Aggregator

யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்

3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று புதன்கிழமை(28) புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா மருத்துவனைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!

268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!

3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று புதன்கிழமை(28) புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா மருத்துவனைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!

268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!

3 months 2 weeks ago

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று புதன்கிழமை(28) புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமனம் வழங்கப்பட்டுள்ளன.   

தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா மருத்துவனைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  

268 புதிய தாதியர்கள் யாழ். போதனாவிற்கு நியமனம்!

வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் புதிய கருத்திட்டம் ஆரம்பம் !

3 months 2 weeks ago
28 May, 2025 | 04:18 PM சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) - இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. 75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் காலநிலை ஆபத்துக்களைத் தொடர்ந்தும் கணிசமான சவால்களுக்குத் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்றது. பொருளாதார வலுவூட்டல், சமூக உள்ளடக்கம் மற்றும் காலநிலை மீண்டெழுந்தன்மை ஆகியவற்றினைக் கொண்ட ஒரு மும்முனை உபாயமார்க்கத்தின் மூலம், ஒன்றை ஒன்று ஊடறுக்கும் இச்சவால்களை இக்கருத்திட்டம் நேரடியாக நிவர்த்தி செய்ய முனைகின்றது. மாகாணத்திற்கு இக்கருத்திட்டம் கொண்டுள்ள பொருத்தப்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிப் பேசிய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே அரசாங்கங்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்கான மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்குவதற்கான ஒத்துழைப்பும் புத்தாக்கமுமிக்க முயற்சிகளின் சாதகமான தாக்கங்களை நாம் பார்த்து வருகின்றோம். இக்கருத்திட்டமானது எமது சமுதாயங்களுக்காக உள்ளடக்கும்தன்மைமிக்க, காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான கூட்டுக் கடப்பாட்டினை எடுத்துவிளக்குகின்றது” எனக் குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட, LEED, LEED+, EGLR, PAVE கருத்திட்டங்கள் உள்ளிட்ட, சமாதானம் மற்றும் மீண்டெழுந்தன்மைக்காகத் தொழில்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் (JPR) கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இடையீடுகளில் இருந்து GROW கட்டமைத்துச் செல்கின்றது. 2025 முதல் 2028 வரை அமுல்படுத்தப்படும் இக்கருத்திட்டம், காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க விவசாயம் மற்றும் நீரியல்வளம், சமூக வலுவூட்டல் மற்றும் சந்தை முறைமை அபிவிருத்தி மூலமாக நிலையான மற்றும் உள்ளடக்கும் தன்மை மிக்க தொழில்வாய்ப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில், “உறுதியான, வெற்றிமிக்க இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கான கூட்டு அபிவிருத்தித் தீர்வுகளில் அவுஸ்திரேலியாவினதும் இலங்கையினதும் அபிவிருத்திப் பங்காண்மை உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்துடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் GROW நிகழ்ச்சித்திட்டத்திற்காகப் பங்காண்மை அமைப்பதையிட்டு அவுஸ்திரேலியா ஆர்வம் கொண்டுள்ளது. வடக்கிலே ஒப்புரவுமிக்க வளர்ச்சியினையும் காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினையும் பிராந்தியத்திற்கான மீண்டெழுந்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முன்னைய ஈடுபாடுகளில் இருந்து இது கட்டமைத்துச் செல்லும்” என குறிப்பிட்டார். அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியடனும் நோர்வே அரசாங்கத்தின் 900,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் இரண்டு நாடுகளினதும் அபிவிருத்தி உபாயமார்க்கங்களுடன் இயைபுறுகின்ற GROW பெண்களின் வலுவூட்டலையும் அங்கவீன உள்ளடக்கத்தினையும் உணவுப் பாதுகாப்பினையும் காலநிலைத் தகவமைப்பினையும் வலியுறுத்துகின்றது. இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே தூதரக மிஷனின் பிரதித் தலைவரான மார்டின் ஆம்டல் பொத்தெய்ம் கூறுகையில், “GROW கருத்திட்டத்திற்கு உதவுவதில் அளப்பரிய மகிழ்ச்சியடையும் நோர்வே, வட மாகாணத்தில் வாழும் பல மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றது. நல்லிணக்கம் என்பது ஒரு பயணத்தின் முடிவிடம் அல்ல, அது ஒரு செயன்முறை, இந்தச் செயன்முறைக்கு புசுழுறு இனால் சாதகமாகப் பங்களிப்பு வழங்க முடியும்.” என குறிப்பிட்டார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரான ஜொனி சிம்ப்சன் தெரிவிக்கையில், “ ஒத்துழைப்பும் உள்ளடக்கும் தன்மையும் கொண்ட சான்றடிப்படையிலான ஒரு மாதிரியில் விவசாயிகளையும் கூட்டுறவுகளையும் கம்பனிகளையும் அரசாங்கத்தினையும் சிவில் சமூகத்தினையும் GROW ஒன்றுசேர்க்கின்றது. இக்கருத்திட்டம் உறுதியான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பும் என்றும் மிகவும் ஒத்திசைவுமிக்க சமுதாயங்களை உருவாக்கும் என்றும் சகலருக்கும் நியாயமான எதிர்காலத்தினை உருவாக்கும் என்றும் நாம் எமது பங்காளர்களுடன் சேர்ந்து நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார். வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் புதிய கருத்திட்டம் ஆரம்பம் ! | Virakesari.lk

வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் புதிய கருத்திட்டம் ஆரம்பம் !

3 months 2 weeks ago

28 May, 2025 | 04:18 PM

image

சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது.

பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) - இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. 

75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் காலநிலை ஆபத்துக்களைத் தொடர்ந்தும் கணிசமான சவால்களுக்குத் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்றது.

பொருளாதார வலுவூட்டல், சமூக உள்ளடக்கம் மற்றும் காலநிலை மீண்டெழுந்தன்மை ஆகியவற்றினைக் கொண்ட ஒரு மும்முனை உபாயமார்க்கத்தின் மூலம், ஒன்றை ஒன்று ஊடறுக்கும் இச்சவால்களை இக்கருத்திட்டம் நேரடியாக நிவர்த்தி செய்ய முனைகின்றது.  

மாகாணத்திற்கு இக்கருத்திட்டம் கொண்டுள்ள பொருத்தப்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றிப் பேசிய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவிக்கையில்,

“அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே அரசாங்கங்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்கான மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டுருவாக்குவதற்கான ஒத்துழைப்பும் புத்தாக்கமுமிக்க முயற்சிகளின் சாதகமான தாக்கங்களை நாம் பார்த்து வருகின்றோம். இக்கருத்திட்டமானது எமது சமுதாயங்களுக்காக உள்ளடக்கும்தன்மைமிக்க, காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான கூட்டுக் கடப்பாட்டினை எடுத்துவிளக்குகின்றது” எனக் குறிப்பிட்டார்.  

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட,  LEED, LEED+, EGLR, PAVE கருத்திட்டங்கள் உள்ளிட்ட, சமாதானம் மற்றும் மீண்டெழுந்தன்மைக்காகத் தொழில்கள் நிகழ்ச்சித்திட்டத்தின்  (JPR) கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இடையீடுகளில் இருந்து GROW கட்டமைத்துச் செல்கின்றது.

2025 முதல் 2028 வரை அமுல்படுத்தப்படும் இக்கருத்திட்டம், காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க விவசாயம் மற்றும் நீரியல்வளம், சமூக வலுவூட்டல் மற்றும் சந்தை முறைமை அபிவிருத்தி மூலமாக நிலையான மற்றும் உள்ளடக்கும் தன்மை மிக்க தொழில்வாய்ப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவிக்கையில், 

“உறுதியான, வெற்றிமிக்க இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கான கூட்டு அபிவிருத்தித் தீர்வுகளில் அவுஸ்திரேலியாவினதும் இலங்கையினதும் அபிவிருத்திப் பங்காண்மை உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்துடன் சேர்ந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் GROW நிகழ்ச்சித்திட்டத்திற்காகப் பங்காண்மை அமைப்பதையிட்டு அவுஸ்திரேலியா ஆர்வம் கொண்டுள்ளது. வடக்கிலே ஒப்புரவுமிக்க வளர்ச்சியினையும் காலநிலை மீண்டெழுந்தன்மைமிக்க அபிவிருத்தியினையும் பிராந்தியத்திற்கான மீண்டெழுந்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட முன்னைய ஈடுபாடுகளில் இருந்து இது கட்டமைத்துச் செல்லும்” என குறிப்பிட்டார்.  

