3 months 2 weeks ago
39 பேரை பலி கொண்ட விஜய் பிரசார கூட்டம்- புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எந்த நேரத்திலும் கைது? தலைமறைவா? 28 Sep 2025, 8:45 AM கரூரில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் இறந்துள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூரில் விஜய் பிரசார கூட்டத்துக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் 39 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு விவரம்: குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன் A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கைது? புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் ஆகிய 3 பேரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் தவெக தலைவர் விஜய்யையும் இந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமறைவா? கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. https://minnambalam.com/vijays-campaign-rally-claims-40-lives-pussy-anand-nirmal-kumar-to-be-arrested-anytime/
3 months 2 weeks ago
கரூர் பேரணி நெரிசல் உயிரிழப்பு: தமிழக் வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கைதாவாரா? - தமிழக ஊடகச் செய்திகள் Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 09:59 AM தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 தமிழகத்தின் சட்டசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களையும், மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பெறும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் த.வெ.க ஆகிய கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் மக்கள் சந்திப்பு நடத்தியிருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் அதிக மக்கள் தொகை காரணமாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்னர் மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022ஆம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் ஷகூறியிருந்தது. இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 39 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/226280
3 months 2 weeks ago
“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார் 28 Sep, 2025 | 09:12 AM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார். இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது. இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்தார். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்குத் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்து இயங்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார் https://www.virakesari.lk/article/226278
3 months 2 weeks ago
“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்
28 Sep, 2025 | 09:12 AM

(நா.தனுஜா)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய” அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்துள்ளார்.
இலங்கை - சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த 14 - 21 ஆம் திகதி வரை சுவிஸ்லாந்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வின் ஓரங்கமாக இலங்கையின் ஆளும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்ற 13 உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இச்செயலமர்வில் பங்கேற்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவ்வேளையிலேயே நிஹால் அபேசிங்கவின் கருத்தை மறுத்ததுடன் தாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருவதாகவும் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களுக்கான முழுமையான தீர்வாக அமையாத “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கே முயல்வதாகச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இவ்வேளையில் எதிரணியில் உள்ள தமிழ்த்தேசியக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்காவிடின், “ஏக்கிய இராச்சிய”, அரசியலமைப்பை அரசாங்கம் நிறைவேற்றிவிடும் என எச்சரித்தார். அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்குத் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்து இயங்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்
https://www.virakesari.lk/article/226278
3 months 2 weeks ago
யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294
3 months 2 weeks ago
விஜய் கைதா? கரூர் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி! 28 Sep 2025, 4:45 AM கரூர் கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று (செப்டம்பர் 27) மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் கவலைக்கிடமாக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 39 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கரூர் வந்த முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அதிகாலை 3.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மிகுந்த துயரத்தோடும் கனத்த இதயத்தோடும் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்திருக்க கூடிய இந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விவரமாக பேசுவதற்கு கூட என் மனது இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு வேதனையில் இருக்கிறேன். நேற்று இரவு 7.45 மணிக்கு சென்னையில் நான் அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் மூச்சு திணறலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அந்த செய்தி கிடைத்த உடனே, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு, இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று என்னவென்று பாருங்கள் என்று சொன்னேன். அதன் பிறகு கலெக்டரிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவரும் சில விஷயங்களை எல்லாம் சொன்னார். முதலில் 4,5 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. போகப் போக அதிகமானோரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள் என்று செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதைத்தொடர்ந்து மரண செய்திகளும் வர ஆரம்பித்துவிட்டன. இதை கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. மரண செய்தி வந்ததும் எனக்கு அச்சம் ஏற்பட்டு, இந்த மாவட்டத்தின் பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த சமயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார். அவரை உடனே கரூர் செல்லுமாறு உத்தரவிட்டேன். அதற்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் தொடர்பு கொண்டு உடனடியாக கரூர் சென்று என்னவென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன். பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன். ஆனால் இங்கிருந்து வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. அதன் பிறகு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று துரைமுருகன், நேரு, வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி ஆகியோரை அழைத்து கலந்து பேசினேன். பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள், கரூரை ஒட்டி இருக்கக்கூடிய ஐந்து ஆறு மாவட்ட அரசு அதிகாரிகளை மருத்துவர்களை கரூருக்கு செல்ல உத்தரவிட்டேன். அந்த வகையில் அவர்களும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இழந்திருக்கிறோம். இதில் ஆண்கள் 13 பேர். பெண்கள் 17 பேர். ஆண் குழந்தைகள் 4 பேர் பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இதுவரை நடக்காதது. இனிமேலும் நடக்கக்கூடாது. 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள். இவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும். இறந்து போன உயிர்களுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினரை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறேன். மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதுமட்டுமல்ல ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வரலாம் என்று விமான டிக்கெட்டை பதிவு செய்திருந்தேன். ஆனால் இந்த கொடூரமான காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை. ஒரு மணி அளவில் விமானத்தை பிடித்து இங்கு வந்து சேர்ந்து இருக்கிறேன்” என்றார். இதைத்தொடர்ந்து விஜய் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ”ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. யார் கைது செய்யப்படுவார்கள், கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எந்த எண்ணத்தில் கேட்கிறீர்களோ அதற்கு நான் உட்படுவதற்கு தயாராக இல்லை” என்று கூறினார். உரிய இடம் ஒதுக்கப்படவில்லை பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.. https://minnambalam.com/is-vijay-arrested-chief-minister-stalin-interview-at-karur-hospital/
3 months 2 weeks ago
கேபிள் கார் விபத்து;மேலும் ஒரு துறவி மரணம் Simrith / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 10:47 மெல்சிரிபுராவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, குருநாகல் ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த மற்றொரு துறவி காலமானார். பல துறவிகளின் உயிரைப் பறித்த இந்த சம்பவத்தின் விளைவாக, தற்போது இறப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், துறவி நேற்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், சம்பவத்தில் இறந்த ஏழு துறவிகளில் ஐந்து பேரின் இறுதிச் சடங்குகள் நேற்று மெல்சிரிபுர - பன்சியகம பொது மயானத்தில் செய்யப்பட்டன. https://www.tamilmirror.lk/செய்திகள்/கேபிள்-கார்-விபத்து-மேலும்-ஒரு-துறவி-மரணம்/175-365397
3 months 2 weeks ago
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார். தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு இரண்டாவதாக உள்ளதுடன் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ம் திகதி வரை 12 வயது சிறுவன் ஒருவர், 26 பெண்கள் உட்பட 105 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆடை-வாங்க-பணம்-தராததால்-உயிரை-மாய்த்த-சிறுமி/73-365398
3 months 2 weeks ago
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார்.
தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை தன் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் பட்டியலில் மட்டக்களப்பு இரண்டாவதாக உள்ளதுடன் கடந்த வருடம் 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ம் திகதி வரை 12 வயது சிறுவன் ஒருவர், 26 பெண்கள் உட்பட 105 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆடை-வாங்க-பணம்-தராததால்-உயிரை-மாய்த்த-சிறுமி/73-365398
3 months 2 weeks ago
வெளிநாட்டுப் பயணத்தை பாதியில் முடித்து கரூர் விரைந்த துணை முதல்வர் உதயநிதி 28 Sep 2025, 11:02 AM கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டம் நேற்று நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கரூரில் குவியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருந்த நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 39 பேரில் 13 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள், குழந்தைகள் 9பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 32 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் உடல் பிரேத பரிசோதனைக்க பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 7 அமைச்சர்கள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலித்தி உள்ளோம். அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம். கரூர் மாவட்டத்தில் உள்ள 200 மருத்துவர்கள் மற்றம் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது தவிர சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 145 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.என தெரிவித்தார். எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்த வேள்விக்கு, இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதற்காகதான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணைத்தின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். https://minnambalam.com/karur-tragedy-udhayanidhi-stalin-press-meet/#google_vignette
3 months 2 weeks ago
@செம்பாட்டான் அண்ணை உங்களை குறிப்பிட மறந்துவிட்டேன், மன்னிச்சு.
