Aggregator
பனையின் கவலை!
பனையின் கவலை!
பனையின் கவலை!
**********************
என் மண்ணைப் பற்றி
பிடித்ததனால்
மரமாக நிற்கின்றேன்
பிள்ளைகளை
மாடுழக்கி தோலுரித்து
பற்களால்- உதிரக்கழி
உறிஞ்சி தூக்கியெறிய
வந்தவனோ
பனம் பாத்தியென்று
மண்தோண்டி
மூடிச்சென்றான்.
நாளை வடலியாக
வளருமென்ற
நம்பிக்கையில்தான்
நான் வாழுகின்றேன்.
-பசுவூர்க்கோபி.
அமெரிக்காவின் அவலம்
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இரசித்த.... புகைப்படங்கள்.
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
அமெரிக்காவின் அவலம்
சிரிக்கலாம் வாங்க
அமெரிக்காவின் அவலம்
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
இராஜதந்திர மோதல்; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா
இராஜதந்திர மோதல்; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா
இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா
Published By: Digital Desk 3
19 Nov, 2025 | 03:55 PM
![]()
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்சி நவம்பர் மாதம் 7-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசியபோது, “தாய்வானின் மீது சீனா தாக்குதல் நடத்தி, அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலையை உருவாக்கினால், டோக்கியோ இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் சீனாவில் கடும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளதால் இரு நாடுகளின் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஜப்பான் பிரதமர் தகாய்சியின் கருத்துகள் சீன அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அரச ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பின்னர், சீனாவில் உள்ள ஜப்பான் பிரஜைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கவும், கூட்டம் அதிகமாகும் பகுதிகளைத் தவிர்க்கவும் டோக்கியோ அரசு அறிவுறுத்தியது.
தகாய்சியின் கருத்துகளுக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓசாகாவில் உள்ள சீனத் தூதரகத்தின் தூதர் சுஏ ஜியான், ஜப்பான் பிரதமரை குறிக்கும் விதத்தில் “அந்த அசுத்தமான கழுத்தை வெட்டி எறிவோம்” என மிரட்டல் விடுத்தார்.
பின்னர் அந்தப்பதிவு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீன குடிமக்களுக்கு பீஜிங் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகாய்சி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கு பதிலாக, டோக்கியோ அரசு, அந்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே உள்ளதாக தெரிவித்துள்ளது.
புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்
19 Nov, 2025 | 04:03 PM
![]()
(எம்.மனோசித்ரா)
இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் முதல் எதிர்ப்புப் பேரணிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக எங்களுக்கு அறிவித்துள்ளனர். பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்திற்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம்.
எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யும்போது, எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பதுதான். ஏனெனில், எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணிக்கு விளம்பரம் கொடுப்பது எப்படி என்ற சவால் எங்களுக்கு இருந்தது.
ஆனால், அரசாங்கத்தினால், இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசாரப் பேரணி ஒன்றுக்கு கிடைத்ததிலேயே அதிகபட்ச விளம்பரத்தை, தற்போது 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வரவுசெலவுத் திட்ட உரையின் போதும், மாவீரர் தின உரையின்போதும், ஏன் பாராளுமன்றத்திற்கு ஓடிச்சென்று திருகோணமலையில் புத்தர் சிலை பற்றி பேசியபோதும் நுகேகொடை பேரணியை நினைவுபடுத்துவதற்கு மறக்கவில்லை.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தினமும் நினைவுபடுத்தி இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்ய, எதிர்க்கட்சியின் சகோதரக் கட்சிகளைப் போலவே, அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வழங்கிய அந்த ஆதரவை நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகிறோம். பேரணி நடைபெறுவதற்கு முன்பே, அது இலங்கை வரலாற்றின் மிக வெற்றிகரமான பேரணியாக மாறிவிட்டது. ஏனெனில், இவ்வளவு பெரியதொரு அரசாங்கத்தை பயமுறுத்திய வேறு எந்தவொரு பேரணியும் இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், 21ஆம் திகதி பேரணியை வெற்றிபெறச் செய்வதற்காக நாங்கள் செய்த ஒரு தந்திரம் என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிக்குகளைத் தாக்கி, புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியது நாங்களா? உண்மையில், இலங்கை வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார்.
புத்தரை கைது செய்வதற்கு சமமான, ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்த ஒரு சம்பவமாக இந்த திருகோணமலை விவகாரம் பதிவாகியுள்ளது. நாட்டை ஆட்சி செய்த ஏகாதிபத்தியவாதிகள்கூட பௌத்த மதத்தை இவ்வளவு அவமானப்படுத்தவில்லை என்பதை நாங்கள் மிகவும் வேதனையுடன் நினைவுபடுத்த விரும்புகிறோம். நுகேகொடை பேரணியை எண்ணி அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. பெரும் மழை பெய்தாலும், காற்று வீசினாலும், அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் விதித்தாலும், அரசாங்கம் இந்தப் பேரணியைத் தடை செய்தாலும், 21ஆம் திகதி மாலை நுகேகொடை நகரில் இந்தப் பேரணி நிச்சயம் நடைபெறும் என்றார்.