Aggregator

விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..

2 months ago
இரவு நேரம் மணிக்கு கடுகதி பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாம். அமைச்சர் அனுமதி இல்லாமல் சாரதி இப்படி வேகமாக ஓட வாய்ப்பு இல்லை. முன்பும் இப்படி வேகமாக சென்றுள்ளார்கள் என கருதவேண்டி உள்ளது. கண்மண் தெரியாமல் வாகனம் ஓடினால் சாவு வராமல் வேறு என்ன வரும். தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை. இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். பதவி, அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியும் வாகனத்தை செலுத்தலாம் என நினைப்பவர்கள் உயிரில் ஆசை என்றால் இனியாவது இந்த விபத்தை பார்த்து திருந்தட்டும்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

2 months ago
காற்றில் கலந்த கீதமே…! Jan 26, 2024 11:15AM IST பவதாரிணி. திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரர். இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளில் ஒருவர். தந்தையை, சகோதரர்களைப் போன்று இசையமைப்பிலும் ஈடுபட்டவர். அவ்வப்போது அவரிடம் இருந்து இசை வெளிப்பட்டாலும், அவை அனைத்தும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரம் இடும் வகையில் இருக்கும். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2024 ஜனவரி 25 ஆம் தேதியன்று மரணமடைந்தார் பவதாரிணி. அந்தத் தகவல் அறிந்ததும் பதைபதைத்த ரசிக மனங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்தக் கணத்தில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நம் நினைவுக்குள் வந்துபோனது. பதின்ம வயதின் சில்லிப்பு சில பாடல்களைக் கேட்கையில், ‘இதைப் பாடியது அவரா, இவரா’ என்று சில கலைஞர்கள் குறித்த எண்ணங்கள் அலைமோதும். அந்தக் குரலில் தென்படும் தனித்துவத்தைத் தனியாகக் கண்டறிந்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகிவிடும். பின்னணி பாடுவதற்கென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் வகுக்கப்பட்ட வரையறைகளுக்குள் அந்தக் குரல்கள் அடங்கியிருப்பதும் அதற்கொரு காரணம். அதில் இருந்து விலகிச் சட்டென்று ரசிகர்கள் அடையாளம் காணும் குரல்களில் ஒன்று பவதாரிணியுடையது. பவதாரிணி பின்னணி பாடகியாக முதன்முறையாக அறிமுகமானது, ராசய்யா படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் வழியாகத்தான். தமிழ் ரசிகர்கள் அவரைக் கண்டறிந்த பாடல் அதுவே. அதற்கு முன்னரே, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் ‘தித்தித்தை தாளம்’ என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார். இவ்விரு பாடல்களில் ‘தித்தித்தை தாளம்’ பாடலில் அவரது குரலில் ஒரு இளம்பெண்ணின் தொனி தென்படும். ஆனால், ‘மஸ்தானா மஸ்தானா’ தொட்டுப் பல பாடல்களில் பதின்ம வயதின் சில்லிப்பை உணர முடியும் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம். அதுவே, அவரது குரலின் மிக முக்கியமான சிறப்பம்சமாகவும் உள்ளது. அலெக்சாண்டர் படத்தில் வரும் ‘நதியோரம் வீசும் தென்றல்’, கருவேலம் பூக்கள் படத்தில் இடம்பெற்ற ‘பல்லக்கு வந்திருக்கு’, காதலுக்கு மரியாதையில் உள்ள ‘என்னைத் தாலாட்ட வருவாளா’, ‘இது சங்கீதத் திருநாளோ’, ‘ஓ பேபி பேபி’, அழகியில் வரும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ப்ரெண்ட்ஸ் படத்தின் ‘தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா’ உட்படப் பல பாடல்களில் அந்த சில்லிப்பை உணர முடியும். அப்பாடல்களில் பதின்ம வயதுக்குரிய பெண்ணின் துடிப்போடு, அவ்வயது ஆண் மகனின் குரலில் இருக்கும் வன்மையின் சிறு துளியும் நிறைந்திருக்கும். ஆனால், அவற்றைப் பகுத்துப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அப்பாடல்களின் கட்டமைப்பு நம் மனதில் இன்னொரு உலகை விரியச் செய்யும். காற்றில் வரும் கீதமே ’ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் இளையராஜா பிரியர்களின் பேவரைட் பாடல்களில் ஒன்று. மலரினும் மெல்லிய என்ற பதம் சொல்லப்படுமே, அத்தகைய ஒன்றை அப்பாடலில் கேட்கலாம். தன்னை முழுவதுமாகச் செலுத்திக் கலையை வெளிப்படுத்துபவரால் மட்டுமே நிகழ்த்த முடிகிற மாயாஜாலம் அது. சில பாடல் கச்சேரிகளில் அதனை பவதாரிணி பாடுகிறபோது, அக்குரலில் கொஞ்சம் வெட்கம் தெரியும். அதுவே கூட, அவர் இசையமைப்பிலும் பாடுவதிலும் நிறைய பங்களிக்காமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம். தனது படைப்பைக் கொடுத்துவிட்டு, ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கும் விருப்பம் கூட அவரிடம் இருந்திருக்கலாம். தந்தை மட்டுமல்லாமல் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்று சகோதரர்கள் இசையிலும் பாடியிருக்கிறார் பவதாரிணி. கார்த்திக் ராஜாவின் இசையில் ‘முத்தே முத்தம்மா’, ‘நடனகலாராணி’, ’மடோனா பாடலா நீ’, ‘அடி ரெண்டே காலுல மான்குட்டி’, ‘முட்டைக்குள்ள இருக்கும்போது’ உட்படப் பல பாடல்களைத் தந்திருக்கிறார். அதேபோல, யுவன் இசையில் ‘ஆல் தி பெஸ்ட்’ தொடங்கி ’பூத்தது பூத்தது மனது’, ‘நீ இல்லை என்றால்’, ‘சடுகுடு ஆடாதே’, ‘மெர்க்குரி பூவே’ என்று நிறைய பாடியிருக்கிறார். அப்பாடல்கள் அனைத்தும், அவரது குரலால் தனிக்கவனத்தைப் பெறுவதாக இருக்கும். பிற இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியிருக்கிறார். அப்பாடல்களும் கூட திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கும் ரகத்தில் சேர்பவை. ’மித்ர மை ப்ரெண்ட்’, ‘வெள்ளச்சி’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பு செய்திருக்கிறார். அனைத்துக்கும் மேலே, யுவனின் தொடக்க காலத்தில் அவருக்கான இசை வழிகாட்டியாகவும் திகழ்ந்திருக்கிறார். மிக முக்கியமாக, வெகு அரிதாகத் தன் குடும்பத்தினரோடு மேடையில் பார்க்கும் தருணங்கள் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கின்றன. அப்போதெல்லாம், அவர்களை ஒன்றிணைக்கும் இழையாகவும் அவர் திகழ்ந்ததை உணரலாம். இப்படிப் பவதாரிணியை நினைவூட்டும் விஷயங்கள் நிறைய, அவரது குடும்பத்தினருக்கு, இணைந்து பணியாற்றியவர்களுக்கு, நட்பு வட்டத்தில் இருந்தவர்களிடம் கொட்டிக் கிடக்கும். வழிந்தோடும் குதூகலம் திரைப்படங்களைப் பார்க்கையில் ரசிகர்களைக் குதூகலம் தொற்றுவதென்பது மிக முக்கியமானது. அந்த தருணங்கள் தான் திரையோடு ஒருவரைக் கட்டிப் போடுகிறது. அது சரியாக நிகழ்ந்தால், அந்த படைப்பும் கொண்டாடப்படும். அவற்றோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களைக் கொண்டாடித் தள்ளுவார்கள் ரசிகர்கள். தனது குரலின் வழியே, அப்படியொரு குதூகலத்தையும் கொண்டாட்ட மனநிலையையும் உருவாக்கியவர் பவதாரிணி. தன்னில் இருந்து வெளிப்பட்ட இசையின் வழியாக அதைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவே அதனைக் கருத வேண்டியிருக்கிறது. மிகக்குறைவான படைப்புகளில் அவர் பங்களிப்பு அமைந்திருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட நம்மால் விலக்கி வைக்க முடியாதென்பது அவரது சிறப்புகளில் ஒன்று. ‘டைம்’ படத்தில் இடம்பெற்ற ‘தவிக்கிறேன் தவிக்கிறேன்’ பாடலில் ‘காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு’ என்ற வரிகளைப் பாடியிருப்பார் பவதாரிணி. தெரிந்தோ தெரியாமலோ அது அவரது வாழ்வுக்கும் பொருந்திப்போனதை என்னவென்று சொல்வது?! https://minnambalam.com/cinema/singer-and-composer-bhavatharinis-best-songs-and-moments/

தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிறிதரன் - விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

2 months ago
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்? January 25, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு. 1. இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப் பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு. 2. இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள், ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும் முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது. அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும். 3. இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை. 4. ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 5. எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன. 6. சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது, கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 7. சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள். 8. புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி. 9. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள். இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன. ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும். விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால் (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்) தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர். இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு 75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது. அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது. விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி. அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி. ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன. பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது. உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும். நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை. புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும். இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான். ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது. விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில் சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால், ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? “விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது. பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது. காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. https://arangamnews.com/?p=10397

தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிறிதரன் - விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

2 months ago
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?

— கருணாகரன் —

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகச் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்திருப்பதை அடுத்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதொன்றும் புதியதுமல்ல. பெரியதுமல்ல. அரசியற் கட்சிகளின் விடயங்கள் என்றால் பொதுப்பரப்பில் அதைப்பற்றிய உரையாடல்கள் நிகழ்வதுண்டு. ஆகவே இதொரு சாதாரணமான விடயம். ஆனால், இதைக் கடந்து இந்தக் கருத்துகளின் பின்னால் செயற்படுகின்ற உளநிலையும் அரசியற் காரணங்களும் முக்கியமானவை. இதற்கு அடிப்படையாகச் சில காரணங்கள் உண்டு.

