Aggregator

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

3 months 2 weeks ago
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.. இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/50768

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

3 months 2 weeks ago

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM

ஆசிரியர் - Editor II

காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது 

மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்..

இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத  முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

17589412412_1080.jpg

17589412411_1080.jpg

1758941241-1000044948.jpg

555675813_819862003905473_54357913166456

https://jaffnazone.com/news/50768

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

3 months 2 weeks ago
தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி என்றும் தன்னை விளித்துள்ளார் அருச்சுனா. இவர் ஒரு கொள்கையோடு செயற்படுவதாக தெரியவில்லை. ஒரு தடவை நாமலை உயர்த்தி பேசுகிறார். தனது தந்தையை காணாமலாக்கியதை மன்னித்து விட்டதாக கூறுகிறார், அவரது தந்தை மட்டும் அவர்களால் காணாமலாக்கப்படவில்லை. தையிட்டி விகாரையை அகற்ற முடியாது அவர்களுக்கு வேறு காணி வழங்கப்படும் என்றார். ஆனால் தனது காணியை யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், மதம் இனம் என்பது கவனிக்கப்படாது என்றார். இப்படி மாற்றி மாற்றி ஏதோ குழப்பி பேசி தன்னைத்தானே மற்றவர்கள் பரிகசிக்க வைக்கிறார்.

ஒரு பயணமும் சில கதைகளும்

3 months 2 weeks ago
மீண்டும் பூனையா? அதுவும் கறுப்புப்பூனையா? உங்களின் வீட்டில் பூனைகள் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்கின்றன? உதுதான் சொல்லுறது இரவில் பயணம் செய்யக்கூடாதென்று. எல்லோரும் தூங்கும்போது நாமும் தூங்கி விட வேண்டும். இல்லையென்றால் உப்பிடித்தான் பகலில் வராத நினைவுகள் எல்லாம் வந்து பயமுறுத்தும்.

சமையல் செய்முறைகள் சில

3 months 2 weeks ago
இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽 ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

3 months 2 weeks ago
அனுரா… புராணம் தூக்கலாக இருக்கு. 😂 உங்களுக்கு…. ஶ்ரீலங்காவிற்கு கொலிடே போற ஐடியா இருக்குப் போலை. 🤣 பிற் குறிப்பு: பகிடிக்கு எழுதியது. யாரும் இதனை சீரியசாக எடுக்க வேண்டாம். 😜

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

3 months 2 weeks ago
இந்த முன்னாள் நீதிபதிப் பெண்மணி… தனது சட்டத்தரணி கணவரின் தவறான வழிகாட்டலில் வழங்கப் பட்ட நீதி தவறி ஒரு தலைப் பட்சமாக வழங்கிய தீர்ப்புகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இனி யார் நீதியை பெற்றுக் கொடுப்பது. அல்லது…. தலை விதியே என்று இருப்பதா. அரசே… முன் வந்து, அவர்களுக்கு தகுந்த நீதியை பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப் பட்டவர்கள் தமது தரப்பு சட்டத்தரணிக்கு பணம் கொடுத்து வாதாடியும்…. நீதிபதியின் கீழ்த்தரமான செய்கையால், நொந்து போய் உள்ளவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ அல்லது மீண்டும் சட்டத்தரணி பிடித்து பணம் செலவழித்து வாதாடி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க விடுவது சரியல்ல.

ஒரு பயணமும் சில கதைகளும்

3 months 2 weeks ago
ரசோ....நல்ல கதைகள்... இடையிடையே எங்களுக்கு கதையும் விட்டிருக்கிறியள்... ரசித்தேன்...மிகவும் அருமை.. நான் எதோ ஆனந்தவிகடன் மணியன்போல் ...நீண்ட தொடராக எதிர் பார்த்தேன் ..இப்படி பண்ணிட்டீங்களே.. அதுசரி பூனை வீட்டில்...வீட்டில் இறந்ததாக சொன்னீர்கள்...பரிகாரம் செய்தியளோ... பெரிசா இல்லை ...பத்துப்பேரைக் கூப்பிட்டு ..நல்ல மச்ச மாமிச பாட்டி வைக்கிறதுதான் ...மறக்காமல் பிரியன் சாரை கூப்பிட்டுடுங்க..

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 months 2 weeks ago
புலிகள்-டெலோ போல… தவெக-திமுக. புலிகள்-பொதுபலசேனா போல… தவெக-பாஜக ஆண்டு 10 தமிழ் இலக்கணத்தில் போல, அன்ன, வின் அர்த்தம் பற்றி படிக்கவில்லையா?

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

3 months 2 weeks ago
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்…. பெண் இருப்பாள். 🙂 ஒரு பெண்ணின் தோல்விக்குப் பின்…. ஆண் இருப்பான். 😂

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 months 2 weeks ago
An example serves as a specific instance to illustrate a general concept or principle, while a comparison involves examining two or more things to identify their similarities and differences. ஒரு பொதுவான கருத்து அல்லது கொள்கையை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக செயல்படுகிறது, அதே நேரத்தில் ஒரு ஒப்பீடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காண ஆராய்வதை உள்ளடக்கியது. ஜேர்மனி, யூகே என இரந்து வாழ்வதில் மட்டும் காலத்தை கழிக்காமல், விடயங்களை அறிவதிலும் கொஞ்ச காலத்தை செலவழித்கிருப்பின், திராவிட கோமாளிகளிடம் விளக்கம் கேட்டு பெறும் நிலை வந்திராது.

மருத்துக் கடையில் தமிழாசிரியர்

3 months 2 weeks ago
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).

மருத்துக் கடையில் தமிழாசிரியர்

3 months 2 weeks ago

மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே !

என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள்

கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா?

ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன்

எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: )

படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).

முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்

3 months 2 weeks ago
பெண்ணின் பின் கழுத்து தோள்களுடன் இணையும் பகுதியில் ஈர உதடுகளால் மென்மையாக வருடி ஈரமாக்கி அந்த ஈரமான பகுதியில் சுவாசக் காற்றை ஊதினால் பெண்மை சொக்கிநிற்கும்! காமன்கோயில் கதவுகள் தாழ்ப்பாள்கள் எல்லாம் தெறித்துவிழும்! 👀

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

3 months 2 weeks ago
இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.