Aggregator

வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைத்தார் சிறிலங்கா அதிபர்

2 months ago
இலங்கை: தொலைப்பேசி அழைப்பை ஏற்காத தூதரை பணிநீக்கம் செய்தாரா அதிபர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதர் மற்றும் பிற தூதரக ஊழியர்கள்,இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லைஎனக்கூறி அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அதிபர்உத்தரவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA மைத்திரி பால சிறிசேன,வியானாவில் தூதரிடம் பேச விரும்பியுள்ளார். ஆனால், அங்குள்ள தூதரக அலுவலகத்தை நான்கரை மணி நேரமாக தொடர்பு கொள்ள முடியவில்லை "கடந்த வாரம் நான் தூதரிடம் பேச விரும்பினேன். என்னுடைய பணியாளர்கள் நான்கரை மணி நேரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். 6 தொலைப்பேசிகளிலும் மணி அடித்தது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. இது ஆஸ்திரியாவுக்கான தூதரகம் மட்டுமல்ல. மேலும் நான்கைந்து நாடுகளுக்குமான தூதரகமும் உள்ளது" "6 தொலைப்பேசிகளும் அடித்த நிலையில் நான்கரை மணி நேரமாக அதனை எடுக்க யாரும் இல்லை. இந்த ஒரு தூதரகத்துக்கு மட்டுமல்ல, மேலும் பிற தூதரகத்துக்கும் செய்தி அனுப்ப நான் விரும்பினேன்" என சிறிசேன தெரிவித்தார். தூதரையும், ஊழியர்களையும் ஏன் திரும்ப அழைத்தார் என கொழும்புவில் ஒரு விழாவில் பேசும்போது தெரிவித்தார். இந்நிலையில், தூதரகத்தின் தொலைப்பேசிகளை எடுக்கவில்லை என அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டார்கள் என்ற ஊடக செய்தியை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அனைத்து ஊழியர்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தவறு. தூதரும், பிற ஊழியர்களும் தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் சனிக்கிழமையன்று தெரிவித்தார். ஊழியர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனரா அல்லது அவர்களின் அலைப்பேசியில் அழைத்தனரா என்பது குறித்து சிறிசேன அலுவலகம் தெளிவுப்படுத்தவில்லை. https://www.bbc.com/tamil/sri-lanka-45552972

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

2 months ago
அப்ப நக்கல் அடிக்காமல்.. சீரியஸா கதைத்திருந்தால்.. வென்றிருப்பமாக்கும். நாம் தோற்றதற்கு பதிலை மகிந்தவே சொல்லிட்டார். உலக நாடுகள் குறிப்பாக.. ஹிந்தியாவின் உதவி இன்றி போரில் நிச்சயம் வென்றிருக்கவே முடியாதுன்னு. ஹிந்தியாவால்.. ஒரு சின்னத்தீவில் இருந்த புலிகளை தமிழர்களை அழிக்கத் தெரிந்திருக்கலாம்... ஆனால்.. அருகில் இருக்கும் சீனாவையோ.. பாகிஸ்தானையோ.. அது தொட்டும் பார்க்க முடியாது. 😏

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…

2 months ago
படத்தை பார்த்தால் கிந்தியாவின்ர டாடா நிறுவனத்தின் ரப்பா நெனோ கார் போல கிடக்கு .. இவ்வகையான கார் கிராஸ் ரெஸ்டில் ( crash test ) பெய்யில் என்பது குறிப்பிடத்தக்கது.😢

ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்

2 months ago
ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://www.tamilwin.com/world/01/193632?ref=imp-news

ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்

2 months ago
ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள்

 

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.

ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

https://www.tamilwin.com/world/01/193632?ref=imp-news

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

2 months ago
அடங்க மறுத்தவர்களை அடக்கி காட்டினார் திஸர ; வெற்றியிலக்கு 250 இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் திஸர பெரேராவின் அற்புதமான பந்து வீச்சுக் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்காக இலங்கைக்கு 250 ஓட்டங்களை நிர்ணயித்தது. அபுதாபயில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதற்கிணங்க ஆப்பாகானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மெஹாமட் ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் ஆகியோர் களமிறங்கினார். இவர்கள் இருவரினதும் நிதானமான ஆட்டத்தின் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஷஹ்சாத் 26 ஓட்டத்துடனும், ஜனாத் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இருப்பினும் 11.4 ஆவது ஓவரில் அகில தனஞ்சயவினுடைய பந்து வீச்சில் ஷஹ்சாத் எல்.பி.டபிள்யூ. முறையில் 34 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஜனாத்துடன் ஜேடி சோர்ந்தாட ஒரு விக்கெட் இழப்பிற்கு அணி 100 ஓட்டங்களை கடந்தது. இதற்கடுத்து இந்த ஜோடி 50 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜனாத் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் 45 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து அரைசாதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் அஸ்கார் ஆப்கானும் ஒரு ஓட்டத்துடன் செஹான் ஜெயசூரியவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஹஷ்மத்துல்லா ஷஹதி களமிறங்கி ஆடி வர, ஆப்கானிஸ்தான் அணி 30 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 34.2 ஓவர்களுக்கு அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 தொட, அடுத்த பந்தில் ரஹ்மத் ஷா விளாசிய நான்கு ஓட்டத்துடன் அவர் 63 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். 37.3 ஆவது ஓவரில் மலிங்கவின் பந்து வீச்சில் ரஹ்மத் ஷா அடித்தாட பிடியெடுப்புக்கான வாய்ப்பொன்று இலங்கைக்கு கைகூடி வந்தது. எனினும் அந்த பிடியெடுப்பினை தசூன் சானக்க நழுவ விட்டார். அதைத் தொடர்ந்து 40 ஓவர்களின் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ரஹ்மத் ஷா 66 ஓட்டத்துடனும் ஷஹதி 28 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர். எனினும் அவர் 41.1 ஓவரில் 72 ஓட்டத்துடன் சாமரவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, ஓட்ட குவிப்பின் வேகம் குறைவடைந்தது. இந் நிலையில் 43.5 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 200 ஐ தொட 44.2 ஓவரில் திஸரவின் பந்தில் ஷஹதி 37 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் நாபியும் 15 ஓட்டத்துடன் மலிங்கவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இவரையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரானும் 12 ஓட்டத்துடன் 47.5 ஆவது ஓவரில் திஸர பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பாடின் நாபியும் திஸரவின் பந்தில் அகிலவிடம் பிடிகொடுத்து 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அத்தாப் ஆலம் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே ஆறு ஓட்டமாக மாற்றி அசத்திக் காட்ட, 49.4 ஆவது ஓவரில் திஸர பெரோ, ரஷித் கானை பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற அடுத்து வந்த ரஹ்மானையும் திஸர பெரேரா பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஐந்தாவது விக்கெட்டையும் சுவீகரித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டத்தை நிர்ணயித்தது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா ஐந்து விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களையும் லசித் மலிங்க, சாமர, செஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். http://www.virakesari.lk/article/40590

யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்

2 months ago
அது சரி இப்படங்களில் களிசான் போட்டிருப்பவர்கள் என்ன வேற்று இனத்தவரோ தமிழ் விழா எனக்கூறிவிட்டு அதுக்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன் நிற்கிறார்கள்

போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.!

