Aggregator
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
தொதல் அல்வா.
தொதல் அல்வா.
ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா?
இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன்.
நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர்.
தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க.
இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர்.
படித்ததில் பிடித்தது.
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு
கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
Published By: RAJEEBAN
23 JUL, 2025 | 12:44 PM
![]()
சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர்.
வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர்.
கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள்.

அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம்.
என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின் சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.
நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள்.
அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம்.
அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும் சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம்.
எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில் எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன்.
காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில் ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் -
நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை.
இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன்.
ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார்.
எனது நகரான வாதுவையில் தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள்.
சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள் அன்பாக நட்புடன் பழகுபவர்கள்.
அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார்.
பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது,
ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது,
அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன.
அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார்.
25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன.
ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார்.
மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது.
வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும்.
ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம்,
13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள்,
நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள்.
அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள்.
தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.
இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம்.
ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்,
இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம்.
கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல்.
நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும் அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக வெட்கப்படுகின்றோம்.
கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது
ஆடி மாத சிரிப்புகள்.
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்
இலங்கையில் ஊழலை ஒழிக்க போராடும் ஜப்பான்
Published By: VISHNU
20 JUL, 2025 | 06:08 PM
![]()
ஆர்.சேதுராமன்
இலங்கையில் முதலீடு செய்வதில், ஜப்பானிய நிறுவனங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் அவசியமான முன்நிபந்தனைகளாக உள்ளன என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா அண்மையில் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஜப்பானிய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆவது ஜப்பானிய –இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை உரையாடலின்போது அவர் இதனை கூறினார்.
ஜப்பான் வெளியுறவு பிரதி உதவி அமைச்சரும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் இஷிசுகி ஹிடியோ, இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்ட ஜப்பான்
இலங்கையின் அபிவிருத்திக்கு நீண்ட காலமாக கைகொடுத்துவரும் ஜப்பான், இலங்கையில் ஊழல்களை ஒழிக்க வேண்டியதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. ஊழல் ஒழிப்புக்காக பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவருகிறது.
கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்குபற்றிய ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, இலங்கையில் நிலவிய ஊழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்ளதாக குமுறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அகியோ இசோமாட்டாவுக்கு முன்னர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவி வகித்த மிஸுகோஷி ஹிடேக்கியும் இலங்கையில் ஊழல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல தடவைகள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக் ஷ காலத்தில், ஜப்பானிய நிறுவனமொன்றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான ஜப்பானிய முகவரத்தின் (ஜெய்க்கா) உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான, இலகு ரயில் திட்டத்தை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு தலைபட்சமாக இரத்து செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஜப்பான் கடும் அதிருப்தி கொண்டிருந்தது. அதன்பின் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜப்பானிய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கியிருந்தன.
2023 மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவுக்கு விஜயம் செய்து ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்தபோது, மேற்படி திட்டம் இரத்துச் செய்யப்பட்டமைக்காக இலங்கை சார்பில் மன்னிப்பு கோரினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் 11 அபிவிருத்தித் திட்டப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதை அப்போதைய ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி மீள உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒக்டோபர் முற்பகுதியில் 'ஜப்பானிய அபிவிருத்தி வரலாறும் இலங்கைக்கான செய்திகளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவுவொன்றை நிகழ்த்திய அப்போதைய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கையின் ஊழல்களை பற்றிய தனது அவதானிப்பை வெளியிட்டார்.
'இலங்கைக்கு நான் வந்தது முதல் அவதானித்ததில் இருந்து, இலங்கையில் ஊழல் தொடர்பில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, ஊழலானது தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமாகிறது.
தலைவர்கள் ஊழலில் ஈடுபடும்போது மக்கள் நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதை ஊக்கப்படுத்துவதை அது தடுக்கிறது. இது வரி செலுத்துவோருக்கு வரி ஏய்ப்பு செய்ய வசதியான சாக்குப்போக்குகளை வழங்குகிறது.
இரண்டாவதாக, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும்போது இது மிகவும் தீங்கு விளைவிக்கிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
'ஜப்பானிய நிறுவனங்கள் அவற்றின் கடப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றி வருகின்றன அதனால் அவை இலஞ்சம் வழங்கமாட்டா. இலங்கையில் ஊழல் கலாசாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்பானிய முதலீடுகள் வருவதற்கான சாத்தியம் இல்லை' எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
ஊழலை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நாட்டின் புதிய தலைவராக இலங்கை மக்கள் தெரிவுசெய்துள்ள நிலையில், நீண்ட காலமாக நாட்டை சீர்குலைத்துள்ள ஊழலை ஒழிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்டேக்கி அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவியேற்ற அக்கியோ இசோமாட்டாவும், இலங்கையில் ஊழல்களின் பாதிப்புகள் குறித்து காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ஊழல் ஒழிப்புக்காக 2.5 மில்லியன் டொலர் உதவி
ஊழலை ஒழிப்பதற்கு உதவும் ஜப்பானின் திட்டங்களின் வரிசையில், இலங்கையில் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் மூன்றாண்டுத் திட்டத்துக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கும் ஒப்பந்தமொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி) உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ஜப்பான் நிதி அளிக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கே.பி. ராஜபக் ஷ, சேதிய குணசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க குமநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவன திறனை மேம்படுத்துதல், பொது நிர்வாகம், முதலீடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், திறமையான வழக்கு விசாரணை மற்றும் பொது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இத்திட்டம், நிறுவனங்களில் ஊழலைத் தடுப்பதற்கு ஆளுகை பொறிமுறைகளை வலுப்படுத்துதல், விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துதல், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்பாக இளைஞர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் முயல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி.) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜப்பனிய அரசு, மக்களின் தாராளமான நிதியுதவியுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுடனான இந்த கூட்டாண்மை, நல்லாட்சியை நோக்கிய எமது கூட்டு பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. இந்தத் திட்டத்தின் தொடக்கம், நிறுவனங்களை வலுப்படுத்துவது மட்டுமல்ல, இது பொது நம்பிக்கையை மீட்டெடுப்பது, குடிமக்களை மேம்படுத்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவது தொடர்பானது. 2025 – 2029 காலத்துக்கான இலங்கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கு அமைப்பு ரீதியான தடைகளை அகற்றி, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது.
பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது.
பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது.
திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை
அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

கட்டுரை தகவல்
மாயகிருஷ்ணன் கண்ணன்
பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது.
இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.
அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?
சர்ச்சையின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.
சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர்.
'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'

பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ்.
"கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர்.
கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார்.

"கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன்
அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன்.
கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை
திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு
இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு