Aggregator
323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன – அர்ச்சுனா இராமநாதன்
14 Nov, 2025 | 03:51 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கூறும் போது எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அவை எனது வீட்டில் இருப்பது போன்றுதான் ''அர்ச்சுனாவின் கொள்கலன்கள்'' என்று குறிப்பிடுகிறார்கள்.இதனால் இது தொடர்பில் எனக்கு இங்கே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது.
உண்மையில் இந்த கொள்கலன்கள் பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சராக இருக்கும் போது விடுவிக்கப்பட்ட கொள்கலன்களே. நான் இந்த சபையில் கூறிய விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு நான் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டேன்.
இதேவேளை நான் ஒருமாத காலமாக ஐரோப்பிய பயணமொன்று சென்றிருந்தேன். அப்போது 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக எனக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இப்போதும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.
விடுவிக்கப்ட்ட அந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களுக்குள் ஆயுதங்களே இருந்தன. வேண்டுமென்றால் என்னை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டுசென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன். அது தொடர்பில் குழுவொன்றை அமையுங்கள். பயமின்றி கூறுகின்றேன். அதில் ஆயுதங்களே இருந்தன என்றார்.
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
இன்றைய வானிலை
15 Nov, 2025 | 06:32 AM
![]()
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'
'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'
'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'
சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன்
சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே!
கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது
கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே!
குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே
குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்!
தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன்
தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்!
சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது
சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது!
சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும்
சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!
["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று
[2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை
[3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சுவர்.
அதில் காணப்படும் கல்வெட்டுகள் தோராயமாக
கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும்.
[4] உதாரணத்துக்கு ஒன்று:
“தங்க நிற மங்கையரை கண்டவன்,
தன் இதயத்தில் ஒளிர்கிறான் —
வானில் சூரியன் ஒளிர்வது போல்.”]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
துளி/DROP: 1899 ['சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!']
https://www.facebook.com/groups/978753388866632/posts/32373298478985380/?