தமிழினி

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்

Aggregator

மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு

15 hours 12 minutes ago
மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு October 18, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியில் காணப்பட்டுள்ள பற்றைக்குள் இருந்து இன்று வியாழக்கிழமை(18) மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள பற்றைக்குள் ஒரு தொகுதி வெடி பொருட்கள் காவல்துறையினர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து குறித்த வெடி பொருட்களை மீட்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர்; மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர். இதன் போது ஆட்லரி குண்டுகள் -04,சிஸ்ரி மோட்டார் வெடி குண்டு-01, பயூஸ்-04,கைக்கண்டு-01,சிறிய ரக குண்டு-01 ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.-மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/99778/

மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு

15 hours 12 minutes ago
மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு

October 18, 2018

1 Min Read

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-d5de41ab4954ffe0ba626754c3a952db-V.j

மன்னார் தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியில் காணப்பட்டுள்ள பற்றைக்குள் இருந்து இன்று வியாழக்கிழமை(18) மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள பற்றைக்குள் ஒரு தொகுதி வெடி பொருட்கள் காவல்துறையினர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து குறித்த வெடி பொருட்களை மீட்பதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று மாலை விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர்; மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன் போது ஆட்லரி குண்டுகள் -04,சிஸ்ரி மோட்டார் வெடி குண்டு-01, பயூஸ்-04,கைக்கண்டு-01,சிறிய ரக குண்டு-01 ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.-மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-487fdc26990c950fbb550340848920d5-V.j

 

http://globaltamilnews.net/2018/99778/

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா!

15 hours 45 minutes ago
பாரதிராஜாவும் பாக்கியராஜும் கிளிநொச்சியில் உள்ளவர்கள் கூப்பிட்டதால்தான் போனார்கள். ஒரு போர் நடந்த பூமி எப்படி மாறியுள்ளது என்பதை அவர்கள் பார்க்கவும் ஆசைப்பட்டிருக்கலாம். தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் கோலோச்சிய இருவரையும் நேரே காண்பதற்கும் எத்தனைபேர் ஆசைப்பட்டிருப்பார்கள். அதை ஏன் குழப்பமாகப் பார்க்கவேண்டும்?🤔

கடவுள் எங்கே இருக்கிறார்

15 hours 51 minutes ago
மனிதன் எப்படி ஆறாம் அறிவைப் பெற்றான் என்று ஆறாம் அறிவை வைத்துக் கண்டுபிடிக்க முடியாததால்தான் கண்டுபிடிக்காததைக் கடவுள் என்றான்😎 கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பதை உறுதி செய்ததுபோன்று நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றோம் என்பதை இன்னொரு மனித குலம் போன்ற ஒன்றை உருவாக்கி விடைகளை கண்டடையும்போது கடவுள் காணாமல் போய்விடுவார்😄

