மட்டக்களப்பு சவுக்கடி படுகொலை

1990-09-20 - 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்

Aggregator

மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…

3 hours 53 minutes ago
புத்தன் சரணம் கச்சாமி. புத்தர்ட்ட ........................... (சுய தணிக்கை) என்று சொல்லறது சும்மா ஜோக் இல்லை தானே!! 😎

பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

4 hours 4 minutes ago
இவருக்கு எப்பிடி இது தெரியும்? என்ன ஆதாரம் வைச்சிருக்கார்? இப்படி அடிப்படையில்லாமல் கண்டதையும் கதைப்பவர்களுக்கு பேர் தான் எட்டப்பர்கள் / கைக்கூலிகள் என்டு சொல்வார்களோ?

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி!

4 hours 8 minutes ago
இது பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறதோ? இலங்கையில் பகற்கொள்ளை அடிக்கும் சில பெண்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்

4 hours 14 minutes ago
பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர் பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே நெருக்கமான உறவை எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நட்பு ரீதியான மரியாதைக்குரிய வகையில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பி ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக நேற்று (புதன்கிழமை) வருகைத்தந்த ஜேர்மன் அதிபர் அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமானது சிறந்ததொரு சூழலில் சுமூகமாக இடம்பெறும் என நம்புகின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்களில் இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு பேணப்பட வேண்டியது அவசியமாக உள்ளது” எனக் குறிப்பிட்டார். பிரெக்சிற் தொடர்பாக லக்ஸம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டல் தெரிவிக்கையில், ”உடன்பாடற்ற பிரெக்சிற் மோசமானதாக அமையும். அது பிரித்தானியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். ஆனால், ஒரு சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார். http://athavannews.com/பிரெக்சிற்றின்-பின்னரு-2/

பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்

4 hours 14 minutes ago
பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர்

 

 
 
 
 
 
 
 
 
 
 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
 
 
 
 

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே நெருக்கமான உறவை எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நட்பு ரீதியான மரியாதைக்குரிய வகையில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பி ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக நேற்று (புதன்கிழமை) வருகைத்தந்த ஜேர்மன் அதிபர் அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமானது சிறந்ததொரு சூழலில் சுமூகமாக இடம்பெறும் என நம்புகின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்களில் இரு தரப்பிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு பேணப்பட வேண்டியது அவசியமாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பிரெக்சிற் தொடர்பாக லக்ஸம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டல் தெரிவிக்கையில், ”உடன்பாடற்ற பிரெக்சிற் மோசமானதாக அமையும். அது பிரித்தானியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். ஆனால், ஒரு சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/பிரெக்சிற்றின்-பின்னரு-2/

2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்

4 hours 22 minutes ago
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மாக உலகக் கிண்ணம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள உலகக் கிண்­ணத்தை வர­வேற்கும் நிகழ்வு நேற்று சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்­று­கொ­டுத்த முன்னாள் அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க, இலங்கை கட்­பு­ல­னற்ற கிரிக்கெட் அணி வீரர்கள், பாட­சாலை மாண­வர்கள் மற்றும் ஓரிரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். http://www.virakesari.lk/article/40884

2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில்

4 hours 22 minutes ago
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் 

 

 

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொட­ருக்­கான வெற்றிக் கிண்ணம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

arjuna.jpg

எதிர்­வரும் 2019 ஆம் ஆண்டு இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.

icc.jpg

அதன் ஒரு கட்­ட­மாக உலகக் கிண்ணம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள உலகக் கிண்­ணத்தை வர­வேற்கும் நிகழ்வு நேற்று சுதந்­திர சதுக்­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்­று­கொ­டுத்த முன்னாள் அணித் தலைவர் அர்­ஜுன ரண­துங்க, இலங்கை கட்­பு­ல­னற்ற கிரிக்கெட் அணி வீரர்கள், பாட­சாலை மாண­வர்கள் மற்றும் ஓரிரு தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

http://www.virakesari.lk/article/40884

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி!

