Aggregator

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்ய வேண்டும் ; வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை

2 months 2 weeks ago

23 AUG, 2025 | 03:34 PM

image

(எம்.நியூட்டன்)

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (22)  மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். 

தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். 

மிக நீண்டகால அனுபவம் உள்ள தாய்லாந்து இது தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணம் விவசாய மற்றும் கடலுணவு உற்பத்திகளில் போதிய திறனைக் கொண்டுள்ளபோதும் இரு துறைகளில் விலைத்தளம்பல் இருக்கின்றது என்று ஆளுநர் குறிப்பிட்டார். 

இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது என்றும் தெரிவித்தார். இதை மாற்றியமைப்பதற்கு உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கப்பெறும்போது அதை பதப்படுத்துவதற்கோ அல்லது பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ உரிய வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

இந்த விடயத்தில் அனுபவமுள்ள தாய்லாந்து முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதன் ஊடாக பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். 

இந்த விடயத்தை சாதகமாக அணுகுவதாக தூதுவர் பதிலளித்தார். அத்துடன் வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில், தாய்லாந்தில் பல இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்ட தூதுவர் வடக்கு மாகாண இளையோரும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். 

மேலும், சுற்றுலாத்துறை தொடர்பிலும் தாய்லாந்து தூதுவர் கவனம் செலுத்தினார். அதற்கான உட்கட்டுமானங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். 

வடக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கால போர் காரணமாக அந்த மாவட்டம் மேலெழுந்து வருவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

போதுமான வளங்கள் அந்த மாவட்டத்திலுள்ளபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமையும் தெளிவுபடுத்தினார். 

IMG-20250823-WA0008.jpg

IMG-20250823-WA0012.jpg

IMG-20250823-WA0010__1_.jpg

https://www.virakesari.lk/article/223176

உலகத் தமிழர்களின் முதலாவது தமிழ் நாளேடு: உதயதாரகை | 1841

2 months 2 weeks ago
உதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். To read the newspapers: https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months 2 weeks ago
When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை. பாடல் வரிகள் பா.எண் - 161 படம் – ஆரவல்லி 1957 இசை – G. ராமநாதன் பாடியவர் – ஜிக்கி , A.M ராஜா இயற்றியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - சின்னப்பெண்ணான போதிலே சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கன்னியென்னாசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன் வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கண் ஜாடை பேசும் எந்நிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மை தனை சொல் நிலவே நீ என்றேன். வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இந்த பாடல் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டுவருகிறது ..எதிர்காலத்தில் பேரன் பேத்திகளுக்கும் பயன்படவேண்டும். ஆங்கில பாடலின் மூலத்திலிருந்து வந்தது . முடிந்தால் உங்கள் மகன் , மகளுக்கு சொல்லி பேரன் பேத்திகளை மனனம் செய்து இந்தப்பாடலைஉயிர் போடு வைத்திருங்கள். காலத்தால் அழியாத பாடல் .