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியடனும் நோர்வே அரசாங்கத்தின் 900,000 அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் இரண்டு நாடுகளினதும் அபிவிருத்தி உபாயமார்க்கங்களுடன் இயைபுறுகின்ற GROW பெண்களின் வலுவூட்டலையும் அங்கவீன உள்ளடக்கத்தினையும் உணவுப் பாதுகாப்பினையும் காலநிலைத் தகவமைப்பினையும் வலியுறுத்துகின்றது.  

இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான நோர்வே தூதரக மிஷனின் பிரதித் தலைவரான மார்டின் ஆம்டல் பொத்தெய்ம் கூறுகையில்,

“GROW கருத்திட்டத்திற்கு உதவுவதில் அளப்பரிய மகிழ்ச்சியடையும் நோர்வே, வட மாகாணத்தில் வாழும் பல மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என நம்புகின்றது. நல்லிணக்கம் என்பது ஒரு பயணத்தின் முடிவிடம் அல்ல, அது ஒரு செயன்முறை, இந்தச் செயன்முறைக்கு புசுழுறு இனால் சாதகமாகப் பங்களிப்பு வழங்க முடியும்.” என  குறிப்பிட்டார்.   

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரான  ஜொனி சிம்ப்சன் தெரிவிக்கையில்,

“ ஒத்துழைப்பும் உள்ளடக்கும் தன்மையும் கொண்ட சான்றடிப்படையிலான ஒரு மாதிரியில் விவசாயிகளையும் கூட்டுறவுகளையும் கம்பனிகளையும் அரசாங்கத்தினையும் சிவில் சமூகத்தினையும் GROW  ஒன்றுசேர்க்கின்றது. இக்கருத்திட்டம் உறுதியான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பும் என்றும் மிகவும் ஒத்திசைவுமிக்க சமுதாயங்களை உருவாக்கும் என்றும் சகலருக்கும் நியாயமான எதிர்காலத்தினை உருவாக்கும் என்றும் நாம் எமது பங்காளர்களுடன் சேர்ந்து நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார்.

வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன்  புதிய கருத்திட்டம் ஆரம்பம் !   | Virakesari.lk

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
மன்னிக்கவும். வெள்ளை பாவாடை கட்டி கொண்டு, இறைவனை நாடி வரும் சின்னம் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பாதிரிகளை கடைசி வரை ஒரு அமைப்பாக பாதுகாத்தவர்கள் யார் ? பல பத்து வருடங்களின் பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் மன்னிப்புகேட்டார். பாவடை எல்லாம் ஒண்டுதான், வெள்ளையோ, காவியோ. மலேசியாவிலும். அப்போ ஒரு கண்டி மலே முஸ்லிம், கைதடியில் உங்கள் பக்கத்து வீட்டில் வந்து குடியேறினால் அவர் உங்கள் ஊரவரா? இல்லை ஆனால் ஒரே நாடுதானே. வந்தான் வரத்தான் என்றால் - ஒரு இடத்தில் பரம்பரையாக இன்றி, அண்மையில் குடி வந்தவர்கள். நாடு அல்ல, இடம் அதாவது ஊர்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு

3 months 2 weeks ago
28 May, 2025 | 06:15 PM மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட், ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மன்னாரில் கனிய மணல் அகழ்வில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, மணல் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை தொடர்பாகவும் விளக்கமளித்தார். இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபோதும் இந்த கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு | Virakesari.lk

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு

3 months 2 weeks ago

28 May, 2025 | 06:15 PM

image

மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்று (28) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். 

இக்கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ்,  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ரவிகரன், முத்து முஹம்மட்,  ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், மன்னாரில் கனிய மணல் அகழ்வில் ஈடுபடுவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கனிய மணல் அகழ்வுக்கான நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்ததோடு, மணல் அகழ்வினால் மன்னார் தீவில் ஏற்படப்போகும் அபாய நிலை தொடர்பாகவும் விளக்கமளித்தார். 

இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபோதும் இந்த கூட்டத்தில் கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மேலும் இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு | Virakesari.lk

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா

3 months 2 weeks ago
(எம்.மனோசித்ரா) நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப்பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டு;ம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில இலங்கை தமிழர்கள் தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதை அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது. அந்த அச்சுறுத்திலிருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னாள் மண்டியிடுவதை விடுத்து பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசணை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால் மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம். இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சர்வதே நாணய நிதியத்தின் பொறுப்பல்ல. எனவே பாதுகாப்பு படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு படைகளை கலைத்து அதன் மூலம் மீதப்படுத்தப்படும் 80 பில்லியனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தேசிய பாதுகாப்பு என்பதை நான் பார்க்கும் கோணத்தில் இந்த நாட்டில் காணவில்லை. பொது மக்கள் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகிறது. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் ஏதேனுமொரு பலவீனத்தின் காரணமாகவே நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே தான் அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகிவிடும். தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, ஸ்ரீ மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லையல்லவா? என்றார். பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா | Virakesari.lk

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா

3 months 2 weeks ago

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு,  கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது.

நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் முன்னேற்றப்பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டு;ம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள சில இலங்கை தமிழர்கள் தமது வீசாவைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது வர்த்தகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு தம்மால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாது என்பதை அவர்கள் அந்த நாடுகளிடம் கூறுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டுக்கு ஓரளவு அச்சுறுத்தல் காணப்படுகிறது.

அந்த அச்சுறுத்திலிருந்து முற்றாக மீள்வதற்கும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் யாரோ ஒருவருக்கு முன்னாள் மண்டியிடுவதை விடுத்து பலம் மிக்க நாடாக மாற்றமடைய வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கரிசணை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தால் மீண்டுமொரு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம். இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பது சர்வதே நாணய நிதியத்தின் பொறுப்பல்ல.

எனவே பாதுகாப்பு படைகளின் ஆளணியைக் குறைப்பதாகக் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு படைகளை கலைத்து அதன் மூலம் மீதப்படுத்தப்படும் 80 பில்லியனைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

தேசிய பாதுகாப்பு என்பதை நான் பார்க்கும் கோணத்தில் இந்த நாட்டில் காணவில்லை. பொது மக்கள் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தல் மிக்கதாகவே காணப்படுகிறது.

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் ஏதேனுமொரு பலவீனத்தின் காரணமாகவே நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எனவே தான் அனுபவமும் அறிவும் மிக்கவர் அந்த பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தொடர்ச்சியாக அதற்கு இடமளித்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உருவாகுவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதைப் போன்றாகிவிடும்.

தேசிய போர் வீரர் தினத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமைதிக்காகவே அனைவரும் போராடியதாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதிக்காக தலதா மாளிகையின் மீதோ, ஸ்ரீ மகா போதியின் மீதோ தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.

பிரபாகரன் அமைதிக்காக போராடியதாகக் கூறினால் அதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டைக் கூறியதால் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த இடத்தில் ஓடிச் சென்று நீ கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூச்சலிடுவதற்கு நான் முட்டாள் இல்லையல்லவா?  என்றார்.

பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா | Virakesari.lk

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நாளை வியாழன் (29 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 74) வியாழன் 29 மே 2:00 pm GMT முலான்பூர் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB இருவர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! மற்றையோர் வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் அவர்களுக்குப் புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் இருவருக்கு மூன்று புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்குமே முட்டைகளா?

கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?

3 months 2 weeks ago

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY/STALIN/X

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், 'தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்' என பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன?

தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யாருக்கு என்ன பலம்?

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.

அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். "இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்" எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.

நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

"கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

"தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்.

"தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் ஜென்ராம், "அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது" என்கிறார்.

"தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை" எனக் கூறும் ஜென்ராம், "கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார்.

தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்" எனக் கூறுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், "அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்" எனக் கூறுகிறார்.

"முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்" எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன்.

அதேநேரம், "தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

1984 உதாரணம் என்ன?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும்.

தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை" எனக் கூறுகிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது" என்கிறார், ஷ்யாம்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை" எனக் கூறுகிறார்.

1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார்.

"1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்" என்கிறார் ஷ்யாம்.

1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார்.

ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன்

"தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?" என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம்.

"பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்" என்கிறார்.

"ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் குபேந்திரன்.

கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,KAMALHAASAN/X

படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க உறுதியளித்தது

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, 'தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?' எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார்.

"வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், "மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை" எனக் கூறுகிறார்.

"ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" எனக் கூறினார்.

"அன்புமணி விரும்பவில்லை"

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,ANBUMANI/X

படக்குறிப்பு,"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை"

அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

"கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை" என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.

"பொறுமை கடலினும் பெரிது" - பிரேமலதா

ராஜ்யசபா தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல், திமுக, அதிமுக

பட மூலாதாரம்,_PREMALLATHADMDK/INSTAGRAM

படக்குறிப்பு,நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார்.

"நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" எனக் கூறியவர், "ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்" என்றார்.

"2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்" எனக் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg5v400z1no

கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY/STALIN/X கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தி.மு.க சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 4 இடங்களும் அ.தி.மு.க-வுக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ள நிலையில், 'தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படலாம்' என பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு முயற்சியில் தி.மு.க இறங்கவில்லை. காரணம் என்ன? தி.மு.க-வை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் ராஜ்யசபா பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அ.தி.மு.க சார்பில் சந்திரசேகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலமும் இதே காலகட்டத்தில் நிறைவடைய உள்ளது. இந்த ஆறு இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன பலம்? இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதியன்று தொடங்க உள்ளது. ஜூன் 9 ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளதாகவும், ஜூன் 12 அன்று வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற்ற உடன், அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் (திமுக 134, காங்கிரஸ் 17, விடுதலைச் சிறுத்தைகள் 4, இ.கம்யூ 2, மா.கம்யூ 2) உள்ளனர். ஒரு ராஜ்யசபா இடத்துக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்தவகையில், தி.மு.க-வுக்கு நான்கு ராஜ்யசபா உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் 66 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் உள்பட 4 உறுப்பினர்கள் தனி அணியாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர் வாக்களிக்காமல் அ.தி.மு.கவுக்கு பா.ஜ.க ஆதரவளித்தால் எண்ணிக்கை 66 ஆக உயரும் (62 + பாஜகவின் 4 வாக்குகள்). 2 ராஜ்யசபா இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பா.ம.கவில் இருந்து 2 பேர் ஆதரவு தெரிவித்தால் மட்டும் அ.தி.மு.க-வுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கிடைக்கும். "இதில் எந்தவித சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும்" எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன். நான்கு வேட்பாளர்களை தி.மு.க அறிவித்தால் அ.தி.மு.க இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடும். மாறாக, உபரியாக உள்ள வாக்குகளுக்கு ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நான்கு இடங்களுக்கு மட்டுமே தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது. "கட்சிக்குக் கெட்ட பெயர் வரும்" பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் "தி.மு.க வசம் 23 ஓட்டுகள் கூடுதலாக உள்ளதால் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி தனது வலிமையைக் காட்ட முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படியொரு சர்ச்சைக்கு தி.மு.க தலைமை இடம் கொடுக்கவில்லை" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம். "தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க அணியில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறும் ஜென்ராம், "அவரவர் வாக்கு அவரவருக்கே என்ற நிலையை எடுத்து தேவையற்ற சர்ச்சையை தி.மு.க தலைமை தவிர்த்துள்ளது" என்கிறார். "தி.மு.க தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததில்லை" எனக் கூறும் ஜென்ராம், "கொள்கைரீதியான முடிவுகளில் உறுதியாக இருக்கிறார். எனவே, அரசியல்ரீதியாக புதிய முயற்சிகளில் அவர் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார். தி.மு.க செய்தித்தொடர்புத் துறை செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "உபரியாக உள்ள வாக்குகளை வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றாலும் அது கட்சிக்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். தோற்றாலும் அது தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும்" எனக் கூறுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கான்ஸ்டன்டைன், "அப்போது தி.மு.க பக்கம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அதில் தனக்கு விருப்பமில்லை என ஸ்டாலின் கூறிவிட்டார்" எனக் கூறுகிறார். "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதுபோன்று செய்தால் அதை வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சர்ச்சைகளில் இறங்க மாட்டார் என்று இதர அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்" எனக் கூறுகிறார் கான்ஸ்டன்டைன். அதேநேரம், "தங்களிடம் கூடுதலாக உள்ள வாக்குகளை வைத்து ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தும் வேலைகளைக் கடந்த காலங்களில் தி.மு.க செய்துள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்" : கமல்ஹாசனின் 'தக் லைஃப்' கருத்துக்கு எதிர்ப்பு ஏன்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அண்ணா பல்கலை வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு28 மே 2025 கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?27 மே 2025 1984 உதாரணம் என்ன? படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் "ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் ஐந்தாவதாக ஒரு வேட்பாளரை தி.மு.க நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது. வேட்பாளர் பட்டியலில் கவிஞர் சல்மா பெயர் இடம்பெற்றுள்ளது எதிர்பாராத ஒன்று" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகிவிட்டதால், ஓட்டு போடும்போது சட்டமன்ற உறுப்பினர்களை 34 என நான்கு வகைகளாக பிரித்து, யார் எந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் எனக் கூறுவார்கள். மீதமுள்ள வாக்குகள் உபரியாக இருக்கும். தி.