Aggregator

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!

10 hours 33 minutes ago
உந்த கழட்டி விட்ட சமாச்சாரத்திலை எனக்கு படத்திலை இருக்கிறவரைத்தான் ரொம்ப பிடிக்கும். நிண்டு இழுத்துப்பாத்தார் சரிவரேல்லை....கொழுவுப்படுற மாதிரி கொழுவி நைசாய் காய் வெட்டீட்டார்...😄 மீண்டும் மக்களிட்டை போனால் அம்மையார் வீட்டை போவார் எண்டு இஞ்சை கதைக்கினம்.

பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி!

13 hours 19 minutes ago
நாளுக்கு நாள் மாறும் பிரித்தானிய அரசியலில் இது பழைய செய்தி. 1. போன வருட இறுதியில், அம்மையாருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் அவரது கட்சியினுள் நடந்தது. அது வெல்லாததால், அவரது தலைமைப் பதவிக்கு எதிர்ப்பு, கட்சியினுள், அதன் விதிகள் படி, இன்னும் ஒரு வருடத்துக்கு வராது. 2. அவரது ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தம், பிரித்தானியா சார்பில் பலவீனமானது என பாராளுமன்று நேற்று நிராகரித்தது. அதையே நீங்கள் பேசினீர்கள். 3. இன்று, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் மாலை 7 மணிக்கு, தோல்வி அடைந்தது. ஆகவே அம்மையாருக்கு உடனடியாக பதவிக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பாவம்... இந்த பிரச்சனையினை தலையில் கட்டி விட்டு கழண்டு கொண்ட டேவிட் கமரோனை தான் பிழை சொல்ல வேண்டும். இரண்டு வழிகள்: இது நாட்டினைப் பாதிக்கும் ஆயத்தமில்லா யுத்தம். யுத்த காலத்தில் சகல கட்சிகளுடன் சேர்ந்து தேசிய அரசு அமைவது போல, அதே தீவிரத்துடன், தனியே நின்று பேசாது, கூட்டாக ஐரோப்பிய யூனியன் உடன் பேச வேண்டும். அல்லது மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும். என்ன செய்வார்கள் என இரண்டு ஒரு நாளில் தெரியும்.

கூட்டமைப்பும் முஸ்லிம்களும் புதிய அரசியல் யாப்பும்வ-.ஐ.ச.ஜெயபாலன்

13 hours 53 minutes ago
போருக்குப் பின்னான தமிழர் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலக் கட்டமாகும். எங்கள் நாடாளுமன்ற அரசியல் அரங்கின் மிக முக்கியமான புதிய அரசியல் அமைப்பு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இதுவே இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கான கடைசிச் சந்தர்பமாகும். நாம் விரும்பினால் என்ன விரும்பா விட்டால் என்ன தமிழ் தேசியக் கூட்டமைபினர் மட்டுமே எங்களுக்காக கழம் இறங்க மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இந்த புதிய அரசமைப்பு சுற்றில் நாம் கூட்டமைப்பை அதரித்தே ஆகவேண்டும். ஆதலால் தயவு செய்து என்னுடன் சேர்ந்து சுமந்திரன் உட்பட அனைத்துக் கூட்டமைப்பினர் மீதுமான விமர்சங்களை சில மாதங்களுக்கு இடை நிறுத்தி வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். நாட்டில் உள்ள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் விடுதலை செயல்பாட்டாளர்களும் இக்கலகட்டத்துக்கு அவசியமான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக என் வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டுமென பணிவன்புடன் விண்ணப்பிக்கின்றேன். . தமிழர் தேசியக் கூட்டமைப்பிடம் என் ஒரே கோரிக்கை இதுதான். 1.1 முஸ்லிம் தலைமைகளுடன் கலந்து பேசி வடகிழக்கு இணைப்புத் தொடர்பான பொதுத் தீர்மானத்துக்கு வரப்பாருங்கள் அல்லது 1.2 முஸ்லிம் பகுதிகள் வடகிழக்குத் தமிழ் பகுதிகளின் இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகளின் ஆதரவை கோரிப் பெறுங்கள். பொங்கல் நல் வாழ்த்துக்களோடு

கூட்டமைப்பும் முஸ்லிம்களும் புதிய அரசியல் யாப்பும்வ-.ஐ.ச.ஜெயபாலன்

13 hours 53 minutes ago

போருக்குப் பின்னான தமிழர் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலக் கட்டமாகும். எங்கள் நாடாளுமன்ற அரசியல் அரங்கின் மிக முக்கியமான புதிய அரசியல் அமைப்பு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இதுவே இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கான கடைசிச் சந்தர்பமாகும். நாம் விரும்பினால் என்ன விரும்பா விட்டால் என்ன தமிழ் தேசியக் கூட்டமைபினர் மட்டுமே எங்களுக்காக கழம் இறங்க மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இந்த புதிய அரசமைப்பு சுற்றில் நாம் கூட்டமைப்பை அதரித்தே ஆகவேண்டும். ஆதலால் தயவு செய்து என்னுடன் சேர்ந்து சுமந்திரன் உட்பட அனைத்துக் கூட்டமைப்பினர் மீதுமான விமர்சங்களை சில மாதங்களுக்கு இடை நிறுத்தி வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். 

நாட்டில் உள்ள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் விடுதலை செயல்பாட்டாளர்களும் இக்கலகட்டத்துக்கு அவசியமான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக என் வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டுமென பணிவன்புடன்  விண்ணப்பிக்கின்றேன்.
.
தமிழர் தேசியக் கூட்டமைப்பிடம் என் ஒரே கோரிக்கை இதுதான். 1.1 முஸ்லிம் தலைமைகளுடன் கலந்து பேசி வடகிழக்கு இணைப்புத் தொடர்பான பொதுத் தீர்மானத்துக்கு வரப்பாருங்கள் அல்லது 1.2 முஸ்லிம் பகுதிகள் வடகிழக்குத் தமிழ் பகுதிகளின் இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகளின் ஆதரவை கோரிப் பெறுங்கள்.

பொங்கல் நல் வாழ்த்துக்களோடு

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

14 hours 6 minutes ago
நேயர் விருப்ப பாடல்... பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன் அவன் வேறேயறு கண்ணாடி பாரு ... மாயங்கள் செய்தது உன் சூச்சி என் மார்புக்கு நறுலிலே நீர்வீழ்ச்சி ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ??? காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ??? அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும் தகராறு எது தமிழ் முத்தம் போடு பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2) உள்ளாடு புணர்ச்சி தீயாக ஏன் உள்ளதை மரத்தை நீயாக ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ... நான் நினையாமல் இருந்தேன் நானாக .. பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2) ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன் அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ... என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

14 hours 46 minutes ago
இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

14 hours 54 minutes ago
சரி, உங்கள் அமெரிக்க கனேடிய பூர்வ குடிகள் அறிவு உச்சம்! இப்போது சொல்லுங்கள், எங்கே சும் பச்சைத் துரோகம் செய்தார்?

துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

15 hours 52 minutes ago
இவரின் வாய் சாவாடலை கேட்டு வடகொரியர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி திரிகிறார்கள் ..... இனி துருக்கி! துருக்கியை ரசியாவுக்கு எதிராக திருப்ப யூதன் ஒரு ரசிய போர் விமானத்தை துருக்கி எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தினான் பின்பு துருக்கியில் இருந்து கிளம்பிய ரசிய பயணிகள் விமானத்தை குண்டு வைத்து தகர்த்தான். எல்லாம் புரிந்த திருவாளர் புட்டின் அவர்கள் துருக்கி பிரதமரை ரஸ்யாவுக்கு அழைத்து விருந்து கொடுத்து யூதனின் சித்து விளையாட்டு பற்றி கொஞ்சம் அறிவுரையும் கூறி அனுப்பினார். எல்லாம் தோல்வியில் முடிந்து போனதால் .... இப்போ அண்ணர் நேரடியாகவே மேடைக்கு வந்து பேச தொடங்கி இருக்கிறார். இதில் கையோட கம்மார்ஸ் அடித்தது துருக்கிதான் ! அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிக்கொண்டுதான் ஐ ஸ் ஸ்ஸ் இடம் இருந்து அவ்வளவு எரிபொருளை அறா விலையில் வாங்கி தள்ளியது.

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

16 hours 2 minutes ago
அது சுமந்திரனுக்காக தூக்கிய காவடியை இறக்குமட்டும் புரிந்தாலும் காட்டி கொடுக்க்க கூடாது. இத்தனை வருட காலத்தில் அமெரிக்காவில் 2018இல் நடந்த தேர்தலில்தான் முதல் முறையாக இந்த மண்ணின் சொந்த காரர்களான ஒரு சிகப்பு இந்தியர் ஒருவர் அமேரிக்க காங்கிரசுக்கு தேர்வாகி இருக்கிறார். கடந்த 50-60 வருடமாக எந்த வெள்ளைவான் கெடுபிடியும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அரசியல் உரிமை எவ்வாறு நிராகரிக்க பட்டது? எவ்வாறு ஏமாற்ற பட்டார்கள் ? ஏன் அவர்கள் குரல் இதுவரை அமரிக்க செனட்டிலோ காங்கிரஸிலோ இல்லாது பார்த்து கொண்டார்கள் என்பது எல்லாம் புரிந்தால். சுமந்திரனின் துரோகமும் புரியும். கனடா சவூதி பெண்ணுக்கு விசா கொடுத்து முகத்துக்கு வர்ணம் அடிக்கும் இதே காலத்திலேயே .... எட்மின்டன் பகுதியில் பூர்விக குடிகள் இராணுவ உதவியுடன் வெளியேற்ற படுகிறார்கள் அவர்கள் குடிகள் சிதறடிக்க படுகிறது ..... ஓரிடத்தில் அவர்கள் குழுமமாக வாழுதல் என்பதை திட்டம் தீட்டி விரட்ட படுகிறார்கள். நோர்த் சவுத் டக்கோட்டா அமெரிக்க மாநிலங்களில் நடக்கும் தேர்தல் வன்முறைகள் .... வாக்கு மறுப்புரிமை போன்றவை பற்றி கொஞ்சம் இணையத்தில் வாசியுங்கள். சிங்கள பேரினவாதம் எதை நோக்கி நகர்கிறது என்பதும் அதற்கு சுமந்திரனை எப்படி பாவிக்கிறது என்பதும் புரியும்.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

16 hours 17 minutes ago
மேலே ஏற்கனவே களவிதி மீறப்பட்டு தான் தனிமனித தாக்குதல் நடந்து அதை நான் மேற்கோள் காட்டி இருக்கிறேன். மற்றவர் என்ன எழுதினார் என்பதோ அல்லது நீங்கள் என்ன பதில் எழுதினீர்கள் என்பதோ நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் வாசிக்கவில்லை. இப்போ மிகுந்த தெளிவுடன் நீங்கள் எழுதி இருப்பதை நான் மிகவும் வரவேற்கிறேன் ...... நான் தனிமனித தாக்குதலை களவிதியை மீறாமல் செய்வேன் என்று எழுதியது மிகவும் வெளிப்படையானது. எதையும் யாரையும் எழுதவேண்டாம் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை தங்களுக்கு பிடிக்காது அல்லது தீண்டுவதாக உணணர்ந்தால் அவர்களிடம் முரை இட வசதி இருக்கிறது என்பதைத்தான் சுட்டி காட்டினேன். ஆக ... அவர் இவரை சாடாது தொடர்ந்து எழுதுங்கள் என்பதுதான் எனது கருத்தின் சுருக்கம்.