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

16 hours ago
எழுஞாயிறு நான் நினைக்கவில்லை இங்கு வைரமுத்துவை யாரும் புனிதராகவோ அல்லது உத்தமசீலனாகவோ பார்க்கின்றனர் என்று. வைரமுத்து ஒரு சந்தர்ப்பவாதி என்பதும், கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சின்மயி மீது பலருக்கு இங்கு அனுதாபம் எழவில்லை. ஐயங்கார் என் தன் சாதிப்பெயரை high Engar என்று போட்டுக் கொள்கின்ற அளவுக்கு பார்ப்பனிய மேலாதிக்க எண்ணம் கொண்டவர் சின்மயி. மீன்களை மீனவர் கொல்கின்றனர், எனவே மீனவர்களை இலங்கை கடற்படை கொல்வது நியாயம் என தன் முகனூலில் எழுதிய மேலாதிக்க சிந்தனை கொண்டவர். தன்னுடன் ருவிட்டரில் விவாதம் செய்யும் போது கெட்ட வார்த்தைகள் பேசிவிட்டனர் (கவனிக்க: பாலியல் அவதூறு அல்ல) என்று சொல்லி பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் உதவியுடன் அவராட்சியில் இருவரை ஜெயிலில் அடைத்தவர் (அதில் ஒருவர் தன் அனுபவங்களை நூலாக வெளிட்டார்.. இன்னொருவருக்கு வேலையே பறி போய் அல்லல்பட்டார்). சின்மயி வைரமுத்து மூன்றாம் நபர் மூலம் தன் தாயும் அருகிருக்கையில் அழைத்ததார் என்று கூறும் நிகழ்வு நடந்தது 2005 இல். அதே காலப்பகுதியிலும் ஜெயலலிதான் தான் ஆட்சியிலிருந்தார். ஜெயாவிடம் முறைப்பாடு செய்து இருக்கவும் முடியும். சின்மயிக்கு பின்னால் இருப்பது தமிழ் தேசியத்தை, தமிழர்களை, தமிழை அடியோடு வேரறுக்க நினைக்கும் இந்துத்துவா கும்பலும், பிஜேபியும் ஆகும். முக்கியமாக சின்மயியின் குற்றச்சாட்டு வந்த நேரம் பிஜேபி நியமித்த தமிழக கவர்னர் மீது பல்கலைகழக மாணவிகளை பாலியல் சேவைக்கு அழைத்தவர் என்று நக்கீரன் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்ட நேரம். எனவே தான் சின்மயி சொல்வதை நம்புவது நம்பாமல் விடுவதற்கு அப்பால் அவரை எம்மில் பலர் எதிர்க்கின்றனர்.

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

16 hours 33 minutes ago
எதற்காக யாழ் களத்தில் அனேகர் வைரமுத்துவுக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள் வைரமுத்துவை எப்படி நீங்கள் புனிதராக நினைக்கிறியள். சின்மயி ஏதோ ஒரு இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறா அதை வைத்து யாரோ அவரால் காரியம் சாதிக்க்க நினைக்கிறார்கள். வைரமுத்து, ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்யும்போது கருனாநிதியின் கொல்லைப்புறத்தில் கொட்டியதை விழுங்கிக்கொண்டு இருந்தவர்தானே. ஆனால் ஒரு விடையம் கூடிய விரைவில் சின்மயி தற்கொலை செய்யலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம். இந்தவிடையத்தில் பரிதாபத்துக்குரியவர் சின்மயி மட்டுமே.

புரமோஸ்க்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி .! பாகிஸ்தானுக்கு வழங்குகிறது.

16 hours 35 minutes ago
மனதை விட வேகமாக செல்லாத வரைக்கும் சந்தோஷம்தான் தோழர் .. ☺️ இவன் காதலித் தானாம் அந்த பெண்ணை (சம்யுக்தா) அவன் தூக்கிட்டு போனான் . ஏட்டிக்கு போட்டியாக பெயர் (பிருதிவி, கவர்ரி ) வைப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை..😎

புரமோஸ்க்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி .! பாகிஸ்தானுக்கு வழங்குகிறது.