மு.கவுக்கு உபரியாக 23 வாக்குகள் உள்ள நிலையில், ஐந்தாவது வேட்பாளருக்கு வாக்கு செலுத்தலாம் எனக் கூறலாம். ஆனால், அ.தி.மு.கவுக்கு 34 வாக்குகளும் வந்துவிட்டால், தி.மு.க நிறுத்தும் ஐந்தாவது வேட்பாளர் தோற்றுப் போவார். அதனால் வேட்பாளரை நிறுத்தியும் பலன் இல்லை" எனக் கூறுகிறார். "ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தும்போது, பா.ம.கவும் பா.ஜ.கவும் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக அறிவித்தால் தி.மு.கவின் முயற்சி எடுபடாது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே இப்படியொரு தோல்வியை தி.மு.க விரும்பாது" என்கிறார், ஷ்யாம். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலை சுட்டிக் காட்டிப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "அப்போது ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியை தி.மு.க முன்னிறுத்தியது. ஆனால், அவர் வெற்றி பெறவில்லை" எனக் கூறுகிறார். 1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா, வலம்புரி ஜான், ராஜாங்கம், ராமநாதன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுவும் போட்டியிட்டனர். தி.மு.க சார்பில் வைகோவும் ஏழாவது வேட்பாளராக ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். இதில் ஆற்காடு வீராசாமி தோல்வியடைந்தார். "1996ஆம் ஆண்டில் ராஜ்யசபா வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக வேட்பாளராக உதயபானு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறவில்லை. உறுதியாக வெற்றி பெறலாம் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடினமான முடிவுகளை தி.மு.க எடுக்கும்" என்கிறார் ஷ்யாம். 1996 ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட 5 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் தரப்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அவரை எதிர்த்து வாழப்பாடி ராமமூர்த்தி அணியின் சார்பில் உதயபானு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார். ஓ.பி.எஸ் தரப்பு வாக்குகள் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் குபேந்திரன் "தி.மு.க வசம் கூடுதலாக உள்ள 23 வாக்குகளுடன் பன்னீர்செல்வம் அணி, பா.ம.க மற்றும் சிறிய கட்சிகள் இணைந்தால் புதிதாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்புள்ளதே?" என, பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டோம். "பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசுவதில்லை. இருவரும் அமைதியாகிவிட்டனர்" என்கிறார். "ஐந்தாவது வேட்பாளரை தி.மு.க நிறுத்தினால் பன்னீர்செல்வம் அணியினர் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வுக்கு ஓ.பி.எஸ் அணியும் பா.ம.கவும் வாக்களிக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க-வை மீறி இந்த கட்சிகள் வாக்குகளை மாற்றிப் போடுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார் குபேந்திரன். கூட்டணிக் கட்சிகளைத் தவிர்ப்பது ஏன்? பட மூலாதாரம்,KAMALHAASAN/X படக்குறிப்பு,2024 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க உறுதியளித்தது தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் கடந்த முறை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, கடந்த மாதம் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே, 'தி.மு.க மீண்டும் சீட் கொடுக்குமா?' எனக் கேள்வி எழுப்பும் தொனியில் வைகோ பேசியிருந்தார். "வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லாததால் தான் துரை வைகோவுக்கு திருச்சி எம்.பி தொகுதி ஒதுக்கப்பட்டது" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இதே கருத்தை முன்வைக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன், "மக்கள் நீதி மய்யத்தைத் தவிர மற்ற மூன்று இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை" எனக் கூறுகிறார். "ராஜ்யசபாவில் தி.மு.கவின் குரல் எதிரொலிக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். கூட்டணிக் கட்சிகள் பேசினாலும் அது கட்சியின் குரலாக இருக்காது என நினைக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க விரும்பாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" எனக் கூறினார். "அன்புமணி விரும்பவில்லை" பட மூலாதாரம்,ANBUMANI/X படக்குறிப்பு,"ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை" அ.தி.மு.க உடன் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. அந்தவகையில், அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. "கட்சி வளர்ச்சிப் பணிகளில் அன்புமணி தீவிரம் காட்டி வருவதால், மீண்டும் ராஜ்யசபா சீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை" என, பா.ம.க-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "ராஜ்யசபா இடத்தைப் பெறுவதற்கு அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது குறித்து பா.ம.க தலைமை பேசி வருகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். அ.தி.மு.க தரப்பில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அவ்விரு இடங்களுக்கும் கட்சியின் சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக, அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார். "பொறுமை கடலினும் பெரிது" - பிரேமலதா பட மூலாதாரம்,_PREMALLATHADMDK/INSTAGRAM படக்குறிப்பு,நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். அ.தி.மு.க அணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க இணைந்தது. அப்போது, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசி வந்தார். "நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க உடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்" எனவும் செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எங்கள் தரப்பில் இருந்து அப்படி எந்த வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக செவ்வாய்க் கிழமையன்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " பொறுமை கடலினும் பெரிது. பொறுத்திருங்கள்" எனக் கூறியவர், "ஜனவரி 9 ஆம் தேதியன்று கடலூரில் மாநாடு நடக்க உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்" என்றார். "2026 சட்டமன்றத் தேர்தலில் ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டபோது, "கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் சீட்டை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது அது தேர்தலில் எதிரொலிக்கும்" எனக் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg5v400z1no