2 months ago
``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில் `யாகாவாராயினும் நா காக்க'... இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'... இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்'... இது என் பாட்டி சொன்னது. `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு'. இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது. நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வது தொடர்பாக ஹெச்.ராஜாவுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹெச்.ராஜா காவலர்களை தரக்குறைவாகப் பேசியதுடன் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கக்கூடிய வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. மக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து சில அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர், ஹெச்.ராஜா அந்தக் காணொலிக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் "காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல; யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். நான் நீதிமன்றத்தை மதிப்பவன்" என்று கூறினார். இந்தச் சூழலில் இயக்குநரும் மற்றும் நடிகருமான விசு என்ன சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. விசுவின் எதிர்வினை என்னவென்று தெரிந்துகொள்வதற்குக் காரணம் இந்து மதத்தை மீட்டெடுக்கக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்றும், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு ஆண்மகனைப் பார்க்கிறேன் என்றும் ஹெச்.ராஜா குறித்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒரு பொதுமேடையில் விசு பேசியிருந்தார். இதனையொட்டி ஹெச்.ராஜாவின் சமீபத்திய பேச்சுக்குறித்து விசு என்ன சொல்கிறார் எனக் கேட்டேன். "திரு ஹெச்.ராஜா அவர்களது எல்லாப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது. ஆனாலும் இந்தக் காணொலி குறித்து சில விஷயங்கள் சொல்கிறேன். M G R அவர்களுக்காக எழுதப்பட்ட பாடலை சற்று `உல்டா' செய்கிறேன். `கடமை வரும்போது துணிவு வர வேண்டும், பணிவும் வர வேண்டும் தோழா' நண்பர் ராஜா அவர்களே... வெறும் இரண்டு வார்த்தைகளில் காத தூரம் தள்ளி நின்று விட்டீரே.. முகத்தைக்கூட பார்க்க முடியாமல் திரும்பி நின்ற அந்தக் காவல் அதிகாரி, அதே இரண்டு வார்த்தைகளில் `அண்ணாச்சி அண்ணாச்சி' என்று கூறியே என்னை அள்ளி ஜோபிக்குள் போட்டுக்கொண்டு விட்டாரே. விதி வலியது . Everything is pre-written, nothing can be re-written. `யாகாவாராயினும் நா காக்க'.. இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'. இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்' .. இது என் பாட்டி சொன்னது . `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு' இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது. மேலே குறிப்பிட்ட சிங்கம் என்கிற உவமை ஹெச். ராஜாவைத்தான் குறிக்கிறதா? `இந்து கோயில்கள் மீட்பு' பற்றிய புள்ளி விவரங்கள் தந்ததில் அவரை நான் கர்ஜித்த சிங்கமாகப் பார்த்தேன். அதுவும், இப்போது இந்த நீதிமன்றம் பற்றிய இரண்டு வார்த்தைகளில் நீர்த்துப் போக வாய்ப்புண்டு. அவர் மீது நான் வைத்த வலுவான நம்பிக்கை மேலும் நீர்த்துப்போகுமா என்று எனக்குத் தெரியாது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி மேல உட்கார்ந்துட்டு ஒருத்தி எழுதிகிட்டு இருக்காளே, அவள் என்ன எழுதப்போகிறான்னு யார் சார் கணிக்க முடியும்? புதுக்கோட்டை மாவட்டத்துல, திருமையத்துக்குப் பக்கத்துல திரு.ஹெச். ராஜா அவர்களின் வேகத்துக்கு ஒரு ப்ரேக் போடணும்னு அவள் நினைச்சா. அந்த ப்ரேக்தான், நடந்த இந்தச் சம்பவம். ஆனா அந்த ப்ரேக்குக்கு BRAKE தான் ஸ்பெல்லிங்கா அல்லது BREAK தான் ஸ்பெல்லிங்கான்னு எனக்குத் தெரியல. ரெண்டுக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கு. இந்த ப்ரேக்கக் கொடுத்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகிக்குதான் இது தெரியும். அது என்னென்னனு புரிஞ்சிக்கக்கூடிய சக்தியை அவள் எனக்குக் கொடுக்கலை. இது என்னுடைய குரலே இல்லை. யாரோ சதி செய்திருக்கிறார்கள் என இந்தக் காணொலிக்கு ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்திருக்கிறாரே? திரைப்பட உலகத்தை 1981லிருந்து அண்டிப்பிழைப்பவன் என்ற முறையிலும், `டப்பிங்' கலைகளை நுணுக்கமாக அறிந்தவன் என்ற முறையிலும், திரைக்கதையின் route ஐயே டப்பிங்கில் மாற்றிப் பேச வைத்த இயக்குநர் என்ற முறையிலும், டப்பிங் வசனங்களை மிகவும் பொருத்தமாக எழுதக்கூடிய டப்பிங் எழுத்தாளர்களை உள்ளடக்கிய எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 8 /10 வருடங்கள் தலைவனாக இருந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன் ராஜா அவர்கள் சொன்னது யோசித்துப்பார்க்க வேண்டிய விஷயம்தான். அந்தக் காணொலியில் கேட்டது டப்பிங் குரலாகவும் இருக்கலாம்.'' https://www.vikatan.com/news/politics/137172-visu-talks-about-h-raja-controversy.html

ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்

2 months ago
ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நல்ல உடல்நிலையிலுள்ள முதியோர்கள் ஒருநாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமென்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவந்துள்ளது. மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் பயனுள்ளதாக இருப்பது குறித்து இதற்கு முந்தைய ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நல்ல உடல்நிலையிலுள்ள 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் எவ்வித நன்மையை உண்டாக்குவதில்லை என்றும், மாறாக உயிரிழப்பிற்கு வித்திடும் உட்புற இரத்தப்போக்கை அவை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தனக்கு தானே மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை கெட்டியாவதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்நிலையில், மாரடைப்பு அல்லது பக்கவாதம் தங்களை தாக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இது உண்மையில் நோயை வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுசார்ந்த ஆராய்ச்சிகள் மத்திய வயதுடையவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிடுவதால் அவர்கள் முதுமையடையும்போது குறிப்பிடத்தக்க வகையில் உடல்நலத்துக்கு ஆபத்து அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'பலனில்லை' அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடல்நிலையிலுள்ள 19,114 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் பாதி பேருக்கு குறைந்தளவிலான ஆஸ்பிரின் ஐந்து வருடங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆஸ்பிரின் மாத்திரைகள் நல்ல உடல்நிலை கொண்டவர்களிடத்தில் இதயம் சார்ந்த பிரச்சனைகளையோ அல்லது எவ்வித நன்மையையும் தருவதில்லை என்றும், மாறாக அவை உட்புற இரத்தப்போக்கை அதிகரிப்பதாகவும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ள மூன்று கட்டுரைகள் கூறுகின்றன. "இதன் மூலம் குறைந்தளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பிரச்சனையை தவிர்க்கலாம் என்ற உலகம் முழுவதுள்ள மில்லியன்கணக்கானோரின் எண்ணம் பயனற்றது என்பதும், அதனால் ஒருபயனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது" என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்நீல் கூறுகிறார். "நல்ல உடல்நிலையிலுள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளை பரிந்துரைக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த ஆராய்ச்சியில் புற்றுநோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது களநிலவரத்துக்கு மாறாக உள்ளதால் இதுகுறித்து மேலதிக தகவல்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/science-45544333

ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்

2 months ago
ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்
ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நல்ல உடல்நிலையிலுள்ள முதியோர்கள் ஒருநாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டால் கடும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமென்று அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் பயனுள்ளதாக இருப்பது குறித்து இதற்கு முந்தைய ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், நல்ல உடல்நிலையிலுள்ள 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் எவ்வித நன்மையை உண்டாக்குவதில்லை என்றும், மாறாக உயிரிழப்பிற்கு வித்திடும் உட்புற இரத்தப்போக்கை அவை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தனக்கு தானே மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை கெட்டியாவதற்காக ஆஸ்பிரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், மீண்டும் நோய்த்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்நிலையில், மாரடைப்பு அல்லது பக்கவாதம் தங்களை தாக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். இது உண்மையில் நோயை வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுசார்ந்த ஆராய்ச்சிகள் மத்திய வயதுடையவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, தொடர்ந்து ஆஸ்பிரின் சாப்பிடுவதால் அவர்கள் முதுமையடையும்போது குறிப்பிடத்தக்க வகையில் உடல்நலத்துக்கு ஆபத்து அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆஸ்பிரின் சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை - ஆராய்ச்சியில் தகவல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பலனில்லை'