18 hours 23 minutes ago
பிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.! பாகிஸ்தானுக்கு வழங்குகின்றது ஒளியை விட வேகமாக சென்று தாக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியால் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக சீனா தன்னிடம் இருக்கின்ற 78 ஆள்ளிலா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்து ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கும் வழங்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் தளவாடங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஒடிசா மாநில கடற்கரையோரத்தில் கடந்த 2016ம் ஆண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பாலாசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் வாகனம் மூலம் இந்த ஏவு கணை செலுத்தப்பட்டதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக (டிஆர்டிஓ) தெரிவிக்கப்பட்டது. 300 கிலோ எடை கொண்ட போர் தளவாடங்களை சுமந்தபடி இலக்கை தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணையின் சோதனை மாபெரும் வெற்றியைம் அடைந்துள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இரு நிலைகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிலை திடமானதாகவும், இரண்டாவது நிலையில் திரவ புரோப்பலென்ட் மூலம் இயங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவு கணை ஏற்கெனவே ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. விமானப் படையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஐஎன்எஸ் ராஜ்புத் போர் விமானத்தில் கடந்த 2005-ல் பிரம்மோஸின் முதல் வகை ஏவுகணை பொருத்தப்பட்டது. அந்த ஏவுகணை தற்போது ராணுவத்தின் இரு பிரிவுகளில் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன் 2014, ஜூன் மற்றும் 2015, பிப்ரவரியில் இரு முறை பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைக்காக போட்டியாக சீனாவ சூப்பர்சோனிக்கு எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நேற்று நடத்தியது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது அந்த நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார். ஏற்கனவே எஸ்-400 ஏவுகணைக்கு போட்டியாக சீனா நவீன ஆளில்லா டிரோன்களையும் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில், சீனா மீண்டும் பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக தயாரித்து அதை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://tamil.gizbot.com/scitech/chinese-mining-firm-successfully-testfires-supersonic-vs-india/articlecontent-pf142823-019624.html டிஸ்கி : ஒரு பரபரப்புமில்லை ..ஈர வெங்காயமுமில்லை.. சிக்கனை தனியா வேகவைத்து போட்டு பச்சை மிளகாய் கலந்து சில்லி சிக்கன், மிளகு பொடி தூவி பெப்பர் சிக்கன் , மசால் தூவி சிக்கன் மசாலா , புளி சோற்றில் சொருவி புரியாணி என்பினம். குறுந்தொலைவு ,நெடுந்தொலைவு,கண்டம் விட்டு கண்டம் ,1500கீ மீ ..பெயர்தான் வேறுவேறு கிடக்கு.. யார் மேலவது விட்டால்தானே தெரியும் ? முதலில் மக்களுக்கு மலசல கூடங்களை கட்டுங்கப்பா.. அக்னியாம் , பிரித்துவியாம் , புரமோஸ்சாம் ஒரே டமாஸ்தான் 🤔

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

19 hours 26 minutes ago
அய்யோ கடவுளே... கிரிமினல் சுவிஸ்குமார், தனது சுஜ நலத்துக்காக, கடத்தல் , பாலியல் பலாத்காரம் , கொலை செய்தார். அந்த ஆளை ஏனப்பா இங்கே இழுக்கிறீர்கள்? வைரமுத்து, சின்மயினை விட்டுட்டு பொதுவாக யோசியுங்கள். நீங்கள் பணம் கொடுத்து ஒரு கூட்டத்தினை ஒரு நிகழ்வு நடாத்த கூப்புடுகீறீர்கள். அவர்களில் ஒருவர் கொழுப்பு எடுத்து, வந்தவர்களில் ஒருவரை படுக்கைக்கு வரவழைக்க, உங்களிடம் கோரிக்கை விட்டால், பணம் குடுக்கும் உங்களுக்கு, மாமா வேலை பார்க்க வேண்டிய தேவை என்ன? உங்களுக்கும் ஒரு சுஜ நல நோக்கம் இருந்தால் அன்றி.... 'அடி செருப்பால நாயே, யார் என்று நினைத்தாய்.... வாங்கிற காசுக்கு கூவி விட்டு கிளம்பு. உங்கள் விளையாட்டுகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வீர்களா இல்லையா? இப்போது சின்மயி விசயத்துக்கு வாருங்கள். சின்மயி, அன்று சோறுக்கே வழி இல்லாமல் இருந்தார் என்று அவரது அம்மாவே சொன்னாரா இல்லையா? அப்படி பட்டவர்கள், என்ன விலையும் கொடுக்க தயாராக இருந்திருப்பார்களா இல்லையா? சுரேஷ் வீட்டில் தங்கும் அளவுக்கு பிரபல்யம் இல்லாதவர் அப்போது. 1.3 பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில், வாய்ப்புகளுக்கு போட்டி மிகவும் அதிகம். அவர்களுக்கு வைரமுத்து கேட்பதை கொடுக்க தயாராக இருந்திருப்பார்கள் என்பேன். அதுக்கு, அழைத்தவர்கள் தான் மாமா வேலை பார்க்க வேண்டும் என்பது இல்லை. தாயே கொண்டு போய் விட்டு விட்டு காவல் இருந்திருப்பார்.... முதலில் இந்திய சினிமா உலகின் உள்வீட்டு கேவலங்களை புரிந்து கொண்டு பேசுங்கள். ஜெயலலிதா முதல், குஸ்பு, நயன்தாரா வரை.... என்னத்தை சொல்வது? வைரமுத்து கூப்பிட்டார், இவோ போனார், போகவில்லை எமக்கு தேவையில்லை. எங்களுடன் சம்பந்தப் படுத்த வேண்டாம் என்கிறேன். புரியுதா அக்கா ?

