Aggregator
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல்
Published By: Vishnu
23 Dec, 2025 | 02:25 AM
![]()
(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், கிரீஸ், பிரிட்டன், இந்தியா, பிரேஸில், நெதர்லாந்து, மெக்ஸிக்கோ, வியட்நாம், இத்தாலி, கனடா, ஆர்ஜென்டீனா, சுவீடன், ஜேர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் 121 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சர்தேச நாணய நிதியத்தின் 48 மாதகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் 17 ஆவது இறைக்கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக மீளச்செலுத்தப்படவேண்டிய கடன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வொப்பந்தம் இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்குவதற்குத் தவறியிருப்பதுடன் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளியகத் தாக்கங்களால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நலிவடைந்த நிலையில் இலங்கையை நிறுத்தியிருக்கின்றது.
அதன்விளைவாக மிகமோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கும், 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும், காணாமல் போவதற்கும், 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்வதற்கும் வழிவகுத்த 'தித்வா' சூறாவளியின் பின்னர் இலங்கை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பான கரிசனைகள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மீளச்செலுத்தவேண்டிய கடன் பெறுமதியை 17 சதவீதத்தினால் (சமகாலத்தில் உள்ள பெறுமதியில்) குறைப்பதற்கு கடன்வழங்குனர்கள் இணங்கினர்.
அதன்படி மொத்த வருமானத்தில் சுமார் 25 சதவீதத்தை வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது. இது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வான பெறுமதியாகும்.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் கருத்தின்படி, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு 50 சதவீத வாய்ப்புக் காணப்படுவதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன்மறுசீரமைப்பின் பின்னர் மீண்டுமொரு கடன்மறுசீரமைப்பு தேவைப்படும் நிலையில் இருக்கின்றது. 'இன்னும் பல வருடங்களுக்கு கடன் அச்சுறுத்தல் மிக உயர்வான மட்டத்தில் இருக்கும்' என சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றது.
அண்மைய சூறாவளி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் மிகமோசமாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தற்போது இலங்கை தீவிர பொருளாதார அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றது.
இயற்கை அனர்த்தங்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் நலிவுற்ற தன்மையும், இப்போது பதிவாகியிருக்கும் சேதங்களின் அளவும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தம் போதுமானதன்று என்பதைக் காண்பிக்கின்றன. ஏற்கனவே தளர்வடைந்திருக்கும் இலங்கையின் சமூக - பொருளாதாரக் கட்டமைப்பானது இப்போது வருமான வீழ்ச்சி, மீள்கட்டுமான செலவின அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக் கேள்வி அதிகரிப்பு போன்ற காரணங்களால், முன்னர் எதிர்வுகூறப்பட்ட கடன்மறுசீரமைப்பு அடைவுகள் சரிவடையக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் இயற்கை அல்லது பொருளாதாரம் சார்ந்த அழிவுகளுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதுடன், நாட்டின் மீளெழுச்சிக்கு உதவக்கூடிய செயற்திறன்மிக்க கடன் தீர்வொன்று இலங்கைக்கு அவசியமாகின்றது.
எனவே இலங்கை பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது வெளியக அழுத்தங்களிலிருந்து நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்குப் போதுமானதன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு பாரிய கடன் சலுகைக்குப் பதிலாக கடன்மீள்செலுத்துகை தொடர்வதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இலங்கை பொருளாதாரம் மீதான கட்டமைப்பு ரீதியான தாக்கம் மற்றும் மக்கள் மீதான எதிர்கால அனர்த்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் இடமளிக்கின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கைமீது தொடர்ந்து திணிப்பதன் மூலம், அதனை மீளச்செலுத்துவதற்கான இயலுமையை இலங்கை கொண்டிருக்கிறதா, இல்லையான என்ற விடயம் புறந்தள்ளப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இக்கடன் மீள்செலுத்துகையானது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாயம் மற்றும் உட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கும், சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்குமான முயற்சிகளைப் பின்தள்ளுகின்றது.
ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துமாறும், இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் | Virakesari.lk
யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை!
Published By: Digital Desk 1
23 Dec, 2025 | 11:32 AM
![]()
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளைப் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது.
இந்தத்தடை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்படும் எனவும் பருத்தித்துறை நகர சபை அறிவித்துள்ளது.
உணவக உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியஉணவு பொதி செய்யப்படும் கடதாசிகளுக்கு பதிலாக வாழை இலைகள், தாமரை இலைகள், தேக்கு இலைகள் போன்ற இயற்கைப் பொருட்களையும், உணவுப் பொதி செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அலுமினியத் தகடு மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களையும் பயன்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது, நகராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் வணிக உரிமை பத்திரங்கள் இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் உணவகங்களில் மதிய உணவு பொதி செய்ய கடதாசிகளை பயன்படுத்த தடை! | Virakesari.lk
12 இந்திய மீனவர்கள் கைது
23 Dec, 2025 | 12:50 PM
![]()
சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
"தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவால் கைது செய்யப்பட்டு, அவர்களது படகுடன் தீவில் உள்ள கடற்படைத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்" என தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (22), இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 450 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு தங்கச்சிமடம், மாந்தோப்புவைச் சேர்ந்த ஜோதிபாஸுக்குச் சொந்தமானது என்றும், படகு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத நிலையில் டோக்கன் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
12 மீனவர்களில் பிரபாத் (28), ஜேம்ஸ் ஹெய்டன் (29), ஆண்டனி (32) என்பவர்கள் அடங்கியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்து விடுவிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, மீனவர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு
23 Dec, 2025 | 03:54 PM
![]()
முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தப் பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது.
இதன்போதே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கூறுகையில்,
கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள்.
அந்த வகையில் கொக்கிளாயில் குடியேறி தங்கியுள்ள சிங்களவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானியும் என்னிடம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்தில் வசித்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகு, எமது தமிழ் மக்களின் பூர்விக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர்.
எமது தமிழ் மக்களுக்குரிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விக தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறே பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடம் உள்ளது.
இவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன.
ஒருவருக்கு ஒரு இடத்தில் காணியிருக்கலாம் என்பதே அரச கொள்கையாகும். இவ்வாறு சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் இந்த பொரும்பான்மை இனத்தவர்களுக்கு காணி இருக்கத்தக்கதாக இங்கும், காணிகளை வழங்கமுடியுமா என்பதற்கு உரியவர்கள் பதிலளிக்கவேண்டும். இந்த விடயத்தில் நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறாக எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து, அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்.
அத்தோடு புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்தளத்துக்கென ஒதுக்கப்பட்ட காணிகளையும் ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் எடுக்கின்ற முயற்சியினையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் தமிழர்களின் பூர்விக மணலாற்றுப் பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தனர்.
இந்நிலையில் முன்னைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் அடாவடியாகச் செயற்படாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
ஊழலை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசின் ஆட்சியில் ஊழல்கள் இடம்பெறக்கூடாது.
கொக்குத்தொடுவாயில் இவ்வாறு எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக காணிகளை அபகரித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிராட்டிகுளம், பண்டாரவன்னி, மன்னாகண்டல் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கி, மாற்று வாழ்விடங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு | Virakesari.lk
“பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம்
23 Dec, 2025 | 04:53 PM
![]()
ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 23 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் விசேட மீன்வகையான சூரை மீன் (tuna) இனத்திற்குரிய மீன்களைப் பிடிப்பதற்காக பலநாள் கடற்கலன் உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துகின்றனர்.
அதற்கான இரையாக ஊசிக்கணவாய் மற்றும் பாலை மீன், சூடை, பறக்கும் மீன் போன்ற சிறிய மீனினங்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். மீன் வளங்களை பேண்தகு வகையில் நுகர்கின்ற முறையாக ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் பிடிக்கப்படுகின்ற மீன்கள் உயர்ந்த தரத்துடன் கூடியதாக அமைவதால், அதற்காக சர்வதேச சந்தையில் அதிக விலை உள்ளது.
எமது நாட்டில் 2,200 பலநாள் கடற்கலன்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துவதுடன், அதற்காக வருடாந்தம் 8,000 மெற்றிக்தொன் இரை மீன்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், குறித்த அளவில் 4,000 மெற்றிக்தொன் மாத்திரமே உள்நாட்டில் விநியோகிக்கக் கூடியாதாகவுள்ளது. அதனால், தனியார் துறையின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து வரும் காலங்களில் இரைக்காக பாலை மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த உள்நாட்டு உற்பத்தி பயன்பாட்டுக்கு வரும் வரைக்கும், பாலை மீன்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதி வரிச்சலுகையை வழங்குவது தொடர்பாக மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, பாலை மீன்கள் இறக்குமதி செய்வதற்கான புதிய இயைபு முறைக் குறியீட்டை (u;S Code) அறிமுகப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட மீன்பிடிச் சங்கங்கள் மூலம் தேவையான பாலை மீன்களை இறக்குமதி செய்வதற்கும், தற்போது நடைமுறையிலுள்ள இறக்குமதி வரி முறைமைக்குப் பதிலாக இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் பாலை மீன்களுக்கு 180/- ரூபா விசேட பண்ட வரியை அறிமுகப்படுத்தி, குறித்த வரியில் 130/- ரூபாவை பாலைமீன்களை இறக்குமதி செய்கின்ற மீன்பிடிச் சங்கங்களுக்கு வரிச்சலுகையாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
“பாலை மீன்” இறக்குமதிக்கு வரிச்சலுகை – அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்
Published By: Vishnu
23 Dec, 2025 | 07:16 PM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு )
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

“டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார்.
குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் | Virakesari.lk
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்
Published By: Digital Desk 3
23 Dec, 2025 | 04:13 PM
![]()
(எம்.மனோசித்ரா)
சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வசதியளிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படுத்தியுள்ள 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்மூலம், அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 40 இலட்சம் மாணவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி வகுதிகளின் கீழ் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது அடையாளங் காணப்பட்டுள்ள பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் திருத்தங்களை உட்சேர்த்து, 'சுரக்ஷா', மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை 2025ஃ26 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கமைய, ஏற்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
2025/26 ஆண்டுக்குரிய 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் 2026.08.31 வரை நடைமுறைப்படுத்தல், பெற்றார் உயிரிழப்பின் போது வழங்கப்படும் அனுகூலங்களை வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் குறைந்த வருமானம் கொண்ட வகுதியின் ஆண்டுக்கான வருமானம் 180,000ஃ- ரூபா தொடக்கம் 240,000 ரூபாவாக திருத்தம் செய்தல், விகாரமடைந்த முதுகெலும்பை நேர்த்தி செய்வதற்கு அணிகின்ற கருவி மற்றும் செவிப்புலக் கருவிக்கு 75,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீவிர நோய் வகுதிக்குட்பட்ட நோய்களுக்காகவும், மேலும் அடையாளங் காணப்பட்ட 07 நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சைகளைப் பெற்று வரும் மாணவர்களுக்கு 20,000ஃ- ரூபா வரை அனுகூலங்களை வழங்கல், தீவிர நோய் வகுதிகளுக்கான Pneumothorax, Encephalitis, Thalassemia, Hereditary spherocytosis kw;Wk; Sickle cell anemia போன்ற நோய்களை புதிதாககச் சேரத்துக் கொள்ளல், 2025.09.01 ஆம் திகதி தொடக்கம் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை விண்ணப்பங்கள் ; ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் இன் எந்தவொரு பிராந்திய அலுவலகத்தின் மூலம் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
வெற்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி
வெற்று எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய அனுமதி
Dec 23, 2025 - 04:22 PM
லிட்ரோ எரிவாயு கம்பனியால் 2025 – 2027 காலப்பகுதிக்காக வால்வு இல்லாத வெறுமை LPG சிலிண்டர் வகைகள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.
அதற்காக 04 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் லிட்ரோ எரிவாயு கம்பனிக்கு கிலோகிராம் 2.3 சிலிண்டர் 120,000 உம், கிலோகிராம் 5.0 சிலிண்டர் 185,000 உம், கிலோகிராம் 12.5 சிலிண்டர் 450,000 உம், கிலோகிராம் 37.5 சிலிண்டர் 7,000 உம் விநியோகிப்பதற்கான பெறுகை கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Sahamitr Metal Pressure Containers Public Co.Ltd இற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்
Dec 23, 2025 - 10:55 AM
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
தற்போது இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்
இலங்கையுடனான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா
Published By: Digital Desk 1
22 Dec, 2025 | 07:29 AM
![]()
(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தபத்து 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

விஷ்மி குணரட்ன உட்பட மூன்று வீராங்கனைகள் அநாவசியமாக இல்லாத ஓட்டங்களை எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார்கள்.
பந்துவீச்சில் க்ரான்தி கௌட், தீப்தி ஷர்மா, ஸ்ரீசரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஷபாலி வர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

தொடர்ந்து ஜெமிமா ரொட்றிக்ஸ், அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் பிரிககப்படாத 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ஜெமிமா ரொட்றிக்ஸ் 10 பவுண்டறிகள் உட்பட 69 ஓட்டங்களுடனும் ஹாமன்ப்ரீத் கோர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
கருத்து படங்கள்
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார்.
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!
தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார்.
மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார்.
“நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல்.
திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார்.
இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது.
இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது.
கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார்.
மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.