Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
போர் நிறுத்தம் அமுலில் – தயவுசெய்து அதை மீறாதீர்கள் – ட்ரம்ப் வலியுறுத்தல்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் “இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். கடந்த சில மணிநேரங்களில் ஈரான் இஸ்ரேலிய பிரதேசங்கள் மீது பல ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று அமெரிக்கத் தலைவர் எச்சரித்தார். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் டரம்ப், போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் – என்று பதிவிட்டார். செவ்வாய்க்கிழமை காலை 0400 மணிக்கு தொடங்கும் இந்த போர் நிறுத்தம் 24 மணி நேர கட்டமாக இருக்கும் என்றும், ஈரான் ஒருதலைப்பட்சமாக முதலில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும் என்றும் அமெரிக்கத் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார். 12 மணி நேரத்திற்குப் பின்னர் இஸ்ரேல் இதைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார். இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்தன. ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் டெல் அவிவ் கூறியது. https://athavannews.com/2025/1436832

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது என்ன உங்களின் வாசிப்பு போன்றதா? இப்படித்தான் கட்டி எழுப்புவது. ரஷ்யாவின் நடத்தையும் அறியக் கூடியதாக இருப்பது. சிரியாவில் இரான் விமான எதிர்ப்பு விடயத்தில் ருசியா உடன் பெட்ரா அனுபவத்தை வைத்து. ரஷ்யாவுக்கு உழைப்பு அதுவாக அவ்வளவு இலகுவில் விட்டு கொடுக்காது, ஈரானுக்கு (அது தனியே நிற்கும் போது), மேற்கு சும்மாவே தடுக்க முனைகிறது, உரசல்கள் வராது. (அமெரிக்காவே அடிபட்ட இராக்கின் எண்ணெய் வருவாயை தடைகள் மூலம் மறைமுகமாக தடுத்து, இரானில் இருந்து வர்த்தகம் , மின்சக்தி போன்றவற்றை இரானிடம் இருந்து ஈராக் வாங்குவதை தடுப்பது போல, ரஷ்யாவுக்கும் இது ஒரு பிடி இரானிடம் இருந்து வேறு பொருளாதார நமைகளை பெறுவதற்கு.) முறித்தால் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். ஈரானின் கணிப்பில் வேறு அம்சங்களும் இருக்கலாம். (உ.ம். ருசியா இடம் இருந்து போர்விமானங்களை பெறுவது, விமான எதிர்ப்பு அமைப்பை பெறுவது போன்றவை. இரான் 90 நடுப்பகுதியில் முனைய சோவியத் இல் இருந்த சில நாடுகளிடம் போர்விமானங்களை வாங்க தெண்டித்தது. அதை அமெரிக்கா தடுத்து விட்டது. பகிரங்கமாக இணைய தளத்தில் இருக்கிறது. https://www.armscontrol.org/act/1997-10/press-releases/us-buys-moldovan-aircraft-prevent-acquisition-iran#:~:text=Moldova%20informed%20the%20United%20States,agreement%20authorizing%20future%20cooperative%20activities.) (இது பல மேற்கு / us குறுக்கீடு. தடுப்புக்கு உட்பட்டே கட்டப்பட்டது. இறுதியில் ருசிய பாவிக்கப்பட்ட எரிபொருளை அகற்றும் (ககிஸ்ஸிங்யர் ஷாவுக்கு சொன்னது போலவே) என்ற உடன்பாட்டுக்கு கீழே அனுமதிக்கப்பட்டது. அப்போது இரான் மீது தடைகளும் கொண்டு வரப்பட்டு விட்டது.) அந்த நேரத்தில்,, இதில் ரஷ்யா (பிரான்ஸ் உம் எப்போதும் ) தடைகளுக்கு ஆமோதிப்பதன் ஒரு பகுதி காரணம், அதன் அணு உலை / சிறப்புத்தேர்ச்சி வர்த்தகத்துக்காக. (ஆனால், இப்படித்தான் எந்த மிகஉயர் தொழில் நுட்பம் விற்கப்படுவது - அது எப்போதுமே rentier transaction.) இதனாலேயே இரான் சொந்த செறிவூட்டல் வேண்டும் என்று நிற்பது, வெளியாரிடம் தங்காமல் இருக்க. அது மேற்கு / இஸ்ரேல் க்கு பொறுக்கமல், வெப்பியாரத்தில் எரிகிறது. ஏனெனில், எவர் கொடுத்தாலும் மேற்கு / us தடுக்கும். இப்போது வெளிப்படையாகவே ஈரானை அன்ஹா உரிமையை விடும்படி கேட்கிறது மேற்கு / us. மேற்கின் பிரகாரத்தை ஒப்புவிக்கும் கதை உங்களுடையது; ஒன்றில் அந்த நிலைக்கு ஆதரவால் அல்லது சிந்தனை இல்லாததால். இதில் கூட சொல்வது அவளையும் செய்து இருப்பது நீங்கள் நானல்ல. அதுக்கு முதல் பரந்த சிந்திப்பு இருக்க வேண்டும். எந்த நாடாவது சொந்தமாக மின் அணு ஆலையை இயக்குவதை வேறு எந்த நாட்டிடமும் பொறுப்பு கொடுக்க விரும்புமா, வேறு எந்த நன்மைகளும் இல்லாமல், அதில் அச்சுறுத்தல் பிரச்சனைகளும் வெளியாரால் (மேற்கு) இல்லாது இருந்தால். அதுவும் இரான் போன்ற துறை சார் அனுபவம் உள்ளவர்களை கொண்டு இருக்கும் போது? மற்றவை , உங்களின் விடயம், சிந்தனை இல்லாத அரைகுறை வெற்றுக் கதை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ayatollah ali khameneiயின் துணிவு உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து🙏👍....................ம‌னுஷ‌ன் சொன்ன‌ எல்லாத்தையும் செய்து விட்டார் , போர் நிறுத்த‌ நாட‌க‌த்தில் ஈரான் விழிப்புட‌ன் இருக்க‌னும்...........................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
இந்த போர் ஒரு தேவையற்ற போர் இதனால் ஏற்பட்ட அரசியல் இராணுவ ஆதாயங்கள் பற்றிய கருத்துக்கள் இப்போதே தெரிவிக்க முடியாவிட்டாலும், இது ஒரு தேவையில்லாத ஆணி என சம்பந்தப்பட்ட தரப்புக்களே உணர்ந்துள்ளதாக தெரிகிறது, அனைவருக்கும் இந்த போரில் இருந்து வெளியேற வேண்டிய தேவை , ஆனால் இது இஸ்ரேலிற்கு ஒரு தோல்வி என கருத இடம் உண்டு, அமெரிக்கா இதில் வேண்டா வெறுப்பாகவே ஈடுபட்டுள்ளதாக என கருதுகிறேன், இஸ்ரேலால் தொடர்ந்து இந்த வான் தாக்குதலை தொடர முடியாது, ஆனால் இந்த தாக்குதலிலால் பெரியளவில் ஈரானில் அணுக்கசிவு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்காமல் அனைத்து தரப்பும் தங்களுக்கே வெற்றி என கூறிகொண்டு இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளார்கள், அதுவே போதும்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