மாவீரர் நாளுக்கு தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்!!

20 hours 13 minutes ago
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு, சிரமதானப் பணி முன்னாள் போராளிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாவடி முன்மாரி, பனிச்சையடி முன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணைந்து சிரமதானத்தில் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/மாவீரர்-நாளுக்கு-தயார்படுத்தப்படும்-துயிலுமில்லங்கள்.html

மாவீரர் நாளுக்கு தயார்படுத்தப்படும் துயிலுமில்லங்கள்!!

20 hours 13 minutes ago

மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு, சிரமதானப் பணி முன்னாள் போராளிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மாவடி முன்மாரி, பனிச்சையடி முன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள், தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் இணைந்து சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

https://newuthayan.com/story/15/மாவீரர்-நாளுக்கு-தயார்படுத்தப்படும்-துயிலுமில்லங்கள்.html

 

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

20 hours 17 minutes ago
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் சண்டக் கோழி 2 நடிகர்கள் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜா, கு.ஞானசம்பந்தன், முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு வசனம் எஸ் ராமகிருஷ்ணன் இசை யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் லிங்குசாமி 2005ஆம் ஆண்டில் விஷால் - ராஜ்கிரண் - லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்த சண்டக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் அல்லது தொடர்ச்சி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். சண்டக் கோழி படத்தில் வரும் அதே ஊர். அந்த ஊரில் உள்ள பேச்சியின் (வரலட்சுமி) கணவனை தகராறில் ஒருவர் கொன்றுவிட அந்தக் குடும்பத்தை முழுவதுமாக அழித்து பழிவாங்கத் துடிக்கிறாள் அவள். இதனால் கோவில் திருவிழா 7 ஆண்டுகளாக நடக்காமல் போகிறது. இந்த ஆண்டு அதை நடத்த நினைக்கும் துரை அய்யா (ராஜ்கிரண்), இரு தரப்பிடமும் சமாதானம் பேசி திருவிழாவை நடத்தத் துவங்குகிறார். வெளிநாட்டிலிருந்து பாலுவும் (விஷால்) அந்தத் திருவிழாவுக்கு வருகிறான். பேச்சி பழிவாங்கத் துடிக்கும் அன்பு என்ற இளைஞனை காப்பாற்றுவதாக துரை அய்யாவும் பாலுவும் உறுதி ஏற்கிறார்கள். ஊர்த் திருவிழா முழுமையாக நடந்ததா, அன்பு காப்பாற்றப்பட்டானா என்பது மீதிக் கதை. படம் முழுக்க கதாநாயகனின் வீடு, திருவிழா நடக்கும் மந்தை ஆகிய இரண்டு இடங்களில்தான் நடக்கிறது. படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே கதையும் துவங்கிவிடுகிறது. ஆனால், திருவிழா முடியும்வரை அன்புவைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரிக் கதையை சுவாரஸ்யமாக எவ்வளவு நேரம்தான் கொண்டு சொல்ல முடியும்? அன்புவுக்குப் பிரச்சனை வரும்போது ஒன்று பாலு வந்து காப்பாற்றுகிறார். அல்லது அவரது தந்தை வந்து காப்பாற்றுகிறார். இதுவே படம் நெடுக மாற்றி மாற்றி நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ். சாவித்ரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவருக்கு, இந்தப் படத்தில் கதாநாயகனைப் பார்த்தவுடன் காதலிக்க வேண்டிய பாத்திரம். முதல் பாதியில் அவர் பேசும் வசனங்களுக்கும் அவரது நடிப்பிற்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை. எத்தனையோ படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள் படம் நெடுக வந்துகொண்டேயிருக்கின்றன. அதனால், படத்தில் யாராவது சீரியஸாக ஏதாவது சொன்னால், திரையரங்கில் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். அதனால், காமெடிக்கென்று தனியாக யாரும் இல்லை. "ஐயா, உங்களை எங்கையெல்லாம் தேடுறது. இங்க என்னைய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?" என்ற வசனத்தை எத்தனை படங்களில் கேட்பது? கதாநாயகியின் திருமணம் நின்று போக, அருகில் இருக்கும் கரும்பலகையில் 'வாரணம் ஆயிரம்' பாடல் எழுதப்பட்டிருப்பது, கணவனை இழந்த வில்லியின் பொட்டு மழை பெய்து அழிவது என குறியீட்டுக் காட்சிகள் வேறு. பரியேறும் பெருமாள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் வெகுவாகக் கவர்ந்த சண்முக ராஜா இந்தப் படத்தில் சீரியஸாக படம் நெடுக வருகிறார். ஒரு காட்சிகூட நடிக்க வாய்ப்பில்லை. மு. ராமசாமி, தென்னவன் ஆகியோருக்கு படம் நெடுக, "ஐயா, விடுங்கைய்யா நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்வதும் ராஜ்கிரணையும் விஷாலையும் புகழ்வதும்தான் வேலை. இந்த வழக்கமான கமர்ஷியல் படத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சண்டக் கோழியில் இருந்த புத்துணர்ச்சியும் உற்சாகமும் கச்சிதமான திரைக்கதையையும் எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மிகச் சுமாரான ஒரு அடிதடி திரைப்படம். https://www.bbc.com/tamil/arts-and-culture-45900043

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

20 hours 17 minutes ago
சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்
    திரைப்படம் சண்டக் கோழி 2     நடிகர்கள் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜா, கு.ஞானசம்பந்தன், முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு     வசனம் எஸ் ராமகிருஷ்ணன்     இசை யுவன் ஷங்கர் ராஜா     இயக்கம் லிங்குசாமி        

2005ஆம் ஆண்டில் விஷால் - ராஜ்கிரண் - லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்த சண்டக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் அல்லது தொடர்ச்சி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்.

சண்டக் கோழி படத்தில் வரும் அதே ஊர். அந்த ஊரில் உள்ள பேச்சியின் (வரலட்சுமி) கணவனை தகராறில் ஒருவர் கொன்றுவிட அந்தக் குடும்பத்தை முழுவதுமாக அழித்து பழிவாங்கத் துடிக்கிறாள் அவள்.

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

இதனால் கோவில் திருவிழா 7 ஆண்டுகளாக நடக்காமல் போகிறது. இந்த ஆண்டு அதை நடத்த நினைக்கும் துரை அய்யா (ராஜ்கிரண்), இரு தரப்பிடமும் சமாதானம் பேசி திருவிழாவை நடத்தத் துவங்குகிறார்.

வெளிநாட்டிலிருந்து பாலுவும் (விஷால்) அந்தத் திருவிழாவுக்கு வருகிறான். பேச்சி பழிவாங்கத் துடிக்கும் அன்பு என்ற இளைஞனை காப்பாற்றுவதாக துரை அய்யாவும் பாலுவும் உறுதி ஏற்கிறார்கள்.

