Aggregator
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் - பொலிஸ்
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் - பொலிஸ்
08 JUL, 2025 | 03:19 PM
![]()
சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து.
சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து.
சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.
எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

லலித், குகன் உள்ளிட்ட யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால
லலித், குகன் உள்ளிட்ட யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால
Published By: DIGITAL DESK 2
08 JUL, 2025 | 02:57 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தை அடுத்து ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்தார் என்பதை அறிவீர்களா?.
2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என்றும், இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஆயினும் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா? என்றும் மற்றும் மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என்றும் கேட்டார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார்,குகன் முருகானந்தம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 டிசம்பர் 11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். எனினும் இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற நான்கு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது டன் இந்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.
மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார்.
கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.
தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார்
பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார்.

அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார்.
தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்- கனடா பிரதமர்
செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்!
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்!
செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்!
Published By: VISHNU
08 JUL, 2025 | 09:30 PM
![]()
செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மர்ம வாகனம் செம்மணியை நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை. அந்த மர்ம வாகனமானது எனது வீட்டு அருகாமையிலும் வந்திருந்தது. வழக்காளியான என்னை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
வழக்கு தொடர்பாக 1995 - 2000 வரையான காலப்பகுதியில் இங்கே கடுமையான செய்தி தணிக்கைகள் இருந்த நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளும் பொலிஸ் செயல்பாடுகளும் இல்லாது நிர்வாக ரீதியான செயல்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் வசம் இருந்ததால் மக்கள் தாமாக முன்வந்து எந்த சாட்சியங்களையும் பதியவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் நான் இந்த விடயத்தை இன்று கையில் எடுத்ததால் அரியாலை பகுதியில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் தமது சாட்சியங்களை எனக்கு தந்து கொண்டிருக்கின்ற நிலையிலே இந்த சாட்சியங்களை அச்சுறுத்துகின்ற அல்லது இந்த சாட்சியங்கள் சாட்சி கூற வருவதை தடுப்பதாக இந்த செயல்பாடு காணப்படுகிறது.
அதாவது 1998ஆம் ஆண்டு முதலாவது குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய புதைகுழிகள் தொடர்பான அறிக்கையிலே, பதினைந்தாவது புதைக்குழியாக குறிப்பிடப்பட்ட ஏ-9 வீதி, பொன்னம்பலம் சந்திக்கு அருகாமையில் இருக்கின்ற இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற கிணற்றிலிருந்து அகழ்வு இடம் பெற்றது. அதற்குப் பின்னால் இப்போதும் இராணுவ முகாம் இருக்கின்றது. அந்த இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிக்குள் தான் அந்த மர்ம வாகனம் சென்றது. இதனை நான் அவதானித்தேன்.
நான் வசிக்கின்ற வீட்டுக்கான வீதியானது எனது வீட்டுடனேயே முடிவடைகின்றது. ஆகையால் வேறொரு வாகனம் அந்த ஒழுங்கைக்கு வருவதற்கான அவசியம் இல்லை. இரண்டு வாகனங்கள் இவ்வாறு வந்திருந்தது. இதனை நேரில் கண்ட ஒருவர் எனக்கு தெரிவித்திருக்கின்றார்.
ஆகவே எவ்வாறான அச்சுறுத்தல்கள், எவ்வாறான செயற்பாடுகள் நடந்தாலும் இந்த வழக்கில் நான் உறுதியாக இருக்கின்றேன். மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள். இதன்மூலம் பல உண்மைகள் வெளிவருகின்றன. அதனை நாங்கள் நீதிமன்ற செயற்பாட்டுக்கு சமர்ப்பித்து தொடர்ந்து தமிழ் மக்களுக்கான நீதிக்கான அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுப்பேன் என்றார்.