2 months 3 weeks ago
மட்டக்களப்பில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம் Published By: VISHNU 24 JUN, 2025 | 02:48 AM செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/218274

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

2 months 3 weeks ago
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் செம்மணி புதைகுழியை பார்வையிட ஏற்பாடு! Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 10:33 AM இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நாளை 25 ஆம் திகதி யாழுக்கான விஜயத்தின் போது அங்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவிருப்பதுடன், செம்மணி மனிதப்புதைகுழியையும் சென்று பார்வையிடவுள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை (23) கொழும்பை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கரை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 3 தசாப்த கால யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) இரவு நாட்டை வந்தடைந்தார். இன்று செவ்வாய்க்கிழமை (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடங்கலாக அரச கட்டமைப்பின் முக்கிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இன்றையதினம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க். மாலை 5.30 மணிக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்ரகள், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேர் பங்கேற்கும் சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில், நாளை புதன்கிழமை (25) கண்டிக்குப் பயணம் செய்து அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடுவதுடன். அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ள வோல்கர் டேர்க், நாளைய தினமே திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, நாளையதினம் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநதிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ள உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை ஒருமித்துச் சந்திக்கவுள்ளார். அதுமாத்திரமின்றி அவர் யாழ். விஜயத்தின்போது அண்மையில் கழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடங்கலாக 19 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதியையும் சென்று பார்வையிடவுள்ளார். https://www.virakesari.lk/article/218286

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

2 months 3 weeks ago
என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் உபயோகித்தது உறுதியானதை அடுத்து, விசாரணை மற்ற நடிகர்கள், நடிகைகள் நோக்கி தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, நடிகை ஸ்ரீரெட்டியின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீரெட்டி, பல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் ஸ்ரீகாந்தின் பெயரும் இடம்பெற்றது. ஸ்ரீரெட்டி கூறுகையில், “நான் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் விளம்பரம் தேடுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இவை என்னையும் பாதிக்கின்றன. ஒரு பிரபல நடிகர், பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். மேலும், கொக்கைன் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினார். நான் மறுத்தேன், முடியவே முடியாது என திமிறினேன். உடனே, அவரது நண்பர்கள் சிலரை வர வைத்து என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக விரித்து பிடித்துக்கொண்டு.. என் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, என் உதட்டின் அடியில் கொக்கைனை தடவினர். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன். என் கால்களை விரித்து பிடித்துக்கொண்டு அந்த உறுப்பில் போதை பொருளை தடவினார். அந்த நேரத்தில் அந்த நடிகர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்,” என்று திடுக்கிடும் வகையில் விவரித்தார். ஸ்ரீகாந்தின் கைது தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட நடிகர் யார் என்பது குறித்த விவாதம் இணையத்தில் எழுந்துள்ளது. இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.tamilmirror.lk/cinema/என்-கால்களை-விரித்து-பிடித்துக்கொண்டு-அந்த-உறுப்பில்-போதை-பொருளை-தடவினார்/54-359820

