முற்றத்து மல்லிகை

காதலர்தினப் பதிவு

Wed, 14/02/2018 - 13:05

மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். 

நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில்லை' என்றார். பதறிப்போனேன். ஏனக்கிருந்த அதிகாரம் கொண்டு அந்த மரம் வெட்டலைத் தடுத்து விட்டு, வீடு சென்றோம். சாண்டில்யனின் ரசிகையான என் அம்மாவிற்கு அந்த மரம் பற்றி பித்துநிலை எட்டும்வரை வர்ணித்து, அம்மரம் எப்போதும் வெட்டப்படாதென்று உறுதி பெற்றுக்கொண்டேன். நாட்டாமைக் குணத்திருந்து மனிதத்தின் நுளைவாசலாய் அந்தக் காட்டுமரம் எனக்கமைந்தது.

தேனீர்சாலை சிப்பந்தி. அவளிலும் ஒரு காட்டுமரத்தின் தன்மை இருந்தது. மூங்கில் தோல், முள்முருக்குப் பட்டை நிறக் கண்கள். முசுட்டை இலைபோன்று இயற்கையாய்த் தோலில் சிறு கேசம். கிளிசறியாப் பூப்போல, பிரன்ச்சுக்காரர் அறிந்ததிராத நறுமணம். பனங்குருத்துப் போல் பற்கள். மழைபின் மலரென முகமெங்கும் குளிர்ச்சி. காட்டுமரம் தான். ஆனால் இயற்கை அதுதான்.

அலுவலக அரசியல், நிறுவன ஏணியேற்றம், பக்கத்துவீட்டுக்காரன் பற்றிய பொறாமைகள், குடும்பச்சுமைகள் என இறுகிப்போன மனிதர்கள், றோபோட்டுக்களாக, மனதின் பிடியில், விளிப்பில் தூங்கியபடி அவளிடம் தேனீர் பெற்றுச் சென்றார்கள். வாடிக்கைளாளர் வந்ததும், அவர்கள் தமக்கு என்னவேண்டும் என்று சொல்லுமுன்னரே அவள் அவர்க்கான ஓடரை செய்யத் தொடங்குவாள். அவர்களைத் தான் தெரிந்து வைத்திருப்பது அவர்களிற்கு மகிழ்வு தருகின்றதாக என நாய்க்குட்டிபோன்று அவர்களை அவள் நோக்குவாள். சிலர் கண்டுகொண்டனர். பலர் இறுக்கமாய்க் கடந்து சென்றனர். அவள் துள்ளல் சற்றும் குறையவில்லை.

ஒரு திங்கட்கிழமை காலை. அலுவலகம் வரப்பிடிக்கா அடிமைக்கூட்டம் விளிப்பில் தூங்கியபடி கோப்பி தூக்கம் முறிக்கும் என்ற நப்பாசையில் கோப்பி வாங்கக் காத்து நின்றனர். அந்த இடமே உழைச்சல் அதிர்வில் கரும்பாறையில் காக்கை எச்சம் போன்று முகஞ்சுழித்துக் கிடந்தது. அப்போது அது நடந்தது. ஒரு சிப்பந்தி இரு கண்ணாடிக்குவழைகள் நிறைந்த கோப்பியினை எப்படியோ நிலத்தில் கொட்டிவி;ட்டாள். கண்ணாடி உடையும் சத்தமும் தடுப்புடைத்த சிற்றருவி போன்று பரவிய கோப்பியும், கலவரத்துடன் பயந்து கிடந்த சிந்பத்தியும், சினந்து கொண்ட இறுகிய மனிதர்களுமான அந்தச் சூழ்நிலையில் காட்டுப்பூ கலகம் அடக்கியது. திடீரென அச்சூழல் சந்தணத் தென்றலில் சீமைக்கிழுவைப் பூ கலந்ததுபோல் கிறங்கச் செய்தது. அவள் இமயமலையில் யோகத்தில் இருக்க அவள் உடல் மட்டும் இங்கே பணியாற்றியது போன்ற லாவகம். சினந்தவர்களால் சினத்தைத் தொடரமுடியவில்லை. கலவரப்பட்ட சிப்பந்திகூட ஏதுமே நடக்காதது போல் ஓடர் எடுத்தாள். காட்டுப்பூவிற்குள் காட்டருவி ஒத்த பலத்தில் அமைதி இருக்கிறது. அவ்வமைதி முன்னால் கலவரங்கள் கரைந்துபோகின்றன.

