Aggregator
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது.
இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது.
இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த
காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும்.
தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம்.
இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார்.
அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார்.
பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள்.
இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும்.
இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்