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —

2 months 3 weeks ago
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் June 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால் ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை. தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது ஒற்றுமை. தேசிய மக்கள் சக்தியும் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளை தவிர, கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனியான கட்சியாக விளங்கும் பெருவாரியான சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது. கடந்தகால தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் பொறுப்பானவை என்று தாங்கள் அடையாளப்படுத்திய கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகங்களை அமைப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இருக்கிறது. ஆனால், சுயேச்சைக் குழுக்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் ஆதரவை இயன்றவரை நாடுவதில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை. தேர்தல் அரசியலில் ‘பிரத்தியேகமான’ கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வார்கள். தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் கைப்பற்றிய ஆசனங்களின் கூட்டு எண்ணிக்கை அதிகமானதாக இருக்கும் உள்ளூராட்சி சபைகளில் சாத்தியமான அளவுக்கு ஒன்றுபட்டு நிருவாகங்களை அமைப்பதற்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வாக, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஒன்றுபட்டு நிருவாகங்களை அமைப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் கடந்த வாரம் அறிவித்தன. கடந்த வியாழக்கிழமை கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் இதை தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகிய வண்ண மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகியோர் நான்கு பிரதேச சபைகளில் ஏற்கெனவே நிருவாகங்களை அமைத்திருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல சபைகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் கூறினர். குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி நெறிகெட்ட வழிமுறைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறாார்கள். தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துநிற்க வேண்டும் என்பதை தவிர, இந்த நான்கு கட்சிகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. கொள்கைகளைப் பொறுத்தவரை, இவற்றுக்கு இடையில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருந்திருந்தால், தேர்தலிலேயே ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக களமிறங்கியிருக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தரமான பொதுச் சேவையை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்திருப்பதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூறுவதை மக்கள் நம்பவா போகிறார்கள்? கூட்டு முயற்சியினால் இவர்களால் எத்தனை சபைகளின் நிருவாகங்களை கைப்பற்ற முடியும் என்பதை எதிர்வரும் நாட்களில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இதே போன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நிருவாகத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் தமிழ்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. தென்னிலங்கையில் எதிரணி கட்சிகளுக்கு உள்ளதைப் போன்றே தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாக விளங்குகிறது. ஆனால், அந்த கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல்களில் ஒன்றுபட்டு போட்டியிடுவதை அவற்றுக்கிடையிலான “பாரம்பரியமான” கட்சி அரசியல் வன்மம் தடுத்துவிட்டது. தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டியும் இதற்கு பங்களிப்பு செய்தது பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்ற முன்னென்றும் இல்லாத வகையிலான வெற்றியை தங்களது அரசியல் இருப்புக்கான அச்சுறுத்தலாக நோக்கிய தமிழ்க்கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தனித்தனியாக போட்டியிட்டாலும் பிறகு சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறின. ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இந்த கட்சிகள் மீண்டு வரக்கூடியதாக அந்த மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், மக்களுக்கு கூறியதைப் போன்று உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் பிரதான தமிழ்க் கட்சிகளினால் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. உள்ளூராட்சிகளின் நிருவாகங்களை அமைக்கும் செயற்பாடுகளை தமிழ்க்கட்சிகள் இரு முகாம்களாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும் கூட்டணியுமே அந்த இரு முகாம்களுமாகும். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தனது பாரம்பரியமான போக்கை மாற்றி பொன்னம்பலம் கூட்டணி அமைப்பதில் நாட்டம் காட்டினார். (அவரது கடந்த கால அரசியலுடன் ஒப்பிடும்போது மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தில் வரவேற்கத்தக்க அம்சம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது) உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்பட்ட அவர்களின் கூட்டணி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் சேர்த்துக் கொண்டது. பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் இதுநாள்வரை தாங்கள் படுமோசமாக விமர்சித்து வந்த (முன்னாள் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களின்) கட்சிகள் சிலவற்றை அரவணைப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை. உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு அந்த கட்சிகளின் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே நடைமுறை ரீதியான உடனடி நோக்கமாக இருந்த போதிலும், தாங்கள் ஒரு “கொள்கை அடிப்படையிலான கூட்டணியை” அமைத்திருப்பதாக ஒரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். தமிழரசு கட்சியை பொறுத்தவரை, அது தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த கட்சிக்குள் அவருக்கு எதிராக இருக்கும் அணியினரால் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தமிழரசு கட்சி கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை. உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் மாத்திரமல்ல, பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தைகளைை நடத்தினார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அவர்களினால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. இதையடுத்து தமிழரசு கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியது. சிவஞானம் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது கட்சியின் அலுவலகத்துக்கு தானே நேரடியாகச் சென்றார். அது ஒரு “பாவச்செயல்” என்பது போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. போர்க்காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக வெவ்வேறு கட்டங்களில் அரசாங்கங்களின் பக்கமாக நின்று அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் செயற்பட்ட வெவ்வேறு தமிழ் இயக்கங்களை (அவை இப்போது அரசியல் கட்சிகள்) “தீண்டத்தகாதவை” என்று அடையாளப்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தில் தற்போது ( அரசியல் அனுகூலங்களுக்காக) ஒரு மாறுதல் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இவற்றில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேருவது, எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பது என்பதில் வேறுபாடுகளைக் காண்பதற்கான அளவுகோல் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. அவர்கள் தேசியவாதத்தின் பக்கம் நிற்கிறார்கள்; இவர்கள் தேசியவாத நீக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்கின்ற வகையிலான விமர்சனங்களை அல்லது சாக்குப் போக்குகளை முன்வைப்பவர்கள் தாங்கள் கூறுகின்ற வியாக்கியானமே “உண்மையான தேசியவாதம்” என்று தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலப் போராட்டங்களில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அரசியல்வாதிகள் போராளிகளின் தியாகங்களை வெறுமனே உதட்டளவில் போற்றுவதன் மூலம் மாத்திரம் ‘புடம்போட்ட தேசியவாதிகளாக’ தங்களை உரிமை கொண்டாடுவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்? தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் அரசியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கைதான். அதை அடைவதற்கான வழிமுறைகள் என்று வரும்போது காலகட்டங்களையும் அகச்சூழ்நிலையையும் புறச்சூழ்நிலையையும் கருத்தில் எடுத்தே எந்தவொரு தேசமும் தேசிய இனமும் அடிப்படை அபிலாசைகளை சமரசம் செய்யாமல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உலகில் அரசியல் சுதந்திரத்தை அடைந்த தேசங்களினதும் இனங்களினதும் வரலாறு இந்த உண்மையைப் போதிக்கிறது. சூழவுள்ள நிலைவரங்களை கருத்தில் எடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளில் வரட்டுப் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நினைவுகளுடன் மாத்திரம் மக்களைப் பிணைத்துவைத்திருக்க முயற்சிப்பதும் எந்தப் பயனையும் தராது என்பதே எமக்கு வரலாறு தந்த படிப்பினையாகும். இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தங்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் மூன்று தசாப்தங்கள் அகிம்சைவழிப் போராட்டத்தையும் அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய இலங்கை தமிழ் சமுதாயம் இன்று எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எமது அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது அவசியமானது. தாங்கள் முன்வைக்கின்ற கோட்பாடுகள், கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயமும் இல்லாமல், கடந்த நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வெறுமனே உணர்ச்சிவசமான அரசியலைச் செய்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிறந்த படிப்பினைகளாகும். அந்த மிதவாத தலைவர்கள் பாராளுமன்றத்திலாவது முன்னுதாரணமான பங்களிப்பைச் செய்தார்கள். தற்போது தமிழரசு கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினதும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கட்சியினதும் ஒத்துழைப்புடன் ஒரு முகாமாகவும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை இன்னொரு முகாமாகவும் நின்று கொண்டு வடக்கில் உள்ளூராட்சி நிருவாகங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. இன்று தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்காக செய்துவரும் விட்டுக் கொடுப்புக்கள் நாளடைவில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறுகியகால, நீண்டகால தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கு வழிவகுக்குமாக இருந்தால் பயனுறுதியுடையதாக அமையும். அரசியலில் விட்டுக்கொடுப்பு (Compromise) என்பது எதிரெதிரான கட்சிகள் பரஸ்பரம் சலுகைகளைச் செய்வதன் மூலம் இணக்கப்பாடு ஒன்றை அடைவதற்கு தேவையான மிகவும் முக்கியமான செயன்முறையாகும். அது முழுநிறைவான கருத்தொருமிப்பை சாதிப்பதாக அமையாது. அத்தகைய கருத்தொருமிப்பு மிகவும் அரிதாகவே சாத்தியமாகும். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின் நலன்களை ஓரளவுக்கேனும் நிறைவு செய்வதற்கு உதவக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மாறுபட்ட நோக்குகளையும் முன்னுரிமைகளையும் அங்கீகரித்துக்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதே உண்மையான விட்டுக்கொடுப்பாகும். உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்கும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் அவற்றின் தனித்தனியான நலன்களை மனதிற் கொண்டுதான் விட்டுக்கொடுப்பு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த விட்டுக்கொடுப்பு தற்போது தெரிவாகியிருக்கும் புதிய உள்ளூராட்சி சபைகளின் நான்கு வருட பதவிக்காலம் நிறைவு பெறும் வரை நீடித்து தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பயனுறுதியுடைய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவினால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதானே விட்டுக்கொடுப்பு அரசியலை பழகத் தொடங்கியிருக்கிறார்கள். https://arangamnews.com/?p=12111

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —

2 months 3 weeks ago

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

June 23, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் —

உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில்  எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது.  இரு தரப்புகளுக்கும்  பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால்  ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை.  தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில்,  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது ஒற்றுமை. 

தேசிய மக்கள் சக்தியும்  அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய  உள்ளூராட்சி சபைகளை தவிர, கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனியான கட்சியாக விளங்கும் பெருவாரியான சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.  கடந்தகால  தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் பொறுப்பானவை என்று தாங்கள் அடையாளப்படுத்திய கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகங்களை அமைப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இருக்கிறது. ஆனால்,  சுயேச்சைக் குழுக்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் ஆதரவை இயன்றவரை நாடுவதில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை.  தேர்தல் அரசியலில்  ‘பிரத்தியேகமான’ கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வார்கள்.

தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையை  விடவும் எதிர்க்கட்சிகளும்  சுயேச்சைக் குழுக்களும் கைப்பற்றிய ஆசனங்களின் கூட்டு  எண்ணிக்கை அதிகமானதாக  இருக்கும் உள்ளூராட்சி சபைகளில்  சாத்தியமான அளவுக்கு ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வாக, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் கடந்த வாரம் அறிவித்தன. 

 கடந்த வியாழக்கிழமை கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் இதை தெரிவித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகிய வண்ண மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகியோர் நான்கு பிரதேச சபைகளில் ஏற்கெனவே நிருவாகங்களை அமைத்திருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல சபைகளை   தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் கூறினர். குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி நெறிகெட்ட வழிமுறைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக  அவர்கள் குற்றஞ்சாட்டுகிறாார்கள்.  

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துநிற்க வேண்டும் என்பதை தவிர,  இந்த நான்கு கட்சிகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. கொள்கைகளைப் பொறுத்தவரை,  இவற்றுக்கு இடையில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருந்திருந்தால், தேர்தலிலேயே ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக களமிறங்கியிருக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தரமான பொதுச்  சேவையை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்திருப்பதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூறுவதை மக்கள் நம்பவா  போகிறார்கள்? கூட்டு முயற்சியினால் இவர்களால் எத்தனை சபைகளின் நிருவாகங்களை கைப்பற்ற முடியும் என்பதை எதிர்வரும் நாட்களில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இதே போன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள்  சக்தி எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நிருவாகத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் தமிழ்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. தென்னிலங்கையில் எதிரணி கட்சிகளுக்கு உள்ளதைப் போன்றே தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாக விளங்குகிறது. ஆனால், அந்த கட்சிகள்  உள்ளூராட்சி  தேர்தல்களில் ஒன்றுபட்டு போட்டியிடுவதை அவற்றுக்கிடையிலான “பாரம்பரியமான” கட்சி அரசியல் வன்மம் தடுத்துவிட்டது. தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டியும் இதற்கு பங்களிப்பு செய்தது

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி  பெற்ற முன்னென்றும் இல்லாத வகையிலான வெற்றியை தங்களது அரசியல் இருப்புக்கான அச்சுறுத்தலாக நோக்கிய தமிழ்க்கட்சிகள்  உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தனித்தனியாக போட்டியிட்டாலும் பிறகு சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறின.   ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இந்த கட்சிகள்  மீண்டு வரக்கூடியதாக அந்த மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், மக்களுக்கு கூறியதைப் போன்று  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் பிரதான தமிழ்க் கட்சிகளினால் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. 

உள்ளூராட்சிகளின் நிருவாகங்களை அமைக்கும் செயற்பாடுகளை தமிழ்க்கட்சிகள் இரு முகாம்களாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும் கூட்டணியுமே அந்த இரு முகாம்களுமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தனது பாரம்பரியமான போக்கை மாற்றி பொன்னம்பலம் கூட்டணி அமைப்பதில் நாட்டம் காட்டினார். (அவரது கடந்த கால அரசியலுடன் ஒப்பிடும்போது மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தில்  வரவேற்கத்தக்க அம்சம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது)  உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்பட்ட அவர்களின் கூட்டணி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் சேர்த்துக் கொண்டது. 

பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் இதுநாள்வரை தாங்கள்  படுமோசமாக விமர்சித்து  வந்த (முன்னாள் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களின்)  கட்சிகள் சிலவற்றை  அரவணைப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு அந்த கட்சிகளின் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே நடைமுறை ரீதியான உடனடி நோக்கமாக இருந்த போதிலும், தாங்கள் ஒரு “கொள்கை அடிப்படையிலான கூட்டணியை”  அமைத்திருப்பதாக ஒரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். 

தமிழரசு கட்சியை பொறுத்தவரை,  அது தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த கட்சிக்குள் அவருக்கு எதிராக இருக்கும் அணியினரால் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தமிழரசு கட்சி கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை.  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் மாத்திரமல்ல, பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தைகளைை  நடத்தினார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அவர்களினால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. 

இதையடுத்து தமிழரசு கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியது. சிவஞானம் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது கட்சியின் அலுவலகத்துக்கு தானே நேரடியாகச் சென்றார். அது ஒரு “பாவச்செயல்” என்பது போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

போர்க்காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக வெவ்வேறு கட்டங்களில்  அரசாங்கங்களின் பக்கமாக நின்று அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் செயற்பட்ட வெவ்வேறு தமிழ்  இயக்கங்களை  (அவை இப்போது அரசியல் கட்சிகள்) “தீண்டத்தகாதவை” என்று அடையாளப்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தில் தற்போது ( அரசியல் அனுகூலங்களுக்காக)  ஒரு மாறுதல் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இவற்றில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேருவது, எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பது என்பதில் வேறுபாடுகளைக்  காண்பதற்கான அளவுகோல் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. 