3 months 2 weeks ago
சீமானிசம்.
3 months 2 weeks ago
இதனாலதானே எமது தேசியத் தலைவர் தமிழீழப் பொலிசுக்கான உடுப்பையே மாற்றினார்.
3 months 2 weeks ago
மகிந்த, கோத்தா, ரணில் ஆட்சியில்…. போதை கும்பல்களிடம் இருந்து கைப்பற்றிய கஞ்சாவை மீண்டும் சந்தையில் விற்பனைக்கு விடுவதும், வாள் வெட்டு கோஷ்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அதுகள் செய்யும் அட்டகாசங்களை கண்டு கொள்ளாமல் இருந்ததும் இந்த கேடு கெட்ட போலீஸ்தான்.
3 months 2 weeks ago
ஆறாம் அறிவு படத்தினை பார்த்த பின்னர், அதன் இயக்குனர் ஒரு தமிழர் என அறிந்த பின் இவரது படங்களை 2 - 3 படங்கள் பார்த்ததுண்டு, இவரது வீட்டில் சிறுவயதில் இடம்பெற்ற படப்பிடிப்பே இவரை திரைத்துறைக்கு இழுத்து வந்ததாக அறிந்தேன் (அது வேறு ஒரு இயக்குனரோ என சந்தேகமாக இருக்கிறது சரியாக நினைவில்லை). இவரது படப்பிடிப்பு முறை (கமரா) இனூடாக காட்சிப்படுத்தும் முறையும், நீண்ட காட்சி முறையும் பார்ப்பவர்களை காட்சியுடன் ஒன்றிபோக வைக்கின்றது (ஆறாம் அறிவு), சில நடைமுறை காட்சி முறை (பிறேம்) இனை தவிர்த்து காட்சிக்கு வெளியே முக்கிய விடயத்தினை வைக்கும் முறை என இவருக்கென ஒரு பாணி இருக்கிறதாக கருதுகிறேன்.
3 months 2 weeks ago
தாழ்பாள்கள் தெறித்து விழுவதற்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் பற்கள் தெறித்து விழும் வாய்ப்புகளே அதிகம்.🤣
3 months 2 weeks ago
உண்மை, அவர் ஒரு வர்த்தகர்தானே, ட்ரம்ப் செலன்ஸ்கியினை சிறந்த சேல்ஸ்மன் என கூறினார், வசிட்டர் வாயால் மகரிசி பட்டம் வாங்கிய போன்றது, அதனை உறுதிப்படுத்துவது போல நிகழ்கால சம்பவங்கள் பிரதிபலிக்கின்றது.
3 months 2 weeks ago
படம் : இதயத்தில் நீ ( 1963 ) யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம். பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக மாறலாம் வருவது ஒன்று பிரிவது ஒன்று மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது
3 months 2 weeks ago
அது மட்டுமல்ல, சமூக சீர்கேடுகளை வளர்ப்பது, போதை கலாச்சாரத்தின் கதாநாயகர்கள், சமூகங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பது, ஊக்குவிப்பதும் இவர்களே. இவர்கள் அரசியல்வாதிகளின், தலைவர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம். நாட்டில் சட்டம், நிஞாயம் நிலைக்க வேண்டுமாயின் இந்த துறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமானது.
3 months 2 weeks ago
முந்திரிக்கொட்டை மாதிரி ஒருத்தர் சீமான் எப்படி வந்து இந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுவார், தம்பி விஜய் கட்சியை பிளந்து கட்டுவார் என்று மூக்கு சாஸ்திரம் சொல்லி மூக்கு உடைபட்டு இருக்கிறார். சீமானார் நாளைக்கும் இதே கருத்ததோடு இருந்தால் சந்தோசம்.