Aggregator
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?
29 MAY, 2025 | 10:19 AM
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
பின்னணி என்ன? - ட்ரம்ப்பின் புதிய வரி சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில் அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.
புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயல் திறன்துறையில் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப். தேர்தலில் ட்ரம்ப்புக்கு மஸ்க் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில்முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும் வெள்ளை மாளிகை மேலாண்மை அலுவலகம் மற்றும் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’
உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் என்றார். (a)
https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-ஏ-சுமந்திரன்-கஜேந்திரகுமார்-நாளை-பேச்சு/175-358211
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
வி.ரி.சகாதேவராஜா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.
கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது .
சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன்.
அந்த காலகட்டத்திலே இராணுவம், பொலிஸார் ஆட்சி நிலவிய காலம் என்ற காரணத்தினால் பொது மக்களாலோ ஏனைய அரசியல் வாதிகளாலோ எதுவும் செய்ய முடியாத ஜனநாயக மற்ற ஒருசூழ்நிலை இருந்தது .
ஆனால், இன்று சகல இன மக்களையும் அனுசரித்து சாதி, இன,மத பேதம் இல்லாமல் ஊழல் ஒழிப்போம் என்று வந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது.
எனவே, முழு தமிழ் மக்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த கல்லாற்றில் அதுவும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக தனியார் காணியில் அடாத்தாக வைக்கப்பட்டது. இன்று அங்கு எந்த பௌத்தர்களும் இல்லை. வணங்குவதற்கு கூட யாருமில்லை.
இன்று அது அங்கு அவசியமா? என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறப்பதாகவும் இல்லை . எதற்கெல்லாமோ குரல் எழுப்புகிறார்கள். ஆனால், எமது உரிமையோடு இருப்போடு மண்ணோடு கூடிய இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதேபோல் உகந்தமலையிலும் புத்தர் சிலை முளைத்துள்ளது.
இந்துவாகப் பிறந்த புத்த பகவான் எந்த இடத்திலும் தன்னை கொண்டு இப்படி ஏனைய இன வேறிடத்தில் நிறுத்தி இன உறவை சீரழிக்குமாறு கூறவில்லை .உகந்த மலையில் அதே செயல்பாடு தான் தொடர்ந்திருக்கிறது.
எனவே, நல்லிணக்க அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு இவ்வாறு தனித் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் இருக்கின்ற இந்த புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தனித்தமிழர்-வாழும்-கல்லாற்றில்-புத்தர்-சிலையா/175-358224