Aggregator

இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!

3 months 2 weeks ago


வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன.


இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது:
வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். 


தற்போது கடற்கொந்தளிப்புக் காரணமாகவும், கடல் இரைச்சல் காரணமாவும் இந்த இழுவைப் படகுகள் மிகவும் அண்மையில் வந்த பின்னரே அவற்றை உணரக்கடியதாக உள்ளது. இராட்சத படகுகள் கடந்து செல்லும்போது ஏற்படும் கொந்தளிப்பால் எமது சிறிய படகுகள் கவிழும் ஆபத்து ஏற்படுகின்றது. மரணத்தோடு உறவடியே மீனவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கறுக்கும் சென்று கரை திரும்புகின்றோம் ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். 

இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!

‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை

3 months 2 weeks ago
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது. ADVERTISEMENT அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு. சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். ‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை | High Court expresses concern over premarital sex becoming normal - hindutamil.in

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

3 months 2 weeks ago

17 Nov, 2025 | 04:58 PM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்குட்பட்டவர்கள் 20 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவர். மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

மேலும், 2025ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி பாதிப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான விகிதம் 7.6க்கு 1 என்ற குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இது ஆண்களே பெரும்பாலான தொற்று பாதிப்புகளுக்கு தொடர்ந்து காரணமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில், 47 பேர் எச்.ஐ.விஃஎய்ட்ஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முதல், இலங்கையில் மொத்தம் 6759 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 5366 ஆண்கள் மற்றும் 1573 பெண்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரித்து வரும் போக்குக்கு மத்தியில், தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், ஆணுறை பயன்பாடு, வெளிப்பாட்டிற்கு முந்தைய தடுப்பு மற்றும் வெளிப்பாட்டிற்குப் பிந்தைய தடுப்பு உட்பட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆய்வில் இருப்பதாகவும் விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல் | Virakesari.lk

யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்

3 months 2 weeks ago

18 Nov, 2025 | 12:31 PM

image

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்  101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி  காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது.

கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார்.

யாழில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவு ; எதிர்வரும் 27 வரை மழை நீடிக்கும் சாத்தியம் - யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் | Virakesari.lk

சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு!

3 months 2 weeks ago

(இணையத்தள செய்திப்பிரிவு)

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.

விமானத்தில் உள்ள உணவுகளை உண்ணும் அனுபவம் என்பது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புகழ்பெற்ற சேவையின் நீடிப்பு ஆகும். 


சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு! | Virakesari.lk

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

3 months 2 weeks ago

18 Nov, 2025 | 04:05 PM

image

திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை  (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது.  

இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 

இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும். 

புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். 

புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும். 

பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கு உரிமை உள்ளது. 

மக்களை தூண்டுவது அரசாங்கம் தான். கால காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது. 

5 வருடங்களுக்கு தான் அரசாங்கத்துக்கு பலம் கிடைக்கும். ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. அது எப்போதும் மாறாது. 

இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை.

பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம் என்றார். 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk

வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார

3 months 2 weeks ago

18 Nov, 2025 | 05:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்க கூடாது.நாட்டில்  மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில்  தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு  காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளால்  தேசிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வடக்கு மாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திரமையாக காணப்படுகிறது. வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு  காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு  காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது காணிகளுக்கு பதிலாக நட்டஈடு வழங்க வேண்டும்.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை  இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில்  தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய  காணிகளை விடுவிக்க கூடாது. வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்படவில்லை.காணிக்கு போதுமான அளவு நட்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

வடக்கு வாக்குகளை பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட  வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில்  தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

வடக்கு மாகாணம்: தேசிய பாதுகாப்பு காணிகளை விடுவிக்க கூடாது – நளின் பண்டார | Virakesari.lk

பெரும்பான்மைக்கு ஒரு கடிதம்!

3 months 2 weeks ago

கவலை தருகிறது!

**********************

பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு

பெரும்பான்மை மக்களே!

புத்தர் போதித்ததெல்லாம்

அறமும்,அகிம்சையும் தானே.

அடாவடித்தனமும்,அரசியலுமா?

புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில

காவியுடையணிந்தவர்களை

எப்படி அனுமதிக்கீறீர்கள்.

ஒற்றுமையான நாட்டில் தான்

ஒவ்வொரு மனித இனமும்

வாழநினைப்பது தப்பா?

இலங்கையென்ற அழகிய நாடை

கெடுப்பதற்கென்றே- சில

அரசியல் வாதிகளும்,

அரசடி வாதிகளும்

தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே

இனங்களை பிரித்து

பிணங்களை தின்ன நினைப்பது

உங்களுக்கு புரியவில்லையா?

மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும்.

புத்தபெருமானே இன்று பார்த்தால்

இரத்தக் கண்ணீர் வடிப்பார்.

எந்த அரசாங்கம் வந்தாலும்

இவர்களுக்கு அடங்குவதென்றால்

ஜனாதிபதி,பிரதமர் என்ற

அரசியலமைப்புத்தான் ஏனோ?

அறிவார்ந்த சிங்கள மக்களே!

சிந்தியுங்கள்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

18.11.2025

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months 2 weeks ago
தொண்டி கடலோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிய டால்பின்கள் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின. டால்பின்கள் கூட்டமாக கடலின் மேல் பகுதிக்கு வந்து குதித்து விளையாடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு அல்ல. எனவே பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியதை தொண்டி கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இந்த அழகான காட்சிகளை அப்பகுதியினர் பலர் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். கரைக்கு மிகவும் அருகில் டால்பின் கூட்டங்கள் வருவதற்கான காரணம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், கடல் பசு, திமிங்கலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும் வழக்கத்தை கொண்டவை என்றார். “இவ்வகையான கடல் வாழ் உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரள கடற்கரை வழியாக தமிழக கடற்பகுதிக்கு பின்னர் மீண்டும் அவை மகாராஷ்டிரா செல்லும். பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்வதன் காரணமாக கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால் கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் கடல் புற்களுக்கு மத்தியில் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும். அப்படி அமைக்கும் போது கடல் மீன்களை உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்களை நோக்கி கரை பகுதிக்கு வர நேரிடுகிறது” என்றார். https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3Aaaefd337-afc4-43de-904d-cbf95e77caac#asset:aaefd337-afc4-43de-904d-cbf95e77caac

போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா: படைகளை திரட்டும் வெனிசுவேலா - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
கொஞ்சம் பொறுங்கோ. தலைவன் Trump பங்குச்சந்தையில எல்லாம் வாங்கி முடிஞ்ச பிறகு நிலைமை சாதாரணமா வந்திடும். பிறகு திருப்பி வித்திட்டு மறுபடியும் பங்குச்சந்தை இறங்கிறதுக்கு இப்பிடி எதாவது செய்யலாம்.

கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

3 months 2 weeks ago
இவையள் என்னமோ திறம் மாதிரி. டெல்லி, மும்பை போன்ற விமனநிலையங்களில தமிழ் ஆட்களை இவையள் படுத்திற பாட்டுக்கு இது பரவாயில்லை என்று தான் சொல்லனும்.

போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா: படைகளை திரட்டும் வெனிசுவேலா - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நோபெர்டோ பரெதஸ் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார். வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார். அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. 'பலவீனமான படைப்பலம்' மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா? செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர். "அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார். "ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர். உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார். "ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல." வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார். 2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது. "சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார். "உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார். பட மூலாதாரம், Getty Images இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார். வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது. அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும். கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார். வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images கொரில்லா போர் மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது. வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார். "மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். ''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார். "ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o

போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா: படைகளை திரட்டும் வெனிசுவேலா - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • நோபெர்டோ பரெதஸ்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும்.

1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார்.

வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார்.

ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார்.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.

'பலவீனமான படைப்பலம்'

மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா?

செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர்.

"அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார்.

"ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர்.

உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார்.

"ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல."

வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார்.

2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது.

"சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்

அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார்.

"உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது.

வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார்.

வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது.

அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும்.

கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு

ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார்.

வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார்.

வெனிசுலாவின் ராணுவம் அமெரிக்க தாக்குதலைத் தாங்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கொரில்லா போர்

மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.

வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார்.

"மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார்.

"ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

3 months 2 weeks ago
இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் - ட்ரம்ப் மிரட்டல்

3 months 2 weeks ago
18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடுமையான பல அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து மிரட்டி வருவதோடு, உலக நாடுகளிடையே நிலவி வரும் யுத்தங்களை நிறுத்துவதற்காக வரி விதிப்பை தான் கடுமையாக்கி வருவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்து, ரஷ்யா மீதான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, மீண்டும், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என ட்ரம்ப் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230718

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் - ட்ரம்ப் மிரட்டல்

3 months 2 weeks ago

18 Nov, 2025 | 04:41 PM

image

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. 

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். 

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடுமையான பல அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து மிரட்டி வருவதோடு, உலக நாடுகளிடையே நிலவி வரும் யுத்தங்களை நிறுத்துவதற்காக வரி விதிப்பை தான் கடுமையாக்கி வருவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 

2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்து, ரஷ்யா மீதான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, மீண்டும்,  ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என ட்ரம்ப் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/230718

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!

3 months 2 weeks ago
மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

3 months 2 weeks ago
மாற்று அவயவங்களுக்காக இந்தியா சென்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு! Nov 18, 2025 - 01:35 PM யாழ். பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ். இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்று (18) சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை குறித்த 35 பேர் கொண்ட அவயவங்களை இழந்த குழு சென்னை சென்றுள்ளது. யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் "சென்னை ஸ்பாக் மிண்டா" நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi4ah7da01qoo29n08rl60us

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

3 months 2 weeks ago
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா” நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453092

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

3 months 2 weeks ago

c8b7f798-dc40-4207-9614-a74ad04898ab.jpe

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்

கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா” நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1453092