Aggregator

சீன மக்கள் குடியரசு - 76 ஆவது ஆண்டு நிறைவு

3 months 2 weeks ago
76 ஆவது ஆண்டு நிறைவு சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58

சீன மக்கள் குடியரசு - 76 ஆவது ஆண்டு நிறைவு

3 months 2 weeks ago

76 ஆவது ஆண்டு நிறைவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.

இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post

https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

3 months 2 weeks ago
அமெரிக்கா வாத சார்பு think tank இன் அறிவித்தல் afp ஐ மேற்கோள் காட்டி. (ரஷ்யா, இரான் 25 பில்லியன் அணுத்துறை திட்டங்களை ஈரானில் ஆரம்பிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்தும் வைத்தது) முன்பு வேறு திரியில் சொன்னது போலவே தாளில் மட்டுமே இரானுக்கான snap back தடைகள். ஒன்றுமே நடைமுறைப்படுத்த ரஷ்யா, சீன தடுக்கும், தடுக்க கூடிய அதிகாரம், வல்லமைகளை கொண்டுள்ளது. ஈரான் அணுத்தூரை பிரச்சனை - அமெரிக்காவை, இஸ்ரேல் மற்றும் மேற்கை ஐ அவற்றின் இடத்தில் வைப்பதற்கான திறவுகோல். அது நடக்காது விட்டால், அணுஆயுத பிரயோகத்தில் வந்து முடியக்கூடிய சாத்திய கூறுகள் அதிகரித்து வருகிறது. RadioFreeEurope/RadioLibertyIran 'Snapback' Requires Diplomatic Strategy, Expert SaysThe United Nations is poised to reimpose sweeping snapback sanctions on Iran. Behnam Ben Taleblu, senior fellow at the Washington-based Foundation for Defense of Democracies, discussed the UN decision barronsRussia Says There Will Be 'No Snapback' Of Iran Nuclear S...Russia said Friday there would be "no snapback" of biting UN sanctions on Iran even after the failure of efforts by Moscow and Beijing at the Security Council to stave off the measures.

'அடுத்த ஸ்பீல்பெர்க்' என்று ஹாலிவுட்டில் கொண்டாடப்பட்ட தமிழ் வம்சாவளி இயக்குநர்

3 months 2 weeks ago
இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் வீழ்ச்சி மற்றும் எழுச்சி பற்றி நல்ல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன ...........! நன்றி ஏராளன் .......!

நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி 10 ஆண்டுகளுக்கும் அதிகமா?

3 months 2 weeks ago
பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தக் கூடிய உரிய தரத்தில் இல்லை. இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது. அத்துடன் இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg24f9ya00o3qplp4bk7xv0w

நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி 10 ஆண்டுகளுக்கும் அதிகமா?

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தக் கூடிய உரிய தரத்தில் இல்லை.

இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது.

அத்துடன் இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmg24f9ya00o3qplp4bk7xv0w

சிங்கப்பூரில் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை!

3 months 2 weeks ago
Published By: Digital Desk 1 26 Sep, 2025 | 10:33 AM சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என அந்த நாட்டில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது. 39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமையால் தடை ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய சட்டத்தரணி நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்;. இருப்பினும், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரணதண்டனை தொடரும் என்றும், இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலை சேகரிக்குமாறும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவரது மரணதண்டனையை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது. அவருக்கு முழு சட்ட நடைமுறையும் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் கருணை மனுக்கள் தோல்வியடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எடுத்துச் சென்ற போதைப்பொருட்களின் அளவு சுமார் 540 பேரை ஒரு வாரத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது. மேலும், “தனிப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை எதிர்த்து இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் மற்றும் 11வது நபர் இவர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வாரம் 30க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் சிங்கப்பூர் மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் குடிமக்களைப் பாதுகாக்க இவ்வாறான தண்டணைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/226102

சிங்கப்பூரில் மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை!

3 months 2 weeks ago

Published By: Digital Desk 1

26 Sep, 2025 | 10:33 AM

image

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என அந்த நாட்டில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது.

39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2022ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்படவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமையால் தடை ஏற்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய சட்டத்தரணி நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்;.