1.        இதற்கு முன்னெப்போதும் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான போட்டி  இப்படிப் பகிரங்க வெளியில் நடந்ததில்லை. இப்போதுதான் அது முதற்கடவையாக இந்த நிலைமையைச் சந்தித்திருக்கிறது. அதற்குக் கட்சிக்குள் நிலவும் உட்பலவீனங்கள் காரணமாகும். ஆனாலும் இதொரு சாதாரணமான உட்கட்சி விடயமே. இதைப்போல, தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இலங்கையில் ஐ.தே.க, சு.க போன்ற பெருங்கட்சிகளுக்கும் தலைமைப் போட்டிகள் நடந்ததுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைப் போட்டியில் நீதி மன்றம் வரையில் சென்றது. அப்படிச் சில கட்சிகளுக்குள் சில சந்தர்ப்பங்களில் நிகழ்வது வழமை. கட்சியின் அரசியல் யாப்பே இதை உரைக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் அல்லது இதைத் தெரிந்து கொண்டும் இந்தப் போட்டியை ஏதோ தேசிய அளவிலான ஒரு போட்டிபோலக் காட்டியதால் – ஊதிப்  பெருப்பித்ததால் ஏற்பட்டதே இந்தப் பரபரப்பு.

2.        இதைப் பெரிய விவகாரமாக்கி, ஊதிப்பெருப்பிக்கக் காரணமாக இருந்த தரப்புகள்,  ஊடகங்களும் தமிழ்ப் பத்தியாளர்களுமாகும். காரணம், ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசிய அரசியற் கட்சிகளிடத்தில் காணப்படுகின்ற போதாமை உணர்வே இந்தத் தரப்புகளை தமிழரசுக் கட்சியின் தலைமைப் போட்டியின்மீது கவனத்தை உண்டாக்கியது. ஏற்கனவே தலைமைப் பொறுப்பிலிருந்த மாவை சேனாதிராஜாவும் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் திரு. சம்மந்தனும்  முதுமை மற்றும் செயலின்மை காரணமாக கட்சியையும் அரசியலையும் மந்த நிலைக்குள்ளாக்கி விட்டனர் என்று பலராலும் கருதப்பட்டது. மறுபக்கத்தில் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர்  தமிழ்த்தேசியவாத அரசியலைத் தீவிரமாகப் பேசினாலும் அதற்கான கட்டமைப்பு – செயற்பாட்டு விளைவு போதாதிருக்கிறது என்ற உணர்வு பலரிடத்திலும் காணப்பட்டது.                            அந்தப் போதாமை உணர்வென்பது எதிர்ப்பரசியலின் மீதான நாட்டத்தினால் ஏற்பட்டது. ஆக இன்று ஈழத்தமிழ் அரசியல் வெளியானது எதிர்ப்பரசியலிலேயே மையம் கொண்டுள்ளது. அதனுடைய விளைவே இதுவாகும்.

3.        இன்னொரு நிலையில் இன்னொரு சாரார், தீவிர எதிர்ப்பரசியலுக்குப் பதிலாக மென்போக்கான முறையில் பலரோடும் பேசக்கூடியவாறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களே சம்மந்தன், சுமந்திரன், சாணக்கியன் போன்றோரை ஆதரிக்கின்றனர். ஆனாலும் அந்தத் தரப்பு பொதுவெளியில் இன்னும் பலமடையவில்லை.

4.        ஆகவே மென்போக்கான முறையில் பன்மைத்துவத்தோடு கட்சியின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் (சுமந்திரனை ஆதரிப்போர்) அப்படியல்ல, தமிழரின் அரசியலை, விட்டுக் கொடுப்புகளற்ற முறையில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மறுசாராரும் (சிறிதரனை ஆதரிப்போரும்) கருதுவதால் ஏற்பட்டுள்ள எதிரெதிர் முனைப்புகளால் இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5.        எப்போதும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே சிறிதரன் இருப்பதாகும். மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளும் வெளியிலும் ஒரு தொகுதியினரின் எதிர்ப்புகள் அவருக்கு  உண்டு என்பதால் ஏற்பட்ட அலைகள். அதைப் போல அவரைத் தீவிர நிலையில் ஆதரிப்போரும் உண்டு. இதனால் உண்டாகும் உள் – வெளி முரண்கள் வெளித்தெரிகின்றன.

6.        சிறிதரன் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அரசியலானது,  கஜேந்திரகுமார் முன்னெடுத்து வரும் அதிதீவிரவாத அரசிலை ஒத்திருப்பதால், இரண்டு அரசியற் தரப்புகளுக்குமிடையில் முன்னரைப்போல (இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் – இலங்கைத் தமிழரசுக் கட்சி மோதல் அல்லது ஜீ.ஜீ.பொன்னம்பலம் – எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மோதல்) இரு தரப்புப் போட்டிகள், உரசல்கள், மோதல்களைக் கொண்டிருக்கும் என்பது. இதனுடைய விளைவுகள் அவ்வளவு நல்லதாக அமையாது என்ற உணர்வினால் எழும் அச்சம் இந்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

7.        சிறிதரன் முன்னெடுக்க விரும்பும் அரசியலானது, தமிழரசுக் கட்சியின் காலாவதியாகப் போன அரசியல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி போன்ற பாவனையைக் கொண்டிருக்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொண்டது என்பதால் இரண்டும் நிகழ்காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ உரியதல்ல என்பதால் எழுந்துள்ள கருத்துகள்.

