Aggregator

சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

2 months ago
சிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது முக்கியம் – சமந்தா பவர்

 

samantha-power1-300x200.jpgசிறிலங்கா மீது அனைத்துலக அழுத்தங்களை அதிகரிப்பது தற்போது முக்கியம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தமை குறித்து அவர் தனது கீச்சகப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “தான் புதிய பிரதமராக முன்மொழிந்த – போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமாக குற்றம்சாட்டப்படும், முன்னாள் அதிபரை முன் கொண்டு வருவதற்காக,  நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் சிறிசேனவின், முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள நிறுவனங்கள் வளைகின்றன. ஆனால் உடையவில்லை. அனைத்துலக அழுத்தங்களை அதிகரிக்க வேண்டியது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/14/news/34415

அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்..

2 months ago
அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான ஆயுதமாகப் பயன்பட்டது. ரனில் விக்ரமசிங்கவின் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை மேற்கின் பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு முழு இலங்கையயும் விலை பேசிக்கொண்டிருந்தது. அத்தியாசியப் பொருட்களின் விலை நன்கு மடங்காக நான்கே ஆண்டுகளில் அதிகரித்திருந்தது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இவற்றிற்கு எல்லாம் எதிரான மக்களின் கோபத்தைப் பயன்படுத்திகொண்ட மைத்திரிபால சிரிசேன, சட்டவிரோதமாக மகிந்தவைப் பிரதமராக்கி அழகுபார்க்க விரும்பினார். கட்சி தாவலுக்காக பில்லியன்கள் வழங்கப்பட்டும், மகித்தவால பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்ட்தேர்தலை நடத்துவதாக மைத்திரி கும்பல அறிவித்தது. நேற்றைய தீர்ப்பின் பின்னர், மைத்திரியின் திட்டம் தோற்றுப் போக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் முப்படைகளைம் அழைத்த மைத்திரி, இராணுவ சர்வாதிகார ஆட்சி ஒன்றிற்குத் திட்டமிடுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அடிப்படை ஜனநாயகம் அழிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன. மகிந்தவின் தேர்தல் தோல்விக்குப் பின்னான காலத்தில் ஊடக சுதந்திரம் குறித்த எல்லை வரை வழங்கப்பட்டிருந்தது,கைதுகள் குறைந்திருந்தான, ஒரு வகையான அமைதிச் சூழல் கனிந்திருந்தது. தமது நாளாந்த பொருளாதார சிக்கல்களையும் மீறி இச் சுதந்திரம் அவர்களுக்க்த் தேவைப்பட்டிருந்தது. முப்பது வருட போர்ச் சூழலிலிருந்து கிடைத்த புதிய குறைந்த பட்ச ஜனநாயகம் மக்களை மீண்டும் இயல்பான வாழ்க்கையை நோக்கி அழைத்து வந்திருந்தது. இராணுவத்தின் நேரடி ஒடுக்குமுறை இல்லாமல், பல போராட்டங்கள் நடைபெற்றன; சிங்களப் பகுதிகளின் மட்டுமன்றி தமிழ்ப் பகுதிகளிலும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர். பல புதிய கட்சிகள் தோன்றின. அரசியல் விவாதங்கள், நுல் வெளியீடுகள் என்று நீண்ட காலத்தின் பின்னர் புதிய சூழலுக்குள் மக்கள் நுளைந்திருந்தனர். இதன் மறுபக்கத்தில், மத்திய வங்கியில் ஆரம்பித்து பிரதேச சபை வரை ஊழல் தலைவிரித்தாடியது. புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டுவதற்கும், ஜனநாயக வழியிலான அமைப்புக்களை உருவாக்குவதற்கும் யாரும் தயாராகவில்லை. பிற்போக்கு புலப்பெயர் ஏஜன்டுகளாகச் செயற்பட்ட விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்ற அரசியல்வாதிளின் குழுக்கள் எதிர் அரசியலை பிரதியிட்டன. இன்று மைத்திரி – மகிந்த இணைவு தற்காலிகப் பின்னடைவு என்பது மட்டுமன்றி இலங்கையின் அரசியலமைபு அதன் பேரினவாத உள்ளடக்கத்தால் எப்போதும் கேள்விகு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது. இந்த அச்சம் எதுவுமின்றி புலம்பெயர் நாட்டு தேசிய வியாபாரிகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் நேரடியாக ரனிலை எதிர்ப்பதும், மகிந்தவை மறைமுகமாக ஆதரிப்பதும் அவர்களை நிர்வாணமாக மக்கள் முன் அம்பலப்படுத்திர்யிருக்கிறது. மகிந்த மீட்சி பெற்றால் ஏகாதிபத்திய நாடுகளை வளைத்துப்போட்டு ஈழம் பெற்றுவிடலாம் என்ற கனவை வேறு மக்கள் மத்தியில் விதைக்க ஆரம்பித்துவிட்டனர். இவை அனைத்துக்கும் இடையில் மைத்திரி தலைமையில் அவசரகால ஆட்சி தோன்றுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. http://inioru.com/post-constitutional-coup-in-sri-lanka/

நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

2 months ago
நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை. இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த உத்தரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்க மறுத்தால், நாடாளுமன்றத்தில் அதற்குச் சவால் விடும் பிரேரணையை நாளை கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். http://www.puthinappalakai.net/2018/11/14/news/34473

நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

2 months ago
நாடாளுமன்றத்தில் ரணில் – அலரி மாளிகையில் இருந்து வெளியே வந்தார்

 

ranil-suresh-300x200.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை.

இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக 122 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் இந்த உத்தரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்க மறுத்தால், நாடாளுமன்றத்தில் அதற்குச் சவால் விடும் பிரேரணையை நாளை கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

 

ranil-suresh.jpghttp://www.puthinappalakai.net/2018/11/14/news/34473

பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

2 months ago
122 எம்.பிக்கள் அரசுக்கு எதிராக கையொப்பம்! November 14, 2018 புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதத்திற்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என இன்று காலையில் ஜேவிபி நம்பிக்கயில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தது. இது இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, அரசு தரப்பில் இருந்து கூச்சலிட்டு அதை குழப்பும் முயற்சிகள் நடந்தன. இதையடுத்து, குரல் வழி பெரும்பான்மையை உறுதிசெய்த சபாநாயகர், புதிய அரசில் நம்பிக்கையில்லையென்ற பிரேரணை வெற்றியடைந்ததாக அறிவித்தார். பின்னர், புதிய அரசில் நம்பிக்கையில்லையென்ற நிலைப்பாட்டுடைய எம்.பிக்கள் கையொப்பமிட்ட ஆவணமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இதில் 122 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர். http://www.pagetamil.com/23729/

ரபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்- ராகுல்காந்தி தெரிவிப்பு!

2 months ago
ரபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளார்- ராகுல்காந்தி தெரிவிப்பு! ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு இருக்கின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ரபேல் போர் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டுமெனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் விலைப்பட்டியலை தனியாக தாக்கல் செய்தது, ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ”உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டிருக்கின்றார். இந்திய விமானப்படையை கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் மூலம் தொழில் அதிபர் அம்பானியின் சட்டை பாக்கெட்டுக்குள் 30 ஆயிரம் கோடிடூ ரூபா திணிக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும், சத்தீஷ்கார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறியபோது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தலையணைக்குள் இருந்த பணம் வெளியே வந்ததாக மோடி கூறினார். அவர் சொன்னது சரிதான். ஆனால் யாருடைய பணம் பறிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அது ஏழை மக்களின் பணம். அவர்கள்தான் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் வங்கிகளின் முன்பாக கால்கடுக்க காத்துக் கிடந்தனர். எந்த கோடீசுவரராவது இதுபோல் நீண்ட வரிசையில் நின்றார்களா? கோட்டு, சூட்டு அணிந்தவர்கள் யாரையாவது நீண்ட வரிசையில் பார்க்க முடிந்ததா? இந்தியாவின் பிரதமர் கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உதவினார். அவர் ஏழைகளின் பணத்தை பறித்துக் கொண்டார். அதனால் பணக்காரர்கள் மட்டும்தான் பலன் அடைந்தனர். சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்” என இவ்வாறு அவர் கூறினார். http://athavannews.com/ரபேல்-போர்-விமான-விவகாரம-3/

நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை

2 months ago
நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார். தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையினை சபை முதல் தினேஸ் குணவர்த்தன முன்வைத்திருந்தார். இதன்காரணமாக நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே தற்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-அம/ நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு(2ஆம் இணைப்பு) நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர் பீச்சும் வாகனம் என்பன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஹிந்த மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-அம/

நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை

2 months ago
நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை
Screenshot-15-720x450.png

நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார்.

தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையினை சபை முதல் தினேஸ் குணவர்த்தன முன்வைத்திருந்தார்.

இதன்காரணமாக நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே தற்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-அம/

நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு(2ஆம் இணைப்பு)

நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர் பீச்சும் வாகனம் என்பன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஹிந்த மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

 

http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-அம/

வடிவேல், வசந்த மீண்டும் ஐ.தே. கவுக்கு தாவினர்

2 months ago

வடிவேல், வசந்த மீண்டும் ஐ.தே. கவுக்கு தாவினர்

Editorial / 2018 நவம்பர் 14 புதன்கிழமை, மு.ப. 11:17

 

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள,  வசந்த சேனாநாயக்க  அறிவித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதுடன்,  வடிவேல் சுரேஸும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலா அமைச்சராக புதிய அமைச்சரவையில் பதியேற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க  தமது அமைச்சுப் பதவியிலிலிருந்து விலகுவதாகவும், இதுதொடர்பில் , இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடிவேல்-வசந்த-மீண்டும்-ஐ-தே-கவுக்கு-தாவினர்/175-225216

பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

2 months ago
ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் உறுதி செய்தார் சம்மந்தன் ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி செய்துள்ளார்.இதேவேளை ஐக்கியதேசியகட்சியின் அஜித்பெரேரா லக்ஸ்மன் கிரியல்லவும் இதனை உறுதிசெய்துள்ளனர்.இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஜேவிபியினால்-கொண்டுவரப்/

காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு

2 months ago
காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது. அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார். இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது. விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காஸா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகிதோடு. 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் பலியானதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதல் காரணமாக காஸா மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காஸாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/44452

காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு

2 months ago
காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட்  குண்டுவீச்சு  

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

gasa.jpg

பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது.

அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார்.

இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா மீது சரமாரியாக குண்டுவீசி தாக்கியது. விண்ணில் பறந்து சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் காஸா மீது பறந்து 70 நிலைகள் மீது குண்டு வீசியது.

இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகிதோடு. 2 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் பலியானதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதல் காரணமாக காஸா மற்றும் தென் இஸ்ரேல் பகுதியில் கரும் புகை எழுந்த வண்ணம் உள்ளது. இஸ்ரேல் பகுதியில் வாழும் மக்கள் வெடிகுண்டு பாதுகாப்பு மையங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கெட் வீச்சில் இஸ்ரேலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அதே போன்று பாலஸ்தீனத்தின் காஸாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

http://www.virakesari.lk/article/44452

 

 

பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

2 months ago
பாராளுமன்றில் பெரும்பான்மையை இழந்தது மஹிந்த அரசு - சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.

parimend.jpg

karu.jpg

பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர்  அறிவித்த சபாநய அறிவித்தார்.

இந்நிலையில், நாளை கூடும் பாராளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/44450

 

பெரும்பான்மை அரசாங்கம் இல்லை – நம்பிக்கையின்மைக்கு இடையூறு – பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

2 months ago
பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு ! Published by R. Kalaichelvan on 2018-11-14 10:40:16 நாளை காலை 10 மணிவரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் யாவற்றையும் சபாநாயகர் கருஜயசூரிய ஒத்திவைத்துள்ளார். Page 2 of 2 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுந்தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணின் தலைவர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார். மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சட்டவிரோதமானதுடன் அதனை பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஓரிரு தினங்களின் பின்புதான் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் எனவும் ஆளும் தரப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்த்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/44448

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

2 months ago
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் November 14, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது. இதேவேளை முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணிக்கும் இந்தப் போட்டிய முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/103233/

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

2 months ago
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

November 14, 2018

 

இலங்கை மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வெல்வதில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது.

இதேவேளை முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணிக்கும் இந்தப் போட்டிய முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/103233/