Aggregator

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

1 month 4 weeks ago
எப்படியான பங்களிப்பை வழங்கினார்கள் என்று எழுதினால் நல்லது. ஹமாஸ் UNRAW பயங்கரவாதிகளை போல மக்களை கொலைசெய்து , கட்பளித்து, குழந்தைகளை வெட்டி கொன்று, கடத்தி கொண்டுபோன மாதிரியான பங்களிப்பை செய்தார்களா இல்லை வேறு விதமான பங்களிப்பை செய்தார்களா என்று குறிப்பிடடாள் நல்லது. இப்போது அந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விட்டொம் , அவர்களை இடை நிறுத்தி உள்ளோம் என்று UN கூறுகின்றது. இது மட்டுமல்ல அங்குள்ள பாடசாலைகளிலும் சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் பயங்கரவாத செயல்கள் பற்றியும் , இஸ்ரேலை அழிப்பது பற்றியும் பாடம்நடத்துகிறார்கள். இதெல்லாம் UNRAW நிதிப்பங்களிப்பில்தான் நடக்கின்றது. இப்போது நிதி வழங்கும் நாடுகள் நிதி கொடுப்பதை நிறுத்தியவுடன் குய்யோ முய்யோ என்று சததம் போடுகின்றார்கள். UN இப்போது ஒரு வேடிக்கையான நிறுவனமாக மாறி விட்ட்து.

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

1 month 4 weeks ago
மாணிக்கவாசகர் இளம்பிறையன் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பது பிழையான தகவல. அவர் ஒரு Football & Weightlifting (Men) INSTRUCTOR

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

1 month 4 weeks ago
தமிழ் இனத்தை சரியாக தூர நோக்குடன் எடைபோட்டதன் காரணமாகத்தான் அவர் "தமிழரை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் " என்று கூறினார் என்றே நான் கருதுகிறேன். தலைமைத்துவப் பண்புகளில் ஒன்று தூரநோக்கோடு எதிர்வு கூறுதல்.

மசூதி, தேவாலயங்களில் காவிக்கொடி - அயோத்தி ராமர் கோவில் திறந்த பிறகு நாடெங்கும் நடந்தது என்ன?

1 month 4 weeks ago
தெற்காசிய நாடான இலங்கை எனும் நாடு ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அதனை பார்த்தும் திருந்தாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று, மக்களை பிரிக்கும் சாதாரண அரசியல் இலாபங்கள் இலங்கை போன்ற அதிகமான முட்டாள்கள் வாழும் நாடுகளிலே சாத்தியம்

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்

1 month 4 weeks ago
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய 5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என. இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன். https://en.wikipedia.org/wiki/Bazball

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

1 month 4 weeks ago
நாம் எல்லாம் சரியாக செய்தோம் என்று நான் எங்கும் கூறவில்லை. மக்கள் தமது பங்களிப்பை மிக அதிகமாக செய்தார்கள் என்றே கூறினேன். தலைமைகள் தொடர்ச்சியாக செய்த தவறுகளுக்கு மக்கள் தனியே எப்படி பொறுப்பாவார்கள் என்பதே எனது கேள்வி. தம்மால் எடுக்கப்படும் அரசியல் நகர்வுகளினல் வரும் விளைவுகளுக்கு பொறுப்பேற்காமல் வெறுமனே மக்கள் மீது பழிபோட்டு தப்பிக்கும் தமிழ் தலைமைகளே முதலில் தம்மை புடம் போட வேண்டும். அவர்கள் எடுத்த முடிவுகளின் சுமையை சுமப்பவர்கள் மக்களே. ஆகவே……. எதிர்காலத்திலும் இவ்வாறான அரசியல் தலைமைகள் குறித்து மக்கள்விழிப்பாக இருக்க வேண்டும்.