அவர்கள்  தேசியவாதத்தின்  பக்கம் நிற்கிறார்கள்; இவர்கள் தேசியவாத நீக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்கின்ற வகையிலான விமர்சனங்களை அல்லது சாக்குப் போக்குகளை  முன்வைப்பவர்கள் தாங்கள் கூறுகின்ற வியாக்கியானமே “உண்மையான தேசியவாதம்” என்று தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக்  கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலப் போராட்டங்களில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அரசியல்வாதிகள் போராளிகளின்   தியாகங்களை வெறுமனே உதட்டளவில் போற்றுவதன் மூலம் மாத்திரம்  ‘புடம்போட்ட  தேசியவாதிகளாக’ தங்களை உரிமை  கொண்டாடுவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்?

தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் அரசியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கைதான். அதை அடைவதற்கான வழிமுறைகள் என்று வரும்போது காலகட்டங்களையும் அகச்சூழ்நிலையையும் புறச்சூழ்நிலையையும் கருத்தில் எடுத்தே எந்தவொரு தேசமும்  தேசிய இனமும் அடிப்படை அபிலாசைகளை சமரசம் செய்யாமல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உலகில் அரசியல் சுதந்திரத்தை  அடைந்த  தேசங்களினதும் இனங்களினதும் வரலாறு இந்த உண்மையைப் போதிக்கிறது. சூழவுள்ள நிலைவரங்களை கருத்தில் எடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளில் வரட்டுப் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நினைவுகளுடன் மாத்திரம் மக்களைப் பிணைத்துவைத்திருக்க முயற்சிப்பதும் எந்தப் பயனையும் தராது என்பதே எமக்கு வரலாறு தந்த படிப்பினையாகும். 

இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தங்களது  அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் மூன்று தசாப்தங்கள் அகிம்சைவழிப் போராட்டத்தையும் அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய இலங்கை தமிழ் சமுதாயம் இன்று எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எமது அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது அவசியமானது.

 தாங்கள் முன்வைக்கின்ற கோட்பாடுகள்,  கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயமும் இல்லாமல், கடந்த நூற்றாண்டின்  பின்னரைப் பகுதியில்  வெறுமனே உணர்ச்சிவசமான அரசியலைச் செய்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிறந்த படிப்பினைகளாகும். அந்த மிதவாத தலைவர்கள் பாராளுமன்றத்திலாவது முன்னுதாரணமான பங்களிப்பைச் செய்தார்கள். 

தற்போது தமிழரசு கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினதும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கட்சியினதும் ஒத்துழைப்புடன் ஒரு முகாமாகவும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை இன்னொரு முகாமாகவும் நின்று கொண்டு வடக்கில் உள்ளூராட்சி நிருவாகங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கின்றன. 

உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

இன்று தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்காக செய்துவரும் விட்டுக் கொடுப்புக்கள் நாளடைவில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறுகியகால, நீண்டகால தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கு வழிவகுக்குமாக இருந்தால் பயனுறுதியுடையதாக அமையும். 

அரசியலில் விட்டுக்கொடுப்பு (Compromise)  என்பது எதிரெதிரான கட்சிகள் பரஸ்பரம் சலுகைகளைச் செய்வதன் மூலம் இணக்கப்பாடு ஒன்றை அடைவதற்கு தேவையான மிகவும் முக்கியமான செயன்முறையாகும். அது முழுநிறைவான கருத்தொருமிப்பை  சாதிப்பதாக அமையாது. அத்தகைய கருத்தொருமிப்பு மிகவும்  அரிதாகவே சாத்தியமாகும். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின்  நலன்களை ஓரளவுக்கேனும் நிறைவு செய்வதற்கு  உதவக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மாறுபட்ட  நோக்குகளையும்  முன்னுரிமைகளையும் அங்கீகரித்துக்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதே உண்மையான விட்டுக்கொடுப்பாகும்.

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்கும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் அவற்றின் தனித்தனியான  நலன்களை மனதிற் கொண்டுதான்    விட்டுக்கொடுப்பு  அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த விட்டுக்கொடுப்பு தற்போது தெரிவாகியிருக்கும் புதிய உள்ளூராட்சி சபைகளின் நான்கு வருட பதவிக்காலம்  நிறைவு பெறும் வரை  நீடித்து தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை  பயனுறுதியுடைய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவினால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதானே விட்டுக்கொடுப்பு அரசியலை பழகத் தொடங்கியிருக்கிறார்கள். 