8.        புலிகளைப் போற்றிப்பாடித் தன்னுடைய அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொண்டாலும் புலிகள் மேற்கொண்ட அரசியற் கொள்கை, அவர்களுடைய செயற்பாடுகள், அவர்கள் உருவாக்கிய நடைமுறை போன்றவற்றுக்கு அப்பாலேயே சிறிதரன் நிற்கிறார் என்பது. அதாவது அவர் புலிகளின் பிரதிநிதிபோல நாடகமாடுகிறார் என்பது. இல்லையென்றால் குறைந்த பட்சம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்ளாள் உறுப்பினர்கள், அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான இடம் இனி அளிக்கப்படுமா என்று எழுகின்ற கேள்வி.

9.        விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலுக்கு தென்னிலங்கையிலும் பிராந்திய ரீதியாக இந்தியா, சீனா மற்றும் சர்வதேச ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அங்கீகாரமும் கிடைக்குமா என்ற கேள்விகள்.

இவ்வாறு பல கேள்விகளும் அடிப்படைக் கருத்து நிலைகளும் தமிழரசுக் கட்சியின் மீதும் அதனுடைய தலைமை (சிறிதரனின்) மீதும் முன்வைக்கப்படுகின்றன.

ஈழத் தமிழரின் அரசியல், ஆயுதப் போராட்டத்துக்கு முன்பும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்பும் தமிழரசுக் கட்சியின் கைகளில்தான் இருந்தது, இருக்கிறது. அதற்கான தகுதி அதற்கு இருக்கிறதோ இல்லையோ வரலாற்றுச் சூழல் அப்படித்தான் அமைந்துள்ளது. இதற்கு இன்று தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஏனைய சக்திகளின் பலவீனமும் ஒரு காரணமாகும்.

விடுதலைப் புலிகளால் பல கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதற்குத் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கும் நிலை வளர்ந்தது. இதற்கு மாறாக தமிழரசுக் கட்சியின் திமிர்த்தனத்தினால் (ஜனநாயக முரண்பாடுகளால்) ஏனைய கட்சிகள் வெளியேறினாலும் அவற்றினால் தமிழரசுக் கட்சியை மீறி நிற்க முடியவில்லை. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சியின் பாராம்பரியத் தொடர்ச்சியைக் கொண்டவர்கள் இன்றில்லை. புதியவர்களே அதற்குத் தலைமை ஏற்றுள்ளனர். இருந்தும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களால்  (அவர்களுக்கு நீண்டதொரு செயற்பாட்டு அரசியற்பாரம்பரியம் – விடுதலை இயக்க அரசியல் வழித் தொடர்ச்சி இருந்தாலும்)  தமிழரசுக் கட்சியின் இந்தப் புதிய முகங்களை எதிர்கொள்ள முடியாமலே உள்ளனர்.

இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சி செயற்பாட்டுத் தளத்தில் மிகப் பலவீனமானது. அதற்கு  75 ஆண்டுகாலப் பாரம்பரியமிருந்தாலும் அதனால் நிகழ்கால அரசியலையோ எதிர்காலத்துக்கான அரசியலையோ முன்னெடுக்கக் கூடிய சிந்தனைத் திறன் (கொள்கை), செயற்பாட்டுத் திறன் எதுவும் இல்லை. தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்தராத, பங்களித்திருக்காத, பங்களிக்கவே முடியாத நிலையில்தான் அது இன்னமும் உள்ளது. உண்மையில் திரு. S.J.V.செல்வநாயகம் காலத்துக்குப் பிறகு அது தேவையற்ற ஒன்றாக ஆகி விட்டது.

அதாவது அது காலாவதியாகி (Expired) விட்டது. அதைச் செல்வநாயகமே “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுமிருந்தார். அதைச் சற்று வேறுவிதமாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளில் வைத்திருந்தார் திரு. அ. அமிர்தலிங்கம். அதுவும் பின்னர் செல்லாக்காசாகி விட்டது.

விடுதலைப்புலிகள் தம்முடைய அரசியல் தேவைக்காக தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி வைத்திருந்த தமிழ்க்கட்சிகளையும் இயக்கங்களையும் தற்காலிகமாகப் பயன்படுத்த விளைந்ததன் விளைவாக மீண்டும் செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டு அரங்குக்குக் கொண்டு வரப்பட்டதே தமிழரசுக் கட்சி.

அவர்கள் கூட முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தையே பயன்படுத்தினார்கள். திரு. வீ. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட பிணக்கையடுத்தே தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் புலிகளால் பயன்படுத்தப்பட்டது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது தமிழரசுக் கட்சி.

ஆயினும் அதனுடைய பலவீனங்கள் அதை வளர்த்துப் புதிய – காலப் பொருத்தமுடைய அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அதற்கிருந்தன.

பதிலாக அந்தப் பலவீனங்கள் இன்றைய சீரழிவுக்கும் தலைமைப் போட்டிக்கும் அதைக் கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது அதைச் சேற்றுக்குள் தள்ளி விட்டுள்ளது.

உண்மையில் இப்பொழுது தன்னுடைய மனச்சாட்சியின்படி தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கிலிருந்தே விலகுவதே தமிழ் மக்களுக்கும் இந்தக் காலத்துக்கும் செய்கின்ற பெரும்பணியாக இருக்கும்.

நல்லதைச் செய்ய முடியாது விட்டால் பரவாயில்லை. நல்லன நிகழ்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்காது விட்டாலே அது ஒரு பெரிய பணியும் பங்களிப்பும்தான். ஏனென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உருவாக்கியளித்த கூட்டமைப்பு என்பதைக் கூட தமிழரசுக் கட்சியினால் தக்க வைக்க முடியவில்லை.

