2 months 2 weeks ago
இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
2 months 2 weeks ago
20ம் நூற்றாண்டின் தொடக்கம் அன்னபூரணி தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
2 months 2 weeks ago
😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்… அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்… மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள். நாம்? வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம். அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.
2 months 2 weeks ago
ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான். யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர். இப்படி பலர் உளர். இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.
2 months 2 weeks ago
இந்த பெர்ணாந்து புள்ளேயை “தமிழ் வந்தேறி” என்று சிங்களவர்கள் திட்டுவதில்லையா? 13 ம் நூற்றாண்டு அதாவது 8 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த வரலாற்றை வைத்து அப்படி முத்திரை குத்தி சிலரை வந்தேறி என்று திட்டும் போது 100 - 200 வருடத்திக்கு முன்னர் சிங்களவராக மாறியவர்களை அப்படி திட்டுவதில் தவறில்லையே!
2 months 2 weeks ago
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம். அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு.............. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே. 'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா................. தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.
2 months 2 weeks ago
நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு Dec 20, 2025 - 06:11 PM தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjeaf38c02yeo29n29ppjn6w
2 months 2 weeks ago
T20 World cup 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு - சுப்மன் கில் நீக்கம் Dec 20, 2025 - 03:17 PM எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழாத்தில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2026 T20 உலகக்கிண்ணத்திற்கான இந்தியக் குழாம் பின்வருமாறு, சூர்யகுமார் யாதவ் (தலைவர்) அக்ஷர் படேல் (உப தலைவர்) அபிஷேக் சர்மா சஞ்சு சம்சன் (விக்கெட் காப்பாளர்) திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் டுபே ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ரானா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்ரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்) https://adaderanatamil.lk/news/cmje46uix02y7o29nu7984w56
2 months 2 weeks ago
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:57 PM நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233942
2 months 2 weeks ago
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!
Published By: Digital Desk 2
20 Dec, 2025 | 02:57 PM

நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன.
மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/233942
2 months 2 weeks ago
"முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 20 Dec, 2025 | 11:06 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 428 கிராம் ஹெரோயின், 536 கிராம் ஐஸ், 03 கிராம் கொக்கெய்ன், 527 கிராம் கஞ்சா, 14,502 கஞ்சா செடிகள், 02 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 56 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 348 போதை மாத்திரைகள், 146 கிராம் 300 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 517 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 846 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 896 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 16 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233918
2 months 2 weeks ago
பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம் 20 Dec, 2025 | 11:05 AM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால் உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/233917
2 months 2 weeks ago
பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம்
20 Dec, 2025 | 11:05 AM

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றினால் உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.
https://www.virakesari.lk/article/233917
2 months 2 weeks ago
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:27 PM ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு நிதியில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சவுதி மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான 2வது ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி செய்ததற்காக 7 ஆண்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, தலா 1.64 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233939
2 months 2 weeks ago
ரி20 உலகக் கிண்ண முன்னோடி குழாத்தில் யாழ். மைந்தன் வியாஸ்காந்த் Published By: Vishnu 19 Dec, 2025 | 08:01 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இறுதி குழாத்தை தெரிவுசெய்யும் பொருட்டு பெயரிடப்பட்டுள்ள 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தமிழ் யூனியன் வீரருமான விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். தமிழ் யூனியன் கழகத்திற்காக அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் வியாஸ்காந்த் 60 ரி20 போட்டிகளில் 67 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த முன்னோடி குழாத்தில் அனுபசாலிகளுடன் இளம் வீரர்கள் பலரும் இடம்பெறுகின்றனர். முன்னோடி குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் வருமாறு:- தசுன் ஷானக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மிலன் ரத்நாயக்க, நுவன் துஷார, ஏஷான் மாலிங்க, துஷ்மன்த சமீர, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மெத்யூ. https://www.virakesari.lk/article/233876
2 months 2 weeks ago
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை 20 Dec, 2025 | 02:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியது. இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/233938
2 months 2 weeks ago
வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல. ஒரு காலத்தில் - புத்தளம் முதல் - நீர்கொழும்பு வரை தமிழர் நிலம். இப்போதும் ரயில் நிலைய பெயர்களை பார்த்தால் விளங்கும். சிங்கள ஏடுகள் கூட தெமல பற்றுவ, தமிழர் பற்று என சொன்ன இடம். இன்று? பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம். இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது. நாளைக்கு இதே நிலைதான் காரதீப வுக்கும் 😂. சுதாகரிச்சு கொண்டு இப்போதே தமிழர் எண்ணிகையை சிந்தாமல், சிதறாமல் எமது தாயகத்தில் சேர்க்க வேண்டும். இல்லை எண்டால் “ஈழத்து புத்தன்” கோவில் அமைவதை தடுக்க முடியாது.
2 months 2 weeks ago
சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
2 months 2 weeks ago
சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா!
குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.
2 months 2 weeks ago
இன்றைய இயற்கை அனர்த்தம் இதை பேறு பொருளாக்கி உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகான தேவை கல்லோயா குடியேற்றத்திட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை, பின்னர் வந்த தொடர் கலவரங்களின் போதே ஏற்பட்டு விட்டது. 1983 இல் சீனியர் தொண்டா ஒவ்வொரு தோட்டமாக போய் வடக்கு போய்விடாதீர்கள் என மக்களை தடுத்தார். அப்போதே மஹோ, கெக்கிராவ என தோட்டங்களை விட்டு வெளியேறி சிங்கள பகுதியில் கூலி வேலை செய்த பலர் வன்னிக்கு வந்தனர். ஆகவே இது 80 ஆண்டுகளாக நடக்காமல் இருக்கின்ற, நடக்க வேண்டிய விடயம். அங்கே வெற்றிடம் ஏற்பட்டால் அதை நாம் ஏன் நிரவ வேண்டும்? அது சிங்களவரின் பாரம்பரிய தாயகம். அங்கே இந்த மக்கள் அடிமைகளாக அதாவது வெறும் வாக்கு, தொழில் செய்யும் இயந்திரங்களாக இருக்காமல் எம்மோடு வந்து விட்டால். அங்கே வேறு தமிழரை கொண்டு நிரவ வேண்டிய தேவை இல்லை.