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 months 2 weeks ago
பாகம் - 1 திரு. மாத்தயாவின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து திருமலை மாவட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். ஏற்கனவே அங்கே குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்த திருமலை மாவட்டக் குழுவினருடன் இணைந்து கொள்கின்றோம். கால்நடையாகப் பயணத்தைத் தொடர்கிறாம். எறும்புக்கூட்டம் மாதிரி நீண்ட வரிசையாய்ப்பயணம் தொடர்கிறது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என்றிருந்த வயற்காணிகள் கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. செல்லும் பாதையெங்கும் மனித நடமாட்டமே இல்லை. பற்றைகள், முட்கள், சேறு எல்லாவற்றையும் தாண்டி வெகு வேகமாக ஆனால் விழிப்புடன் திருமலை மாவட்டக் குழுவினர் முன்னே செல்கிறார்கள். நாம் போய்ச்சேர வேண்டிய இடம் விரைவில் வந்துசேர்ந்து விடக்கூடாதா? என்ற எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கிறேன். வழயில் நாங்கள் கண்ட ஒரேயொரு உயிரினம் மாடுகள் தான். கேட்பார் மேய்ப்பார் யாருமின்றி கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. தமிழர்களுக்கில்லாத சுதந்திரம் இந்த மாடுகளுக்கு! தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவருமே இப்பகுதிகளைவிட்டு வெளியேறி விட்டனர். எங்கோ ஓரிரு ஆண்கள் மட்டும் தங்கள் மண்ணைப் பிரியமனமில்லாமல் குடும்பத்தினரை அனுப்பி விட்டு தாங்கள் மட்டும் அங்கேயே வசித் வருகின்றனர் எனக் கேள்விப்படுகிறோம். இராணுவ முகாம்களின் வெளிச்சம் மட்டும் மிகப் பிரகாசமாக உள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் தற்காலிகமாகப் பயணம் நிறுத்தப்படுகிறது. அந்த இடத்தில் நாங்கள் தங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணம் தொடங்கும்போது எனக்காகத் தரப்பட்ட இரவு உணவைச் சாப்பிடக் கூடிய நிலையில் நான் இல்லை. உடனே தேவைப்படுவது தூக்கம். சுமார் மூன்று மணித்தியாலங்கள் அயர்ந்த தூக்கம். காலை 8.30 மணியளவில் எழுந்து வெளியே வருகிறேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அயலைப் பார்க்கின்றேன். கிராமமே வெறிச்சோடிக் கிடக்கின்றது. அங்கொருவர் இங்கொருவராக இருந்தவர்கள் போராளிகளுக்கான உணவைத் தயாரிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பயணத்தைத்தொடர்வதற்குரிய ஆயத்தநிலையில் திருமலை மாவட்டக் குழுவினர் இருக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் யாரும் தூங்கிய மாதிரி இல்லை. எனக்கோ ஆச்சரியம். ஏனெனில் நாங்கள் கடந்து வந்த தூரத்தின் இருமடங்கு தூரத்தை இவர்கள் அந்த இரவில் நடந்துள்ளார்கள். எம்மை அழைத்துச் செல்வதற்காக இப்பகுதியில் நடந்து வந்து திரும்ப எங்களுடன் இங்கே நடந்து வந்துள்ளார்கள். அத்துடன் இந்த இடைப்பட்ட நேரத்தில் தூங்கவுமில்லை. அடுத்த காணிக்குள் சில நாய்கள் உலாவுகின்றன. நாயின் சொந்தக்காரர்கள் அகதிகளாகச் சென்றுவிட இந்த மண்ணின் பாதிப்பு நாய்களிலும் தெரிகிறது. சாப்பாடு இல்லாத இந்த நாய்கள் பாவம் என நினைத்துக் கொள்கிறேன். இரவுச் சாப்பாட்டுக்கென எனக்காகத் தரப்பட்ட பார்சல் நினைவுக்கு வரவே அதை நாய்களுக்குப் போடுவோம் என்றெண்ணி அந்த வீட்டின் உள்ளே வருகின்றேன். திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் வருகிறார். வழக்கமான உரையாடல். “இரவு நாங்கள் நடந்த தூரம் எவ்வளவு?” எனது கேள்வி. ஐந்து அடுத்து மூன்று