Aggregator

ஹிட்லர் தனது நாட்டுக்கு செய்த நன்மைகள் பல.

2 months ago
மேற்குலகம் தன்நலன் கருதியே மத்தியகிழக்கு மத்தியில் யூதர்களுக்கு நாடு உருவாக்கி பரிபாலிக்கின்றது என பல பாரசீகக்காரர்கள் கூறுகின்றார்கள்.

நீண்டகால குடியிருப்பு விசா; விதிமுறைகளை தளர்த்த அரபு நாடுகள் முடிவு

2 months ago
வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது. அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது. இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/uae-offer-lond-term-residency-visa-for-foreign-workers-118091800026_1.html

நீண்டகால குடியிருப்பு விசா; விதிமுறைகளை தளர்த்த அரபு நாடுகள் முடிவு

2 months ago

UAE

வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளது.

 அரபு எமிரேட்ஸ் நாடுகள் வெளிநாட்டினரை ஈர்க்க தங்களது விசா முறையில் பல்வேறு விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. அண்மையில் குறுகிய கால விசிட்டிங் விசாவை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த விசா சுற்றுலா செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோன்று தற்போது வெளிநாட்டினர் பணி ஓய்வுக்கு பிறகும் அங்கே வசிக்க நீண்டகால குடியிருப்பு விசா வழங்க முடிவு செய்துள்ளது.
 
இது 2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கத்தார் நாடு குறிப்பிட்ட வெளிநாட்டினருக்கு நிலையான குடியுரிமை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/uae-offer-lond-term-residency-visa-for-foreign-workers-118091800026_1.html

விடுதலை புலிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவே ஆயுதங்களை வைத்திருந்தோம்|

2 months ago
வவுனியாவில் பணத்துக்கு செய்த கொலைகள் எத்தனை ? சுவிஸ் பாங்கில் உள்ள பணம் எத்தனை? சொந்த இனத்தை சுரண்ட மனித வடிவில் பிறந்த உண்ணி

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

2 months ago
இந்த படத்தை கடந்த வருடமே நான் பார்த்துவிட்ட்டேன் பெரும்பாலும் இந்திய றோவின் முதலீட்டில் ஒரு வித்தியாசமான பரப்புரை. பார்ப்பானின் தமிழ் அழிப்பு அகோரம் என்பது எவ்ளவு தலைவிரித்து ஆடுகின்றது என்று சிந்திக்க கூடிய தமிழர்கள் மிக மிக அரிது. சீமானோ .... கோமானோ .... யாரும் தவறு செய்தால்கூட அதை அவர்களிடமே அணுகி அதை திருத்தி ஒரு நல் பாதையில் செல்லவேண்டும் தமிழன் தலைநிமிர வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களை விரல் விட்டு எண்ணலாம் இழிவு எழுதி பிழைப்பை பார்க்கும் தமிழன்தான் யாழ் களத்திலேயே மிகுதி. புலிகள் முற்றாக அழிந்து போனாலும் .... அவர்கள் இன்னமும் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறார்கள் தமிழனை மீண்டும் மீண்டும் ஒருவருடன் ஒருவரை மோதவிடுவதில் கவனமாக இருக்கிறார்கள். இந்த இன துரோகி முன்வைக்கும் முக்கிய பழிகள் மிகவும் வேடிக்கையானது. 1) புலிகள் ஆயுத போரை வெகு விரைவாக முன்னெடுத்துதானாம் சிங்கள இராணுவம் பல அட்டுழியங்களை செய்ய காரணமாக இருந்ததாம் ( எஜமான விசுவாசம்) இதுக்கு தான் ஆயுத குழுக்களுடன் இணைந்து ஆயுத போர் செய்ய கொழும்பில் இருந்து போனாராம் அப்ப ஆயுதம் தூக்கி காக்க சுடாவா போனவர்?? 2) மற்ற இயக்கங்கள் புலிகள் மீது மெல்லிய தாக்குதல்களைத்தான் செய்தார்களாம் ஆரம்பத்தில். கோபம் கொண்ட புலிகள் எல்லோரையும் துரோகிகள் ஆக்கினார்களாம் .... அது புலிகளின் பிழை? செல்வியை வசதி கிடைத்து இருந்தால் நானே கோடாரியால் அடித்து கொன்று இருப்பேன் புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் .... ஒன்று பெண் என்பதால் ... இரண்டு பல்கலைக்கழக மாணவி என்பதால் ....... இதுதான் அவாவுக்கும் சூடு ஏறினது. தான் பல்கலைக்கழக மாணவி என்பதால் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றுதான் ஆடிக்கொண்டு இருந்தவா. ஏன் கொண்டுபோனார்கள் என்பதை முதன் முதலாக ஒரு தமிழ் இன துரோகி வாயிலாக கேட்க முடிகிறது. இவர் 1985-86ற்கு பின் யாழில் இருந்திருக்க வாய்ப்பில்லை காரணம் அதன் பின் வரும் கதை எல்லாம் திரிப்பும் துரோகிகளின் பரப்புரையும்தான். அதன் முந்தைய கதைகளின் உண்மை தன்மை பற்றி அறிய எனக்கு அப்போது அறிவு இருக்கவில்லை. சைக்கோவா இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறன்

மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?

2 months ago
மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா? எம்.எஸ்.எம். ஐயூப் / இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார். ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெருக்கமாகப் பழகி வருபவர், சுப்ரமணியன்சுவாமியே ஆவார். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலை புலிகள், இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதற்காக, மஹிந்தவைப் பெரிதும் பாராட்டுபவர் அவர். அதற்காக மஹிந்தவுக்கு, இந்தியாவின் அதியுயர் சிவிலியன் விருதான, ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் எனக் கூறி வருபவர் இவராவார். இந்திய அரசாங்கம் தான், அண்மையில் சுவாமியை, இலங்கைக்கு அனுப்பியதோ தெரியாது. மஹிந்தவின் சகோதரர் ஒருவர், கடந்த மாதம் இறந்த போது, அதற்காக மஹிந்தவுக்கு அனுதாபம் தெரிவிக்க, இலங்கைக்கு வந்த சுவாமியை, இந்திய அரசாங்கம் பாவித்ததோ தெரியாது. எவ்வாறாயினும், இலங்கைக்கு வந்த சுவாமி, இந்திய விஜயமொன்றுக்காக, மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்துச் சென்றார். அந்த விஜயத்தின் போது, புதுடெல்லியில், இலங்கை - இந்திய உறவைப் பற்றிய பகிரங்க உரையொன்றுக்கும், மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்தார். அந்த விஜயம், சற்று வித்தியாசமானதாகவே தெரிந்தது. புதுடெல்லியில், மஹிந்த நன்றாக வரவேற்கப்பட்டார். அவர், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துவிட்டு, நாடு திரும்பினார். மஹிந்தவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த முறுகல் நிலை, போய்விட்டது போன்றதொரு நிலைமை இப்போது உருவாகியுள்ளது. மஹிந்தவுடனான தமது நெருங்கிய உறவை விளக்கும் சுவாமி, அதற்குக் காரணம், இந்தியாவின் எதிரியான புலிகளை, மஹிந்த அழித்தமையே எனக் கூறியுள்ளார். சுவாமி, கடுமையாக புலிகளை வெறுப்பவர். ராஜீவ் காந்தி கொலைக்காகச் சிறைக்குச் சென்றவர்கள், 27 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கூடாது எனக் கூறுபவர். அது மட்டுமல்லாது, ராஜீவ் காந்தி கொலைக்காக, சிறையில் உள்ளவர்கள் மீது, தாம் வெறுப்புக் கொள்ளவில்லை என்று கூறியதற்காக, ராஜீவின் மகன் ராஹூலையும் மகள் பிரியங்காவையும் கண்டித்தவர். அக்கொலைக்காகச் சிறை வாசம் இருக்கும் நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தமையை விமர்சிப்பவர். நளினியின் மகளுக்கு, இலண்டனில் கல்வி கற்க, வசதி செய்து கொடுத்தமையை விமர்சித்தவர். இவ்வாறு, சுவாமியின் புலி எதிர்ப்பை, பட்டியல் போட்டுக் காட்டலாம். எனவே, இலங்கைப் பாதுகாப்புப் படைகள், புலிகளைத் தோற்கடித்து, புலிகளின் தலைவர்களை அழித்த போது, நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவை, சுவாமி நேசிப்பதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மஹிந்தவுடனான சுவாமியின் உறவை, இந்தியா பாவிக்கிறது போல் தான் தெரிகிறது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும், மஹிந்தவுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை, தமது தேர்தல் தேவைகளுக்காகப் பாவிக்கும், தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குவாரத்தின் காரணமாக, இந்திய அரசாங்கம், இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், ஜனாதிபதி மஹிந்தவிடம் பல விடயங்களை எதிர்பார்த்தது. ஆனால், மஹிந்த தட்டிக் கழித்தே வந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுக் செயலாளர் சிவ் சங்கர் மேனனிடம், “13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பாலும் சென்று, தமிழர்களுக்குச் சலுகைகளை வழங்கத் தயார்” என மஹிந்த கூறினார். பின்னர், அவ்வாறு தாம், மேனனுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது, இந்தியத் தலைவர்களை வெகுவாகச் சீண்டும் செயலாக அமைந்தது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக, சில சிங்களப் பௌத்த தீவிரவாதக் குழுக்கள் செய்து வந்த குற்றச் செயல்களை, மஹிந்த அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்துவிட்டது. அதன் விளைவாக, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்து, அவரது அணியினர் கடந்த பொதுத் தேர்தலிலும் தோல்வியடைந்தனர். மஹிந்த அதற்கு இந்திய அரசாங்கத்தையே குறை கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் வெளியிடப்படும் ‘தி ஹிந்து’ பத்திரிகை நடத்திய நேர்காணல் ஒன்றின் போது, இலங்கையின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, தம்மை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறச் செய்தது, இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான ‘ரோ’ அமைப்பே என, மஹிந்த கூறியிருந்தார். ஒரு நாட்டின் உள்விவகாரங்களில், மற்றொரு நாட்டின் உளவுப் பிரிவொன்று தலையிட்டதாகக் கூறுவது, பாரதூரமான குற்றச்சாட்டாகும். இந்தியா இந்தக் குற்றச்சாட்டை, அதுவும் இந்தியப் பத்திரிகை ஒன்றிடம் கூறிய கருத்தை, சாதாரணமாகக் கருதியிருக்காது. அதன் பின்னர், கடந்த வருடம் இந்தியப் பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையிலேயே, மஹிந்த அணியினரின் மே தினக் கூட்டம், காலி முகத்திடலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மஹிந்த மேடையில் இருக்கும் போதே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்தியப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, கறுப்புக் கொடி காட்டுமாறு, குழுமியிருந்த மக்களைக் கேட்டுக் கொண்டார். இதுவும் நிச்சயமாக இந்தியாவை ஆத்திரமூட்டியிருக்கும். அதேவேளை, மஹிந்த, தனது பதவிக் காலத்தில், சீனாவின் பக்கம் வெகுவாகச் சாய்ந்தார். மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், துறைமுக நகரம் போன்ற பாரிய திட்டங்கள் அனைத்துக்கும், சீனாவிடமே கடன் பெற்று, அவற்றின் கட்டுமானப் பணிகளும் சீனாவுக்கே வழங்கப்பட்டன. போதாக்குறைக்கு, மஹிந்தவின் காலத்தில், அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, தரித்து நின்று சென்றது. இந்திய அரசாங்கம், அப்போது இதைப் பாரதூரமான விடயமாக நோக்கியது. அண்மையில், மஹிந்த இந்தியாவுக்குச் சென்றபோது, ‘ஹிந்து’ பத்திரிகையின் சார்பில், அவரைப் பேட்டி கண்டவர்கள், அதைப் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். பேட்டி கண்ட இருவரில் ஒருவரான சுஹாசினி ஹைதர், சுப்ரமணியன்சுவாமியின் இளைய மகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் இந்திய மத்திய அரசாங்கத்தில், முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவரான சல்மான் ஹைதரின் மகனான நதீம் ஹைதரையே, சுஹாசினி திருமணம் செய்துள்ளார். எனவேதான், அவர் சுஹாசினி ஹைதரானார். எனினும், சுவாமி கடும் இந்துத்துவவாதி. எவ்வளவுக்கு என்றால், அவரது முஸ்லிம் எதிர்ப்பின் காரணமாக, ஹாவர்ட் பல்கலைகழகத்தில் செய்த தொழிலையும் 2011 ஆம் ஆண்டு இழக்க நேரிட்டது. மும்பையில் வெளியிடப்படும் இரண்டு பத்திரிகைகளில், வெளியான அவரது இரண்டு கட்டுரைகளே, ஹாவர்ட் பல்கலைகழகம் அவரை விரிவுரைகளில் இருந்து நிறுத்தக் காரணமாகியது. அந்தக் கட்டுரைகளில் அவர், இந்தியாவிலுள்ள நூற்றுக் கணக்கான பள்ளிவாசல்களை இடித்துத் தள்ள வேண்டும் என்றும் தமது மூதாதையர்கள் இந்துக்கள் என்று ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு மட்டுமே, இந்தியாவில் வாக்குரிமை வழங்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. சுப்ரமணியன்சுவாமி, எப்போதும் சர்ச்சைகளை விரும்புபவர் போலும். ஜே.ஆர். ஜெயவர்தன, இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தமிழீழக் கோரிக்கையை ஆதரித்துவந்தார். அதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும் ஆதரித்திருந்தார். பின்னர் அவர் மாறிவிட்டார். ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து, புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதற்கு ஒரு வருடத்துக்குப் பின்னரே, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அந்தத் தடையைக் கொண்டு வருவதிலும் சுவாமி பெரும் பங்காற்றினார். இப்போது அவர், புலிகளை அழித்தமைக்காக, மஹிந்தவுக்கு, இந்திய அரசாங்கம் ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை மட்டுமல்ல, 2011 ஆம் ஆண்டிலும் செய்தார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை செய்தபோது, தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள், அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தனர். எனவே, மஹிந்தவுடன் இந்திய அரசாங்கம், மீண்டும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை, தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வளவு விரும்ப மாட்டார்கள். அவ்வாறு இருக்கத் தான், தமிழ் நாட்டவரான சுவாமி, இரு தரப்பினருக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முன்வந்துள்ளார். அல்லது, இந்திய அரசாங்கம் அவரை அந்தப் பணிக்காக பாவிக்கிறது. இந்திய அரசாங்கம் பழையவற்றை மறந்து, ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, மஹிந்தவுடன் மீண்டும் உறவைப் பலப்படுத்திக் கொள்ள முற்படுவதாக இருந்தால், அதற்கான பிரதான கரணம், இலங்கையில் அரசியல் நிலைமை மாறி வருவதாகத் தென்படுவதேயாகும். கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, அது தெளிவாகக் காணப்பட்டது. அத்தேர்தல்களின் போது, தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி மன்றங்களில் 230 க்கு மேற்பட்ட சபைகளின் அதிகாரத்தை, மஹிந்த உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது. அத்தேர்தல்களின் போது, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45 சதவீதத்தையே மஹிந்த அணியினர் பெற்றனர். என்றாலும், தேர்தல் முறையிலுள்ள குழப்ப நிலை காரணமாக, மொத்த சபைகளில் 78 சதவீதத்தை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். வாக்குகளை விட, வெற்றி பெற்ற சபைகளின் எண்ணிக்கை எல்லோரது கண்ணிலும் படுவதால், மஹிந்த அணிக்கே நாட்டில் மக்கள் ஆதரவு இருப்பதாகப் பொதுவானதொரு மக்கள் அபிப்பிராயம் உருவாகியிருக்கிறது. அது இந்தியாவையும் ஆட்கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, அடுத்த ஆட்சியாளர்கள் என்றதொரு தோற்றம், மஹிந்த அணியினரிடம் தென்படுவதால், மஹிந்தவை அரவணைக்க இந்தியா முற்படுவதாக இருக்கலாம். அதேவேளை, மஹிந்தவுக்கும் இந்தியாவின் நட்புத் தேவையாக இருக்கிறது. ஏனெனில், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில், தமிழ் அரசியல் கட்சிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும், வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் இருக்கிறது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, இந்தியாவை பகைத்துக் கொள்வது பாதகமானது என மஹிந்த கருதுகிறார் போலும். எனவே தான், தமது அணியினரான விமல் வீரவன்ச, மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, மஹிந்த, நள்ளிரவில் சென்று மோடியைச் சந்தித்தார். மோடியிடமிருந்து அவருக்கு, அதற்கான அழைப்பேதும் இருக்கவில்லை. அவர், வீரவன்சவின் முகத்தில் அறைந்தாற்போல், தாமாக இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்தே மோடியைச் சந்தித்தார். அதன் பின்னர் தான், இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தோடு, இந்தியாவுக்கும் மஹிந்தவின் உறவு தேவைப்பட்டது. அத்தோடு, மஹிந்தவின் சகோதரர் சந்திரா ராஜபக்‌ஷ, கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த மரண வீட்டைப் பாவித்து, சுப்ரமணியன்சுவாமி இங்கே வந்து, அவரது இந்து மறுமலர்ச்சி அமைப்பான ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ சார்பில், மஹிந்தவுக்குப் புதுடெல்லியில், இலங்கை, இந்திய உறவைப் பற்றிய விரிவுரையொன்றுக்கு அழைப்பு விடுத்தார். அத்தோடு, மோடியைச் சந்திக்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. எனவே, இரு சாராருக்கும் இடையே வளர்ந்து வருவது காதல் என்று கூற முடியாது. இது, இலாப நட்டத்தைக் கருத்தில் கொண்ட, வியாபாரமாகவே கருத வேண்டியுள்ளது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்த-இந்தியா-உறவு-காதலா-வியாபாரமா/91-222118

மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?

2 months ago
மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா?
எம்.எஸ்.எம். ஐயூப் /

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார்.   

எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார்.  

ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெருக்கமாகப் பழகி வருபவர், சுப்ரமணியன்சுவாமியே ஆவார்.   

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலை புலிகள், இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதற்காக, மஹிந்தவைப் பெரிதும் பாராட்டுபவர் அவர். அதற்காக மஹிந்தவுக்கு, இந்தியாவின் அதியுயர் சிவிலியன் விருதான, ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் எனக் கூறி வருபவர் இவராவார்.   

இந்திய அரசாங்கம் தான், அண்மையில் சுவாமியை, இலங்கைக்கு அனுப்பியதோ தெரியாது. மஹிந்தவின் சகோதரர் ஒருவர், கடந்த மாதம் இறந்த போது, அதற்காக மஹிந்தவுக்கு அனுதாபம் தெரிவிக்க, இலங்கைக்கு வந்த சுவாமியை, இந்திய அரசாங்கம் பாவித்ததோ தெரியாது.   

எவ்வாறாயினும், இலங்கைக்கு வந்த சுவாமி, இந்திய விஜயமொன்றுக்காக, மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்துச் சென்றார். அந்த விஜயத்தின் போது, புதுடெல்லியில், இலங்கை - இந்திய உறவைப் பற்றிய பகிரங்க உரையொன்றுக்கும், மஹிந்தவுக்கு அழைப்பு விடுத்தார்.  

அந்த விஜயம், சற்று வித்தியாசமானதாகவே தெரிந்தது. புதுடெல்லியில், மஹிந்த நன்றாக வரவேற்கப்பட்டார். அவர், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துவிட்டு, நாடு திரும்பினார். மஹிந்தவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த முறுகல் நிலை, போய்விட்டது போன்றதொரு நிலைமை இப்போது உருவாகியுள்ளது.   

மஹிந்தவுடனான தமது நெருங்கிய உறவை விளக்கும் சுவாமி, அதற்குக் காரணம், இந்தியாவின் எதிரியான புலிகளை, மஹிந்த அழித்தமையே எனக் கூறியுள்ளார்.  

 சுவாமி, கடுமையாக புலிகளை வெறுப்பவர். ராஜீவ் காந்தி கொலைக்காகச் சிறைக்குச் சென்றவர்கள், 27 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்தும், அவர்களை விடுதலை செய்யக் கூடாது எனக் கூறுபவர்.   

அது மட்டுமல்லாது, ராஜீவ் காந்தி கொலைக்காக, சிறையில் உள்ளவர்கள் மீது, தாம் வெறுப்புக் கொள்ளவில்லை என்று கூறியதற்காக, ராஜீவின் மகன் ராஹூலையும் மகள் பிரியங்காவையும் கண்டித்தவர்.   

அக்கொலைக்காகச் சிறை வாசம் இருக்கும் நளினியின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தமையை விமர்சிப்பவர். நளினியின் மகளுக்கு, இலண்டனில் கல்வி கற்க, வசதி செய்து கொடுத்தமையை விமர்சித்தவர்.   

image_1d0440cc5f.jpg

இவ்வாறு, சுவாமியின் புலி எதிர்ப்பை, பட்டியல் போட்டுக் காட்டலாம். எனவே, இலங்கைப் பாதுகாப்புப் படைகள், புலிகளைத் தோற்கடித்து, புலிகளின் தலைவர்களை அழித்த போது, நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவை, சுவாமி நேசிப்பதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மஹிந்தவுடனான சுவாமியின் உறவை, இந்தியா பாவிக்கிறது போல் தான் தெரிகிறது.   

மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும், மஹிந்தவுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை, தமது தேர்தல் தேவைகளுக்காகப் பாவிக்கும், தமிழ் நாட்டுத் தலைவர்களின் நெருக்குவாரத்தின் காரணமாக, இந்திய அரசாங்கம், இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், ஜனாதிபதி மஹிந்தவிடம் பல விடயங்களை எதிர்பார்த்தது. ஆனால், மஹிந்த தட்டிக் கழித்தே வந்தார்.  

ஒரு சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுக் செயலாளர் சிவ் சங்கர் மேனனிடம், “13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பாலும் சென்று, தமிழர்களுக்குச் சலுகைகளை வழங்கத் தயார்” என மஹிந்த கூறினார். பின்னர், அவ்வாறு தாம், மேனனுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது, இந்தியத் தலைவர்களை வெகுவாகச் சீண்டும் செயலாக அமைந்தது.   

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக, சில சிங்களப் பௌத்த தீவிரவாதக் குழுக்கள் செய்து வந்த குற்றச் செயல்களை, மஹிந்த அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்துவிட்டது. அதன் விளைவாக, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்து, அவரது அணியினர் கடந்த பொதுத் தேர்தலிலும் தோல்வியடைந்தனர். மஹிந்த அதற்கு இந்திய அரசாங்கத்தையே குறை கூறியிருந்தார்.   

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் வெளியிடப்படும் ‘தி ஹிந்து’ பத்திரிகை நடத்திய நேர்காணல் ஒன்றின் போது, இலங்கையின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, தம்மை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறச் செய்தது, இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான ‘ரோ’ அமைப்பே என, மஹிந்த கூறியிருந்தார்.   

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில், மற்றொரு நாட்டின் உளவுப் பிரிவொன்று தலையிட்டதாகக் கூறுவது, பாரதூரமான குற்றச்சாட்டாகும். இந்தியா இந்தக் குற்றச்சாட்டை, அதுவும் இந்தியப் பத்திரிகை ஒன்றிடம் கூறிய கருத்தை, சாதாரணமாகக் கருதியிருக்காது.  

அதன் பின்னர், கடந்த வருடம் இந்தியப் பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையிலேயே, மஹிந்த அணியினரின் மே தினக் கூட்டம், காலி முகத்திடலில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், மஹிந்த மேடையில் இருக்கும் போதே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்தியப் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, கறுப்புக் கொடி காட்டுமாறு, குழுமியிருந்த மக்களைக் கேட்டுக் கொண்டார். இதுவும் நிச்சயமாக இந்தியாவை ஆத்திரமூட்டியிருக்கும்.  

அதேவேளை, மஹிந்த, தனது பதவிக் காலத்தில், சீனாவின் பக்கம் வெகுவாகச் சாய்ந்தார். மத்தல விமான நிலையம், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், துறைமுக நகரம் போன்ற பாரிய திட்டங்கள் அனைத்துக்கும், சீனாவிடமே கடன் பெற்று, அவற்றின் கட்டுமானப் பணிகளும் சீனாவுக்கே வழங்கப்பட்டன.   

போதாக்குறைக்கு, மஹிந்தவின் காலத்தில், அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, தரித்து நின்று சென்றது.   

இந்திய அரசாங்கம், அப்போது இதைப் பாரதூரமான விடயமாக நோக்கியது. அண்மையில், மஹிந்த இந்தியாவுக்குச் சென்றபோது, ‘ஹிந்து’ பத்திரிகையின் சார்பில், அவரைப் பேட்டி கண்டவர்கள், அதைப் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். பேட்டி கண்ட இருவரில் ஒருவரான சுஹாசினி ஹைதர், சுப்ரமணியன்சுவாமியின் இளைய மகள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.   

முன்னாள் இந்திய மத்திய அரசாங்கத்தில், முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவரான சல்மான் ஹைதரின் மகனான நதீம் ஹைதரையே, சுஹாசினி திருமணம் செய்துள்ளார். எனவேதான், அவர் சுஹாசினி ஹைதரானார்.  

எனினும், சுவாமி கடும் இந்துத்துவவாதி. எவ்வளவுக்கு என்றால், அவரது முஸ்லிம் எதிர்ப்பின் காரணமாக, ஹாவர்ட் பல்கலைகழகத்தில் செய்த தொழிலையும் 2011 ஆம் ஆண்டு இழக்க நேரிட்டது.   
மும்பையில் வெளியிடப்படும் இரண்டு பத்திரிகைகளில், வெளியான அவரது இரண்டு கட்டுரைகளே, ஹாவர்ட் பல்கலைகழகம் அவரை விரிவுரைகளில் இருந்து நிறுத்தக் காரணமாகியது.   

அந்தக் கட்டுரைகளில் அவர், இந்தியாவிலுள்ள நூற்றுக் கணக்கான பள்ளிவாசல்களை இடித்துத் தள்ள வேண்டும் என்றும் தமது மூதாதையர்கள் இந்துக்கள் என்று ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு மட்டுமே, இந்தியாவில் வாக்குரிமை வழங்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.  

சுப்ரமணியன்சுவாமி, எப்போதும் சர்ச்சைகளை விரும்புபவர் போலும். ஜே.ஆர். ஜெயவர்தன, இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தமிழீழக் கோரிக்கையை ஆதரித்துவந்தார். அதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பையும் ஆதரித்திருந்தார்.

பின்னர் அவர் மாறிவிட்டார். ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து, புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அதற்கு ஒரு வருடத்துக்குப் பின்னரே, புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அந்தத் தடையைக் கொண்டு வருவதிலும் சுவாமி பெரும் பங்காற்றினார்.   

இப்போது அவர், புலிகளை அழித்தமைக்காக, மஹிந்தவுக்கு, இந்திய அரசாங்கம் ‘பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை மட்டுமல்ல, 2011 ஆம் ஆண்டிலும் செய்தார். அவர், இந்தப் பரிந்துரையை இம்முறை  செய்தபோது, தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள், அதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டு இருந்தனர்.

 எனவே, மஹிந்தவுடன் இந்திய அரசாங்கம், மீண்டும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை, தமிழ் நாட்டுத் தலைவர்கள் அவ்வளவு விரும்ப மாட்டார்கள். அவ்வாறு இருக்கத் தான், தமிழ் நாட்டவரான சுவாமி, இரு தரப்பினருக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முன்வந்துள்ளார். அல்லது, இந்திய அரசாங்கம் அவரை அந்தப் பணிக்காக பாவிக்கிறது.   

இந்திய அரசாங்கம் பழையவற்றை மறந்து, ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, மஹிந்தவுடன் மீண்டும் உறவைப் பலப்படுத்திக் கொள்ள முற்படுவதாக இருந்தால், அதற்கான பிரதான கரணம், இலங்கையில் அரசியல் நிலைமை மாறி வருவதாகத் தென்படுவதேயாகும்.   

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, அது தெளிவாகக் காணப்பட்டது. அத்தேர்தல்களின் போது, தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி மன்றங்களில் 230 க்கு மேற்பட்ட சபைகளின் அதிகாரத்தை, மஹிந்த உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.   

அத்தேர்தல்களின் போது, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45 சதவீதத்தையே மஹிந்த அணியினர் பெற்றனர். என்றாலும், தேர்தல் முறையிலுள்ள குழப்ப நிலை காரணமாக, மொத்த சபைகளில் 78 சதவீதத்தை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.   

வாக்குகளை விட, வெற்றி பெற்ற சபைகளின் எண்ணிக்கை எல்லோரது கண்ணிலும் படுவதால், மஹிந்த அணிக்கே நாட்டில் மக்கள் ஆதரவு இருப்பதாகப் பொதுவானதொரு மக்கள் அபிப்பிராயம் உருவாகியிருக்கிறது. அது இந்தியாவையும் ஆட்கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.   

எனவே, அடுத்த ஆட்சியாளர்கள் என்றதொரு தோற்றம், மஹிந்த அணியினரிடம் தென்படுவதால், மஹிந்தவை அரவணைக்க இந்தியா முற்படுவதாக இருக்கலாம்.  

அதேவேளை, மஹிந்தவுக்கும் இந்தியாவின் நட்புத் தேவையாக இருக்கிறது. ஏனெனில், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில், தமிழ் அரசியல் கட்சிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும், வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் இருக்கிறது.   

எனவே, எதிர்வரும் ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களின் போது, இந்தியாவை பகைத்துக் கொள்வது பாதகமானது என மஹிந்த கருதுகிறார் போலும்.   

எனவே தான், தமது அணியினரான விமல் வீரவன்ச, மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், கடந்த வருடம் இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, மஹிந்த, நள்ளிரவில் சென்று மோடியைச் சந்தித்தார். மோடியிடமிருந்து அவருக்கு, அதற்கான அழைப்பேதும் இருக்கவில்லை. அவர், வீரவன்சவின் முகத்தில் அறைந்தாற்போல், தாமாக இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்தே மோடியைச் சந்தித்தார்.   

அதன் பின்னர் தான், இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தோடு, இந்தியாவுக்கும் மஹிந்தவின் உறவு தேவைப்பட்டது.   

image_3227b6a9af.jpg

அத்தோடு, மஹிந்தவின் சகோதரர் சந்திரா ராஜபக்‌ஷ, கடந்த மாதம் உயிரிழந்தார். அந்த மரண வீட்டைப் பாவித்து, சுப்ரமணியன்சுவாமி இங்கே வந்து, அவரது இந்து மறுமலர்ச்சி அமைப்பான ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ சார்பில், மஹிந்தவுக்குப் புதுடெல்லியில், இலங்கை, இந்திய உறவைப் பற்றிய விரிவுரையொன்றுக்கு அழைப்பு விடுத்தார். அத்தோடு, மோடியைச் சந்திக்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.   

எனவே, இரு சாராருக்கும் இடையே வளர்ந்து வருவது காதல் என்று கூற முடியாது. இது, இலாப நட்டத்தைக் கருத்தில் கொண்ட, வியாபாரமாகவே கருத வேண்டியுள்ளது.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்த-இந்தியா-உறவு-காதலா-வியாபாரமா/91-222118

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

2 months ago
படம் வந்து ஒரு வருடமாகின்றது. மீண்டும் திரையிட இப்படியான பரபரப்பு வசனங்களை எடுத்துவிட்டால்தானே பலரது கவனத்தையும் பெறலாம். படத்திற்கு ஸ்பொன்ஸர் செய்தவர்கள் யாராம்?

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு

2 months ago
யாழ் நூலகத்தை எரித்த சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்காலத்து தலைமைப் பயங்கரவாதியின் படமும் இதில் இடம்பெற்றுள்ளது. தமிழ் நாட்டு மக்களின் புத்தக நன்கொடை பாராட்டுக்கு உரியது!

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம்

2 months ago
எஸ்.பி.திஸாநாயக்க போகிற போக்கில் சொன்னால் இராணுவம் பேசாமல் இருக்குமா? சரணடைந்தவர்களை ஏன் சரணடையாதவர்களைக் கூடக் கொல்லவில்லை என்றுதான் சொல்வார்கள்.

இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா :

2 months ago
தமிழின விரோத இந்திய அரச பிச்சைக்காரர்களிடம் மனோகணேசன் எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான்!

கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர்.