இருப்பினும், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரணதண்டனை தொடரும் என்றும், இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலை சேகரிக்குமாறும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவரது மரணதண்டனையை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது.

அவருக்கு முழு சட்ட நடைமுறையும் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் கருணை மனுக்கள் தோல்வியடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் எடுத்துச் சென்ற போதைப்பொருட்களின் அளவு சுமார் 540 பேரை ஒரு வாரத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது.

மேலும், “தனிப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை எதிர்த்து இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் மற்றும் 11வது நபர் இவர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாரம் 30க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் சிங்கப்பூர் மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் குடிமக்களைப் பாதுகாக்க இவ்வாறான தண்டணைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/226102

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

3 months 2 weeks ago
பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக ஆசிய கிண்ண இறுதிக்குள் நுழைந்தது; இலங்கை ஏமாற்றத்துடன் வெளியேற உள்ளது Published By: Vishnu 25 Sep, 2025 | 02:53 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. அபிஷேக் வர்மாவின் அதிரடி அரைச் சதம், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. பங்களாதேஷுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து நடப்பு ரி29 ஆசிய கிண்ண சம்பியன் இலங்கையின் இறுதி ஆட்ட வாய்ப்பு பறிபோனது உறுதிசெய்யப்பட்டது. இந் நிலையில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட தகுதிபெறும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 38 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், ஷுப்மான் கில் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இந்தியா ஆட்டம் காணத் தொடங்கியது. கில்லைத் தொடர்ந்து ஷிவம் டுபே (2) வெளியேறினார். மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 5 விக்.) எனினும், ஹார்திக் பாண்டியா முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 29 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றதுடன் அக்சார் பட்டேலுடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். அக்சார் பட்டேல் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் இருவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை. ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். (4 - 1 விக்.) சய்வ் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். ஏமொன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தௌஹித் ஹிரிதோய் 7 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களை எட்டியதைத் தொடர்ந்து 53 பந்துகளில் 53 ஓட்டங்களுக்கு கடைசி 7 விக்கெட்கள் சரிந்தன. ஆரம்ப வீரர் சய்ப் ஹசன் தனி ஒருவராகப் போராடி 51 பந்துகளில் 3 பவுண்டறிகள். 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா. https://www.virakesari.lk/article/226004

'அடுத்த ஸ்பீல்பெர்க்' என்று ஹாலிவுட்டில் கொண்டாடப்பட்ட தமிழ் வம்சாவளி இயக்குநர்

3 months 2 weeks ago
பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 27 செப்டெம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.) 'அடுத்த ஸ்பீல்பெர்க்' ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார். எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர். அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே. மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார். "அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்". பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம். இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது. பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர். "அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது. "என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன். இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense). 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம். "சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன். குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார். "உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது." "மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார். ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார். 'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது. "விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன். ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார். குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன. 'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார். "ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது. அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது. நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார். 'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம் பட மூலாதாரம், @MNightShyamalan படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம் "என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார். 2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன். தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை. 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது. அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின. "ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன். மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். "இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o

'அடுத்த ஸ்பீல்பெர்க்' என்று ஹாலிவுட்டில் கொண்டாடப்பட்ட தமிழ் வம்சாவளி இயக்குநர்

3 months 2 weeks ago

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 27 செப்டெம்பர் 2025, 01:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 27 செப்டெம்பர் 2025, 02:01 GMT

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை.)

'அடுத்த ஸ்பீல்பெர்க்'

ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படத்தில் இப்படி ஒரு தலைப்புடன், இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இடம்பெற்றிருந்தார்.

எந்தவொரு இயக்குநருக்கும் அது மிகப்பெரிய ஒரு அங்கீகாரம் என்றே சொல்லலாம், காரணம் உலகம் முழுவதும் இருக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்களால் மதிக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க், இந்தியானா ஜோன்ஸ், ஷிண்ட்லர்'ஸ் லிஸ்ட், ஈ.டி என பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர்.

அது மட்டுமல்லாது, மனோஜ் நைட் ஷியாமளனின் முன்மாதிரியும் அவரே.