அப்படியே... என்று கணக்குப்போட்டு மொத்தம் 20 மைல்கள் என்கிறார். வியப்பில் ஆழ்கின்றேன். நான் 20 மைல் நடந்து விட்டேன் என்றல்ல. திருமலை மாவட்டப் போராளிகள் 40 மைல்கள் நடந்திருக்கிறார்களே என்பதும், அத்துடன் இந்த இடைநேரத்திலும் தூங்காமல் அடுத்த பயணத்துக்குரிய தயார் நிலையில் இருக்கிறார்களே என்பதும்தான் எனது வியப்புக்குக் காரணம். பதுமனை விட்டு விலகிச் செல்கிறேன். தன்னைச் சூழ இருந்தவர்களிடம் மெதுவான குரலில் பதுமன் கேட்கிறார். “எல்லோரும் சாப்பிட்டாச்சா?” வழக்கமான இந்தக் கேள்வியைத் தொடர்ந்து மௌனம் நிலவுகிறது. மீண்டும் பதுமனே தொடர்கிறார். “எல்லோரும் சாப்பிடாதீங்க சோறு இல்லை” – வழமைக்கு மாறான வேண்டுகோள். சூழ இருந்தவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நான் வியக்கிறேன். ஏனெனில் இதுவரை நாளும் ஒரு சராசரிக் குடும்பஸ்தனாக இருந்தவன் நான். மூன்று நேரச் சாப்பாட்டில் எந்த நேரமும் பிந்தக் கூடாது எனக்கு. கொஞ்சம் பிந்தினாலும் மிகவும் சிரமப்படுவேன். அந்தக் காட்சிகள் நினைவுக்கு வந்தன; அத்துடன் இந்த மாதிரியான ஒரு இடத்தில் இரவுச் சாப்பாட்டைக் காலைச் சாப்பாடாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் நாய்களுக்குப் போட நினைத்த என்னை எண்ணி நான் குறுகிக் கொண்டேன். சாப்பாடு ஓரளவு குறைந்தால் பங்கிட்டுச் சாப்பிடச் சொல்லியிருப்பார் பதுமன். ஆட்களின் தொகையையும் சாப்பாட்டின் அளவையும் நினைத்துத்தான் இவ்வாறான வேண்டுகோளை தனது போராளிகளுக்கு விடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது திருமலை மாவட்டத்தின் யதார்த்த நிலையில்ன் கோரத்தைப் புரிந்து கொண்டேன். வெளியே திருமலை மாவட்டப் போராளிகள் மாமரத்தின்கீழ் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. குழுத் தலைவர்களின் அறிவுறுத்தல்களின் பின் அவர்கள் கலைகிறார்கள். ஒருவரோடொருவர் சிரித்துப்பேசியபடி மாங்காய்களைத் தடியால் எறிந்து விழுத்துகிறார்கள். ஏதோ சொட்டைத் தீனுக்காகத்தான் இதை வீழ்த்துகிறோம் என்ற பாவணையில் மாங்காய்களைப் பொறுக்கி கடிக்கிறார்கள். இந்தப் பிரயாண முடிவில் அவர்கள் சென்றடையும் முகாமில்தான் இனி வயிறாரச் சாப்பிட வேண்டும். பதுமன் வருகிறார். திருமலை மாவட்ட போராளிகளின் உணவு நிலைமைபற்றி அளவளாவுகிறேன். “இப்ப ஒருமாதிரி பிரச்சினை யில்லை. I. P. K. F. காலத்தில் தான் ஆகக்கஷ்டப்பட்டிட்டம். இவனெல்லாம் ஒரு தொடர்புமில்லாமல் காட்டுக்குள் பாலைப்பழத்தையும், விளாங்காயையும் சாப்பிட்டுக் கொண்டே சில காலம் இருந்திருக்கிறான். இவனோடை இருந்தவங்களெல்லாம் கடலில் வண்டி கவிழ்ந்து போனதில செத்துப் போனாங்கள்” என்று சொல்லி ஒரு பையனை அறிமுகப்படுத்துகிறார். மனித நடமாட்டமில்லாத பகுதியில் மீண்டும் பிரயாணம் தொடங்குகிறது. கையில் தூப்பாக்கியை ஏந்தியபடி தமது சொந்தமண்ணில் காலடிபதிக்கிறார்கள். 90க்கு மேற்பட்ட படை முகாம்கள் உள்ள இந்த மாவட்டத்தில் உள்ள தமிழனாகப் பிறந்த எவனதும் ஆயுட்காலத்தை அதிகரிப்பது, உயிர்வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது இந்த ஆயுதங்களே. இலட்சியத்தில் நம்பிக்கை கொண்ட இவர்களின் பின்னால் கூனிக்குறுகியபடி நானும்... (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 months 2 weeks ago
இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது. இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது. தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன்.

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 months 2 weeks ago

large.uthikkumthisainookkiunnathapayanam

இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது.

இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது.

தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த கொடூரங்களை வெளிக்காட்டும் முகமாக இந்நூல் மீளவும் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஆயினும் இக்கட்டுரையின் இரு பத்திகள் கிடைக்கப்பெறவில்லை.

கிடைக்கப்பெற்ற யாவற்றையும் எனது வேண்டுகோளின் பேரில் திரு. தா. இளங்குமரன் அவர்கள் எழுத்துணரியாக்கம் செய்து தந்தார். அதனை நான் இங்கு வெளியிட்டு வைக்கிறேன். அத்துடன் இதனை மீளவும் நூலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 2 weeks ago
ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கைதாகாலாம்? written by admin August 23, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23) நடைபெற்ற விசேட காவற்துறை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க கூறினார். வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். https://globaltamilnews.net/2025/219556/

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 2 weeks ago
ஆமா .... தமிழ் இளைஞரை பயங்கரவாத சட்டத்தின் மூலம் கைது செய்து இதைவிட பயங்கர மனித உரிமை மீறலில் ஈடுபட்டபோது இவர் வாயே திறக்கவில்லையே, அது ஏன்? தான் தமிழரின் பிரதிநிதி என்று எப்படி உரிமை எடுத்துக்கொள்ளலாம்? எல்லோரும் வைத்திய சாலையில் படுக்கும் போது, தலைமறைவாகும்போது ரணிலார் மட்டும் ஏன் தலையைக் கொடுத்தார்? "யானைக்கும்அடி சறுக்கும்." தமிழரை தந்திரமாக கூறு போட்டு அழித்தவர், இன்று தன்னை தான் காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? அனுதாபம் பெறவா? இவனுகள் நித்திரையிலும் தமக்கு எழும் எதிர்ப்பை எதிர்ப்பாளரை வைத்தே தமக்கு சாதகமாக எப்படி திருப்பலாமென யோசிப்பார்கள். இராணுவ வெற்றி மறைந்து போக, இப்போ வீடற்றவர் எனக்காட்டி எப்படி ஏழை மக்களை திசை திருப்பினார்கள். உடனடியாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியான ஏமாற்று வேலைகளுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் சரியான சட்ட விசாரணை செய்து குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் கைது செய்தால் அரசியல் பழிவாங்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதனாலேயே அதற்கு முன், அனுராவுக்கு எதிராக நீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடிகிறது. இப்போ, மக்களை இவர்களின் ஊழலுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை அனுரா செய்ய வேண்டியது முதல் வேலை. இல்லையேல் எதிரி முந்திக்கொண்டு அனுராவை சிறையில் அடைக்கக்கூடும்.

கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்

2 months 2 weeks ago
இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு: இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢) இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர். அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார். இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே. ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை. இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய கலமொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்

கடற்புலிகளின் தொலையியக்கி கட்டுப்படுத்தி கடற்கலம்

2 months 2 weeks ago

இது 2022ம் ஆண்டு நான் எழுதிய பதிவின் மீள் வெளியீடு:



இது ஒரு உண்மைச் சம்பவம்... சிங்களப் படைகளிடத்தில் உயிருடன் பிடிபட்டு சித்திரவதையால் எம்மை விட்டுப் பிரிந்துவிட்ட எனது கடற்புலி உறவினர் ஒருவர் இறுதிப் போர்க்காலத்தில் தெரிவித்த பற்றியம் இதுவாகும். 

எனது உறவினர் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவுகள் ஒன்றினது கட்டளையாளர் ஆவார். சமாதான காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு எல்லாம் சென்று அந்தப் பிரிவிற்கான சிறப்புப் பயிற்சிகள் எல்லாம் எடுத்து நாடு திரும்பியவர் ஆவர். (எனது பாதுகாப்பிற்காக அவருடைய பெயரை எழுதவில்லை. அவருடைய நிழற்படம் கூட என்னிடம் இல்லை😢)

இவர் இதை கரையா முள்ளிவாய்க்காலிலிருந்த எங்கள் உறவினரின் வீடொன்றில் கடற்புலிகள் தம் படைக்கலன்களை கொண்டுவந்து வைத்த போது தெரிவித்தார். அப்போது அங்கு என்னைத் தவிர எங்கள் பிற உறவினர்களும் அங்கிருந்தனர்.

அன்றொரு நாள் நண்பகல் போல் அவ்வீட்டின் பதுங்ககழிக்குள் நாங்கள் எல்லோருமிருந்து கதைத்துக்கொண்டிருக்கும் போது அவர் தெரிவித்தார், புலிகளின் புலனாய்வுத்துறையினர் சில நாட்களுக்கு முன்னர் நீர் மட்டத்திற்கு கொஞ்சம் மேலால் பயணிக்கிற தொலையியக்கியால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஆளில்லாத படகு ஒன்றின் மூலம் படைக்கலன்களை வெளியில் இருந்து தருவித்தனர் என்று. அதில் சில ஏகே துமுக்கிகள் மற்றும் அவற்றிகான சன்னங்கள் போன்ற மிகக் குறைந்த அளவிலான வலுவற்ற ஆயுதங்களே தருவிக்கப்பட்டது என்றும் ஆனால் அவை அப்போதைய நிலைமைக்கு போதாது என்றும் கூறி அலுத்துக்கொண்டார்.