புலிகளுக்குப் பிறகு காலம் அளித்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அடிப்படைகளைக் கூட அது நிர்மாணம் செய்யவில்லை. ஆனால் அதற்கான கடப்பாடும் பொறுப்பும் அதற்கிருந்தது. அதைச் செய்யாமல் பதிலாக எல்லாவற்றையும் சிதைத்து, இறுதியில் தன்னையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இதற்குத் தனியே தமிழரசுக் கட்சியினர் மட்டும் பொறுப்பில்லை. அதை ஆதரித்தும் அனுசரித்தும் நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் இந்தப் பொறுப்பும் பழியும் உண்டு. வரலாறு நிச்சயம் இவர்களை நிந்திக்கும்.

இப்பொழுது சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைவராகியவுடன் சிறிதரன் சென்றது கிளிநொச்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கு. இது  ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப்போல அவர் தன்னைப் புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகக் காட்ட முற்பட்டதற்காகவாகும். ஆனால், இதை தென்னிலங்கைச் சக்திகள் நற்சமிக்ஞையாகப் பார்க்கப் போவதில்லை. ஏன் முஸ்லிம்கள் கூட இதை எதிராகவே பார்ப்பார்கள். அவ்வாறே இந்தியாவும் மேற்குலகும் எதிர்நிலை நின்றே நோக்கும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பேர் இருந்தாலும் சம்மந்தன் அதனைக் கடந்து பல்வேறு தரப்பினருடைய கவனத்தையும் கோரக் கூடிய அரசியலை முனனெடுத்து வந்தார். இந்த நிலைப்பாடு சர்வதேசப் பரப்பிலும் தமிழ்த் தரப்பின் தலைவர் என்ற அடையாளத்தைச் சம்மந்தனுக்குக் கொடுத்தது, அவர் மேற்கொண்ட பன்மைத்துவத்தை நோக்கிய அரசியலாகும். ஆனால், அதுதான் தமிழ்த்தரப்பில் சம்மந்தனுக்கும் அவரைத் தொடர்ந்த சுமந்திரனுக்கும் எதிரான விமர்சனங்களையும் கடந்த காலத்தில் உருவாக்கியிருந்தது. சுமந்திரன் தலைமைக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

ஆனால் போருக்குப் பிந்திய அரசியலை தனியே எதிர்ப்பு அரசியலாக முன்னெடுக்க முடியாது. இன்றைய  யதார்த்தம் வேறு. இதைத் தெளிவாகவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையும் பொதுவாக உலகப் போக்கும் சொல்கின்றன. இப்படியான நிலைக்குப் பிறகும் தமிழ் மக்கள் (இங்கே மக்கள் என்பது அவர்களுக்காகச் சிந்திப்பதாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள், அரசியற் பத்தியாளர்கள், தமிழர்களின் கல்விசார் துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்பட எனப் பொருள்படும) தமிழரசுக் கட்சியை தமக்கான மீட்புப் படகாகக் கருதினால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. அவர்களைக் குறித்தே கேள்வி எழும்புகிறது.

விடுதலைக்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் தன்னுடைய சக்திக்கு அப்பால், மாபெரும் தியாகங்களைச் செய்துள்ளது. அளவுக்கு அதிகமான  இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. இந்த இழப்புகள் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியவையல்ல. மட்டுமல்ல, உள் நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயும் தொடர் அலைச்சல்களில்  சந்தித்த பிறகும் திக்குத் தெரியாத காட்டில் தடுமாறுவதைப்போலிருந்தால்,

ஈழத்தமிழரின் ஊடக, அரசியல், அதுசார் அறிவு நிலையைப் பார்த்தால் சிரிப்பு வரும். சற்று ஆழமாகச் சிந்தித்தால் கடுமையான கோபமே ஏற்படும். தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாத சமூகமாக ஈழத்தமிழர்கள் சீரழிந்துள்ளனர். இல்லையென்றால் நாற்பது ஆண்டுகளாகப் போராடிய பட்டறிவைக் கூட நினைவில் வைத்துப் பரிசீலிக்க முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் மறந்து போய், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னான அரசியல் குழிக்குட் போய்க் கண்மூடித்தனமாக விழுவார்களா? 

“விதியே விதியே, தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்?” என்று பாரதியார் பாடியதை இங்கே நினைவிற் கொண்டு பேச வேண்டியதாக உள்ளது.

பாரதியார் மனம் வருந்தி இதைச் சொன்னது, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலாகும். அப்போது வரலாற்றுச் சிறப்பெல்லாம் இருந்தும் கூட தமிழர்கள் உள்நாட்டிலும் உலகம் முழுவதும் கூலிகளாகவும் ஏதிலிகளாகவும் சிதறிப் பரந்து அல்லலுற்றுக் கிடந்தனர். அதைப் பார்த்து வெம்பித் துயரடைந்தார் பாரதி. கவிஞரின் மனம் சிறுமை கண்டு, கொடுமை கண்டு கொதிப்பதைப்போல, அறியாமையைக் கண்டும் கொதிப்படைவது.