மனோஜ் நைட் ஷியாமளனின் திரைப்பயணம் குறித்த பதிவான 'The Man Who Heard Voices' புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் பாம்பெர்கர் இந்த சம்பவம் குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்.

"அந்த அட்டைப்படம் வெளியான பிறகு, ஸ்பீல்பெர்க்கிடம் பேசிய மனோஜ், 'நியூஸ்வீக் இதழில் அந்தத் தலைப்பை எழுதியவர்கள் அறியாவிட்டாலும் கூட எனக்கு நன்றாகத் தெரியும், நான் அடுத்த ஸ்பீல்பெர்க் அல்ல' எனக் கூறினார்".

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, ஆகஸ்ட் 5, 2002 அன்று வெளியான அமெரிக்காவின் பிரபலமான நியூஸ்வீக் வார இதழின் அட்டைப்படம்.

இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில், ஆகஸ்ட் 6, 1970ஆம் ஆண்டு பிறந்தவர் மனோஜ் நெல்லியாட்டு ஷியாமளன். அவரது தந்தை, டாக்டர் நெல்லியாட்டு சி. ஷியாமளன், மாஹேவைச் சேர்ந்தவர், தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். மனோஜ் பிறந்த சில வாரங்களில், அவரது குடும்பம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திற்கு புலம்பெயர்ந்தது.

பென்சில்வேனியாவில் வளர்ந்த போது தங்களைப் போல ஷியாமளனும் ஒரு மருத்துவர் ஆவார் என்றே அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர்.

"அப்பா, நான் நியூயார்க்கில் உள்ள திரைப்படப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். அதுதான் சிறந்த திரைப்படப் பள்ளி. எனக்கு உதவித்தொகையும் கிடைக்கும்' என்று என் தந்தையிடம் கூறினேன். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு நான் என் அம்மாவிடம் சொன்னேன், அவருக்கு சிறுவயதில் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்." என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் ஷியாமளன்.

'தி சிக்ஸ்த் சென்ஸ்'

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்'

தனது 21வது வயதில், 'பிரே வித் ஆங்கர்' (1992) என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் ஷியாமளன். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. ஆனால் அந்தப் படம், பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிடப்பட்டது.

"என்னுடைய முதல் திரைப்படத்தின் கதை இந்தியாவில் நடக்கும். நான் அதில் இந்திய அமெரிக்கராக நடித்திருப்பேன். ஆனால் அந்தப் படத்தை என் குடும்பத்தரைத் தவிர யாரும் பார்க்கவில்லை. அப்போது என் அப்பா ஒரு ஆலோசனை வழங்கினார், 'உன் படத்தில் வெள்ளையர்களை நடிக்க வை, அதன் பிறகு பார்' என்றார். அதை பின்பற்றினேன், வெற்றி கிடைத்தது" என்று ஒரு நேர்காணலில் பகிர்ந்திருப்பார் மனோஜ் நைட் ஷியாமளன்.

இயக்குநர் ஷியாமளனை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற திரைப்படம் என்றால், அது 1999ஆம் ஆண்டு வெளியான 'தி சிக்ஸ்த் சென்ஸ்' (The Sixth sense).

'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என இத்திரைப்படத்தில் கோல் சியர் என்ற 9 வயது சிறுவன் பேசும் வசனம் இன்றுவரை அமெரிக்காவில் மிகவும் பிரபலம்.

"சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் வெளியானவுடன், 'நான் இறந்தவர்களைப் பார்க்கிறேன்' என்ற வரி டி-சர்ட்களில், விளம்பரங்களில், மேடை நாடகங்களில், புத்தகங்களில் என எங்கும் இருந்தது. இரவில் மக்கள் உணவகங்களில் அமர்ந்துகொண்டு, 'நானும் இறந்தவர்களை பார்க்கிறேன்' என கிசுகிசுப்பார்கள்." என்று 2006இல் வெளியான 'The Man Who Heard Voices' புத்தகத்தில் விவரித்துள்ளார் மைக்கேல் பாம்பெர்கர்.

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 1991இல் சென்னையில் நடைபெற்ற 'பிரே வித் ஆங்கர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஷியாமளன்.