4 hours 25 minutes ago
சந்திரிக்காவுக்கு நாமல் வாழ்த்து பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதை பெற்றுக்கொண்டமைக்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் எத்தகைய வேறுபாடு காணப்பட்டாலும் வாழ்த்து தெரிவிப்பதாக, நாமல் ராஜபக்ஷ தனது ரிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு குறித்த விருது நேற்றைய தினம் (20), வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சந்திரிக்காவுக்கு-நாமல்-வாழ்த்து/175-222315

யாழ். மாவட்ட நா.உறுப்பினருக்கு எதிராக மீண்டும் சுவரொட்டிகள்

4 hours 26 minutes ago
“உச்ச துரோகத்தின் குறியீடு” வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்… தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியிள் இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளது. அச்சுவரொட்டிகளில் உச்ச துரோகத்தின் குறியீடு…. சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது….. துமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினமாச் செய்யவேண்டும்…. இனவாத கலவரங்கள், வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்கள் கைப்பற்றப்படுவதை நிறுத்துவது உள்ளிட்டவற்றிலிருந்து, தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக ஏற்றுப் போராடினார். என்றவாறு பலவிடயங்கள் இந்த சுவரொட்டிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மற்றைய சுவரொட்டியில்,சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? என்று தலைப்பிடப்பட்டு பல்வேறு விடயங்களை குறிப்பிட்டதுடன் இறுதியில் ஒற்றை ஆட்சியை (ஏக்கிய ராஜ்ஜ) சமஷ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விரண்டு சுவரொட்டிகளுக்கும் தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல்இந்த சுவரொட்டிகளை, வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடம், குருமன்காடு, குடியிருப்பு, வைரவப்புளியங்குளம் புதிய பேருந்து நிலையம், போன்ற பல்வேறு பகுதிகளிலிலும் காணக்கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/96550/

மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?

4 hours 27 minutes ago
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலை­வர்­என்ற மதிப்புடன் மகிந்­த­ரா­ஜ­பக்ச இந்­தி­யா­வுக்­குச் சென்று தலைமை அமைச்­சர் மோடி, முதன்மை எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸின் முக்­கி­ யஸ்­தர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இலங்­கை­யின் இன்றை சூழ்­நி­லை­யில் மகிந்­த­வின் இந்­தி­யப் பய­ணம் முக்­கி ­யத்­து­வம் பெறு­கின்­றது. சுமார் 10 ஆண்­டு­கா­லம் அரச தலை­வர் பத­வியை வகித்­த­வர் என்ற பெருமை மகிந்­த­வுக்கு உள்­ளது. அவர் மூன்­றா­வது தட­வை­யும் அந்­தப் பத­விக்­குப் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­போ­தி­லும் ஆட்­சிக்கு வரு­வ­தில் உள்ள ஆர்­வத்தை இன்­ன­மும் கொண்­டி­ருக்­கி­றார். இத­னால் புதிய கட்­சி­யொன்றை அமைத்­த­து­டன் வேறு சில­ரின் ஆத­ர­வை­யும் பெற்று அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார். பதவி வகித்தபோது சீனாவுடனேயே அதிக உறவு கொண்டாடினார் மகிந்த ராஜபக்ச பத­வி­யில் இருந்­த­போது இந்­தி­யா­வை­விட சீனா­வின் பக்­கமே சாய்ந்து காணப்­பட்­டார். தலை­ந­கர் கொழும்­பில் இருந்து வெகு தொலை­வில் அமைந்­துள்ள தமது சொந்த மாவட்­டத்­தில் துறை­ மு­கம் ஒன்­றை­யும் சீன­நாட்­டின் நிதி உத­வி­யு­டன் அமைத்­தார். அதை­விட நாட்­டின் பல்­வேறு அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் சீனா ஈடு­பட்­டது. ஏரா­ள­மான சீனத் தொழி­லா­ளர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்டுப் பணி­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். இதை­விடக் கொழும்புத் துறை­முக நக­ரின் நிர்­மா­ணப் பணி­க­ளும் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டன. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கப் பெரிய தொகை­யி­லான கடன்­க­ளை­யும் சீனா வழங்­கி­யது. தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் 99 ஆண்­டு­க­ளுக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டுள்­ளது. சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது தனது அண்டை நாடான இலங்­கை­யில் சீனா ஆதிக்­கம் செலுத்­து­வதை இந்­தி­யா­வி­னால் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சீனா அதன் பரம எதிரி என்­ப­தால் இலங்­கை­யில் சீனா ஊடு­ரு­வு­வது தனது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகி விடு­மென்­ப­தும் இந்­தி­யா­வுக்கு நன்கு தெரி­யும். இந்த நிலை­யில்­தான் தமி­ழர் விரோ­தப் போக்கை கடைப்­பி­டிக்­கும் தமி­ழர்­க­ளின் பெயர் தாங்­கிய சுப்­ப­ர­ம­ணி­யன் சுவாமி தி।டீ­ரென இலங்­கைக்கு வந்­தார். அம்­பாந்­தோட்­டை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­துக்­குச் சென்று அவ­ரைச் சந்­தித்­தார். சுவாமி இந்­தி­யா­வின் ஆளும் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் அவ­ரது வரு­கை­யில் அப்­போதே சந்­தே­கம் நில­வி­யது. இப்­போது அது நிவர்த்­தி­யா­கி­விட்­டது. மகிந்த இந்­தி­யா­வுக்­குச் சென்­ற­தும், மோடி உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­தும் சீனா­வுக்கு உவப்­பான விட­யங்­க­ளாக இருக்­கப்­போ­வா­தில்லை. மகிந்த அடுத்த தட­வை­யும் ஆட்­சி­யைக் கைப்­பற்­ற­வேண்­டும் என்­ப­தும்­சீ­னா­வின் விருப்­ப­மா­கும். கடந்த தடவை சீனா பல வழி­க­ளி­லும் பெரு­மு­யற்சி செய்த­போ­தி­லு­ம் மகிந்­த­வால் வெற்­றி­யீட்ட முடி­ய­வில்லை. இது­வும் சீனா­வுக்கு ஏமாற்­றத்­தையே கொடுத்­தது. மகிந்தவின் தோல்விக்கு இந்தியாவும் காரணம் மகிந்­த­வின் தோல்­விக்கு இந்­தி­யா­வும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளும் கார­ண­மாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. மகிந்­த­வின் சீனச் சார்ப்­புக் கொள்­கையே அந்த நாடு­க­ளின் வெறுப்­புக்­கான கார­ண­மா­கும். தற்­போது அமெ­ரிக்கா தனது முக்­கிய எதி­ரி­யா­கச் சீனா­வைக் கருதி வரு­கின்­றது. பொரு­ளா­தார ரீதி­யா­க­வும், படை பலத்­தா­லும் சீனா அமெ­ரிக்­கா­வுக்­குப் போட்­டி­யாக வளர்ந்து வரு­வதே இதற்­கான கார­ண­மா­கும். மகிந்­த­வின் நட­வ­டிக்­கை­கள் அடுத்த தடவை அவரே ஆட்­சியை அமைப்­பா­ரென்ற நம்­பிக்­கையை இந்­தி­யா­வி­டம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டும். இத­னால் சுப்­பி­ர­ம­ணின் சுவாமி ஊடாக மகிந்­த­வுக்கு அழைப்பு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கி­றது. இதே­வேளை, மோடி­யும்,மகிந்­த­வும் சந்­தித்­துள்­ளமை இலங்­கை­யில் மிகப்­பெ­ரிய அர­சி­யல் மாற்­றத்­துக்­கான அறி­கு­றி­யென மகிந்­த­வின் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இதில் எந்த அள­வுக்கு உண்மை பொதிந்­தி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை. மகிந்தவின் இந்திய உரை மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வில் வைத்து வழங்­கிய செவ்­வி­யில் தமிழ் மக்­க­ளில் ஒரு­வ­ருக்­குக்­கூடப் பாதிக்கு ஏற்­ப­டாத வகை­யில் இறு­திப் போரை முன்­னெ­டுத்­துச் செல்­லு­மாறு தாம் படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­தா­க­வும், பொது மக்­களைப் படை­யி­னர் கொல்­ல­வில்­லை­யெ­ன­வும், புலி­களே தமது மக்­க­ளைக் கொலை செய்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார். ஆனால் பன்­னாடுகளின் ஆத­ர­வு­ட­ன் விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­மா­னால் அப்­பாவி மக்­கள் பல ஆயி­ரக்­க­ணக்­கில் கொல்­லப்­பட்­ட­மைக்குக் கார­ணம் என்­பது தெரி­வ­ரும். இறு­திப் போரில் இந்­தி­யா­வின் பங்­கும் நிறை­யவே இருந்­த­தால் நீதி­யான போர்க்­குற்ற விசா­ர­ணை­கள் இடம்­பெ­றும்­போது இந்­தி­யா­வின் பக்­க­மும் விரல்­கள் நீட்­டப்­ப­டு­வ­ தற்­கான வாய்ப்பு அதி­க­முள்­ளது. இதி­லி­ருந்து தப்­பிக்­கவே அந்த நாடு விரும்­பும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. தமி­ழர்­கள் தொடர்­பா­கச் சிறி­தும் அக்­க­றை­யில்­லாத மகிந்­த­வும், இந்­தி­யா­வும் ஒன்­றி­ணை­வ­தைத் தமி­ழர்­கள் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­கின்­ற­னர். இதே­வேளை மகிந்த இந்­தி­யா­வின் பக்­கம் சாய்­வதை சீனா ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டாது. ஏனென்­றால் தனது நெருங்­கிய சகா­வான மகிந்த இலங்­கை­யில் அடுத்து ஆட்­சியை அமைப்­பா­ரென அது எதிர்பார்த்திருக்கும் நிலை­யில் அவரை இழப்­ப­தற்கு சீனா ஒரு­போ­துமே விரும்­பாது. இத­னால் அடுத்து மகிந்­தவை வளைத்­துப் போடு­வ­தற்­கான முயற்­சி­யில் அந்த நாடும் இந்­தியா போன்று ஈடு­ப­டு­மென எதிர்­பார்க்க முடி­யும். அதேபோலவே தமக்கு எந்­தப் பக்­கத்­தி­லி­ருந்து அதிக இலா­பம் கிடைக்­கி ­றதோ அதைத்­தான் மகிந்த தெரிவு செய்­வா­ரென்பதையும் எதிர்­பார்க்க முடி­யும். https://newuthayan.com/story/09/மகிந்தவின்-தெரிவு-இந்தியாவா-அல்லது-சீனாவா.html

மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?

4 hours 27 minutes ago
மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?

 

 

முன்னாள் அரச தலை­வர்­என்ற மதிப்புடன் மகிந்­த­ரா­ஜ­பக்ச இந்­தி­யா­வுக்­குச் சென்று தலைமை அமைச்­சர் மோடி, முதன்மை எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸின் முக்­கி­ யஸ்­தர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இலங்­கை­யின் இன்றை சூழ்­நி­லை­யில் மகிந்­த­வின் இந்­தி­யப் பய­ணம் முக்­கி ­யத்­து­வம் பெறு­கின்­றது.

சுமார் 10 ஆண்­டு­கா­லம் அரச தலை­வர் பத­வியை வகித்­த­வர் என்ற பெருமை மகிந்­த­வுக்கு உள்­ளது. அவர் மூன்­றா­வது தட­வை­யும் அந்­தப் பத­விக்­குப் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­போ­தி­லும் ஆட்­சிக்கு வரு­வ­தில் உள்ள ஆர்­வத்தை இன்­ன­மும் கொண்­டி­ருக்­கி­றார். இத­னால் புதிய கட்­சி­யொன்றை அமைத்­த­து­டன் வேறு சில­ரின் ஆத­ர­வை­யும் பெற்று அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

பதவி வகித்தபோது சீனாவுடனேயே
அதிக உறவு கொண்டாடினார்

மகிந்த ராஜபக்ச பத­வி­யில் இருந்­த­போது இந்­தி­யா­வை­விட சீனா­வின் பக்­கமே சாய்ந்து காணப்­பட்­டார். தலை­ந­கர் கொழும்­பில் இருந்து வெகு தொலை­வில் அமைந்­துள்ள தமது சொந்த மாவட்­டத்­தில் துறை­ மு­கம் ஒன்­றை­யும் சீன­நாட்­டின் நிதி உத­வி­யு­டன் அமைத்­தார்.

அதை­விட நாட்­டின் பல்­வேறு அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் சீனா ஈடு­பட்­டது. ஏரா­ள­மான சீனத் தொழி­லா­ளர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்டுப் பணி­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். இதை­விடக் கொழும்புத் துறை­முக நக­ரின் நிர்­மா­ணப் பணி­க­ளும் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டன. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கப் பெரிய தொகை­யி­லான கடன்­க­ளை­யும் சீனா வழங்­கி­யது.

தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் 99 ஆண்­டு­க­ளுக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

சீனாவின் ஆதிக்கத்தை  இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது

தனது அண்டை நாடான இலங்­கை­யில் சீனா ஆதிக்­கம் செலுத்­து­வதை இந்­தி­யா­வி­னால் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சீனா அதன் பரம எதிரி என்­ப­தால் இலங்­கை­யில் சீனா ஊடு­ரு­வு­வது தனது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகி விடு­மென்­ப­தும் இந்­தி­யா­வுக்கு நன்கு தெரி­யும்.

இந்த நிலை­யில்­தான் தமி­ழர் விரோ­தப் போக்கை கடைப்­பி­டிக்­கும் தமி­ழர்­க­ளின் பெயர் தாங்­கிய சுப்­ப­ர­ம­ணி­யன் சுவாமி தி।டீ­ரென இலங்­கைக்கு வந்­தார். அம்­பாந்­தோட்­டை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­துக்­குச் சென்று அவ­ரைச் சந்­தித்­தார். சுவாமி இந்­தி­யா­வின் ஆளும் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் அவ­ரது வரு­கை­யில் அப்­போதே சந்­தே­கம் நில­வி­யது. இப்­போது அது நிவர்த்­தி­யா­கி­விட்­டது.

மகிந்த இந்­தி­யா­வுக்­குச் சென்­ற­தும், மோடி உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­தும் சீனா­வுக்கு உவப்­பான விட­யங்­க­ளாக இருக்­கப்­போ­வா­தில்லை. மகிந்த அடுத்த தட­வை­யும் ஆட்­சி­யைக் கைப்­பற்­ற­வேண்­டும் என்­ப­தும்­சீ­னா­வின் விருப்­ப­மா­கும்.

கடந்த தடவை சீனா பல வழி­க­ளி­லும் பெரு­மு­யற்சி செய்த­போ­தி­லு­ம் மகிந்­த­வால் வெற்­றி­யீட்ட முடி­ய­வில்லை. இது­வும் சீனா­வுக்கு ஏமாற்­றத்­தையே கொடுத்­தது.

மகிந்தவின் தோல்விக்கு
இந்தியாவும் காரணம்

மகிந்­த­வின் தோல்­விக்கு இந்­தி­யா­வும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளும் கார­ண­மாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. மகிந்­த­வின் சீனச் சார்ப்­புக் கொள்­கையே அந்த நாடு­க­ளின் வெறுப்­புக்­கான கார­ண­மா­கும். தற்­போது அமெ­ரிக்கா தனது முக்­கிய எதி­ரி­யா­கச் சீனா­வைக் கருதி வரு­கின்­றது. பொரு­ளா­தார ரீதி­யா­க­வும், படை பலத்­தா­லும் சீனா அமெ­ரிக்­கா­வுக்­குப் போட்­டி­யாக வளர்ந்து வரு­வதே இதற்­கான கார­ண­மா­கும்.

மகிந்­த­வின் நட­வ­டிக்­கை­கள் அடுத்த தடவை அவரே ஆட்­சியை அமைப்­பா­ரென்ற நம்­பிக்­கையை இந்­தி­யா­வி­டம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டும். இத­னால் சுப்­பி­ர­ம­ணின் சுவாமி ஊடாக மகிந்­த­வுக்கு அழைப்பு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மோடி­யும்,மகிந்­த­வும் சந்­தித்­துள்­ளமை இலங்­கை­யில் மிகப்­பெ­ரிய அர­சி­யல் மாற்­றத்­துக்­கான அறி­கு­றி­யென மகிந்­த­வின் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இதில் எந்த அள­வுக்கு உண்மை பொதிந்­தி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை.

மகிந்தவின் இந்திய உரை

மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வில் வைத்து வழங்­கிய செவ்­வி­யில் தமிழ் மக்­க­ளில் ஒரு­வ­ருக்­குக்­கூடப் பாதிக்கு ஏற்­ப­டாத வகை­யில் இறு­திப் போரை முன்­னெ­டுத்­துச் செல்­லு­மாறு தாம் படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­தா­க­வும், பொது மக்­களைப் படை­யி­னர் கொல்­ல­வில்­லை­யெ­ன­வும், புலி­களே தமது மக்­க­ளைக் கொலை செய்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

ஆனால் பன்­னாடுகளின் ஆத­ர­வு­ட­ன் விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­மா­னால் அப்­பாவி மக்­கள் பல ஆயி­ரக்­க­ணக்­கில் கொல்­லப்­பட்­ட­மைக்குக் கார­ணம் என்­பது தெரி­வ­ரும். இறு­திப் போரில் இந்­தி­யா­வின் பங்­கும் நிறை­யவே இருந்­த­தால் நீதி­யான போர்க்­குற்ற விசா­ர­ணை­கள் இடம்­பெ­றும்­போது இந்­தி­யா­வின் பக்­க­மும் விரல்­கள் நீட்­டப்­ப­டு­வ­ தற்­கான வாய்ப்பு அதி­க­முள்­ளது.

இதி­லி­ருந்து தப்­பிக்­கவே அந்த நாடு விரும்­பும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. தமி­ழர்­கள் தொடர்­பா­கச் சிறி­தும் அக்­க­றை­யில்­லாத மகிந்­த­வும், இந்­தி­யா­வும் ஒன்­றி­ணை­வ­தைத் தமி­ழர்­கள் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­கின்­ற­னர். இதே­வேளை மகிந்த இந்­தி­யா­வின் பக்­கம் சாய்­வதை சீனா ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டாது.

ஏனென்­றால் தனது நெருங்­கிய சகா­வான மகிந்த இலங்­கை­யில் அடுத்து ஆட்­சியை அமைப்­பா­ரென அது எதிர்பார்த்திருக்கும் நிலை­யில் அவரை இழப்­ப­தற்கு சீனா ஒரு­போ­துமே விரும்­பாது. இத­னால் அடுத்து மகிந்­தவை வளைத்­துப் போடு­வ­தற்­கான முயற்­சி­யில் அந்த நாடும் இந்­தியா போன்று ஈடு­ப­டு­மென எதிர்­பார்க்க முடி­யும். அதேபோலவே தமக்கு எந்­தப் பக்­கத்­தி­லி­ருந்து அதிக இலா­பம் கிடைக்­கி ­றதோ அதைத்­தான் மகிந்த தெரிவு செய்­வா­ரென்பதையும் எதிர்­பார்க்க முடி­யும்.

