Aggregator

ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

9 hours 21 minutes ago
ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (18) பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாநாயகர் மற்றும் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே ஜனாதிபதி கடிதம் ஒன்றி மூலம் அறிவித்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற பதற்ற நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி அவ்வறிவித்தலில் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://www.dailyceylon.com/172423

ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

9 hours 21 minutes ago
ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

 

02

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (18) பிற்பகல்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாநாயகர் மற்றும் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே ஜனாதிபதி கடிதம் ஒன்றி மூலம் அறிவித்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற பதற்ற நிலைமைக்கு ஜனாதிபதியே  காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி அவ்வறிவித்தலில் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

http://www.dailyceylon.com/172423

கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம்

9 hours 26 minutes ago
கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம்

 

image_01a3bf2d65

பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை.

அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைததளங்களில் பகிரப்படுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என அவரிடம் வினவப்பட்டபோது,

சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. பாதால உலக குழுவுக்கு ஆடை அணிவித்து அழைத்து வரப்பட்டதுபோன்று இருந்தது. இந்தும் நான் அடிக்கவில்லை. தள்ளிவிடும் நடவடிக்கையையே முன்னெடுத்தேன் எனவும் பிரசன்ன ரணவீர எம்.பி. கூறினார்.

இன்று காலை சகோதார தனியார் வானொலி நிகழ்ச்சியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

http://www.dailyceylon.com/172425

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்!

9 hours 30 minutes ago
இன்று காலை முடிவு செய்கிறார் மகிந்த சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், நாடாளுமன்றக் குழு இன்று காலை 11 மணியளவில் கூடவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை நேற்றிரவு தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கவே இன்று காலை கூடவுள்ளதாக அவர் கூறினார். இந்தக் கூட்டத்திலேயே இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா- இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/19/news/34686

பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க.

9 hours 33 minutes ago
113 பேரின் சத்தியக் கடதாசிகளுடன் மைத்திரியை இன்று காலை சந்திக்கிறது ஐதேக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சந்திக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்தார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர், கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடையாது. இன்று காலை 10 மணிக்கு, 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சத்தியக்கடதாசிகளுடன் அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுள்ளோம். இதனை அவருக்குத் தெரிவித்துள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/19/news/34688

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

9 hours 33 minutes ago
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த அமர்வுகள் யாவும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததோடு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குரல்மூல வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். எனினும், அதனை ஏற்க முடியாதென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு பெரும் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது செயற்படுவதாக நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கட்சிகள் இணங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்த எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோமென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு வருகின்ற நிலையில், இன்றைய அமர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/குழப்பங்களுக்கு-மத்தியி/ ஆகா... இண்டைக்கும், நல்ல முசுப்பாத்தி இருக்கு.

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

9 hours 33 minutes ago
Parliament-720x450.png சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கடந்த அமர்வுகள் யாவும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே நீடித்ததோடு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குரல்மூல வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும், அதனை ஏற்க முடியாதென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு பெரும் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது செயற்படுவதாக நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கட்சிகள் இணங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்த எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோமென ஆளுந்தரப்பு குறிப்பிட்டு வருகின்ற நிலையில், இன்றைய அமர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது. எனினும், எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குழப்பங்களுக்கு-மத்தியி/

ஆகா... இண்டைக்கும், நல்ல முசுப்பாத்தி இருக்கு. :grin:

மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு

9 hours 35 minutes ago
மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது. பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக- தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. http://www.puthinappalakai.net/2018/11/19/news/34690

மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு

9 hours 35 minutes ago
மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு

ranil-maithri-300x200.jpgசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று நேற்று முற்பகல், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

பின்னர், நேற்று மாலை அந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாக- தற்போதைய அரசியல் நெருக்கடிகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/11/19/news/34690

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’

9 hours 37 minutes ago
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’ எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யானை சின்னத்திற்குப் பதிலாக ஒரு புதிய சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் இருதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. http://athavannews.com/ஐக்கிய-தேசிய-முன்னணியின்/

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’

9 hours 37 minutes ago
maxresdefault-8.jpg ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய சின்னம் ‘டயமண்ட்’

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஒரு புதிய சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அதன்படி டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யானை சின்னத்திற்குப் பதிலாக ஒரு புதிய சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் சின்னம் தொடர்பில் கட்சிக்குள் இருதரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், தற்போது டைமண்ட் சின்னத்தில் போட்டியிட கூட்டணியினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

http://athavannews.com/ஐக்கிய-தேசிய-முன்னணியின்/

பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க.

9 hours 39 minutes ago
ranil-maithri-720x450.gif பெரும்பான்மையை மீண்டும் நிரூபிப்போம்! – ஐ.தே.க.

நாடாளுமன்றில் தமக்குள்ள பெரும்பான்மையை இன்று மீண்டும் நிரூபிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இந்நிலையில் இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கடந்த அமர்வுகளில் குரல்மூல வாக்கெடுப்பு இடம்பெற்றது. பெரும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்ற போதும், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

எனினும், ஆளுந்தரப்பு இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் மோதல் வெடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால் ஆளுந்தரப்பு திட்டமிட்டு குழப்பம் விளைவித்து, சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க முனைவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதேவேளை, வாக்கெடுப்பு எந்த முறையில் இடம்பெற்றாலும் தாம் வெற்றிபெறுவது உறுதியென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

http://athavannews.com/பெரும்பான்மையை-மீண்டும்/

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

9 hours 41 minutes ago
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், க.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 24 ஆம் நாள், சிறப்பு பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது. அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது. கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மேலுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன. புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள் நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் சேர்ந்து தேர்தலில் ஈடுபட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்பந்தமாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும், அவ் நம்பிக்கைகளும் புதிய கட்சியின் மேலும் பதியும். அதன் பின்னர் சின்னத்தைத் தரும் அந்தக் கட்சியின் பொறுப்புக்களையும் இறந்த கால நிகழ்வுகளையும் புதிய கட்சி தாங்கிப் பயணிக்க வேண்டியிருக்கும். கொள்கைகளைப் பரப்ப வந்த நாங்கள் கடந்த கால கோபதாபங்களிற்கு ஆளாக நேரிடும். அதனால்த்தான் நாம் ஒரு பொதுவான சின்னத்துடன் அல்லது புதிய சின்னத்துடன் கொள்கைகள் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று எமது கட்சி பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளேன். அடுத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான எனது பொறுப்புக்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ளது. நான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக இருந்த போதே, தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் நிறுவுனராகவும் செயலாளர் நாயகமாகவும் மாறியுள்ளேன். நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக கடமையாற்றலாமா என்பதை உங்கள் பரிசீலனைக்கு விடுகின்றேன். எமது கட்சியின் அரசியல் குறிக்கோள்கள் பேரவையின் அரசியல் குறிக்கோள்களுக்கு மாறுபட்டதன்று. எமக்குள் நலவுரித்து முரண்பாடுகள் எழவேண்டிய அவசியமில்லை. (Conflict of interests). ஆனால் பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் எமக்கும் கொள்கை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக சித்தார்த்தனின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே செயலாற்றி வருகின்றது. அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நான் ஏற்க முடியாததால் தான் நான் அதிலிருந்து வெளியேறினேன். அந்த வகையில் சித்தார்த்தனுடன் எமக்கு கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கலாம். அதே போல் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் மற்றைய அரசியல் கட்சிகளின் நலங்களுடன் எமக்கு முரண்பாடுகள் எழக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் பேரவை என்ற மக்களின் கூட்டு சேர்ந்த இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, பேரவையுடன் கொள்கை ரீதியாக முரண்பாடுகளை எதிர்நோக்கக் காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையுடன் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் குறித்த பதவி முடியும் வரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளேன். முரண்பாடுகள் எழவில்லை. அரசியல் முன்மொழிவுகள் அரசாங்கத்தின் முன் தமிழ் மக்கள் பேரவையினாலும் முன்வைக்கப்பட்டன. நான் அங்கம் வகித்த வடமாகாண சபையினாலும் முன்வைக்கப்பட்டன. எது எவ்வாறு இருப்பினும் நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றலாமா என்பது பற்றி நீங்களே தீர்மானிக்க வேண்டும். அடுத்து பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையுடன் ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகள் சில தமக்குள் முரண்பட்டுள்ள ஒரு நிலை இன்று காணப்படுகிறது. அவற்றைத் தீர்ப்பது அந்தந்தக் கட்சிகளின் சவாலும் பொறுப்பும் ஆகும். அந்த முரண்பாடுகளுக்கான காரணம் பொதுநலம் என எடுத்துக்காட்டப்பட்டாலும் கட்சி நலம் கலந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே தமிழ் மக்கள் பேரவையோ தமிழ் மக்கள் கூட்டணியோ அந்தக் கட்சிகளின் முரண்பாடுகளை தமக்குள் ஈர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அவர்களின் முரண்பாடுகளை மனதில் வைத்தே எமது கூட்டணி சுதந்திரமாகப் பொதுச்சின்னம் ஒன்றில் கட்சி அரசியலில் நுழையத் தீர்மானம் எடுத்துள்ளது. மற்றைய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கொள்கை அடிப்படையில் எம்முடன் தேர்தல் உடன்பாடுகள் வைத்துக் கொள்ளலாம். எமது அங்கத்துவக் கட்சிகளின் முரண்பாடுகள் கொள்கை ரீதியானவையா கட்சி நல உரித்துக்கள் சம்பந்தப்பட்டவையா என்று நாம் பார்க்க வேண்டும். கட்சி நலவுரித்துக்கள் எம்மைக் கட்டுப்படுத்தாது. ஆனால் கொள்கை முரண்பாடுகள் எம்மை உள்ளீர்ப்பன. சில வேளைகளில் கொள்கைகள் ஒன்றாக இருக்க நடைமுறைச் செயற்பாடுகள் முரண்பாடுடையன என்று ஒரு கட்சி மற்றைய கட்சி பற்றி விமர்சிக்கக் கூடும். அவற்றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்கள் பேரவை அவர்களின் முரண்பாடுகளிடையே உள்நுழைய வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட ரீதியில் பேரவையின் இணைத்தலைவர்களோ அங்கத்தவர்களோ அந்த முரண்பாடுகளை நீக்க இரு சாராரினாலும் கோரப்பட்டார்கள் என்றால் அவற்றைத் தீர்க்க அவர்கள் முன்வரலாம். உதாரணத்திற்கு கஜேந்திரகுமாரின் கட்சிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சிக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளை நீக்க எமது இணைத்தலைவர் ஒருவர் முன்வரலாம். ஆனால் அது அந்த இணைத்தலைவரின் தனித்துவமான அவரின் ஏற்புடைத் தன்மையைப் பொறுத்து ஏற்கப்பட்ட கடமையாகவே இருக்கும். மூன்றாவதாக, இன்று நாம் பரிசீலிக்கப் போவது அங்கத்துவக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகள் பற்றிய பேரவையின் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும். அதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளிவந்த ஒரு கட்சி. பேரவை உருவாக்கும் போது அன்று நடைமுறையில் இல்லாத கட்சி. மற்றைய கட்சிகள் பேரவையை உருவாக்க உதவி புரிந்த கட்சிகள். இவற்றுள் வேறுபாடு காட்ட வேண்டுமா என்பது உங்களைச் சார்ந்தது. இப்பொழுது கூட பேரவையில் அங்கம் வகிக்கும் பலரே கூட்டணியின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். உதாரணத்திற்குப் பேராசிரியர் சிவநாதனைக் குறிப்பிடலாம். இவை யாவும் பற்றி நாம் இன்று கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். நாம் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் கட்சி பேதங்களைக் கடந்து இதுவரை காலமும் செயற்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவையை எமது மக்கள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்து வந்துள்ளார்கள். எமது இந்த ஒற்றுமைதான் ‘எழுக தமிழ்’ போன்ற பல காத்திரமான செயற்பாடுகளை நாம் கடந்த சில வருடங்களில் இயற்ற வழிவகுத்திருந்தது. இது தொடரவேண்டும். எமது ஒற்றுமையின் மூலம் நாம் செய்யவேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நடவடிக்கைகளிலும் இந்த ஒற்றுமை நிலவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக நான் எதிர்பார்க்கின்றேன். கடந்த காலங்களில் எமக்கிடையே சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். இது சிலர் மனதை புண்படுத்தி இருக்கலாம். சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். சிலர் மத்தியில் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தியும் இருக்கலாம். நான் அவற்றைப் புரிந்துகொள்கின்றேன். அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அதே தவறுகள் இடம்பெறாமல் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம், எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது. சில சக்திகள் எம்முள் முரண்பாடுகளை முன்னெடுக்க மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறத்தலாகாது. எமக்கு இடையிலான அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகள் மற்றும் வன்முறையான முரண்பாடுகள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு எந்தளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் பக்க சார்பாக செயற்படமுடியாது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தனித்துவம் மிக்கவை. அந்த நிலைக்கு ஏற்ப அரசியலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். அது உங்களைப் பொறுத்த விடயம். தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் கொள்கை பிறழ்ந்தார்கள் என்று நான் நம்பியதால் அவர்களுடன் முரண்பட்டு வெளியேறினேன். அதற்காக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மீதோ அதன் தலைவர் சித்தார்த்தன் மீதோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித கோபதாபங்களும் இல்லை. அரசியலில் நண்பர் சித்தார்த்தனின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர். என் மதிப்புக்குரிய ஒருவரின் மகன். அவருடன் இணைந்து பல வேலைகளை தமிழ் மக்கள் பேரவையில் நாம் எல்லோரும் முன்னெடுத்திருக்கின்றோம். அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன். அதேவேளை, கொள்கை ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியலில் செயற்படுவதே எனது விருப்பம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் முரண்படுவதால் நாம் சேர்ந்து மக்கள் முன்னிலையில் எமது கருத்துக்களை எடுத்துச் சொல்லி எமது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெற நாம் முயல வேண்டும் என்று கருதுகின்றேன். இந்த விதத்தில் தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. நான் எந்தக் கட்சிக்கும் பக்கசார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும். தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும். அதனால் தான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன். மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக் கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன். கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றாக செயற்படுவோம். எங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை எமது மக்களின் நன்மை கருதி களைந்து கொள்ளுவோம். எமது கூட்டு வெற்றியை நம்பி செயற்படுங்கள். எம்முடன் ஒத்த கருத்துடைய யாவரும் இணையுங்கள். நாம் கொள்கையில் பற்றுறுதி கொண்டு செயற்படுவோம். அதேவேளை, ஒற்றுமை என்ற காரணத்துக்காக தவறுகளைக் கண்டும் காணாது இருந்துவிட முடியாது. எமது பயணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு நாம் இடம்கொடுக்க முடியாது. நான் தவறு விட்டால் அதனைச் சுட்டிக்காட்டி தக்க நடவடிக்கை எடுக்கும் கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இதுவரையில் நடந்த எமது தவறுகளை மறப்போம், மன்னிப்போம். இதன் பின் நாம் ஒன்றாகக் கைகோர்த்து பயணிப்போம். ஆனால் இனிமேலும் தவறுகள் இடம்பெறாமல் இலட்சியத்தை மனதில் நிறுத்தி செயற்படுவோம். தவறுகளைத் தக்க முறையில் கையாள்வோம். ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/19/news/34682

புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

9 hours 41 minutes ago
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி

 

cm-300x200.jpgஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட-  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்,  க.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கடந்த மாதம் 24 ஆம் நாள், சிறப்பு பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது. அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது.

கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மேலுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன.

புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள் நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் சேர்ந்து தேர்தலில் ஈடுபட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்பந்தமாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும், அவ் நம்பிக்கைகளும் புதிய கட்சியின் மேலும் பதியும்.

அதன் பின்னர் சின்னத்தைத் தரும் அந்தக் கட்சியின் பொறுப்புக்களையும் இறந்த கால நிகழ்வுகளையும் புதிய கட்சி தாங்கிப் பயணிக்க வேண்டியிருக்கும். கொள்கைகளைப் பரப்ப வந்த நாங்கள் கடந்த கால கோபதாபங்களிற்கு ஆளாக நேரிடும்.

அதனால்த்தான் நாம் ஒரு பொதுவான சின்னத்துடன் அல்லது புதிய சின்னத்துடன் கொள்கைகள் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று எமது கட்சி பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளேன்.

அடுத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான எனது பொறுப்புக்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ளது. நான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக இருந்த போதே, தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் நிறுவுனராகவும் செயலாளர் நாயகமாகவும் மாறியுள்ளேன்.

நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக கடமையாற்றலாமா என்பதை உங்கள் பரிசீலனைக்கு விடுகின்றேன்.

எமது கட்சியின் அரசியல் குறிக்கோள்கள் பேரவையின் அரசியல் குறிக்கோள்களுக்கு மாறுபட்டதன்று. எமக்குள் நலவுரித்து முரண்பாடுகள் எழவேண்டிய அவசியமில்லை. (Conflict of interests). ஆனால் பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் எமக்கும் கொள்கை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம்.

உதாரணமாக  சித்தார்த்தனின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே செயலாற்றி வருகின்றது. அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நான் ஏற்க முடியாததால் தான் நான் அதிலிருந்து வெளியேறினேன். அந்த வகையில் சித்தார்த்தனுடன் எமக்கு கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கலாம்.

அதே போல் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் மற்றைய அரசியல் கட்சிகளின் நலங்களுடன் எமக்கு முரண்பாடுகள் எழக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் பேரவை என்ற மக்களின் கூட்டு சேர்ந்த இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, பேரவையுடன் கொள்கை ரீதியாக முரண்பாடுகளை எதிர்நோக்கக் காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையுடன் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் குறித்த பதவி முடியும் வரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளேன். முரண்பாடுகள் எழவில்லை.

அரசியல் முன்மொழிவுகள் அரசாங்கத்தின் முன் தமிழ் மக்கள் பேரவையினாலும் முன்வைக்கப்பட்டன. நான் அங்கம் வகித்த வடமாகாண சபையினாலும் முன்வைக்கப்பட்டன.

எது எவ்வாறு இருப்பினும் நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றலாமா என்பது பற்றி நீங்களே தீர்மானிக்க வேண்டும். அடுத்து பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையுடன் ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகள் சில தமக்குள் முரண்பட்டுள்ள ஒரு நிலை இன்று காணப்படுகிறது.

அவற்றைத் தீர்ப்பது அந்தந்தக் கட்சிகளின் சவாலும் பொறுப்பும் ஆகும். அந்த முரண்பாடுகளுக்கான காரணம் பொதுநலம் என எடுத்துக்காட்டப்பட்டாலும் கட்சி நலம் கலந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் பேரவையோ தமிழ் மக்கள் கூட்டணியோ அந்தக் கட்சிகளின் முரண்பாடுகளை தமக்குள் ஈர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அவர்களின் முரண்பாடுகளை மனதில் வைத்தே எமது கூட்டணி சுதந்திரமாகப் பொதுச்சின்னம் ஒன்றில் கட்சி அரசியலில் நுழையத் தீர்மானம் எடுத்துள்ளது.

மற்றைய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கொள்கை அடிப்படையில் எம்முடன் தேர்தல் உடன்பாடுகள் வைத்துக் கொள்ளலாம்.

எமது அங்கத்துவக் கட்சிகளின் முரண்பாடுகள் கொள்கை ரீதியானவையா கட்சி நல உரித்துக்கள் சம்பந்தப்பட்டவையா என்று நாம் பார்க்க வேண்டும். கட்சி நலவுரித்துக்கள் எம்மைக் கட்டுப்படுத்தாது.

ஆனால் கொள்கை முரண்பாடுகள் எம்மை உள்ளீர்ப்பன. சில வேளைகளில் கொள்கைகள் ஒன்றாக இருக்க நடைமுறைச் செயற்பாடுகள் முரண்பாடுடையன என்று ஒரு கட்சி மற்றைய கட்சி பற்றி விமர்சிக்கக் கூடும்.

அவற்றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்கள் பேரவை அவர்களின் முரண்பாடுகளிடையே உள்நுழைய வேண்டும் என்பதில்லை.

தனிப்பட்ட ரீதியில் பேரவையின் இணைத்தலைவர்களோ அங்கத்தவர்களோ அந்த முரண்பாடுகளை நீக்க இரு சாராரினாலும் கோரப்பட்டார்கள் என்றால் அவற்றைத் தீர்க்க அவர்கள் முன்வரலாம்.

உதாரணத்திற்கு கஜேந்திரகுமாரின் கட்சிக்கும்  சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சிக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளை நீக்க எமது இணைத்தலைவர் ஒருவர் முன்வரலாம். ஆனால் அது அந்த இணைத்தலைவரின் தனித்துவமான அவரின் ஏற்புடைத் தன்மையைப் பொறுத்து ஏற்கப்பட்ட கடமையாகவே இருக்கும்.

மூன்றாவதாக, இன்று நாம் பரிசீலிக்கப் போவது அங்கத்துவக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகள் பற்றிய பேரவையின் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும். அதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி,  தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளிவந்த ஒரு கட்சி. பேரவை உருவாக்கும் போது அன்று நடைமுறையில் இல்லாத கட்சி. மற்றைய கட்சிகள் பேரவையை உருவாக்க உதவி புரிந்த கட்சிகள். இவற்றுள் வேறுபாடு காட்ட வேண்டுமா என்பது உங்களைச் சார்ந்தது.

இப்பொழுது கூட பேரவையில் அங்கம் வகிக்கும் பலரே கூட்டணியின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். உதாரணத்திற்குப் பேராசிரியர் சிவநாதனைக் குறிப்பிடலாம். இவை யாவும் பற்றி நாம் இன்று கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

நாம் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் கட்சி பேதங்களைக் கடந்து இதுவரை காலமும் செயற்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவையை எமது மக்கள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்து வந்துள்ளார்கள். எமது இந்த ஒற்றுமைதான் ‘எழுக தமிழ்’ போன்ற பல காத்திரமான செயற்பாடுகளை நாம் கடந்த சில வருடங்களில் இயற்ற வழிவகுத்திருந்தது. இது தொடரவேண்டும்.

எமது ஒற்றுமையின் மூலம் நாம் செய்யவேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நடவடிக்கைகளிலும் இந்த ஒற்றுமை நிலவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக நான் எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களில் எமக்கிடையே சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். இது சிலர் மனதை புண்படுத்தி இருக்கலாம். சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். சிலர் மத்தியில் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தியும் இருக்கலாம். நான் அவற்றைப் புரிந்துகொள்கின்றேன்.

அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அதே தவறுகள் இடம்பெறாமல் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம், எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம்.

எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது. சில சக்திகள் எம்முள் முரண்பாடுகளை முன்னெடுக்க மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறத்தலாகாது.

எமக்கு இடையிலான அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகள் மற்றும் வன்முறையான முரண்பாடுகள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு எந்தளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் பக்க சார்பாக செயற்படமுடியாது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தனித்துவம் மிக்கவை. அந்த நிலைக்கு ஏற்ப அரசியலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். அது உங்களைப் பொறுத்த விடயம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் கொள்கை பிறழ்ந்தார்கள் என்று நான் நம்பியதால் அவர்களுடன் முரண்பட்டு வெளியேறினேன்.

அதற்காக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மீதோ அதன் தலைவர் சித்தார்த்தன் மீதோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித கோபதாபங்களும் இல்லை.

அரசியலில் நண்பர் சித்தார்த்தனின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர். என் மதிப்புக்குரிய ஒருவரின் மகன். அவருடன் இணைந்து பல வேலைகளை தமிழ் மக்கள் பேரவையில் நாம் எல்லோரும் முன்னெடுத்திருக்கின்றோம்.

அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன்.

அதேவேளை, கொள்கை ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியலில் செயற்படுவதே எனது விருப்பம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் முரண்படுவதால் நாம் சேர்ந்து மக்கள் முன்னிலையில் எமது கருத்துக்களை எடுத்துச் சொல்லி எமது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெற நாம் முயல வேண்டும் என்று கருதுகின்றேன்.

இந்த விதத்தில் தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும்.

மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நான் எந்தக் கட்சிக்கும் பக்கசார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும். தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும்.

அதனால் தான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக் கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன்.

கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றாக செயற்படுவோம். எங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை எமது மக்களின் நன்மை கருதி களைந்து கொள்ளுவோம். எமது கூட்டு வெற்றியை நம்பி செயற்படுங்கள். எம்முடன் ஒத்த கருத்துடைய யாவரும் இணையுங்கள். நாம் கொள்கையில் பற்றுறுதி கொண்டு செயற்படுவோம்.

அதேவேளை, ஒற்றுமை என்ற காரணத்துக்காக தவறுகளைக் கண்டும் காணாது இருந்துவிட முடியாது. எமது பயணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு நாம் இடம்கொடுக்க முடியாது. நான் தவறு விட்டால் அதனைச் சுட்டிக்காட்டி தக்க நடவடிக்கை எடுக்கும் கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

இதுவரையில் நடந்த எமது தவறுகளை மறப்போம், மன்னிப்போம். இதன் பின் நாம் ஒன்றாகக் கைகோர்த்து பயணிப்போம். ஆனால் இனிமேலும் தவறுகள் இடம்பெறாமல் இலட்சியத்தை மனதில் நிறுத்தி செயற்படுவோம். தவறுகளைத் தக்க முறையில் கையாள்வோம்.

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்!

9 hours 41 minutes ago
நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்! நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் மாலை அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்த்க்கது. http://athavannews.com/நாடாளுமன்றம்-கூட்டப்படு/

நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்!

9 hours 41 minutes ago
Parliament-720x450.png நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் கட்சி தலைவர்கள் கூட்டம்!

நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) நான்காவது முறையாகவும் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி தலைமையில் மாலை அனைத்துக் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்த்க்கது.

http://athavannews.com/நாடாளுமன்றம்-கூட்டப்படு/

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை!

9 hours 43 minutes ago
கலிஃபோர்னியா காட்டுத் தீ பேரழிவு : 76 பேர் உயிரிழப்பு- 1,276 பேரை காணவில்லை! கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயின் கோர தாண்டவத்தால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு கருகி நாசமாகியுள்ளது. இந்தநிலையில் காட்டுத்தீயினால் தங்களின் இருப்பிடங்களை விட்டு வௌியேறிச் சென்று மீண்டும் திரும்பாத பலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதன்படி, நேற்று (சனிக்கிழமை) வரை 1276 பேரை காணவில்லை என முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தடயவியல் மீட்பு குழுவினர் புதையுண்ட நிலையில் இருந்த ஐந்து பேரின் சடலங்களை நேற்று மீட்டுள்ளனர். அதன்படி காட்டுத்தீ அனர்த்தத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காட்டுத் தீயினால் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக சிதறியோடிய நூற்றுக்கணக்கான மக்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 63 பேர் மாத்திரம் தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மரபணு பரிசோதனைகளுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனையவர்களை அடையாளம் காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. http://athavannews.com/கலிஃபோர்னியா-காட்டுத்-த-3/

கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு

9 hours 47 minutes ago
gaja-2-720x450.png கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர்.

அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அனர்த்தம் ஏற்பட்டு பல்வேறு வகையில் இழப்புகளை சந்தித்துள்ள தம்மை இதுவரையில் தமிழக அரச அதிகாரிகள் எவரும் வந்து சந்திக்கவில்லை எனவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அம்மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

https://www.yarl.com/forum3/forum/216-தமிழகச்-செய்திகள்/?do=add