குறிப்பாக 'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்தின் எதிர்பாரா முடிவு ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது என்றும், மனோஜ் நைட் ஷியாமளனுக்கென ஒரு பிரத்யேக திரைப்பட பாணியையும், அவரது திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் இப்படம் உருவாக்கியது என்றும் மைக்கேல் பாம்பெர்கர் குறிப்பிடுகிறார்.

"உலகளாவிய டிக்கெட் விற்பனை, டிவிடி விற்பனை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் சாதனை படைத்தது."

"மனோஜ் நைட் ஷியாமளன் அதை எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். அவர் நடிக்கவும் செய்திருந்தார். 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படத்திற்குப் பிறகு, மக்கள் நைட்டை 'அடுத்த ஹிட்ச்காக்' என்று அழைத்தனர், அவருக்கு அப்போது முப்பது வயது கூட ஆகவில்லை. நடிகர்களிடம் திறன்பட வேலை வாங்கும் ஒரு இயக்குனராக அவர் பாராட்டப்பட்டார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸிடமிருந்து ஒரு சிறப்பான நடிப்பை அவர் பெற முடிந்ததால். 1999இல், நைட் ஒரு 'ராக் ஸ்டார்' போல மக்களால் கொண்டாடப்பட்டார்." என மைக்கேல் பாம்பெர்கர் எழுதியுள்ளார்.

ஹாலிவுட்டில் தொடர் வெற்றிகள்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின.

'தி சிக்ஸ்த் சென்ஸ்' திரைப்படத்திற்கு பிறகு, ஷியாமளன் இயக்கி அடுத்தடுத்து வெளியான, அன்பரேகபிள் (Unbreakable- 2000), சைன்ஸ் (Signs- 2002), தி வில்லேஜ் (The Village- 2004) ஆகிய மூன்று திரைப்படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றன என மைக்கேல் பாம்பெர்கர் கூறுகிறார்.

'இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் திரைக்கதைத் திருப்பங்களை உள்ளடக்கிய உளவியல் த்ரில்லர் ஹாலிவுட் திரைப்படங்கள்'- இதுவே மனோஜ் நைட் ஷியாமளனின் பாணி என்ற பிம்பம் உருவானது.

"விமர்சகர்கள் தான் அத்தகைய பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். எனது எல்லா திரைப்படங்களின் இறுதியிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென நினைத்து நான் திரைக்கதை எழுதுவதில்லை. ஆனால் அத்தகைய ஒரு எதிர்பார்ப்பு தான் எனக்கு பயமே. அதனால் தான் லைஃப் ஆஃப் பை (Life of Pi) போன்ற திரைப்படத்தை இயக்குவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஷியாமளன்.

ஆங் லீ இயக்கத்தில் 2012இல் வெளியான 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தின் நாயகன் இந்தியாவின் புதுச்சேரியைச் சேர்ந்தவனாக இருப்பான். லைஃப் ஆஃப் பை என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு ஒருமுறை கிடைத்ததாகவும் ஷியாமளன் அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

எதிர்மறை விமர்சனங்களும் ட்ரோல்களும்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 'அடுத்த ஸ்பீல்பெர்க்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

'தி சிக்ஸ்த் சென்ஸ்' தொடங்கி 'தி வில்லேஜ்' வரை ஷியாமளன் இயக்கிய நான்கு படங்களும் அவரை ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநராக மாற்றின. ஆனால், அதற்கு அடுத்த நான்கு திரைப்படங்கள் 'தி லேடி இன் தி வாட்டர்' (2006), 'தி ஹாப்பனிங்' (2008), 'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' (2010), 'ஆஃப்டர் எர்த்' (2013) ஆகியவை எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.

தனது வழக்கமான 'எதிர்பாரா திருப்பங்கள்' என்ற பாணியிலிருந்து சற்று விலகியே அவர் இந்த நான்கு திரைப்படங்களையும் இயக்கியிருந்தார்.