https://newuthayan.com/story/09/மகிந்தவின்-தெரிவு-இந்தியாவா-அல்லது-சீனாவா.html

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது

4 hours 33 minutes ago
ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சி ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 170.65 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி இன்று (21) அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ரூபா-தொடர்ந்தும்-வீழ்ச்சி/175-222317

பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா

4 hours 58 minutes ago
இந்தக் கொடுக்கல் வாங்கலின் ஒரே சாட்சியும் தரகருமான.. டக்கிளஸ் தனக்கு எவ்வளவு கிடைத்தது என்பதைப் பற்றித்தான் இப்ப பேசனுமே தவிர இல்லாத பிரபாகரனுக்கு எவ்வளவு கிடைச்சது என்று பேசி என்ன பயன்..! முட்டாள் ஆயுத அரசியல் வாதிகளா.. இதுவா இப்ப பேசப்பட வேண்டிய விடயம். புலிகளின் அழிவில் எல்லாத்தையும் வெட்டி வீழ்த்தி தமிழ் மக்களுக்கு மத்தியில் கூட்டாட்சி வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி.. பெற்றுக் கொடுத்து விடுவோம் என்ற உங்கள் வாய் வீரத்துக்கு என்னானது.. அதைப் பற்றிப் பேசுங்க... 🙄

மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!! (காணொளி)

5 hours 39 minutes ago
அவர்கள் மாற்றிவிட்டார்கள். யாழில் செய்தி இணைத்தவர் மாற்றவில்லையே. 😂 சுய விருப்பை வெளிப்படுத்திச் செய்யப்பட்டுள்ள திருமணம். பாராட்டுக்கள்.

மாவீரர்களை சாட்சியாக வைத்து நடந்த விசித்திர திருமணம்!( காணொளி)

5 hours 39 minutes ago
அவர்கள் மாற்றிவிட்டார்கள். யாழில் செய்தி இணைத்தவர் மாற்றவில்லையே. 😂 சுய விருப்பை வெளிப்படுத்திச் செய்யப்பட்டுள்ள திருமணம். பாராட்டுக்கள்.

வசந்தம் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

5 hours 44 minutes ago
எனக்கு என்னவோ.. இவரை விட இவரின் துணைவியார் பேசும் உண்மை பிடிச்சிருக்குது. இறுதியில்.. அவா சொல்லுறா.. என்ன தான் இருந்தாலும் என்னால்.. சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியவில்லை. அதை சுவாசிக்கவே எல்லாரும் விரும்புவினம் என்று. ஆனால் இவரோ.. சிங்கள தமிழ் முஸ்லீம் மலைய மக்களின் (பறங்கியர்களை... வேடர்களை புறக்கணித்து விட்டார்)... ஐக்கியத்தை பிரார்த்திக்கிறார். இவரின் நடிப்பை விட.. அந்த அன்னையாரின் வெளிப்படை பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அன்னையாரே. நீங்கள் தமிழில் பல தமிழ் மொழி.. இன எழுச்சிப் பாடல்களை இயற்றிப் பாட வேண்டும். 😊

சுய இன்பம் சரியா தவறா?

5 hours 54 minutes ago
இவா பெரிய விஞ்ஞானி.. கண்டுபிடிச்சிட்டா பாருங்க. இயற்கையாகவே வெளியேற வேண்டியவை வெளியேறிக்கிட்டு தான் இருக்குது. அதனால்.. இளமை.. ஆயுள் இழப்பு என்பதெல்லாம் பொய். அவை இழக்கப்பட்டால் தான் ஆரோக்கியம். அதுபோல் சில செயற்கையான தூண்டல்.. அடிமைப் பழக்கத்துக்கு இட்டுச் செல்லாத வரை.. அல்லது அதற்கு அடிமையாகி.. தொடர்ச்சியாக தொடர்வதால் வரும் தீங்குகளை தவிர... சுகாதாரமின்மைகளால் வரும் தொற்றுக்கள் தவிர.. அதனால் தீங்கில்லை. 😂 இவாட கருத்தின்படி பார்த்தால்... பெண்களுக்கு வரும் மாதவிடாயும்.. ஆயுளைக் குறைக்குது என்றாகும். உலகில் சில வகை உயிரினங்களை தவிர பெரும்பாலனாவற்றில் மாதவிடாய் சக்கரமே இல்லை... அதை வைச்சு.. அக்கா இப்படியும் சொல்லலாமே. முட்டாளுங்க.