https://arangamnews.com/?p=12111

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை என்ன செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன? செய்தி உலகம் ஆசிரியர் மெக் கெல்லி, ஜாய்ஸ் சோஹ்யுன் லீ, நிலோ டாப்ரிஸி, இவான் ஹில், டிலான் மோரியார்டி - வாஷிங்டன் போஸ்ட் , வெளியீட்டு தேதி திங்கள், 23 ஜூன் 2025, காலை 11:01 மணி வாஷிங்டன் போஸ்ட் காட்சி பகுப்பாய்வு மற்றும் பல நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் முக்கிய ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் குறைந்தது ஆறு வெளிப்படையான வெடிகுண்டு நுழைவு புள்ளிகளைக் காட்டுகின்றன. நேற்று அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களில் ஒன்றின் மீதும் மற்ற இரண்டு நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்திய பின்னர் ஏற்பட்ட சேதத்தின் முதல் பார்வையே இந்தப் படங்கள். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை "முற்றிலும் முற்றிலுமாக அழித்துவிட்டன" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் படங்களின் கலவையானது ஜூன் 16, 2025 அன்று ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் (மேலே), அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய ஈரானில் உள்ள ஈரானின் இஸ்ஃபஹான் அணு செறிவூட்டல் நிலையத்தையும் காட்டுகிறது. புகைப்படம் / AFP பென்டகன் தலைவர்கள் ஒரு செய்தி மாநாட்டில் மிகவும் அளவிடப்பட்ட விளக்கத்தைப் பயன்படுத்தினர், அனைத்து தளங்களும் "மிகவும் கடுமையான சேதத்தை" சந்தித்ததாகவும், ஃபோர்டோவில் "திறன்களை அழிப்பதை" அடைந்துவிட்டதாக அவர்கள் நம்புவதாகவும் கூறினர். இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி தளம் "அழிக்கப்பட்டுவிட்டது" என்றும், ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "கடுமையாக சேதமடைந்துள்ளன" என்றும் ஆரம்ப மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார். வெடிப்பின் ஆழம் மற்றும் சுற்றியுள்ள புவியியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து நிலத்தடி தாக்கங்கள் சார்ந்து இருப்பதால், மிக விரைவாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு குண்டு வெடிப்பு ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அமெரிக்கத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.45 மணி முதல் 2.30 மணி வரை, உலகம் முழுவதும் தீ மற்றும் கடுமையான வானிலையைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள், ஃபோர்டோ தளத்திற்கு அருகில் குறிப்பிடத்தக்க வெப்பம் தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்ததாகத் தெரிகிறது. அந்த இடத்தில் வான் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நிபுணர்கள் கூறிய இடத்தில் வெப்பக் கையொப்பங்கள் பிடிக்கப்பட்டன. கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், பதுங்கு குழிகளை உடைக்கும் பாரிய ஆயுத ஊடுருவல் விமானங்களை சுமந்து செல்லும் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸை நெருங்கியபோது, அமெரிக்கப் படைகள் ஈரானிய தரையிலிருந்து வான் அச்சுறுத்தல்களுக்கு எதிராக "அடக்குமுறை ஆயுதங்களை" நிலைநிறுத்தியதாகக் கூறினார். அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள ஃபோர்டோ நிலத்தடி வளாகத்தில் உள்ள முகட்டில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாம்பலைக் காட்டும் மாக்சர் டெக்னாலஜிஸின் செயற்கைக்கோள் புகைப்படம் . புகைப்படம் / மாக்சர் டெக்னாலஜிஸ் இறுதியில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அமெரிக்க விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் நுழைந்து வெளியேறும் போது அவற்றை நோக்கிச் சுடவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில், முன்னணி B-2 குண்டுவீச்சு விமானம் முதல் இரண்டு GBU-57 MOPகளை ஃபோர்டோ வசதியில் வீழ்த்தியதாக கெய்ன் கூறினார். 13,610 கிமீ துல்லிய வழிகாட்டும் குண்டுகள் நிலத்தடி இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஏழு B-2 கள் ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் 14 குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபோர்டோ வசதிக்கு மேலே உள்ள முகட்டில் மூன்று நுழைவுப் புள்ளிகளைக் கொண்ட இரண்டு கொத்துக்களை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று, அதன் பின்விளைவுகளின் படங்களை மதிப்பாய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை மேக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. புகைப்படம் / மேக்சர் டெக்னாலஜிஸ் மையவிலக்குகள் அமைந்துள்ள வசதியின் முக்கிய பகுதியான 250 மீட்டர் நீளமுள்ள அடுக்கு மண்டபத்தை இந்த தாக்குதல்கள் குறிவைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது மலையில் கட்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது. தாக்கப்படும் ஒரே இடத்தைச் சுற்றி பல வெடிமருந்துகளை குவிப்பது பதுங்கு குழிகள் மற்றும் நன்கு கடினப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை அழிப்பதற்கான பொதுவான இலக்கு முறையாகும் என்று பென்டகனின் சிவில் பாதுகாப்பு மையத்தின் முன்னாள் சிவில் தீங்கு மதிப்பீடுகளின் தலைவரான வெஸ் பிரையன்ட் கூறினார். அமெரிக்க தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஃபோர்டோவில் "வழக்கத்திற்கு மாறான லாரி மற்றும் வாகன செயல்பாட்டை" காட்டியதாக செயற்கைக்கோள் நிறுவனமான மேக்சர் டெக்னாலஜிஸின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை NZT அன்று, நிலத்தடி இராணுவ வளாகத்திற்குச் செல்லும் அணுகல் சாலையில் 16 சரக்கு லாரிகள் இருந்தன. பகுப்பாய்வின்படி, மறுநாள் எடுக்கப்பட்ட படங்கள், பெரும்பாலான லாரிகள் அந்த வசதியிலிருந்து வடமேற்கே ஒரு கிலோமீட்டருக்கும் சற்று அதிகமாக நகர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. மற்ற லாரிகள் மற்றும் புல்டோசர்கள் தளத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டன, அதில் ஒரு லாரி அதற்கு நேர் அருகில் இருந்தது. தாக்குதல்களுக்கு முன்னர் வார இறுதியில் எடுக்கப்பட்ட படத்தை மதிப்பாய்வு செய்த அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ஸ்பென்சர் ஃபராகஸ்ஸோ, பிற காரணங்களுக்கிடையில், ஆபத்தான பொருட்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானியர்கள் சுரங்கப்பாதைகளை மீண்டும் நிரப்பியிருக்கலாம் என்று கூறினார். "அவர்கள் அநேகமாக விஷயங்களை மூடிவிட்டு, தங்களால் முடிந்ததை அகற்றிவிட்டு, பின்னர் அதை மூடிவிட்டார்கள்," என்று மிடில்பரி நிறுவனத்தின் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடை ஆய்வு மையத்தின் கிழக்கு ஆசிய அணு ஆயுத பரவல் தடை திட்டத்தின் இயக்குனர் ஜெஃப்ரி லூயிஸ் ஒரு செய்தியில் கூறினார், இது வாஷிங்டனையும் ஜெருசலேமையும் "ஈரானுடன் மோல்" விளையாட விட்டுவிடுகிறது. இப்போது, லாரிகள் காணப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள சுரங்கப்பாதை நுழைவாயில்கள் குண்டுவெடிப்பின் அதிர்ச்சி அலை அல்லது முந்தைய ஈரானிய நடவடிக்கைகளிலிருந்து அழுக்குகளால் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது. வசதியின் குப்பைகளால் ஆன சாம்பல்-நீல சாம்பல் பூச்சு மணலின் குறுக்கே உள்ளது. - இந்த அறிக்கைக்கு ஜொனாதன் பரன், அலெக்ஸ் ஹார்டன் மற்றும் சவுத் மெக்கென்னெட் ஆகியோர் பங்களித்தனர். https://www.newstalkzb.co.nz/news/world/what-satellite-images-show-of-damage-to-iran-s-nuclear-sites-after-us-strikes/