குறிப்பாக 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்திற்காக, மோசமான திரைப்படங்களை பகடி செய்து வழங்கப்படும் 'கோல்டன் ராஸ்பெர்ரி விருது' வழங்கப்பட்டது. 'மோசமான இயக்குநர்', 'மோசமான துணை கதாபாத்திரம்' இரு விருதுகள் மனோஜ் நைட் ஷியாமளனுக்கு வழங்கப்பட்டன. அதேபோல, 'தி ஹாப்பனிங்' திரைப்படத்திற்கு மோசமான திரைப்படம், மோசமான நடிகர், மோசமான இயக்குநர், மோசமான திரைக்கதை என நான்கு 'கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகள்' வழங்கப்பட்டன.

'அடுத்த ஸ்பீல்பெர்க்', 'அடுத்த ஹிட்ச்காக்' என கொண்டாடப்பட்ட ஷியாமளன், 2006- 2013 காலக்கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

"ஒரு திரைப்படத்தை எழுதும்போதே அதை எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் யோசித்தே எழுத வேண்டும். 'தி லேடி இன் தி வாட்டர்' திரைப்படத்தில் அதை நான் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்தேன். ஆனால் இன்றும் கூட மக்கள் அந்தப் படத்தைப் பற்றி என்னிடம் பேசுகிறார்கள்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, மனோஜ் நைட் ஷியாமளனின் தாயார் டாக்டர் ஜெயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர்.

'தி லாஸ்ட் ஏர்பெண்டர்' திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்' என்ற பிரபல அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஆசியர்களின் கதாபாத்திரங்களுக்கு 'வெள்ளையின' நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஆனால், இதை இயக்குநர் ஷியாமளனும், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது.

அதற்கு பிறகு, ஷியாமளன் இயக்கத்தில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான 'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது.

நடிகர் வில் ஸ்மித் 2015இல் அளித்த ஒரு நேர்காணலில், "'ஆஃப்டர் எர்த்' திரைப்படம் என் திரை வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி. என்னுடைய பையனையும் அதில் நடிக்க வைத்தது தான் இன்னும் வேதனையானது. நான் ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதையே நிறுத்திவிட்டேன்." எனக் கூறியிருந்தார்.

'தி விசிட்' மீட்டுக்கொடுத்த அடையாளம்

இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன், ஹாலிவுட், அமெரிக்கா, இந்தியா, தமிழர்

பட மூலாதாரம், @MNightShyamalan

படக்குறிப்பு, 2015இல் வெளியான 'தி விசிட்' திரைப்படம்

"என்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, 'மெயின்ஸ்ட்ரீம்' திரைப்பட பாணியில் பொருந்திப் போவதற்கு சில திரைப்படங்களை எடுத்தேன். அது தவறு என பின்னர் புரிந்தது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய திரைப்படங்கள் அவை அல்ல என்பதும் புரிந்தது" என தனது தோல்விப் படங்கள் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

தனக்கு கிடைத்த தோல்விகளால், தனது அடுத்த திரைப்படத்தை சொந்தமாகவே தயாரிக்க முடிவு செய்த ஷியாமளன், ஒரு சிறு பட்ஜெட் திரைப்படத்தை இயக்கினார்.

2015இல் வெளியான 'தி விசிட்' என்ற அந்த திரைப்படம் மூலம் மீண்டும் தனது 'எதிர்பாரா திருப்பங்கள் கொண்ட கிளைமாக்ஸ்' என்ற பாணிக்கு திரும்பினார் ஷியாமளன்.

தங்கள் அம்மா வழி, தாத்தா- பாட்டியின் பண்ணை வீட்டில் 5 நாட்கள் விடுமுறையைக் கழிக்க, பெக்கா ஜேமிசன் என்ற சிறுமியும் அவளது தம்பி டைலரும் வருகிறார்கள். முதல் முறையாக தங்கள் தாத்தா- பாட்டியை சந்திக்கும் பெக்கா மற்றும் டைலர், அவர்களுடன் தங்கும்போது சில அசாதாரணமான நிகழ்வுகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் 'தாத்தா பாட்டி' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மையையும் கண்டறிகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட 'தி விசிட்' திரைப்படம், 98.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய அளவிலான வசூலைக் குவித்தது.

அதன் பிறகு, அவர் எடுத்த 'ஸ்ப்ளிட்' (2016), 'கிளாஸ்' (2019) திரைப்படங்கள் மீண்டும் ஷியாமளனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தின.