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட நல்ல உடல்நிலையிலுள்ள 19,114 பேர்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பாதி பேருக்கு குறைந்தளவிலான ஆஸ்பிரின் ஐந்து வருடங்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆஸ்பிரின் மாத்திரைகள் நல்ல உடல்நிலை கொண்டவர்களிடத்தில் இதயம் சார்ந்த பிரச்சனைகளையோ அல்லது எவ்வித நன்மையையும் தருவதில்லை என்றும், மாறாக அவை உட்புற இரத்தப்போக்கை அதிகரிப்பதாகவும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ள மூன்று கட்டுரைகள் கூறுகின்றன.

"இதன் மூலம் குறைந்தளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல்நலம் சார்ந்த பிரச்சனையை தவிர்க்கலாம் என்ற உலகம் முழுவதுள்ள மில்லியன்கணக்கானோரின் எண்ணம் பயனற்றது என்பதும், அதனால் ஒருபயனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது" என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்நீல் கூறுகிறார்.

"நல்ல உடல்நிலையிலுள்ள நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகளை பரிந்துரைக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆராய்ச்சியில் புற்றுநோயின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது களநிலவரத்துக்கு மாறாக உள்ளதால் இதுகுறித்து மேலதிக தகவல்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/science-45544333

ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

2 months ago
ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். அவ்வாறு ஊசி இருந்த ஒரு பழத்தை உண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஊசி இருந்த பழத்தை ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் உண்டிருந்தாலும், அவன் ஊசியை விழுங்கவில்லை. படத்தின் காப்புரிமைJOSHUA GANE தனது நண்பர் ஒருவர் ஊசி ஏற்றப்பட்டிருந்த பழத்தை உண்டதால் கடுமையான வயிற்று வலியில் துடித்ததாக, ஜோஷ்வா என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதுபோன்ற பல தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு பிராண்டு ஸ்ட்ராபெரிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. நியூசிலாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. இந்த விசயத்தில் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகையை குயின்ஸ்லாண்ட் மாகாண அரசு அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைJOSHUA GANE ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய உணவுத்துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் உத்தரவிட்டிருக்கிறார். "இது மிகவும் மோசமான குற்றம் என்றும், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்" என்றும் அவர் கூறியிருக்கிறார். https://www.bbc.com/tamil/global-45547640

ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

2 months ago
ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு
பழங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

அவ்வாறு ஊசி இருந்த ஒரு பழத்தை உண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஊசி இருந்த பழத்தை ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் உண்டிருந்தாலும், அவன் ஊசியை விழுங்கவில்லை.

பழங்கள்படத்தின் காப்புரிமைJOSHUA GANE

தனது நண்பர் ஒருவர் ஊசி ஏற்றப்பட்டிருந்த பழத்தை உண்டதால் கடுமையான வயிற்று வலியில் துடித்ததாக, ஜோஷ்வா என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற பல தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு பிராண்டு ஸ்ட்ராபெரிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. நியூசிலாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது.

இந்த விசயத்தில் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகையை குயின்ஸ்லாண்ட் மாகாண அரசு அறிவித்துள்ளது.

பழங்கள்படத்தின் காப்புரிமைJOSHUA GANE

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய உணவுத்துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் உத்தரவிட்டிருக்கிறார்.

"இது மிகவும் மோசமான குற்றம் என்றும், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-45547640