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
இந்திய - இங்கிலாந்து டெஸ்ட் : வெற்றி யார் வசம்? Sports24 June 2025 சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின் போது இங்கிலாந்து அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 350 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. முன்னதாக இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 471 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 465 ஓட்டங்களையும் பெற்றன. இதனையடுத்து இந்திய அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கே.எல் ராஹூல் 137 ஓட்டங்களையும், ரிசப்ட் பண்ட் 118 ஓட்டங்களையும் பெற்றனர். https://hirunews.lk/tm/sports/408134/india-vs-england-test-who-will-win

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

2 months 3 weeks ago
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங்கு பாதிப்பால் அவர் உயிரிழந்தார். இளம் வயதில் தனது அண்ணனை இழந்து தவித்த ஸ்ரீகாந்தின் கவனம், மாடலிங் சினிமா பக்கம் திரும்பியது. அதன்படி தனது ஆரம்பகாலத்தில் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் நடிப்பு பயின்றுள்ளார். இதைத் தொடர்ந்து கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12பி’ படங்களில் நடிக்க முதலில் தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் போனது. அதேபோன்று பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு கிடைத்த வாய்ப்புகள் மாறிப் போயின. முதல் படமே சூப்பர் வெற்றி! எனினும் 2002ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அந்த படம் ஹிட் ஆன நிலையில் அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ’சிறந்த அறிமுக நடிகர்’ என்ற விருதை பெற்ற அவர், ரசிகர்களால் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு சினேகா உடன் இனைந்து அவர் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, ’பார்த்திபன் கனவு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க, கோலிவுட் தாண்டி தெலுங்கு திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. தெலுங்கில் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருந்ததால், தனது பெயரை ஸ்ரீராம் என்று பயன்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஓகரிகி ஓகாரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு (2005) மற்றும் பம்பரா கண்ணாலே (2005) ஆகிய படங்களும் அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை உயர்த்தின. தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனரான செல்வராகவன் இயக்கிய ’ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் வெங்கடேஷை அடுத்து ஸ்ரீகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியது. திருமண சர்ச்சை! இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீகாந்த். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவர் ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஒருவருடகாலமாக சட்ட போராட்டங்களை எதிர்கொண்ட அவர், 2008ஆம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். திருமண சர்ச்சை மற்றும் தவறான கதைத் தேர்வு உள்ளிட்டக் காரணங்களால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவின. நண்பன் -ஆல் கவனம் பெற்ற ஸ்ரீகாந்த் இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து ’நண்பன்’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜீவாவுடன் இணைந்து விஜய்யின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார். இதில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்க வேண்டிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியதால் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காணாமல் போனார். அந்த காலக்கட்டத்தில் நிப்பு, லை, ராகல 24 கண்டலோ, ஜெய் சேனா, வை, அசலேம் ஜருகண்டி, 10th class டயரீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஹீரோ, படி உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சரிவை நோக்கி அவரது திரைப்பயணம் சென்று கொண்டிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது நடிப்பில் வருடத்திற்கு தலா 6 படங்கள் வெளியாகின. ஆனால் அனைத்துமே தோல்வி படங்களாக மாறி அவருக்கு பெரிய மனவலியை ஏற்படுத்தின. இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய திரைப்படங்கள் திரையங்கில் வெளியானது கூட பலருக்கு தெரியாது என்பதே உண்மை. இந்த நிலையில் தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த். https://minnambalam.com/drug-case-attracts-dark-life-who-is-srikanth/#google_vignette

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

2 months 3 weeks ago

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

24 Jun 2025, 9:34 AM

Drug case attracts dark life - who is Srikanth?

போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங்கு பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

இளம் வயதில் தனது அண்ணனை இழந்து தவித்த ஸ்ரீகாந்தின் கவனம், மாடலிங் சினிமா பக்கம் திரும்பியது. அதன்படி தனது ஆரம்பகாலத்தில் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் நடிப்பு பயின்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12பி’ படங்களில் நடிக்க முதலில் தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் போனது. அதேபோன்று பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு கிடைத்த வாய்ப்புகள் மாறிப் போயின.

image-103.png

முதல் படமே சூப்பர் வெற்றி!

எனினும் 2002ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அந்த படம் ஹிட் ஆன நிலையில் அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ’சிறந்த அறிமுக நடிகர்’ என்ற விருதை பெற்ற அவர், ரசிகர்களால் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு சினேகா உடன் இனைந்து அவர் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, ’பார்த்திபன் கனவு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க, கோலிவுட் தாண்டி தெலுங்கு திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

image-104-1024x568.png

தெலுங்கில் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருந்ததால், தனது பெயரை ஸ்ரீராம் என்று பயன்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஓகரிகி ஓகாரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு (2005) மற்றும் பம்பரா கண்ணாலே (2005) ஆகிய படங்களும் அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை உயர்த்தின.

தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனரான செல்வராகவன் இயக்கிய ’ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் வெங்கடேஷை அடுத்து ஸ்ரீகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியது.

image-105-1024x576.png

திருமண சர்ச்சை!

இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீகாந்த். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவர் ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஒருவருடகாலமாக சட்ட போராட்டங்களை எதிர்கொண்ட அவர், 2008ஆம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமண சர்ச்சை மற்றும் தவறான கதைத் தேர்வு உள்ளிட்டக் காரணங்களால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவின.

image-107.png

நண்பன் -ஆல் கவனம் பெற்ற ஸ்ரீகாந்த்

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து ’நண்பன்’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜீவாவுடன் இணைந்து விஜய்யின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார்.

இதில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்க வேண்டிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியதால் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காணாமல் போனார்.