"ஹாலிவுட்டில் என்னைப் போல புகழையும் ட்ரோல்களையும் பார்த்த இயக்குநர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை. 'தி விசிட்' திரைப்படம் எடுக்கும்போது, 'நான் அனைத்தையும் இழக்கப் போகிறேன்' என்ற பயமும் இருந்தது, மறுபுறம் காமெடியும் ஹாரரரும் கலந்த ஒரு கதை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது. வெற்றி என்பது எப்போதும் ஒரு கத்தி முனையில் நிற்பது போல தான்" என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஷியாமளன்.

மனோஜ் நைட் ஷியாமளன், இந்திய இயக்குநர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஒரு நம்பிக்கை என்று கூறுகிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"இந்தியர்கள் என்றாலே காதல், 5 பாடல்கள் அல்லது நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் நிலவும் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் மிக எளிய த்ரில்லர் கதைகளால் பிரபலமடைந்தவர் மனோஜ். 'சைன்ஸ்', 'தி வில்லேஜ்' போன்ற திரைப்படங்களில், நம் நாட்டு கதைகளையே ஹாலிவுட்டுக்கு ஏற்றார் போல வடிவமைத்திருப்பார். 'ஒரு இந்தியராக இருப்பது' என்ற தடையையே தனது பலமாக மாற்றி ஹாலிவுட்டில் வெற்றி பெற்றவர் என்ற வகையில், அடுத்த தலைமுறை இந்தியக் கலைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி தான்" என்று ஜா.தீபா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ed01yv466o

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

3 months 2 weeks ago
நீங்கள் அப்பாவி, அப்படியே நம்பிவிட்டீர்கள் அவரை. எதுக்கு? உடனேயே குளியலறைக்கு கூட்டிகொண்டுபோய் ஒரு முக்கு முக்கி எடுத்து விடுங்கள் ஆளை, வேண்டுமென்றால் கொஞ்சம் நெருப்புத்தண்ணியையும் கலந்து விடுங்கள் . ஆள் கொஞ்சம் திமிறுவார் விடாதைங்கோ. அதைச்சொல்லுங்கோ! எதுக்கு பாவம் சிவன் கோவில் சாத்திரியாரை அழைக்கிறீர்கள்? அவரோடு என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உங்களுக்கு?

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை

3 months 2 weeks ago
ரோச் பற்றி வாங்கித்தான் புலிகள் ராஜீவை கொலை செய்தார்கள் என்று ஒருவரை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்த வீரர்கள். அவர்களுக்கு இலங்கையை தங்கள் கைக்குள் வைத்திருப்பதற்கு புலிகள் மீள எழுகிறார்கள் என்கிற புனை கதை வேண்டும், சிங்களமக்களை ஏமாற்றுவதற்கு இனவாதிகளுக்கு புலிகள் வேண்டும், மொத்தத்தில் இல்லாத ஒன்றை இவர்களே உருவாக்கி தன் லாபம் தேடுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை

3 months 2 weeks ago
இந்திய உளவுத்துறையை ஏதோ பேர்போனதென்று சில ஓய்வுபெற்ற இந்தியக் கைக்கூலிகள் காணொளிகளில் கூவுகிறார்கள். அப்படியென்றால் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்கலாமே. கடப்பிலை நிண்டவர் கையூட்டுக் கேட்டிருப்பார், கொடுக்காதபடியால் மாட்டிவிட்டுட்டாரோ. யாரறிவார். அம்மணி வெளியே வந்து சொன்னால்தான் தெரியும். அதற்குமுன் ஆளை மனநோயாளியாக்கிவிடுவர்.

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

3 months 2 weeks ago
உலக வல்லாதிக்க சக்திகளின் முகவராண்மை நாடான சுவிஸ் அரசானது தமிழர் தரப்பின் நாடிபிடித்துப்பார்ப்பதற்காக வைத்த கருத்தரங்காகவே தோன்றுகிறது. தமிழினம் தனது விடுதலையைத் தனது கரத்தில் எடுத்துப் போராடாதவரை இந்த இடைத்தரகு வேலைகளைச் செய்து அலைக்கழித்து போராட்டத்தை நீறாக்கிவிடுவர்.