காலம் கடந்தாலும், சூழல் மாறினாலும் ஈழத்தமிழரின் நிலையில் மாற்றமில்லை. வரவர நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
 

https://arangamnews.com/?p=10397

தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி

2 months ago
தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது. குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,184 வாக்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்ற நிலையில் சி.சிறீதரன்,இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் பொதுச்செயலாளர் பதவியானது,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படுகின்ற யாப்புக்கு அப்பாற்பட்ட ஒரு மரபு ரீதியான நடைமுறை தமிழரசு கட்சியில் இருந்து வருகின்றது. கடந்த காலத்தில்,ராசமாணிக்கம் தலைவராக இருந்த போது,வடக்கில் செயலாளர் இருந்தார், வடக்கில் மாவை சேனாதிராஜா இருந்த போது கிழக்கில் செயலாளர் இருந்த மரபுகள் எல்லாம் இருந்தன. இதனடிப்படையில்,மட்டக்களப்பிற்கு பிரச்சாரத்திற்கு சென்ற இரு தலைமைத்துவ வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செயலாளர் பதவியை வழங்குவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த வாரம் தலைவர் தெரிவிற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு கிளை கூட்டம் நிறைவுபெற்ற பின்னர் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் முக்கியஸ்தருமான பா.அரியநேந்திரன் தமது சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாக குறிப்பிட்டார். இதனை ராசமாணிக்கம் சாணக்கியன் அது அவருடைய தனிப்பட்ட கருத்து அதை இப்போது பரிசீலிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தலைவர் தெரிவின் பின்னர் மீண்டும் அரியநேந்திரன் இந்த கருத்தை முன்மொழிந்திருந்தார். அதாவது வடக்கு கிழக்கு ஆதரவாளர்கள் சார்பில் ஸ்ரீநேசனை முன்மொழிவதாகவும் அதனை அனைவரும் ஏற்பார்கள்,காரணம் இது வடக்கு கிழக்கு என்ற பிரதேச வாதத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என கூறியிருந்தார். இதனை இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் முக்கிய பிரமுகர் வேலமாளிதரன் இந்த முடிவை சரியானது எனவும் அதனை தாங்கள் ஒத்து செல்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ளது. இந்த சூழலில் செயலாளர் பதவியை ஒரு போட்டி விவகார சூழலுக்குட்படுத்த ஒரு தரப்பு முனைவதாக இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தலைவர் தெரிவில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒருவர் இந்த விடயங்களில் தனக்கு சார்பான ஒருவரை பொதுச்செயலாளராக நிறுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவை தொடர்பில் அவருடைய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தேவையற்ற மனக்கசப்புக்கள் இன்றி பொதுச்செயலாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிழக்கில் உள்ளது. கிழக்கில் பிரதேசவாசம் பேசுபவர்களுக்கு இந்த செயலாளர் பதவிக்கான போட்டி தீனி போடுவதாக அமைந்துவிடும் என்றும் அது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். பொதுவாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் இப்போது திரைமறைவில் மீண்டும் ஒரு பகிரத்தன பிரயத்தனம் இடம்பெற்று கொண்டிருக்கிறது. https://akkinikkunchu.com/?p=266704

இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

2 months ago
இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி அமர்வுக்கானது என கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 1 – நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பல்வேறு களங்களில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை உள்ளடக்கியது. 2 – மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகள் 3 – ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம்: குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரி படிப்புகளின் கீழ், இளங்கலை பொறியியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பக் கற்கைகள். இந்த மூன்று திட்டங்களுக்காக, பாடநெறியின் முழு காலத்திற்கான முழு கல்விக் கட்டணம், மாதாந்த சத்துணவு கொடுப்பனவு மற்றும் நூல்கள் மற்றும் நிலையானவற்றுக்கான வருடாந்த மானியம் ஆகியவை வழங்கப்பபடும். அத்துடன் இந்தியாவின் அருகிலுள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான கல்விச் சுற்றுப்பயணங்களுக்கான வருடாந்த மானியம், பல துணைப் பலன்களைத் தவிர. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகங்களுக்குள் விடுதி வசதியும் வழங்கப்படும். இந்த புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம், இலங்கை அரசின் கல்வி அமைச்சுடன் இணைந்து தகுதியானவர்களை தெரிவுசெய்யவுள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேவையான விபரங்கள் தரப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கொழும்பு (eduwing.colombo@mea.gov.in) அல்லது கல்வி அமைச்சு, இலங்கை அரசாங்கத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://thinakkural.lk/article/289381

இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

2 months ago
இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

india-scholarship-scheme-300x200.jpg

இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது

மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன.

இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்தப் புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி அமர்வுக்கானது என கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
1 – நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், மனிதநேயம் மற்றும் கலை போன்ற பல்வேறு களங்களில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை உள்ளடக்கியது.

2 – மௌலானா ஆசாத் புலமைப்பரிசில் திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலை பட்டப் படிப்புகள்

3 – ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம்: குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டதாரி படிப்புகளின் கீழ், இளங்கலை பொறியியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பக் கற்கைகள்.

இந்த மூன்று திட்டங்களுக்காக, பாடநெறியின் முழு காலத்திற்கான முழு கல்விக் கட்டணம், மாதாந்த சத்துணவு கொடுப்பனவு மற்றும் நூல்கள் மற்றும் நிலையானவற்றுக்கான வருடாந்த மானியம் ஆகியவை வழங்கப்பபடும்.

அத்துடன் இந்தியாவின் அருகிலுள்ள இடங்களுக்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான கல்விச் சுற்றுப்பயணங்களுக்கான வருடாந்த மானியம், பல துணைப் பலன்களைத் தவிர. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகங்களுக்குள் விடுதி வசதியும் வழங்கப்படும்.