அந்த காலக்கட்டத்தில் நிப்பு, லை, ராகல 24 கண்டலோ, ஜெய் சேனா, வை, அசலேம் ஜருகண்டி, 10th class டயரீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஹீரோ, படி உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image-106-1024x572.png

இப்படி சரிவை நோக்கி அவரது திரைப்பயணம் சென்று கொண்டிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது நடிப்பில் வருடத்திற்கு தலா 6 படங்கள் வெளியாகின. ஆனால் அனைத்துமே தோல்வி படங்களாக மாறி அவருக்கு பெரிய மனவலியை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய திரைப்படங்கள் திரையங்கில் வெளியானது கூட பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.

https://minnambalam.com/drug-case-attracts-dark-life-who-is-srikanth/#google_vignette

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
'டிரம்ப் கெஞ்சினார்' : இரான் - இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில், இரான் அரசுத் தொலைக்காட்சியோ, சண்டை நிறுத்தத்துக்காக டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக கூறியுள்ளது. எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை என்று கூறியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்? இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' ஏற்பட வேண்டும் என்று கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த கட்டத்தில், "அதற்கான நேரம் இது என்று எனக்குத் தெரியும்" என்று அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்பே அறிவித்த சண்டை நிறுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், "உலகமும் மத்திய கிழக்கு நாடுகளும் உண்மையான வெற்றியாளர்கள். இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும்" என்று தெரிவித்துள்ளார். இரானும் இஸ்ரேலும் சண்டை நிறுத்தத்தை பகிரங்கமாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் தாங்களும் சண்டையை நிறுத்துவோம் என்று இரான் சமிக்ஞை செய்தது. "இரு நாடுகளும் பெறுவதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், நீதி மற்றும் உண்மையின் பாதையில் இருந்து விலகிச் சென்றால் இழக்க நிறைய இருக்கிறது" என்றும், இஸ்ரேல் மற்றும் இரானின் எதிர்காலம் "வரம்பற்றது மற்றும் பெரிய வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது. கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்றும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS 'சமாதானம் வேண்டி டிரம்ப் கெஞ்சினார்' இரான் அரசு தொலைக்காட்சி செய்தி சேனலான ஐ.ஆர்.ஐ.என்.என். (IRINN) சண்டை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான "வெற்றிகரமான" தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், இரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக "கெஞ்சினார்" என்றும் அரசு தொலைக்காட்சி ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட அறிக்கையை தொகுப்பாளர் சத்தமாக வாசித்தார். இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தை இந்த அறிக்கை பாராட்டியதுடன் இரானியர்களின் "எதிர்ப்பையும்" பாராட்டியது. 'சண்டை நிறுத்தம்' - டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தாக்குதலில் டெஹ்ரானில் கட்டடம் தீப்பிடித்து கரும்புகை எழுந்த காட்சி. இஸ்ரேலுக்கும் இரானுக்கும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில்" சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் அறிவிப்பில் பரஸ்பர பகைமை குறித்த தகவல்கள் இருந்தாலும், "24 வது மணி நேரத்தில்" மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. "எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இரு நாடுகளையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ள டிரம்ப், இந்த இஸ்ரேல்-இரான் மோதலை "12 நாள் போர்" என்று குறிப்பிட்டுள்ளார். "இது பல ஆண்டுகள் நீடித்து, முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் நடக்காது!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சண்டை நிறுத்தத்துக்கு கத்தார் உதவியது' கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உதவினார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தனர். பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகளின் கூற்றுப்படி, கத்தார் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இரான் தாக்கிய பின்னர், இரானிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போது சண்டை நிறுத்தம் பற்றி அமெரிக்கா தரப்பில் முன்மொழியப்பட்டது. இதில் கத்தாரும் முக்கிய பங்கு வகித்தது. சண்டை நிறுத்தம் - வெள்ளை மாளிகை அதிகாரி தகவல் இஸ்ரேலும் இரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இரு தரப்பினரும் முறையான அல்லது பொது பதிலை வெளியிடவில்லை. அவரது கூற்றுப்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை டிரம்ப் நேரடியாக தொடர்பு கொண்டார். இரான் இனிமேல் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் சண்டை நிறுத்தத்துக்கு தயார் என்று நெதன்யாகு ஒப்புக் கொண்டார் என்று சிபிஎஸ் செய்தி கூறுகிறது. அந்த செய்தியின் படி, இரான் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக மூத்த இரானிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இரானியர்களுடன் நேரடி மற்றும் மறைமுக வழிகள் மூலம் தொடர்பு கொண்ட பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் இரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேல் தனது "சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை" இப்போது நிறுத்தினால், இரான் பதிலடியைத் தொடர எந்த நோக்கமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த நேரம் ஏற்கெனவே கடந்துவிட்டது: "இரான் பலமுறை தெளிவுபடுத்தியது போல, இஸ்ரேல்தான் இரான் மீது போரை தொடங்கியது, மாறாக நாங்கள் அல்ல. தற்போது, எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி இரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ராணுவ நடவடிக்கைகளை டெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்." என்று சையத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். "இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நமது சக்தி வாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதாவது அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன," என்று சையத் அப்பாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ypepk0l1qo

சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்!

2 months 3 weeks ago
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்! adminJune 24, 2025 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர். இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது. போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217195/ கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும் சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தவிசாளர் தெரிவின்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் செ.மயூரனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மாறாக அவர் நடுநிலை வகித்தார். இதனாலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கட்சியின் தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/கட்சி_முடிவுக்கு_மாறாக_நடுநிலைமை;_முன்னணியின்_உறுப்பினர்_மீது_ஒழுக்காற்று_நடவடிக்கை_பாயும்

சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்!

2 months 3 weeks ago

சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசிடம்!

adminJune 24, 2025

IMG_3994-scaled.jpeg?fit=1170%2C660&ssl=

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.

இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும் உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது.

போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச் சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித்  தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/217195/

கட்சி முடிவுக்கு மாறாக நடுநிலைமை; முன்னணியின் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை பாயும்

1680840426.jpeg

சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தவிசாளர் தெரிவின்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் செ.மயூரனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு மாறாக அவர் நடுநிலை வகித்தார். இதனாலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கட்சியின் தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/கட்சி_முடிவுக்கு_மாறாக_நடுநிலைமை;_முன்னணியின்_உறுப்பினர்_மீது_ஒழுக்காற்று_நடவடிக்கை_பாயும்