இரண்டாம் பயணம்

1 month 4 weeks ago
சரி, பயணத்திற்கு வரலாம். வட்டுவாகல்ப் பாலத்தினூடாக முல்லைத்தீவு நோக்கிச் செல்லத் தொடங்கினோம். பாலத்தின் முள்ளிவாய்க்கால் கரையில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோத்தாபய ராஜபக்ஷ என்பவனின் பெயரில் அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காணப்பட்டது. அதன் வாயிலில் ஆக்கிரமிப்பாளர்கள் அகம்பாவத்துடன் நின்றுகொண்டு அப்பாலத்தால் போய்வருவோரை நோட்டம் விட்டபடி இருந்தனர். அப்பகுதியை வாகனத்தில் இருந்தவாறே காணொளி எடுத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சாரதி, "அண்ணை, கமராவை ஒளியுங்கோ, கண்டாங்கள் எண்டால் பிரச்சினை" என்று கூறவும், சடாரென்று கீழே பதித்துக்கொண்டேன். பாலத்தின் மறுகரையில் இன்னொரு சோதனைச் சாவடி. ஆயுதங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாகனங்களை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். எம்மையும் கேட்டார்கள். முல்லைத்தீவிற்குப் போகிறோம், யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறோம் என்று கூறிய பின்னர் போக விட்டார்கள். அப்படியே முல்லைத்தீவு நகரைச் சுற்றி வந்தோம். ஒருகாலத்தில் தமிழர்களின் இராச்சியமாக, பலப்பிரதேசமாக இருந்த எமது தாயகத்தின் முக்கிய நகரம் ஒன்று சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் அகப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தபோது ஆற்றாமையும், கோபமும் ஒருங்கே வந்தது. வரும் வழியில் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சிங்களப் பேய்கள் கட்டிவைத்திருக்கும் வெற்றிச் சின்னத்தைப் பார்க்க வாகனம் நின்றது. மைத்துனர் படங்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்த்து, "அண்ணை, நீங்கள் இதைப் படம் எடுக்கேல்லையோ?" என்று கேட்டார். "ஏன் சுவி, எங்களை அழிச்சு, அடிமைப்படுத்தினதை அவன் சாதனையாகக் கட்டிவைச்சிருக்கிறான், அதை ஏன் நான் பாக்கவேண்டும்?" என்று கேட்டேன். அவர் புரிந்துகொண்டார். "இல்லையண்ணை, வந்ததுக்கு சும்மா எடுத்துவைக்கலாம் எண்டபடியால் கேட்டன்" என்று கூறிச் சமாளித்தார். அப்பக்கமே நான் திரும்பவில்லை. எதற்கு திரும்பவேண்டும், எதற்குப் பார்க்கவேண்டும், எதற்குப் படமெடுக்க வேண்டும்? கொல்லப்பட்டது எனது மக்கள், அழிக்கப்பட்டது எனது போராட்டம், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது எனது தாயகம், இந்த லட்சணத்தில் எம்மை ஆக்கிரமித்து நிற்பவனின் சாதனையினை எதற்காகக் நான் கொண்டாடவேண்டும்? ஆகவேதான் அந்த மிருகங்களின் அடையாளங்களை எங்கு செல்லினும் நிராகரித்து வருகிறேன். முல்லைத்தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த வழியினால் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்குள் ஏறி அப்படியே சென்ற வழியில் திரும்பி வந்தோம். போகும்போது இருந்த உற்சாகம் எல்லோரையும் அப்போது கைவிட்டிருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை. இடையிடையே கடந்துசெல்லும் ஊர்கள் குறித்து எனது கேள்விகளும் அதற்கான மைத்துனரின் பதில்களையும் தவிர அதிகமாகப் பேசவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழைந்தபோது கடும் பசி. எங்காவது வாகனத்தை நிறுத்திச் சாப்பிடலாம் என்று எண்ணியவாறு வீதியின் ஓரத்தில் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டே வந்தோம். சாவகச்சேரிப் பகுதியில் பிரதான வீதியின் வலப்புறத்தில் பழமையான ஆனால் அழகிய வீடொன்றில் வீட்டில் சமைத்த உணவுகளை பரிமாரிவருவதாக முகப்புத்தகத்தில் மைத்துனரின் மகன் பார்த்திருக்கிறார். ஆகவே அங்கு செல்வதாக முடிவெடுத்தோம். அப்பகுதியை அடைந்ததும் வாகனத்தை வீட்டின் முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். மழை பெய்யத் தொடங்கியிருந்தது. கொத்து ரொட்டி, பிரைட் ரயிஸ் (Fried Rice) என்று ஆளாளுக்கு விரும்பியதை ஓடர் கொடுத்தோம். 15 - 20 நிமிடங்களில் ஆவிபறக்க உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. சுவையானதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். பரவாயில்லை, பசிக்கு வயிராற உண்ண, சுவையான உணவு. சற்று அதிகம் என்றாலும் திருப்தியாக இருந்தது. கட்டணத்தைச் செலுத்துவிட்டி மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சாதுவான தூறளில் யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார் சாரதி.

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

1 month 4 weeks ago
பல தடவைகள் தோல்வியில் முடிந்த செய்மதி ஏவல் ஒன்றை ஈரான் சென்ற வெள்ளி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட 3 செய்மதிகள் மூலம் வேறு நாடுகளின் உதவியின்றி ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் (intercontinental ballistic missile) செலுத்தும் திறனைப் பெறுகிறது. அணுகுண்டினைக் காவிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை தொடர்பான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கேட்டுள்ளது.

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

1 month 4 weeks ago
தன்னை புறம் போடாத எந்த இனமும் அடுத்த கட்டத்திற்கு நகராது. அல்லது நாம் எல்லாம் சரியாக செய்தோம் கடவுளின் கிருபை கிடைக்கவில்லை என்று இனி அழுது புலம்ப வேண்டியது தான். நன்றி வணக்கம்.

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

1 month 4 weeks ago
உலகில் எந்த நாட்டிலும் முழு இனமுமே ஒட்டு மொத்தமாக ஆயுத போராட்ட களத்தில் நேரடியாக நின்றதாக சரித்திரம் இல்லை. அது உலகில் சாத்தியமும் இல்லை. உலக ஜதார்த்தத்தத்தின் அடிப்படையில் அல்லது உலக ஜதார்த்தத்திற்கு மேலாக தமிழ் மக்கள் விடுதலைக்கு தமது சக்திக்கு மீறிப் பங்களித்தார்கள். இன்று மக்கள் மீது பழி சுமத்துவது ஆற்றாமையின் வெளிப்பாடு.

