உலகத்தில்அமைதி ஏற்பட்டால் அமெரிக்கா ஐரோப்பா எப்படியாம் பிழைத்துக் கொள்வது? வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் உலகத்தில் ஏதாவது யுத்தம் நடந்ததா? இல்லை என்று தான் எண்ணுகிறேன். அரபு நாடுகளை பொறுத்தவரை வாகனம் உள்ளது. ஆனால் ஓட்டத் தெரியாது.
😂 விளங்கியது. இன்று இவரின் காணொளி ஒன்று அனுப்பினார்கள். விஜய் தனது மாகாநாட்டில் ஏன் ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை என்பது அது. விஜய் அப்படி பேசுவார் என்று இவர் எப்படி எதிர்பார்த்தார்! காணொளியை அப்படியே நீக்கிவிட்டேன்.
நான் இந்த படத்தை ரசித்ததை விட இயற்கையின் அற்புதத்தை வியந்து இரசித்தேன். பனம் குருத்து பனை ஓலையாகி காவோலையாக விழும் மட்டும் தான் தூக்கணாங்குருவியின் வாழ்காலம். இவ்வளவு நுண்ணியமாக கூடு கட்டி தன் சந்ததியை பெருக்கி விட்டு காவோலை விழ அதன் வாழ்க்கையும் அஃதே.
வளர்ந்த நாடுகளில் ஒரு சர்வதேச நிகழ்வு வருகின்றது என்றால் ஒரு பிரபல்யமில்லாத அல்லது பின் தங்கிய இடங்களை தேர்வு செய்வார்கள்.அதன் பின் சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்து அந்த இடத்தை முன்னேற்றுவார்கள். ஆனால் இது இலங்கை அரசியலுக்கு சரி வருமா என தெரியவில்லை.மகிந்த கட்டின விமானநிலையம் நெல்லு காயப்போட லாய்க்கு இல்லை என எங்கேயோ வாசித்த ஞாபகம்.😂
இலங்கையில் இந்திய வாகனங்களை விரும்பி வாங்குவது இல்லையாம் அவர்கள் விரும்பி வாங்குவது ரொயோட்டா யாறிஸ் சுசுகி Wagon R போன்ற யப்பான் வாகனங்களை அப்படி இருக்க இலங்கை வாகன விபத்துக்களுக்கு காரணமாக இந்திய வாகனங்களை கட்டுரரையாளர் கொண்டுவந்திருக்க வேண்டியது இல்லை
அமெரிக்காவை மீறி எதையும் செய்ய வலிமை உள்ள ஐரோப்பாவிற்கே தைரியம் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் நல்ல சாட்சி. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ந்த அரபுநாடுகள் எப்படி மேற்குலகின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் அஜாரகங்களை எதிர்ப்பார்கள்?எண்ணைக் குழாய்களில் அடைப்பு வந்தால் கூட அந்த அடைப்பை எடுக்க அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே தேவை. நிலமை இப்படி இருக்க....? ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.
ரணிலுக்கு இருக்கும் வருத்தங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறது?பல ஆண்டுகளாக இருக்கிறதா?அல்லது கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னரா? பல ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் எப்படி ஜனாதிபதியாகப் பதவியில் இருந்தார்?மீண்டும் எப்படி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்.இந்த வருத்தங்களுடன் ரணிலை நாளை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொன்னால் ரணில் ஏற்றுக் கொள்வாரா?அல்லதுசகவீனத்தைக் காரணம் காட்டி மறுப்பாரா?மேலும் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவ சிகிச்சையெப் பெறுவதற்கு என்ன தயக்கம்?
உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆக்கிரமிப்பு என்பதன் அர்த்தம் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். ஆனால் பிராந்திய அரசியல் என ஒன்று வரும்போது அதன் வடிவங்களும் அர்த்தங்களும் வேறுபடும். எம்மவர்கள் பலர் இன்றும் ஹிந்தியாவை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஏன்?
ஏதோ பழி தீர்க்கும் படலமாகவே எனக்கு தெரிகின்றது. எதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே அதுதானே. தமிழர் பிரச்சனையை தீர்க்க வந்த வெள்ளைப்புறா 2009ன் பின்னர் ஏன் தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கின்றது? இப்போது சிங்களவர்களின் பிரச்சனையை தீர்க்கப்போகுகின்றதா? அது வெள்ளைப்புறா அல்ல வெள்ளை நரி.
அரசியல் திருடர்கள் தங்களுள் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இந்த வெள்ளைநரியும் கூட்டென்பது வெட்கத்திற்கரியது. ஆனால் இவர்கள் வெட்கப்படுவார்களா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி