை பற்றி அறிந்து கொள்ள கொள்ளலாம்.
இந்த போட்டலில் வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து தங்கள் வாகனங்களின் கருப்புப் பட்டியலில் உள்ளதா என அறிய முடியும்.
வாகன உரிமையை மாற்றும் போது ஏற்படும் சிக்கல்களைத் தடுத்தல், தீர்க்கப்படாத போக்குவரத்து விதி மீறல்களைத் தீர்த்தல மற்றும் வாகனங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள விசாரணைகளை நிர்வகித்த்ல ஆகியவை இதன் நோக்கமாகும்.
அதிகளவான புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் காண, புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறியும் திட்டம் மற்றும் வீதியோர வாகன சோதனைத் திட்டங்கள் போன்ற திட்டங்களை வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தீவிரமாக நடத்துகிறது.
அத்தகைய வாகனங்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதங்கள் மூலம், வேராஹெரா மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்காக தங்கள் வாகனங்களை கொண்டுவருமாறு அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்புக்களை செவிமெடுக்க தவறினால், வாகனம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், வாகனம் ஒன்றின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் சான்றிதழ் மற்றும் வருமான உரிமம் சோதனை மற்றும் தேவையான பழுதுபார்ப்புகளுக்கு உட்படும் வரை புதுப்பிக்கப்படாது.
மேலும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாகனம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு அமைப்பில் பதிவு செய்யப்பட்டு, வாகனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு உத்தியோகபூர்வ சேவைகள் அல்லது பரிவர்த்தனைகளையும் நிறுத்துகிறது.
அனைத்து வாகன உரிமையாளர்களும், குறிப்பாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள், சட்ட அல்லது நிர்வாக சிக்கல்களைத் தவிர்க்க இந்த வசதியைப் பயன்படுத்தி தங்கள் வாகனத்தின் நிலையை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் www.vet.lk என்ற உத்தியோகபூர்வ இணைய சேவையை அணுகி சரிபார்க்கலாம்: உங்கள் வாகனம் கருப்புப் பட்டியலில் உள்ளதா?