அதிரவைக்கும் உண்மைகளின் தொகுப்பு மகாவலி எல் வலயம் (காணொளி ஆய்வு)

6 hours 5 minutes ago
தமிழ் மக்களை கருவறுக்கும் மகாவலி அபிவிருத்தி:பின்னணியின் அலசல் பா.யூட் ஓர் இனத்திலுள்ள மக்களை அழிப்பது மட்டும் இன அழிப்பன்று. அம்மக்களை இனமாகக்காட்டும் கூறுகளை அழிப்பதும் இனவழிப்பே. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி தமிழர் பெரும்பான்மையை சீரழிக்க தென்னிலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் செயற்பட்டுவருகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவினால் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியான அம்பாறையில் கல்லோயாவை மறித்த அணை கட்டி அதன் ஊடாக 40000 ஏக்கர் விவசாயக் காணிகள் உருவாக்கப்பட்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் அதிகமான சிங்கள் மக்கள் குடியேற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக புதிய 50 கிராமங்கள் உருவாக்கப்பட்டனன. அதன் பின்னர் படிப்படியாக தமிழ் மக்களின் வளமிகு நிலங்களை மாறி மாறிவந்த அரசாங்கங்கள் சிங்கள மக்களுக்கு வாரீ வழங்கின. கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் சேருவல, கந்தளாய் போன்ற பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்திட்டம் என்ற பேரில் சூறையாடப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடு காரணமாக தமிழ் மக்கள் தமது செந்த நிலத்திலிருந்து வெளியேற்றபட்டு இன்று தமது பெரும்பான்மை பலத்தினை திருகோணமலையில் இழந்துள்ளனர். இவ்வாறு தமிழர் தாயகத்தில் அவர்களின் பெரும்பான்மை பலத்தை சிதை;து, அவர்களின் பேரம்பேசும் சக்தியினை நலிவடையச் செய்வதற்கான காரியங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றதன் விளைவாக விடுதலைப் போராட்டம் உருப்பெற்றது. விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் தமிழ் மக்களின் வளமிகு காணிகளை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருந்த அரசாங்கம், இன்று அவற்றை மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்க முற்படுகின்றது. 1948 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஆக்கிரமிப்பு 2018 இலும் தொடர்வது தான் தமிழ் மக்களின் துன்பியல் வரலாறு. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை நல்லாட்சியும் செய்து கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளின் கண்துடைப்பு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில ஏக்கர் காணிகளை விடுவிடுத்துக் கொண்டு மறுபுறத்தில் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் கையகப்படுத்த முற்படுகின்றது. மகாவலி அபிவிருத்தியைப் பொருத்தமட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவித இலாபமும் இல்லை மாறாக அவர்களின் வாழ்வில் சாபக்கேடாகவே இருக்கின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி எல் வலயம் தொடர்பில் விரிவாக ஆராய்வோம். தற்போது செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள மகாவலி எல் வலயத்திட்டம் தமிழர் மீது நடாத்தப்படும் மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகும். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது 1970 மாசி 28ம் திகதி உருவாக்கப்பட்டது. மகாவலி எல் வலயம் 1988 சித்திரை 15ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலமும் 2007 பங்குனி 09ம் திகதி எல்லைகளை விஸ்தரித்து இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டது. இதனுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மட்டுமல்லாமல் மாங்குளம் வரை வியாபித்துள்ளது. 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து, நாயாற்றுக்குத்தெற்கே தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்களான கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமிழ் மக்களை வெளியேற்றி அரசாங்கம் சிங்களவர்கள் இல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என அறியப்படும் தமிழ் மக்களின் 2000 ஏக்கருக்கு மேலான பாரம்பரிய நிலப் பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு, வெலிஓயா என மாற்றப்பட்டது. வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் சுமார் 3336 குடும்பங்களை 11189 சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த நிலங்களுக்கு சென்று குடியேறலாம் என்ற எண்ணத்தில் 2011 ஆம் ஆண்டு குறித்த பகுதிகளுக்குச் சென்ற போது, அவர்களின் நிலத்தில் பெரும்பான்மை இனத்தினர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த, பயிர் செய்த, வாழ்வாதாரங்கள் பெற்ற தமது நிலங்களை பறிகொடுத்த நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதேவேளை கடந்த 1950, 1960, 1970 காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இதே காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தமிழர்களிடம் இன்றும் உள்ளன. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒப்பமிட்டப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அவரின் பிரதிநிதியினால் மயில்குளம் (இப்போதைய பெயர் (மொனரவௌ) பகுதியில் வைத்து சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது வெலியோயா பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை உள்ளடக்கிய வகையிலே மகாவலி எல் வலயத்திட்டம் அமைகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பல நீர்ப்பாசனக்குளங்களான, இராமன் குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளாங்குளம் ஆகிய குளங்களை உள்ளடக்கி பாரிய நீர்ப்பாசனத்திட்டமாக இந்த எல் வலயம் எனப்படும் கிவுல் ஓயாத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 6000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சக்கூடிய இந்த நீர்ப்பாசனத்தின் மூலம் 3000 சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் கருத்து தமிழ் மக்கள் பெருமை அடையக்கூடிய அல்லது மகிழ்ச்சியடையக்கூடிய கருத்தல்ல. இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்களக் குடியேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ‘கிபுல் ஓயா’ திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் வெள்ளைக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது. அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனகரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் என பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் 1988ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 09ஆம் திகதி மகாவலி அதிகார சபையின் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை செய்தவர் வேறு யாருமல்ல. இப்போதைய ஜனாதிபதியும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே. இதன் ஊடாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும், வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலும் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டது. இரு போகங்களும் நெற் செய்கை நடந்த பல ஆயிரக் கணக்கான விவசாய நிலங்கள் சிங்கள மக்களுக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால் அந்த நிலங்களுக்குச் சொந்தமான மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இத்தனைக்கும் காரணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, தான் அடாத்தாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்றிய சிங்கள மக்களுக்கு நிதந்தரக் குடியிருப்புக்கான காணி உத்தரவுப் பத்திரங்களை இன்று வழங்கிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு மகாவலி எல் வலயத்திட்டம் அமைகின்ற போது முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட எல்லைகள் துண்டாடப்படுகின்ற போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு, தமிழர் தாயகமான வடகிழக்கு மாகாணங்கள் தனிமைப்படுத்தப்படும். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பெரும் பகுதிகள் மகாவலி அரசரணையின் கீழ் ஏற்கனவே மகாவலி எல் வயலத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் மகாவலி தனது நடவடிக்கைகளை மணலாறு பிரதேச செயலாளர் பிரிவோடு மட்டுப்படுத்தியிருந்துள்ளமை இதன் பாதிப்பை மேலும் வலுவாக்குகின்றது. அண்மையில் கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 8 சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகாரசபையினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதனூடாக மகாவலி அதிகார சபையானது கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தினை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முகாவலி எல் வலய மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மகாவலி கே மற்றும் ஜெ வலயங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கும் வட மாகாணத்தின் சனத்தொகையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் மாற்றியமைப்பதற்குமான அரசின் முயற்சியாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். மேலும் தொல்லியல் திணைக்களம் திட்டமிட்ட வரலாறறுத் திரிபுகளை மேற்கொள்வதோடு தமிழர்களின் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் மிக்க இடங்கள் பழைமை வாய்ந்த பௌத்த விகாரைகளாக உண்மைக்கு புறம்பாக பிரகடனப்படுத்தி வருகிறது. செம்மலை நீராவி பிள்ளையார் ஆலய பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை அண்மைய உதாரணமாகும். இவ்வாறு பல்வேறுவிதமான முல்லைத்தீவு மக்களுக்கு பாதிப்புக்களை கொடுத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், மதகுருமார், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் ஒன்று கூடி கடந்த ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது மகாவலி எல் வலய அபிவிருத்தியினை உடனடியாக கைவிடுவதுடன், ஏற்கனவே சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள கொக்குளாய் கடற்பகுதியினை விடுவிக்குமாறும், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் வாக்குகளில் ஆட்சியமைத்துக் கொண்;ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாழ்க்கை அவர்களின் எதிர்கால வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதே அவர் தமிழ் மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும். மேலும் அரசாங்கம் மகாவலி எல் வலய அபிவிருத்தியினைக் கைவிட்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழ் அரசியல்த் தரப்பினர்கள் சகல பேதங்களையும் கடந்து ஓரணியாக நின்று செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் ஏகோபித்த குரல் எழுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழ்-மக்களை-கருவறுக்கும/

2 பாலுறுப்புகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை - காரணம் என்ன?

6 hours 14 minutes ago
திருமணம் புரிந்தும் பல ஆண்டுகள் குழந்தைகள் கிடைக்காதவர்கள் ஐ.வி.எஃப் முறையை நாடி பிள்ளைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்கின்றார்கள். இப்படி ஒன்றிரண்டு குழந்தைகள் பிறப்பதற்கு ஐ.வி.எஃப் முறை காரணம் என்பதை தரவுகளை வைத்து ஆதாரபூர்வமாகச் சொல்லாமல் டொக்டர் தர்மேந்திர எழுந்தமானத்தில் சொன்னமாதிரி இருக்கின்றது. இது நலமோடு நாம் வாழ பகுதிக்குள் ஏன் வந்தது?