இந்த புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம், இலங்கை அரசின் கல்வி அமைச்சுடன் இணைந்து தகுதியானவர்களை தெரிவுசெய்யவுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேவையான விபரங்கள் தரப்பட்டுள்ளன.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கொழும்பு (eduwing.colombo@mea.gov.in)
அல்லது கல்வி அமைச்சு, இலங்கை அரசாங்கத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

https://thinakkural.lk/article/289381

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்

2 months ago
WWF விளையாட்டுக்காரரிடம் அதை கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன். நான் அவரின் ரசிகன். 😛

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன்

2 months ago
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன் ரொசேரியன் லெம்பட் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது. என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன். இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம். நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார். தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது. இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும். எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம். ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம். தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம். நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை. நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார். https://www.tamilmirror.lk/வன்னி/சுதந்திர-காற்றை-சுவாசிக்க-முடியாது-இருக்கிறோம்-ஸ்ரீதரன்/72-332139

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன்

2 months ago
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன்

image_3e1cd1bac7.jpg

 ரொசேரியன் லெம்பட்

தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில்  மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்  கட்சியின் புதிய   தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்  கடந்த 21 ந் திகதி   தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து  மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி  உறுப்பினர்களினால்  வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது. என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.

இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும்  நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.

நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.

தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது. 

இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.

ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம். 

தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.

நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.

நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என   தெரிவித்தார்.

image_39a9390d1a.jpg
 

https://www.tamilmirror.lk/வன்னி/சுதந்திர-காற்றை-சுவாசிக்க-முடியாது-இருக்கிறோம்-ஸ்ரீதரன்/72-332139

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து

2 months ago
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து ஆதவன். நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை உடனடியாக மீளப்பெற்று மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் ருவான் பத்திரண வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:- எதிர்க்கட்சியினதும் ஆர்வக்குழுக்களினதும் எதிர்ப்பையும் மீறி நிகழ்நிலைக் காப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் பதிவுகளை மேற் கொள்ளும் குற்றத்துக்காக ஒருவருக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க இந்தச் சட்டம் இடமளிக்கின்றது. இணையக் குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனே இந்தச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஆசிய இணைய கூட்டமைப்பு, சர்வதேச நீதிமன்றம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றன இந்தச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. கருத்துச்சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. அத்துடன் இணையப் பாதுகாப்புக் குழுவுக்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிக்கிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வேளையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுத்தார்கள். இந்தச்சட்டம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்கிறது. அத்துடன் அதிகாரத்திலுள்ளவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வழி வகுக்கிறது என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/நிகழ்நிலைக்_காப்புச்சட்டம்_திரும்பப்பெறல்_வேண்டும்!

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து

2 months ago
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
1352592846.jpg

சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து

ஆதவன்.

நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை உடனடியாக மீளப்பெற்று மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. 

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் ருவான் பத்திரண வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

எதிர்க்கட்சியினதும் ஆர்வக்குழுக்களினதும் எதிர்ப்பையும் மீறி நிகழ்நிலைக் காப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் பதிவுகளை மேற் கொள்ளும் குற்றத்துக்காக ஒருவருக்கு ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க இந்தச் சட்டம் இடமளிக்கின்றது. இணையக் குற்றங்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனே இந்தச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஆசிய இணைய கூட்டமைப்பு, சர்வதேச நீதிமன்றம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றன இந்தச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. கருத்துச்சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பவற்றைக் கடுமையாகப் பாதிக்கிறது. அத்துடன் இணையப் பாதுகாப்புக் குழுவுக்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிக்கிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய வேளையில் மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுத்தார்கள். இந்தச்சட்டம் எதிர்க்கருத்துகளை இல்லாமல் செய்கிறது. அத்துடன் அதிகாரத்திலுள்ளவர்கள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வழி வகுக்கிறது என்றுள்ளது. (ச)
 

https://newuthayan.com/article/நிகழ்நிலைக்_காப்புச்சட்டம்_திரும்பப்பெறல்_வேண்டும்!

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்

2 months ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக் கோரி மனு தாக்கல் Published By: RAJEEBAN 26 JAN, 2024 | 10:27 AM சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சாந்தன் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உத்தரவிடக்கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கள் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/174816

இந்தியாவின் குடியரசுதினம் யாழில் முன்னெடுப்பு!

2 months ago
இந்தியாவின் குடியரசுதினம் யாழில் முன்னெடுப்பு! இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துணைத்தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்- இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மேலும், இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்ததைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/இந்தியாவின்_குடியரசுதினம்_யாழில்_முன்னெடுப்பு!

இந்தியாவின் குடியரசுதினம் யாழில் முன்னெடுப்பு!

2 months ago
இந்தியாவின் குடியரசுதினம் யாழில் முன்னெடுப்பு!
690739477.jpg

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை துணைத்தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ்- இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டு குறித்த நிகழ்வு ஆரம்பமானது.

மேலும், இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்ததைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் மற்றும் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)

 

https://newuthayan.com/article/இந்தியாவின்_குடியரசுதினம்_யாழில்_முன்னெடுப்பு!