இரண்டாம் பயணம்

1 month 4 weeks ago
முள்ளிவாய்க்காலில் இருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதிக்குச் சமாந்தரமாக கடற்கரையினை அண்மித்ததாக ஒரு சிறிய மண்வீதி செல்கிறது. இவ்வீதியின் இருபக்கத்திலும் இருந்த பற்றைக்காணிகளில் பல்லாயிரம் மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள தஞ்சம் அடைந்திருந்தார்கள். கடற்கரையினை அடையும் பகுதியுடன் இவ்வீதி முடிவிற்கு வருகிறது. இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் குறித்து சில வலைத்தள பதிவாளர்கள் விலாவாரியாக எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்நாட்களில் பனைமரங்கள் சிலவிருந்த பகுதிக்குக் கீழாகத் தஞ்சம் அடைந்த மக்களை நோக்கி சிங்கள பெளத்தர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் நினைவுகள் ஒரு காணொளி ஒன்றில் பகிரப்பட்டிருந்தன. அந்தப் பனைமரம், அப்பதிவில் குறிப்பிட்டதுபோலவே இன்னமும் அங்கு நிற்கின்றது. நாம் அப்பாதையால் பயணிக்கும்போது இருவர் மோட்டார் சைக்கிளில் எதிர்ப்புறமிருந்து வந்தார்கள். எங்கே போகிறீர்கள் என்று தமிழில் கேட்டார்கள். ஒரு இடமும் இல்லை, இடம்பார்க்க வந்தோம் என்று கூறினோம். இதற்குமேல் போகமுடியாது, பாதை இத்துடன் முடிகிறது, திரும்பிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம் வழியில்ப் போனார்கள். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சுத்தத் தமிழில் பேசினார்கள். அப்பகுதியைச் சுற்றிச் சுற்றி வாகனத்தில் வலம் வந்தோம். மைத்துனர் தானும் தனது குடும்பமும் இறுதி நாட்களில் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த சில பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் பார்த்தபோது, "இங்கதான், இங்கதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவரது மனோநிலை எனக்குப் புரிந்தது. இறுதியாக முள்ளிவாய்க்காலை விட்டு நீங்க மனமின்றி எமது பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் அதே பரந்தன் முல்லைத்தீவு வீதியில் வாகனம் ஏறியது. குறுகலான வீதி, ஆனாலும் வாகனம் ஓரளவிற்கு ஓடக்கூடிய விதத்தில் பராமரிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் முள்ளிவாய்க்கால், வலது புறம் நந்திக்கடல். சற்றுத் தொலைவில் அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த வற்றாப்பளை அம்மன் கோயில். இவற்றினைக் கடந்துசெல்லும்போது மைத்துனர் தனது நினைவுகளைப் பகிரத் தொடங்கினார். இராணுவத்தை தாம் நேருக்கு நேராக, ஒரு சில நூறு மீட்டர்கள் தொலைவில் கண்டதாக அவர் கூறினார். தாம் தஞ்சம் அடைந்திருந்த பகுதியில் தன்னுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வட்டுவாலக்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்காக மெதுமெதுவாக நடந்துசெல்லும்போது பதிவாக நிலைஎடுத்துக்கொண்ட இராணுவத்தினர் தாம் இருந்த பகுதிநோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டிருந்ததாக அவர் கூறினார். தாம் இனிமேல் இப்பகுதியில் இருக்க முடியாது. மீதமாயிருக்கும் அனைவரையும் உள்ளே வந்தவுடன் கொன்றுவிடுவார்கள், ஆகவே சாவரினும் பரவாயில்லை, பாலத்தின் அடுத்த பக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற ஒற்றை எண்ணம் மனதில் இருக்க, மக்களோடு மக்களாக கையில் குழந்தைகளையும் சுமந்துகொண்டு பொழுது புலராத அவ்வேளையில் தாம் ஓடத் தொடங்கியதாக அவர் கூறினார். தம்முடன் கூட வந்த பல குடும்பங்களில் சிலர் ஓடிக்கொண்டிருக்கும்போதே சூடுபட்டுக் கீழே விழ, அவர்களை விட்டுவிட்டு அக்குடும்பங்கள் பாலம் நோக்கி ஓடிக்கொண்டிருந்ததை மைத்துனர் பார்த்திருக்கிறார். இராணுவத்தினரின் கடுமையான துப்பாக்கித் தாக்குதலுக்ககு முகம்கொடுத்து இறந்து வீழ்ந்தவர்கள் விழ, மீதியாக ஓடிக்கொண்டிருந்தோர் வட்டுவாகல்ப் பாலத்தின் முள்ளிவாய்க்கால்க் கரையினை அடைந்திருக்கிறார்கள். இப்போது இராணுவத்தை மிகக் கிட்டத்தில் அவர்களால் பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேற ஆயத்தமாக நிற்க, வட்டுவாகல்ப் பாலத்தின் இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் மிதந்துகொண்டிருப்பதை அப்போதுதான் மைத்துனர் கண்ணணுற்றிருக்கிறார். "இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் ஒரே பிணக்குவியல் அண்ணா, பொம்மைகளைக் குப்புறப் போட்டுத் தண்ணிக்குள்ள தள்ளின மாதிரி, சிவந்து போய் ரோஸ் நிறத்தில இருந்தது. எப்ப செத்த சனங்களோ தெரியாது, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் பிணங்கள்" என்று அவர் கூறினார். யுத்தத்தில் சிதைந்துபோய்க் கிடந்த வட்டுவாகல்ப் பாலத்தின் மீது பெருந்திரளான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். பாதையின் அகலம் போதாமையினால் பலர் கழுத்தளவு நீரிற்குள் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். இராணுவத்தினரின் பகுதிக்குள் வந்ததும் வெளியான இடமொன்றில் அவர்கள் இருத்திவைக்கப்பட்டார்கள். புலிகளுடன் முரண்பட்டு, இராணுவத்துடன் இணைந்துகொண்ட முன்னாள் போராளிகள் பலரை தான் அங்கு கண்டதாக மைத்துனர் கூறினார். அடிக்கடி ஒலிபெருக்கியில் பேசிய அவர்கள், "இயக்கத்தில ஒரு நாள் வேலை செய்த ஆக்களெண்டாலும் கையை உயர்த்திக்கொண்டு வந்திருங்கோ, விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவம். நாங்களாப் பிடிச்சமெண்டால் தெரியும்தானே?" என்று மிரட்டல்கள் அவர்களால் விடுக்கப்பட்டன. இதனையடுத்து மக்களோடு மக்களாக நின்ற பல போராளிகள் கைகளை உயர்த்திக்கொண்டு முன்னால் செல்ல, அவர்களை இராணுவத்தினர் தனியாக அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார். மைத்துனர் இயக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் அல்ல. வீதிப் புணரமைப்பு வேலைகளில் சம்பளத்திற்காக வேலை பார்த்தவர். ஆகவே, இயக்கத்தில் ஒருநாள் பணிபுரிந்தவர்கள் என்றாலும் முன்னால் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோது அவர் தெரியாததுபோல் இருந்துவிட்டார். அன்று மைத்துனர் அடையாளம் கண்ட போராளிகள் பலர் உயிருடன் இல்லை. ஆனால், அவர்களை இராணுவம் அழைத்துச் சென்றதை அவர் கண்டிருக்கிறார். மைத்துன‌ரைப் போல அக்காலை வேளையில் அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்ட பல்லாயிரம் மக்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் சாட்சியங்களை எவரும் கேட்கப்போவதில்லை.

அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்

1 month 4 weeks ago
உண்மை அண்ணா........... 2008ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு ப‌ல‌ தேசிய‌ அணிக‌ள் கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌ன‌.............ஜ‌பிஎல் வ‌ருகைக்கு முத‌ல் 1ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் 5நாள் விளையாட்டு.............வீர‌ர்க‌ள் 5வ‌ருட‌ம் தேசிய‌ அணியில் விளையாடி வேண்டும் ச‌ம்ப‌ள‌த்தை ஒரு சீச‌ன் ஜ‌பிஎல்ல‌ விளையாடி எடுக்கின‌ம்.............முந்தி எல்லாம் தென் ஆபிரிக்கா அணிய‌ ஜ‌ந்து நாள் விளையாட்டில் வெல்வ‌து மிக‌ சிர‌ம‌ம்...........திற‌மையான‌ வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா அணிக்கு விளையாடாம‌ சீக்கிர‌மே ஓய்வை அறிவிக்கின‌ம் ஜ‌ந்து நாள் விளையாட்டில் .................இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணிய‌ விட‌ ஜ‌பிஎல் தான் முக்கிய‌ம்.............இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் மேற்கிந்தியத் தீவு வீர‌ர் 7விக்கேட் எடுத்து திற‌மையை வெளிக்காட்டினார்............இவ‌ரும் ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் விளையாடுவார்.............பொய் என்றால் பாருங்கோ அண்ணா இவ‌ரும் ஜ‌ந்து நாள் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார்..........இப்ப‌டி தான் ஜ‌பிஎல் ப‌ல‌ நாட்டு அணிக‌ளை ப‌ண‌ம் மூல‌ம் அழித்தார்க‌ள்............தென் ஆபிரிக்காவில் நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் சிறு வ‌ய‌திலே ஓய்வை அறிவித்த‌வ‌ர்க‌ள் கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ம் ...............நியுசிலாந் ரெஸ் தொட‌ருக்கு அறிவிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளை பாருங்கோ ஒரு வீர‌ர‌ தவிற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள்..................

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! 

1 month 4 weeks ago
போராட்டம் எம் கண்முன்னே நடந்தது. அதில் நாமும் இருந்திருக்கிறோம் ஓடி ஒழிந்திருக்கிறோம் காட்டிக் கொடுத்திருக்கிறோம் மதில் மேல் பூனையாக நின்றிருக்கிறோம். இதில் எத்தனை வீதம் அவர்களுடன் முழுமையாக நின்றோம் என்பதே இத்தனையையும் முன் சென்று செய்த அவர்களால் கூட வெல்ல முடியாமையின் உண்மையை கண்டறிய உதவும். தாயகத்தில் ஒரு சிறிய பகுதியும் புலத்தில் மிக மிக சிறிய பகுதியும் பங்களித்து வெற்றியை எதிர் பார்க்கும் எந்த இனமும் அழிந்து மட்டுமே போகும். ஒரு காலத்தில் தன்னிடம் நாடி வந்த இளைஞர்களை தேர்வு செய்து எடுத்து மிகுதியானவர்களை திருப்பி அனுப்பிய ஒரு அமைப்பு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவேண்டிய நிலைக்கு ஏன் வந்தது என்று ஒருமுறை சிந்தித்தால் தமிழினம் எங்கே தவறியது என்பது புரியும் இதில் நானும் அடக்கம் தான்

தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்

1 month 4 weeks ago
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் தானும் போட்டியிடப் போவதாக நடித்து நேற்று நடந்த கூட்டத்தை சுமந்திரன் குழப்பினார். இது அவருடைய ராஜதந்திரம் என்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தான் வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்பினார். இதன் காரணமாக தான் போட்டியிடப் போவதாக அறிவித்து கள நிலவரத்தை குழப்பி, சிறிநேசனை வெளியேற்றி தான் நினைத்த குகதாசனை அந்த பதவிக்கு சுமந்திரன் கொண்டு வந்தார். இதுதான் உண்மையில் நடந்த விடயம். சுமந்திரனின் பொய் பேச்சுக்களையும், பொய் கருத்துக்களையும் நம்பும் அளவுக்கு எல்லோரும் இருக்கின்றனர்” என்றும் இளம்பிறையன் சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/tamil-arasu-katchi-current-issue-1706440704