Aggregator
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிரிக்கலாம் வாங்க
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
Published By: RAJEEBAN
28 MAY, 2025 | 11:29 AM
பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய படையினர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர்.
மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் ஒருவரின் காலில் இருந்து குருதி வெளியேறுகின்றது என ஏபி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காசாவின் தென்பகுதயில் உள்ள ரபாவில் காசா மனிதாபிமான மன்றம் என்ற அமைப்பு மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் இந்த முறை மூலம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்து ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனை ஏற்க மறுத்துள்ளன.
பொதுமக்களிற்கான உணவை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கின்றது என ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
மனிதாபிமான பொருட்களை எதிர்பாத்திருக்கும் மக்களிற்கும் இஸ்ரேலிய துருப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மூன்று மாதகால இஸ்ரேலின் தடை காரணமாக பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கின்றனர்.
பெருமளவானவர்கள் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு செவ்வாய்கிழமை சென்று உணவுப்பெட்டிகளை பெற்றுக்கொண்டனர் என பாலஸ்தீனியர்கள் ஏபிக்கு தெரிவித்துள்ளனர்.
தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களின் அகதிமுகாமிலிருந்து பல மைல் நடந்து மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியை நோக்கி சென்றனர்.
அவர்கள் இஸ்ரேலின் இராணுவநிலைகள் ஊடாகவே அந்த இடத்தை சென்றடையவேண்டும்.
மதியமளவில் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டனர். நீண்ட சங்கிலிதொடர் வேலிப்பாதைகளில் பெருமளவில் மக்கள் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு முக அடையாளங்கள் ஸ்கான் செய்யப்பட்ட பின்னர் உணவுபெட்டிகளை பெற அனுமதிக்கின்றனர் என ஏபிக்குதெரிவித்துள்ள இருவர்,கூட்டம் அதிகரித்ததும்,மக்கள் வேலிகளை இழுத்துவிழுத்திவிட்டு உணவுப்பெட்டிகளை எடுத்தனர்,அங்கிருந்த பணியாளர்கள் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
மாதவிடாய் குறித்து சமூகத்திலுள்ள களங்கத்தால் பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள் - பிரதமர் ஹரிணி
மாதவிடாய் குறித்து சமூகத்திலுள்ள களங்கத்தால் பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள் - பிரதமர் ஹரிணி
28 MAY, 2025 | 10:50 AM
மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
"மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்" என்ற தலைப்பில் மே 27 அன்று கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 'Period Pride 2025' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பெண்களின் மாதவிடாய் என்பது அவமதிக்கப்படக்கூடிய ஒரு விடயமல்ல, இது ஒரு இயற்கையான நிகழ்வு.
மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வறுமை ஆகியவை வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது, கண்ணியம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயமாகும்.
திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆராய்ச்சியின்படி, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் இல்லாததால் பல பாடசாலை மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
பல பெண்கள் பாதுகாப்பற்ற தெரிவுகளை நாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பில் சமூகத்திலிருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் மாதவிடாய் எவருடைய உடல்நலம், கல்வி அல்லது கண்ணியத்திற்கும் இடையூறாக அமையக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு விரைவான மற்றும் முறையான திட்டம் ஒன்று தேவை.
13 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாதவிடாய் காரணமாக எந்த ஒரு பெண் பிள்ளையும் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து.
அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார நப்கின்களை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கான சுகாதார நாப்கின் மீதான அனைத்து வரிகளையும் நீக்க கோரிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த விடயத்தில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரிவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியம்.
இந்த விடயம் தொடர்பாக நிதியமைச்சுடன் கலந்துரையாடி வரியினை நீக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்ப்பார்த்துள்ளோம். இதற்காக சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் ஆதரவை எதிர்பார்ப்போம் என்றார்.
இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் - வங்காலையில் கடலரிப்பு : கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை : ரவிகரன் நேரடி விஜயம்!
மன்னார் - வங்காலையில் கடலரிப்பு : கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை : ரவிகரன் நேரடி விஜயம்!
28 MAY, 2025 | 10:45 AM
மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செவ்வாய்க்கிழமை (27) நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
ஏற்கனவே, கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப்போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படவேண்டுமெனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்கமுடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியமென மக்களால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று, தடுப்பணை அமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.