காட்டுமரங்கள் காட்டிற்கே. அவற்றை வேரோடு பிடுங்கி வீட்டிற்குள் தொட்டிக்குள் சிறைப்படுத்த முடியாது. காட்டுப்பூவின் கிளர்ச்சிபெற காட்டிற்குள் கரையவேண்டும். கரைகிறேன்...
 
Categories: merge-rss

காதலர்தினப் பதிவு

Wed, 14/02/2018 - 13:05

மீன்கொத்திப் பறலை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். 

பிரிவுகள் தரும் சுமை.

Tue, 26/12/2017 - 22:36
பிரிவுகள் தரும் சுமை.

01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது.
 
வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. 
தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
 
அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது.

படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன்.
 
இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்லை. பிள்ளைகளின் நினைவுகளிலேயே அறுபடும் உறக்கத்தை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உதவுவதில்லை.

காரணம் சொல்லத் தெரியாது கணங்கள் ஒவ்வொன்றையும் கண்ணீரால் கடக்கிறேன். சந்திக்கும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் கண்ணீராலேயே அவர்கள் முன்னும் தொலைகிறேன்.

எங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை...பலதடவைகள் சொல்லிவிட்டாள். 
 
சொந்தநாடில்லாத துயரத்தை அவள் இப்போது அதிகம் உணர்கிறாள் என்பதை அவள் சொல்லும் கதைகளில் இருந்து புரிகிறேன்.

சொந்த நிலமில்லாதவர்களின் பிள்ளைகள் என்றோ ஒருநாள் தன் வேர்களைத் தேடும் என்பதை என் குழந்தையின் ஏக்கங்களிலிருந்து கற்றுக் கொள்கிறேன்.

19வருடம் அவள் அருகாமை இல்லாத நாட்கள் மிகவும் அரிதானவை.

2 அல்லது 3நாட்கள் சென்று வரும் பாடசாலை பயணங்கள தவிர அவள் என்னைப்பிரிந்து தூரம் போனதில்லை.
 
அவர்கள் வரும் நாள்வரையும் அவர்களது
படுக்கையில் உறங்கி அவர்கள் அறையில் என்னைத் தொலைப்பேன்.
 
02.10.2017 அவளும் நானும் அவளது தோழிகள் இருவரும் அவளது பல்கலைக்கழக தங்குவிடுதிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். 

எண்ணங்கள் எங்கே போகிறது என்பது தெரியாமல் ஏதேதோ நினைவுகள். எனது காரும் 61ம் இலக்க நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறேன். 

அவள் அடுத்துவரும் தனிமையை புதிய இடம் புதிய மனிதர்கள் எல்லோரையும் சமாளித்து தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதே என் அந்தரமாக இருந்தது.

என் குழந்தை என் முன்னால் பெரிய மனிசியாக தனது அலுவல்களை ஓடியோடிச் செய்து கொண்டிருந்தாள். 

அவள் போல நூற்றுக்கணக்கான மாணவமாணவியர் அந்தப் பகுதியெங்கும் தங்கள் பொருட்களோடும் உறவினர்களோடும் திரிந்தார்கள். 

அம்மா,அப்பா,சகோதரர்கள்,பேரன்,பேர்த்தி என ஆளாளுக்கு அவர்களது பொருட்களைக் காவிவந்து கொண்டிருந்தார்கள்.

என் குழந்தைக்கு அனைத்து உறவாயும் நானொருத்தி மட்டுமே. அவள் தனக்குள் அழுதிருப்பாள். உறவுகளே இல்லாது நாங்கள் தனித்திருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பாள்.

02.10.2017 தொடக்கம் 04.10.2017 வரையும் அவளது பல்கலைக்கழக தங்குமிட விடுதிக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். பொருட்கள் கொள்வனவு செய்தல் , பதிவுகள் என ஓடியது.

05.10.2017 காலை எட்டு மணிக்கு அவளது மீதிப் பொருட்களையும் காரில் ஏற்றினோம். 
இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்.... 
 
தான்உலவிய ஒவ்வொரு இடமாய் நின்று நின்று பயணம் சொன்னாள். அவளுக்கு 6வயதில் இந்த வீட்டுக்கு குடிவந்தோம். 
 
துயரங்களைத்தான் அதிகம் சுமந்த வீடு. 
2012இல் இந்த வீட்டை விட்டு எங்காவது போவோம் எனக் கேட்ட போது ஓமென்றாள். 
 
வீட்டைவிட்டு வெளியேற இருந்த தடைகளை பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டு அலைய துணிவும் இருக்கவில்லை. அதற்கான வழிகளும் கடினமாக இருந்தது. 
 
அவளும்பல்கலைக்கழகம் போகும் வரை சூனியம் சூழ்ந்த இந்த வீட்டிலே இருப்போமென என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

உளவள ஆலோசகர்களும் மருத்துவர்களும் இந்த வீட்டைவிட்டு வெளியே போ தூரம் போ... புதிய இடம் புதிய வாழ்வு உன்னையும் பிள்ளைகளையும் மீட்கும் என சொன்னவர்களின் வார்த்தைகளை செயற்படுத்தக் கூடிய வலு என்னிடம் இல்லாதிருந்தது.

அவளும் ஒரு கட்டத்தில் இந்த வீட்டில இருக்கேலாது வெளியேறுவம் என அழுத காலமும் ஒன்று வந்தது. அது அவளுக்கான பள்ளிப்படிப்பு இறுதிக்கால இரண்டு வருடங்களாக இருந்தது. 

பிள்ளையின்ரை படிப்பு முடிஞ்சு நீங்க யூனி போக ஒரேயடியா மாறுவம். அதுவரை பொறம்மா...அவளைச் சமாதானம் செய்தாலும் அவள் இந்த வீட்டில் அமைதியாக இருந்தது அரிது. 
000          000             000
காரில் ஏறியவள் தனது பொருட்களை மீண்டும் சரிபார்த்தாள். இன்னும் சில மணித்தியாலங்களில் அவளைத் தனியே விட்டுவிட்டு நான் தனியே திரும்பி வர வேண்டும்.

குண்டம்மா கவனமா இருங்கோ , வடிவாச் சாப்பிடுங்கோ , நித்திரை கொள்ளுங்கோ, மருந்தை ஒழுங்கா போடுங்கோ,எப்ப கதைக்க வேணுமெண்டாலும் எந்த நேரமெண்டாலும் என்னோடை கதையுங்கோ....,
அவள் பெரிய பட்டியலொன்றை சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளே என் இதுவரைகால உலகம். அவர்களும் ஒருநாள் தங்கள் பாதைகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை மறந்த அம்மா நான். 

கொண்டு வந்த பொருட்களை அவளும் நானும் அவளது அறைக்குக் கொண்டு சென்றோம். இனி சமையல்,படிப்பு,படுக்கை, இருப்பு எல்லாமே அந்த ஒற்றை அறையில் தான். காலம் இப்படியும் ஒரு நாளை என் குழந்தைக்குக் கொடுக்குமென்று நினைத்திருக்காத எனக்கு அது பெரும் ஏமாற்றமே.

இன்றிலிருந்து அவள் தனியே இருக்கப் போகிறாள். தனிமையை உணராத மன அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு காலம் கொடுக்க வேண்டும். எனது பிரார்த்தனைகள் அவளைக் காக்குமென்று நம்புகிறேன்.

சரி செல்லம் அம்மா வெளிக்கிடப்போறன்...கவனம்...அவள்கட்டிப்பிடித்து காதுக்குள் சொன்னாள். குண்டம்மா சந்தோசமா இருந்தா நான் சந்தோசமா இருப்பேன். அம்மாச் செல்லம் கவனம். 

என் குழந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு நடக்கிறேன். உடல் நடுங்குகிறது.நெஞ்சுக்குள் ஏதோ வலி. உயிரைப்பிடுங்கிக் கொள்கிறது துயர். 
வாகனத்தரிப்பிடம் வரையும் வந்தாள். வழியனுப்பிவிட்டு திரும்பி நடக்கிறாள். 

வாகனம் 61நெடுஞ்சாலைக்கு ஏறுகிறது. கண்ணீர் வழிகிறது. கத்தியழுகிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான் எனது பயணங்கள் அமைகிறது. காரில் ஒலிக்கும் பாடலும் இலத்திரனியல் வழிகாட்டியின் குரலும் தான் என்னோடு கூட வருகிறது. 

ஒலிக்கும் பாடலைச் சேர்ந்து பாடுவதும் , சில பாடல்களில் கரைந்து அழுவதுமாக அலைகிறேன். கார் போன போக்கில் என் பயணங்கள் தொடர்கிறது.

கார் ஓடுகிறது வீதிவழியே. பிள்ளைகளின் நினைவுகளோடு ஓடுகிறது எண்ணம். பிள்ளையை திரும்ப கூட்டிவா என்கிறது உள் மனசு. வந்த தரிப்பிடமொன்றில் காரை நிறுத்துகிறேன். அதிகம் ஆட்களில்லாத அந்தத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகிருந்த காட்டுவழி கொஞ்சத்தூரம் நடக்கிறேன். 

பிள்ளைகளே கடைசிவரையென இதுவரை ஓடிய என் கால்களை இந்த நாட்கள் இழுத்துக் கட்டி வைத்துள்ளது. காலம் மாறும் நீயும் மாறவேண்டுமென்கிறார்கள் நண்பர்கள். என்னால் முடியவில்லை. 
 
இதுவும்கடந்து போகுமென்று ஆறுதலடையவும் முடியவில்லை. 

இதுவும் கடந்து போக வேண்டும். 
 
Categories: merge-rss

பென்டில் கில்(Pendle Hill)

Sun, 03/12/2017 - 04:20

கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ"

"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்."

"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள்.

கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.

நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன்  இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க  கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.

அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு  நின்றேன்.

புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.

"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .

"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.

"‍ஹலோ"

"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே "

"இல்லை ஏன்"

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி"

மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.

இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம்.

மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.

விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.

வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில்  சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.

"‍ஹலோ மச்சான் என்ன  இந்த பக்கம்"

" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து  கொண்டு போவம் என்று வந்தனான்"

" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு"

"பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு"

"  பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.":10_wink::10_wink:

Categories: merge-rss

"மெல்பேர்ன் கப்"கீதை

Wed, 08/11/2017 - 05:48

Image result for கீதையில் கண்ணன் imagesஅவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில்  எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

 சாப்பாடு, தண்ணி என்று  அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்தய டிக்கட்டிலிருக்கும் குதிரையை கூகில் செய்து பார்த்துவிட்டு அதைப்பற்றி அன்று முழுவதும் சக தொழிலாளியுடன்  பேசிகொண்டிருப்பேன்.அந்த குதிரை கடைசியாகத்தான் வரும் என்று விசயம் தெரிந்தவங்கள் சொன்னாலும் நான் என்ட குதிரை தான் வெல்லும் என்று அடம் பிடிப்பேன்...

இந்த தடவை இரண்டு பியர் அதிகமாக பருகியதால் வந்த கீதை இது

எது ஓடினதோ அது நன்றாகவே ஓடினது
எது ஓடுகிறதோ அது நன்றாகவே ஓடும் 
எது ஓட இருக்கிறதோ அதுவும் நன்றாக ஓடும்
உன்னுடைய எதை நீ இழந்தாய் 
நீ அழுவதற்கு 
(பொக்கற்றை தட்டிபார்த்தேன் என்னுடைய ஐந்து டொலர் இழந்திட்டேன்...உடனே)
எதை நீ படைத்திருந்தாய் அதை வீணாக்குவதற்கு
(அதுதானே)
எதை கொடுத்தாயோ அது இங்கயே கொடுக்கப்பட்டது.
(என்ட‌ பெர்சிலிருந்து எடுத்து கொடுத்தனான் கொம்பனி தான் சம்பளம் தந்தவன் அவன்கள் வைத்த பந்தயத்தில் தான் திருப்பி கொடுத்திருக்கிறேன்.)
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது.
(அட கோதாரி எவ்வளவு உண்மை...நான் ஐந்து டொலர் கொடுத்து பந்தயம் போட என்னுடன் வேலை செய்யிற ஒருத்தன் இரண்டு டொலர் போட்டு இருநூறு டொலரகளை பெற்றுக்கொண்டான்)

அன்று கிருஸ்ணர் குதிரை வண்டியிலிருந்து உபதேசித்தை இன்று மெல்பேர்னில் குதிரையிலிருந்து புரியவைக்கிறார்கள்.....:10_wink:

Stephen Baster rides #1 Setsuna to victory

Categories: merge-rss