Aggregator
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்பு
அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்பு
கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப்.
இரண்டாம் ஆட்சியில் ட்றம்ப் தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே feel பண்ணத் தொடங்கிவிட்டார். சாமரங்கள், ஆலவட்டங்கள் இல்லையே தவிர மந்திரிகள், ஆலோசகர்கள் புடைசூழ அவர் முன் சமூகம் தரும் பிரதானிகள் – நெட்டன்யாஹு தவிர்ந்த – அனைவருக்கும் ஒரு protocol உண்டு. ட்றம்புடன் பேசுவதற்கென்று ஒரு மொழியுண்டு. செலென்ஸ்கிக்கு அது தெரியாது. மூக்குடைபட்டு அனுப்பப்பட்டார். கார்ணிக்கு அது தெரியும். “நீங்கள் பல சொத்துக்காரர். எல்லாச் சொத்துக்களும் விற்பனைக்கென்று வருவதில்லை. நீங்கள் இருக்கும் இந்த வெள்ளை மாளிகைகூட விற்பனைக்கில்லை. விரைவில் உங்களை அழைத்துக் கெளரவிக்கவிருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையும் அப்படித்தான்” என ட்றம்பின் மொழியிலேயே நக்கலும் நளினமுமாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கார்ணி. “கனடாவின் சொந்தக்காரரோடு பேசிவிட்டுத்தான் வருகிறேன். அது ஒருபோதும் விற்பனைக்கு வரப்போவதில்லை” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.
அதற்காக ‘கனடாவை அபகரிக்கும்’ திட்டத்தை ட்றம்ப் விட்டுவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த போதிருந்த ட்றம்ப் தான் இப்போதும் இருக்கிறார். அவருக்குத் தேவை அமெரிக்க உற்பத்தித் துறை அமெரிக்காவுக்கு மீள வேண்டும் என்பதே. அதில் அவரது பிடி தளரவேயில்லை. “கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிறார். “கொஞ்சக் காலத்துக்கு அமெரிக்கர்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள். அது பரவாயில்லை” என எளிமையாகக் கடந்து போகிறார். எனவே அவரது மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கார்ணி அங்கு சென்றிருந்தால் அதில் அவருக்கு வெற்றியில்லை. ஆனால் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல “முற்றும்” போடப்படாமல் கார்ணியின் சந்திப்பு “தொடரும்” எனக்குறியிடப்பட்டிருப்பது கார்ணியின் வெற்றி.
கார்ணிக்கு முன்னிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்க்கோ ரூபியோ போன்ற விகடகவிகள் கார்ணிக்கு முன் பவ்வியமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது. வாய்களைத் திறந்து அவமானப்பட அவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் வழக்கமான ஊடகக் கொழுந்துகளில் ஒன்று வெடி ஒன்றைக் கொழுத்திப் போட்டது. அதைக் கார்ணி மிகவும் இலாவகமாகத் திருப்பி அவரிடமே கையில் கொடுத்துவிட்டார்.
நாடு திரும்பியதும் அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. நோஞ்சான் அரசாங்கத்தில் நல்ல, அனுபவமுள்ள மந்திரிகளை நியமிக்க வேண்டும். பொய்லியேவுக்கு அட்மிசன் கிடைக்குமட்டும் வகுப்பு அமைதியாகவிருக்கும். கடற்கரையில்லா அல்பேர்ட்டா மாகாணத்தின் முதல்வி பிரிந்துபோவதற்கான மக்கள் வேட்கையை அறிய கருத்துக்கணிப்பை நடத்தப் போகிறாராம். சில வேளைகளில் அல்பேர்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டுதான் ட்றம்ப் “51 ஆவது மாநில” கர்ச்சிப்பைச் செய்கிறாரோ என்னவோ. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் எரிபொருள் பெரும்பாலும் இங்கிருந்துதான் போகிறது. என்னவோ இப்பெண்ணும் ட்றம்பின் மார்-எல்-லாகோ மாளிகைக்கு விஜயம் செய்து வந்தவர். எதையும் அறுதியாகக் கூற முடியாது.
சந்திப்பின் பாகம் -2 வரும் வரை..