இதைப் அப்போது பகிரக் காரணம், புலிகளிடம் ஏதோ ஒரு புதுவித தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது என்பதை வெளிக்காட்டிடவே.

ஆயினும் அது தொடர்பில் அவர் கூறிய ஏனைய விடையங்கள் என்னினைவில் இப்போது இல்லை.

இதே போன்று வெளியிலிருந்து தொலைக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைக்கக்கூடிய மிதக்கும் பொருளொன்று 9/03/2000 அன்று திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 2 weeks ago
குறைய நேரம் வேலை செய்ய நினைப்பவர்கள் குறைய சம்பளம் எடுக்க நினைத்தால் நல்ல விடயம்.

சுவர் முகம் - ஷோபாசக்தி

2 months 2 weeks ago
@பிரபா , எல்லாம் விளங்கியது என்று சொல்லமுடியாது. டேவிட் கள்ளப் பேரில் அசைலம் கேட்ட இராணுவ வீரன் என்று இறுதியில் தெரிந்தது. ஆனால் அவர் சிறுமிகளைச் சீரழித்தாரா என்று தெரியாது! ஷோபாசக்தி சொற்களைக் கொண்டு கதைகளைச் செதுக்குபவர் என்பதால் கவனமாகப் படிக்கவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 2 weeks ago
அவர் பற்றி இன்னமும் அறியாத தகவல்கள்... கொழும்பு CRFC மைதானத்துக்கு அவ்வப்போது வரும் அவர் , அந்த மைதானத்தின் Pavilion மாடியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையில் அமர்ந்து மது அருந்தியபடி அங்கே ரக்பி விளையாடிக்கொண்டிருக்கும் பதின்ம வயது மற்றும் இருபதின் ஆரம்ப இளைஞர்களை கவனித்துக்கொண்டிருப்பார். அதில் பிருஷ்டம் பெரிதான சிறார்களை/இளையோரை குறிவைத்து கீழே இறங்கி, " வீட்டுக்கு வருகிறாயா? இலங்கை அணியில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் " என்பார். இவ்வாறாக அவர் இலங்கையை " தூக்கி நிறுத்தினார் " ithuvum facebook prathithaan மிஸ்டர் கிளீன் பற்றி எப்படியெல்லாம் எழுதுறாங்க..

எனது மரணச்சடங்கு.🖤

2 months 2 weeks ago
இவைகள் தான் என் குடும்பத்தினர்க்கு சொல்லி வைத்திருப்பது.அதாவது எனது இறுதி சடங்கு நிகழ்வில்..... யாருமே கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது.உடைகள் பஞ்சவர்ண கலர்களாக இருக்க வேண்டும்.யாரும் கறுப்பு கண்ணாடி அணியக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு சடங்கு ஆரம்பமாகியதும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். https://youtu.be/ggNq4bbYb_Y?si=W79txuZdk2fwPudF நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுதல். அண்மைக் காலங்களில் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக வேலை செய்வதில்லை. அப்படி இந்த திரியிலும் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக இயங்கவில்லை என்றால்.... இந்த திரியில் மட்டும் நேரடியாக இயங்குமாறு ஆவன செய்ய வேண்டுகின்றேன். நன்றி 🙏

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 2 weeks ago
இலங்கை போலிசார் பிணை வழங்க மறுப்பது வழமையாக நடைபெறும் விடயம்தான். சாதாரண குடிமக்களுக்கும் இதுதான் இலங்கையில் வழமையான நடைமுறை. இலங்கையின் முன்னாள் அதிபர் என்பதற்காக இங்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றால் இலங்கையில் சாதாரண பொதுமக்கள் முறைகேடாக தண்டிக்கப்படுவதை ஏற்கலாமா? சாதாரண பொதுமக்களுக்கும் இவ்விடயத்தில் விலக்கு அளிக்கலாமே!

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

2 months 2 weeks ago
சினிமா அரசியல் தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாழ்க்கை வாழ விரும்பும் தமிழ்நாட்டு மக்களை வைத்து எந்த அரசியல் கணிப்பும் செய்யமுடியாது. அதை விட பணவாக்கு இன்னும் கொடுமையானது...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 2 weeks ago
உப்பிடி எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி உள்ளுக்கு போட அவைக்குள்ள வருத்தங்கள் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் வெளியிலை வரும் போல கிடக்கு....😂