Aggregator
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
29 May, 2025 | 03:08 PM
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நடைபெற்றது.
குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கையளிப்பு நிகழ்வில் இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு! | Virakesari.lk
முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு !
முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு !
29 May, 2025 | 04:32 PM
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை திறந்து வைத்தார்.
இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தினை திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார்.
குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது.
இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1250 குடும்பங்களுக்கு வழங்கக்கூடியதுடன் திட்டத்தின் ஆரம்பத்தில் 250 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் நடைமுறையில் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு ! | Virakesari.lk
கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!
வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!
00]
http://seithy.com/siteadmin/upload/train-021124-seithy.jpg
மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் கட்டுமாணப்பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9,127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த புகையிரத மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது. சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது அந்தப் பகுதியில் டோக்கன் முறையில் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://seithy.com/breifNews.php?newsID=333925&category=TamilNews&language=tamil