ஊர்த் திருவிழா முழுமையாக நடந்ததா, அன்பு காப்பாற்றப்பட்டானா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க கதாநாயகனின் வீடு, திருவிழா நடக்கும் மந்தை ஆகிய இரண்டு இடங்களில்தான் நடக்கிறது. படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே கதையும் துவங்கிவிடுகிறது.

ஆனால், திருவிழா முடியும்வரை அன்புவைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரிக் கதையை சுவாரஸ்யமாக எவ்வளவு நேரம்தான் கொண்டு சொல்ல முடியும்?

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

அன்புவுக்குப் பிரச்சனை வரும்போது ஒன்று பாலு வந்து காப்பாற்றுகிறார். அல்லது அவரது தந்தை வந்து காப்பாற்றுகிறார். இதுவே படம் நெடுக மாற்றி மாற்றி நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ். சாவித்ரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவருக்கு, இந்தப் படத்தில் கதாநாயகனைப் பார்த்தவுடன் காதலிக்க வேண்டிய பாத்திரம். முதல் பாதியில் அவர் பேசும் வசனங்களுக்கும் அவரது நடிப்பிற்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை.

எத்தனையோ படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள் படம் நெடுக வந்துகொண்டேயிருக்கின்றன.

அதனால், படத்தில் யாராவது சீரியஸாக ஏதாவது சொன்னால், திரையரங்கில் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்.

 

அதனால், காமெடிக்கென்று தனியாக யாரும் இல்லை. "ஐயா, உங்களை எங்கையெல்லாம் தேடுறது. இங்க என்னைய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?" என்ற வசனத்தை எத்தனை படங்களில் கேட்பது?

கதாநாயகியின் திருமணம் நின்று போக, அருகில் இருக்கும் கரும்பலகையில் 'வாரணம் ஆயிரம்' பாடல் எழுதப்பட்டிருப்பது, கணவனை இழந்த வில்லியின் பொட்டு மழை பெய்து அழிவது என குறியீட்டுக் காட்சிகள் வேறு.

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் வெகுவாகக் கவர்ந்த சண்முக ராஜா இந்தப் படத்தில் சீரியஸாக படம் நெடுக வருகிறார். ஒரு காட்சிகூட நடிக்க வாய்ப்பில்லை.

மு. ராமசாமி, தென்னவன் ஆகியோருக்கு படம் நெடுக, "ஐயா, விடுங்கைய்யா நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்வதும் ராஜ்கிரணையும் விஷாலையும் புகழ்வதும்தான் வேலை.

இந்த வழக்கமான கமர்ஷியல் படத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

சண்டக் கோழியில் இருந்த புத்துணர்ச்சியும் உற்சாகமும் கச்சிதமான திரைக்கதையையும் எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மிகச் சுமாரான ஒரு அடிதடி திரைப்படம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45900043

சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள்

20 hours 25 minutes ago
சில அப்பாவித்தனமான கேள்விகளுக்கு சிரிப்புத்தான் வருகின்றது. வைரமுத்து போன்ற பிரபலமிக்கவர்கள், சாதாரண வீடுகளில் தங்க மாட்டார்கள், தங்கவும் கூடாது. இன்றைய நிலையில், பிரபலமாகி விட்டதால், சின்மயி கூட சாதாரண வீடுகளில் தங்கமாட்டார். வைரமுத்து தேவையானல், நேரடியாக கூப்பிட்டு இருக்கலாம்.... போன இடத்தில், அழைத்த விருந்தாளி மூலமல்ல. கூப்பிட்டது உண்மையாயின், வைரமுத்து பெயரை சொல்லி, நம்ம சுவிஸ்காரர் யாராவது தெண்டிப்பாத்திருக்கலாமே என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை.