Aggregator

தமிழத்தேசியத்துடன் முந்தானை விரித்து படுத்தெழும்ப ஆயத்தமாகும் விபச்சாரிகள்

2 months ago

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் தற்போது பெரும் அரசியல் தகிடுதாளங்கள் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மக்களுக்கு உள்ள தமிழ்த்தேசியப்பற்றையும் புலிகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உள்ள செல்வாக்கையும் வைத்து அதனை மூலதனமாக்கி தமக்கான வாக்கு வேட்டை நடாத்தவே தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் முன்னிலையில் நிற்கின்றார்கள்.

வடக்கில் தற்போது 3 அணிகள் தமிழ்த்தேசியத்தையும் புலிப்பபுராணத்தையும் வைத்து களமிறங்க ஆயத்தமாகியுள்ளன. வீட்டுச்சின்னம் மற்றும் சைக்கிள், இன்னொன்று தற்போது புதிதாய் அவதாரம் எடுத்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அணி என்பனவாகும்.

தற்போது முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமாகி வரும் சமயத்தில் தமிழ்த் தரப்புக்கள் பல்வேறு துண்டங்களாக பிரிந்து சிதறிப் போயுள்ளன. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி அரசியலில் குதித்தவர்களது அந்தரங்கத்தை தற்போது அனைவரும் பார்க்க கூடியதாக உள்ளது. வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணசபைக்குள்ளேயே இவர்களின் வண்டவாளங்கள் வெளிப்பட்டன.

அதிகாரங்கள் அற்ற வடக்கு மாகாணசபைக்குள்ளேயே யார் பெரியவர், யார் அதிகாரம் மிக்கவர் , யார் அதிக ஊழல் செய்தவர் என்று தமக்குள்ளேயே அடிபட்டவர்கள் தற்போது வெளியே வந்துள்ளார்கள். இதை மக்கள் பார்க்காமல் இருப்பார்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் உண்ணி போல் ஒட்டியிருந்து தமக்கு மட்டுமே நன்மைகளைப் பெற்ற தமிழ்த்தேசியநாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள். இந்த உறுப்பினர்கள் இவ்வளவு காலமும் தமிழர்களுக்கு என்ன நன்மைகளைப் பெற்று கொடுத்தார்கள் என்று அவர்கள் கூறுவார்களா? குறைந்தது ஒரு அரசியல்கைதியையாவது அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்களா? ஒன்றுமே அவர்கள் செய்து முடிக்கவில்லை. இந் நிலையில் நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக எதற்காக குரல் கொடுக்க இருந்தார்கள் என்பதை வாக்களிக்கப் போகும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.  அவர்கள் ரணில் பக்கம் நிற்பதற்கான முழுக் காரணம் என்னவென்றால் ரணில் தரப்பால் கொடுக்கப்படவிருந்த பல கோடிரூபா பேரத்தொகையே காரணமாகும்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. இனி இவர்களுக்கான அந்த பேரத்தொகை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மும்முரமாக செய்து கொண்டிருப்பார்கள். இந் நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன்னர் போட்டியிட்ட அதே முகங்களே மீண்டும் களமிறங்கப் போகின்றார்கள். சைக்கிள் கட்சியிலும் அதே நிலைதான் என தெரியவருகின்றது. இதே வேளை முதலமைச்சர் அணி என்ற ஒன்று கிளம்பியுள்ளது. அந்த அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள் என அறியமுடிகின்றது.

வட பகுதியில் தற்போது கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் விசனத்தை மூலதனமாகக் கொண்டு சைக்கிள் அணியும் முதலமைச்சர் அணியும் களமிறங்கினால் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெறலாம் என அரசியல்அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த வேளையில் அந்த இரு அணியும் சேருவதற்கு வாய்பே இல்லை என் நிலை வந்துள்ளது. கூட்டமைப்பு உட்பட தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடப் போகும் இவ்வாறானவர்கள் தேர்தல்காலத்தில் கூட ஒன்றிணையவில்லை. அதன் பினர் இவர்கள் தனித்தனியே வென்று நாடாளுமன்றம் சென்றால்கூட தமிழர்களுக்கு ஆதரவாக வரும் வாய்ப்புகளை ஒ்ன்றாக நின்று பெற்றுக் கொடுப்பார்களா??

எழிலனின் மனைவி என்ற ஒரே ஒரு பெயரை வைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக வென்று மாகாணசபை சென்ற அனந்தி தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்காக என்ன செய்தார்? தனது அந்தரங்ககாரியதரிசியாக ஒரு முஸ்லீம் இளைஞனையே வைத்திருந்த அனந்திக்கு அந்த பதவிக்கு தமிழ் இளைஞர்கள் கிடைக்காமல் போய்விட்டார்களா?

அனந்தி மகளீர் அமைச்சராக இருக்கும் போது இறுதியுத்தத்தில் ஆயுதப்படைகளால் கேவலப்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களை பெற்றாரா? அவற்றை பெற்று அவர்களுக்கு நீதி கிடைக்க வழி சமைத்தாரா? எதுவுமே அனந்தி செய்யாது தனக்கு சொத்துத் சேர்ப்பதிலேயு குறியாக இருந்தார்.

அதே போலவே ஐங்கரநேசன் பெரும் ஊழல் செய்தது தொடர்பாக வடக்கு மாகாணசபையில் பெரும் களோபரம் உருவாகி மாகாணசபையே ஐங்கரநேசனால் அழிந்து போகும் நிலையையும் உருவாக்கியவர் அவர். முன்னாள் ஆயுததாரியான சுரேஸ் தற்போது எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாது இருக்கும் நிலையில் முதலமைச்சருடன் ஒட்டினாலேயே தனக்கு விடிவு காலம் என்று அறிந்து அவருடன் ஒட்டினார்.

இ்வ்வாற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சரவணபவன் போன்றோரும் நாடாளுமன்றிலோ அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலோ இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட யுத்த மனித உரிமை மீறல்கள்இன அழிப்புக்கள் தொடர்பாகவோ மூச்சுக்கூட விடவில்லை.

இவ்வாறான நிலையில் இனிவரும் நாட்களில் உங்கள் வீடுகளுக்கு கை கூப்பி கும்பிட்டுக் கொண்டு வரும் தமிழ்த்தேசிய அரசியல் போலிகளை நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமது பதவிக்கும், புகழுக்கும் இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் முந்தானை விரித்துப் படுக்கவே இவர்கள் ஆயத்தமாவார்கள்.

16693-1-9dab130956f9716f052f07ca50bfa896.jpg

http://www.jaffnaboys.com/news/16693

ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

2 months ago
ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வி அளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயார். கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்பற்றுவதற்கு நான் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/13/news/34340

ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

2 months ago
ஐதேக தலைவராக, பிரதமர் வேட்பாளராக நிற்கத் தயார் – சஜித் பிரேமதாச

 

sajith-premadasa-300x200.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வி அளித்த அவரிடம், கட்சிக்குத் தலைமையேற்கத் தயாராக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ”சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டால்,எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கட்சியின் தற்போதைய தலைமை மற்றும் ஏனையவர்களின் ஆதரவு இருந்தால், எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயார்.

கட்சித் தலைவராக வருவதற்கு காட்டுச் சட்டங்களை, பின்பற்றுவதற்கு நான் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/13/news/34340

 

மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

2 months ago
மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தாம் பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த படுகொலைச் சதியில் தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்திருந்தார். சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மூல காரணியாக இருந்த நாமல் குமார, பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருப்பது, இந்தப் படுகொலைச் சதித் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. http://www.puthinappalakai.net/2018/11/13/news/34342

மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

2 months ago
மொட்டில் போட்டியிடுகிறார் நாமல் குமார – வெளுத்தது சாயம்

namal-kumara-300x200.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

தாம் பொதுஜன  முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாமல் குமார் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் படுகொலைச் சதித் திட்டத்தில் முதலில் பாதாள உலகை சேர்ந்தவரையும், காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம்சாட்டிய நாமல் குமார பின்னர், சரத் பொன்சேகாவையும் அதில் தொடர்புபட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த படுகொலைச் சதியில் தொடர்பிருப்பதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மூல காரணியாக இருந்த நாமல் குமார, பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருப்பது, இந்தப் படுகொலைச் சதித் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/11/13/news/34342

 

மனுகா தேன்(Manuka Honey)

2 months ago
தேன்கூடு வைத்து, வீடுகள், தோட்டங்களில் வைதது, கலப்படமற்ற சுத்தமான தேனை, உள்ளூர் அரச சான்றிதலை பெற்று, தேனீ வளர்ப்போர் சங்கம் மூலம் விற்கின்றனர். ஊரில் இருந்து தேன் என்ற பெயரில் வரும் கலப்படத்திலும் பார்க்க இது பாதுகாப்பானது. அதை வாங்காமல், கண்ணுக்கு தெரியாத ஊரில இருந்து வருவது நல்லதா கெட்டதா என்று குடைகிறோம்.

தந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக மாணவி!

2 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள் இந்த மாணவிக்கு. இத்தகைய உணர்சிவசப்பட்ட முடிவுகளால் அநியாய உயிரிழப்புகளே ஏற்படுகின்றன.

இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம்

2 months ago
இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர். எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய காலஅவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகும். சிறிலங்கா வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் இந்த வழக்கு, ஒட்டுமொத்த இலங்கைத் தீவை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது. சட்டப்போரில் சட்டநிபுணர்கள் சிறிலங்காவின் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டவாளர்கள் இந்த மனுக்களின் சார்பில் வாதிடுகின்றனர். இரா.சம்பந்தனின் சார்பில் சட்டவாளர் கனக ஈஸ்வரனும், சம்பிக்க பெர்னான்டோ சார்பில் சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரனும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சார்பில், சட்டவாளர் ஹஜிஸ் ஹிஸ்புல்லாவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், சட்டவாளர்கள் றொனால்ட் பெரேரா, சுரேன் பெர்னான்டோ ஆகியோரின் உதவியுடன் சட்டவாளர் திலக் மாரப்பனவும், நேற்று நீதிமன்றில் முன்னிலையாகினர். இவர்கள் தவிர, சட்டவாளர்கள் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, லால் விஜேநாயக்க, ஜே.சி.வெலியமுன உள்ளிட்ட சட்டவிற்பன்னர்களும் உச்சநீதிமன்றில் நேற்று முன்னிலையாகினர். http://www.puthinappalakai.net/2018/11/13/news/34332

இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம்

2 months ago
இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம் Supreme-Court-300x200.jpgநாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய காலஅவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகும்.

