Aggregator
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக இராணுவத்தினர் கூறி 06 மாதங்கள் கடந்தும் சுதந்திரமாக செல்ல அனுமதியில்லை
24 JUN, 2025 | 10:27 AM
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்நிலையில் யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 2002ஆம் ஆண்டு கால பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரன் இராணுவ தரப்புகளுடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு மாத்திரம் மக்கள் செல்ல அனுமதி பெற்று , பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் குழப்பமடைந்ததை அடுத்து ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர்.
அந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் மனைவியும், அப்போதைய மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ தரப்பினருடன் பேச்சுக்களை நடாத்தி ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று, விசேட தினங்களில் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதி பெற்று வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நவராத்திரி தினத்திற்கு 10 நாட்களும் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
2022ஆம் ஆண்டு திருவெம்பாவை உற்சவத்திற்கு ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தில் இருந்த பழமை வாய்ந்த முருகன் சிலை உள்ளிட்ட சிலைகள் சில என்பன களவாடப்பட்டு இருந்தன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்பாள் கோயில் உட்பட கட்டுவன் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வசாவிளான் மணம்பிறை கோயில், வசாவிளான் சிவன் கோயில், வசாவிளான் நாக கோயில், பலாலி நாக தம்பிரான் கோயில், பலாலி சக்திவெளி முருகன் கோயில் என்பவற்றில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகளுடன் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இருந்த போதிலும் , ஆலயத்திற்கு செல்லும் மக்கள் ,கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றினை உரிய முறையில் அமைத்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு பின்னரே உத்தியோக பூர்வமாக ஆலயத்தினை கையளிக்க உள்ளதாகவும் , அதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக ஆலயத்திற்கு சென்று வழிபட முடியும் என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
இராணுவத்தினர் அவ்வாறு அறிவித்து 06 மாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட முடியாத நிலைமையே காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி பலாலி மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆலயத்தில் இராணுவத்தினரிடம் விசேட அனுமதி பெற்று , விசேட பூஜைகளை நடாத்தி இருந்தனர். குறித்த பூஜையில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர தற்காலிக வீதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அந்நிலையில் தற்போது தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை திங்கட்கிழமை (23) நாடாளுமன்ற உறுப்பினர் , க. இளங்குமரன் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த தற்காலிக வீதி அமைத்து முடிந்ததும் இராஜ இராஜேஸ்வரி அம்மனை மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உறுதி அளித்துள்ளார்.
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை இளங்குமரன் எம்பி பார்வையிட்டார்
24 JUN, 2025 | 11:11 AM
பலாலி பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகம் தற்போது துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த யுத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த நிலையில், துறைமுகத்தினதும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நீர்ப்பாதைகள் மற்றும் அடித்தளங்கள் மோசமாக சேதமடைந்திருந்தன.
மேலும், கடல் பகுதியில் பலத்த கற்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள கடற்தொழிலாளர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது கடலின் ஆழம் சரிவர இல்லாததுடன், அடிக்கடி படகுகள் சேதமடைவது போன்ற இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து, பல ஆண்டுகளாகக் கடற்தொழிலாளர்கள் துறைமுக பகுதிகளை புனரமைக்கக் கோரி வந்த நிலையில், தற்போது இந்த பணி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திங்கட்கிழமை (23) அப்பகுதிக்கு நேரில் சென்று நிலவரத்தை பார்வையிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு
பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு
24 JUN, 2025 | 11:12 AM
யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்
இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் , உபதவிசாளர் ஜெயகரன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மற்றும் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.
அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க விரைந்து தம்மால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
கருத்து படங்கள்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!
யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதமாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும், சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகளும் ஒரு அடிப்படை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளன.
அதேசமயம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாதிக்கப்பட்ட விமானங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சரியான வழித்தடங்களை CAASL குறிப்பிடவில்லை.
ஆனால் பயணிகள் நிகழ்நேர புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
பிராந்திய வான்வெளி இடையூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) – எந்தவொரு அவசர தரையிறக்கங்கள் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் விமானங்களையும் பொருத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கட்டார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிவில் விமான நிறுவனங்களுக்கு உதவ ஆணையம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.