2 months ago
கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர். September 16, 2018 சிறப்புச் சிறுகதைகள் (11) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.அகஸ்தியர் எழுதிய ‘கடல் சிரித்தது’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது. ‘பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.’ ‘நாசமாய்ப் போக அவள்தான் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாள்.அதுதான் அவன் கடலில் விழுந்து செத்துப்போய்விட்டான்’. ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?’ ‘மாஞ்சோலை வேதசாட்சி கோயிலிலே போய்ப்பார் அப்போ தெரியும் பொய்யா, மெய்யா என்பது.’ கடற்கரைக் காற்றோடு அள்ளுப்பட்டு வந்த இந்த வார்த்தைகள் முத்துவின் தந்தை,கிழவன் கயித்தானுக்கு நன்றாகக் கேட்டன. ‘ஐயோ முத்து…..’ கிழவன் குரல் எடுத்துப்பலமாகக் கத்தினான். அவனுடைய கண்கள் அந்தக் கடலை வெறித்துப் பார்த்துச் சபித்தன. கடலையும் குடிசையையும் மாறி மாறிப் பார்த்துக் கடைசியில் கடல் மண்ணை அள்ளி எறிந்து திட்டி, ‘ஓ’ வென்று அழத கிழவன் மேலே பார்த்து, எதிலோலயித்தான். இருதயம் உருகியது, உருகிய அந்த இருதயத்திலே செத்துப்போன அவன் மகன்முத்துவும் அவன் கூட்டாளி மரியானும் பாசத்தின் சாயலில் தோன்றினார்கள். குமுறிப் பாயும் கடலலைகளைக் கிழித்துக்கொண்டு உலாஞ்சி உலாஞ்சித் தூக்கியெறியும் தோணியின் அணியம் முத்துவைத் தொட்டிற் குழந்தைபோல் ஆட்டியது. கருத்துத் திரண்டு வரும் மேகத் திவலைக் கூட்டங்கள் ‘சோ’ வென்று வெறிந்துச் சீறிப்பாயும் புயல் காற்றில் பட்டு மாய்ந்தன. கடல் உறுமியது, காற்றுப்பேயென அடித்துச் சீறியது. முத்து கோடாகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கூதல் தீரச் சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்துத் ‘தம் பிடித்து’ இழுத்தான். கொண்டல் மழை குடியைக் கெடுக்கும் என்பது அவனுக்குத் தெரியும். இப்போ அவன்மனம் கொண்டல். கரையோரம் தாவியது. ‘மேரி என்ன பாடோ……?’ அவன் அவளுக்காக மேலே பார்த்துச் செபித்தான். ‘ஐயோ தேவனே!’ மீண்டும் இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இரைந்து கொட்டும் சோனாவாரி மழை, தொடர்ந்து அலறல் காற்று…… ‘அண்ணே, பாயை இழக்கு’ முத்து பலமாகக் கத்தினான். ‘டேய், நீ ஆத்தான் கயித்தை விடடா’ கடையாலிலிருந்து மரியான் உத்தரவிட்டான். அந்த உத்தரவுக் குரல் முத்துவின் காதுகளுக்கு எட்டவில்லை. ‘மரியான் அண்ணே, என்ன சொன்னாய்?’ என்று குரல்எடுத்துக் கேட்டான். ‘சனியனே, ஆத்தான் கயித்தை அவிட்டு விடடா. தோணி கடலுக்குள் சரியப் போகுது.’ முத்து பயந்துபோனான், மரக்கோல்களையும் சவளையும் எடுத்து அடங்க வைத்துவிட்டு, மரியான் இன்னும் தன் உயிரை வாங்கப் பார்ப்பானோ என்று எண்ணிஏங்க அவனை வெறிதுப் பார்க்கிறான். ‘சோப்பேறிக் கழுதை இங்கே வாடா’ மரியான் கோபத்தோடு அழைத்தான். கரிய இருளில் அவன் முகபாவத்தைக் காண முடியவில்லை. ‘நீ கடையாலிலே இரு, நான் அணியத்திலே நிற்கிறேன். என்ன நடுக்குகிறாய்? கூதலா? பல்லைக் கடித்துக் கொண்டு கம்பைப் போடு. கூதல் பறக்கும். என்ன நான் சொன்னது கேட்டதா?’ இவ்வாறெல்லாம் சொன்னபின் மரியானுக்கு அவன் மீது இரக்கம் பிறந்துவிட்டது. மீண்டும் ‘ஊண்டித் தாங்கடா தம்பி. அந்தக் கொட்டிலிலே போய் நெருப்பு எரித்துக் கூதல் காய்வோம்’ என்றான். முத்துவிற்கு இப்போ உற்சாகம் கரைபுரண்டோடியது. பரவைக் கடலைத் தேடி அணியத்து முனையை வைத்துத் தாங்கினான். எனினும்மனைவி மேரியின் நினைவு வந்ததும், அவன் பலமிழந்து சோர்வடைந்து விட்டான். ‘அடைக்கல மாதாவே, வீட்டிலே மேரி குளிராலும் என்நினைவினாலும் ஏங்கிச்சாவாளே… அவளுக்கு நல்ல ஆறுதலைக் கொடு.’ அவன் மேலே பார்த்து மீண்டும் வேண்டிக்கொண்டான். மேரியை அவன் கைப்பிடித்து ஒரு ஆண்டு கழியவில்லை என்பது மரியானுக்குத் தெரியும்: கிண்டல் பண்ணினான். ‘பொன்னையா வீட்டிலே கட்டிப்பிடித்துக் கொண்டிருக்காமல் உழைச்சுக் கொட்டவந்திட்டியா? அங்கேயும் இங்கேயும் மனம் ஓடினால் தொழில் உருப்பட்ட மாதிரித்தான்.’ இதைக் கேட்டு முத்து தன்னை மறந்து சிரித்தான். அவள் கொடுக்கும் கொள்ளை இன்பத்தைப் புலன்களில் செலுத்திக் களித்தான், உடல்திரண்டது. கடல் ஒய்ந்தது. காற்று அடங்கியது. விடிவெள்ளி கிளம்பிவிட்டது. மேரி தவியாய்த் தவித்தாள். இன்னும் அவள் கல்யாணப் புதுப்பெண்தான். ஒரு பூவோ பிஞ்சோ பிடிக்காதது அவளுக்கு ஒரே மனக்குறை. அவனைக் கேட்பானேன். தன்னந் தனிமையில் அவள் அன்று இரவு மட்டும் சீறிய புயல் காற்றினால் அவனை எண்ணிப் பட்டபாடு…..அப்பப்பா….! அவன் இன்னும் வரவில்லை. அவள் நெஞ்சு இருண்டது. மனம் நிலைகொள்ளாது அலைந்தது. மேலே பார்த்து மேரி மாதாவை வேண்டிச் செபம் செய்தாள். வலையையும் பறியையும் தோளில் போட்டுக்கொண்டு குடிசை நோக்கி வந்துகொண்டிருந்த முத்துவைக் கண்ட மேரி அழுதாள். அவள் கண்கள் வீங்கிப் போயிருந்தன. ‘கடந்த இரவு அவள் என் உயிருக்குப் பயந்திருப்பாள். அதனால்தான் இந்த நிலைக்குஆளாகித் தவிக்கிறாள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா?’ என்பது அவன் அபிப்பிராயம். அதிலே அவனுக்கு ஒரு பெருமிதம். ‘நான்தான் வந்துவிட்டேனே, இன்னும் ஏன் அழுகிறாய்? கஞ்சி கிடந்தால் போய்க் கொண்டு வா, போ.’ வாழ்க்கைச் செலவு கோரி அரசாங்க ஊழியர்கள் செய்த வேலை நிறுத்தம், கறுப்புச்சந்தைக்காரர்களுக்கு யோகம் அடித்துவிட்டுது. சீனிக்கும் மாவுக்கும் தடடுப்பாடு, அவன் பனங்கட்டியையும் சுடு தேனீரையும் கொடுத்தாள். அவன் சுவைத்துக் குடித்தான். அவன் கன்னத்திலே ஒடடியிருந்த கடற்பாசி ஒன்றை அவள் தன் மெல்லிய விரல்களால் அழுத்திப் பரிவோடு எடுத்து அப்புறப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்து விட்டாள். அவன் கண்கள் அவளைக் கொஞ்சலாகப் பார்த்தன: அவள் சிரித்தாள். ‘ஏய் இப்படி வா’ அவன் அழைத்தான்: அவள் எழுந்தாள். ‘ராத்திரிப் பயந்திட்டியா?’ அன்பு வெறி அவன் கண்களை மயக்கியது. அவள் அட்டைபோல் சுருண்டு அவன்மடியில் கிடந்தாள். ‘நீ………!’ இறந்துபோய்க் கொண்டிருக்கும் ஜீவனுக்கு ஒரு பேச்சு வேறா? அவளால் பேச முடியவில்லை: அவனும்……..! இரவிரவாக் கடலில் மாய்ந்து நான்தான் விதியினால் மடிந்து சாகிறேனென்றால், அவளும் அதற்காகத் தனிமையில் இரவு முழுவதும் பயந்து சாவதா? என்ற ஒருஎண்ணம் அவனை வாட்டியது. ஒரு குழந்தை குட்டியாவது கிடைத்திருந்தால் கொஞ்சம் துணையாகக்கூட இருக்கும்…….. மேரியில் வைத்த உயிர் அன்பு, எப்படியெல்லாமோ சிந்திக்க வைத்தது. இப்போது அவனுக்குத் தன் சித்தப்பன் மகன்மீது மனம் போய்விட்டது. அவனும் சிறுபயல்தானே! தின்று கொழுத்துச் சும்மா திண்ணைக்கு மண் எடுப்பவன், அண்ணை பெண்சாதிக்குத் துணையாய் இருக்கட்டுமே! முத்து மறுநாளே மாணிக்கத்தின் சுதந்திரத்தில் மண்ணை போட்டுவிட்டான். திருவிழா, பேசும்படம், முச்சந்திச்சிரிப்பு ஆகியவைகளுக்கு மாணிக்கம் இனி முழுக்குப் போட வேண்டியதுதான். அதனால் ஆத்திரம்தான் என்றாலும் அண்ணன்சொல்லை எப்படித் தட்டுவது ஒப்புக்கொண்டான். அன்றும் கடல் கொந்தளித்தது. ஆனால் அவள் உள்ளமோ குதூகலித்தது. மூன்று வருடங்களாக இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ தடவைகள் நடந்தன. முத்து ஒரு அப்பாவி அவன் மனம் பேதலிக்கவில்லை. அன்றொரு நாள்…… காற்று விட்டுவிட்டு ‘வெருக்’ கென்று உதறித் தள்ளியது. மழைத்தூறல் ஓயவில்லை. மேகமண்டலத்தில் அலைகள் கருங்குருவிகள் போல் திரண்டுபடை படையாகப் பறந்தன. தோணியில் இடிந்துபோய் இருந்த முத்து மேரியை நினைத்துச் செபமாலை ஓதினான். மீண்டும் இடிமுழக்கம்…. கண்களைக் குருடாக்கும் திடீர் மின்னல். வாரிப்பொழியும்மழை, காற்று…. மீண்டும் தொடர்ந்து காற்று…. புயல்….! ‘தேவமாதாவே!’ அவன் மேரியை நினைத்துப் பலமாகக் கத்தினான். ‘என்னடா பயித்தியம்? ஆண்டவனிலே பழியைப் போட்டுக்கொண்டு தோணியைத் தள்ளித் தாங்கு.’ முத்துவிற்கு மரியான் தைரியம் கூறினான். ‘எனக்கு என்னண்ணை தெரியும் அவள் என்னை எண்ணிச் செத்துப்போவாளே?’ மரியான் சிரித்தான். ஊரிலே மேரியையும் மாணிக்கத்தையும் பற்றிப் பேசப்படுவதை மரியான் அறிந்து வைத்திருந்தான். ‘ஏண்டா முத்து, உன் பெண் புதிதா உன்னை நேசிக்கிறாவா? எப்ப தொடக்கம்?’ முத்து பரபரப்படைந்தான். எதிர்பாரத கேள்வியாதலால். ‘என்ன அண்ணே அது? என்ன கேட்டாய்?’ என்றான். ‘சரி சரி ஊண்டித் தள்ளித் தாங்கு’ என்றவாறு ஏதோ கூறிப் பேச்சை வேறு பக்கம்திருப்பினான் மரியான். எப்படியோ மூன்று கூடைகளும் இரண்டு பறிகளும் நிரம்ப மீனும் இறாலும் பிடித்து விட்ட சந்தோஷத்தில் முத்து தடுமாறினான். முத்து வலையையும் பறியையும் மாட்டித் தோளில் போட்டுக் கொண்டு துள்ளி ஆடிக்கொண்டு குடிசை நோக்கி நடந்தான். வழக்கத்திற்கு மாறாக வீடும் பூட்டியிருந்தது. செத்தையின் ஒலைக் கீற்றுத் துவாரங்களினூடே தன் கண்களை அகலத் திறந்து பார்த்தான் முத்து. அவளைக்காணவில்லை. ‘ஐயோ கடவுளே!’ அவன் ஏங்கிப்போனான். மாணிக்கம்……..? அவனையும் காணவில்லை! மரியானின் எதிர்பாராத கேள்வி அவன் மனத்திரையில் அப்போது பளிச்சிட்டது. ‘அடைக்கல மாதாவே!’ என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவன் ஓடினான். வாழ்வளித்த ஆழிக்கே ஓடினான். அது சிரித்து அவனை வரவேற்றது. காற்று ஓய்ந்தது. சிறிது நேரத்தில் தனது அலைக் கரங்களால் கடல் தாய் அவனைத் தாலாட்டி மீளாதநித்திரைக்கு ஆளாக்கினாள். (18-01-1959) http://akkinikkunchu.com/?p=63457

விடுதலை புலிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவே ஆயுதங்களை வைத்திருந்தோம்|

2 months ago
தமிழின விரோதிகளின் கைக்கூலிகளில் ஒருவரான சித்தார்த்தனுக்கும் சிவராம் படுகொலைக்கும் என்ன சம்பந்தம்?

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்

2 months ago
விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் புருஜோத்தமன் தங்கமயில் / தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் நின்றுகொண்டுதான், தனிநபர்களில் தங்கி நிற்கின்ற தமிழர் அரசியலைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் பேச வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்தப் பத்தியாளர் உட்பட, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் பத்தியாளர்களும், ஆய்வாளர்களும், ஊடக ஆசிரியர்களும் கூட, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற கட்டத்துக்கு அப்பால், சிந்திப்பதற்கோ செயற்படுவதற்கோ பெரும்பாலும் முனைவதில்லை. நாளாந்தம் விக்னேஸ்வரனும், சுமந்திரனும் ஏதோவொரு நடவடிக்கையால் பேசுபொருளாக மாறி நிற்கிறார்கள். அதில், பெரும்பாலானவை ஏட்டிக்குப் போட்டியான கட்சி அரசியல், தேர்தல் அரசியல் சார்பிலானவை. இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தேர்தல்களை நோக்கியதாக நகர்த்தப்பட்டுவிட்ட சூழலில், தேர்தல் அரசியல் சார்ந்தாவது, தெளிவான தெரிவுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத கட்டமொன்று ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான அணி என்கிற அடையாளத்தை ஒருங்கிணைப்பது சார்ந்தாவது, ஏனைய தரப்புகளால் சரியான இணக்கப்பாடோ, செயற்பாடோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமையை, இடைநிரப்புத் தரப்பாகவே சம்பந்தனும் கூட்டமைப்பும் ஏற்றதாக, இந்தப் பத்தியாளர் கருதுகிறார். ஆனால், இடைநிரப்புத் தரப்பொன்று, தன்னுடைய குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டும், ஆளுமையை நிரூபித்துக் கொண்டும் பிரதான தலைமையாகத் தொடர்ந்தும் இயங்குவதிலும் பிரச்சினையில்லை. அவ்வாறான உதாரணங்கள், உலகம் பூராகவும் உண்டு. எனினும், கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த பத்து ஆண்டுகளில், அந்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றதா, என்று கேட்டால் பதில் ஏமாற்றமானது. 2009க்குப் பின்னர், தோல்வி மனநிலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, தமிழர் அரசியலின் தலைமையையே சம்பந்தன் ஏற்றார். அது, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற அடிப்படையால் மாத்திரம் வந்தது அல்ல. மாறாக, தங்களை வழிநடத்துவதற்கான அனுபவமுள்ளவரின் தலைமைக்கான வெற்றிடத்தை, தமிழ்த் தரப்புகள் உணர்ந்ததன் விளைவால், உருவான ஒன்று. இல்லையென்றால், கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான முன்னணி விலகிய தருணத்திலேயே, கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைந்திருக்கும். ஆனால், நிலைமை எதுவாக இருந்தது என்றால், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், தலைமையேற்கும் தகுதி, மக்களை வழிநடத்தும் தகுதி, தங்களுக்கு இருக்கின்றதா? என்கிற கேள்வியை, ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பி, பதில்கள் கிடைக்காத புள்ளியில், பெரும்பாலானவர்கள் சம்பந்தனின் பின்னால் திரண்டார்கள். அவ்வாறான நிலையின் இன்னொரு வடிவமே, இப்போதும், விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன் வடிவத்திலும் வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில், தம்மை நம்பிக்கையான தலைவர்கள் என்று காட்டிக்கொள்ளப் பலருக்கும் விருப்பமுண்டு. ஆனால், தலைமைத்துவத்தை ஏற்பது சார்ந்தோ, வழிநடத்துவது சார்ந்தோ, இன்றுவரையில் அவர்கள் தங்களைச் சிறிதளவேனும் நிரூபித்திருக்கவில்லை. அதுதான், அவர்களை விக்னேஸ்வரன், சுமந்திரன் பின்னால் துணைக்குழுக்களாகத் திரள வைத்திருக்கின்றது. இடைக்காலத் தலைவராகச் சம்பந்தன், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்தாலும், கூட்டமைப்பை நம்பிக்கையான தரப்பாக நிலைநிறுத்துவது சார்ந்தோ, புதிய தலைமைகளை உருவாக்குவது சார்ந்தோ, எந்தவோர் ஆற்றலையும் வெளிப்படுத்தவில்லை. இன்றைக்கும், கூட்டமைப்புக்கு மக்கள் அளிக்கின்ற வாக்கு என்பது, இருப்பதில் ஓரளவுக்கு சிறந்தது என்கிற அடிப்படையிலானவை. மாறாக, பெரிய நம்பிக்கைகளின் வழி வருபவை அல்ல. இன்னொரு கட்டத்தில் விக்னேஸ்வரன், சுமந்திரன் பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடித்து வைக்காமல், இழுபட விட்டமை என்பது கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பின்னடைவாக மாறியிருக்கின்றது. ஏனெனில், புதிய வழிகளைத் திறக்கும், பல கதவுகளை, அது மூடியிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு, விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்த புள்ளியில், அவரைச் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். அல்லது, கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். மாறாக, அந்தச் சூழலைச் சம்பந்தன் உருவாக்காமல், குடுமிப்பிடிச் சண்டையை நீளச் செய்தமை, கடந்த மூன்று வருடங்களை, எதுவுமின்றிக் கடக்க வைத்திருக்கின்றது. கூட்டமைப்புத் தலைமைதான் தவறிழைத்திருக்கின்றது என்று பார்த்தால், தம்மை மாற்று அணியாகக் கருதிய தரப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் கூட்டமைப்புக்குள் நிகழும் சச்சரவைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டன. தம்மைத் தலைவர்களாக உருவாக்குவதிலிருந்து தவறிவிட்டு, தலைமையின் வெற்றிடத்துக்காக, விக்னேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும், விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், விக்னேஸ்வரனை நோக்கியே, அவர்கள் மீண்டும் மீண்டும் தலைமைத்துவ நம்பிக்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். அது, கேலிக்குரியது. அதுதான், இன்றைக்கு அவர்களை துணைக் குழுக்களாக மாற்றியிருக்கின்றது. இன்றைக்கு ஆரோக்கியமான அரசியல் உரையாடலின் கட்டங்கள், தமிழ்த் தேசியச் சூழலில் பெரியளவில் நிகழ்வதில்லை. நிகழ்த்தப்படும் உரையாடல்களில் பெரும்பாலானவை, சமூக ஊடக மனநிலையில் இடம்பெறுபவை. அதிலும், பெரும்பாலனவை, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ அணிகளாகப் பிரிந்து நின்று நிகழ்த்தப்படுபவை. இங்கு, இயற்கை நீதி, தார்மீகம், அரசியல் எதிர்காலம், இருப்பு பற்றிய அடிப்படைகள் இருப்பதில்லை. இந்த சமூக ஊடக மனநிலையும் கும்பல் மனநிலையும் சேர்ந்துகொண்டு, தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் அறத்தையும் நடுவீதிகளிலும், ஊடகங்களிலும் பல்லிழிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அத்தோடு, எந்தவித அடிப்படைச் சிந்தனையும் இன்றி, ஏதேவொரு கும்பலின் பின்னால் திரளவேண்டிய நெருக்குவாரத்தை, இளைஞர்கள் மீது ஏற்படுத்தியிருக்கின்றது. அது, ஆக்கபூர்வமான கட்டங்களுக்கு அப்பாலான நிகழ்வுகளையே, பெரும்பாலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சகிப்புத்தன்மையற்ற சமூகமொன்றைக் கட்டமைக்கின்றது. சமூகத்துக்குள் எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தத் தெரியாத அரசியல் தலைமைகளும், கட்சிகளும், சிவில் சமூக இயக்கங்களும், புத்திஜீவிகளும், ஏன் ஊடகக்காரர்களும் இவ்வாறான பின்னடைவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் - சமூக மாற்றங்களின் வழி நின்று பேச வேண்டியதும், எழுத வேண்டியதும் ஊடகக்காரர்களின், பத்தியாளர்களின் கடமை என்றாலும், அதன் கட்டங்களை ஒட்டுமொத்தமாக ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற நிலைக்குள் கொண்டு சேர்த்து விட்டதிலும், அவர்கள் தவறிழைத்திருப்பதாகவே கொள்ள வேண்டும். அத்தோடு, தமிழ்த் தேசியத்தின் பெரும் காவலர்களாக விக்னேஸ்வரனையோ, இன்னொருவரையோ சித்திரிப்பதையும் தமிழர் அரசியலின் ஒட்டுமொத்தமான நம்பிக்கை சம்பந்தன் என்றோ சுமந்திரன் என்றோ எழுதுவதன் பின்னாலுள்ள மனநிலையையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். வேறு வழியின்றி இவர்களைக் குறித்துத்தான் பேச வேண்டியிருக்கிறது என்றால், அதனை, வெளிப்படுத்திவிட்டு எழுதுவதுதான் அடிப்படைத் தார்மீகமாகும். மாறாக, பிரபாகரனுக்கு அடுத்து அவர்தான், இவர்தான் என்கிற தோரணையிலான எழுத்துகளில், பெரும்பாலும் வெளிப்படுவது சரிசெய்ய முடியாத அபத்தம். அந்த அபத்தத்தை யார் கடந்து வருகிறார்களோ இல்லையோ, அரசியல் பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கடந்து வர வேண்டும். இல்லாது போனால், கடந்த காலங்களிலிருந்து கற்ற அனுபவங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தனிநபர்களைத் துதிபாடும் அரசியலை, மக்களிடம் விதைத்த அவப்பெயர் வந்து சேரும். இன்றைக்கு, விக்னேஸ்வரன், சுமந்திரன் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முழுமையாகப் பேச முடியாதுதான். நடைமுறை யதார்த்தங்கள் சார்ந்து வருவது அது. ஆனால், அவர்கள் இருவரும் மட்டுந்தான் என்று பேசுவதும், அதற்காக ஒதுக்கப்படும் நேரமும் உண்மையிலேயே பாரதூரமான அளவைத் தாண்டிவிட்டது. ஏனெனில், அலை அடிக்கும் திசையில் தக்கைகள் வேண்டுமானால் பயணிக்கலாம். படகுகளுக்கு அப்படி இருக்க முடியாது. படகுகளுக்கு இலக்கு முக்கியம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியையும்-சுமந்திரனையும்-தாண்டிப்-பேசுதல்/91-222127

விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்

2 months ago
விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்
புருஜோத்தமன் தங்கமயில் /

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன.   

தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன.  

சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை.   

இந்த நிலையில் நின்றுகொண்டுதான், தனிநபர்களில் தங்கி நிற்கின்ற தமிழர் அரசியலைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் பேச வேண்டிய நிலை ஏற்படுகின்றது.   

இந்தப் பத்தியாளர் உட்பட, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் பத்தியாளர்களும், ஆய்வாளர்களும், ஊடக ஆசிரியர்களும் கூட, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற கட்டத்துக்கு அப்பால், சிந்திப்பதற்கோ செயற்படுவதற்கோ பெரும்பாலும் முனைவதில்லை.   

நாளாந்தம் விக்னேஸ்வரனும், சுமந்திரனும் ஏதோவொரு நடவடிக்கையால் பேசுபொருளாக மாறி நிற்கிறார்கள். அதில், பெரும்பாலானவை ஏட்டிக்குப் போட்டியான கட்சி அரசியல், தேர்தல் அரசியல் சார்பிலானவை.   

இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தேர்தல்களை நோக்கியதாக நகர்த்தப்பட்டுவிட்ட சூழலில், தேர்தல் அரசியல் சார்ந்தாவது, தெளிவான தெரிவுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத கட்டமொன்று ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான அணி என்கிற அடையாளத்தை ஒருங்கிணைப்பது சார்ந்தாவது, ஏனைய தரப்புகளால் சரியான இணக்கப்பாடோ, செயற்பாடோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.   

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமையை, இடைநிரப்புத் தரப்பாகவே சம்பந்தனும் கூட்டமைப்பும் ஏற்றதாக, இந்தப் பத்தியாளர் கருதுகிறார்.   

ஆனால், இடைநிரப்புத் தரப்பொன்று, தன்னுடைய குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டும், ஆளுமையை நிரூபித்துக் கொண்டும் பிரதான தலைமையாகத் தொடர்ந்தும் இயங்குவதிலும் பிரச்சினையில்லை.   

அவ்வாறான உதாரணங்கள், உலகம் பூராகவும் உண்டு. எனினும், கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த பத்து ஆண்டுகளில், அந்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றதா, என்று கேட்டால் பதில் ஏமாற்றமானது.   

2009க்குப் பின்னர், தோல்வி மனநிலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, தமிழர் அரசியலின் தலைமையையே சம்பந்தன் ஏற்றார். அது, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற அடிப்படையால் மாத்திரம் வந்தது அல்ல.   

மாறாக, தங்களை வழிநடத்துவதற்கான அனுபவமுள்ளவரின் தலைமைக்கான வெற்றிடத்தை, தமிழ்த் தரப்புகள் உணர்ந்ததன் விளைவால், உருவான ஒன்று.   

இல்லையென்றால், கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான முன்னணி விலகிய தருணத்திலேயே, கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைந்திருக்கும்.   

ஆனால், நிலைமை எதுவாக இருந்தது என்றால், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், தலைமையேற்கும் தகுதி, மக்களை வழிநடத்தும் தகுதி, தங்களுக்கு இருக்கின்றதா? என்கிற கேள்வியை, ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பி, பதில்கள் கிடைக்காத புள்ளியில், பெரும்பாலானவர்கள் சம்பந்தனின் பின்னால் திரண்டார்கள்.   

அவ்வாறான நிலையின் இன்னொரு வடிவமே, இப்போதும், விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன் வடிவத்திலும் வந்திருக்கின்றது.   

தமிழ்த் தேசிய அரசியலில், தம்மை நம்பிக்கையான தலைவர்கள் என்று காட்டிக்கொள்ளப் பலருக்கும் விருப்பமுண்டு. ஆனால், தலைமைத்துவத்தை ஏற்பது சார்ந்தோ, வழிநடத்துவது சார்ந்தோ, இன்றுவரையில் அவர்கள் தங்களைச் சிறிதளவேனும் நிரூபித்திருக்கவில்லை. அதுதான், அவர்களை விக்னேஸ்வரன், சுமந்திரன் பின்னால் துணைக்குழுக்களாகத் திரள வைத்திருக்கின்றது.   

இடைக்காலத் தலைவராகச் சம்பந்தன், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்தாலும், கூட்டமைப்பை நம்பிக்கையான தரப்பாக நிலைநிறுத்துவது சார்ந்தோ, புதிய தலைமைகளை உருவாக்குவது சார்ந்தோ, எந்தவோர் ஆற்றலையும் வெளிப்படுத்தவில்லை.    

இன்றைக்கும், கூட்டமைப்புக்கு மக்கள் அளிக்கின்ற வாக்கு என்பது, இருப்பதில் ஓரளவுக்கு சிறந்தது என்கிற அடிப்படையிலானவை. மாறாக, பெரிய நம்பிக்கைகளின் வழி வருபவை அல்ல.   

இன்னொரு கட்டத்தில் விக்னேஸ்வரன், சுமந்திரன் பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடித்து வைக்காமல், இழுபட விட்டமை என்பது கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பின்னடைவாக மாறியிருக்கின்றது. ஏனெனில், புதிய வழிகளைத் திறக்கும், பல கதவுகளை, அது மூடியிருக்கின்றது.   

2015ஆம் ஆண்டு, விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்த புள்ளியில், அவரைச் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். அல்லது, கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். மாறாக, அந்தச் சூழலைச் சம்பந்தன் உருவாக்காமல், குடுமிப்பிடிச் சண்டையை நீளச் செய்தமை, கடந்த மூன்று வருடங்களை, எதுவுமின்றிக் கடக்க வைத்திருக்கின்றது.   

கூட்டமைப்புத் தலைமைதான் தவறிழைத்திருக்கின்றது என்று பார்த்தால், தம்மை மாற்று அணியாகக் கருதிய தரப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் கூட்டமைப்புக்குள் நிகழும் சச்சரவைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டன.   

தம்மைத் தலைவர்களாக உருவாக்குவதிலிருந்து தவறிவிட்டு, தலைமையின் வெற்றிடத்துக்காக, விக்னேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும், விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், விக்னேஸ்வரனை நோக்கியே, அவர்கள் மீண்டும் மீண்டும் தலைமைத்துவ நம்பிக்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். அது, கேலிக்குரியது. அதுதான், இன்றைக்கு அவர்களை துணைக் குழுக்களாக மாற்றியிருக்கின்றது.  

இன்றைக்கு ஆரோக்கியமான அரசியல் உரையாடலின் கட்டங்கள், தமிழ்த் தேசியச் சூழலில் பெரியளவில் நிகழ்வதில்லை. நிகழ்த்தப்படும் உரையாடல்களில் பெரும்பாலானவை, சமூக ஊடக மனநிலையில் இடம்பெறுபவை. அதிலும், பெரும்பாலனவை, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ அணிகளாகப் பிரிந்து நின்று நிகழ்த்தப்படுபவை.   

இங்கு, இயற்கை நீதி, தார்மீகம், அரசியல் எதிர்காலம், இருப்பு பற்றிய அடிப்படைகள் இருப்பதில்லை. இந்த சமூக ஊடக மனநிலையும் கும்பல் மனநிலையும் சேர்ந்துகொண்டு, தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் அறத்தையும் நடுவீதிகளிலும், ஊடகங்களிலும் பல்லிழிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.   

அத்தோடு, எந்தவித அடிப்படைச் சிந்தனையும் இன்றி, ஏதேவொரு கும்பலின் பின்னால் திரளவேண்டிய நெருக்குவாரத்தை, இளைஞர்கள் மீது ஏற்படுத்தியிருக்கின்றது. அது, ஆக்கபூர்வமான கட்டங்களுக்கு அப்பாலான நிகழ்வுகளையே, பெரும்பாலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சகிப்புத்தன்மையற்ற சமூகமொன்றைக் கட்டமைக்கின்றது.   

சமூகத்துக்குள் எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தத் தெரியாத அரசியல் தலைமைகளும், கட்சிகளும், சிவில் சமூக இயக்கங்களும், புத்திஜீவிகளும், ஏன் ஊடகக்காரர்களும் இவ்வாறான பின்னடைவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.   

அரசியல் - சமூக மாற்றங்களின் வழி நின்று பேச வேண்டியதும், எழுத வேண்டியதும் ஊடகக்காரர்களின், பத்தியாளர்களின் கடமை என்றாலும், அதன் கட்டங்களை ஒட்டுமொத்தமாக ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற நிலைக்குள் கொண்டு சேர்த்து விட்டதிலும், அவர்கள் தவறிழைத்திருப்பதாகவே கொள்ள வேண்டும்.   

அத்தோடு, தமிழ்த் தேசியத்தின் பெரும் காவலர்களாக விக்னேஸ்வரனையோ, இன்னொருவரையோ சித்திரிப்பதையும் தமிழர் அரசியலின் ஒட்டுமொத்தமான நம்பிக்கை சம்பந்தன் என்றோ சுமந்திரன் என்றோ எழுதுவதன் பின்னாலுள்ள மனநிலையையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். வேறு வழியின்றி இவர்களைக் குறித்துத்தான் பேச வேண்டியிருக்கிறது என்றால், அதனை, வெளிப்படுத்திவிட்டு எழுதுவதுதான் அடிப்படைத் தார்மீகமாகும்.   

மாறாக, பிரபாகரனுக்கு அடுத்து அவர்தான், இவர்தான் என்கிற தோரணையிலான எழுத்துகளில், பெரும்பாலும் வெளிப்படுவது சரிசெய்ய முடியாத அபத்தம். அந்த அபத்தத்தை யார் கடந்து வருகிறார்களோ இல்லையோ, அரசியல் பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கடந்து வர வேண்டும். இல்லாது போனால், கடந்த காலங்களிலிருந்து கற்ற அனுபவங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தனிநபர்களைத் துதிபாடும் அரசியலை, மக்களிடம் விதைத்த அவப்பெயர் வந்து சேரும்.   

 இன்றைக்கு, விக்னேஸ்வரன், சுமந்திரன் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முழுமையாகப் பேச முடியாதுதான். நடைமுறை யதார்த்தங்கள் சார்ந்து வருவது அது. ஆனால், அவர்கள் இருவரும் மட்டுந்தான் என்று பேசுவதும், அதற்காக ஒதுக்கப்படும் நேரமும் உண்மையிலேயே பாரதூரமான அளவைத் தாண்டிவிட்டது.