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நாளை RCB vs PBKS போட்டி. எத்தினைபேர் RCBயத் தெரிவு செய்திருப்பினம். PBKSஅ ஒருத்தரும் தெரிவு செய்யேலை. ஒருத்தரின் பட்டியலிலும் PBKS இல்லையே.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்

3 months 2 weeks ago
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம் 28 MAY, 2025 | 03:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/215908

யாழ். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்கள் புதிதாக நியமனம்

3 months 2 weeks ago

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம்

28 MAY, 2025 | 03:54 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

54__5_.jpg

54__3___1_.jpg

54__6___1_.jpg

54__8___1_.jpg

54__4___1_.jpg

https://www.virakesari.lk/article/215908

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 29 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்? கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறார் அவர். வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. 'வேடன்' என்ற பெயர் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். கேரளாவின் திருச்சூரில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சில காலம் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்த ஹிரந்தாஸ், ஒருகட்டத்தில் திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான பி. அஜீத் குமாரின் ஸ்டுடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்க ராப் பாடகரான ட்யுபக் ஷகூரின் தாக்கம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வேடன். ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். 2020ஆம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது அகில் ராமச்சந்திரன், ஹ்ரித்விக் சசிகுமார் என்பவர்களோடு இணைந்து Voice of the Voiceless என்ற தனது முதல் பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார் வேடன். சாதி பிரச்சனை, நிறம் சார்ந்த ஒதுக்கல், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகிவற்றை அந்தப் பாடலில் சுட்டிக்காட்டியிருந்தார். குறுகிய காலத்திலேயே அந்தப் பாடல் 6,00,000 பார்வைகளைக் கடந்தது. (தற்போது 13 மில்லியன் பேர் அந்தப் பாடலைப் பார்த்திருக்கின்றனர்). இதற்கடுத்ததாக Bhoomi Njan Vazhunidam என்ற பாடலை வெளியிட்டார். அதுவும் பிரபலமான நிலையில், கேரளாவில் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டார் வேடன். பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM அதே ஆண்டில் கொச்சி மியூசிக் ஃபவுண்டேஷனின் ஹிப் ஹாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். இதற்குப் பிறகு அவரது இசைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் நாயாட்டு படத்தில் "நரபலி" என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இதற்குப் பிறகு மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் 'குதந்திரம்' என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இந்தப் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின. டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலையும் எழுதி பாடியிருக்கிறார் வேடன். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) எதிர்க்கட்சியான காங்கிரசும் வேடனை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்து அமைப்புகள் பாடகர் வேடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு முகமைக்கு அனுப்பப்பட்ட கடிதம் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM 2021ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று எல்டிஎஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரள அரசு பல நிகழ்வுகளை நடத்தியது. அப்படி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் வேடன் பங்கேற்றார். கடந்த மே 18ஆம் தேதியன்று பாலக்காட்டின் கோட்டை மைதானத்தில் வேடனின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில அரசின் எஸ்.சி. - எஸ்.டி. மேம்பாட்டுத் துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த மைதானத்தில் சேதமடைந்த நகராட்சி சொத்துகளுக்கு மாநில எஸ்.சி. - எஸ்.டி மேம்பாட்டுத் துறை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ள பாலக்காடு நகராட்சி கூறியுள்ளது. இதற்குப் பிறகு, பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.கவின் கவுன்சிலரான வி.