சிறிலங்கா வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் இந்த வழக்கு, ஒட்டுமொத்த இலங்கைத் தீவை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது.

சட்டப்போரில் சட்டநிபுணர்கள்

சிறிலங்காவின் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டவாளர்கள் இந்த மனுக்களின் சார்பில் வாதிடுகின்றனர்.

இரா.சம்பந்தனின் சார்பில் சட்டவாளர் கனக ஈஸ்வரனும், சம்பிக்க பெர்னான்டோ சார்பில் சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரனும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சார்பில், சட்டவாளர் ஹஜிஸ் ஹிஸ்புல்லாவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், சட்டவாளர்கள் றொனால்ட் பெரேரா, சுரேன் பெர்னான்டோ ஆகியோரின் உதவியுடன் சட்டவாளர் திலக் மாரப்பனவும்,  நேற்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இவர்கள் தவிர, சட்டவாளர்கள் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, லால் விஜேநாயக்க, ஜே.சி.வெலியமுன உள்ளிட்ட சட்டவிற்பன்னர்களும் உச்சநீதிமன்றில் நேற்று முன்னிலையாகினர்.

http://www.puthinappalakai.net/2018/11/13/news/34332

இரத்தம்! … மு.தளையசிங்கம்

2 months ago
இரத்தம்! … மு.தளையசிங்கம். November 12, 2018 சிறப்புச் சிறுகதைகள் (18) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – மு.தளையசிங்கம் எழுதிய ‘இரத்தம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ‘இன்னும் இந்தப் பு… அவங்கட…. ஊ… போறாங்கள்!” சோமு, ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத்தாலும் உடலாலும் எல்லாவற்றாலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்கலின் நோவை, விழுந்தெழும்பியதினுள் ஏற்பட்ட வெட்கத்தைத் தனியே அனுபவிக்கத் தான். கமலம் அவனைத் தாண்டி அப்பால் போய் விட்டாள். ஆனல் அவள் பேசியவை அவனைச் சுற்றியே இன்னும் நின்றன. பச்சையாக நின்றன. சோமு அவற்றை ஒருக்கால் தன் வாயில் மீட்டிப் பார்க்க முயன்றன். முடியவில்லை. வாயில் வருவதற்கு முன் நினைவில் வரும்போதே நிர்வாணமாகிவிட்ட ஒரு கூச்சம் அவனைக் குறுகவைத்தது. எப்போதாவது இடுப்பிலிருந்து கழன்று விழப்போகும் சாரத்தைக் கை தூக்கும் போது கூடவரும் உடலின், உள்ளத்தின் ஓர் குறுக்கம். அவனுள் முடியவில்லை. அவனுக்கு அவை பழக்கமில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதம் அதற்கு மாறானது. சின்ன வயதில் இரத்தினபுரிக்கு அவன் படிக்கப் புறப்பட்டபோது ஆச்சி அவனுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொடுக்கும் புத்திமதிகள் அப்போது நினைவுக்கு வந்தன. அப்பு நீ மரியாதையா நடக்கோணுமப்பு. மரியாதையாப் பேசோணும். கெட்ட பேச்சுப் பேசக் கூடாது, என்னப்பு? நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும். மற்றப் பொடியளோடு சேந்து விளையாடித் திரியக்கூடாது, கெட்ட பழக்கங்கள் பழகக்கூடாது. நல்லாப் படிச்சு மரியாதையா வரோணும், என்னப்பூ? ஒவ்வொரு சமயமும் ஊரிலிருந்து புறப்படும் போதெல்லாம் அதுதான் ஆச்சியின் வாயிலிருந்து அடிக்கடி வரும் உபதேசம். அவற்றைச் சொல்லும்போது அவனது முகத்தைத் தடவிவிட்டுக்கொண்டே தன் தலையை ஆட்டி ஆட்டி ஆச்சி சொல்லும் விதத்தை இப்போதும் அவனுல் நினைத்துப் பார்க்க முடிந்தது. ஆச்சி ஊட்டிய பால், ஆச்சி தீத்திய சோறு என்பனபோல் ஆச்சி வகுத்த அவனுடைய வாழ்க்கை அது. அது அவனை என்றுமே கைவிட்டதில்லை. இரத்தினபுரியில் அப்பரின் கடையில் நின்று படித்த போதும் அதற்குப்பின் இப்போ கிளறிக்கலில் எடுபட்டு அதே ஊரில் வேலை பார்க்கும் போதும் அங்குள்ளவர்கள் அவனைப்பற்றிக் கூறுபவை