 

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

2 months ago
காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய இந்தப் பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய பல பாடல்களோடு ஒப்பிட்டால், இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பான பாடல் இல்லைதான். ஆனால், இந்தப் பாடலில் ஒலித்த பவதாரிணியின் குரல், பாடலை கவனிக்க வைத்தது. அவருடைய குரலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் ரோஜாவும் நடித்திருந்தனர். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 2. நதியோடு வீசும் தென்றல் 1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான திரைப்படம் அலெக்ஸாண்டர். இந்தப் படத்தில் இருந்த சண்டைக் காட்சிகளின் சத்தத்திற்கு நடுவே ஒலித்த இந்த மெல்லிய, அழகான பாடல், பெரிதாக கவனிக்கப்படவில்லை. "நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?" என்ற துவங்கும் இந்தப் பாடலில் உன்னிகிருஷ்ணனும் பவதாரிணியும் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார்கள். வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் புதிதாக ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை கார்த்திக் ராஜா. 3. ஒரு சின்ன மணிக் குயிலு 1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படம் வெளியானது. இப்போது பலரும் மறந்துவிட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் இணைந்து பாடியிருந்தார்கள். கார்த்திக் - கனகா இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார்கள். படத்தின் பெயர் பலருக்கும் மறந்துவிட்டாலும் பாடல் இன்னமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 4. இது சங்கீதத் திருநாளோ 1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான அந்தப் படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்த "இது சங்கீதத் திருநாளோ" பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. 5. என் வீட்டு ஜன்னல் எட்டி பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் இது கவனிக்கத்தக்க ஒரு படமாக அமையவில்லை. ஆனால் பவதாரிணியும் அருண் மொழியும் பாடியிருந்த இந்த ஒரு பாட்டு, படத்தின் பெயரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்றது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல் ஹிட்டானது. இப்போதும் எங்கேயாவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சில நொடிகள் பாடலை ரசித்துச் செல்கிறார்கள். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன் பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து 'டைம்' என்ற திரைப்படம் 1999ல் வெளிவந்தது. கீதா கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கியிருந்தார். ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், அம்பிகா, நாசர் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ஆனால், படம் யார் நினைவிலும் தங்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடல், எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம் செய்திருக்கும். வீடியோ காட்சியில்லாமல் பாடலைக் கேட்பது நன்று. 7. மயில் போல பொண்ணு ஒன்னு 2000வது ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 9 பாடல்கள் பாரதியின் பாடல்கள்தான். ஒரு பாடலை புலமைப்பித்தனும் ஒரு பாடலை மு. மேத்தாவும் எழுதியிருந்தனர். மு. மேத்தா எழுதிய இந்தப் பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல், கேட்போரை மயங்கச் செய்தது. "குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல" என அந்தப் பாடலில் வரும் வரிகளைப் போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல் அது. இந்தப் பாடல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது. 8. தென்றல் வரும் வழியை 2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடிய மற்றொரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் பாடலில் நடுநடுவே வரும் பவதாரிணியின் ஹம்மிங், இந்தப் பாடலில் மற்றும் ஒரு போனஸ். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 9. காற்றில் வரும் கீதமே ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதைக் கவரக்கூடிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் இரண்டு இடங்களில் பாடியிருப்பார் பவதாரிணி. ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து ஒலிக்கும். தான் பாடிய பாடல்களிலேயே தனது தந்தை இளையராஜாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று என பவதாரிணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார். 10. தாலியே தேவையில்லை 2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற 'தாலியே தேவையில்லை' பாடல் ஒரு சுமாரான பாடல்தான். ஆனால், ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களைத் தவிர, பல பாடல்களில் பவதாரிணியின் ஹம்மிங் கவனிக்கத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, காதலுக்கு மரியாதை படத்தில் 'தாலாட்ட வருவாளா.." பாடலிலும் "முத்தே முத்தமா.." பாடலிலும் "தென்றல் வரும் வழியில்" பாடலிலும் இவரது ஹம்மிங் கவனிக்க வைத்தது. உல்லாசம் படத்தில் வரும் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ஹம்மிங் மட்டும் பவதாரணி. பவதாரிணி தனது பெரும்பாலான பாடல்களை ஹரிஹரனுடன் இணைந்தோ, அருண்மொழியுடன் இணைந்தோதான் பாடியிருந்தார். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, அரவிந்தன் (1997) படத்தில் இடம்பெற்ற "காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்" பாடலும் தேடினேன் வந்தது (1997) "ஆல்ப்ஸ் மலை காற்றுவந்து நெஞ்சில் கூசுதே" பாடலும் கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன. https://www.bbc.com/tamil/articles/c131l1m512zo

இலங்கையின் சுதந்திர தினம் சிங்கள மக்களுக்கும் கரி நாளே! - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

2 months ago
இலங்கையின் சுதந்திர தினம் சிங்கள மக்களுக்கும் கரி நாளே! January 26, 2024 இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் . அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். குறிப்பாக இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறப்பட்டுக் கொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேச்சுமட்டத்திலே மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருகின்றார்கள். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்த ஆதரவினை வழங்கவேண்டும். தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது.இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையோ நிறுத்த போவதில்லை .எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை. மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம், சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ளவேண்டும். சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது .13இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம். எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும்.இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/200113/