எஸ். மினிமோல் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் (என்ஐஏ) வேடன் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், வேடனின் பாடல்களில் பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் சாதியை முன்வைத்து இந்து சமூகத்தைப் பிளக்க வேடன் முயல்வதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். வேடன் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மினிமோல், இருந்தபோதும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் வேடன் பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வன்முறையையும் வெறுப்பையும் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். வேடன் மீதான வழக்குகள் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM மினிமோல் குறிப்பிடும் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் 28ஆம் தேதியன்று, கொச்சியில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்த வேடனும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரும் கேரள மாநில கலால் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு காவல்துறை அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது சங்கிலியில் புலிப் பல் (அது சிறுத்தையின் பல் என்றும் குறிப்பிடப்படுகிறது) பதிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சங்கிலி தாய்லாந்தில் வாங்கப்பட்டதாக வேடன் தெரிவித்தார். கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேடனை, புலிப் பல் விவகாரத்தில் கேரள வனத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பிறகு இந்த வழக்கிலும் வேடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது விவகாரங்கள் அனைத்திலும் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே வேடனுக்கு ஆதரவாக நின்றது. அக்கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன், வனத் துறை அவசரப்பட்டு கைதுசெய்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல வனத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களின் உணர்வுகளையும் மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். இந்து அமைப்புகள் குறிவைக்க காரணம் என்ன? இந்து அமைப்புகள் அவரைக் குறிவைக்க, அவரது பாடல்களில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன். "அவரது பாடல்கள் தீவிரமான அரசியல்தன்மை உள்ளடக்கமும் கொண்டவை. தலித்துகளின் குரலை வலுவாக வெளிப்படுத்துபவை. பிராமண மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துபவை. அதனால்தான் இந்து அமைப்புகள் ஆத்திரமடைகின்றன." என்கிறார் அவர். வேடன் பிரதமர் மோதி குறித்து நேரடியாக விமர்சித்திருக்கிறாரா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, சாதிய அடக்குமுறை குறித்து அவர் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார், அதுதான் அவர்கள் வேடனைக் குறிவைக்கக் காரணம் என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன். இது ஒருபுறமிருக்க, பாலக்காட்டில் நடந்த இந்து ஐக்கிய வேதி கூட்டத்தில் பேசிய அதன் தலைமை டிரஸ்டி பி. சசிகலா, பட்டியல் இன மக்களின் வலுவான நாட்டுப் புற பண்பாட்டில் விழுந்த கறைதான் வேடனின் இசை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வேடனை சாதி தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்காக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது மீது கொல்லம் நகரக் காவல்துறை மே 17ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ldq0pdgjzo

அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழர்களின் கொலைகளுக்கு தீர்வு வழங்குவதிலிருந்து விலகிச் செல்கிறது - சபா குகதாசன்

3 months 2 weeks ago
28 MAY, 2025 | 03:22 PM (எம்.நியூட்டன்) அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார். அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும். இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் பாயும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை ஏற்க முடியாது. அனுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா? இது ஆதாரம் இல்லையா? மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/215902

அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழர்களின் கொலைகளுக்கு தீர்வு வழங்குவதிலிருந்து விலகிச் செல்கிறது - சபா குகதாசன்

3 months 2 weeks ago

28 MAY, 2025 | 03:22 PM

image

(எம்.நியூட்டன்)

அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார்.

அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும்.

இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் பாயும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை ஏற்க முடியாது.

அனுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான்.

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா?

இது ஆதாரம் இல்லையா? மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/215902