3 months 2 weeks ago
தொடருங்கள் தொடரவேண்டும்.....
3 months 2 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள். அந்த 7 நாட் கள் படக்காட்சி
3 months 2 weeks ago
இன்று ரம்பின் அதியுச்ச வரி நடவடடிக்கைக்கு எதிராக வழக்கு போடுபவர்களும்,தீர்ப்பு வழங்குபவர்களும்......இந்த அமெரிக்கா ஏனைய நாடுகள் மீது,அப்பாவிகள் மீது குண்டுகள் வீசி ஆக்கிரமிக்கும் போது ஏன் வாய் மூடிக்கொண்டு இருந்தார்கள்?
3 months 2 weeks ago
நிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.
3 months 2 weeks ago
நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.
3 months 2 weeks ago
உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.
3 months 2 weeks ago
ஆர்ப்பாட்டம் இல்லாத நடிகர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
3 months 2 weeks ago
இருந்தாலும் வேடனுக்கு இருக்கும் தைரியம் ஏனைய கலைஞர்களுக்கு இல்லை.இலங்கையிலும் இப்படியொரு கலைஞன் வேண்டும்.
3 months 2 weeks ago
ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள். மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை. மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம். அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே.
3 months 2 weeks ago
என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.
3 months 2 weeks ago
நாளை வெள்ளி (30 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 75) வெள்ளி 30 மே 2:00 pm GMT முலான்பூர் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI ஐந்து பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???
3 months 2 weeks ago
மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான். தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம். பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு. கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம். நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.
3 months 2 weeks ago
நாளை, GT எதிர் MI. கனபேர் மும்பையைத் தெரிவு செய்திருப்பினம் என்று நினைக்கிறேன்.
3 months 2 weeks ago
அதாவது பிரச்சினைகள் வேண்டாம் என்பதற்காக உண்மையை, வரலாற்றை புதைக்கலாம்???? அடுத்து தமிழுக்கு கன்னடம் தான் மூலம் என்று வரும். அப்பொழுதும். .. நட்பு முக்கியமல்லோ....
3 months 2 weeks ago
இன்றைய முதலாவது Play-off Qualifier 1 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டியில் வெல்லும் நோக்கோடு விளையாட வந்ததாகத் தெரியவில்லை! தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபில் சோல்ற்றின் புயல்வேகத்தில் ஆட்டமிழக்காது எடுத்த 56 ஓட்டங்களுடனும் மயங் அகர்வால், ரஜட் பரிடாரின் கமியோ ஆட்டங்களுடனும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் என சரியாக கணித்த இருவருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
3 months 2 weeks ago
இப்போதான் பார்த்தேன். RCBக்கு இது நான்காவது இறுதிப் போட்டி. இம்முறையாவது வெல்வார்களா. அவர்கள், இதுவரை, 9 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம். சென்னையை ஏன் இங்கே கொண்டாடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறது. சென்னை என்பதை விட, அவர்கள், இதுவரை 12 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம் (16 பருவ காலங்களில் - முக்கால்வாசி நேரம்). 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுருக்கினம். 5 முறை வெற்றியாளர்கள். இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட்ட அணி. இரண்டு முறை, தடை செய்யப் பட்ட அணியும் இவர்கள்தான் (2016உம் 2017உம்).
3 months 2 weeks ago
பட ரிலீசுக்கு முன் இப்படித்தான் சிவகர்த்திகேயனும் பொராட்ட சூரியும் போல் அடிபடுவார்கள் இலவச விளம்பரம் தேடி படம் ரிலிஸ் ஆகி விட்டதும் கமல் இன்னுமொரு குழப்பமான கருத்தை வெளியிடுவார் அதற்கு என்ன அர்த்தம் என்று மீடியாவில் இருந்து பட்டி தொட்டி உள்ள பாமரன் தொடக்கம் படித்தவன் வரை தலையை பிய்த்து கொண்டு திரிவார்கள் வழக்கம் போல் சில நாட்கள் சென்ற பின் கமலே விளக்கம் கொடுப்பார் அதாவது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பது போலும் கேட்காதது போலவும் அவரின் விளக்கம் இருக்கும் பிறகென்ன கன்னட மீடியாக்கள் கமல் மன்னிப்பு கேட்ட விட்டார் என்று அலறும் அதுக்கு இடையில் நம்ம பக்கம் தமிழ் நாட்டில் மற்றொரு பரபரப்பான செய்தி குஞ்சு பொரித்து பறக்க தொடங்கும் பிறகென்ன மக்கள் அந்த செய்தி யில் இந்த மகா நடிகனின் பொய் பிரட்டு செய்திகளை மறந்து விடுவார்கள் . பக்கத்தில் சொந்த இனம் ஆயிரகணக்கில் கொல்லபட்டு கொண்டு இருக்கும் நேரம் மானடா மயிலாட பார்த்து கவலையை போக்கி கொண்டவர்கள் அல்லவா ............................
3 months 2 weeks ago
அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.
3 months 2 weeks ago
நல்லவேளையாக வேடனின் தாயார் என்ன ஊர் என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை 🤣
3 months 2 weeks ago
பில் சால்டின் அதிரடியுடன், RCBயினர் இறுதிப் போட்டியில் தங்களின் கால்களைப் பதித்துள்ளார்கள். வாழ்த்துகள் பசங்களா. கோலியின் 18 வருடத் தவம் நிறைவேறுமா?