Aggregator
டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ?
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ?

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை. ! ?
தலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று (26) இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்திரவினையும் பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை கடந்த 21ஆம் திகதி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அறிவித்தல் அனுப்பப்பட்டும் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அறிவித்தல் கட்சிப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்தே குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்
பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல்
27 Aug, 2025 | 04:13 PM
![]()
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் (HDP) உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை பிரதமர் ஹரிணி சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது.
இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத் (HDP) திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட HDP பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு, இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung, பாராளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு குழுவின் (HDP) நிறைவேற்றுப் பணிப்பாளர் Derek Luyten,, பிரதமரின் செயலர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலர் சாகரிகா போகாவத்த ஆகியோர் உட்பட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் | Virakesari.lk
யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
பாதுகாப்பு அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒவ்வொரு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கெடெட் அதிகாரிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
நாட்டின், பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும்,
அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டுப் பயிற்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த பயிற்சி ஏனைய அரச துறைகளிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியை விட தனித்துவமானது என்பதால் அது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அரசாங்கம் ஏற்கனவே பெருமளவு நிதியை செலவிட்டு வரும் நிலையில் , அதனால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனுள்ளதாகவும் திறம்படவும் வழங்கப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நிர்மாணப்பணிகள், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் யாழ். வீதியில் மீண்டும் சேவையில்!
குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் யாழ். வீதியில் மீண்டும் சேவையில்!
27 Aug, 2025 | 05:43 PM
![]()
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் வீதிக்கு குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் திருத்தப்பட்டு மீள் பயன்பாட்டுக்காக இன்று (27) கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த இரண்டு பேருந்துகளும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு மீள கையளிக்கப்பட்டது.
சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியத்தால் பழுது பார்க்கப்பட்ட இந்த இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் யாழ். வீதியில் மீண்டும் சேவையில்! | Virakesari.lk
செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
Published By: Vishnu
27 Aug, 2025 | 07:24 PM
![]()
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 35வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு | Virakesari.lk