ஏனெனில், அலை அடிக்கும் திசையில் தக்கைகள் வேண்டுமானால் பயணிக்கலாம். படகுகளுக்கு அப்படி இருக்க முடியாது. படகுகளுக்கு இலக்கு முக்கியம்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியையும்-சுமந்திரனையும்-தாண்டிப்-பேசுதல்/91-222127

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

2 months ago
தமிழின விரோதிகளின் கைக்கூலிகளில் இன்னுமொருவர் மிலேச்ச போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற ஊளையிட்டு உழைக்கிறார்! டி.பி.எஸ். ஜெயராஜ் வரிசையில் இன்னுமொருவர்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

2 months ago
வீணானது கான் - அன்சுமன் ஜோடியின் போராட்டம் ; 26 ஓட்டத்தினால் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா ஹொங்கொங் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி ஹொங்கொங் அணியை 259 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 26 ஓட்டத்தினால் முதல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பாக தவான் 127 ஓட்டத்தையும், ராயுடு 60 ஓட்டத்தையும் தினேஷ் கார்த்திக் 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஹொங்கொங் அணிக்கு ஆரம்பமே அமோகமாக அமைந்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய நிஜாக்கத் கான் மற்றும் அணித் தலைவர் அன்சுமன் ரத் பலமான ஒரு அடித்தளத்தை பெற்றுக் கொடுத்தனர். இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சாளார்களை திணற விட 9.2 ஓவர்களுக்கு அணி 50 ஓட்டங்களை கடந்தது முதல் 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 12 ஆவது ஓவருக்காக ஷர்டுல் தாகூர் பந்துப் பறிமாற்ற அந்த ஓவர் ஹொங்கொங் அணிக்கு மேலதிகமான ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தது. அதற்கிணங்க அந்த ஓவரில் ஷர்டுல் தாகூர், மூன்று நோபோல்களையும் ஒரு உதிரி ஓட்டம் அடங்கலாக அந்த ஓவரில் 17 ஓட்டங்களை அள்ளிக் கொடுக்க, அதே ஓவரில் நிஜாக்கத் கான் 45 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். ஒரு கட்டத்தில் ஹொங்கொங் அணி 17.4 ஓவர்களுக்கு ஏதுவித விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை தொட்டது. நிஜாக்கத் கான் 59 ஓட்டத்துடனும் அணித் தலைவர் அன்சுமன் ரத் 32 ஓட்டத்துடனும் ஆடி வந்தனர். 28.2 ஆவது ஓவரில் அன்சுமன் ரத் 75 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் 30.4 ஆவது பந்தில் நிஜாக்கத் கான் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொள்ள அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ தொட்டது. இந் நிலையில் 34.1 ஓவரில் அன்சுமன் ரத் 73 ஓட்டத்துடன் குல்தீப் யாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி ஹொங்கொங் அணி 174 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அன்சுமன் ரத் வெளியேற பாபர் ஹயத் ஆடுகளம் நுழைந்தார். 92 ஓட்டத்துடன் ஆடிவந்த நிஜாக்கத் கான் கலீல் அமீட்டுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க ‍ஹொங்கொங் அணி தடுமாற ஆரம்பித்தது. மேலும் 39.1 ஓவரில் கிறிஸ்டோபர் கார்ட்டர் மூன்று ஓட்டத்துடன் கலீலுடைய பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அதிரயாக ஆடத் தொடங்கிய பாபர் ஹயத்தும் 40.2 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ஹொங்கொங் அணி 199 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்து இக் கட்டான நிலைக்கு போனது. 44.2 ஆவது ஓவரில் கின்சித் ஷாவும் சாஹலுடைய பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அலிஸ் கானும் சஹாலுடைய பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க ஹொங்கொங் அணி 228 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. 50 ஓவர்களின் முடிவில் ஹொங்கொங் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 26 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல், கலீல் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நா‍ளை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40687

“வடக்கின் கில்லடி யார்”

2 months ago
“வடக்கின் கில்லாடி யார்?” நான்காம் நாள் போட்டிகளின் முடிவுகள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்” உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாவது சுற்றின் நான்காவது நாள் ஆட்டங்கள் இன்றைய தினம் (18) அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் யாழ் லீக்கினுடைய பலம் வாய்ந்த அணியான பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து தீவக லீக்கின் முன்னணி அணியான வேலணை ஐயனார் கழகம் மோதியது. இரு அணியினரும் கோல் பெறுவதற்கு தொடர் முயற்சியை மேற்கொண்ட போதும், எதுவிதமான முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கோல்கள் ஏதுமின்றி போட்டி நிறைவிற்கு வந்தது. முழு நேரம்: பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் ஆட்டநாயகன் – ஜெயந்தன் (கோல்காப்பாளர் – வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்) தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 6 – என்ற கோல்கள் கணக்கில் வேலணை ஐயனார் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஐயனார் அணி நவிண்டில் கலைமதி அணியுடன் மோதவுள்ளது. குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் எதிர் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம் யாழின் கில்லாடி தொடரில் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளிலும் கிண்ணத்தை தமதாக்கி தொடரின் நடப்புச் சம்பியன்களாக களங்காணும் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மற்றொரு யாழ் லீக்கின் பிரதிநிதியான கொட்டடி முத்தமிழ் அணி மோதியது. போட்டியின் ஆரம்பத்தில் கோல் போடுவதற்கு தடுமாறிய பாடும்மீன் அணி இறுதியாக, 15 ஆவது நிமிடத்தில் சேயன் மூலம் கோல் பெற்றது. முதல் பாதியினுடைய இறுதி நிமிடத்தில் பற்றிக்ஸ் கல்லூரியினுடைய முன்கள வீரர் ரஜிக்குமார் சாந்தன் மேலும் ஒரு கோலைப் பெற்றுக்கொடுக்க முதல் பாதி நிறைவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் பாடும்மீன் கழகம் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மயூரன் ஒரு கோலையும், சேயன் போட்டியில் இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுக்க, ஆட்ட நேர நிறைவில் 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றிபெற்ற நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணியினர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். முழு நேரம்: குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 4 – 0 கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகம் ஆட்டநாயகன் – டெரின்சன் கோல் பெற்றவர்கள் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – சேயன் 15′ & 52’, சாந்தன் 28’, மயூரன் 44′ வடக்கின் கில்லாடி தொடரின் முதலாவது சுற்றின் பதினொராவது மற்றும் பன்னிரண்டாவது போட்டிகள் நாளைய தினம் (19) இடம்பெறவிருந்த இளவாலை யங் ஹென்றீசியன்ஸ், உரும்பிராய் திருக்குமரன் அணிகளுக்கிடையிலான போட்டியில் யங்ஹென்றீசியன்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஊரெழு றோயல் அணியை எதிர்த்து முல்லைத்தீவு சுப்பர் றாங் அணி மோதவுள்ளது. றோயல், சுப்பர் றாங் அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டாவது சுற்றுப்போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 4.45 மணியளவில் இடம்பெறவுள்ளள முதல் சுற்றின் 14 ஆவது போட்டியில் மன்னார் கில்லறி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது. http://www.thepapare.com

இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள்

2 months ago
இளையோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இரண்டு யாழ் வீரர்கள் பங்களாதேஷில் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில், பங்குபெறவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய 19 வயதின் கீழான இலங்கை கிரிக்கெட் குழாம் இன்று (18) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை வீரர்கள் குழாமில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா மதுஷன் இடம்பிடித்துள்ளார். இதேவேளை, ஆசியக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மதுஷன் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு, துடுப்பாட்டத்திலும் சிறப்பிக்க கூடிய ஒருவராக உள்ளார். இதேநேரம், வியாஸ்காந்த் வலதுகை சுழல் பந்துவீச்சாளராக திறமையை வெளிப்படுத்த கூடியவராக இருக்கின்றார். இந்த இரண்டு வீரர்களும் இந்த ஆண்டுக்கான வடக்கின் சமர் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தமது பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவியிருந்தனர். அதன் பின்னர் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையில் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருந்த கிரிக்கெட் தொடரிலும் வட மாகாணம் சார்பில் பிரகாசித்திருந்தனர். இதனால், இருவரும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். இதில் வியாஸ்காந்த் இந்திய அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் தொடரின் போட்டியொன்றில் இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படியானதொரு நிலையிலையே யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த இரண்டு வீரர்களுக்கும் திறமையை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 19 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கான இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த நிப்புன் தனஞ்சய தலைமை தாங்குகின்றார். இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கையுடன் சேர்த்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகியவற்றின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் போட்டியிடுகின்றன. இந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி நிப்புன் தனஞ்சய (அணித்தலைவர்) – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வெண்ணப்புவ பசிந்து சூரியபண்டார – றோயல் கல்லூரி, கொழும்பு நவோத் பரணவிதான – மஹிந்த கல்லூரி, காலி கமில் மிஷார – றோயல் கல்லூரி, கொழும்பு நிஷான் மதுஷ்க – மொரட்டுவ வித்தியாலயம் நுவனிது பெர்னாந்து – புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ துனித் வெல்லாலகே – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு சஷிக்க துல்ஷான் – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை கல்ஹார சேனாரத்ன – புனித அந்தோனியர் கல்லூரி, கண்டி றொஹான் சஞ்சய – திஸ்ஸ மகா வித்தியாலயம், களுத்துறை சந்துன் மெண்டிஸ் – றிச்மண்ட் கல்லூரி, காலி கலன பெரேரா – புனித தோமியர் கல்லூரி, கொழும்பு நிப்புன் மாலிங்க – மஹிந்த கல்லூரி, காலி நவீன் பெர்னாந்து – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு செல்வராசா மதுஷன் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மேலதிக வீரர்கள் லக்ஷித மதரசிங்க – நாலந்த கல்லூரி, கொழும்பு முதித்த லக்ஷன் – டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு விஜயகாந்த் வியாஸ்காந்த் – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சிலான் கலிந்து – புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை சாமிக்க குணசேகர – ஆனந்த கல்லூரி, கொழும்பு http://www.thepapare.com/