Aggregator

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
வெளியானது அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகள் புதிய இணைப்பு அம்பாந்தோட்டை மாவட்டம் (Hambantota) அம்பாந்தோட்டை மாநகர சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,750 வாக்குகள் - 8 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,874 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி - 1,511 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,279 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சர்வஜன அதிகாரம் (SB)- 816 வாக்குகள் - 1 உறுப்பினர் முதலாம் இணைப்பு அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை நகர வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP)- 2260 வாக்குகள் - 9 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1397 வாக்குகள் - 5 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 795 வாக்குகள் - 3 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 ஆசனங்கள் சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 ஆசனங்கள் https://ibctamil.com/article/local-government-election-result-2025-hambantota-1746537981

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
இந்த மூவரும் மாத்தி மாத்தி தொப்பியை போட்டுக்கொண்டிருக்கினம். இன்னும் கொஞ்ச நேரத்தில சுதர்சன் மாட்டுவார் என்று நினைக்கிறேன். அதிக ஓட்டங்கள் பெற்ற முதல் ஆறுபேரில் நால்வர் இன்று விளையாடுகிறார்கள். பட்லர் இன்று மேலே வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. தரமான போட்டி.

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு!

2 months ago
05 MAY, 2025 | 02:18 PM இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் பறந்து செல்லக்கூடிய ஆகாய கப்பலை செலுத்துவது தொடர்பான பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்த ஆகாய கப்பலானது கண்காணிப்பு கருவியை வானில் சுமார் 17 கி.மீ. தூரம் உயரம் வரை எடுத்துச் செல்லும். இந்த கண்காணிப்பு கருவியில் பொருத்தப்பட்ட சென்சார்கள் மூலம் பெறப்படும் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்பட்டு கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கு பயன்படுத்தப்படும். இந்த ஆகாய கப்பலை கடந்த சனிக்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியாபூரில் பறக்கவிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) பரிசோதனை செய்தது. இதன்போது இந்த ஆகாய கப்பல் 62 நிமிடங்கள் பறந்தது. அவ்வேளை ஆகாய கப்பலின் ஆழுத்தம், கப்பலை அவசரமாக தரையிறக்குவதற்கான நடைமுறைகள் போன்ற விடயங்களை பரிசோதனைக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆகாய கப்பல் மாதிரியின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் இது இந்தியாவின் மிக முக்கியமான சாதனை எனவும் டிஆர்டிஓ தலைவர் சமிர் வி.காமத் தெரிவித்தார். இதுபோன்ற ஆகாய கப்பல் தொழில்நுட்பமானது உலகில் சில நாடுகளில் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆகாய கப்பலை இந்தியா உருவாக்கி, அதை செலுத்துவதற்கான பரிசோதனை முறைகளையும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. https://www.virakesari.lk/article/213721

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago
முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, முல்லைத் தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி -1364 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 990 வாக்குகள் - 03 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 607 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகள் - 02 உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : முல்லைத்தீவு மாவட்டம் : மாந்தை கிழக்கு பிரதேச சபை | Virakesari.lk

குழந்தையை சாகும் வரை பட்டினி போட்ட பெற்றோர்

2 months ago
உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘சந்தாரா’ என்ற சமண சடங்கை சபதம் செய்த உலகின் இளைய நபர் வியானா என்று ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதால் இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும், கடந்த மார்ச் மாதம் நிலைமை மோசமடைந்துள்ளது. மருத்துவ ரீதியிலான முயற்சி தோல்வி அடைந்ததால், ஆன்மிக தலைவரின் ஆலோசனையைக் கேட்டு சந்தாராவில் ஈடுபடுத்தியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். சமண மதத்தில் சந்தாரா அல்லது சல்லேகானா அல்லது சமாதி மாறன் என்ற வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இது உணவு மற்றும் தண்ணீரை படிப்படியாக கைவிடுவதன் மூலம் தாமாக முன்வந்து இறப்பதற்கான ஒரு மத சபதம் ஆகும். இது ஆன்மாவை சுத்திகரிக்கும் ஒரு வழியாக கருதுகின்றனர். இந்த வழக்கம் ஒரு வகையான தற்கொலை என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனாலும், இந்த வழக்கத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, வியானாவின் பெற்றோர் அல்லது ஆன்மிக தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317527

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
குஜராத்தின் எல்லா பந்தாளர்களுக்கும் தலா ஒரு விக்கட். ஆர் போட்டாலும் விக்கட் விழுது. ரசித்கானுக்கு இந்தத் தொடரில் அதிகமா விக்கட்டுகள் விளேல. அதுக்காக அவரின் திறமையை குறைத்து மதிப்பிடலாமா. இன்று இருமுறை DRS க்குப் போனார். இரு முறையும் அதில் மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. கவாஸ்கர் சொல்லுறார் ரசீத் தனக்கு விக்கட் வேணும் என்டு DRS கேக்கிறார் என்று. என்ன கதை இது. வீரர்கள் அப்பிடியா இருப்பினம். அதுவும் முன்னால் வீரருக்கு இது புரியாதா. இப்பிடி ஏதேன் அடிச்சு விடுறது. அவரும் வர வர இப்பிடி ஏதாவது சொல்லிவிட்டுப் போயிடுவார்.

ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள்

2 months ago
வியட்நாம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பினார் 06 MAY, 2025 | 05:17 PM வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து வியட்நாம் அரச பிரதானிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். மேலும், ஜனாதிபதி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமுடனும் (To Lam) கலந்துரையாடினார். கடந்த 55 ஆண்டுகளாக உயர்ந்த அரசியல் நம்பிக்கை, நெருக்கமான மக்கள் உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சியை இரு நாடுகளும் இதன்போது வலியுறுத்தின. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும், வலுவான ஒத்துழைப்பையும் எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தியில் இன்னும் வலுவாகப் பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். மேலும், ஜனாதிபதி வியட்நாம் போர் வீரர்கள் நினைவிடம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவரும் சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் அவர்களின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விங்குரூப் (Vingroup), சன் குழுமம் (Sun group), எப். பி. டி. கூட்டுத்தாபனம் (FPT Corporation), சொவிகொ (SOVICO) குழுமம் ரொக்ஸ் (ROX) குழுமம் ஆகிய வியட்நாமில் உள்ள பாரிய அளவிலான தொழிலதிபர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரையின் புதிய போதி மதிலையும் திறந்து வைத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பௌத்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சிறப்புரையாற்றினார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் இணைந்தார். https://www.virakesari.lk/article/213821

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025

2 months ago

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; முதலாவது தேர்தல் முடிவுகள் - தங்காலை நகர சபை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,260 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 795 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 265 வாக்குகள் - 1 உறுப்பினர்

சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் - 1 உறுப்பினர்


உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; முதலாவது தேர்தல் முடிவுகள் - தங்காலை நகர சபை | Virakesari.lk

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
மிச்சேல் ஸ்டாக் பந்து போடாம முடிவே பண்ணீட்டீங்களா. 😄 இன்றைக்கு ஆர் வென்றாலும் மகிழ்ச்சி. போட்டி ஒருபக்கச் சார்பில்லாம, விறுவிறுப்பாய் இருந்தால் நன்றாயிருக்கும்.

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

2 months ago
இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி

அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்

2 months ago
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிஞர் அம்பிகைபாகர்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை. ரெட்டிப்பு சந்தோசம். ❤️

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு வருகை

2 months ago
அய் …….. டாலர் வரப் போகுது. 😂 தமிழ்ப் பகுதியில் இன்னும்….. நாலு விகாரை கட்டுறம், பிரித் ஓதுறம், பால் சோறு தின்னுறம். 🤣

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago
ஆம். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து, மேலே இருப்பதும் உங்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பது போல😎! மிக அண்மைய உதாரணமாக, தமிழர் நலனில் நீண்டகால அடிப்படையிலான அக்கறை 2002 சமாதான முயற்சியில் தமிழர் தரப்பில் இருந்து வெளிப்படவில்லை என்பதைப் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களே உறுதி செய்திருக்கின்றன. ஜப்பானுக்குப் போகாமல் விட்டது முதல், மாவிலாற்றை மறித்தது வரையில் இவை எல்லாவற்றையும் பல இடங்களில் எழுதியாகி விட்டது. தலையை மண்ணுக்குள் புதைத்த படி "சே, இவையள் புலி வெறுப்பில் சொல்லுகீனம்" என்பதையும் பல இடங்களில் வாசித்த படி தான் இருக்கிறோம்.