அதற்கு அத்தாட்சிகள். தங்கமான பிள்ளை! கந்தையர் முதலாளியற்ற மகன் இருக்குதே அதுதான் பிள்ளை! அவனே தன் சொந்தக் காதால் அவற்றைக் கேட்டிருக்கிறான். அப்படி வளர்க்கப்பட்டதினால்தானா இப்போ கமலம் சொன்னதை அவனுள் திருப்பிச் சொல்ல முடியாமல் இருந்தது? ஆனல் அதுதான் காரணமென்றால் கமலத்தால் கூட அப்படிப்பேச முடியாதே! சோமுவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவனைவிட வித்தியாசமாய் கமலம் வளர்க்கப்படவில்லையே! அவனைப் போலத் தானே அவளும் வளர்க்கப்பட்டாள்! அவளின் அப்பர் கார்த்திகேசரும் கொழும்பில் ஒரு முதலாளி. கந்தையரை விடப் பெரியமுதலாளி. ஏன், கமலத்தின் ஆச்சியும் அதே தங்கந்தானே? சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. அவனைப்பற்றி இரத்தினபுரிச் சோற்றுக்கடையில் ஒவ்வொருவரும் புகழ்கிறார்கள் என்றால் கமலத்தை ஊரில் ஒன்பதாம் வட்டாரத்திலுள்ள ஒவ்வொருவரும் புகழ்ந்திருக்கிறார்கள். அவனே அதைக் கேட்டிருக்கிறான் , அதுமட்டுமல்ல. அப்படிக் கேட்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவுதான் அடிக்கடி வரும். தங்கமான பிள்ளை. சோற்றுக்கடையில் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அப்போ கமலமும் அவனும் ஒரே வர்க்கமா? ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் அவன் நினைத்திருக்கிறான். அதே வர்க்கம், அதே கலாசாரம். எது யாழ்ப்பாணக் கலாசாரம் என்று சொல்லப்படுகிறதோ அதைத் தன் சொந்தக் கலாசாரமாக வைத்திருக்கும் அந்த மத்தியதர வகுப்புக்கே உரிய பாணியில் எப்படி சோமு வளர்க்கப்பட்டானோ அப்படித்தான் கமலமும் வளர்க்கப்பட்டாள். சோமுவுக்கு இன்னும் அந்தக் கலாசாரத்தின் தரத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. சந்தேகம் ஏற்படும் என்ற நினைவே அவனுக்கு இல்லை. ஒன்பதாம் வட்டாரத்திலிருந்து பத்தாம் வட்டாரத்துக்கு பஸ்ஸுக்காக நடந்துவர முன் அடுத்தவளவில் உள்ள ஐயனார் கோயிலில் கும்பிட்டு விட்டு ஆச்சியையும் கொஞ்சி விட்டுப் புறப்படும்போது வட்டமாய் உடைந்த தேங்காய்ப் பாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு *பத்திரமாய்ப் போய்வாப்பு” என்று வழியனுப்பிய அந்த உருவம் அவன் நெஞ்சைவிட்டு என்றுமே மறையாது. அது இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கையும் போகாதென்றே அவனுக்குப்பட்டது. எப்படி அவனது ஆச்சி அந்தக் கலாசாரத்தின் உருவமாகத் தெரிகிறளோ அப்படித்தான் கமலமும் அவனுக்கு ஒரு காலத்தில் தெரிந்தாள். தலைகுனிந்து மணவறையில் பொன்னம்பலத்துக்குப் பக்கத்தில் அவள் இருந்த காட்சி சோமுவுக்கு இன்னும் நினைவிருக்கிறது. கழுத்தில் கிடந்த தங்கக் கொடியின் பின்னணியில் பொலிந்து சிரித்த முகத்தோடு அவனைக் காணும் போதெல்லாம் ‘எப்படித் தம்பி?’ என்று அவள் விசாரிப்பது இன்னும் அவனின் நினைவை விட்டு மறையவில்லை. அவளைப்போலத்தான் இளமையில் அவனது ஆச்சியும் இருந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்கிருன், ஆச்சியைப்போலத்தான் கமலமும் பிற்காலத்தில் வருவாள் என்று அவன் கற்பனை செய்திருக்கிருன். ஆனால் கமலம் அப்படி வரவில்லை. அவள் இப்போ பேசிக்கொண்டு போனது போல் அவனது ஆச்சி ஒருநாளும் பேசியதேயில்லை. கமலத்துக்குப் பைத்தியமா? ஊர் அப்படித்தான் சொல்கிறது. பொன்னம்பலம் செத்தபின் அவள் அப்படி ஒருகோலத்தில் தான் திரிகிறளாம். வீட்டில் இருப்பதில்லை. வடிவாக உடுப்பதில்லை. சரியாகச் சாப்பிடுகிறாளோ தெரியாது. இப்போ எவ்வளவோ மெலிந்து விட்டாள். முன்பு பூரித்துத் தெரிந்த முகம் இப்போ எவ்வளவு கோரமாக இருக்கிறது! வைத்தியம் எதுவும் பலிக்கவில்லை. கல்யாணம் செய்யவும் விரும்பவில்லை. எங்கெல்லாம் திரிகிறாளோ தெரியாது. யார் வீட்டில் படுக்கிறாளோ என்னென்ன செய்கிறாளோ தெரியாது. வீட்டில் அவளைக் கட்டிவைத்துக் கூடப் பார்த்திருக்கிறார்களாம். ஆனால் முடியவில்லை. அப்படியெல்லாம் அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். பார்த்ததில்லை. எவ்வளவோ நாட்களுக்குப்பின் இன்றுதான் சோமு அவளைப் பார்த்திருக்கிறான். அதனால்தான் தூரத்தில் வரும்போதே அவன் சிரிக்கமுயன்றான், ஆனல் அவள் அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அப்படிப் பச்சையாகப் பேசிக்கொண்டு போகிறாள். சுத்தப் பைத்தியம்! ஆனல் சுத்தப் பைத்தியம் என்றால் அவள் அப்படிப் பேசியிருக்கமாட்டாளே! சோமுவுக்கு அது நெஞ்சை உறுத்திற்று. அவள் சொன்னதில் உண்மை இருந்தது. அதுதான்! அவளைப் பைத்தியம் என்று தட்டிக்கழிக்க அவனால் முடியவில்லை. ஏதோ ஒன்று பிழைப்பதுபோல் பட்டது. அவளிலும் குற்றமில்லை தன்னிலும் குற்றமில்லை என்று அவனல் நியாயமாக்கிச் சரிக்கட்டல் செய்து தப்பமுடியவில்லை. அவள் சொன்னதில் உண்மை இருந்தது, இருக்கிறது! சோமுவுக்குத் திரும்பவும் ஒரு குறுக்கம். உண்மையில் நான் ஆரம்பத்தில் வெட்கப்பட்டது அவள் ஊத்தையாகப் பேசிவிட்டாள் என்பதற்காகவா அல்லது உண்மையைச் சொல்லிவிட்டாள் என்பதற்காகவா? அல்லது இரண்டுக்குமாகவா? சோமுவால் எதையுங் கண்டுபிடிக்க முடியவில்லை. பயமா? தெரியாது. ஆனல் பழைய நினைவுகள் ஏனே வேண்டாமலே ஓடிவந்தன. கமலமும் போயிருக்கிறாள். ஆமாம் இப்படித் தடபுடலாக உடுத்துக்கொண்டு பஸ் ஏறிப்போயிருக்கிறாள். பாணந்துறை அங்குதான் பொன்னம்பலம் கடை வைத்திருந்தான். புதுமுதலாளி, புது மாப்பிள்ளை. நான்கு வருடங்களுக்கு முன் தானே அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்? ஆமாம் நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான்கு வருடங்களால்தான் கமலம் சோமுவுக்கு மூப்புங் கூட. கல்யாணம் நடந்தபோது சோமு கிளறிக்கலில் எடுபடவும் இல்லை. ஊரில்தான் நின்றன். கல்யாண வீட்டுக்கும் போயிருக்கிறான். அவனுக்கு எல்லாம் நினைவிருக்கிறது. தலைகுனிந்து மணவறையில் பூக்கொத்துத் தெரிய கமலம் அழகாக உட்கார்ந்திருந்தாள். அதற்குப்பின் அடுத்த மாதமே அவனைப் பொன்னம்பலம் கூட்டிக்கொண்டு போய்விட்டான். பாணந்துறையில் வீடெடுத்து வைத்திருப்பதற்காக. ஆனால் பாவம் எத்தனை காலம் இருந்தார்கள்? சோமுவுக்கு அதற்குப்பின் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. ஒரு கஷ்டம். அவன் எப்பவுமே அப்படித்தான். அந்தக் கதை வரும்போது அவன் தட்டிக் கழித்துவிடுவான். ஆனல் இப்போ மட்டும் அது தப்பும் மனப்பான்மையாகப்பட்டது. ஒரு குறுக்கம். சோமு அதை வேண்டுமென்றே வருவித்தான். இப்போ அதை வருவிப்பது ஒருவித பலப்பரீட்சையாக அவனுக்குப்பட்டது. அவர்கள் போனபின் ஐந்து மாதங்களுக்குள் இனக் கலகம். பொன்னம்பலத்தின் கடை தட்டப்பட்டது. கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போகமுன் அவர்கள் வந்துவிட்டார்கள். வீட்டுக்குப் போனாலும் தப்பிவிடலாம் என்ற நிச்சயம் இல்லை. ஆனல் போகத்தான் வேண்டும். கமலம் அங்குதான் இருந்தாள். வேலைக்காரப் பையன் என்ன செய்வான்? கடையை விட்டுவிட்டுப் பொன்னம்பலம் பின் பக்கத்தால் ஓடினன். ஆனல் வீட்டுக்குப் போகமுடியவில்லை. கூட்டம் ஒன்று துரத்திற்று வேறு வழி இருக்கவில்லை. எதிரே தெரிந்த கோயிலுக்குள் புகுந்துவிட்டான். கடவுள்தான் காப்பாற்றவேண் டும். கோயிலுக்குள்ளாவது அடைக்கலம் கிடைக்காதா? ஆனல் கடவுளையே காப்பாற்ற யாரும் அங்கு இல்லை. கோயிலுக்கே அடைக்கலம் கிடைக்கவில்லை. கோயிலையே காடையர்கள் கொளுத்தத் தொடங்கி விட்டார்கள். பொன்னம்பலம் ஒடி ஒரு மரத்தில் ஏறினானாம். என்ன ஏறினானாம்? என்ன “னாம் ? சோமுவின் நினைவில் ஒரு குத்தல் குறுக்கிட்டது. அந்தக் கட்டத்துக்குப்பின் எப்பவுமே அவனுக்கு ஒரு நடுக்கந்தான். அந்தக் கதையை மற்றவர்கள் சொல்லும்போது அவன் வெளியே எழுந்து போய் விடுவதுமுண்டு. அதைப் பச்சையாக நினைத்துப் பார்க்க அவனால் முடிவதில்லை. ஆனல் முன்பு அதைத் தட்டிக்கழித்துவிட்டு நிம்மதியாக இருக்க முடிந்த அவனல் இன்றுமட்டும் கமலத்தைக் கண்ட பின் ஏனே அது முடியவில்லை. இன்று தான் அவனுக்கு இதுவரை அதைத் தட்டிக்கழித்திருக்கிருன் என்ற நினைவே வந்திருக்கிறது. அவன்.திரும்பவும் மீட்டிப் பார்க்க முனைந்தான். பச்சையாக, பச்சையாக. பொன்னம்பலம் மரத்தில் ஏறினான். ஆனல் அவர்கள் விடவில்லை. துரத்திக்கொண்டு போனார்கள். இழுத்துக் கீழே போட்டார்கள். பொன்னம் பலம் கும்பிட்டான், கையெடுத்துக் கும்பிட்டான். கத்தி அழுதான். சோமுவுக்கு அதை நினைக்கும் போது அந்தக் கட்டத்தில் தானும் அப்படித்தான் செய்திருப்பான் என்றே பட்டது. இல்லை, நான் சும்மாவே செத்திருப்பேன். நினைக்கவே பயப்பட்டால் அதை நேரடியாகச் சந்தித்திருந்தால்? பொன்னம்பலம் கும்பிட்டான். அவர்கள் அதற்காக விடவில்லை. அடித்தார்கள், உதைத்தார்கள். அணுவணுவாய்க் கொன்றுவிட்டார்கள். பொன்னம்பலம் அப்போ எப்படிக் குழறியிருப்பான்? சோமுவுக்குக் கண்ணிர் வருவதுபோலிருந்தது. ஆனல் அதேசமயம் அது வேறுதிசையில் விசயத்தை வேண்டுமென்றே மறைக்கமுயல்வது போல் பட்டது. பிறகு? ஆமாம் அதுதான் முக்கியம். அவன் வேண்டுமென்றே திரும்பவும் முனைந்தான். பச்சையாக, பச்சையாக. 、 பொன்னம்பலம் செத்துவிட்டான். ஆனல் அவர்கள் அதற்குப்பின்பும் விடவில்லை. அவனைக் கட்டி – அவனைக் கட்டி – இம், ம், சொல்லு – கட்டி றோட்டு றோட்டாக இழுத்தார்கள். பின்பு? சோமு அதை வாந்தி எடுப்பதுபோல் வெளியே கக்கினான். பெற்றோல் ஊற்றி நெருப்புவைத்துப் பற்ற வைத்து எரிய எரிய இழுத்தார்கள், தெருத்தெருவாக இழுத்தார்கள்! சோமுவுக்கு வியர்த்தது. கைலேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பஸ் வருகிறதா என்று அவசரமாகப் பார்த்துக் கொண்டான். வரவில்லை. ஏதோ துன்பம் நெஞ்சை நிறைத்தது. ஏன்? ஆம், கமலம்? ஆமாம் இன்னும் இருக்கிறது. சோமு திரும்பவும் பஸ் வருகிறதா என்று பார்த்தான். வரவில்லை. ஆயிரம் வருடங்களாக அந்தப்பக்கம் பஸ் வராதது போல் அவனுக்குப்பட்டது. ஆனல் விசயம் வேறு என்றும் புரியாமலில்லை. ஆமாம், கமலம்? வேலைக்காரன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான். கமலம்? அவளால் ஓடமுடியவில்லை. பிடித்துவிட்டார்கள். எட்டுப்பேர்கள். பின்பு மயங்கிய நிலையில் பொலிஸ் ஜீப் காப்பாற்றியது. கொழும்புக்கு அனுப்பி அகதிக்கப்பலில் இங்கு அனுப்பப்பட்டாள். பைத்தியம்! இல்லை, பைத்தியம் மாதிரி. ஆனல் சோமுவால் திருப்திப்பட முடியவில்லை. பஸ் வருகிறதா என்று எட்டிப்பார்த்தான். புங்குடுதீவில் பஸ் என்ற ஒன்று ஓடுகிறதா? பஸ்ஸை விட்டுவிடு, கமலம்?. பச்சையாக, பச்சையாக… எட்டுப்பேர்கள் – இம், ம், -ஒருவன், மற்றவன்… இம்… அப்படி எட்டுப்பேர்களும். இம்… ஐந்து… ஐந்துஸெல் டோர்ச்… சோமுவால் அதற்குப்பின்பு முடியவில்லை. தலை ஏனோ சுற்றுவது போல்பட்டது. மயக்கம் போடுவதுபோல் வந்தவேளையில் சிவப்பாகத் தெரிந்தது. சோமு வேகமாகக் கையை உயர்த்தினன். பஸ் வந்து நின்றது. ஆனால் கால்கள் நகர மறுத்தன. இன்னும் அவங்கடையை… “தம்பி, ஏறுமன் கெதியா?” கண்டக்டர் சினந்தான். சோமு கஷ்டப்பட்டு ஒருபடியாக ஏறினான். ஆனல் அடுத்தகணம் கால்தட்டுப்பட்டு உள்ளே விழுந்து விட்டான், பெட்டியும் கையுமாய். முன்னல் இருந்த சீட்டின் முனை கண்ணா மண்டையில் நல்லாக அடித்து விட்டது. பஸ்ஸுக்குள் பரபரப்பு, சிரிப்பு எல்லாம். சோமு ஒருவாறாகச் சமாளித்துக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். அடிபட்டபின் எல்லாம் தெளிந்துவிட்டது. வலதுகண் மேல் முனையில் மட்டும் வலிவலியென்று வலித்தது. அடிபட்ட இடத்தை கையால் தேய்த்துவிட்டான். கைவிரலில் மெல்லிய இரத்தக் கசிவின் அடையாளம் தெரிந்தது. இரத்தம்! இரத்தம்! ஏதோ ஒரு பழைய பயம் உள்ளே ஒலித்தது. ஆமாம், ஒரு காலத்தில் அந்தளவு இரத்தத்தைக் கண்டாலும் அவன் பயந்து அழுதுவிடுவான். சின்னப் பையனாய் இருந்த காலத்தில் அடுத்த வீட்டுப் பூச்சன், பனையிலுள்ள பெருங்குளவிக் கூட்டுக்கு வீசிய சின்னக் கல் அவனது தலையில்பட்டதினால் மெல்லக் கசிந்த இரத்தத்தைக்கண்டு அவன் அழுது கத்தியிருக்கிறான் கருக்கில் ஒருக்கால் காலை வெட்டியபோது அவன் குழறியிருக்கிறான், ஏன், அதைக் கண்டு ஆச்சி கூடத் தலையில் அடித்து அடித்துக் குழறியிருக்கிறாளே! அதுமட்டுமா? ஆஸ்பத்திரியில் யாரோ ஒருவனின் மண்டையில் ஓடிய இரத்தத்தைக் கண்டு ஆச்சி மயங்கி விழுந்திருக்கிறாளாமே! சோமுவை ஏதோ குத்திற்று. திடீரென்று ஆச்சி காட்டிய வாழ்க்கையில், கலாசாரத்தில், ஏதோ குறையொன்று இருப்பது போல் முதன்முதலாக அவனுக்கு ஏதோ ஒன்று உணர்த்திற்று. பச்சையாக எதையும் ஆச்சி பார்ப்பதில்லை, காட்டியதில்லை!. இரத்தத்தைக் கண்டால் மயக்கம். நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும், கெட்ட பேச்சுப் பேசக்கூடாது என்னப்பூ?… மரியாதையாப் பழகோணும் மரியாதையாப் பேசோணும், என்னப்பூ?… தங்கமான பிள்ளை! கந்தையருடைய பிள்ளை இருக்குதே அது தான் பிள்ளை! எல்லாம் ஒரு பூச்சு, பச்சையாக எதையும் அணுகாத ஒரு பூச்சு வாழ்க்கை! அதனால்தானா இப்போ கமலம் பேசியது பைத்தியம் அல்ல என்று பட்டும் அவன் பயணம் போகிறான்? சோமு தன்னையே கேட்டுக் கொண்டான். அதனல்தான இன்னும் அவங்கடைய -இம், பயப்படாமல் சொல்லிப் பார், இன்னும் அவங்கடையை ஊ… அங்கே போகிறேன்? அதனால்தான வெட்கம் என்பது இல்லாமல் கமலம் என்ற ஒரு பெண்ணின், ஏன் கமலம் என்ற ஒரு இனத்தின், கமலம் என்ற ஒரு கலாசாரத்தின், கமலம் என்ற ஒரு மொழியின் விதவைக் கோலம் என்ற முதலில், விசர்க் கோலம் என்ற முதலில், என் வாழ்க்கை வருமானம் என்பவற்றை உழைக்கப் போகிறேன்? அதனல்தானா, அந்த மேல் பூச்சுக் கலாசாரத்தினால்தானா கமலத்தின் மனநிலையும் அந்த ஒரு நிகழ்ச்சியால் முற்றாக மாறித் திருத்த முடியாத வகையில் சீர்குலைந்து போயிற்று? அதனால்தானா ஒவ்வொரு சமயமும் அதைப் பற்றிய நினைவிலிருந்து நான் ஒளித்து மறைய முயன்றிருக்கிறேன்? அதனால்தானா? அந்தத் தப்பும் மனப்பான்மையால் தான் சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல்லாம் அவன் பேசியிருக்கிறான், அதுவும் பிரச்சனையைக் கடத்தித் தள்ளிப்போட்டுத் தப்பப்பார்க்கும் அதே மனப்பான்மைதானா? கச்சேரியடியில் உட்கார்ந்து விட்டு, இரண்டுகிழமை தாடிவளர்த்து வழித்து விட்டு அவன் திருப்திப்பட்டிருக்கிறான். அதே தப்பும் மனப்பான்மை தானா? ‘தம்பி, இரத்தம் வழியுது, லேஞ்சியால் கட்டி விடும்’ என்றான் கொண்டக்டர். கொண்டக்டர்! வழிநடத்துபவர்! இந்த வழி நடத்துபவர்கள் எல்லாருக்கும் பச்சையாகப் பார்க்கமுடியாதா? கட்டிமறைத்துக் கடத்தத்தானா தெரியும்? *பறுவாய் இல்லை. வழியட்டும், கொஞ்ச ரத்தம் வழிஞ்சால் செத்துவிடமாட்டன்’ என்றான் சோமு. கொண்டக்டர் விழித்தான். அவனுக்குப் புரியவில்லை. ஆனால் சோமுவுக்குத் தான் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நன்றாகப் புரிந்தது. கண்ணா மண்டையில் கசிந்த இரத்தத்தை கைவிரலால் தொட்டு அளையத் தொடங்கினான். http://akkinikkunchu.com/?p=67574

பிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி!

2 months ago
குருநாகலவில் மீண்டும் களமிறங்குகிறார் மகிந்த வரும் ஜனவரி 05ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். பொதுஜன முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன, இந்தத் தகவலை தெரிவித்தார். “பல்வேறு மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும், அவர் கடந்தமுறை போட்டியிட்ட குருநாகல மாவட்டத்திலேயே போட்டியிடுவார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச குருநாகல மாவட்டத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/13/news/34338

சி.வி.யின் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குகின்றது

2 months ago
”எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று” – விக்னேஸ்வரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணி உடனடியாக ஒரு முடிவை எடுக்கும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. “மக்கள் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தல் வந்திருக்கிறது. எமது கட்சி அதில் கவனம் செலுத்தும். அரசியல் நெருக்கடிகளால் தான் இந்தச் சூழல் எழுந்தது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2018/11/13/news/34336

தந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக மாணவி!

2 months ago
தந்தை இறந்த செய்தி அறிந்ததும் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த வவு. பல்கலைகழக மாணவி!
November 12, 2018
train_L.jpg

தந்தை இறந்த செய்தி கேட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாத மகள், புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த பல்கலைகழக மாணவியான இவர், கண்டியில் தற்கொலை செய்துள்ளார்.

வவுனியா கற்குளத்தை சொந்த இடமாக கொண்ட, கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 2ஆம் வருட மாணவி செல்வநாயகம் மதுசா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் இயற்கை எய்தினார்.

இந்தச் செய்தி பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பயிலும் அவரது மகளுக்கு உறவினர்களால் அறிவிக்கப்பட்டது.

அந்தச் செய்தி கேட்ட அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அங்கிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து அவர் யாக்கா பாலத்துக்குச் சென்றமை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவியின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

http://www.pagetamil.com/23475/

 

முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு.

2 months ago
முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு. (எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய முஸ்லிம் பாரம்பரிய கலைகலாசார நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கோலாட்டம் களிகம்பு, சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைமன்றங்களின் உறுப்பினர்கள், பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டு வயது வித்தியாசமின்றி தங்களுடைய ஆற்றல்களை வெளிப்படுத்தினார்கள்.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ. குணபாலன் மற்றும் வாழைச்சேனை மத்தி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ், காத்தான்குடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜாவாஹிர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச சபையின் உறுப்பினர் பாயிஷா நெளபர் உட்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.madawalaenews.com/2018/11/f.html

முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு.

2 months ago

முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு நிகழ்வு.

 

_DSC0863.JPG

 

(எச்.எம்.எம்.பர்ஸான்)  
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி 
பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய முஸ்லிம் பாரம்பரிய கலைகலாசார நிகழ்வு  மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களிடம் அருகிவரும் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கோலாட்டம் களிகம்பு, சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைமன்றங்களின் உறுப்பினர்கள், பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டு வயது வித்தியாசமின்றி தங்களுடைய ஆற்றல்களை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ. குணபாலன் மற்றும் வாழைச்சேனை மத்தி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ், காத்தான்குடி பிரேதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜாவாஹிர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரேதேச சபையின் உறுப்பினர் பாயிஷா நெளபர் உட்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்  எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

_DSC0912.JPG

_DSC0917.JPG

_DSC0921.JPG

 

_DSC0847.JPG

 

_DSC0894.JPG

 

 

_DSC0906.JPGhttps://www.madawalaenews.com/2018/11/f.html

ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது!

2 months ago
ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது திரும்பப் பெறப்பட்டது! மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த மனித உரிமைகளுக்கான மிக உயரிய விருதை சர்வதேச மன்னிப்பு சபை திரும்பப் பெற்றுள்ளது. ரோஹிங்கிய முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து பேசாது, மனித உரிமைகளை மீறியதாக ஆங் சான் சூகி மீது குற்றம் சாட்டி இவ் உயரிய விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து பேசாது, படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஆங் சூகி ஈடுபட்டுள்ளார். முன்பு ஜனநாயகத்திற்காக பாடுபட்ட ஆங் சான் சூகியின் தற்போதைய செயற்பாடானது, வெட்கக் கேடான காட்டிக் கொடுக்கும் செயலாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டத்தில் புகழ் பெற்ற ஆங் சான் சூகி, தொடர்ச்சியாக பல சர்வதேச விருதுகளை பெற்றதுடன், சர்வதேச மனித உரிமைகள் குழு இவரை 2009ஆம் ஆண்டின் தமது நல்லெண்ண தூதுவராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஆங்-சாங்-சூகிக்கு-வழங்கப/